கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
விடைபெறும்வேளை விடைபெறும்வேளை நெருங்கிவிட்டதா எமக்கு என் கண்ணீர் உன் கண்களில் உன் கண்ணீர் என் கண்களில் இடம் மாறப்போகின்றோம் இதயங்கள் பரிமாறாமலே இப்படி இதய தேசத்தில் உன் நினைவுகள் நிறைய இருந்தாலும் எல்லாம் சொல்லபோவதில்லை உனக்கு இக் கவிதை இதுபோல இக் கவிதை சுமக்காத பல நிகழ்வுகள் உன்னுள்ளும்.......... என்னுள்ளும்........... என்ன தான் நான் எழுத உனக்கு என்னையே எழுதி கொடுக்க நினைத்த பின் எனக்கு உன்னிடம் இருந்து நினைவு பரிசு எதற்கு உன் நினவுகளே நீ எனக்கு தந்திருக்கும் பரிசு தானே பிரிவதற்கு துடிக்கும் உன்னை விட எனகென்றும் நிரந்தரம் பிரியமான உன் பிரியாத நினைவுகளே அன்பே சேர்ந்திருந்த பல பொழுதுகளில் ந…
-
- 48 replies
- 6.4k views
-
-
இழந்தேன் என்னவனை என் நெஞ்சில் நிறைந்தவனே என்றோ ஒரு நாள் எனைத் தேடி வருவாயென ஏங்கியே காத்திருந்தேன் கண்ணில் நீருடன் கவிகள் பல வரைந்தேனடா உனக்காக. என் மனதை உன்னிடத்தில் பறி கொடுத்தேன் இரவு பகல் கண் விழித்துத் தவித்திருந்தேன் என்னவனே நீ வருவாயென ஆனால் காதில் வந்து கேட்டதடா ஒரு செய்தி உனக்கு கல்யாணம் என்று உடைந்ததடா என் இதயம் இருண்டதடா என் வாழ்வும் என் வாழ்வின் வெளிச்ச விளக்காய் உனை நினைத்தேன் இருண்ட வாழ்வை ஏனடா எனக்களித்தாய் என் இனியவனே ஏனோ உனக்கிந்த இரக்கமற்ற இதயமடா இனியவனே உனை இழக்க என் மனதில் சக்தியில்லை இருப்பாய் நீ என்றைக்குமே என் இதயமெனும் கோயிலிலே!!!
-
- 13 replies
- 2k views
-
-
உன்னை கேட்காமல் உன்னைபற்றி நிறையவே கனவுகள் கண்டுவிட்டேன் நீ எனக்காக படைக்க பட்டவன் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டேன் கடலென நினைத்தேன் நீயோ கானல் நீராய்.. சிரிப்பினில் இனிய சோகம் வைத்தாய் மறக்க முடியவில்லை அந்த நாட்களை மறக்க முடியுமா ? மறைக்க தான் முடியுமா? காலம் பதில் சொல்லும்... கனவுகள் வெறும் கனவுகளாகவே.. போதுமடா நம் உறவு.. வார்த்தையிலே தோழன் என்று கூறிவிட்டு உன்னுடன் பேசும்போதெல்லாம் உன்னை தொலைத்த வேதனையில் நான் வாட தயாராய் இல்லை.. சோகத்தை தணிக்க , எனக்கு ஏதும் வழி தெரியவில்லை கண்ணீரை தவிர... பாவியடா நான்... எப்படி தனிமையில் அவற்றை தணிப்பேன் உன்னை மறந்து விட்டதாக நண்பர்களிடம் கூறினாலும் உன்னை பிரி…
-
- 15 replies
- 8.1k views
-
-
பூட்டிய வீட்டுக்குள் புளுங்கிக் கொண்டிருந்தேன்..... காற்றினைத்தேடி கதவினைத் திறந்தேன்...... வந்தது காற்று ! ஒரு முறை..... பூஞ் சோலையில்- புகுந்து பூக்களில் புரண்டு புதுத் தென்றலாய்- மிதந்து (பூ) வாசனையோடு... வாசலில்- வந்தது ! மறுமுறை....... சாக்கடையில்- புகுந்து சகதிகளில் நனைந்து நாற்றத்தைச் சுமந்தபடி.... வாசலில்- வந்தது ! மறுமுறை...... கோவிலில்- புகுந்து தீபத்தில் எரிந்து தூபத்துள் புகைந்து தெய்வீக வாசனையாய்..... வாசலில்- வந்தது ! ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாய் ஒவ்வொரு காற்று...... ஒவ்வொரு காற்றைப் போல் ஒவ்வொரு விதமாய் ஒவ்வொரு மனிதர்..! ம்..... ஒவ்வொரு காற்றையும் சுவாசிக்கப் ப…
-
- 14 replies
- 2.6k views
-
-
காதலின் வேதனையை கவிவரிகளில் முடக்கலாமா? காதலின் சோகத்தை கண்ணீரினால் கழுவலாமா? உடலின் உயிரை காதலுக்காக மாய்க்கலாமா? இதயத்தின் காதல் வலியை மருந்து கொண்டு மாற்றலாமா? காதலின் வலியுடன் மறு பிறப்புமட்டும் காத்து இருக்கலாமா? கிடைத்த காதலைத்தான் இப்பிறப்பில் இழக்கலாமா? காதல் என்னும் இனிய சாக்கடையில் எதிர் நீச்சல் போடாமல் இருக்கலாமா?
