Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. புரிந்து கொள்ளவில்லையே மழையே ஏன் உன்னைக் கண்டால் சில பெண்கள் தலை தெறிக்க பீதியுடன் ஓடுகின்றனர்....?????? ஏன் தானோ வெளியே வர மறுத்து விட்டு வீட்டிற்குள்ளேயே ஒதுங்குகின்றனர்???? ஏன் தானோ உன்னைத் தாண்டிப் போவதற்கு தம் முகங்களிற்கு நீ தொடா வண்ணம் உனைத் தடுக்கும் அணியை அணிந்து செல்கின்றனர்...?????? நீ என்ன எதிரியா அவர்களுக்கு??????? அல்லது உன்னிடம் எதாவது கடன் வாங்கி விட்டார்களா...???? புரிந்துவிட்டது..புரிந்துவிட

  2. வெள்ளைக்கொடியெடுத்து விலங்கிடு மறவர் படை வீரத்தை குலுக்க நீழும் கரங்களை குதறி எறி-உன் கொடூரத்தின் பாரம்பரியம் காத்து தமிழச்சி கர்ப்பம்கிழித்து சிசுவினை உருவு-அதன் செந்தளிர் மேனியெங்கும் வாலும் வரிகளும் தேடு-களைத்தபின் கொடுந்தீயின் வாயினில் போடு. வெள்ளைக்கொடி எடுத்து விரலிடுக்கின் குருதி துடை உன்.... விந்தொழுகும் வக்கிரக்கண்கொண்டு வேட்டையாடு குமரியென்ன கிழவியென்ன கிளித்துக்கிளித்து கிணறுகளில் வீசியெறி உலகின் ஊனச்செவிகளில் ஓலம் விழுந்தால் வெள்ளைக்கொடியெடுத்து-அதன் விழிகளில் விட்டு ஆட்டு-பின்னர் தம்மபதம் ஓதி பஞ்சசீலம் பழகு. உன்..... உறக்கம் பறித்தவர் உறங்கும் இடமெங்கும்-அவர் வீ…

  3. யார் இவர்கள்??[/b] உடம்பில் தென்பிருந்தும் மனதில் உறுதியில்லாத சிலர் பிழைக்கத் தெரிந்த நாட்டில் அரசாங்கத்தை நம்பி வாழ்க்கை நடத்தும் இவர்கள் சோம்பேறிகள் பெற்றோறை முதியோர் இல்லத்திற்கு அனுப்பிவிட்டு மனைவியுடன் சுகபோகம் அனுபவிக்கும் இவர்கள் மன்னிக்கப்படாத பாவிகள் தமிழ் நாட்டை கேவலமாக எண்ணி இந்த நாடு தான் சொர்க்கம் என்று வாழ்பர்கள் அயோக்கியர்கள் குடும்பத்தில் நுழைந்து வீண்பேச்சுக்கள் பேசி வதந்திகளைப் பரப்பி ஒர் அழகிய கூட்டை சிதறடித்துப் பிரிக்கும் இவர்கள் மகா பாவிகள் கஷ்ரம் என்று அலறித்துடித்து பணத்தைப் பெற்றுவிட்டு திருப்பிக் கொடுக்காமல் பூச்சாண்டி காட்டும் இவர்கள் துரோகிகள் சீதணக் க…

  4. Started by Thulasi_ca,

    ஏன் இந்த அவலம் ஐயோ சொந்த மண்ணில் நாம் இருக்க ஏன் இந்த அவலம் ஐயோ நிம்மதியாய் தூங்கி நெடு நாள் ஆச்து தூங்கிய நடு நிசியில் கள்வர்கள் மிரட்டல் பாடசாலை சென்ற பாவையர் கடத்தல் கல்வியினை வாரிய கல்விமான்கள் கொலை நாளுக்கு நாள் எம் இளைஞர் கொலை ஐயோ நம் தமிழ் மண்ணில் ஏன் இந்த அவலம் நல்லூர் கந்தா நாம் என்ன குறை விட்டோம் எம் கதறல் உலகம் கண்டும் காணவில்லை கந்தா உன் காதில் எம் கதறல் விழவில்லை? கதறி அழுதோம் கால் அடியில் விழுந்தோம் காணாமல் இருப்பதேனோ? ஐயோ சொந்த மண்ணில் நாம் இருக்க ஏன் இந்த அவலம் www.thamilsky.com

