Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கவிதைக்குள் எழுத வரவில்லை ஏன் என்று தெரியவில்லை அதனால் தான் இதனுடாக அனுப்புகின்றேன் காதல் காதல் புனிதமானது அற்புதமானது முறையாக உண்மையாக காதலிக்கும் போதுஃ ஆனால் தற்போது காதல் மலிந்து முறை கெட்டு விட்டது அதுவும் வெளிநாடுகளில் காதல் சீர்குலைந்து விட்டது காதலர்கள் சோடி மாறியது அல்ல அதிசயம் கணவன் மனைவி குழந்தைகளை அநாதையாக்கி சோடி மாறுவதுதான் ஆச்சரியம் வேதனை அதுமட்டுமா தாயகத்தில் நிச்சயிக்கப்பட்டு ஏன் திருமணமும் செய்து கொண்டு வெளிநாடு வந்து அவர்களை ஏமாற்றி விடுவது கொடுமையல்லவா அதுவும் இப்பொழுது நடக்கின்றது ஒருவர் காதலித்து விட்டு அல்லது திருமணம் செய்துவிட்டது அதை உதறி எறிந்து விட்டு இன்னொருவரை காதலிப்பதாக அவர்…

    • 16 replies
    • 4.7k views
  2. Started by Thamilthangai,

    தியாகத்தாயே! சரித்திரம் தன்னில் பேரெழுதிச் சென்ற சத்தியத் தாயே பூபதியே! நித்தமும் நின்னை நினைக்கின்றோம் உனக்காய் கண்ணீர் வடிக்கின்றோம்! அரக்கரினத்தின் கொடுமையினை எதிர்க்கத் தாயே பூபதியே! அஹிம்சை வழியில் நின்றாயே! அகிலத்தை நீ வென்றாயே! விதியின் வழியில் சாகாமல் ஈந்தாய் அம்மா உன் உயிரை தமிழரினத்தின் தன் மானத்திற்கு எழுதிச் சென்றாய் முன்னுரையை உந்தன் தியாகம் உலகறியும் நம்மை சூழ்ந்த பகையும் உடனகலும் வேகும் தீயில் யாகம் செய்யும் வேங்கை வழியில் பகை முடியும்! நாடே அறியும் வகையில் நீ இருந்தாய் விரதம் உண்ணாமல்! ஈழத் தாயே!! எம் பூபதியே! விடியும் நேரம் மிக விரைவில்!.. பறக்கும் புலிக்கொடி ஈழமண்ணில்!. நன்றி..

  3. வணக்கம் யாழ் கள நண்பர்களே, இந்தக் கவிதையை குரல் வடிவில் தர வேண்டி முயற்சி செய்ததன் பலன் இது... பரீட்சார்த்த முயற்சி இது.... நிறை குறைகளை சுட்டிக் காட்டுங்கள்.... அன்புடன் கவி ரூபன்

    • 5 replies
    • 1.6k views
  4. கண்கள் அழகிய காதலியைத் தேடியலைகிறது. அழகிய பெண் இவள் அழகியா காமக் காதலி. அவள் அழகென்பதற்கல்ல, அவளை பார்க்கின்றேன். அவள் என் காதலை ஏற்க்க மறுத்த காதலியை விட அழ்காய் இருப்ப்தால். இது இயற்கையாகவே இருக்கிறது. காதலியை மறப்பதற்கு அவைலை விட அழகிய காதலி தேவைப்படுகிறது. அவளுக்கு இளந்துவிட்டோமே என்ற உணர்வு உண்டாக்குவதற்கு. நினைவுகளை சரிசெய்து கொள்ள ஒரு சதி. இயற்க்கைக்கு அற்ப்பாட்ட மனஉறுதி தேவைபடுகிறது. கற்பனையின் நினைவை கொள்வத்ற்கு ஆயூதம் தா மனமே www.tamil4u.wordpress.com உன்னை மறப்பதற்கு முயற்சிகள் படுதோல்விகலாகுதடி உன்னை மறப்பதற்கு முயற்சிகள் படுதோல்விகலாகுதடி. மனம் துடிக்கிறது மறப்பதன்ற சிந்தை மூளையில் தோன்றமுன். உன்னை மீண்டும் சந்திக்க ஆர்வம் கொள்லுது…

