கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
வாழ்க்கையின் வெறுமை என் இளமைப்புத்தகத்தின் இரவுப்பக்கங்கள் வெறுமையாய் கிடக்கின்றன இன்னும் எழுதப்படாத ஓர் கவிதையை எண்ணி.... எனது வானம்... இருள் மூடிக்கிடக்கிறது இதுவரை காணாத அந்தப் பௌர்ணமிக்காக... மெல்ல மெல்ல காலத்திருடனிடம் களவு போகின்றன-என் நந்தவனப் பூக்களின் நறுமணமும்-நான் சேர்த்துவைத்த கனவுகளின் ஒளிநிறமும்.... நிசப்தம் விழுங்கிய நீண்ட இரவொன்றில்... நிமிர்ந்து பார்க்கிறேன் மழை இருள்மூடிய காரிருள் வானில் பளிச்செனத் தெரிந்தது தனிமை மூடிய-எனது வாழ்க்கையின் வெறுமை. -ஈழநேசன்- கள உறவான ஈழநேசனின் கவிதையை களைகள் களைந்து அவர் கேட்டுக்கொண்டதன்படி இங்கே களமேற்றியிருக்கிறேன்.
-
- 16 replies
- 6.1k views
-
-
பாரதியார்: என்னையா.. என்ன.. ஏமம் சாமத்தில் பாரதி பாரதி என்று என்ன சத்தம்?! (முறுக்கு மீசை துடிக்க, கண்கள் சிவப்பேற நின்றுகொண்டிருந்தான் பாரதி.) சோழியான்: பாரதியாரே! நீர் எழுதிய பாட்டொன்றை எடுத்துவிடும்.. அந்த மெட்டுக்கு நான் ஒரு பாட்டெழுத ஆசை.. பாரதியார்: யோவ்.. அதுக்கொரு நேரம் காலம் கிடையாதா? சோழியான்: நேரம் காலம் பார்த்தா எழுதும் ஆர்வம் வரும்.. இப்போது வந்திருக்கு.. பாடுகிறீரா.. அல்லது வேறு யாராவது கவிஞரை அழைக்கவா? பாரதியார்: சரி.. பாடுகிறேன்.. ஒருமுறைதான் பாடுவேன்.. சோழியான்: சரி.. பாடும்.. பாரதியார்: தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன் தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை (தீராத) தின்னப் பழம் கொண்டு வருவான் - பாதி த…
-
- 46 replies
- 5.4k views
-
-
உருகுதே உருகுதே... கண்டேன் கண்டேன் சூரியனைக் கண்டு உருகி உச்சி குளிர்ந்த வெண் பனிப்பாறையாறு சிலிர்க்க கண்டேன் -அது ஆதவன் அணைப்பில் சிணுங்கவும் கண்டேன் சினேகிதின்ர குட்டிக்கவிதை எப்பிடி இருக்கு :?:
-
- 14 replies
- 2.3k views
-
-
செவ்விளநீர் மர நிழலில் மண்ணழைந்து- செம்பருத்தி பூ இதழ்பிரித்து பொட்டு வைத்து மெல்லிய காற்றில் அணிஞ்சில் பழ கோது கொண்டு விசில் ஊதி.......... ஐஸ் பழ வான் பின்னால் ஓடி அடித்து பிடித்து சில்லறை கொடுத்து நாவில் பனியுருக நாவால் உதட்டை துடைத்து துடைத்து சுவைத்தோமே வருமா வருமா? மீண்டும்-அந் நாட்கள் ? சுகம் தருமா தருமா? பாட நேரம் வெளியோடி காளிகோயில் மாமரம் மீதேறி பறித்து வந்த மாம்பிஞ்சை ஒளித்து ஒளித்து சாப்பிட்டோமே அக்காலம் வருமா வருமா? சுகம் தருமா தருமா? கள்ளன் பொலிஸ் விளையாடி கள்ளனுக்கு பொலிஸ் "ஊண்டி போட " அவன் அழுதுகொண்டு வீட்டை -ஓட அப்பா கிட்ட உதை வாங்கினோமே வருமா வருமா அந்நாள்? சுகம் தருமா தருமா? …
