கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
என் சோம்பேறி மனசு செய்த வீரமான செயல் உன்னைக் கண்டதும் ஓடிப்போய் உன்னைத் தொட்டுவிட்டு திரும்பி வராததுதான் * கையசைத்துவிட்டு கல்லூரிக்குள் நுழைந்து விடுகிறாய் நீ விடை பெற்றுப் போகும் கடைசி நாள் மாணவன் போல் வீடு செல்ல மனமில்லாமல் நான் * நம் காதலுக்கு முதல் எதிரி நேரம்தான் பார் நாம் சேர்ந்திருக்கும் போது மட்டும்தான் போட்டி போட்டு ஓடுகிறது * உன்னைக் காதலிக்க வேண்டாம் என்பவர்களை கூட்டி வா ஒரு நிமிடம் நீ இல்லாத என்னை கொடுத்துப் பார்ப்போம் சமாளிக்க முடிந்தால் சமாதானம் பேசுவோம் * என் கைகளுக்கு இதுவும் தேவை இன்னும் தேவை என்னை எதுவும் கேக்காமலே உன்னை அணைத்து பழகி…
-
- 4 replies
- 1.3k views
-
-
தடமரித்த லாகா அலைஇ மகளிர் படமெடுத்துப் போட்ட அது தேடின் திரும்பா அலைநின் விழியிரண்டும் ஆடவள் கண்ணில் உளவே நுரைபால் இனிமை இலமே உளது நுரைக்கும் அவளின் நுரை இரைச்சல் அடங்கி அலைபுரளும் பெண்டிர் உரைச்சல் தவழ்ந்து வரின் முத்துக்கள் என்ப விலையில்லா நல்மணிகள் அத்துணையும் கேசத்தின் ஈறு அசையும் அதரத்தே தோற்குமே ஈர்ப்பில் இசையும் கடலின் அலை தொல்கவின் பேராழி நீலம்போல் எஞ்ஞான்றும் நல்கவின் பெண்டிர் சிறப்பு வற்றா கடலன்ன அன்புடையாள் வற்றினள்நீர் வற்றிய வற்றிலும் பற்று கடல்குடித்தால் தீராது தாகம் மகளிர் மடல்குடித்தால் தீர்ந்து விடும் அஞ்சுதல் துஞ்சுதல் விஞ்சுதல் எல்லாமே வஞ்சியர் பின்னும் உள
-
- 5 replies
- 2.2k views
-
-
யோசி....நேசி....![/ அந்திசாயும் இதமான நேரம் மந்திகள் தொங்கும் மரநிழலின்கீழ் உன் தோளில் என் தலைசாய்த்து பன்னாட்டு கதை பல பேசி.... இனிமையான அப்பொழுதில் இணைந்த நம் இதழ்களோடு நாசிகள் உரசியவேளையில் நங்கையிவள் சட்டென கூசி... இன்னும் எத்தனையோ சில்மிசங்கள் இவையனைத்தயும் ஒருநொடியில் மறந்ததுமேனோ மன்னவனே மனம் திறந்து நீ யோசி.... என் உடல் உருக உருக உன்னையே தினமும் சுற்றி சுற்றி கன்னக்குழிகள் தெரிய சிரித்து வந்த வெண்ணிலாவை ஒருகணம் யாசி... பட்டாம்பூச்சியென பறந்து திரிந்தவள் விட்டில் பூச்சியாகி சாகத்துணிந்து தன்னந் தனிமையில் அல்லாடும் கன்னியவளை வா வந்து நேசி...