  5. Started by yaal_ahaththiyan,

    இனியவளே… என்னைக் கோவப்படுத்தி பார்ப்பதற்க்கானா உன் தேடல் தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது தோல்விக்கு மத்தியிலும் ம்ம்… உனக்கெப்படி தெரியும் உன்னை யாரும் கோவப்படுத்தினால்தான் எனக்கு கோவம் வருமென்று நமக்குள் பிரிவே வரக்கூடாது அப்படி வந்தால் உன்னால் வரக்கூடாது ஏனெனில் அந்த சோகத்தின் கதாநாயகியாக நீ இருந்துவிட கூடாதென்பதால் உன் கல்மனதுக்குள் நுழையும்வரைதான் யோசித்தேன் எப்படி நுழைவதென்று நுழைந்தபின் மறந்தே போனேன் எப்படி யோசித்து நுழைந்தேனென்று ***************************************************** கவிதைகள் எழுதத் தெரியுமா என்று கேட்டார்கள் நான் தெரியாது என்றேன். அப்ப என்ன தெரியுமென்று கேட்டார்கள…

    • 5 replies
    • 1.3k views
  6. Started by வானவில்,

    சோலையில் பூத்த மலர்களே நீங்கள் கண்மூடி உறங்குங்கள் எங்கள் நிலை பார்த்தால் காலையிலையே நீங்கள் வாடிவிடுவீர்கள் ஆடை தரித்த எங்களூர் இன்று குட்டி கிரோஷிமாவாகிவிட்டது எங்கள் நிலை கண்டு கூவிக் கூவியே நம்மூர் குயில்களின் குரல்களும் தேய்ந்து விட்டன கரைந்த காகங்களும் காலமாகிப் போய்விட்டன அமாவாசை இரவில் பூரணைச் சந்திரனை எதிர் பார்த்து ஏமாந்து போனவர்களாக நாம்! விடிகின்றது தினமும், நமக்கில்லை........ இன்று வரையில் இருட்டிற்குள்தான் நம் விடிவும்...! நாளை போர் தீர்ந்து கண்ணீர் குறையுமா நம் கண்ணில்..........?

  7. தோணியிலே ஏறும் போது சொன்னார்கள் துறைமுகத்தில் இறங்குவதாய்.. பாதிவழி போகையிலே .. பாவிகளோ தோணிக்குத் துளையிட்டார்கள் தண்ணியேறித் தாழும் நிலை .. தோணிக்கின்று ! பாவிகளே .. பாவிகளே .. தாழுவது தோணிமட்டுமல்ல நீங்களும் தான் ! புரிந்து கொள்ளுங்கள் !

  8. பயம்-பசி-படிப்பில்லை... கதறியழும் கந்தளாய் தமிழர் விரைவாய் வரவேண்டும் விடியலொன்று. எத்தனை எத்தனை இரவுகள். அத்தனைக்கும் விடியல்கள். எங்களின் இந்த இருளுக்கு எப்போதுண்டு விடியல்தான். சொந்தமான நிலத்தினிடை துச்சர்களால் அல்லற்படும் பந்தங்கள் துயர் தீர்ந்திடவே விரைவாய் வேண்டும் விடியலொன்று. பயமேயறியாப் பிஞசுகளை பாடாய்ப் படுத்தும் நரிக் கூட்டம். பரிதவிக்கும் மக்களையே பகடைக்காய் போல் பாவிக்கும். பஞ்சங் காணாப் பூமியிலே பசியால் வாடித் துவழ்கின்ற பந்தங்கள் துயர் தீர்ந்திடவே விரைவாய் வேண்டும் விடியலொன்று. அசுரர் ஆளும் நாட்டினிலே ஆட்சி என்றும் கொடுங்கோல்தான். பகரச் சொற்கள் வேறுண்டா? பாவிகளின்…

    • 2 replies
    • 1k views
  9. Started by yaal_ahaththiyan,

    உன் ஒவ்வொரு சந்திப்பின்போதும் காதல் என்னை மொழிபெயர்த்து கவிதையாய் அழகுபடுத்தியது. உன்னை நினைத்துக் கொண்டு என்னைப் பார்தால் கண்ணாடியிலும் நீதான் தெரிகிறாய் உன்னை பார்க்க கவிதையோடுதான் தினம் வருவேன் கண்டதும் மெளனமாய் தலை குனிகிறாய் கண்டபடி வெளியில் சுத்தாதே உன்னில் விழிக்க எல்லாரும் தவம் கிடக்கிறார்கள். -யாழ்_அகத்தியன்

