கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
முன் சிரித்து உள்ளத்தில் ஒன்றை வைத்து உண்மையில்லா வார்த்தைகளை பேசுகின்ற மனிதர்களோ நாமெல்லாம் ஓரே இனம் ஆனால் என் குலம் தான் உயர்ந்தது நாமேல்லாம் இறைவனின் பிள்ளைகள் ஆனால் எங்கள் கடவுள் உயர்ந்தவர் அன்பென்றும் பண்பென்றும் செல்லிக்கொண்டு வேஷம் போடும் சுயநலவாதிகளோ எது உண்மை ? எது பொய்? இதைவிட எது நன்மை என்று பார்க்கும் மனிதர்களோ துன்பங்களையும் , துரோகங்களையும் அவமானங்களையும் கண்டு வாடிப்போகாதே மனமே
-
- 21 replies
- 5.3k views
-
-
இளங்காலைப் பொழுதினில் இதழ் விரித்து மலரத் துடித்த போது உன் வசியப் பார்வை என்னை சட்டென மலரவைத்தது. உன்னைப் பார்த்த அந்நிமிடத்தில் இருந்து என் மனசுக்குள் எதோ ஒரு தாக்கம். இதைத்தான் காதல் என்பார்களோ? புரியவில்லை..! எனக்கு புரியவில்லை, கிளியே..! அவனிடம் ஒரு முறை கேட்டு சொல் மெளனத்தின் ஓரத்தில் நெஞ்சின் ஈரத்தில் வெட்கப்படும் என் மனசு இராத்திரியில் கனவுகள் பகலில் அவன் நினைவுகள் இதுதான் என் வாழ்க்கை கிளியே இதையும் அவனிடம் சொல் ஆயிரமாயிரம் கனவுகளில் அவன் வந்து என் கூந்தல் கோதி தூக்கத்தை கலைத்து விளையாடி மகிழ்ந்த அந்த இனிமையான இரவுகள் அதையும் மறக்கவில்லை நான் இதையும் அவனிடம் சொல் கிளியே. பசுவின் மடியினைத் தேடும் பசுங்க…
-
- 27 replies
- 4.6k views
-
-
தேசத்தின் குரல் ஓய்ந்ததால் நாமிங்கு தீய்ந்த குரலால் பேசவில்லை கரம் ஓடிந்து வீழ்ந்தாலும் - எம் கனவொடிந்து போகவில்லை அடுக்கடுக்காய் பொய் சொல்லி அன்னியனை அரவணைத்து தமிழினம் ஒடுக்கவென புறப்பட்ட சிங்களத்தை மடித்தெடுத்த புகையிலையாய் வாயில் மென்று தின்று துப்பும் காலம் வெகுதொலைவில் இல்லை அண்ணன் தம்பி அக்கா தங்கையென ஆயிரம் வீரர்களை இழந்தாலும் - நாம் இன்னும் ஆட்டம் காணவில்லை தமிழர் நாம் வீழ்ந்த வீரனின் மேலேறி போரிடும் வஞ்சுரம் கொண்டவர்கள் பன்னெடுங்காலமாய் பகைதொடர்ந்த சிங்களத்தை கண்ணிமை திறப்பதற்குள் கொன்று தின்னத்துடிப்பவர் நாம் அஞ்சியஞ்சி வாழ நாம் எலிக்கு பிறந்தவர்களா ? புலிக்கு பிறந்தவர்கள் போரிடத் துணிந்தவர்கள் வி…
-
- 8 replies
- 1.5k views
-
-