    • 15 replies
    • 1.9k views
  5. தமிழர் பிரிவுகளால்...!!! தமிழர்களுக்கும் சிங்களவார்களுக்கும் போராட்டங்கள் ஆரம்பித்தோ பல வருடங்களைத் தாண்டியும் தமிழனும் வெற்றி பெறவில்லை சிங்களவனும் வெற்றி பெறவில்லை.... தமிழர்களுக்குள்ளே பல பல விஷக் கிருமிகள் இன்றைய துரோகி கருணா(கம்) உட்பட பிரிந்து சென்று கூட்டணி வைத்து தமிழர் போராட்டத்திற்கு எதிராக இயங்கும் போது இந்த சிங்கள அரக்கர்களுக்கு எப்படித்தெரியப் போகின்றது நம் இன உயிர்கள் படும் அவஷ்த்தை எப்படித் தெரியப் போகின்றது???? ஒன்றாய் சேர்ந்து சாப்பிடுவார்கள் ஒன்றாய் சேர்ந்து கதைப்பார்கள் ஒன்றாய் சேர்ந்து தூங்குவார்கள் ஒன்றாய் பயிற்சிகளும் பெறுவார்கள் எல்லாம் முடிந்ததும் இந்தப் பச்சோந்திகள் எ…

  6. புதிதாக மாறிக்கொண்டிருக்க...... ஆண்டுகள் ஒவ்வொன்றும் புதிதாய்ப் பிறந்து கொண்டிருக்க..... வசந்தகாலம் இலையுதிர்காலம் என காலங்கள் மாறிக் கொண்டிருக்க.... பிரம்மன் தன்னிடம் இருப்பதை படைப்பதும் படைத்ததை திருப்பி பறிப்பதுமாக தனது வேலையை மாற்றி மாற்றி செய்து கொண்டிருக்க.... மனிதர்களின் குண இயல்புகள் கூட தாழ்ந்தும் மேலோங்கியும் மாறிக் கொண்டிருக்க...... ஏன் ...ஏன்.. ஈழம் மட்டும் மாறாமல் இன்னும் யுத்த பூமியாக....... நம் ஈழத் தமிழர்களின் கண்ணீர்களை மட்டும் தாங்கிக் கொண்டிருக்கிறது.... ஏன் இன்னும் மாறாமல் கவலைகளை மட்டும் சுமந்து கொண்டிருக்க…

  7. உனை வர்ணிக்க....... கண்மணி உனை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் போதவில்லை என்று வானவில்லை நாட்டினேன் வானவில்லின் நிறங்கள் கூட உனை வர்ணனை செய்ய மறுத்துவிட்டதால் தென்றலிடம் நாடினேன் தென்றல் கூட தான் அடிக்கடி சூறாவளியாக மாறுவதால் மறுத்துவிட கடலிடம் சரணடந்தேன் கடல் கூட தான் பல பேரின் உயிரைக் குடித்துவிட்டேன் என்று கவலையோடு உரைத்துவிட நிலவை நாட்டினேன் நிலவு கூட உன் அழகிய வதனம் கண்டு பொறாமையோடு மறைந்து சென்றுவிட அன்பே...அன்பே நான் எதைக்கொண்டு உன்னை வர்ணிக்க..???? ஒன்றே ஒன்று மட்டும் என் மனதில் பிரசவித்த வார்த்தை அம்மணி..... நீ.... என் உயிரினில் பூத்துவிட்ட அ…