-
- 2 replies
- 1.1k views
-
-
நிரந்தரமற்ற கனவுகளை நினைவில் சுமந்து வாழ்ந்தேன் இன்று என் விழிகளில் நீ சுமக்க வைத்தது கண்ணீரைத் தானே... பசுமையான என் வாழ்வில் வந்து பாசத்தைக் காட்டி வேசம் போட்டாய்.. என் பாசங்களை வெறுத்தேன் பொங்கி வந்த ஆசைகளைப் பொசுக்கிப் போட்டாய்.. சில நாட்களில் பழகி தொடர் நாட்களில் விலகி விட்டாய்.. உன் வரவுக்காய் ஏங்கிய என் விழிகள்-இன்று உன் கனவுக்காய் ஏங்குகின்றன... காவியத்தின் நாயகனாய் உனைக் கண்டேன் காதல் காவியத்தைத் தேர்ந்தெடுத்தேன் கற்பதற்கு.. ஆரம்பம் சுவையாய் இனித்ததால் காவியத்தக்காய் என்னை அற்பணித்தேன்.. இந்த உலகத்தையே காவிய நாயகனாய் நினைத்தேன்.. பசியை மறந்தேன்.. படுக்கையை இழந்தேன் கண் உறங்காமல் …
-
- 6 replies
- 1.6k views
-
-
என்ன அநியாயம் நான் பிறக்குபுன்பே யாழ் மண்ணின் இதயம் அழிந்துவிட்டதாம் ஓ நான் கண்ணாலே கண்டதும் அந்த அழிந்த இதயத்தை தானே என்ன தான் எம் யாழ் இதயத்தை மீண்டும் கட்டி எழுப்பினாலும் இதயமது இழந்தவை மீளப்பெறமுடியாது கயவர்கள் யாழ் மக்களின் உயிரை உணர்வை...பண்பாட்டை எரித்துவிட்டார்கள் காடையர்கள் எதிரியின் இந்த கொடூரம் தான் தூங்கிகிடந்த தமிழனை விழிக்க வைத்தது... கயவர்கள் தீயிட்டதால் தீயாகவே எழுந்தார்கள் தமிழர்கள்...தீயவனை அழிப்பதென முடிவோடு அன்று வைத்த தீ தான் இன்று தமிழன் நெஞ்சில் சுடர்விட்டு எரிகிறது ஈடுகொடுக்க முடியாத இழப்பல்லவா எம் இதயத்தின் இழப்பு....... இறைவனே கயவர்களை கண்கொண்டு பாத…
-
- 8 replies
- 1.6k views
-
-
தாய் பிடிக்கும் என்மேல் பாசத்தை பொழிவதால் அண்ணன் பிடிக்கும் எனக்கு குடும்பதை வழி நடத்துவதால் அக்கா பிடிக்கும் எனக்கு தாய்க்கு ஆறுதலாய் இருப்பதால் தம்பி பிடிக்கும் எனக்கு சிறுவனாய் இருந்தும் என் தங்கையை படிப்பிப்பதால் தங்கை பிடிக்கும் எனக்கு என உயிர் தோழியாய் இருப்பதால் நட்பு பிடிகும் எனக்கு வழி நடத்தி செல்வதால் காதல் பிடிக்கும் எனக்கு காயங்களை கற்பித்ததால் மௌனம் பிடிக்கும் எனக்கு அது உன்னிடம் நிறையவே இருக்கின்றதனால்... காத்திருப்பு பிடிக்கும் எனக்கு உனக்காகவே காலம் பூராகவும் காத்திருக்க போவதால்.