எழுதுங்கள் என் கல்லறையில் இதயத்தை முத்தமிட்ட உன் அழகிய உதடுகள் விஷம் செறிந்த தேன் துளிகள் விழியாலே மொழிபேசும் கிளிமொழியாலே என் விழி பிதுங்கிட வைத்த பைங்கிளியே மை எழுதும் கண்ணாலே தினம் தினம் பொய்யெழுதி பொய்மைக்கு முன்னுரை உரைத்தவளே போதும் போதும் இந்த பொல்லாத உலகமிதில் பெண்ணொன்று வேண்டாம் இனி எனக்கு பெண்ணை நம்மாதே பேயாய் அலைந்திடுவாய் நம்பியவன் கதி நாயாய் நடைப்பிணமாய் நடுச்சாமத்திலும் தலையணை நனைத்திடும் நரகப் பொழுதிலும் புலம்புகின்றேன் அவள் பெயரை மூச்சிலே சுமக்கின்ற அவள் நாமம் அதுவே என்னை வாசகம் செய்கின்ற என் காயத்திரி மந்திரம் எழுதுங்கள் என் கல்லறையில் அவள் பெயரை தழுவும் அவள் வாசம் என் கல்லறையின் வாசகமாய்
-
- 11 replies
- 2.1k views
-
-
நாளைய விடியல் நாளைய விடியல் நாம் இருப்போமா..? நாளை சேவல் கூவக்கூடும் நாம் இருப்போமா..? நாளை இங்கு பூவும் மலரும் நாம் இருப்போமா..? ஆழமர நிழலில் அகதி வாழ்க்கை வன்னி மண்ணில் மணல் வீடு கட்டும் குழந்தைகள் அதை உடைக்கும் மழை வெள்ளம்! ஐ.நாவில் ஆயிரம் தொண்டர்கள் இருந்தென்ன..? எம்மை எல்லாம் மனிதப் பட்டியலிலா இணைத்துள்ளார்கள்..? மாமிசம் தின்னும் மடையர்கள்! ஆண்ட இனம் அகதியாய் அழியுமோ..? விழிக்குமோ தமிழினம் !? குஞ்சு குருமன்களாய் இளையவர், முதியவராய் உங்களில் சிலராய்.. உருக்குலையும் எங்கள் உடன்பிறப்புகள் இங்கு தினம் தினம்! பாலகன் ஒருவன் பாடுகிறான! பாவியர்கள் நாங்கள் ஏன்..? அவதியில் ஆக்கப்பட்…
-
- 6 replies
- 2.3k views
-
-
கடலை விட்டுப்போன மீன் குஞ்சுகள் கரையில் நின்று நீந்திக் கொண்டிருந்த மீன் குஞ்சுகள் சந்தோசத்தில் துள்ளி விழுந்து தரைக்கு வந்தன கடற்கரை மணலில் புரண்டு ஆசையை அள்ளிப் பூசின குழந்தைகளோடு பட்டம் விட்டு விளையாடி நாளை வருவதாகக் கூறி நடந்து சென்றன வெய்யிலில் நெடுஞ்சாலையில் நின்று வியர்த்து ஐஸ் குச்சியொன்றை வாங்கிச் சூப்பி கடல் நீரெல்லாம் உப்பென சொல்லித் துப்பின கோபுரக் கலசத்தின் விளிம்பு வரை ஏறி வியந்து, விசில் அடித்து மகிழ்ந்தன இலைகளின் மறைவில் அழகியை வீழ்த்தி இதழைக் கவ்விச் சப்பிய மனிதனையே பார்த்து வாய்பிளந்து முனகின கடலுக்கு அன்று திரும்ப மனமே இல்லை இருளில் பழுத்த இலைகளில் ஏறி கொட்டக் கொட்ட விழித்தே இர…
-
- 14 replies
- 3k views
-
-
