Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இன்னும் ஏன் மௌனம்.....??? வாருமய்யா வாருமய்யா மனித உரிமை வாதி ஜய்யா.... மலிந்து போயு கிடக்கிதுங்கு மனிதயுரிமை பாருமய்யா... வீதியிலே பிணங்களாகி வீழ்ந்திருக்கு பாருமய்யா... விதைவையாகி உறவு இங்கு கதறுவதை காணுமய்யா.... ஆண் உறுப்பை அறுத்தெறிந்து அழித்து கொண்டான் பாருமய்யா... உடல் சிதறி உருக்குலைந்த உறவுகளை பாருமய்யா.... என்ன செய்தார் என்றிவரை கொன்றழித்தான் கேளுமய்யா....??? குண்டு மழை பொழிந்து உயிர் பறித்தான் இங்கு பாருமய்யா... குஞ்சுகளும் பிஞ்சுகளும் பிய்ந்து கிடக்கு பாருமய்யா... எத்தனையோ கொடுமைகளை பகையாடுதிங்கே காணுமய்யா... அத்தனையும் கண்டு …

  2. <span style='font-size:30pt;line-height:100%'><span style='color:green'>நடந்து போவதென்ன...</span> நடந்து போவதென்ன... நந்தவனமா-நீ நதிகள் நீந்தி வந்த தங்கரதமா.. விழிகள் இரண்டுமே.... வேலினமா-இடை தேடிப்பார்த்தேன் நான் நூலினமா... இடியோடு சுூறாவளி.. இதயத்திலே உன்னாலடி... புூங்கொடியோடு பொன்மாங்கனி(கள்) கொண்டாட வருவாயோ... நீ கூந்தல் கருமேகம்.. நீண்டு அலை பாயும் நிம்மதி பறிபோகும் கால்கள் மடல் வாழை மூடும் வண்ணச்சேலை.. காதல் கவி பாடும்.. இரண்டு விழிகள் கொண்ட பளிங்கு ரதமொன்று நடந்து வருகின்றது... இந்தப் பாலைவனம் தாண்டி ஈரப்புூங்பாற்று எங்கு போகின்றது.. தேகம் செவ்வானம் வதனம் மதி போலும்.…

  3. எறிஎறி தமிழா எறிஎறி எரிதணல் அதனை எறிஎறி எதிரிகள் படைகளை அடிஅடி போர் விமானத்தை அடிஅடி ஓடும் படைகளைப் பிடிபிடி எம் சொந்த மண்ணைப் பிடிபிடி இழந்த எம் உரிமை பறிபறி சிங்கத்தின் வாளைப் பறிபறி சீண்டும் அதன் தலையை தறிதறி

  4. Started by slgirl,

    தவிப்பு... ஏனோ தெரியவில்லை எனக்குள் நானே தனித்துவிட்டது போன்ற பிரமை... உலகம் என்னை மட்டும் விலக்கி வைத்தது போன்றதோர் உணர்வு... அடிக்கடி அடி மனசில் அனல் பற்றியெரிகின்ற கொதிப்பு... எதையோ இழந்துவிட்டது போன்ற வெறுமை... எனதான வாழ்க்கை பயணத்தில் ஏமாற்றங்களை மட்டுமே சுமந்தது போன்ற விரக்தி... திடீரென தோன்றி மறையும் வானவில்லை போல சில சந்தோசங்கள்... ஆனாலும் அடிக்கடி நான் எதிலோ தொலைந்துதான் போகின்றேன் எதிலென்றும்... இதெல்லாம் ஏனென்றும்... புரிந்துகொள்ள முடியவில்லை...

