கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
ஊர்கள் இழந்து உறவுகள் மறந்து உயிர்கள் சுமந்த உடல்கள் முகங்கள் அழிந்து தமிழை மறந்து கால்கள் போன தேசம் கண்கள் கலங்கி நெஞ்சம் உருகி வெடிக்குது ஈர இதயம் பந்தம் அறுந்து சொந்தம் விலகி கிளைகள் விழ்ந்த விருட்சம் இறக்கைகளின்றி பறக்க துடிக்கும் பாசம் என்னும் வேகம் உள்ளம் உருகி வெள்ளம் பெருகி ஓடட்டும் ஊற்றாய் நினைவுகள் யாவும் நிழலாய்த் தொடரும் நீங்கிடது உங்கள் உறவு
-
- 4 replies
- 1.4k views
-
-
கட்டு இளகி மொட்டவிழ்ந்த புன்னகைப் பூ இதுவோ சிட்டு அவள் இதழ் கவிழ்ந்த-தேன் கிண்ணம்தான் இதுவோ முத்தாக மின்னுகின்ற-பல் மாதுளைதான் அதுவோ கண்களின் கருமையது கருவண்டுதான்அதுவோ தென்றலிலே தவள்ந்துவரும் தெம்மாங்குதான் அவளோ சத்தமிட்டு எனை முத்தமிட்ட-தமிழ்க் கவிதான் அவளோ
-
- 3 replies
- 937 views
-
-
-
தியாகத்தாயே! சரித்திரம் தன்னில் பேரெழுதிச் சென்ற சத்தியத் தாயே பூபதியே! நித்தமும் நின்னை நினைக்கின்றோம் உனக்காய் கண்ணீர் வடிக்கின்றோம்! அரக்கரினத்தின் கொடுமையினை எதிர்க்கத் தாயே பூபதியே! அஹிம்சை வழியில் நின்றாயே! அகிலத்தை நீ வென்றாயே! விதியின் வழியில் சாகாமல் ஈந்தாய் அம்மா உன் உயிரை தமிழரினத்தின் தன் மானத்திற்கு எழுதிச் சென்றாய் முன்னுரையை உந்தன் தியாகம் உலகறியும் நம்மை சூழ்ந்த பகையும் உடனகலும் வேகும் தீயில் யாகம் செய்யும் வேங்கை வழியில் பகை முடியும்! நாடே அறியும் வகையில் நீ இருந்தாய் விரதம் உண்ணாமல்! ஈழத் தாயே!! எம் பூபதியே! விடியும் நேரம் மிக விரைவில்!.. பறக்கும் புலிக்கொடி ஈழமண்ணில்!. நன்றி..
-
- 6 replies
- 1.4k views
-
-
அகதி முகாம் கோடைக் கொதிப்பையும் மாரித் தூறலையும் மாறி மாறி வடி கட்டுதே - இந்த அரிதட்டுக் கூரைகள் சூரிய விளக்கையும் பனிமழைத் தென்றலையும் அணைகட்ட முடியாமல் இலவசமாகக் கொடுக்கும் கிடுகுச் செத்தைகள் மீன் பிடி வலைகளாக! பௌர்ணமி வெளிச்சத்தில் எங்கள் சிறுவர்கள், அ....ஆ எழுதிப் பழகும் பால் நிறச் சிலேட்டுக்கள் எங்கள் முற்றங்கள்! குப்பி விளக்கு திரியிற்க்கு வக்கில்லை எண்ணை வார்க்க எதுவுமில்லை நுளம்புக்கு எங்கே கொயில் வாங்குவது....? மனித உரிமை மங்கினாலும் நுளம்பின் உயிருக்கு உரிமையுண்டு அதுதான் அகதி முகாம்கள்...! இருபத்தோரம் நூற்றாண்டிண் எங்கள் யாவருக்கும் புகலிடம் இதுதானா.........?
-
- 8 replies
- 1.3k views
-
-
வீடுபற்றி எரிந்து அவர்கள் வீதியிலே நின்றார்கள் கூடி வந்த உறவினர்கள் கூவி என்ன சொன்னார்கள் மாற்றி வாருங்கள் மற்ற உடையை .. என்று ! மாற்றவில்லை அவர்கள் .. மனமில்லை என்பதால் அல்ல மாற்றுடையே அவர்களுக் கில்லை .. மனிதர்களே .. புரிந்து கொள்ளுங்கள் !