நாளை நாளை என்றொரு நாளை எண்ணி மனம் வெம்பிப் போகாதே தம்பி - அந்த நாலுந் தெரிந்தவன் நடத்தும் நாடகத்தில் குறை சொல்லி மாளாதே தம்பி விதை விதைப்பதும் அது முளைப்பதும் உந்தன் கையிலா தம்பி? எல்லாம் இயற்கையின் கையினை நம்பி! கவலைகள் கிடக்கட்டும் காரியம் நடத்திவிடு மலைகள் எதிர்க்கட்டும் துணிவாய் இருந்துவிடு பிறந்தது இன்று வாழ்வது இன்று சாவதும் இன்றே என்று எண்ணி விடு துன்பங்கள் ஓடும் இன்பங்கள் கூடும் உல்லாசம் உன் மார்பைத் தொட்டுத் தொட்டுத் தாலாட்டும் கொண்டாட்டம் நாமெல்லாம் இன்று பூத்த மலர்க்கூட்டம் நமக்கு ஏது கவலை - ஊதடா உல்லாசப் பண்பாடும் குழலை நாமெல்லாம் இன்று பிறந்த மழலை நமக்…
-
- 7 replies
- 1.9k views
-
-
03.தமிழீழம் தாய்நாடு அது எங்கள் தமிழீழம் எம் தமிழ்த் தாய்நாடு தமிழீழம்! உரக்கச் சொல்வோம் இதை உலகுக்கும் எடுத்துச் சொல்வோம்! இங்கே யார் நாங்கள்...? இங்கே யார் நாங்கள்...? எட்டுத் திக்கிலுமிருந்து.. எழுகின்ற கேள்விக்கு.. என்ன விடை..? இதை அறிந்து சிலபேர், அறியாமல் பலபேர், உனக்குள் இருக்கும் உன் தாய்நாடு எங்கே...? இருபத்தியோரம் நூற்றாண்டின் இயந்திர வாழ்வில்..! சுவடுகள் பதிக்குமுன் ஓருகணம் நில்லுங்கள்! உனக்குத் தெரிந்த உன் தாய்நாடு என்று எதைச் சொல்லிக்கொள்ளப் போகிறாய்..? உன் எண்ணக்கரு என்ன சொல்கிறது..? என் எண்ணக்கரு இதைத்தான்.. எண்ணிக் கொள்கிறது! தாய்நாடு அது எங்கள் தமிழீழம் எம் …
-
- 5 replies
- 1.6k views
-
-
பழைய மொந்தையில் புதிய கள்ளோ புதிய மொந்தையில் பழைய கள்ளோ யானறியேன். மௌனம் நெஞ்சையழுத்த மௌனமாய் பதிந்துள்ளேன் மௌனம் பேசுகின்றேன் - உன் மனதோடு பேசுகின்றேன் மழைமேகமாய் மலர்வாசமாய் மௌனமாய் பேசுகின்றேன் மண்வாசம் நாசமாகி மாண்டவுடல் மண்ணாகி மாண்புமிகு தமிழினம் மழிகின்றதே - நான் மௌனம் பேசுகின்றேன் தோன்றிய முதல் குடியாய் வீழ்ந்த முதல் குடியாய் வெற்றிவாகை சூடி மறைந்து போகுதே எம்மினம் - நான் மௌனம் பேசுகின்றேன் என் மனதோடு பேசுகின்றேன் புல்பூண்டு பூவையே புணரத்துடிக்கும் பேரினவாதத்தால் பூந்தையர் எல்லாம் கருகி மாள - நாமோ புலம்பெயர்ந்து புலனறுந்து வழிமாறி மொழிமாறி மெனம் பேசுகின்றோம் நட்படன் என்.பரணீதர…
-
- 12 replies
- 2.2k views
-
-
வீட்டுக்கொரு வீரன் விளையாட வரவேண்டும் ஏட்டுக்கொரு புலிகளாய் எழுந்த எம் கூட்டங்கள் நாட்டுக்காக என்றும் கொஞ்ச நாள் குறித்துகொள்ளட்டும் பாட்டுக்கொரு புலவர்கள் பாடிநின்ற தேசத்தை மீட்டெடுக்க வீரர்கள் விரைவாக வரவேண்டும் கிழக்குபக்க சிகரத்திலே சிங்கக்கொடி ஏறினாலும் வடக்குபக்க வீதியாலே வெற்றிசேதி வரவேண்டும் எனவே வீட்டுக்கொரு வீரன் விளையாட வரவேண்டும் கிளித்தட்டோ கிறிக்கற்றோ நாட்டுக்காக நாமும் விளையாட வரவேண்டும்