    • 8 replies
    • 4.3k views
  5. Started by gowrybalan,

    யாரிவள்..? வெண் நிறத்தாள் நான் மாலையில் வீடு வர இதள் மலர்வாள்... காற்றோடு சேர்ந்து நான் சுவாசிக்கும் மூச்சினில் நறு மணமாய் கலந்திடுவாள்.... என் அன்னையின் மடியினில் சாய்கையில் அவள் தலையினில் இருந்தபடி புன்னகைப்பாள்.... நான் பூஜிக்கும் தெய்வத்தின்-காலடியில் தவமிருப்பாள்... இன்று -என் கல்யாண வீட்டினில் கழுத்தினைப் பிடித்தபடி தொங்குகின்றாள்... ஆம் .... இவள்-என் வீட்டுத் தோட்டத்தில் பூத்த மல்லிகை!!

    • 18 replies
    • 2.9k views
  6. சொற்களால் எந்தன் காதலை சொல்லவும் முடியுமா...? பார்வை ஒன்று புரியவில்லை.. பார்த்த என்னமோ மறையவில்லை அடுத்தடுத்த கேள்விகளுக்குள்ளேயே ஏன் இந்த தடுமாற்றம்? உணர்ச்சிகள் மற்றும் உயிர் வாழ ஆசை படுதே இதையத்திலை ... எங்கோ கொண்டு செல்லுதே சொற்களால் எந்தன் காதலை சொல்லவும் முடியுமா...? ... நடந்தது..... இதயம் இசையால் வசமாகா இதயம் எது? சுவாசம் என்னை தீண்ட ...உருவம் வந்தது நப்பின்னைக்குச் சொல்லவும் முடியவில்லை இதைய சந்தோசம் தந்த விழி நீர் அருவியா? அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் திரும்பத் திரும்ப அந்த நொடி என்னை பார்த்தது கண்கள் சொல்லும் கதை.... தொலைந்த அவள் என் பின்னால் வந்தாள் உயிரைக் கண்டேன் இன்று காலங்கள் மாறும் கண்கள் மாறுமா…

  7. நான் கிளை தேடும் பறவை நான் கிளை தேடும் பறவை நீ பறித்தாயென் சிறகை ஆகாயம் அழைத்தாலும் ஏதோ சொல் பயணம்.... பூபாளம் கேட்டாலும் ஏதோ சொல் ஜனனம் ஆறோடும் கரையோரம் அமர்ந்தேனே உயிரே... நீ வருவாயோ..மாட்டாயோ அலைபாய்வேன் தனியே.. நான் உனைக்காண உனைக்காண ஓடோடி வந்தேன்.. உனைக் காணாமல் காணாமல் உயிர்வாடி நின்றேன். யாரென்ன சொன்னார்கள்.. அறியேனே அன்பே.. எதற்காக பிரிந்தாய் நீ தெரியாதே கண்ணே.. மலர் பறிக்காமல் பறிக்காமல் நான் ரசித்து நின்றேன்.. மலர் பறிபோக பறிபோக நான் துடித்து நின்றேன். என் காதல் என்னோடு பிரியாது அழியும்... என்ஜீவன் உனைச்சுற்றி ஓயாது திரியும்.. உயிரோடு உயிரான நினைவோ…

  8. கண்ணே என்றேன் கண்ணில் நீர் தந்தாய் பொன்னே என்றேன் பொன்னாய் வாங்க வைத்தாய் என்னே உன் அன்பு அன்பாலே துவைத் தெடுத்தாய் பெண்ணே ஓடிவிடு பித்தனாக மாற முதல். அடுத்த வீட்டை காட்டி நீ என்னையே மாற்றினாயே கொடுத்த தெல்லாம் போதாமல் விதம்விதமாய் சொன்னாயே தடுக்கும் போதெல்லாம் கதறி அழுது ஓடினாயே - எனை ஒடுக்கும் உன் செயல்களாலே நானும் இப்போ தெருநாயே! முட்டை பொரிச்சுத் தந்து முட்டைக் கண்ணீர் விட்டாயே கெட்ட கேட்டுக்குள் கார் ஒன்றும் கேட்டாயே கட்டையிலே போனாலும் போகாத கடனாளி ஆக்கினாயே குட்டையிலே நாறிய மட்டையாகிப் போனேனே! தொலைக்காட்சி சீரியலில் என்னையும் மறந்தாயே மலைப்போடு காட்சிகளில் மனமுருகி நின்றாயே தொலைக்காட்சி படங்களுக்காய் மனமிரங்கி அழும்…