  10. கட்டு இளகி மொட்டவிழ்ந்த புன்னகைப் பூ இதுவோ சிட்டு அவள் இதழ் கவிழ்ந்த-தேன் கிண்ணம்தான் இதுவோ முத்தாக மின்னுகின்ற-பல் மாதுளைதான் அதுவோ கண்களின் கருமையது கருவண்டுதான்அதுவோ தென்றலிலே தவள்ந்துவரும் தெம்மாங்குதான் அவளோ சத்தமிட்டு எனை முத்தமிட்ட-தமிழ்க் கவிதான் அவளோ

  11. அண்மையில் ஒரு நீண்ட நாளைய நண்பன் ஒருவன் கதைக்கும்போது என்னிடம் கேட்டான் என்னடா முந்தி ஒரு காலத்திலை கனக்க கவிதையள் கதையள் எண்டு எழதுவாய் இப்ப வர வர உன்ரை எழுத்து இப்பிடி மோசமாய் பேச்சு தமிழிலையும் அதுவும் ஊர்வம்பு மற்றவர்கள் வம்பு என்று போய் கொண்டிருக்கு என்ன நடந்தது வயசு போட்டுதா? என்றான். அவன் திட்டினது எனக்கு கோபம் வரேல்லை ஆனால் வயது போட்டுதா எண்று கேட்டதுதான் கோபம் வந்திட்டுது அதுதான் வழைமையை விட ஒரு மாறுதலுக்கு இந்த வரிகள் கண்கள் பார்த்தால் காதல் வரும் கண்கள் பார்க்காமலும் காதல் வரும் காலத்தின் கோலம் கணணிக் காலம் இனிக்கும் மணக்கும் இதமாய் இருக்கும் இதுவல்லவோ உலகமென்று இவ்வுலகமும் மறக்கும் தடைபோட்டு தடைபோட்டு தாய் தந்தை த…

    • 18 replies
    • 2.5k views
  12. ஒரு நாள் உன்னை விட்டு பிரிந்து வந்ததற்கே எப்படி பிரிய முடிந்ததென்றா கேக்கிறாய் எங்கே உன் இதயத்தை திறந்து பார் பிரிவுக் கவிதை எழுதிக்கொண்டிருப்பேன் நீயே சொல் .. என் நம்பிக்கை நீயென்ற பின் நம்பிக்கை இல்லாமல் நீ தள்ளியே நின்றால் விழுந்திட மாட்டெனோ உன் முதல் சந்திப்பும் உன் முதல் பிரிவும் சில நாட்களுக்குள் நடந்தேறியிருந்தாலும் உன் பிரிவு மட்டும் இன்னும் என்னை வாட்டுகிறது உனக்கும் இரவில் உலாப் போக பிடிக்குமா சரி வா போய் வருவோம் அதற்க்கு முன் நிலாவிடம் சொல்லிவிட்டு வா கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து வரும்படி உன்னை நான் பார்க்க வரும் போது மட்டும்தான் ஏறும் பேருந்தையும் இறங்கும் தரிபிடத்தையும் பக்கத்தில் இரு…

  13. Started by kavi_ruban,

    தந்தையை இழந்த சகோதரிக்கு ஒரு தம்பியின் (கவி)மடல்... சகோதரி, யாரிவன் என்ற விசாரணைக் கோதாவில் இறங்காமல் தந்துவிடு உந்தன் சோகத்தின் ஒரு சிறு துளி தன்னை! அருமை அப்பா - உன்னை அழவைத்துப் பார்த்தறியாதவர்! இன்று கொடும் சோகப் பிணியில் விழும் எந்தன் சேய் என்ற நினைவிழந்து நிர்க்கதியாய் விட்டுச்சென்ற சோகம் யாரறிவார் உன்னையன்றி! ஆனாலும் சகோதரி உந்தன் சோகம் நானறிவேன்... சோகத்தின் சுவடுகள் உன்னிடம் மட்டுமல்ல - உலகில் கோடி மக்கள் உள்ளார் சொந்தம் சொல்ல! ஒருயிர் போனதன்று தேம்பியழுவதா குழந்தை போல? பாசப் பசையில் மறந்துவிடுவதா உந்தன் வாழ்வை மெல்ல? வேண்டாம் சகோதரி செய்வோமே புது விதி! பரிதாப வோட்டுக்கள் உந்தன் மனவங…

