கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
......................................................................முகவரி ......................................................................இதய ராஜ மன்மதன் ......................................................................இதய இடதுபுற ஒழுங்கை ......................................................................காதல் குறுக்கு தெரு ......................................................................காதல் நகர் இன்று இலத்திரனியல் சாதங்கள் உலகையே ஆக்கிரமித்து விட்டன . காதலர்கள் இயந்திரமயமாகி விட்டனர் . கிடைக்கும் நேரத்தில் முகநூல் ,வாடசப் .ஈமெயில் வைபர் என்று இலத்திரனியல் சாதனத்தில் காதலை பரிமாறுகிறார்கள் அவை பரிமாற்று சாதனங்களாக இருக்கின்றனவே …
-
- 1 reply
- 11.3k views
-
-
ஐம்பதில் வளையாது ஐம்பதிலும் வளைந்திருகிறது முதுகு @ கவிப்புயல் இனியவன் பழமொன்ரியு 01
-
- 5 replies
- 718 views
-
-
மனசு கொஞ்சம் வலிக்குது .....!!! -------- பச்சை நிற உடலழகியின்... வண்ண வண்ண பூக்கள் .... அங்காங்கே அழகுபடுத்தும் .... பச்சை நிற அழகியின் வதனம் .... சுற்றும் முற்றும் பார்த்தேன் ... தூரத்தில் யாரும் இல்லை ... தடுப்பாரும் யாருமில்லை ....!!! கிள்ளி எடுத்தேன் பூவை .... தள்ளி போகமுடியாமல் .. தன் வதனத்தை இழந்து ... தவிர்த்த செடியின் சோகத்தை ... இப்போ நினைத்தால் ..... மனசு கொஞ்சம் வலிக்குது .....!!! ஆற்றங்கரைக்கு போனேன் ..... அழகான ஆற்று நீரில் கால் .... பதித்தேன் தட்டி சென்றது மீன் ... கூட்டம் கூட்டமாய் குடும்பத்தோடு .... ஒற்றுமையாய் வந்தபடியிருந்தன ....!!! என்னை மறந்தேன் -தூண்டிலில் ... புழுவை செருகி துடிக்க துடிக்க .... …
-
- 0 replies
- 953 views
-
-
வறுமை எல்லோருக்கும் பொதுமை ..... உலகில் சதித்தவனும் .... சாதிக்க போகிறவனுக்கும் .... மூலதனம் - வறுமை ....!!! இவனுக்கோ .... பிறப்பிடமே - வறுமை - என்றால் .... கொஞ்சம் கேட்கவும் சகிக்கவும் .... உங்களுக்கு கடினமாய் தான் .... இருக்கப்போகிறது .....!!! யார் இவன் ...? அடிப்படை வசதிகள் குறைந்த .... அடுத்த வேளை சாப்பாட்டுக்கு ... தன்மானத்துடன் காத்திருந்து .... கிடைத்தால் சாப்பிட்டு .... கிடைக்கா விட்டால் ஈரதுணியை .... வயிற்றில் கட்டி வாழ்ந்த .... கௌரவம் மிக்க வறுமை குடும்ப .... நாயகன் - " ஆதவன் ".......!!! இவனது வாழ்கை தற்காலத்துக்கு .... எந்தளவுக்கு பொருந்தும் ... ஏற்கும் என்று தெரியாது .... ஆனால் இவனின் வாழ்கை .... இவனு…
-
- 5 replies
- 1.4k views
-
-
எல்லோர் பருவத்திலும் ... வந்த காதல் இவனுக்கும் .... வந்து தொலைந்தது .... யார் இவன் .....? காதலுக்காய் காதல் ... செய்தான் காதோடு .... வாழ்ந்தான் இப்போ .... காதலி இல்லாமல் .... காதலோடு வாழ்கிறான் ....!!! காதல் இளவரசன் .... என்பதா ..? காதல் தோல்வி .... தேவதாஸ் என்பதா ...? இரண்டுக்கும் .... இடைபட்டவன் தான் ... இந்த கவிதை தொடரின் ... நாயகன் - கதாநாயகன் ... " பூவழகன் " தொடர்ந்து வருவான் ... இவன் கதை கூட உங்கள் ... கதையாக இருக்கலாம் ....!!! ^ கனவாய் கலைந்து போன காதல் கவிப்புயல் இனியவன் வசனக்கவிதை
-
- 14 replies
- 1.5k views
-
-