-
- 4 replies
- 1.6k views
-
-
பெண்கள் இல்லாத உலகத்தில் வாழ பேயும் விரும்பாதே பாடலைக் கேட்டுவிட்டு நீங்கள் அளித்த கருத்துக்கள் விமர்சனங்களுக்கு எனது பதில் கருத்துக்கள். சுகன் உங்களுக்கு என் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் எதிர்பார்க்கவில்லை! யாழ்களத்தில் இருந்து இவ்வளவு உறவுகள் இந்தப்பாடலைக் கேட்டு இதற்கு தங்களுடைய ஆக்கபூர்வமான கருத்துக்களையும், விமர்சனங்களையும் வழங்குவார்கள் என்று. அந்த வகையில் முதலில் மோகன் அண்ணாவிற்கு எனது அன்பு கலந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வடைகிறேன். யாழ்கள அனைத்து முகமறியா அன்புள்ளங்களுக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துக்களும். எங்கள் வளர்ச்சியில் யாழ்களமும் இணைய அணில்போல் பங்கெடுத்துக் கொள்வதையிட்டு நாங்கள் பெருமகிழ்வடைகிறோம். உங…
-
- 0 replies
- 668 views
-
-
பெண்கள் இல்லாத உலகத்தில் வாழ பேயும் விரும்பாதே பாட்டு இன்றே கேட்கலாம் வாங்க http://vaseeharan.blogspot.com/ please click on here... பாட்டைக் கேளுங்கள் உங்கள் கருத்துகளை அள்ளி வழங்குங்கள் அன்புடன் தமிழ்வானம் யாழ்கள உறவுகளுக்காக மட்டும்
-
- 25 replies
- 4.4k views
-
-
அன்புடன் அனிதா இணையத்தில் யாழ்மீட்டி ரீங்காரம் செய்து - உங்கள் இதயத்தை பகிர்ந்துகொண்ட எம்வீட்டு குருவிகளே! எப்போது ஒன்று சேர்வோம்? எப்படி ஒன்று சேர்வோம்? இந்த ஏக்கங்கள் தவிப்புக்கள் இனிமேல் உமக்கு இல்லை! உணர்வுகளால் நேற்றுவரை உரையாடிய காதல்ஜோடி இன்றிலிருந்து என்றென்றும் உடலாலும் இணைகிறது! உள்ளத்தில் நீர் சுமந்த உண்மையான அன்பிற்காய் திருவிழா செய்கின்றோம்! திருமணமாம் உமக்கின்று! இதயத்தின் உரசல்களில் உருவான ஒளித் தீப்பிழம்பு விண்வெளியில் பயணித்து கண்மணிகள் கதைசொல்லும்! இணையத்தில் சுழியோடி முத்தான காதல் செய்த மணி ரசிகை ஓருயிராய் வாழ்க பல்லாண்டு! அன்புடன் கலைஞன் முகமூடிக் கருத்தாடல்.. …
-
- 37 replies
- 49.3k views
-
-