-
- 8 replies
- 2.1k views
-
-
வந்துவிடு வரைவில் ! தூக்கம் என் கண்களுக்கு தூரமாகிறது..... இரவுகளும் நீளமாகின்றன.. நிமிடங்கள் யுகங்கள் ஆகின்றன... தனிமை தரும் தாளாத துயரத்தை அணு அணுவாக அனுபவிக்குது உள்ளம் அழுதபடியே... வயிற்றில் பசியில்லை உணவில் பிடிப்பில்லை மனதுக்கு நிம்மதியில்லை எப்போது மீண்டும் உன்னுடன் கதைப்பேன்?... அதுவும் தெரியவில்லை... வெளியே சிரித்து உள்ளுக்குள் ஓயாது அழுகிறேன் செழிப்பிழந்த வதனத்துடன். நெஞ்சமே நீதானடி.....அதற்காகவேனும் வந்து விடு விரைவில்..
-
- 17 replies
- 2.2k views
-
-
அழகாயிருப்பேனா..? காயாத ரணங்கள் கொண்ட மனது கஷ்டங்கள் மேல் எழுந்து அமுத்துவதால் கவலைகள் அடிக்கடி தற்கொலைசெய்யும் அழகில் நான் கறுப்பி ஆகிவிட்டதால் நிலைக்கண்ணாடியும் என் நிறத்தின் நிஜமாய் நிதர்சனமாய் சொல்கிறதே அழகின் வரைவிலக்கணம் எது என்று அறியவில்லை இதுவரை சிலந்திவலையை கொண்டு விண்மினை பிடிப்பது போல் இருக்கின்றது வாழ்க்கை இறந்த பிறகாவது நான் அழகாயிருப்பேனா..?
-
- 35 replies
- 6.1k views
-
-
ஐயையோ...ஐயையோ....என்னவோ பண்ணுது.... ------------------------------------------- யாழ் களத்தில் அஜீவன் அண்ணா தலைமையில் "டாவின்சி கோட்'டை தமிழில் சினிமாவாக எடுக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது. தமிழ்ப் படமென்றபடியால் இடையிடையே ஒரு காதல் கதை ஓடவேண்டுமென்பதும் ......இரண்டு மூன்று பாடல் காட்சிகளும் இருக்கவேண்டுமென்பதும் படம் வெற்றி பெறுவதற்கான எழுதப்படாத சட்டமல்லவா...? . முழுக்க முழுக்க யாழ் கள நண்பர்களின் பங்களிப்புடனேயே இந்தப் படம் படமாக்கப்பட இருக்கின்றது. எனவே பங்கு பெற விரும்பும் கலைஞர்கள் உடனும் தொடர்பு கொள்ளுங்கள் முதல் முதல் படமாக்கப் படும் விடயம் மங்கள கரமாக இருக்க வேண்டுமென்பதனால் அந்தப் படத்திற்கான ஒரு பாடலைப் படமாக்குவதற்கு ப…
-
- 104 replies
- 12.6k views
-
-
எல்லாருக்கும் வணக்கம் கலியாணச் சடங்கு எண்டு சொல்லிப் போட்டு எங்கடை புரோகிதர்மார் பண்ணுற அட்டகாசம் இருக்குதே, சீயெண்டு போயிடும். ரெண்டு பேரையும் இருத்திவைச்சுப் போட்டு ஒருத்தருக்கும் விளங்காத (அவையளுக்கே விளங்குமோ தெரியாது) மந்திரங்களைச் சொல்லுறதென்ன, அதை இங்கை போடுங்கோ இதை அங்;கை போடுங்கோ அப்பிடிப் பாருங்கோ இப்பிடிப் பாருங்கோ, மூண்டு தரம் சுத்துங்கோ ஆறுதரம் இருந்தெழும்புங்கோ .. . . . அப்பப்பா .. . . கலியாணம் பேசேக்குள்ளையும் அந்தப் பொருத்தம் , இந்தப் பொருத்தம் எண்டு பாக்கிற ஆக்கள் மனப் பொருத்தம் எண்ட ஒண்டையும் பாத்தால் நல்லா இருக்குமெண்டு நினைக்கிறன். நான் என்ன சொல்ல வாறனெண்டால் ஆம்பிளையும் பொம்பிளையும் நான் கீழை சொல்லிற மாதிரி ஒருத்தருக்கொருத்தர் தங்கடை விர…
-
- 24 replies
- 4.5k views
-
-