-
- 23 replies
- 3.3k views
-
-
இன்று யாழ்ப்பாணம் பரியோவான் - மத்திய கல்லு}ரிகளுக்கிடையில் நிகழும் துடுப்பெடுத்தாட்டத்தை எண்ணியதும் நான் முன்னார் எழுதிய இக்கவிதை நினைவுக்கு வந்தது. படித்துப்பாருங்கள். துடுப்பெடுத்தாட்டம் ஒருமரத்தின் உடலெடுத்து உரித்துப் பதனுமிட்டு ஒத்தடம்போல் எண்ணெய் தேய்த்து - அதற்கு "கிரிக்கட்" மட்டையென பெயருமிட்டு துடுப்பு எனசொல்வார் தமிழில். பத்துப்பேர் சுற்றிநிற்க பந்தை ஒருவர்வீச தத்திவரும் தோல்ப்பந்தை மட்டை கொண்டடிக்க - நிலத்தில் பட்டுவிடாமல் பிடித்தால் அகல்வார் வெளியே முக்கி முக்கி அடித்தவர். கையை மடிக்காது வீசவேண்டும் அதனை கைகொண்ட மட்டையால் தடுக்கவேண்டும் - இல்லையெனில் தகர்க்கும் தடிமூன்றும் தன்காலை முன்வைத்தால் …
-
- 11 replies
- 1.2k views
-
-
கவி எழுதும் ஆசை பட்டப்பகல் அன்று மணியோ பன்னிரண்டு கொட்டும் மழையில்லை கீழ்வானம் சிவக்கவில்லை நட்டுவைத்த நடுவளவு உயர்வேம்பின் கீழ்நிழலில் நாற்காலி ஒன்றுபோட்டு நானும் அமர்ந்திருந்தேன் பொட்டுவைத்த பெண் பிரம்மாவின் நாயகியை தொட்டு மனத்திலே தேவாரம் ஒன்றுசொல்லி சொட்டச் சொட்டத்தமிழ் சுவையான கவிபடைக்க எட்டாத கற்பனையை எட்டிவிட முயன்றிருந்தேன் கட்டான என்மனையாள் கடைத்தெரு சென்றுவந்து சுட்டிப்பயல் தன்னைத் து}க்கத்திற் கனுப்பிவிட்டு வெட்டிக் கறிவைத்த விளைமீனின் வாசனையை எட்டநின்றே நாமீது நீரூற நனைந்திருந்தேன் கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுத்திடவா? பட்டப்பகலில் அது பலிக்காது என்றெண்ணி கொட்டாவியோடு கொடும் பசியும் குரல்வளையை எட்டிப் பிடித்திடவே மொய்த்…
-
- 15 replies
- 2.6k views
-
-
ஈழமும் சுகாதாரமும் உடல் நலம் சுகாதாரமாக இருந்தால் மன பலம் வலுவாக இருக்கும் நோயானது ஒரு சில நொடியில் பல வடிவத்தில் எம்மை ஆண்டு எம் வாழ்க்கைப் பயணத்தை குறிகிய கட்டத்தில் நிறுத்திவிடும் சிங்களவன் சில தசாப்த காலங்களாக பாரம்பரிய தமிழினத்தை பரிதவிக்க வைக்கின்றான் இரசாயனக் குண்டுகளால் முத்தான ஈழத்தின் இயற்கைக் காட்சிகளை நாசமாக்கி அசுத்தமான வாயுக்களை எம்மினம் சுவாசித்து பலவகை சுவாச நோய்களால் பரிதவிக்கின்றனர் இயற்கையான காற்றோட்டத்தில் சுதந்திரமாக சுய தொழிலில் வாழ்ந்த தமிழினம் செயற்கையான காற்றோட்டத்தில் மூச்சுத்திணறி செய்வதறியாது தவிக்கின்றது நோய்களால் திலீபன் நடமாடும் மருத்துவமனை- தன் சேவையைச் சிறப்பாகச் செய்தாலும் போதிய தமிழ் மருத்து…
-
- 11 replies
- 1.8k views
-
-
