கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
திரும்பக்கிடைக்குமா? சிறு வயது ஞாபகங்களும் எம் மண் வாசனையும்....... மழையின் சத்தம் தவளையின் கத்தல் சில்வண்டின் ஓசை மின்மினியின் வெளிச்சம் ஆலயமணியின் ஓசை ஆந்தையின் அலறல் மாலையில் வானத்தில் மாலை போல் பறக்கும் வௌவால்கள், அவை கொரித்துப் போட்ட கொட்டங்காய்கள் சிறகடித்துப் பறக்கும் சிட்டுக் குருவிகள் பறந்து செல்லும் பச்சைக் கிளிகள், அவை கொத்திப் போட்ட கொய்யாப் பழங்கள் குயிலின் கூவல் மயிலின் அகவல் மல்லிகையின் நறுமணம் பூக்களின் சுகந்தம் பூரணச் சந்திரன் பௌர்ணமி வெளிச்சம் இவை இத்தனைக்கும் ஏங்குது மனசு திரும்பக் கிடைக்குமா??????
-
- 2 replies
- 900 views
-
-
போகமட்டீரோ நீரும் நரகத்திற்கு...... சிங்களவா உனக்குத் தமிழர் செங்குருதி தானா உணவு பல தசாப்தங்கள் கடந்தும் பசி அடங்கவில்லையா உனக்கு இன்னும் எத்தனை தசாப்தங்கள் தேவை உனக்கு இனப்படுகொலை புரிந்து, உன் ஈனப்பசியைப் போக்குதற்கு வேணுமடா இது எமக்கு வேறுபாடு பாராமல் அன்று உன் கையில் ஆட்சியினைத் தந்ததற்கு சாபமடா எம் பிறப்பு, அதை காட்டுதடா நாட்டு நடப்பு போதுமடா எம் தவிப்பு போகமாட்டீரோ நீரும் நரகத்திற்கு
-
- 3 replies
- 916 views
-
-
உங்களை நீங்கள் மன்னிப்பீர்களா?...... உலக நாடுகளே............... உறுதியாகச் சொல்கின்றோம் உங்களை நாங்கள் மன்னிக்க மாட்டோம் ஒதுங்கி எதிரி போல் நிற்கும் தமிழர்களே........ ஒட்டுக்குழுக்களே............... ஒருபோதும் உங்களை நாங்கள் மன்னிக்க மாட்டோம் ஐநாவே.................. ஐயம் இன்றிச் சொல்கின்றோம் உன்னை நாங்கள் என்றும் மன்னிக்க மாட்டோம் பாரதமே..............மகாத்மாவா.?!!!!!!!!!!! யாரவர்...? என்பது போல் நடக்கின்றாயே பார்த்திரு உன்னை இந்த பாருள்ள வரை (பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு?????) மன்னிக்க மாட்டோம் கடவுளரே...........கருணையின்றி கல்லாய் நீரிருந்தால் உங்களையும் தான் நாங்கள் மன்னிக்க மாட்டோம் முதல் உங்களை நீங்கள…
-
- 4 replies
- 812 views
-
-
வாக்காளனே! இன்னுமா நீ விழித்துக் கொள்ள வில்லை? உன் விழிகளில் வெளிச்சத்தை ஏற்றி உன்னெதிரே நிற்கும் இம் மனிதனைப் பார்! ஏன்? அடையாளம் தெரியவில்லையா? பாவம் ஐந்தாண்டு இடைவெளியல்லவா? நீ மறந்து போயி(விட்டாய்)ருப்பாய்! ஆனால் உனக்கு வணக்கம் கூறும் இம்மனிதன்தான் ஐந்தாண்டுகளுக்குமுன் உனக்கு வாக்குறுதிகளை வாரி வழங்கிவிட்டு தன் ஓட்டைப்பெற்று உன்னை – மறவாமல் வந்திருக்கிறான்! உனக்கு ஞாபகமிருக்காது ஏனென்றால் ஐந்தாண்டு இடைவெளியல்லவா? உனக்கு ஞாபகமில்லையென்றாலும் இதோ இந்த அரசியல்வாதிக்கு உன்னைமட்டுமல்ல பதினெட…