  8. எச்சாதி சொல்வீரோ பத்தே வயதான பாலகனாய் இருக்கையிலே பதிலறியாக் கேள்வியொன்றைப் படித்தவரைக் கேட்டிருந்தேன் என்வயதை ஒத்துநிற்கும் எதிர்வீட்டுப் பையனுடன் ஏற்புடனே விளையாட எதற்காகத் தடுக்கின்றீர் முத்தமிழில் புலமைபெற்ற முன்வீட்டுத் தாயிடத்தில் தமிழ்ப்பாடம் படிப்பதற்குத் தடுப்பதுவும் எதற்காக? இத்தனையும் ஏன்என்று இதமாகக் கேட்டதற்கு இழிசாதி அவரென்று இரகசியமாய்ச் சொல்லிவைத்தார் சாதிகளில் பலசொன்னார் சமனுமில்லை எமக்குஎன்றார் சகபாடி எனச்சொன்னால் சண்டைவரும் இங்குஎன்றார் இச்சாதி கணிப்பதற்கு இருக்கிறதோ ஒருமார்க்கம் இடக்காகக் கேட்டதற்கு இலேசாகப் பதில்சொன்னார் பரம்பரையாய் வருகின்ற பழக்கமிது எனச்சொன்னார் செய்தொழிலை வை…

    • 8 replies
    • 1.5k views
  9. உன்னைக் கவிபாட எனக்கு வெக்கமடா உன்னைப்போல அழகன் யாரும் இல்லையடா கருமை நிற சுருள் முடியழகா உனக்கு நான் தான் பேரழகா அகன்ற தோழ்கள் வீர மார்பழகா அதில் என் முகத்தைப் புதைத்தேன் அது நாணமடா சிங்கம் போன்ற வீர நடையழகா உன் கருணையின் கண்கள் தானழகா என் கண்களின் ஒளி விம்பம் நீதானடா அன்புக்கு நீயும் என் தந்தையடா அரவணைப்பில் நீயும் என் தாய்தானடா உன்னைப்போல என்னைக் கவர்ந்தவர் இல்லையடா மொத்ததில் நீயும் என் இதயமடா

  10. கனவினிலே நீ ஏன் வந்தாய் கன்னி இளம் புள்ளிமானே என் நெஞ்சினிலே குடிகொண்ட பூங்கோதை எனும் பெண் பூவே தேடிவந்த என்னை நீயும் கவிபாடவைத்தாய் உன் அன்பு என்னும் மதுக்கிண்னத்தில் என்னை நியும் விழ வைத்தாய் தாயைப்போல என்னை அன்பு செய்து என்னை வென்று போட்டாய் உன் பார்வையாலே என்னை நீயும் சிறைப்படுத்திவிட்டாய்

  11. கரும்புலிகள் தினத்தையொட்டி 1998 ஆம் ஆண்டு இலண்டன் ருட்டிங் முத்துமாரி அம்மன் கோவிலுக்காக எழுதிய பஜனைப் பாடலை கள உறவுகளுக்காக இங்கே இணைக்கிறேன். முத்துமாரி அம்மன் பாடல் கரும்புலிகள் - பஜனை அம்மா தாயே முத்துமாரி இம்மா நிலத்தின் சொத்துக்காரி சிம்மாசனத்தில் இருப்பவளே எம்மா நிலத்தைக் காப்பாயே! (அம்மா தாயே...) (1) சங்கு சக்கரம் கொண்டவளே சிங்கத்தின் மேலே இருப்பவளே தங்கத் தமிழைக் காப்பாயே எங்கும் சுகத்தைத் தருவாயே (அம்மா தாயே...) (2) கற்புூரதீபம் நாம் வளர்த்தோம் வெற்றிலை பாக்குடன் பழம்படைத்தோம் நெற்றிக் கண்ணார் நாயகியே உற்றார் உறவைக் காப்பாயே (அம்மா தாயே...) (3) சங்கத் தமிழாய் வளர்ந்தாளே வங்கம் போலே பரந்தாளே பங்கம் செ…