-
- 4 replies
- 1.3k views
-
-
உன்னை விட்டு - நான் ஒரு கணமும் விலகவில்லை விலக நினைத்தாலும் -அது என்னால் முடியவில்லை என் முன்னும் பின்னும் என்னைத் தொடர்கிறாய்- ஆனால் மௌனமாக இருக்கிறாய் - மௌனமாகவே துரத்துகிறாய் என்னுடன் பேசாமல் மௌனமாக இருந்ததேன் ?? என் முன்னும் பின்னும் என்னைத் தொடர்ந்ததேன் ?? என்னை விடாமல் துரத்தியதேன் ?? ஏன் ?? ஏன் ?? ஏனெனில் நீதான் எந்தன் நிழல் நான் உந்தன் நிஜம் !!!
-
- 31 replies
- 4.5k views
-
-
வணக்கம் யாழ் கள நண்பர்களே, இந்தக் கவிதையை குரல் வடிவில் தர வேண்டி முயற்சி செய்ததன் பலன் இது... பரீட்சார்த்த முயற்சி இது.... நிறை குறைகளை சுட்டிக் காட்டுங்கள்.... அன்புடன் கவி ரூபன்
-
- 5 replies
- 1.6k views
-
-
இனியவளே… என்னைக் கோவப்படுத்தி பார்ப்பதற்க்கானா உன் தேடல் தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது தோல்விக்கு மத்தியிலும் ம்ம்… உனக்கெப்படி தெரியும் உன்னை யாரும் கோவப்படுத்தினால்தான் எனக்கு கோவம் வருமென்று நமக்குள் பிரிவே வரக்கூடாது அப்படி வந்தால் உன்னால் வரக்கூடாது ஏனெனில் அந்த சோகத்தின் கதாநாயகியாக நீ இருந்துவிட கூடாதென்பதால் உன் கல்மனதுக்குள் நுழையும்வரைதான் யோசித்தேன் எப்படி நுழைவதென்று நுழைந்தபின் மறந்தே போனேன் எப்படி யோசித்து நுழைந்தேனென்று ***************************************************** கவிதைகள் எழுதத் தெரியுமா என்று கேட்டார்கள் நான் தெரியாது என்றேன். அப்ப என்ன தெரியுமென்று கேட்டார்கள…
-
- 5 replies
- 1.3k views
-
-
சோலையில் பூத்த மலர்களே நீங்கள் கண்மூடி உறங்குங்கள் எங்கள் நிலை பார்த்தால் காலையிலையே நீங்கள் வாடிவிடுவீர்கள் ஆடை தரித்த எங்களூர் இன்று குட்டி கிரோஷிமாவாகிவிட்டது எங்கள் நிலை கண்டு கூவிக் கூவியே நம்மூர் குயில்களின் குரல்களும் தேய்ந்து விட்டன கரைந்த காகங்களும் காலமாகிப் போய்விட்டன அமாவாசை இரவில் பூரணைச் சந்திரனை எதிர் பார்த்து ஏமாந்து போனவர்களாக நாம்! விடிகின்றது தினமும், நமக்கில்லை........ இன்று வரையில் இருட்டிற்குள்தான் நம் விடிவும்...! நாளை போர் தீர்ந்து கண்ணீர் குறையுமா நம் கண்ணில்..........?
-
- 8 replies
- 1.5k views
-
-
இறுதியாய் ஒரு யுத்தம்... இறுதியாய் ஒரு யுத்தம் இனமானம் காக்க ஈனர்களை விரட்ட இழந்தவை யாவும் மீட்ட இனிவரும் பிள்ளைக்கு சுதந்திரத்தின் சுகம் காட்ட இறுதியாய் ஒரு யுத்தம். அடிமைகளாய் , அகதிகளாய் அவமான வாழ்வு போதும் ஏதிலியாய் எங்கேயோ அழுகிச் சாகும் நிலை போதும் அடியோடு வீழ்ந்தாலும் அன்னை பூமிக்கே, உரமாகும் மரணமேற்போம்... மாக்களுக்கு மனமஞ்சி மறைந்தொளியும் மானக்கேடு மண்ணோடு மண்ணாக்கி ஈழன்னை புகழ் தாங்கி புலிக்கொடியால் புயல் கிளப்பி புறப்படுவோம் பெரும் படையாய்.. நாய்கள் தான் வாழும் நரிகளுக்கு பயந்தொதுங்கி நாடாண்ட குடிகள் நாம் நடுக்கிடுவோம்.. படை நடத்தி. கோடிப்பேர் வரட்டுமே !! கூலிக்கு மாரடிக்கும் கூர்…
-
- 8 replies
- 1.4k views
-
-
தோணியிலே ஏறும் போது சொன்னார்கள் துறைமுகத்தில் இறங்குவதாய்.. பாதிவழி போகையிலே .. பாவிகளோ தோணிக்குத் துளையிட்டார்கள் தண்ணியேறித் தாழும் நிலை .. தோணிக்கின்று ! பாவிகளே .. பாவிகளே .. தாழுவது தோணிமட்டுமல்ல நீங்களும் தான் ! புரிந்து கொள்ளுங்கள் !