-
- 0 replies
- 493 views
-
-
செத்துப்போகட்டும் அவர்கள் சாகப்பிறந்தவர்கள் ஏன் கவலை அதற்காக சாகப்பிறந்தவர்கள் அவர்கள். ஈனப்பிறவிகள் எண்ணிவிட்டு போகட்டும். தானாடாவிட்டாலும் தசையாடுமாம் இவர்களுக்கு ஒன்றும் ஆடவில்லை. அங்கே பிணக்குவியல்கள். பணத்தை குவிப்பதற்காய் மலிவு விற்பனைகள் களியாட்டவிழாக்கள். செத்துவிட்டு போகட்டும் வன்னிமக்கள் சதையாடாத ஈனப்பிறவிகள். புலிபாய்ந்த காலத்தில் ஆணிவேர் எடுத்தவர்கள் புலிசாய…
-
- 3 replies
- 1k views
-
-
கெட்ட கனவு. ஆழ் மனத்தின் வடு.... ஆமி சுற்றி வளைத்தான் ஆட்காட்டியும் கூட நின்றான் அடையாள அட்டையைக் காணவில்லை திடுக்கிட்டு எழுந்தேன் சிறிது நேரத்தின் பின் புரிந்தது அது கெட்ட கனவு என்று. சுடுகாட்டின் மத்தியில் படுத்திருந்தபடி கண்விழித்தேன் சுற்றும் முற்றும் பார்த்தேன், என் சுற்றம் எல்லாம் பிணக்குவியலாக.. அலறியடித்து எழுந்த்தேன் அப்புறம் தான் புரிந்தது அது கெட்ட கனவு என்று.
-
- 2 replies
- 985 views
-
-
பெற வேண்டும் விடுதலை எனும் அமுதை. தேவர்கள் அமுது கடைந்தது போல் தேசியத் தலைவரை மலையாக்கி எம் நிதியை வலுவாக்கி போராட்டத்தை கயிறாக்கி எழுச்சியுடன் நாம் கடைந்தோம் காணவில்லையே விடுதலை எனும் அமுதை, சீக்கிரம் பெற வேண்டும் விடுதலை எனும் அமுதை போர் நிறுத்தம் வந்ததடா போனதடா எம் வலிமை கபடமாகப் பிரித்தனர் கருணாவை கண்ணி வைத்தனர் சூழ்ச்சி வலை பின்னி சிக்கிவிட்டோம் நாம் அதிலே தப்பிச்செல்ல வழியில்லை தவிக்கின்றோம் நாமின்று எப்பாடு பட்டேனும் காண வேண்டும் எழுச்சியுடன் தமிழீழம் பெற வேண்டும் விடுதலை எனும் அமுதை பாராண்ட தமிழினம் இன்று பாழ்பட்டுப் போகின்றோம் கலை பண்பாடு காத்து தலை நிமிந்து வாழ்ந்த இனம் இடம் பெயர்ந்து புலம் பெயர்ந்து வளம் இழ…
-
- 6 replies
- 974 views
-
-