  12. யுத்த நிறுத்தம்????????! யுத்தம் நின்றது என்று யரோ சொன்னார் அப்போ சத்தமில்லாமலே எங்கள் சந்ததி அழிகிறதே எப்படி?? சதைகளை ஓநாய்கள் தின்னுதே.. எங்கள் சரித்திரம் மெதுவாய் கண் மூடுதே.. சாவோடு என்னடி தோழி போர் நிறுத்தம்? தாயும் பிள்ளையும் அழியும் நாளில்.. தாலாட்டு இனி வாழுமா? பூவோடு காம்பும் சேர்ந்து எரியுதே.. செடி இனி வாழும் என்று சொன்னால்.. உலகம் சிரிக்காதா? நிறுத்து நிறுத்து என்று உலகம் சொல்லட்டுமே.. எங்கள் நிம்மதி தினமும் குண்டு.. அதிர்வில் குலைந்து போனதே-அறியுமா? யார் என்ன சொன்னால் என்ன? தாயை கட்டியணைக்க ஒரு சாத்திரம் தேவையா? சர்வதேசமே!!!!!! போர் நிறுத்து என்று நீ சொன்னாலும்... ஊர் நிறுத்தம் இருக்காது…

    • 28 replies
    • 4.2k views
  13. ஏன் ஏன் இந்த மாற்றம் நம் இன சில பெண்களுக்குள் ஏன் இந்த மாற்றம்???? பரந்து வாழும் நம் இன மக்கள் கடல் கடந்து வந்து அன்னிய நாட்டினிலே... இங்கே கொள்கைகள் உண்டு உதவிகள் பல உண்டு சுதந்திரங்கள் பல பல வகை உண்டு.. போக போக ஆடைக்குறைப்புகள் குறைகின்றதே அத்துமீறிய நம் இன சில பெண்டிர்களால் ஆடைக்குறைப்புகள் குறைந்து போகின்றதே... தினம் தினம் ஆடவரை மாற்றி சேர்ந்து ஊர் சுற்றும் அடக்கமில்லாத நம் இன சில மங்கைகள் உருவாகின்றனரே நாளுக்கு நாள் உருவாகின்றார்களே... ஒரு கையில் ஆறாவது விரலாக சிகரெட்டை புகைவிட்டு கற்புள்ள காற்றை மாசுபடுத்தியும் நம் இன இழ சமுதாயத்தை வீதிக்கு அழைக்கும் தான்தோன்றித்தனமான நம் இன சில பெண்கள் பற்றி வி…

  14. Started by Kaviipriyai(Ziya),

    என்?????? புலம்பெயர் நாட்டினிலே தமிழர்கள் ஒன்றினைந்து கேட்கும் உரிமைக்குரல்.... நமக்காக நம் இனத்திற்ககாக நம் ஈழத்தமிழர்களுக்காக.. செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்கும் இவர்களெல்லாம் தமிழர்களை பயங்கரவாதிகளாம் என்னடா உலகம் இது?????? நாடு விட்டு நாடு போய் சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்துவார்கள் ஆனால் தொடருவதோ.... நம் இனங்களின் அவல நிலைகள் தான் சமாதானத்தை தரும்படி உங்களிடம் கேட்டால் நீங்கள் ஆயுதக்கருவிகளையல்லவா தர முயல்கிறீர்கள் நம் ஈழத்தை நமக்கே திருப்பித்தர என் இந்த சுணக்கம்???? எங்களது இழப்பில் நீர் என்ன சுகம் கண்டீர்????? எதிர்பார்கிறோம் …

  15. Started by Kaviipriyai(Ziya),

    கொடுமை வெடிக்கிறதே வெடிக்கிறதே கண்ட இடமெல்லாம் துப்பாக்கி குண்டுகள் வெடிக்கின்றதே மாறிக்கொண்டிருக்கிறதே மாறிக்கொண்டிருக்கிறதே தமிழ் ஈழம் இரத்த பூமியாக மாறிக்கொண்டிருக்கிறதே தொலைகிறதே தொலைகிறதே தமிழர்கள் காணாமல் தொலைந்து போய்க்கொண்டிருக்கிறார்களே வதைகிறார்களே வதைப்படுகிறார்களே உன் இனத்தால் நம் அப்பாவித் தமிழர்கள் சித்திரைவதைப் பட்டுக்கொண்டிருக்கிறார்களே சிந்தித்துப்பாரேன் சிந்தித்துப்பாரேன் நீ அரசமரத்திற்கு கொடுக்கும் மரியாதையைக்கூட நம் இன உயிர்களுக்கு கொடுக்கத் தவறிவிட்டாயே என்று கொஞ்சம் சிந்தித்துப்பாரேன் வேண்டாமே வேண்டாமே இந்த மனித வேட்டை இனியும் வேண்டாமே