-
- 4 replies
- 1.1k views
-
-
கண்கள் அழகிய காதலியைத் தேடியலைகிறது. அழகிய பெண் இவள் அழகியா காமக் காதலி. அவள் அழகென்பதற்கல்ல, அவளை பார்க்கின்றேன். அவள் என் காதலை ஏற்க்க மறுத்த காதலியை விட அழ்காய் இருப்ப்தால். இது இயற்கையாகவே இருக்கிறது. காதலியை மறப்பதற்கு அவைலை விட அழகிய காதலி தேவைப்படுகிறது. அவளுக்கு இளந்துவிட்டோமே என்ற உணர்வு உண்டாக்குவதற்கு. நினைவுகளை சரிசெய்து கொள்ள ஒரு சதி. இயற்க்கைக்கு அற்ப்பாட்ட மனஉறுதி தேவைபடுகிறது. கற்பனையின் நினைவை கொள்வத்ற்கு ஆயூதம் தா மனமே www.tamil4u.wordpress.com உன்னை மறப்பதற்கு முயற்சிகள் படுதோல்விகலாகுதடி உன்னை மறப்பதற்கு முயற்சிகள் படுதோல்விகலாகுதடி. மனம் துடிக்கிறது மறப்பதன்ற சிந்தை மூளையில் தோன்றமுன். உன்னை மீண்டும் சந்திக்க ஆர்வம் கொள்லுது…
-
- 1 reply
- 977 views
-
-
உன் ஒவ்வொரு சந்திப்பின்போதும் காதல் என்னை மொழிபெயர்த்து கவிதையாய் அழகுபடுத்தியது. உன்னை நினைத்துக் கொண்டு என்னைப் பார்தால் கண்ணாடியிலும் நீதான் தெரிகிறாய் உன்னை பார்க்க கவிதையோடுதான் தினம் வருவேன் கண்டதும் மெளனமாய் தலை குனிகிறாய் கண்டபடி வெளியில் சுத்தாதே உன்னில் விழிக்க எல்லாரும் தவம் கிடக்கிறார்கள். -யாழ்_அகத்தியன்
-
- 9 replies
- 1.8k views
-
-
பயம்-பசி-படிப்பில்லை... கதறியழும் கந்தளாய் தமிழர் விரைவாய் வரவேண்டும் விடியலொன்று. எத்தனை எத்தனை இரவுகள். அத்தனைக்கும் விடியல்கள். எங்களின் இந்த இருளுக்கு எப்போதுண்டு விடியல்தான். சொந்தமான நிலத்தினிடை துச்சர்களால் அல்லற்படும் பந்தங்கள் துயர் தீர்ந்திடவே விரைவாய் வேண்டும் விடியலொன்று. பயமேயறியாப் பிஞசுகளை பாடாய்ப் படுத்தும் நரிக் கூட்டம். பரிதவிக்கும் மக்களையே பகடைக்காய் போல் பாவிக்கும். பஞ்சங் காணாப் பூமியிலே பசியால் வாடித் துவழ்கின்ற பந்தங்கள் துயர் தீர்ந்திடவே விரைவாய் வேண்டும் விடியலொன்று. அசுரர் ஆளும் நாட்டினிலே ஆட்சி என்றும் கொடுங்கோல்தான். பகரச் சொற்கள் வேறுண்டா? பாவிகளின்…
-
- 2 replies
- 1k views
-
-