அவலத்தில் இருந்து ஒரு குரல் ஈழத்தமிழராக பிறந்த நாங்கள்அழிவை மட்டும் கண்டு நிற்கும் ஏதிலிகள். நின்மதியாய் வாழ ஏங்கும் அகதி அற்ற வாழ்வுக்கு ஏங்கும் மானிடத்தின் பகுதி நாங்கள்.பிறந்தவர்க்கு இறப்பு நிஜம் எங்களின் முற்றத்தில் நித்தமும் நிஜம். இரத்தவாடை எங்கள் வீட்டில் இன்றும் கந்தகப்புகைஎங்கள் மண்ணில். துன்பம் மட்டும் மீதிவாழ்வில் சற்றும் இன்பம் இல்லை சமாதானம் வந்ததுண்டு ஆனால் எந்த பயணும் தந்ததில்லை. பேச்சுக்கள் பல நடந்ததுண்டு உடன்பாடு கண்டதில்லை. பேச வந்த நாடு எல்லாம் புலிகளாகி போன பின்பு தனியனாக நாங்கள் இங்கு. சுற்றி நின்ற சொந்தமில்லை இறந்து கொஞ்சம் அழிந்து போச்சு பறந்து கொஞ்சம் தூரப்போச்சு. வேர்வை விட்டு கட்டி வைத்து அழகுபார்த்த வீட்ட…
-
- 3 replies
- 1.1k views
-
-
பகட்டான கோயில் அமைத்தோமே -நாம் பங்கரில் வாழ்வது தெரியவில்லையா பொங்கலும் படையலும் படைத்தோமே - இன்று பொங்கும் எம்கண்ணீர் தெரியவில்லையா பாலால் அபிஷேகம் செய்தோமே -குழந்தை பாலுக்காய் தவிப்பது தெரியவில்லையா பண்டிகையும் திருவிழாவும் செய்தோமே -நாம் குண்டினால் சாவது தெரியவில்லையா தேரில் வைத்து இழுத்தோமே -நாம் தெருவில் நிற்பது தெரியவில்லையா பன்னீரால் தீர்த்தம் கொடுத்தோமே -நாம் செந்நீரில் தோய்வது தெரியவில்லையா பூங்காவனத் திருவிழா செய்தோமே - இன்று தூங்காத எம்துயர் தெரியவில்லையா நமசிவாய என்று துதித்தோமே - காற்றில் நச்சுவாயு வருவது தெரியவில்லையா மேளமும் தாளமும் இசைத்தோமே -இன்று மரணஓலம் இசைப்பது தெரியவில்லையா கண்ம…
-
- 9 replies
- 1.8k views
-
-
-
இரத்தினக் குவியலிலே - சில பித்தளைத் தகடுகள் இனிய கவிதையிலே - சில இலக்கணப் பிழைகள் மருத்துவ மனையிலே - சில மலேரியா நுளம்புகள் விருந்துப் பந்தியிலே - சில வேண்டாத கரப்பான்கள் நெல்விளை வயலிலே - சில நச்சுள்ள செடிகள் நல்லரிசி மூட்டையிலே - சில சுண்டெலிப் புழுக்கைகள் ஞானிகளின் சபையிலே - சில ஞான சூனியங்கள் சாமிகளின் சந்நிதியிலே - சில சாத்தான்களின் குஞ்சுகள் புலிகளின் காட்டிலே - சில பெருச்சாளிப் பீடைகள் தமிழரின் இனத்திலே - சில தரங்கெட்ட ஜென்மங்கள் http://gkanthan.wordpress.com/index/eelam/peruchaali/
-
- 7 replies
- 3.4k views
-
-
கேளடா மகிந்தா... இது உனக்குச் சவால். மகிந்த சொல்கின்றான் மக்களைத் தம் வசம் அனுப்பிவிட்டு களமாடிப் பார்க்கட்டும் என்று கயவனே. நீயும் தான் எந்த நாட்டிடமும் உதவி பெறாது எதிர்த்துப் பாரடா புலிப்படையை அப்போது பார்க்கலாம் எப்படி அவர் பாய்வார் என்றும் எப்படி நீ ஓடுகிறாய் என்றும். ஆடாத ஆட்டம் போட்டு வாய் கூசாமல் பொய் உரைத்து உலகத்தை எய்த்து உரக்கக் கோசம் போடதே நாம் விழ விழ எழுவோம் ஓய மாட்டோம் நாற்றிசை அதிர விடுதலை காண்போம்.