பூக்கள் அழகானவை ..... கற்பனயில் பூக்கும் -நீ பூக்களின் ராணியாக .... அழகாய் இருக்கிறாய் ....!!! உன் உடலின் வியர்வைகள் ... பனித்துளிபோல் அழகாய் .... உன் மூச்சு காற்று எங்கும் ... வாசமாய் மனம் கவர்கிறாய் .... நீ உதிர்ந்து விழுந்தாலும் ..... உன்னை தாங்கும் காம்பு யான் ... மீண்டும் பூப்பாய் என்று ... காத்திருக்கிறேன் ....!!! ^ பூக்களால் காதல் செய்கிறேன் கவிப்புயல் இனியவன்
-
- 3 replies
- 765 views
-
-
நீ கடிகாரமாய் இரு .... உனக்கு வலியே... தராத முள்ளாய் .... நான் உன்னை சுற்றி .... வருகிறேன் ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் (SMS கவிதை) கவிப்புயல் இனியவன்
-
- 32 replies
- 5.8k views
-
-
மகளீர் நிகழ்ச்சி படபிடிப்பு மகளீருக்கு மட்டும் அனுமதி தொலைகாட்சியில் ஒளிபரப்பு ^ சிந்தித்து சிரிக்க சென்ரியூ கவிப்புயல் இனியவன் சுவாமி தரிசனம் நூற்றுக்கணக்கான பக்தர் குவிந்தனர் ஆயிரக் கணக்கான படைகள் பாதுகாப்பு ^ சிந்தித்து சிரிக்க சென்ரியூ கவிப்புயல் இனியவன்
-
- 0 replies
- 956 views
-
-
நிழல்கள் தீண்டிய மனவறை நியங்களின் தாண்டவத்தால் நிசப்தமாகி கிடக்கிறது நிரூபனமாகிவிட்ட சில நிறுவல்கள் நியத்தை தாண்டி நிகழ்காலத்தை கூறுகின்றன இறக்க போகும் என் எதிர்காலம் நடப்புக்காலத்தால் ஆழப்படுகிறது இறந்த காலத்தின் வடுக்களும் வரும் காலத்தின் ஏக்கமும் பிண்ணிப் பிணைந்து கிடக்கிறது தலைவிரி கோலமாய் எழுந்து எதிர்காலம் அச்சமூட்டுகிறது பிணைத்திருக்கும் பிணம் தின்னும் கழுகுகளின் கர வலிமையை எண்ணி திராணியற்று போகிறது எதிரியின் நெஞ்சம் பாட…
-
- 1 reply
- 811 views
-
-
என் .... கண்களில் உன்னை.... ஓவியமாய் சுமந்து செல்கிறேன் .... உதடுகளில் உன்னை ... மந்திரமாய் உச்சரிக்கிறேன்.... இதயத்தில் உன்னை .... தேவதையாய் வணங்குகிறேன் ....!!! என் ... ஆத்மாவில் மூலாதாரம் - நீ உயிரோட்டத்தின் மூச்சும் -நீ குருதி ஓட்டத்தின் குருதியும் -நீ சிந்தனைகளின் வடிவம் -நீ என் உடலும் நீயே..... என் உயிரும் நீயே அன்பே ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் உடலும் நீயே உயிரும் நீயே கவிதை தொடர் 01
-
- 4 replies
- 4.2k views
-
-
உன்னை தேவதை ஆக்கியது உன்னை ...நான் காதலியாக.... மட்டும் நினைக்கவில்லை..... வழிபடும் தெய்வமாகாவும் கருதுகிறேன் ......சில வேலை நீ கூட ......சிரிப்பாக எடுக்கலாம் ......!!!. நீ இருந்துபார் நீயே ,,,,,உனக்கு கடவுளாக தெரிவாய் ....உன்னை தேவதை ஆக்கியது என் "நினைவு அலை" தான் இந்த உலகில் எண்ணத்தை விட ஒரு கருவி இல்லை....!!!
-
- 7 replies
- 841 views
-
-
துணிவு வானம் குளிர்ந்து மழை கொட்ட வயல் நிலங்கள் நீர் நிறைந்திருக்க நாற்று நடுகையிட்டு நன்றாய்; பொலிவு தரும் நம்பிக்கையில் பட்ட கடனோடு கடன்; பட்டு பகலிரவாய் பாடுபட்டு பயிர் வளர்த்தேன். கொத்துக் கொத்தாய் நெல் மணிகள.; மண்தந்த மட்டற்ற மகிழ்வோடு மனம் மகிழ்ந்து விற்ற கடன் அடைத்து மிஞ்சியதெமக்கென்ற நினைப்பதனில் நெஞ்சம் நிறைந்திருக்க விண்ணிடிந்து மண்ணில் வீழ்ததுபோல் சட்டென்று வீழ்ந்த விலையால் நட்ட கூலிக்கும் காணாத விற்று வந்த பணத்தில் வட்டி கட்டி வறுமையும் துரத்த வரும்போகம் நிமிர்வோம் என்ற துணிவோடு வாசல் வந்தேன். - வ.மனோகரன் - அகதி நானுமோர் அகதியென்ற நிலைமாறி வாழும் புலம் சொந்தமாச்சு. மாறிடும் நாட்க…
-
- 0 replies
- 1.4k views
-
-