அன்பென்றால் அம்மா அறிவென்றால் அம்மா அவனியில் அவள் அன்றி அரவணைப்பார் யாரம்மா துணையென்றால் தூண் அம்மா துணிவோடு தானம்மா தூரதேசம் ஏனம்மா துரத்தினதயே பாரம்மா செல்ல மகன் நானம்மா சென்றதனால் தானம்மா சொந்தமென வந்த செல்வம் செய்த வேலை சோகம்மா
-
- 14 replies
- 2.6k views
-
-
-
- 17 replies
- 2.4k views
-
-
சுத்துகின்ற பூமியில் நாம் நிரந்தரம் இல்லை இதை சிந்திக்க மனிதனுக்கு நேரமும் இல்லை சத்தம் போட்டு யாரும் இங்கு சண்டை போடத்தேவை இல்லை நாளை இந்த பூமியில் நாம் யாரும் இல்லை உயர்வு தாழ்வு இங்கு தேவை இல்லை நாளை நீ போகும் போது உன் கூடவருவது இல்லை சாதி மத பேதம் இங்கு பெரும் தொல்லை அதனால் தமிழனின் வாழ்வில் முன்னேற்றம் இல்லை கறுப்பு வெள்ளை என்று இங்கு யாரும் இல்லை இது மாயையின் தோற்றம்தான் நீ புரிந்து கொள்வது இல்லை இங்கு வாழ்வதுதான் வாழ்க்கை இல்லை இதை புரியாத மனிதன் பூரணமனிதனும் இல்லை
-
- 11 replies
- 1.8k views
-
-
-
<span style='font-size:30pt;line-height:100%'>காவியத் தூது கிளியினைத் தூது விட்டால்.. கிறுக்காய் ஆகுமென்றாய்! கிள்ளை மொழியினைத் தூது விட்டால்.. கிளர்ச்சியைத் தூண்டுமென்றாய்! நிலவினைத் தூது விட்டால்.. களங்கம் நிறையுமென்றாய்! நீள்கடலினைத் தூது விட்டால்.. ஆழமோ புரியாதென்றாய்! மலரினைத் தூது விட்டால்.. மதுவினைச் சொரியுமென்றாய்! மானினைத் தூது விட்டால்.. மருட்சியைப் பெருக்குமென்றாய்! முகிலினைத் தூது விட்டால்.. முனகலே மிஞ்சுமென்றாய்! சகியினைத் தூதுவிட்டால்.. சச்சரவு ஆகுமென்றாய்! தென்றலைத் தூது விட்டால்.. திசை மாறிப் போகுமென்றாய்! திரு மடலினைத் தூது விட்டால்.. அந்தரெக்ஸைக் காவுமென்றாய்! தொலைபேசித் தூ…
-
- 43 replies
- 6.4k views
-
-
நான் பிறந்த மண்ணை தொட்டுப்பார்க்க ஆசை வேப்பமரத்து நிழலில் படுத்து உறங்க ஆசை பலாமரத்து கனியை பறித்து திண்ண ஆசை பனை மரத்துக்கள்ளை களவாகுடித்துப் பார்க்க ஆசை ஒடியல் மா புட்டு சாப்பிடத்தான் ஆசை தேக்க மரத்துக்கிளியை பிடித்து வளர்க்க ஆசை தமிழ் வாத்தியாரிடம் குட்டு வாங்க ஆசை கோவில் மணியை ஒருக்கா அடித்துப்பார்க்க ஆசை புளியமரத்து பழத்தை சூப்பித்திண்ண ஆசை மாமரத்துக் காயை குத்திதிண்ண ஆசை கிணத்து தண்ணிரில் அள்ளி குளிக்க ஆசை கொடிகாமத்து தேங்காய் கொறித்து திண்ண ஆசை கீரி மலைக் கேணியில் நீச்சல் அடிக்கத்…
-
- 23 replies
- 2.5k views
-
-
விழுந்தவனைத் தான் இங்கு மாடும் ஏறி மிதிக்குது நொந்தவன் புண்ணில் அம்பு வந்து குத்துதூ சுமைதாங்கி மீதுதான் இடியும் வந்து விழுகிது கட்டிய மனக் கோட்டை எல்லாம் சுக்கு நூறாய்போகுது பரதேசி போலத்தான் இந்த உயிரும் சுத்துது கால்கள் போன போக்கிலே இந்த உயிர் போகுது வாழ்க்கை என்பதே அர்த்த்ம்யின்றி வீணாகப்போகுது முடிவு உள்ள வாழ்கையில் முன்னேற மனம் துடிக்குது பரந்து பட்ட உலகத்தில் இறக்கை இன்றி பறக்கத்துடிக்குது கிடைததே போதும் என்று மனமும் தடுக்குது
-
- 4 replies
- 1.7k views
-
-
கட்டுப்பாடில்லா என்கவி கேட்பின், குளிர்நிலா வானில் ஓவியம் கீறும்.