  16. கொள்ளிடம் கதி கலங்கும்! ஊற்றுவாய் பிளந்து பொங்கிப் பரவும் காட்டாறுகள். கூற்றுவனோடு கை குலுக்கி கலகலக்கும் ஞானிகள். ஈழம் காக்கும் கந்தகப் புயல்கள். எதிரியை ஒடுக்கும் எரிமலைகள். போரின் வெற்றியை நிர்ணயிக்கும் கூரிய முனைகள். பாரியைப் புறம் தள்ளி - ஈழத் தாயவள் வலிமைக்காய் தம்... உயிர்,மெய் உவந்து ஊட்டி - அவள் வீரியத் திசுக்களின் வேதியப் பொருளிவர். பற்றுகள் அற்றவரா?.... பற்றுகள் உற்றவர்! தமிழ் ஈழம் கசக்கும் வேற்றுவர் அகற்ற இகத்தைத் துறந்த இளைய துறவிகள். இறுதிப் பயணம் இன்றி உறுதி புூண்ட உன்னத வேங்கையர். உயிரைக் குடைந்து, உருக்கிப் பிழிந்து, உதிரத் துளியும் காற்றில் கரைய காவியம் படைக்கும் வீரியத் திரிகள…

    • 6 replies
    • 1.4k views
  17. அகதியாக வந்த பறவை ஏன்அங்கு துடிதுடித்தது கடல் கடந்து வந்த உள்ளம் ஏன் பதைபதைத்தது சிங்களத்து படைகளினால் அகதியாகி புலம்பெயர்ந்தது அமைதியாக வாழ என உங்கு வந்தது அகதியாக வந்தவனை தமிழகம் ஏன் மிதித்தது விழுந்தவனைத் தான் அங்கு மாடும் முட்டுது பச்சைபாலன் என்பது அறியாமலா நாய் கடிதது செய்தி படித்த என் மனமோ பதைபதைக்குது ஈனமான தமிழனாக இவனும் தன்னைக்காட்டுது

  18. Started by putthan,

    நந்திக்கொடி தூக்கினேன் சைவக்காவலர் என்றனர் சிவப்புக்கொடி தூக்கினேன் புரட்சிவாதி என்றனர் கட்ச்சிக்கொடி தூக்கினேன் அரசியல்வாதி என்றனர் கண்டுகொள்ளவில்லை ஜன நாயக உரிமை என்றனர் தேசியக் கொடி தூக்கினேன் பயந்தனர் ஆட்சியாளர்கள் என்னை பயங்கரவாதி என்றனர் பயந்தனர் அயலவர் என்னை பிரிவினைவாதி என்றனர்

    • 9 replies
    • 1.7k views
  19. பூங்குயில்களே-உங்கள் முகாரியைக்கொஞ்சம் முடக்கிப்போடுங்கள் காற்றில்கலந்த கந்தகநெடியிலே -என் வெற்றிச்சேதியை விட்டுச்செல்கிறேன் அப்போதுபாடுங்கள்-புதிய பூபாள ராகங்கள். எனை வளர்த்தபாசறையில் நான்வளர்த்த பூஞ்செடியே நாளைய சேதிகேட்டு புதிதாய் மொட்டுவிடுவாயா-இலயேல் உயிர்பட்டு விடுவாயா? நாணல்களே....ஏன்.. கோணல்களானீர்கள் பனித்துளி என்ன உங்களுக்குப்பெருஞ்சுமையோ தலைநிமிர்ந்துநில்லுங்கள் ஆதவனின் அனல்க்கரங்கள் அள்ளிச்செல்கயிலே அறிவீர்கள் நீங்கள் சுமந்தது வைரக்கிரீடமெண்று. வீரதேசத்தின் விடுதலைக்காற்றே-என் மண்ணின் மணம்சுமந்து உயிர்க்கூண்டில் நிறைந்து …