  14. சின்னவனா இருக்கேக்க சூழ்ந்திடுவார் முதியவர்கள் ஆண்டு சில உருண்டோட பிரிந்து அவரும் சென்றனரே போகுதுபார் வாழ்நாளும் புயல் போன வேகத்திலை ஏறிடிச்சு என் வயதும் நானும் இப்போ கிழவனப்பா மூட்டுப் பிடிப்பிருக்கு மருந்தெடுக்க போகணுமே முட்டுக் கொடுத்தா தான் மூணு அடி நான் மிதிப்பேன் கால் நடக்க முடியாட்டா பாடை கட்ட முந்திடுவார் ஏக்கம் தாளாமை போக்கத்து நிக்கிறனே பங்கைப் பிரிக்காட்டி பால் வார்க்க மாட்டாராம் நான் சேத்த சொத்துக்கு எட்டுக்கால் வாரிசுகள் நாலெழுத்து படிக்காமை நாசமாய் போனதுகள் வீட்டையும் புடுங்கிட்டு நாட்டுக்கு அனுப்புதுகள் இண்டைக்கோ நாளைக்கோ போற உயிர் இது தானே நன்றியுள்ள நாய் இருந்தா-என் கஷ்டத்தை அது கேக்கும் பணத…

  15. Started by Iraivan,

    காதல் மனம் தனியே சிரித்திருக்கும். தனிமையில் நிலைத்திருக்கும். காணுமிடமெல்லாம் தன் காதலையே பார்த்திருக்கும். ஊனுள் உருகிநிற்கும். உள்ளத்தை மறைத்து வைக்கும். தாம் மட்டுந்தானென்றே தம்மையே புகழ்ந்து நிற்கும். காலத்தால் அழியாது என்றும் காவியத்தி உள்ளோமென்றும் போதை தலைக்கேறினாற் போல் பொய்களும் உரைத்து நிற்கும். அன்னைக்கு அடங்கேனென்றும் தந்தை சொற் கேட்கேனென்றும் இன்பம் காதல் ஒன்றே என்று எப்போதும் இறுமாந்திருக்கும். உங்கள் காதல் மனங்களையும் அவிழ்த்து விடுங்கள்.

    • 11 replies
    • 1.9k views
  16. Started by Iraivan,

    இறைவனே ! என்னைப் படைத்தது நீயென்றால் என் மீதேன் இத்தனை குறைகள். ஒவ்வொன்றாய் சொல்லவா? இல்லை ஒன்றைமட்டும் சொல்லவா? சிறிய குறைகளை விட்டு விடு பெரிதாய் குறை ஒன்றுண்டு. உன்னைப் பார்க்க முடியவில்லை அது என்குறையா? என் முன் வருவதில் தயக்கமென்றால் அது உன்குறையா?

    • 4 replies
    • 1.4k views
  17. சித்திரையாள் நித்திரையோ? சிதைந்த எம் வாழ்க்கை காணலையே! எத்தனை சித்திரை பிறந்து வந்தது இத்தரை நன்மை நடந்ததா இதுவரை? புதுச் சித்திரை மாது நீ நன்மை நடத்த வந்த தூது நீ துவக்கினால் உயிர்கள் தூங்கியது போதும் தூங்கவை துவக்குகளை காட்டுமிராண்டுகளை ஓட்டு நீ உலகை விட்டு இரக்கமில்லா மனிதப் பிராணிகளை கொளுத்து நீ விசாரணை விட்டு இரத்த மழை பெய்யாது ஆக்கிவிட்டு சாமாதான கீதங்களை இதயவீணை தோறும் மீட்டி விட்டு உலகைப் பார் கார்ச்சியளிக்கும் கவலை விட்டு கதிரை விளித்துப் புதிரை அவிழ்க விடிவே நீ வாராய் விரைந்தே நீ வாராய் நடுச் சாமமானாலும் நரகக் குழியானாலும் நீயே எமக்குக் கதி இதுவே எமது துதி எட்டி நின்று ஒட்டிப் பார்க்காது அண…