ÅÃÓõ §¾Å¨¾Ôõ §ÅñÎõ ÅÃõ §¸û ±ýÈ¡û §¾Å¨¾ ´Õ ¿¡û À¨ÆÂ ¿¡ðÌÈ¢ôÒ ÀÊòÐ §¸ð¸òÐÅí¸¢§Éý ºõÀó¾ÛìÌ ¸¢¨¼ò¾ Ó¨ÄôÀ¡Öõ «Ê Å¡í¸¢ ÀƸ¡¾ «¸ÃÓõ Å¢Øó¦¾ØóÐ «Æ¡¾ Å¢¨Ç¡ðÎôÀÕÅÓõ ¦¾Ã¢ó¾ Ţɡì¸û ¿¢ÃõÀ¢ÅÕõ Ţɡò¾¡Ùõ «¼õ À¢ÊòÐ Å¡í¸¡¾ Á¢¾¢ÅñÊÔõ À¾¢ýÁÅÂÐìÌ §Áø Ò¾¢Â ¿ñÀ÷¸Ùõ Àò¾¡ÅÐ Àãð¨ºÂ¢ø Á¾¢ô¦Àñ ¿¡ÛÚõ À¾¢§ÉÆ¢ø «¼÷ Á£¨ºÔõ ¿ý¦¸¡¨¼ §¸ð¸¡¾ ¸øÖâÔõ ¯Îò¾¢ì¦¸¡ûÇ ÀòÐ ÒÐ측øºð¨¼Ôõ ¾¢ÕðÎ º¢É¢Á¡ À¡÷ì¸ º¡Ã¡Â¢ø À½Óõ «ó¾ ž¢ø ´Õ ¸ýÚ측¾Öõ À¡¼¦ÁøÄ¡õ §¾÷Å¡¸¢ Àð¼Óõ ¸Ä¢Ä¢§Â¡ Üü¨È ¯ý¨Á¡츢 °÷ÍüÈÖõ ¾ñ¼î§º¡Ú Àð¼õ ¦ÀüÈ 22 ÅÂÐõ Àì¸òÐ À¡ø¸É¢Â¢ø ±ó¿¡Ùõ À¢Ã¢Â¡ ÀÊòÐ즸¡ñÊÕì¸×õ ¯¨Æì¸ ºÄ¢ì¸¡¾ ÁÉÓõ ¯¨Æô¨À ¦¸¡ñ¼¡Îõ «ÖÅĸÓõ þô§À¡Ðõ À¡÷ì¸ Å¢ÕõÒõ À¡øÂ §¾¡Æ¢ Ãõ¡×õ ¯ý§À…
-
- 11 replies
- 1.9k views
-
-
வணக்கம் ரமா, கள உறவுகளே. இது நல்லதொரு முயற்சி, பாராட்டுக்கள். ஆனால் ஒன்று இல்லை இரண்டு: (1). எழுதிய கவிதையை களத்திற்கு அனுப்புவதற்கு முன்னர் இரு தடவைகளாவது படித்துவிட்டு எழுத்துப்பிழைகள் இருந்தால் திருத்திவிட்டு அனுப்புங்கள். (2). தயவுசெய்து ஆங்கிலச் சொற்களைக் கலக்காது எழுதுங்கள். கவிதைகள் (10 வரிக்குள்) குறுங்கவிதைகளாக இருந்தால் நல்லது என்று எண்ணுகிறேன். தாய்மொழியிலே தவறு செய்யக்கூடாது . அதுவும் கவிதையிலே!... "கண்ணுக்கு எண்ணெய் விட்டுக்கொண்டு இருக்கவேண்டும்" இல்லையேல் சொல்லவந்த கருத்துக்கள் காற்றோடு போய்விடும். நன்றி
-
- 29 replies
- 3.9k views
-
-
உறவுகளே தொடர்கதை போல் தொடர் கவிதையை இங்கு படைப்போமா? நான் தொடக்கி வைக்கின்றேன். என்னை தொடர்ந்து வருபவர் நான் எழுதும் கருவுக்கு ஏற்றதாகவோ அதன் கடைசி வரிகளை தெரிவு செய்து அதிலிருந்து தொடங்க வேண்டும். முதல் கவிதையை நமது தாயக நினைவுகளுடன் தொடங்குவோமா? எமது பழைய நினைவுகள் எல்லாம் கவிதை வரிகளில் வலம் வரட்டும் இங்கு. என்ன நீங்கள் தயரா? அந்த நாள் எந்த நாளோ? சூரிய கதிர்கள் ஊர் எல்லாம் பரவுமுன்னே மாசிப்பனியில் பற்கள் நடுநடுங்க கூணல் கிழவிகள் போல குறுகிக் கொண்டு புத்தகப்பையை அனணத்தபடி சென்றுவிடுவோம் பிரத்தியோக வகுப்புக்கு :arrow:
-
- 54 replies
- 8.1k views
-
-
ஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல அமைதிக்கும் தான்! இலங்கையின்அமைதி ஆயுதத்தினாலே பாலஸ்தீனத்தின்அவதி ஆயுதக்குறைவினாலே! ஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல அமைதிக்கும் தான்! இந்தியபாகிஸ்தானின் அமைதி அணுகுண்டினாலே திபெத் சீன அவதி அணுகுண்டின்மையினாலே ஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல அமைதிக்கும் தான்! நன்றி: குழலி பக்கங்கள்!