    • 14 replies
    • 2.1k views
  9. அல்லல் பிட்டி இல்லாத..உயிர்கள்... இறந்த உடல்கள்... சிதைத்த பிறகும்..... சிங்களம்.. சிதைக்கனுப்ப மறுப்பதோ....ஏனடா... துள்ளி விளையாடிய.. அல்லைப்பிட்டி அப்பாவி மக்களுடன்...தோட்டா கொண்டு விளையாடினாய்.... உயிர்களை வாங்கிய.. உன் அற்ப வெறி அடங்கியதா.... ஐயோ.....அழுகிப்போவதா.. தமிழன் உடல்.. யாருமறியாமல்..அழிந்துபோவதா.. தமிழன் நிலம்.. கண் திறவா ஆண்டவனும்... ஆணையிடாத் தலைவனும்.. பொறுமை...காப்பதேன்.. இதற்குமேல் இழக்க என்ன உண்டு எங்களிடம்.. பொறுத்தது போதும்... அல்லல் பிட்டியை... அல்லைப்பட்டியாய்த் திருப்பித் தாருங்கள்.

  10. ஆயுத கப்பல் வருகுது......!!! கடலில வருகுது கப்பலு கனரகம் தாங்கிய கப்பலு.... போர்க்கலம் ஆயிரம் தாங்கியே போருக்காய் வருகுது கப்பலு... அரபிக் கடலதை தாண்டியே அசைந்து வருகுது கப்பலு.... வின்னிடை பாயும் கணைகளும் தாங்கியே வருகுது கப்பலு.... கனரக ஆட்லெறி கனமதாய் காவியே வருகுதே கப்பலு.... கரிகாலன் படையனி களமதை கனம் பாக்க வருகின்ற கப்பலாம்..... சிங்கள பகையதை சிதைத்திட அந்தோ சிரித்தே வருகுதாம் கப்பலாம்.... சுதந்திர தீபம் ஏற்றிட அந்தோ சுதந்திர கப்பல் வருகுதாம்.... வருகுது கப்பல் வருகுதாம் பகை வஞ்சகம் தீர்க்க வருகுதாம்.... விரைவினில் ஈழம…

    • 8 replies
    • 2.3k views
  11. Started by Manivasahan,

    தியாக தீபமே தாயகம் தந்தநற் புதல்வர்கள் வரிசையில் தனக்கென இடத்தினைப் பிடித்தஎம் திலீபனே அவனியில் தமிழினம் வாழ்ந்திடும் வரையினில் அடிக்கடி உன்பெயர் நினைவினில் வந்திடும் ஊரே எழுந்திடில் உரிமைகள் கிடைத்திடும் ஊரெழு மண்ணினில் பிறந்தவன் நம்பினான் ஊரினை எழுப்பிட உண்மையாய் உழைத்தவன் கூரிய நாவினைக் கருவியாய் ஆக்கினான் தனித்துவம் இழந்ததோர் இனமதாய் வாழ்ந்ததால் மருத்துவம் மனதினில் படிந்திட மறுத்தது இனத்துவம் காத்திடும் பணியினில் இணைந்தவன் இளைத்துமே சாய்ந்தனன் நல்லையுூர் மண்ணிலே சுந்தரப் பெண்களைச் சதந்திரப் பெண்களாய் கண்டிடும் பணியிலே முன்னிலை நின்றவன் தந்திர இந்தியச் சதியினால் நொந்துமே தந்தனன் உயிரினை காந்தியும் நாணவே அண்ணலின் வழியினில…