    • 5 replies
    • 1.5k views
  18. சில நிகழ்வுகளும்! நிஜங்களும் எப்படித்தான் பார்த்து பார்த்து எடுத்துவைத்தாலும் மறந்து போய் விடுகின்றது பயணத்தின் போது ஏதோ ஒன்று! அள்ளி அள்ளிக் குளித்தாலும் சில நேரங்களில் நனைவதேயில்லை புறங்கால்கள்!. எப்படித் தேடியும் அகப்படுவதில்லை பிச்சை போடும்போது மட்டும் சில்லறைகள்! மிகக் கவனத்தோடு கையாண்டாலும்!. சதையோடு சேர்த்தே வெட்டுப்படுகின்றது விரல் நகங்கள்!. எழுந்து போய் நிறுத்த வேண்டும் தொலைக்காட்சியை நினைத்தும் தேடுகின்றது மனது ரிமோல்ட்டை! இப்படியே நகர்கின்றது! என் வாழ்வில்! சில நிஜங்களும் நிகழ்வுகளும்!.

  19. விழிகளின் பயணம் அவள் விழிகளில் விம்பம் ஒளிக்க விரைந்தது - அவன் விழிகள் கண்டதும் கண்களில்- சிறைசெய்து கொண்டால்- வென்றான் சுகந்திரம்- உயிர் குடுத்து வெல்லா போர். 2விழிகளின் பசி அவள் விழிகள் பட- இவன் விழிகள் விரைந்தோடும்-தெரு பரந்து கிடக்கும்-காடு ஒழிந்திருக்கும்-பொந்து சென்றெட்டா-கடல் கண்டதும் காதல்- பிறந்த்தது கவிதையும் மீண்டும் ஓர் கவிதை எழுத்துபிழைகளுடன். முயற்ச்சி செய்தேன் வந்த்தது தமிழில்.இப்படிக்கு ஜரோப்பிய தமிழ் மகண். திருத்தங்களும் திட்டுதல்களும் தேவைப்படுக்கிறாது. தயவுசெய்து கொடுத்துதவுங்கள்.எழுத்து பிழைகளைல் திருத்த. நன்றி

    • 5 replies
    • 2.1k views
  20. விழிகளின் பயணம் அவள் விழிகளில் விம்பம் ஒளிக்க விரைந்தது - அவன் விழிகள் கண்டதும் கண்களில்- சிறைசெய்து கொண்டால்- வென்றான் சுகந்திரம்- உயிர் குடுத்து வெல்லா போர். 2விழிகளின் பசி அவள் விழிகள் பட- இவன் விழிகள் விரைந்தோடும்-தெரு பரந்து கிடக்கும்-காடு ஒழிந்திருக்கும்-பொந்து சென்றெட்டா-கடல் கண்டதும் காதல்- பிறந்த்தது கவிதையும் மீண்டும் ஓர் கவிதை எழுத்துபிழைகளுடன். முயற்ச்சி செய்தேன் வந்த்தது தமிழில்.இப்படிக்கு ஜரோப்பிய தமிழ் மகண். திருத்தங்களும் திட்டுதல்களும் தேவைப்படுக்கிறாது. தயவுசெய்து கொடுத்துதவுங்கள்.எழுத்து பிழைகளைல் திருத்த. நன்றி

    • 2 replies
    • 1.2k views
  21. தொட்டுத்தொட்டு நான் வளர்த்தேன் நெஞ்சுக்குள்ள விதை விதைச்சே விருட்சம் வளர்த்தேன் காடு கழனி எல்லாம் நான் அலைஞ்சே கண்டுபிடிச்சே உன்னைப் போல் அதையும் நெஞ்சுக்க வைச்சேன்..! தொட்டும் தொடாமலும் நீயும் வந்தே பச்சைப் பைங்கிளியா சுற்றியே வந்தே... உள்ளம் முழுக்க உல்லாசமா நான் உன் சோலையில..! அங்க என்ன வேலை செஞ்சே.. நெஞ்சுக்க நோ எடுக்க பிடிங்கி எறிஞ்சே நான் வைச்சத..! வெட்டிய காடும் வரண்ட கழனியும் சுற்றி வந்த பைங்கிளி சிறகொடியவும் கண்டேன்..! தோழியாய் வந்தே தூதனாய் என் உயிர் பிடிங்கினே.. நீ யாரென்று பார்க்கையில... நான் தேடியே நட்ட மரக்கன்ற பிடிக்கி எறிஞ்ச என்னவள் கை... அறிஞ்ச போதே பதறிப்போனே செல்லமாடி நீ எனக்கு..! …