ஒரு நாள் உன்னை விட்டு பிரிந்து வந்ததற்கே எப்படி பிரிய முடிந்ததென்றா கேக்கிறாய் எங்கே உன் இதயத்தை திறந்து பார் பிரிவுக் கவிதை எழுதிக்கொண்டிருப்பேன் நீயே சொல் .. என் நம்பிக்கை நீயென்ற பின் நம்பிக்கை இல்லாமல் நீ தள்ளியே நின்றால் விழுந்திட மாட்டெனோ உன் முதல் சந்திப்பும் உன் முதல் பிரிவும் சில நாட்களுக்குள் நடந்தேறியிருந்தாலும் உன் பிரிவு மட்டும் இன்னும் என்னை வாட்டுகிறது உனக்கும் இரவில் உலாப் போக பிடிக்குமா சரி வா போய் வருவோம் அதற்க்கு முன் நிலாவிடம் சொல்லிவிட்டு வா கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து வரும்படி உன்னை நான் பார்க்க வரும் போது மட்டும்தான் ஏறும் பேருந்தையும் இறங்கும் தரிபிடத்தையும் பக்கத்தில் இரு…
-
- 9 replies
- 5.3k views
-
-
தந்தையை இழந்த சகோதரிக்கு ஒரு தம்பியின் (கவி)மடல்... சகோதரி, யாரிவன் என்ற விசாரணைக் கோதாவில் இறங்காமல் தந்துவிடு உந்தன் சோகத்தின் ஒரு சிறு துளி தன்னை! அருமை அப்பா - உன்னை அழவைத்துப் பார்த்தறியாதவர்! இன்று கொடும் சோகப் பிணியில் விழும் எந்தன் சேய் என்ற நினைவிழந்து நிர்க்கதியாய் விட்டுச்சென்ற சோகம் யாரறிவார் உன்னையன்றி! ஆனாலும் சகோதரி உந்தன் சோகம் நானறிவேன்... சோகத்தின் சுவடுகள் உன்னிடம் மட்டுமல்ல - உலகில் கோடி மக்கள் உள்ளார் சொந்தம் சொல்ல! ஒருயிர் போனதன்று தேம்பியழுவதா குழந்தை போல? பாசப் பசையில் மறந்துவிடுவதா உந்தன் வாழ்வை மெல்ல? வேண்டாம் சகோதரி செய்வோமே புது விதி! பரிதாப வோட்டுக்கள் உந்தன் மனவங…
-
- 7 replies
- 1.2k views
-
-
காதல் மனம் தனியே சிரித்திருக்கும். தனிமையில் நிலைத்திருக்கும். காணுமிடமெல்லாம் தன் காதலையே பார்த்திருக்கும். ஊனுள் உருகிநிற்கும். உள்ளத்தை மறைத்து வைக்கும். தாம் மட்டுந்தானென்றே தம்மையே புகழ்ந்து நிற்கும். காலத்தால் அழியாது என்றும் காவியத்தி உள்ளோமென்றும் போதை தலைக்கேறினாற் போல் பொய்களும் உரைத்து நிற்கும். அன்னைக்கு அடங்கேனென்றும் தந்தை சொற் கேட்கேனென்றும் இன்பம் காதல் ஒன்றே என்று எப்போதும் இறுமாந்திருக்கும். உங்கள் காதல் மனங்களையும் அவிழ்த்து விடுங்கள்.