படித்துச் சுவைத்த கவிதைத் தொடர்.. பாகம்-1 கதிரவன் கண்மூடி நித்திரையில் மூழ்கி கணநேரம் கழித்திருக்க... வையகம் தன்மேல் கருப்பு போர்வை போர்த்திக்கொண்டது... வானம் சாபம் பெற்ற இந்திரனாய் சாமந்திப் பூ தோட்டமதாய் தேகமெங்கும் நட்சத்திரக் கண்திறந்து மின்மினிப் பூச்சியாய் மினிங்கியது... தவழ்ந்து வந்த தென்றலின் தாலாட்டில் நறுமணம் கலந்தது மெல்ல மொட்டவிழந்த முல்லை... பகலெல்லாம் சூரிய ஆண்தனை காண நாணம் பூண்டு மறைந்திருந்த நிலவுப் பெண்ணாள் மெல்ல முகமலர்ந்தாள் விண் தாமரையாய்... தோகையவள் எழில் கூட்ட தோழியராய் தேகம் தொட்டே தொடர்ந்திட்டாள் மேகப்பெண்ணாள். விண்ணகத்து பெண்ணிவளின் அழகெல்லாம் நாணிநிற்க மண்ணகத்தில் பெண்ணொருத்தி…
-
- 9 replies
- 2k views
-
-
உனக்காக ஏதாவது எழுதும் போதுதான் எழுத்துக்களின் நெருக்கடியில் சிக்கி மூச்சு விட இடம் தேடுகிறது என் காதல் * என்னைப் போல் யாரும் கண்ணைத்தானம் செய்வதை பார்த்துவிட்டு இறந்து போயிருக்க மாட்டார்கள் ஆனால் கண்ணுக்கும் தெரியாது நான் இறந்து போனது அவள் திருமணவீட்டில் என்று * உனக்காகவே உழைத்ததில் உன்னை வாங்க மறந்துவிட்டேன் என் மனதையும் உன்னிடம் கொடுத்ததால் * நதியாக ஓடி வா என்றாய் வந்த பின்தான் தெரிந்தது என்னை உன்னோடு கலக்க அல்ல கரைக்கத்தான் வரச் சொன்னாய் என்று * உன் ஆடையின் அழகில் உன்னழகு யாருக்கும் தெரியக் கூடாது என்பதிலும் நான் அக்கறையாக இருந்ததில் தோற்த்தான் போனேனடி உன் ஆசைக் கணவரிடம் …
-
- 1 reply
- 785 views
-
-
பல்லவி பெண்கள் இல்லாத உலகத்தில் வாழ பேயும் விரும்பாதே Girlfriend இல்லாத boysஇன் வாழ்க்கை என்றும் இனிக்காதே Tim Hortenபோகாத ஆண்களுக்கு ஒரு உற்சாகம் பிறக்காதே அட நம்பர் கொடுக்காமல் நீங்கள் போனால் Friendship வளராதே சரணம் 1 E-மெயில் அனுப்பி இன்சல்ட் செய்து disturbe disturbe செய்வோமே sms செய்து உங்களை எழுப்பி Dating Dating கேட்போமே பாரப்பா பழனியப்பா வெளிநாட்டு girls பாருங்கப்பா ஊரெல்லாம் பெரிசப்பா போடுகிற dress தான் சிறுசப்பா yahoo chat இலே searching செய்யாத handsome handsome boys நாங்கள் தானே Girlsஐ கண்டாலே wallet open பண்ணாத Good boys Good boys என்றும் நாங்கள் தானே கார்மோன் துடிப்பில் புது வைரஸ் கிருமியாய் நுழைவோம் …
-
- 8 replies
- 1.5k views
-
-
நான் அழகா அல்லது உன் வீட்டுத் தோட்டத்தில் பூக்கும் மலர்கள் அழகா என் உள்ளம் அழகா அல்லது உன் கனவுக் கன்னியின் உள்ளம் அழகா என் குரல் அழகா அல்லது உன்னவளின் குரல் அழகா என் காதல் அழகா அல்லது உன் வருங்கால காதல் அழகா இத்தனை அழகையும் ரசிக்கும் என்னவன் அழகா அந்த அழகன் தான் எங்கே ??? மேகமாய் வந்து..............