-
- 23 replies
- 3.7k views
-
-
மாவீரரே!! உயிரிலும் மானம் பெரிதென இவ் உலகிற்கு உணர்த்தி நின்றார் செந் தமிழனின் வீரத்தை இந்தப் பாரிலே உயர்த்தி நின்றார்! நெஞ்சிலே நஞ்சினைத் தாங்கியே எம்மவர் மண்ணுக்கு வெளிச்சம் தந்தார் அன்னை மண்ணுக்கு தன்னலம் பாராமல் சாவையே அணைத்து வென்றார்! நல்தலைவன் வழியினில் சென்றுமே நன் நீதியைக் காட்டி நின்றார் வான் என்ன! கடல் என்ன! களத்திலும் கூட வீரத்தை காட்டி நின்றார்! வாழ்க்கையின் தத்துவம் காட்டிய வீரரே உம்மை நினைக்கவே நாளெதற்கு? மறைந்தாலும் மனதினில் நிறைந்திட்ட நீங்களே விடியலில் ஒளிர் விளக்கு! மறப்போமோ உங்களை எங்களின்வீரரே இது விடிகின்ற தருணம் அல்லோ? வீசும் காற்றது என்றுமே உரைப்பது வீரச் சோதரர் பேரை அன்றோ? மண்ணே! மானம்…
-
- 2 replies
- 982 views
-
-
வாழ்த்துகின்றோம் எம் அண்ணா! ஆழ்கடல் தன்னில் அவதரித்த முத்தே! ஈழத் தமிழரின் நிகரற்ற சொத்தே! வாழ்திடும் போதே வரலாறு தந்தவன் மானத்தோடு எம்மை தலை நிமிரச் செய்தவன்! எங்கள் மண்ணின் கிழக்குச் சூரியன் ஈழத்தாயவள் தந்த வீரத் திருமகன்! கரிகாலனே! கடும்பகை எல்லாம் வெறும் தூசென்று காட்டி நிற்கும் தீரனே! தரையோடு தொடங்கினாய் இயக்கம்! இன்று வான், தரை,கடலெங்கும் தலைவா உன் முழக்கம்! பகை வெடிக்கும் ஈழம் விரைவில் மலர்ந்து சிரிக்கும்! 'அண்ணா! உன் பெயர் சொல்ல புல்லும் கூடப் புலியென எழும்! அடிமைத் தளையை அறுக்கப் பிறந்த தலைவா! உன்னால் ஈழம் வாழும்! தமிழ் மானம் காத்த தலைவா வாழி! தமிழ் வீரம் நிலைநாட்டிய தலைவா வாழி! ஈனர் படையை எரிக்கப் பிறந்த எங…
-
- 4 replies
- 2k views
-
-
கார்த்திகைப் பூவோடு, தீபங்களை உன் கரங்களில் ஏந்தியவாறு வாரீரே... இன்று வருவீர்கள் நாளை வருவீர்கள் என்று பூமியின் வேரில் ஒளியின் அடியில் காத்திருக்கின்றோம் .... என்னை பெற்ற தாயே என் தோழியே,என் உறவுகளே உங்களைக் காண.. கல்லறையில் விழித்தவாறு தினமும் வானத்தைப் பார்க்கின்றேன் என் சிறகுகள் பறிக்கப்பட்டாலும், நாளை நீங்கள் சுகந்திரமாக பறப்பதை காணத்தான் காத்திருக்கின்றேன்... என் கண்களைக் கொள்ளை கொள்ளும் காட்சி ஒன்று தெரிகிறதே... என்ன அழகு என்ன அழகு ஒளி கொண்ட எங்கள் கல்லறைகளில் மேலும் தீப ஒளி ஒளிரட்டும் வாசமுள்ள கல்லறையின் மேல் மேலும் காத்திகை பூவின் நறுமணம் வீசட்டும்.... மரணங்களில் நாங்கள் வாழ்கின்றேம் ஒவ்வொரு ம…
-
- 9 replies
- 1.8k views
-
-