-
- 11 replies
- 1.9k views
-
-
விழிகளின் பயணம் அவள் விழிகளில் விம்பம் ஒளிக்க விரைந்தது - அவன் விழிகள் கண்டதும் கண்களில்- சிறைசெய்து கொண்டால்- வென்றான் சுகந்திரம்- உயிர் குடுத்து வெல்லா போர். 2விழிகளின் பசி அவள் விழிகள் பட- இவன் விழிகள் விரைந்தோடும்-தெரு பரந்து கிடக்கும்-காடு ஒழிந்திருக்கும்-பொந்து சென்றெட்டா-கடல் கண்டதும் காதல்- பிறந்த்தது கவிதையும் மீண்டும் ஓர் கவிதை எழுத்துபிழைகளுடன். முயற்ச்சி செய்தேன் வந்த்தது தமிழில்.இப்படிக்கு ஜரோப்பிய தமிழ் மகண். திருத்தங்களும் திட்டுதல்களும் தேவைப்படுக்கிறாது. தயவுசெய்து கொடுத்துதவுங்கள்.எழுத்து பிழைகளைல் திருத்த. நன்றி
-
- 2 replies
- 1.2k views
-
-
சின்னவனா இருக்கேக்க சூழ்ந்திடுவார் முதியவர்கள் ஆண்டு சில உருண்டோட பிரிந்து அவரும் சென்றனரே போகுதுபார் வாழ்நாளும் புயல் போன வேகத்திலை ஏறிடிச்சு என் வயதும் நானும் இப்போ கிழவனப்பா மூட்டுப் பிடிப்பிருக்கு மருந்தெடுக்க போகணுமே முட்டுக் கொடுத்தா தான் மூணு அடி நான் மிதிப்பேன் கால் நடக்க முடியாட்டா பாடை கட்ட முந்திடுவார் ஏக்கம் தாளாமை போக்கத்து நிக்கிறனே பங்கைப் பிரிக்காட்டி பால் வார்க்க மாட்டாராம் நான் சேத்த சொத்துக்கு எட்டுக்கால் வாரிசுகள் நாலெழுத்து படிக்காமை நாசமாய் போனதுகள் வீட்டையும் புடுங்கிட்டு நாட்டுக்கு அனுப்புதுகள் இண்டைக்கோ நாளைக்கோ போற உயிர் இது தானே நன்றியுள்ள நாய் இருந்தா-என் கஷ்டத்தை அது கேக்கும் பணத…
-
- 3 replies
- 1.2k views
-
-
-
-
காட்டுவழி பயணம்... கஸ்டப்படுறோம்.... கட்டைவண்டிதான்.... துடுப்பும் படகும்...!! சலங்கைகளை ... கழற்றிவிட்டு தூரம் போகலாம்.... யானை மிதித்து .......... இழுத்தவர் இறக்கலாம்... இன்னொருவன் ........... நானே அடுத்து என்று.... தானாய் செத்துபோக ... எம்மவர் தவம் கிடக்கலாம்! புரிகிறோமா? இழப்புகளின் மேடையில்.. "கதை" கச்சேரி ஏற்பாடு....! பாடகனே கிடைக்கவில்லை... இதில் பல்லவி சரணம் தகராறு!
-
- 1 reply
- 946 views
-
-
விழிகளின் பயணம் அவள் விழிகளில் விம்பம் ஒளிக்க விரைந்தது - அவன் விழிகள் கண்டதும் கண்களில்- சிறைசெய்து கொண்டால்- வென்றான் சுகந்திரம்- உயிர் குடுத்து வெல்லா போர். 2விழிகளின் பசி அவள் விழிகள் பட- இவன் விழிகள் விரைந்தோடும்-தெரு பரந்து கிடக்கும்-காடு ஒழிந்திருக்கும்-பொந்து சென்றெட்டா-கடல் கண்டதும் காதல்- பிறந்த்தது கவிதையும் மீண்டும் ஓர் கவிதை எழுத்துபிழைகளுடன். முயற்ச்சி செய்தேன் வந்த்தது தமிழில்.இப்படிக்கு ஜரோப்பிய தமிழ் மகண். திருத்தங்களும் திட்டுதல்களும் தேவைப்படுக்கிறாது. தயவுசெய்து கொடுத்துதவுங்கள்.எழுத்து பிழைகளைல் திருத்த. நன்றி
-
- 5 replies
- 2.1k views
-
-
சித்திரையாள் நித்திரையோ? சிதைந்த எம் வாழ்க்கை காணலையே! எத்தனை சித்திரை பிறந்து வந்தது இத்தரை நன்மை நடந்ததா இதுவரை? புதுச் சித்திரை மாது நீ நன்மை நடத்த வந்த தூது நீ துவக்கினால் உயிர்கள் தூங்கியது போதும் தூங்கவை துவக்குகளை காட்டுமிராண்டுகளை ஓட்டு நீ உலகை விட்டு இரக்கமில்லா மனிதப் பிராணிகளை கொளுத்து நீ விசாரணை விட்டு இரத்த மழை பெய்யாது ஆக்கிவிட்டு சாமாதான கீதங்களை இதயவீணை தோறும் மீட்டி விட்டு உலகைப் பார் கார்ச்சியளிக்கும் கவலை விட்டு கதிரை விளித்துப் புதிரை அவிழ்க விடிவே நீ வாராய் விரைந்தே நீ வாராய் நடுச் சாமமானாலும் நரகக் குழியானாலும் நீயே எமக்குக் கதி இதுவே எமது துதி எட்டி நின்று ஒட்டிப் பார்க்காது அண…
-
- 5 replies
- 1.5k views
-