-
- 4 replies
- 1.6k views
-
-
அசையாத திலீபன்களும் அன்னை பூபதிகளும் கவிதை - இளங்கவி குட்டித் திலீபன்களாய் எங்கள் குமரர்கள் வீதியிலே கட்டிவத்தி விட்டதையா காளை இரத்தம் அவர் உடம்பினிலே..... அன்னை பூபதியாய் எங்கள் அம்மாக்கள் தெருக்களிலே அகிம்சை போராட்டம் குளிரிலே அமைத்த அந்தக் குடிலினிலே..... கொண்டகொள்கை மாறாது தங்கள் உயிர் பாராது தமிழினத்தின் விடியலுக்காய் தான் எரியும் மெழுகுகளாய் தங்கள் உடலெல்லாம் கசங்க கண்களும் பார்வை மங்க நீர்த்துளிகள் சிலகண்டாலும் நெல்லரிசி காணாமல் தமிழர் விடியலுக்காய் பல உயிர்கள் வேள்விகள் நடத்துகின்றார்...... பரமேஸ்வரன் இன்றும் மரணத்தை பார்த்தவண்ணம் நடக்கின்றான் பாதையது தவறாமல் தன் லட்சியத்தை தொடர்கின்றான் வேதனை வி…
-
- 0 replies
- 574 views
-
-
என் இனமே..!! என் சனமே...!!! காற்றில் வரும் எங்கள் அழு குரல் உங்களுக்கு கேட்கிறதா..?? எங்கள் உடல் இரத்தம் கருகி வரும் வாசம் வருகிறதா..?? உங்களை விட்டால் எங்களுக்கு யார் இருக்குறார்கள்..?? அழுவதற்கு திராணியும் இல்லை.. தொண்டை குழியில் ஒரு சொட்டு தண்ணீரும் இல்லை.. உங்களை விட்டால் எங்களுக்கு யார் இருக்குறார்கள்..?? அருகிலே இறந்த என் பச்சை பாலகன் மனதிலே இறந்து போன என் கணவன் தூரத்திலே இறந்து போன என் உறவுகளின் சாம்பல் உங்களை விட்டால் எங்களுக்கு யார் இருக்குறார்கள்..?? கண்ணருகில் சிறு துளி கண்ணீர் மூக்கருகில் துளிர் விடும் இரத்தம் அதிகரிக்கும் என் இதய துடிப்பு எனக்கு கேட்கிறது நான் சாக போகுறேனா.. ஒரு சிறு துக்கம் என் இனம் கூண்டோடு அழ…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
-
kavithaiஆகுதி போதாதோ?................... பாரடா தமிழா பாரினில் உன் நிலமை உலக நாடுகள் வாய்மூடி, கண் பொத்தி உணர்வின்றி ஊமையாய் வீற்றிருக்க உடல் சிதறி உறுப்பிழந்து உதிரத்தில் நீ தோய்ந்திருக்க உதவிடவோ யாரும் இல்லை உணவும் தான் உனக்கு இல்லை உணவின்றி மடிகின்றாய் உறக்கத்தில் மடிகின்றாய் முதலுதவி இல்லாமல் மடிகின்றாய் முப்பொழுதும் நீ மடிகின்றாய். காந்திதேசம் இன்று எம்மவரை காவுகொள்ள உதவுகிறது மூடர்கள் கையில் ஆட்சி மூர்க்கத்தனமான கொலைவெறி கடற்கரையில் வெட்டவெளியில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை ஏன் இந்த அவலம்? ஏங்குதடா இதயம். பூமாதேவி பொறுமை காப்பதேன்? பூக்களைக் கோடரியால் சாய்க்க விடுவதேன்? கோபம் கொண்டு பொங்கி எழுந்து போர…
-
- 1 reply
- 822 views
-
-
இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும் சப்பாணிக் கழுதையே கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று, கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு! தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி! சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்! உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும். சொத்துக்குவிப்பதையே தொழிலாக செய்து செய்து செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி! பௌத்த நெறிபடித்து, சிங்கள வெறிபிடித்து, தமிழன் உயிர்குடித்து, தோள்கள் திணவெடுத்து, பெண்கள் முலையறுத்து, தமிழன் இனமழிக்க துடிக்கின்றான் சிங்களவன் அங்கே! தெய்வக்குறள் படித்து, பதவி வெறிபிடித…