-
- 14 replies
- 2.5k views
-
-
யுத்த நிறுத்தம்????????! யுத்தம் நின்றது என்று யரோ சொன்னார் அப்போ சத்தமில்லாமலே எங்கள் சந்ததி அழிகிறதே எப்படி?? சதைகளை ஓநாய்கள் தின்னுதே.. எங்கள் சரித்திரம் மெதுவாய் கண் மூடுதே.. சாவோடு என்னடி தோழி போர் நிறுத்தம்? தாயும் பிள்ளையும் அழியும் நாளில்.. தாலாட்டு இனி வாழுமா? பூவோடு காம்பும் சேர்ந்து எரியுதே.. செடி இனி வாழும் என்று சொன்னால்.. உலகம் சிரிக்காதா? நிறுத்து நிறுத்து என்று உலகம் சொல்லட்டுமே.. எங்கள் நிம்மதி தினமும் குண்டு.. அதிர்வில் குலைந்து போனதே-அறியுமா? யார் என்ன சொன்னால் என்ன? தாயை கட்டியணைக்க ஒரு சாத்திரம் தேவையா? சர்வதேசமே!!!!!! போர் நிறுத்து என்று நீ சொன்னாலும்... ஊர் நிறுத்தம் இருக்காது…
-
- 28 replies
- 4.2k views
-
-
நெஞ்சு (உ)ரசிய பூவே... --------------- செவ்வானச் சிவப்புக் கன்னம் சிந்தாகும் முல்லைச் சிரிப்பு முன்னாடும் இரண்டு கண்கள் முத்தாடும் செவ் விதழ்கள் தள்ளாடும் வாழைக் கால்கள் தடுமாறும் அந்த நினைவு பந்தாடும் உந்தன் அங்கம் பஞ்சாகும் எந்தன் இதயம் முகம் துடைக்கும் காற்றில் முந்தானை அது சரிய தீ வளர்த்த மெழுகாய் தீப்பிடித்து நான் உருக கண் மூடி ரசிப்பதேன் காதல் நோயை வளர்ப்பதேன் மனம் அமிழ்ந்து போகுமட்டும் மது நிரப்பி வைப்பதேன் சொல் ஆடும் சுந்தரம் செதுக்கி வைத்த சிற்பமிது வில் ஆடும் புருவம் விளை யாடும் பருவமிது கொன்று கொன்று போகிறாய் கொஞ்சம் மீதி வைக்கிறாய் நெஞ்சு (உ) ரசிய பூவே கொஞ்சி இருக்க வந்துவிடு -எல்…
-
- 11 replies
- 1.9k views
-
-
காதல் என்பது இனிய சுவாசம் என்றாயே பெண்ணே உயிரும் உயிரும் கலப்பதுதான் காதல் என்று சொன்னாயே பெண்ணே நான் தான் உன்னுடய முதல் கவிதை என்றாயே பெண்ணே பொய்கள் உனக்கு பிடிக்காது என்று சொன்னாயே பெண்ணே என்னை வெறுப்பதாக ஏன் பொய் பேசுகின்றாய் பெண்ணே முற்களாக ஏன் என்னை குத்துகின்றாய் பெண்ணே உன் சொற்களாலே ஏன் என்னை கொல்கின்றாய் பெண்ணே உன் கண்களாலே ஏன் என்னை எரிக்கின்றாய் பெண்ணே நான் இங்கு மரித்து விடுகிறேன் உன் கைகளால் விசம் கொடு பெண்ணே
-
- 32 replies
- 4.2k views
-
-
சீதனம் வாங்கும் ஆண்களே நில்லுங்கள்!!! உங்களுக்கு என்ன ஊனம் நீங்கள் சொல்லுங்கள்!!! சீதனம் தமிழனுக்கு ஒரு புற்றுநோய்!!! இது ஆண்களுக்கு ஒரு தொற்று நோய்!!! விரும்பி தானாக கொடுத்தால் அது அன்பளிப்பு அதை கேட்டு வாங்கினால் அது சீதனம் நூறு பவுனில தாலிதான் உனக்கு வேலியா பெண்ணே? ஆணும் எங்கு போவான் நீயும் சொல்லு பெண்ணே? உடம்பு முழுக்க உனக்குப்பவுந்தான் வேணுமா பெண்ணே? ஆண்களுக்கு இதனால் மொட்டை வராமல் போகுமா பெண்ணே? பட்டம் உள்ள ஆண்கள்தான் உங்களுக்கு தெரிவார்கள் பெண்ணே!!! நல்ல உள்ளம் கொண்ட ஆண்களை தெரிவது …
-
- 3 replies
- 1.5k views
-
-