    • 10 replies
    • 1.8k views
  20. இதோ உங்கள் எல்லைகளில்.....! - சாந்தி ரமேஷ் வவுனியன் - வங்காலை அல்லைப்பிட்டி வரலாற்றில் புதுமையில்லை வழிவழியாய் தமிழரினம் வாழ்வழிந்த கதையிதுவே..... எண்ணுவதும் எழுதுவதும் அழுவதும் பின் எழுவதுமாய் தமிழர் கதை..... எத்தனையாண்டுச் சாபமிது.... குத்திக் குதறி குடலறுத்துக் கூரை முகட்டில் கயிறுகட்டி காட்சிப்படுத்திக் கலங்கடித்து நாளுக்கொரு பகுதி நம்மண்ணில் இந்த நாசக்காரர் கையில் நெஞ்சக் கூடறுந்து பிணமாக.... தடையிடுவோர் தலையெடுப்போர் தண்டனையென்போர் காதுகளில் இதுவெல்லாம் கேட்காத கிடைக்காத புரியாத செய்திகளாய்..... எல்லாம் புலியாக...... எங்கள் குழந்தைகளும் பலியாக.... குத்தியனின் கூட்டமொரு பக்கமதால் கொன்றொழிக்க..... மட்டுந…

    • 5 replies
    • 1.5k views
  21. சிங்களவா........... 83 ......... ஆடி........ நாம் ஆடித்தான் போனோம்...... குத்தியும் வெட்டியும்...... குடல் சரிய எம்மை..... குத்தி வீழ்த்தியும்.......... கோவம் போகவில்லையென்றே சொல்லி........ கோவணமும் இன்றி எம்மை குந்தவைத்து.......... சுற்றி வர நின்று - கும்மாளம் போட்டீரே........ ஆடிய ஆட்டம் எல்லாம் ஓய்ந்ததா? உங்கள் ஆவி மேயும் பசி தீர்ந்ததா? இன்றும் ஆடி வருகிறது ....... கறுப்பு ஆடி .......... அந்நாளில் ......... ஆடிப்போவது - நீங்களா? நாங்களா????????? 8)

  22. Started by இலக்கியன்,

    பத்துமாதம் சுமந்து பத்திரமாக பெற்றதாய்க்கு பத்து ஜென்மம் எடுத்தாலும் அந்தக்கடன் தீர்ந்துடுமா எந்த ஜென்மம் என்றாலும் நீதான் எனக்கு தாயாக வேண்டும் அம்மா

  23. நான் பிறந்த மண்ணைப் பற்றி கவிபாட என் கண்ணிரையே மையாக்கீனேன் இங்கே முததுமாரி அம்மனை மனதில் நினைக்க என் இதயத்தில் புதிய உற்சாகம் வருகுது இங்கே ஊரை,உறவை விட்டு வந்து அகதியாகி சிதறி விட்டோம் இங்கே சொந்தம் எல்லாம் மறந்து போச்சு யார் சொந்தம் என்று தெரியவில்லை எனக்கு இங்கே ஊரை உறவை விட்டு வந்தும் இன்னும் திருந்தவில்லையாம் கொஞ்சம் இங்கே குரும்பசிட்டியின் இணையத் தளத்தை பார்த்து புத்துணர்ச்சி வந்தது எனக்கு இங்கே என் மனதில் இருந்த உணர்வை வெளிப்படுத்த அழுது கொண்டு கவிதை எழுதுகின்றேன் இங்கே என் நண்…

  24. அட்சய பாத்திரம் பணத்தை பங்கிட்டேன் பாதியாய் குறைந்தது அறிவை அளித்தேன் அணுவளவும் குறையவில்லை அன்பை பங்கிட்டேன் என்ன விந்தையிது அளவில்லாமல் பெருகியதே!!!

    • 11 replies
    • 3.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.