http://vaseeharan.blogspot.com/ பல்லவி தமிழன் தமிழன் ஒருவன் தங்கத் தமிழன் ஒருவன்-எங்கள் தலைவன் தலைவன் மறவன் தமிழர் படைத்த பிரமன்- அண்ணன் பிரபா பிரபா பிரபாகரன் பிரபா பிரபா பிரபாகரன் சரணம் 1 தமிழ்த்தாய் கண்ட கனவுஇவன்-அந்தக் கனவோடு முளைத்த நனவுஇவன் அன்னை தமிழால் சிகரமிவன்-எங்கள் அன்பை மதிக்கின்ற தலைவன்இவன் பகலில் அண்ணன் சூரியனே இரவில் அண்ணன் சந்திரனே சரணம் 2 பார்வையிலே தமிழ்ப்பூமியிருக்கும் பண்டார வன்னியனின் ஆசியிருக்கும் பாயும் விழிகளிலே தீயிருக்கும் படை விரட்டும் திறன் நெஞ்சிலிருக்கும் பகலில் அண்ணன் சூரியனே இரவில் அண்ணன் சந்திரனே சரணம் 3 நாட்டை நம்மை நேசிப்பவன் தமிழ்விடுதலையை என்றும் யாசிப்ப…
-
- 5 replies
- 1.7k views
-
-
அழியா வரம் பெற்ற ஆதவன்கள் எழுதியவர்: த.சரிஷ் விடுதலை நெருப்புக்கு நெய்சேர்த்து சென்றுவிட்டது ஒரு நெருப்புக்குழந்தை...! ஈழத்தின் ஒவ்வொரு ழூலை முடுக்கிலும் விடுதலை நெருப்பை விதைத்துவிட்டு மெல்ல அணைந்துவிட்டது அந்த நெருப்பு...! இந்த நெருப்புப்பந்தின் வெளிச்சம் மெல்ல அணைந்தாலும் வெப்பம் இன்னும் அடங்கவில்லை...! தமிழீழத்தில் புறப்பெடுக்கும் கடைசிக்குழந்தையின் காலம்வரை கட்டாயம் அடங்காமல் இருக்கும் இந்த வெப்பம்...! ஒரு வழிகாட்டி புறக்கப்போகும் பிஞ்சுக்கும் பாடமாகிவிடுகிறான்...! மானிடகுலத்தின் கடைசிக்காலம்வரை செல்லும் வாழ்க்கைப்பயணத்தில் எதிர்பாராமல் இடைக்கிடையே இனம்தெரியாத இடிமின்…
-
- 3 replies
- 1.1k views
-
-
கார்த்திகைப் பேரொளியில், விழியோரக் கசிவோடு மீட்பர்களே!..... நீங்கள் விதையான தாய்மடிநோக்கி உமைநாடி அணி வகுத்தோம். பார்த்தொருக்கால் விழிதிறந்து உம் பூத்தமலர் முகங்காட்டி புன்னகைத்துக் கதைபேசி கண்மணிகாள் உறங்குங்கள். நெஞ்சப் பெருவெளியில் நினைவெல்லாம் விக்கிநிற்க அஞ்சாத் தேவர்காள் அகமெல்லாம் நிறைகின்றீர்! வெஞ்சமர்க் களமாடி வேர்மடிக்குக் காப்புடுத்தி காயத்தை மறைத்து கண்மறைத்து கரைந்தோரே! காற்றின் வழி எங்கள் மூச்சின் சுழல்களுக்குள் வீச்செடுத்து உலவுகின்றீர்! உணர்கின்றோம்..... உவக்கின்றோம். கண்ணுணராப் பொருளாக எம்கடிமனதில் உறையும் காவல் தெய்வங்களே! கடுங்கோபங் கொள்ளாதீர்! கண்மீறி வழிகின்ற ஈரத்தின் உப்பினை வடிகட்டி நிறுத்த கண்ணிமைக்குத்…
-
- 4 replies
- 1.6k views
-
-