-
- 17 replies
- 2.7k views
-
-
ஒருமுறை ஆய்வு செய்ய......... வட்டி முதலாய் படர்ந்து விட்ட கடன் கட்டி முடிக்க வேண்டும் தவணையோடு பட்டு விட்ட கடனை சேர்ந்தே அடைக்க மனதினில் தட்டிவிட்டதோர் சட்டென்ற ஒர் யோசனை வெட்டியாய் வீட்டிலிருந்தே வெறுமனே மெட்டி ஒலி பார்த்து மென்னுடலை பொட்டலமாய் உருத்தெரியாமல் மாறிடாமலே கட்டு மேனியை கட்டோடு வைத்திருக்க எட்டு மணி நேர வேலைதனை எட்டியே போய் செய்யலாமே கட்டியதனால் கணவனார் உரைத்தலாலே எட்டு மணி நேர வேலை இயல்பாய் எட்டிரண்டாகி இயந்திரமாகிப் போனதில் எட்டிப் பார்த்ததோ நோயும் நொடியும்தான் கட்டியவனுக்கு நோய் என்றால் கட்டியவள் காப்பாள் நிதம் பத்தியம் கட்டியவளுக்கு நோய் என்றால் கட்டியவன் காப்பானா பத்தியம் அடுப்படி விசயம் …
-
- 13 replies
- 2k views
-
-
பல்லவி உயிராய் என்னை வளர்த்தவள் நீ கருவில் என்னை சுமந்தவள் நீ நீ தந்த உயிரில் பாடுகின்றேன் -உன் கனவுகள் சுமந்தே வாழுகின்றேன் பூமிக்கு என்னை அறிமுகம் செய்தாய் பூவாய்த் தானனே எனை வளர்த்தாய் அம்மா...அம்மா...அம்மா...அம்மா... இடையிசை ராப் பாடல் குரல்: சையின் சுதாஸ் (நோர்வே) சரணம் 1 கடவுளை கண்முன் பார்த்தது இல்லை உன் வடிவில் நான் பார்த்தேன் உண்மையை நேராய் உணர்ந்தது இல்லை உன் விழியில் நான் பார்த்தேன் உயிராய் ஒளியாய் இருப்பவள் நீ சுமைகளை இமைகளில் சுமப்பவள் நீ ஆயிரம் உறவின் வாசல் நீ அன்புக்கு இணையாய் எதைக் கொடுப்பேன் நிலவா நினைவா நீ கை காட்டும் திசைதான் உயிரா உணர்வா நீ பண்பாடும் இசைதான் உயிராய் என்னை வளர்த்தவள் நீ …
-
- 4 replies
- 1.3k views
-
-
எம் கரும்புலிகளே! ஜீலை 5 2007 இருளகற்ற கரும்புலியாய் சென்றார்கள்! விடியலுக்கு விளக்காகி நின்றார்கள் 'சாவினை' இவர்கள் தான் வென்றார்கள்- வீர சரித்திரத்தில் பேரெழுதிச் சென்றார்கள்! சந்தனமேனிதனில் கந்தகத்தை கட்டியே களம் நாடிச் சென்றார்கள்! காடையர் கயவர்கள் கூட்டத்தை வெடி மருந்துக்கு பொடியாக்கி வென்றார்கள்! அஞ்சாத தலைவனின் பாதையிலே- நடை போடும் எங்களின் வீரர்களே! உங்களின் நெஞ்சுரம் யார்க்கு வரும்? உங்கள் தியாகமே "ஈழத்தை" வென்று தரும்! தேசத்தின் புயலாக வீசுகின்ற- கரும் புலியே! கடும்பகையைக் கொளுத்துகின்ற எரிமலையே! எம் ஈழச் சோதரரே! -ஈழ வரலாற்றின் நிலைய…
-
- 5 replies
- 1.7k views
-
-