-
- 7 replies
- 1.6k views
-
-
எங்கிருந்தோ வந்து அன்பு என்னும் மூன்று எழுத்தால் இணைக்கப்பட்டுள்ளோம்... அவளின் கள்ளமில்லா பேச்சு என்னை கைது செய்தது அவளின் கள்ளமில்லா பார்வை என்னை உருக்கியது அவளின் கள்ளமில்லா சிரிப்பு என்னை சந்தோசப்பட வைத்தது. அவளின் துக்கம் என்னை சங்கடப்பட வைத்தது ஆனால் நானே அவளை சங்கடப்பட வைத்து விட்டேன். அதை எண்ணும் போது என் மனம் இன்னும் சங்கடப்பட வைத்தது. என்றும் பிரிவு என்னும் மூன்று எழுத்தால் பிரியாமல் இருக்க வேண்டும் நாம்......... படத்தை சிறியதாக்கி இணைத்துள்ளேன்.- யாழ்பிரியா
-
- 4 replies
- 1.7k views
-
-
அவளின் அன்பு என்றும் மறக்கமுடியாது.... அவள் என்னுடன் இருந்த நாளில் துக்கம் என்பதே தெரியாது. அவளின் குறும்பு ஒரு மகிழ்ச்சி அவளின் கள்ளத்தனமான வெறுப்பு ஒரு சுகம்.............. என்று அவளை பிரிந்தேனோ-அன்றே நான் என்னை இளந்தேன்.. அவள் எனக்கு அவளின் அன்பைத்தான் விட்டுச் செல்லவில்லை-ஆனால் பசுமையான அவள் நினைவுகளை விட்டுச்சென்றுள்ளாள்.... அவள் நினைவுகளுடனே என் நாளை களித்துடுவேன் அவள் விட்டுச் சென்ற நினைவுகள் என்றும் அழியா சுவடுகள் எத்தனை காலம் ஆனாலும்-அது மாறாத காதல் வடுக்கள்.................... >>>>***டினேஸ்***<<<< >>>>என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்று ந…
-
- 2 replies
- 1.9k views
-
-
காற்றே நலமா? என்னை தாங்கி நின்ற தாய் நிலமே நலமா? கடலே நலமா? அலையே நலமா? கரை தூங்கும்-கட்டுமரமே நீ- சுகமா? மரத்தடி பிள்ளையாரே நலமா? எங்கள் மனங்களில் வாழும் மறவர் குலமே நீங்களும் நலமா? ஒற்றை பனை மரமே - நலமா? உயிர்வாழ பால் தந்த பசுவே நீயும் நலமா? பள்ளிக் கூடமே நீ நலமா? பாடம் சொல்லி தந்த - குருவே நீங்களூம் நலமா? முரட்டு வீதியே நீ நலமா? அதில் முக்கி முக்கி போகும் மாட்டுவண்டிலே நீ நலமா? தோழர்களே நீங்க நலமா? தோழியரே நீரும் சுகமா? முச்சை கயிறு அறுந்து போக ஓடி போன நான் விட்ட பட்டமே நீ நலமா? எங்கு நீ இருந்தாலும் என்னையும் கேளேன் "நீ நலமா?" வயல் வெளியே நலமா? வரம்புகளே நீங்கள் சுகமா? ஆழக்கிணறே நீ ந…
-
- 41 replies
- 6.6k views
-
-
-
-
ஈழத்து அன்னை மடியில் அழகழாய் பூத்த பூக்கள் தேசத்து மண்ணைக் காக்க செங்குருதி குளித்த பூக்கள் கார்த்திகைப் பூக்களே -எங்கள் மா வீரர்களே! கல்லறையில் உறங்கும் எங்கள் கார்த்திகைத் தீபங்களே! கையில் பூக்கள் கொண்டு வந்து கல்லறையில் பணிகின்றோம் கண்ணீரில் கவிவடித்து காவியங்கள் பாடுகின்றோம் கல்லறையில் முகம் புதைத்து கதறிக் கதறி அழுகின்றோம் கரிகாலன் பிள்ளைகளே கண்திறந்து பாருங்களேன்! உங்களுக்கு மட்டும் தானா இப்படியோர் மனத்துணிவு மரணத்தைக் கூட இங்கு மண்டியிட்டு அழைப்பதற்கு! உம்மைப் பெற்ற அன்னை முகமோ இறுதிவரை பார்க்கவும் இல்லை உம்மைப் பெற்ற அன்னை மடியில் இறுதி மூச்சும் போனதில்லை அண்ணன் வழி சென்றவரே அடிமை விலங்கை அறுத்தவரே…