மாவீரர்கள்..........!! தமீழீழ விடிவிற்காய் நும் விடியலை துறந்து தமிழருக்காக விடியலை தேடிய உன்னதமானவர்களே! எம் உதட்டில் பூக்கும் புன்னகைமலரிற்காக உயிர்துறந்த உங்களுக்கு மலர்தூவும் நேரம் இது!! கதிரவன் ஒளிபாய்ச்ச அஞ்சும் எம் தமீழீழ மண்ணில் நஞ்சுமாலையணிந்து திக்கெட்டும் ஒளிபாய்ச்சிய துஞ்சா நெஞ்சங்களே!! பெயருக்கும், புகழிற்கும் பேராசைப்படும் இவ்வுலகில் எதையும் எதிர்பாராது பெயரதனை மறந்து தலைவனின் கரத்தை பலபடுத்த வந்தவர்களே!! உதட்டளவில் வீரத்தை உச்சரிக்கும் மனிதருள் வீரத்தை நிஜமாக்கி காட்டி மெளனமானவர்களே..!! எம் மண்ணிற்கு உயிர் தந்து உம்முயிரை மண்ணிற்கு அர்பணித்த வீரர்களே நீங்கள் வீரர்கள் அல்ல வீரபுருசர்…
-
- 7 replies
- 1.8k views
-
-
அழகு ரோஜாவே!! ரோஜாச்செடி போலவேதான் உறவுகள் என்றெண்ணி உறவுகளை விலத்தியிருந்த என் வாழ்வில் நுழைந்தாய் முட்களற்று வாசனை நிரம்பிய அழகு ரோஜாவாக... உனை கண்டநாள்முதல் நான் ஆனந்தம்கொண்டு தினமும் அலங்கரித்து மனம் மிகமலர்ந்தேன் அன்பே ரோஜா உன்னை கையில்பற்றி துடியிடை தொட பலர் ஆசைபட சிலர் சொந்தமாக்கி முத்தமிட துடித்திட நான் மட்டும் உனை என் கண்களுக்குள் பொத்தி வைத்து அந்த முட்கள் நிரம்பிய ரோஜாப்பூவாகவே பார்த்தேன் ஏனெனில் நீயும் ஒருநாளில் உதிர்ந்துவிடுவாயோ என்று ஆனால்.. நீயோ உதிர்ந்திடாத ரோஜா என் வாழ்வின் ஆயுள்ரோஜா நிம்மதியை தந்திடும் ரோஜா அன்பான அழகான ரோஜா என்று நன்குணர்ந்தேன் நான் போலியான உறவு…
-
- 10 replies
- 3.6k views
-
-
கனவான உறக்கங்கள் கலைவதெப்போ? எழுதுங்கள் எம் இதயதாபம் எங்கும் எரிகிறது விடுதலையின் தீபம் எம் இனத்திற்கு யாரிட்டார் சாபம் நாம் ஏதிலிகளாய் அலையும் காலம் நீல வானத்தில் நிர்மலமாய் அமைதி அங்கு கானங்கள் பாடுது பார் குருவி இச் சிலுவைகளோ அடையாளச் சுருதி இங்கு சிந்துதுபார் செந்தமிழன் குருதி எம் காதாரம் ரீங்காரம் பாடும் சில் வண்டுகளின் ஓங்கார ஓசை அங்கு தூரத்தில் கேட்கும் வெடியோசை எம் துடிக்கின்ற வீரத்தின் பாசை தணலாகக் கொதிக்கிறது நிலவும் தீக் கனலாகச் சுடுகிறது தென்றல் அதி காலையிலே சிந்தும் பனித் தூறல் எம் கல்லறைக்கு அதிகாலை பூசை எம் கனவான உறக்கங்கள் கூட விரைவில் கலைந்து விடும் செய்திவரும் காலை இது கணநேரம் ஓய்வெடுக்கும் வேளை ஈழ…
-
- 2 replies
- 1.3k views
-
-