  12. கரும்புலி அலையோடு அலையாகி படகேறினாய்.... அந்த அன்னியரின் கலமதுவை சமராடினாய்.... உடலோடு வெடி சுமந்து உயிர் வீசினாய்..... உன்னத விடுதலைக்காய் உயிர் நீக்கினாய்... கரும்புலி ஆகியே களமேறினாய் அந்த கரிய பகை கலங்களையே சிதையேற்றினாய்... வீரத்தின் வீடுதலைக்காய் நீ ஆடினாய்.... எங்கள் உயிர் காத்திடவே நீ ஓடினாய்.... அந்த விடுதலைக்காய் உன் உயிரை நீ நீக்கினாய்... சாவறிந்தும் சாகமால் சமராடினாய்.... வரலாற்றில் சரித்திரமாய் நீ பதிவாகினாய்..... தற்க்கொடை ஆளியாய் நீ உருவாகினாய்..... 01-09-06 தாளையடி கடற்ப்பரப்பில் வீரமரணம் ஏய்திய 5 கரும்புலிகள் உட்…

  13. தீயில் எரியுது டோறா..... வம்பிழுக்க வந்த பகை டோறா... வாங்கி கட்டி இழந்து போச்சு (இரண்டு )டோறா.... சுற்றி வந்து சூழன்டடித்த டோறா.... சுக்குநுறாய் போச்சுதின்று நுறா..... பாயும் புலி பகைக்க வந்த டோறா.... துண்டு பாதியாகிப் போச்சு இன்று வேறா.... திமிர் ஆட்டம் போட்டு ஆடி நின்ற டோறா... தீயில் எரியுது பார் இன்று தமிழா நீறா.... 01-09-06 அன்று பருத்துறைகடலில் இரண்டு டோறா அழிப்பின் போது....

    • 3 replies
    • 1.6k views
  14. தமிழ் ஈழத்தின் துயர் கண்டு கொதித்தெழும் எங்கள் தமிழகமே உதிரவிழி பார்த்து துடிக்கின்ற எம் இதயத்தின் உறவுகளே! நிலத்திலும் புலத்திலும்- போர்க் களத்திலும் ஒலித்திடும்- எங்கள் உரிமைக்குரல் கேட்டு-இன்னும் எம்மை நெருங்கி வாருங்கள்! முல்லைப் பிஞ்சுகளை பிணங்களாய் பார்த்தபின்னே கொதித்துப் போனீர்கள்! எங்களுக்காய் குரல் கொடுக்க உரிமையோடு நிமிர்ந்து வாருங்கள்! நெருங்கிடும் பகை துரத்த நெருப்பின் தலைவன் எம்மோடு! நெஞ்சிலே வலி சுமந்து-எம்மை நெருங்கிடும் தலைவர்கள் உம்;மோடு! உணர்வுகளை அடக்கி வைத்த காலம் இனிப் போதும் ஐயா! கவியாலே தமிழ் பொழியும் வானம் எங்கள் வசமாகட்டும்! நேற்று உண்ணாநிலைப் போரினிலே உணர்வுகள் கொப்பளித்த-எங்கள் வாஞ்சைத…

    • 4 replies
    • 1.3k views
  15. கடவுளின் பெயரினால் கட்சிகள் கூட்டுகின்றார் சாமியாரின் வேடத்தில் காம லீலை புரிகின்றார் கடவுள் என்று போற்றியவர் இன்று கம்பி எண்ணுகின்றார் நடமாடும் தெய்வம் என்று நல்லா நாடகம் ஆடுகின்றார் மூடநம்பிக்கையில் எம்மவர் மூழ்கிப்போய் இருக்கின்றார் கற்கள் பால் குடிப்பதாக பாலும் ஊத்துகின்றார் உலகில் சைவத்தை கேவலப் படுத்துகின்றார் இறைவனைத் தேடுவதாய் தாவிக் குதிக்கின்றார் அறியாமையினால் தம்மைத் தாமே ஏமாற்றுகின்றார் உனக்குள் இறைவன் உண்டு அதை ஏன் ஏற்க மறுக்கின்றாய்???