    • 4 replies
    • 1.3k views
  22. Started by வர்ணன்,

    காட்டுவழி பயணம்... கஸ்டப்படுறோம்.... கட்டைவண்டிதான்.... துடுப்பும் படகும்...!! சலங்கைகளை ... கழற்றிவிட்டு தூரம் போகலாம்.... யானை மிதித்து .......... இழுத்தவர் இறக்கலாம்... இன்னொருவன் ........... நானே அடுத்து என்று.... தானாய் செத்துபோக ... எம்மவர் தவம் கிடக்கலாம்! புரிகிறோமா? இழப்புகளின் மேடையில்.. "கதை" கச்சேரி ஏற்பாடு....! பாடகனே கிடைக்கவில்லை... இதில் பல்லவி சரணம் தகராறு!

  23. Started by Iraivan,

    குறட்டை என் உன்னைப் பார்தது சிலருக்குச் சிரிப்பு பலருக்கு முகச் சுழிப்பு எதற்காக? நீ என் நித்திரையின் சிரி;ப்பொலி. என் நிம்மதியின் எக்காளம்.

    • 12 replies
    • 2.9k views
  24. முதன் முதலாய் அம்மாவுக்கு... ஆயிரந்தான் கவிசொன்னேன் அழகழகாப் பொய் சொன்னேன் பெத்தவளே ஒம்பெரு(மை)ம ஒத்தவரி சொல்லலையே! காத்தெல்லாம் மகன்பாட்டு காயிதத்தில் அவன் எழுத்து ஊரெல்லாம் மகன் பேச்சு ஒங்கீர்த்தி எழுதலையே! எழுதவோ படிக்கவோ ஏலாத தாய்பத்தி எழுதிஎன்ன லாபமின்னு எழுதாமாப் போனேனோ? பொன்னையாத் தேவன் பெத்த பொன்னே! குலமகளே! என்னைப் புறந்தள்ள இடுப்புல்வலி பொறுத்தவளே! வைரமுத்து பிறப்பான்னு வயித்தில்நீ சுமந்ததில்ல வயித்தில்நீ சுமந்த ஒண்ணு வைரமுத்து ஆயிருச்சு கண்ணுகாது மூக்கோட கறுப்பா ஒருபிண்டம் இடப்பக்கம் கெடக்கையில என்னென்ன நெனச்சிருப்ப? கத்தி எடுப்பவனோ? களவாணப் பிறந்தவனோ? தரணிஆள வந…

  25. மனதை வருடும் ஹைக்கூ....... காலடிப்பதிவை கவிதையாக்கிச் செல்லும் கொலுசுச் சிணுங்கல்... என்னருகில் அமர்ந்திருப்பவர் எழுந்திருக்கிறவராய்த் தெரியவில்லை கர்ப்பிணிப்பெண் நிற்கிறாள்...... - எல்.இளங்கோ. நிமிர்ந்து நின்றது புல் வளைத்துக் காட்டியது ஒரேஒரு மழைத்துளி -ப.ஆனந்தன் குப்பை பொறுக்கும் சிறுமியின் கையில் ஃபிளாப்பி டிஸ்க். அப்பாவுக்கு அறுபதனாயிரம் மனைவிகள் இருந்தும் சந்தேகம் இல்லை. ராமனுக்கு ஒரு மனைவி ஆயிரம் சந்தேகங்கள். -கபிலன் (வைரமுத்துவின் மகன்) பறவை சிறகை மீறின ஆகாயத்தை அளந்து ஓய்ந்து அலகை மீறின வனத்தை உண்ண அமர்ந்தது. -எம்.யுவன் எந்தப் ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.