அன்றாட நிகழ்வுகள் என்னை அழ வைத்துக் கொண்டிருக்கின்றன. கூண்டோடு மாண்டு போவதாய் கனவு கண்டேன்; அது கொஞ்சம் பலித்தது போலும். அடுப்படியில் அம்மாவும், அரை உடலாய் அப்பாவும், அக்காவை காணவில்லை, அண்ணனாக யாருமில்லை. ஆனாலும் நான் தனியாகி விட்டேனா? - அதுவுமில்லை! ஊரில் என்னைப் போல் பல்லாயிரம் பேர் உண்டாம். எண்ணைக் கொள்ளைக்காக என்னை, மண்ணைத் தின்னச் செய்தார்கள் இந்த மாயாவிகள். உயிரியல் ஆயுதம் மறைத்து வைத்தோம் எனக் கூறி என் உடன் பிறப்புகளை அனுதினமும் உயிரோடு புதைத்து விட்டார்கள் இந்த கொடுங்கோலர்கள். பழமொழிகள் பலவற்றை உண்மை என்றிருந்தேன். "அழுத பிள்ளைக்கு பால்" என்றான். நான் அழாமலே அன்று என் தாய் தந்தாள். இன்று நான் அழுகின்றேன். இந்த அன்னியர…
-
- 0 replies
- 809 views
-
-
கார்த்திகைப் பூச்சுமந்து கல்லறை நோக்கி நடப்போம் ஈழ காவியம் எழுத தம் உயிர் தந்த கண்மணிகள் நினைவு சுமந்து போரியல் வரலாற்றில் புதிய சரிதம் எழுதி பூமிப் பந்தில் தமிழீpழம் வரைய புயலெனக் களமாடி மண்ணுள் புதைந்த மா வீரர்களே! உங்கள் மலரடி தொழுதோம் இக் கார்;த்திகை நாளிலே
-
- 1 reply
- 909 views
-
-
-
கவலை --------- ஆட்டின் மரணம் பற்றி அப்பாவின் துக்கம் கவிதையாய் வழிந்தது முன்னொரு நாள் தோட்டத்துச் செடிகளை மேய்ந்தது பற்றி அம்மாவுக்கு கோபம் தாயைப் பிரிந்த குட்டிகள் கதறிச் சோர்ந்து போயின கூரிய நகத்தை தீட்டிய சிங்கம் குட்டிகளைப்பார்த்து சிரித்துக் கொண்டது என்ன உலகம் இதுவென்று மரத்துக் காகம் முணுமுணுத்துக் கொண்டது
-
- 3 replies
- 1.7k views
-
-
நீ என்னைத் தேடி வருகிறாய் நான் நீயாக மாறி என்னைத் தேடுகிறேன் * நடைபயிலும் குழந்தையாய் வருகிறாய் தாயாய் என் கவனம் எல்லாம் உன் மேல் * நீ எங்கெல்லாம் என்னைத் தேடுகிறாய் என்பதை ரசிப்பதற்காகவே நான் தொலைந்து போகலாம் * நீ வந்தவுடன் கை கொடுப்பதா கன்னம் கொடுப்பதா என்ற குளப்பத்தை சாதுரியாமாய் தீர்த்து வைத்தாய் கைகூப்பி வணக்கம் சொல்லி * உன் தாவணிக்கு எப்போது என் தாயின் கைவிரல்கள் முளைத்தது தடவியதும் குழந்தையாய் உறங்கி விட்டேனே -யாழ்_அகத்தியன்
-
- 1 reply
- 965 views
-
-
அன்னையின் வீடு வ.ஐ.ச.ஜெயபாலன் இது ஓர் அதிஸ்டம் இல்லாத போராளியின் கவிதை மேலும் சரியாகச் சொல்வதெனில் ஒரு போர்க் குணமுள்ள கவிஞனின் மரண வாக்குமூலம் போன்ற அதிஸ்டமில்லாத கவிதை இது. எரிகிற அன்னை வீடில் நின்று என்னை வசைப்பாடிகிற சகோதரரே நான் எதிர்பார்ததில்லையே ஒரு துண்டு நிலத்தை செப்புச் சல்லியை ஒரு வாக்கை அல்லது ஆதரவான உங்கள் பாராட்டுதலை. என் பிள்ளைகளின் உணவை உண்டும் என் மனைவியின் தண்ணிரை அருந்தியும் பாடுகிறேன் நான். அன்னைவீட்டுக் கூரை எரிகிறது என் சகோதரர்களோ பாகப் பிரிவினைச் சண்டையில். தண்ணீர் ஊற்றுவதானால் அவன் பக்கத்துக் கூரையில் ஊற்றாதே …
-
- 4 replies
- 1.2k views