-
- 3 replies
- 1.3k views
-
-
16 வயசில் பல ஆசை வருமே- இனம்மேலொரு ஆசை எவருக்கும் வருமா? திசைக்கொன்றாய் பறக்கும் சிட்டு குருவி வெடிகுண்டை தன் மடியில் - காவி வீணே தன்னை கொல்ல நினைக்குமா? எப்படி ஆச்சு? ஆலயத்தில் போய் அழுவதில் - பயனில்லை ஆட்லறிதான் - இனி எங்கள் பேச்சு- ! இப்படி நினைத்தாரே ஒருவர் -! உன்னால்-என்னால்-எவரால் எண்ணி பார்த்திருக்க முடியுமா? -ஆகியிருந்ததே! இப்படி இப்படி -பாருங்களேன்! எவர் நினைத்திருப்பார் - இந்த இரும்பு மகன் எங்களை ஆள்வான் என்று? ஒவ்வொரு வயதிலும் - ஒவ்வொரு ஆசை வரும்- மனிதன்-மாறுவான் - அப்பிடிதான் என்கிறார்-! பத்துகளிலிருந்து - ஐம்பதுகள்வரை - நீர் அசைந்ததே இல்லையே- எப்படி எப்படி ? எப்படி எப்படி - உம் பாட்டன் வயசுள்…
-
- 13 replies
- 2.3k views
-
-
பிரிவு வாழ்வில் எத்தனை பிரிவுகள் தாய் நிலத்தைப் பிரிந்தேன் தாய் தந்தையைப் பிரிந்தேன் தம்பி தங்கையையும் பிரிந்தேன் செல்ல நாய்க்குட்டியைப் பிரிந்தேன் கிளித்தட்டு ஆடும் சிறு திடலையும் பிரிந்தேன் சிட்டாய் பறக்கும் என் துவிச்சக்கர வண்டியைப் பிரிந்தேன் பசுமையான பள்ளித் தோளியரைப் பிரிந்தேன் நறுமணம் வீசும் முற்றத்து மல்லிகையைப் பிரிந்தேன் இனிய குயில்ப் பாட்டைப் பிரிந்தேன் மொத்ததில் எனது இனிய கனவுகளைப் பிரிந்தேன் இத்தனை பிரிவுகளும் எத்தற்கா செய்தேன்? பிரிவுகளின் கொடுமையில்த் தவியாய்த் தவிக்கிறேன். :cry: துளசி
-
- 8 replies
- 1.7k views
-
-
கை பிடித்த போது..... என் கவிதை சிறகுகளுக்கு கால் முளைத்தது கன்னியவனை கண்ணுற்ற போது என் இலக்கிய உலகம் இனிய கதவு திறந்தது இனியவன் இமை திறந்த போது மண்ணில் விண்ணுலகம் பார்த்தது-ஆணழகன் மதிமுகம் பார்த்த போது தாய் மொழியைத் தலைக்கேற்றியது தேன்மொழியவன் இதழ் திறந்து பேசிய போது காட்டாறாக இருந்த எனை நீரூற்றாக மாற்றியது என்னவனைக் கை பிடித்த போது! நன்றி
-
- 8 replies
- 2.3k views
-
-