அன்புக் கரம் நாடும் அகதிகள் இறைவன் படைப்பால் தமிழர் ஆனோம் தமித்தாய் வயிற்றுப் பாவி ஆனோம் தாய் நாட்டில் அகதி ஆனோம் தவமது இருந்தோம் பசியது தாங்கினோம் ஆண்டுகள் பல ஓடியும் ஆதரிப்பார் யாருமின்றி அந்நியர் நாட்டில் அகதிகள் ஆனோம் அன்புக்கரம் நீட்டி ஆதிரித்தான் அந்நியன் அந்நியன் உணர்வுகள் நமக்கு இல்லையே? நம்மவர் உணர்வுகள் உறங்குவது ஏனோ ? அகதிக்கு அகதி நாம் நம் நாட்டில் அகதியாம்! எம்மவர் காத்திட அன்புக்கரம் நீட்டுவோம் வாரீர்..? வரிகள் : வசீகரன் அச்சில் : 12.03.93 நன்றி : தமிழன் (பத்திரிகை)
-
- 2 replies
- 1.1k views
-
-
சிறு பருவத்தில் பார்த்து வியக்க வைத்தது - உன் நட்பு வாலிபப் பருவத்தில் பேசி ரசிக்க வைத்தது - உன் நட்பு துன்பத்தின் போது கண்ணீர் துடைத்தது - உன் நட்பு மகிழ்ந்த போது மனம் மகிழ வைத்தது - உன் நட்பு முதிர்ந்த பின்னும் என்றும் தொடருமடி - நம் நட்பு நட்புடன் இனியவள்
-
- 20 replies
- 2.8k views
-
-
உனக்கு யாரோ ஒருவனின் கவிதை பிடித்ததில் இருந்து கிறுக்கிக் கொண்டுதானிருக்கிறேன் என்னில் ஏதாவது ஒன்று உனக்கு பிடித்ததில் கவிதையாவது இருக்கட்டுமே என்று -யாழ்_அகத்தியன்
-
- 4 replies
- 1.2k views
-
-
கரும்புலி மில்லர் கரும்புலிகளில் மூத்தவன். வசந்தனாய் பிறந்து மில்லராய் வாழ்பவன்! மின்னல் எனத் தோன்றி மில்லர் ஆனவன்! கரும்புலிகளைப் படைத்து பிரம்மா ஆனவன்! உன் பின்னே எத்தனை தோழர்கள் பார்! அன்று கொட்டியா வருகுதென்று சுவை சுவையாய் நகைச்சுவை சொன்னவனே நீ! இன்று இருதாசப்தங்கள் கடந்தும் எங்கள் நெஞ்சு கனக்க வைத்தவன் நீ! பிறந்தவருக்கு மட்டுமில்லை! இனி மரணித்து மலர்ந்த உன் போன்றவர்க்கு பிறந்தநாளே கொண்டாடுவோம்! கரும்புலிநாள் என்றால் பன்னீர்ப் பூக்களை மட்டுமல்ல கண்ணீர்ப் பூக்களையும் காணிக்கை செய்கின்றோம்! நெஞ்சு நிமிர்த்தி நிற்கும் பெருந்தலைவன் பார்வையின் கீழ் நிமிர்கின்றோம்! ஊருக்கும் பேரு…
-
- 11 replies
- 2.5k views
-
-
நான் உன்னை நினைப்பதை மறந்துவிடப் போவதில்லை அது என்னை மறக்கப் பார்க்கிறது * என் எதிரியல்லக் காதல் அனாலும் சுட்டுக் கொண்டேன் அதன் எதிரியால் சாகக்கூடாது என்பதால் * நீதான் அடைகாக்கிறாய் என்பதற்காய் என் காதல் முட்டையை உடைத்துவிடாதே நானாக உடைத்து வெளிவரும் வரை * அவள் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து தொலைத்த பாதையில்_ நான் என்னைத் தேடி எடுத்துக் கொண்டேன் அவளை நினைத்து வாழ * என்னை மறப்பதற்காய் நான் இறந்து விட்டதாக நினைத்து விடாதே ஏனெனில் நீ வாழ்ந்து கொண்டிருப்பது யுத்த பூமியில் -யாழ்_அகத்தியன்
-
- 2 replies
- 981 views
-