-
-
உனக்காக காத்திருக்கையில் என்னைக் கடப்பவர்கள் மட்டும் ராசியானவர்கள் உன் முகத்தை அவர்களில் தேடுகிறேனே * அந்த சூரியனுக்கு யார் என்னைக் காட்டிக்கொடுத்தது பாருங்கள் நிலாவுக்காக காத்திருக்கிறேன் என்ற கோவத்தில் என்னை கறுப்பாக்கி கொண்டிருக்கிறது * உனக்காய் காத்திருந்த இடத்தில் கொஞ்ச நேரம் நி ன் று பார் உன்னைப் பெற என்னை நான் இழந்த வலி புரியும் * தாமதமாய் வருவதையே பழக்கமாய் கொண்டவள் நீ தெரிந்தும் உனக்காய் காத்திருக்க பழக்கப்பட்டவன் நான் * " நிலா" என்று யார் உனக்கு பெயர் வைத்தது உனக்காய் என்னை தேய வைத்துக் கொண்டிருக்கிறாய் -யாழ்_அகத்தியன்
-
- 3 replies
- 1.3k views
-
-
முதல் முதலாக நீ என்னை எழுத்துக்கூட்டி வாசித்து முடித்தபோது எல்லாக் கவிதைகளைப் போலவும் நானும் உன் வாழ்த்துக்காய் காத்திருக்க முன்னமே "என்றும் நீ எனக்குப் பிடித்த கவிதையாக இருந்துவிட முடியாது ஏனெனில் எழுத்துப் பிழைகள் அதிகம் நிறைந்த கிறுக்கலாய் இருக்கிறாய்" என நீ கூறிவிட்டு என்னை கசக்கி எறிந்த இடம் இன்றும் என்னை கண்ணீரால் கவி எழுத வைக்கிறது -யாழ்_அகத்தியன்
-
- 3 replies
- 1.3k views
-
-
சூர சம்கார சுதந்திரச்சிற்பிகள் அதிகாலை அரும்பாகி அந்தியிலே சருகாகும் ஆழகான மலரும் அல்ல மலர் சூடி மணமேடை மணக்கோலம் தான்காணும் மங்கலம் இவர்க்கில்லை காண் உயிரோடு உயிர்ப்பூவை உணர்வோடு ஒருங்காக்கி விதையாக விழுகின்றார் பார் இவர் உயிர்மீது தமிழீழம் உருவாகி வரும்வேளை எதிர்பார்க்கும் இளவேனில்கள் கருவோடு திருவாக உருவாகி வரவில்லை இரவோடு உருவானார்கள் இவர் தெருவுக்குள் விளையாடி பருவத்துக் கனவெல்லாம் உருவற்று உருக்கிட்டார்கள் மருவுற்ற மனங்களில் செருவுற்ற சேதிகள் விரவிட்ட வி~வித்துக்கள் எங்கும் பரவிட்ட பாதிப்பில் பாசறை புகுந்திட்ட உதயத்து விடிவெள்ளிகள் தேனான நிலவுகள் தினம் தோய்ந்து எழும்ப இவர் தேகத்தில் துடிப்புமுண்டு வானத்து ந…
-
- 5 replies
- 1.3k views
-
-
நீ சிந்திய சிரிப்புகளையெல்லாம் சேமித்துவைத்திருந்தேன் இரண்டுவருடசேமிப்பை எடுத்துப்பார்க்கிறேன். எதிலுமே என் பெயரில்லை என் பக்கத்தில் நின்றவர்களை பார்த்து சிரித்தது பல என் முன் நின்றவர்களுக்காய் சில பின் நின்றவர்களுக்காய் சில எவரையோ எண்ணியபடி எனை பார்த்து சிந்தியவை சில எல்லாவற்றையும் கழித்தபோது எஞ்சியவை எனக்காக சில ஏளன புன்னகைகள் என் மனக்காயங்களுக்கு-அவை மருந்தா, திராவகமா தெரியவில்லை ஆனாலும் அள்ளி அள்ளி பூசிக்கொள்கிறேன். இதயதில் உன் பெயரையும் உயிரில் உன் முகவரியையும் சுமந்தபடி! சிலம்பூர் யுகா, துபாய் [yughas@yahoo.com]