உயிர்ப் பூக்கள் தமிழீழம் மலர்ந்து தன் மானத்துடன் வாழவே தானத் தலைவன் தரணியில் அமைத்தான் புலிப்படை எம் இனத்தை வதை செய்த பாதகரைத் திவசம் செய்ய தலைவன் வழியினில் உதித்த உயிர்ப் பூக்கள் நீங்கள். வானத்திலிருந்து விமானங்கள் குண்டு மழை பொழிந்தாலும் அந்நியப் படைகள் ஆயிர மாயிரமாய் வந்தாலும் சிரிக்கின்ற முகத்துடன் சிட்டாகப் பறந்து சென்று தேடிவந்த பகை விரட்டியடித்து பூரித்து நிற்பதே உங்களின் இலக்கு பார் முழுவதும் வியக்கும் படைப் பலத்தைப் பெற்றீர்கள் களத்தினில் எதிரிகளைக் கொன்று காலனை உம்மிடம் அழைத்தீர்கள் உங்கள் குருதி உறைந்த தமிழ்மண்ணை உயிராய் நேசிப்போம் தமிழ் உயிர்ப் பூக்கள் என்றும…
-
- 6 replies
- 1.5k views
-
-
வாளெடுத்தவன் எலாம் வீரனென்றாவானா? தூரிகை தூக்கியவர் அனைவரும் -ஓவியர் ஆவாரா? பாரடா நண்பா - பகை -மெல்ல வெல்கிறது-! நீ இரு - நானும் இருக்கிறேன் என்பதா வேண்டுமிப்போ? நாம் இருக்கணும்- இதை நாவரழ சொல்லியும் - கேட்பார் யாருமிலை - நீயாவது - கேளடா! பச்சைக்கிளியின் சொண்டில் -பற்றி எரியும் அமிலம்-ஊற்றுவார்- பாவமிது என்று நீ சொன்னால் அந்த பகுதியையே இழுத்து மூடுவார்! ஏனடா இப்பிடி-? எலும்பும் தசையும் மட்டுமா- மனிதன் என்றாகும்-? உணர்வென்ற ஒன்று வேண்டும்-! நீ - உறைக்க சொல்லேண்டா - அவருக்கு! பார் பார்- கருத்து விடுதலை என்று பேசாதிருந்து கழுகுகள் - உன் தலையில் கூடு கட்டும் காலம் வந்தாச்சு - சீ போடா- அப்போ- எமக்காய் சிரித்துக்கொண்டே செத்தவர் கனவ…
-
- 13 replies
- 2.4k views
-
-
-
- 9 replies
- 2k views
-
-
ஓரு தடவை உன்னைப் பார்த்தேன் -ஆனால் இப்போழுது உன்னைப் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது! இது நட்பா? காதலா? இல்லை என் சொந்தமா? - ஆனால் இப்போழுது என் இதயம் மட்டு;ம் உன்னிடம் என் மனதுக்குள்ளே புகந்தவனே நீ யார்? - ஏன் எனது தூக்கத்தை கலைக்கிறாய்? எனது இதயத்தை எடுத்துச் சென்றவனே! உனது இதயத்தை என்னிடம் விட்டுச் செல் - நீ வரும் வரை பாதுகாப்பேன்! உன்னுடன் இருக்கும் பொழுது என் இதயம் எதுவும் சொல்லவில்லை உன்னைவிட்டுப் பிரிந்தவுடன் என்னிடம் ஏதேதோ சொல்கிறதே! இவை யாவும் எனக்கு மட்டுமா? இல்லை உனக்கும் தான் பிரியா இவருடைய முதல் கவி இதுவென நினைக்கின்றேன்
-
- 6 replies
- 1.7k views
-
-
முள் தீண்டுகிறது ஏன்பதற்காக றோஜா மலரை வெறுக்கலாமா? வேள்ளம் வருகிறது என்பதற்காக மழையை வெறுக்கலாமா? சோகத்தின் பக்கத்தில் சொர்க்கம் இருப்பதையும் நீ சுகத்தின் பக்கத்தில் துக்கம் இருப்பதையும் நீ அறிந்து கொள்! சில சோகங்களை நேசிக்கப் பழகு சில சோகங்களை வாசிக்கப் பழகு சோகங்கள் - உன்னை சேதுக்கும் உளி - நீ சிதையாதே! து. செல்வக்குமார் என்னை மிகவும் கவர்ந்த கவி
-
- 9 replies
- 2.2k views
-