-
- 0 replies
- 1.6k views
-
-
பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும் நான் பிறந்த நாடு ,......இன்று நாதியற்ற நிலையில் பாலும் தேனும் பொழிந்து பார் புகழ்ந்த நாடு ஆண் பெண் பேதமின்றி குஞ்சு என்றும் குழந்தை என்றும் முதியவர் ,உடல் வலு இழந்தோர் என்றும் கிஞ்சித்தும் பாராமல் கொத்துக்கொத்தாய் கொன்று ஒழிக்கையில் தாய்க்கு நிகராம் என் தாய் நாடு தமிழ் ஈழத்திரு நாடு சிக்கி சின்னா பின்ன பட்டு கொடியவன் கோத்தபாயா கூட்டத்துடன் ராஜ பட்சே கூடுச்சேர்ந்து ,பிச்சையெடுத்த உதவிபணம் பீரங்கியாய் மாற , ஆட்லரியாய் மாற எக்காளமிட்டு ,தன் இளைய,சந்ததியை பலி கொடுத்து பலிகடாவாக்கி சீரழியும் தேசம் என்று தான் மாறும் ஆறாது மாறாது அழுதாலும் தீராது ஓயாத துயர் படும் என இனம் …
-
- 0 replies
- 1.8k views
-
-
பிறக்கிறது நம் தேசம்..... கவிதை - இளங்கவி இரத்தத்தில் தோய்ந்த தமிழீழத்தின் முழு நிலவும்....... பிணக்குவியலால் மறைந்த தமிழீழத்தின் சூரியனும்....... அங்கே ஒளியையும் மறைத்து நம் தேசத்தின் குளிர்மையும் நீக்கி கூக்குரல்கள் மட்டுமே என்னாளும் ஒலித்திடும் தேசத்தை பாரீர் அங்கே ஒருதரம் வாரீர்....... குயில்களும் பாடாமல் கூட்டிலே ஒளிந்து கொள்ள....... மயில்களும் ஆடாமல் மறைவிலே மறைந்துகொள்ள.... மரணித்த உடல்கள் மட்டும் மலிவாகக் கிடைக்கிறது...... தடுப்பார்கள் யாருமின்றி தினமும் கொலைகள் நடக்கிறது.... ஒருபக்க முலையிலே குழந்தையின் பசி தீர்த்து மறுபக்க முலையை எதிரியின் கொடுமைக்கு பறிகொடுத்து இறக்கின்ற நிமிடமும் மழலையின் பசிதீர…
-
- 8 replies
- 1.6k views
-
-
அம்மா கவனம் அம்மா இந்த நாட்கள் எம்முடனேயே முடியட்டும். இனி எவரும் இப்படி வாழவேண்டாம் . இவ்வாறு சாகவேண்டாம். உன்வைற்றில் உள்ள என் இளையவனோ இளையவளோ நான் பட்ட துன்பம் நீபட்ட சிரமத்தை நினைக்கவே கூடாது! இத் துன்பங்களும் அவர்களை நெருங்கவும் கூடாது!! நாம் நெருங்க விடவும் கூடாது! அப்பா இல்லை.இருக்கிறாரோ தெரியவில்லை! இருந்தாலும் இனி மனிதனாக நடமாடக்கூடியதாக அவர்கள் விட்டு வைத்துள்ளார்களா தெரியாது...??? ஆமி பிடிச்ச எதிர் வீட்டு மாமா திரும்பி வந்தபோது அவர் வந்தது எவ்வாறு எனக்கு தெரியும்.! அம்மா நீ கவனம் அதைவிட உன்னுள் உறங்கும் என் இளையவர் மிகக்கவனம். இப்போ சிங்களவன் இலக்கு பிறக்காத குழந்தைகள் தான். அவர்களுக்கு விருப்பம் தமிழ் சிசுவின் கொல…
-
- 4 replies
- 1.1k views
-
-