-
- 3 replies
- 1.3k views
-
-
2003 ம் ஆண்டு மாவீரர் நினைவாக வடித்த கண்ணீர் இன்றும் கார்த்திகை மாதத்து ஓளிக்கீற்றுக்கள் உலகெல்லாம் ஒரு தரம் எம் தேசம் நோக்கும் அற்புத நாள் தமிழீழ தீபம் அணையாமல் எரிந்திட தம்மை அழித்து அத்தீபத்தை ஏற்றிய உத்தம புருசர்களின் உன்னத நினைவுநாள் அடக்கி அடக்கியே சிங்களம் எம்மை அடிமைகளாக்கியபோது விலங்குடைத்து எம்மினத்தை விடுதலையாக்கிய வீரப்புருசர்களின் நினைவுநாள் சிங்களச் சீற்றர்களின் உறக்கம் கலைத்த உன்னத புருசர்களின் உத்தம நாள் புதியதோர் பரணி படைத்த புலித்தெய்வங்களின் நினைவு நாள் சுயத்தை தொலைத்து பொது நலத்தை நாடிய புண்ணிசீலர்கள் மக்களிற்காகவும் தாய் மண்ணிற்காகவும் விதையாகி எம்முள்ளே நினைவாகி நிலையான…
-
- 6 replies
- 1.3k views
-
-
காதலோடு நான் . . .01 வானத்து நிலவோ வடித்தெடுத்த பொற்குடமோ கானமயிலோ கவர்ச்சிமிகு தேவதையோ தங்கப்பதுமை ஒன்று தரணியில் வந்ததுவோ கோபுரக் கலசமொன்று கோதையாய் மாறியதோ வானவில்லொன்று நிமிர்ந்து இன்று பெண்ணானதோ கம்பன் காணமறந்த காவியப் புதல்வியோ எண்ணிலடங்கா வார்த்தைகளால் இழைத்துப்பின்னிய கவிதையோ கோதை இவள் யாரோ ? கோமகன் மகள்தானோ ? கோவலனை கொள்ளை கொண்ட மாதவி இவள் தானோ ? கண்ணெதிரே தோன்றியதும் கவிதை மழை கொட்டுகின்றதே பனித்துளி வீழ்ந்து புல்நுனி மருகுவதுபோல் பவளக்கொடி பார்வையினால் பாவிமனம் பற்றுகின்றதே ! பிரம்மனின் கைவண்ணத்தில் பிறந்த பொற்கொடியை புவியிலே வடித்துவைத்த சிற்பிகள் யாரோ ? அந்தரத்தில் பறக்கவைத்து அற்ப…
-
- 4 replies
- 1.7k views
-
-
படித்தேன் பிடித்தது.. பிடிக்கவில்லையா.. அடிக்கவராதீர்கள்.. கவி(கமல்) பாவம்.. அவர்தானே எழுதியது.. மனித வணக்கம் தாயே, என் தாயே! நான் உரித்த தோலே அறுத்த கொடியே குடித்த முதல் முலையே, என் மனையாளின் மானசீகச் சக்களத்தி, சரண். தகப்பா, ஓ தகப்பா! நீ என்றோ உதறிய மை படர்ந்தது கவிதைகளாய் இன்று புரியாத வரியிருப்பின் கேள்! பொழிப்புரை நான் சொல்லுகின்றேன். தமயா, ஓ தமயா! என் தகப்பனின் சாயல் நீ அச்சகம் தான் ஒன்றிங்கே அர்த்தங்கள் வெவ்வேறு தமக்காய், ஓ தமக்காய்! தோழி, தொலைந்தே போனாயே துணை தேடி போனாயோ? மனைவி, ஓ காதலி! நீ தாண்டாப் படியெல்லாம் நான் தாண்டக்குமைந்திடுவாய் சாத்திரத்தின் சூட்சுமங்கள் புரியும்வரை. மகனே, ஓ…
-
- 11 replies
- 12.4k views
-