  16. Started by vanni mainthan,

    நானோ ஒரு கேடி.... வைச்சிருக்கன் தாடி....... வீணையதை வேண்டி போறேன் நானும் பாடி..... வேண்டுகிறேன் நான் கோடி.... ஈழமதை சாடி.... உலகம் எல்லாம் ஓடி.... வருகது என்னை தேடி........ சாக்கடையில் மாடி....... கட்டிறேன் நான் கூடி..... கேடு செய்யிறதில் நான் கேடி....... போவேனா நானும் வாடி.....??? ஈழ மக்கள் கட்சி..... இன்னல் செய்யும் கட்சி....... அதுக்கு இல்லை சாட்சி..... மக்கள் மதிக்கும் மன சாட்சி.... துனிஞ்ச மனம் எனக்கு.... மக்கள் பலம் எதுக்கு....??? உலகமதில் எனக்கு.... பெயரு ஒன்னு இருக்கு.... நான் துரோகி.......!!!

  17. Started by விகடகவி,

    ஈரநிலம் பார்வையைத் தூவி காதலை விதைத்து வலியை அறுவடை செய்து வாழ்க்கையை வேறொறுவனுக்கு விற்கும் பெண்ணே.. உன் உல்லாச காலத்து.. ஈரநிலம் நான்... இன்று வரண்டு கிடக்கின்றேன் சிறுதுளி கண்ணீராவது சிந்து.. நீ விதைத்துவிட்டுச் சென்றதையாவது மெய்யென எண்ணி வாழ்கிறேன்.

  18. மறக்க முடியுமா....??? வடு தந்த வரலாறு மறக்க முடியுமா...?? எங்கள் வாழ்வழித்த பகையதுவை மறக்க முடியுமா....??? கண்ணீரிலே கரைந்த வாழ்வை மறக்க முடியுமா....?? அந்த கனத்த நெஞ்ச சோகமதை இறக்க முடியுமா...?? உடனிருந்த உயிர் உறவு கொடுக்க முடியுமா...?? அந்த ஊன பகை செய்த செயல் மறக்க முடியுமா....??? காலம் கடந்து போனால் என்ன கழிக்க முடியுமா...?? அந்த கயவர் செய்த கோரமதை மறக்க முடியுமா....?? நவற்குழி படு கொலைகள் மறக்க முடியுமா...?? அந்த நாடு புரா செய்த கொலை மறைக்க முடியுமா...?? டாங்கி ஏற்றி செய்த கொலை மறக்க முடியுமா...?? அதில் நசுங்கி செத்த மக்களைதான் மறக்க முடியுமா...?? கற்ப்பழித்து கொலை ச…

    • 3 replies
    • 1.1k views
  19. பெண்ணினத்தின் விடி வெள்ளி ( மாலதி) கன்னியவள் துப்பாக்கி கைய்யில் ஏந்தினாள்.... கரிகாலன் படையனில் வேங்கை ஆகினாள்... பெண்ணடிமை விலங்குடைத்து பெருமையாகினாள்.... அந்த பெண்களிற்க்கு விடி வெள்ளி இவளே ஆகினாள்... தாய் மாணம் காக்கயிவள் களமே எறினாள்... அந்த கரிய பகை அழித்தேயிவள் நிலத்தை மீட்டினாள்.... பெண்ணினத்தின் சுதந்திரத்தை இவளே மீட்டினாள்... புரட்சி பெண்ணாய் ஈழமதில் வழியை காட்டினாள்....!!! -வன்னி மைந்தன்-