இரத்தம் வெவ்வேறு நிறம் அங்கே பிணங்கள் விழுந்து கொண்டிருக்கின்றன நாம் “எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன?” என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம்! அங்கே குண்டுகள் வெடித்துக் கொண்டிருகின்றன நாம் பட்டாசு வெடித்துப் பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறோம்! அவர்கள் வேட்டையாடப்பட்டுக் கதறிக் கொண்டிருக்கிறார்கள் நாம் வெள்ளித் திரைகளுக்கு முன் விசிலடித்துக் கொண்டிருக்கிறோம்! அவர்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் நாம் “கற்பில் சிறந்தவள் கண்ணகியா? சீதையா?” என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறோம்! அவர்கள் வெளிச்சத்தின் விளைச்சலுக்கு இரத்தம் சொரிந்துக் கொண்டிருக்கிறார்கள் நாம் இருட்டுக்காடுகளுக்கு வேர்வை வார்த்துக…
-
- 1 reply
- 784 views
-
-
தலை குனிதல் தமிழரின் இயல்பல்ல தலை குனியும் போதெல்லாம் கவி வரையும் பேனா இன்று எம் மண்ணின் நிலை கண்டு கண்ணீர் மட்டுமே வடிக்கின்றது அன்பெனும் கூட்டில் சங்கமித்து ஆசையாய் குழந்தையை பெற்றெடுத்து அடுக்கடுக்காய் கனவுகண்டு வளர்த்து வந்த வேளையிலே ... பூண்டோடு குடும்பத்தை அழித்துவிட்ட கயவனே. உண்மையில் நீயெல்லாம் மனிதன்தானா? இல்லையில்லை ரத்தத்தைப் பிழிந்து குடிக்கும் கொடூர விலங்குகள் நீங்கள். பால்குடித்த ஈரம் காயும் முன்பே மழலைகள் உயிரைப் பறிக்கிறீரே விதையைக் கிழித்து துளிரை அழிப்பது போல் தாயின் வயிற்றைக் கிழித்துக் கருவைக் கொல்லும் காட்டுமிராண்டிகள் நீங்கள். கயவரே உன் காலடிகள் எம் மண்ணில் …
-
- 5 replies
- 1.4k views
-
-
பிறக்குமா புத்தாண்டு ...........? பிறக்குமா புத்தாண்டு எதிரிக்கு பார் சோறு எங்களுக்கு கந்தக காற்று இறைவா என் இந்த வேற்றுமை உலகெங்கும் போராட்டம் தமிழ் மக்கள் மன்றாட்டம் ஓயாத போரை நிறுத்து கொல்கிறது கொத்துக்குண்டு சிந்தும் ரத்தம் ஆறாய் ஓடுது கண்ணீர் விட்ட கண்களும் வெறுமையாய் சுரபிகள் வற்றி விட உண்ண உணவும் குடிக்க நீரும் சுவாசிக்கும் காற்றும் கந்தக வாசம் ஏன் இந்த அவலம் ஈழத்தமிழனுக்கு புலம் பெயர் உறவுகளும் ஓயாத போராட்டம் பட்டினிச் சாவுக்கும் பலர் முன்னேற்றம் உறவுகளின் துயரால் உலகமே ஏக்கம் ஆறாத வலி ,மாறாத சோகம் தீராதா இந்த பழி ,நெஞ்சிலே ஓயாத வலி ........
-
- 1 reply
- 734 views
-
-
மடியொன்று கண்டேன்! ஆழமறியா அண்ணன் அணியை-என்றும் பலம் சேர்த்துப் பகை முறிக்க- அண்ணன் திசை நோக்கித் திளைக்காமல் நடந்தனரே-எம் மாவீரச் செல்வங்கள், இவர்கள்பணி நீயேற்று-மக்கள் துயர்துடைக்க விரைந்து சென்று, அவர்களுள் ஒருவனாய்- இன்று மீளாத்துயில் கொள்வோனே! உன் திறனை நானறியேன்- அதை உன் நண்பர் சொல்லிடவே செவிமடுப்பேன்- ஆனால் உன்சுமையை நானறிவேன் எட்ட நின்று. ஊரவரில் முன்நின்று உறுதியுடன் பேசிடுவாய்- இருந்தும் வேதனைகள் உள்ளவரை வெறுமனவே விடமாட்டாய்- உன்னுடன் நெருங்கிப் பழகினதோ மூன்றே மூன்று மாதங்கள்தான்- அதனுள் புரிந்தவைகளோ ஏராளம் ஏராளம்!- ஒருபுறம் சிறியவர் கருத்தை ஆர்வமுடன் நீயேற்றுப் பணிவுடனே நடந்திடுவாய்- மறுபுறம் மூத்தோர்கள் வியந்திடவே நேர்மை…
-
- 13 replies
- 1.7k views
-