  20. Started by vanni mainthan,

    :roll: பொங்கி எழடா.... எழடா எழடா தமிழா எழடா எழந்தே தமிழீழம் தனை நீ அடையடா... அடிமை விலங்கதை அறிதே;தே எறியடா.... உடைத்தே தமிழீழம் தனை நீ அடையடா.... தலைகள் குனிந்தது போதும் நிறுத்தடா.... ஆண்டுகள் ஆயிரம் அடிமையாய் ஏனடா....?? சொந்தங்கள் பிரிந்த சோகம் ஏனடா...?? உன் மண்ணில் உனக்கின்று அவலம் ஏனடா....?? கண்ணீர் கவலைகள் கருணையாய் ஏனடா....?? கரிகாலன் தமிழா உனக்கின்று ஏனடா....?? பொறுத்தது போதும் இனி பொங்கியே எழடா......!!! -வன்னி மைந்தன்-

  21. Started by Thulasi_ca,

    • 13 replies
    • 2.9k views
  22. யுத்த மேகங்கள் கலைந்து-வானில் குண்டு மழைகள் ஓய்ந்து-அடங்கி மரணத்தின் ஓலங்கள் மறைந்து-ஓடி இரத்ததின் ஆறுகள் இமைகள்- மூடி நரபலி மனிதனின் பற்கள்-விழுந்து புரையோடிய மக்கள் கொள்கைகள்-மாறி இன்றுதான் பிறந்தோம் என்று-கூறி பறவைகள் வானில் இனியகானம்-பாடி பொன்மணி நெற்கள் கொழித்து-விளைந்து பிறந்த் பூமியில் உறவுகள்-கூடி இனிமையாகும் அந்நாள்-எந்நாள்

  23. நிலாமுற்றம் பால்பொங்கும் மணலின் மேல் நம் நீண்ட இரவுகள்.. மாமரக்கிளையின் காற்றும்.. வேப்பிலை சலசலப்புக்களும்..... பாட்டி கதையும்... அம்மாவின் குழையல் சோறும்... நிலாவை முகில் மறைக்கும் நேரம்.. தங்கையை.. நான்.. வெருட்ட அவள் அழுவதும்... மீண்டும் நிலாக் கண்டு எல்லோரும் சிரிப்பதும்.. சுருட்டோடு கடக்கும்.. அப்பாவுக்காக மட்டும்.. ஒலி தாழ்ந்து இறங்கும் அரட்டையும்.... பாட்டி மடியில் தலையும்.. அம்மா மடியில் கால்களும்.. ஜொலிக்கும் மின்மினிகள்.... வியந்த வியந்து எண்ணுவதும்.... எல்லோரும் ஒன்றாய் மீண்டும் அந்த நிலாமுற்றம் என் வாழ்வில் வருமா..... எப்படி வரும்....? மெய் தொலைத்த அப்பா பாட்டி... மணமாகி... …

  24. ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் அந்த ஜனவரி மாதத்து நிசப்தமான குளிரில் உறைந்துபோய்க் கிடந்தது. உடலை ஊடுருவும் உப்புக் காற்றின் குளிரையும் மீறீச் சில உருவங்கள் எதிரியின் முன்னணித் தடைகளை நோக்கி வரிசையாக நகர்ந்து கொண்டிருந்தன. அது ஒரு வலிந்த தாக்குதலக்குரிய நகர்வு. இறுமார்புடன் நிமிர்ந்து நிற்கும் ஆனையிறவுத் தளத்தின் இதயத்திற் பாய்வதற்காக அவர்கள் முன்னேறிக்கொண்டிருந்தனர். ஆந்த உவர்மண் வெளியில் ஆங்காங்கே காணப்படும் கன்னாப் பற்றைகளை மறைப்பாகக் கொண்டு அவர்களுடைய அணிநகர்ந்துகொண்டிருந்த அணிகளில், பிரதான முகாமைத் தாக்கியழிக்கும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படைப்பிரிவின் குறிப்பிட்ட அணியை வழிகாட்டி நகர்த்திக்கொண்டிருந்தான் ஒரு வேவுப்போராளி. நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது. அவர்கள் …

    • 2 replies
    • 2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.