என் குருவே உந்தனுக்கு ஒரு கோடி நமஸ்காரம் .... உன்கவியால் மனம் நெகிழ்ந்து கவி படிக்க பயின்றவர்களில் நானும்ஒருவன்தான் , அது நிற்க.... இடி இடிக்கும் உன் குரலில் முல்லைத்தீவு பற்றி ஒரு முத்தான கவி சொல்ல பித்தாகி போனேன் நான் சகயமாய் நீ செய்யும் வார்த்தை ஜாலமெனெ புரியாமல் போவேனோ ....... கதறி அழைத்தோம் வரவில்லை - கரம் கூப்பித் தொழுதோம் வரவில்லை கூக்குரல் கேட்டதுவே.-.உரைத்தாயோ எம் குரலை உன் தலைவன் காதினிலே... எது செய்தாய் எமக்காக ..... ஆனந்தமாய் இருந்துவிட்டு - பின்னர் ஆனந்த புரத்தில் ஆவிதுடித்ததாம் நீலிக் கண்ணீர் நீ விட்டழ - நாமென்ன மூடரோ, நாடகத்தை நம்பி நிற்க கையிருந்த போது கரம் நீட்டி அழ…
-
- 1 reply
- 1.6k views
-
-
காதல் ஒரு வழி பாதை புரிந்து கொள் நினைக்க தெரியும் மறக்க தெரியாது....!!!-----உன்னோடு வாழவும் துடிக்கிறேன்....மண்ணோடு மடியவும் துடிக்கிறேன் ....!!!-----உதடு சிரிக்கிறது ...இதயமோ அழுகிறது ......!!!------+கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
-
- 10 replies
- 1.3k views
-
-
அன்பிற்கு புது பல அர்த்தங்கள் தேடி அகங்காரத்துடன் காதலையும் அலர்ச்சியம் செய்து தெரிந்தே நான் அவனுடன் புரிந்த சண்டைகள் தெளிவு தரும் என்று ஏதோ ஓர் நினைப்பில் வர்ணங்களில் வானவில்லை காண்பது போல் வாட்டும் ஏக்கங்களில் அன்புக்கு விளக்கங்கள் தந்தாலும் நெடுந்தூரத்தில் அவன் உருவம் என் விழிப்பார்வை கைது செய்தால் நெஞ்சில் சுமந்த சுமைகள் யாவும் நெகிழ்ச்சியில் உருகுதே கதிரவனின் வருகையில் மலரும் தாமரையாய் கண்களின் இரு கருமணிகள் விண்மீன்களானது ஏனோ ? சொற்களுக்கு எட்டாத உணர்வுகள் யாவும் உடனே விழித்துக்கொள்ளும் சொப்பனத்தில் கூட அழியா சுவடாய் மனதினுள் பதிந்து கொள்ளும் ஆன…
-
- 0 replies
- 822 views
-
-
உயிர் .... தந்து உயிர் காத்து ... எந்த உயிருக்கும் ... அவதாரம் கொடுக்கும் ... அவதார பிறப்பே தாய் ....! அவதரிக்க அவதாரம் ... எடுத்து உலாவிவரும் ... உயிராய் இருப்பாதால் ... தாயே உம்மை "தாயாய் " வணங்குகிறேன் ....!!! பெற்ற பிள்ளை படும்பாடு .... பார்க்கமுடியாமல் தன்னை ... வருத்தி பாலூட்டி உணவூட்டி .... இரக்கத்தோடு அரவணைத்து ... இரத்தத்தோடு இரக்கத்தையும் .... வளர்க்கும் ஆன்மீக உறவே ... "அம்மா" உம்மை "தாயாய் " வணங்குகிறேன் ....!!! தன் பிள்ளையை போல் ... பிறர் பிள்ளையையும்.... அரவணைக்கும் ஒரே ஒரு .... பிறப்பாய் சேவைசெய்யும் .... உனந்த உள்ளம் கொண்ட ... உலக சேவகியாய் உம்மை .... பார்கிறேன் தன் பிள்ளைக்கு .. மட்டுமல்ல பிற பிள்ள…
-
- 0 replies
- 1.4k views
-
-
சில பெண்களை பார்க்கும் பொழுது கரும்பலகையில் எழுதிய எழுத்துக்கள் ஈரத்துணியால் துடைக்கப்பட்டது போல மனதில் இருந்தவை எல்லாம் மறைந்து விடுகின்றன...
-
- 3 replies
- 1.4k views
-
-
கூனி குறுகி நிற்கிறேன் மாமா என் ரத்தத்தில் நானே குளிக்கிறேன் மாமா ஒரு சில நிமிடங்களில் என் உயிர் போய்விடுமே அந்த பாவத்திற்கு நீங்கள் தான் காரணம் மாமா நான் சின்னஞ்சிறு சிறுமி என்பது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா மாமா நாளை நான் கல்வியில் சிறந்து நிற்பேன் என்பதும் உங்களுக்கு புரியவில்லையா மாமா உங்கள் சுகயீனங்களை கவனிக்கும் வைத்தியர் நானாக இருப்பேன் என்று ஒருவேளை தெரிந்தால் இன்று என்னை வதைக்காமல் விட்டிருப்பீர்களா மாமா உங்களுடன் சின்னவயதில் விளையாடிய தங்கை நான் தானே மாமா உங்களுடன் ஆதரவாக என்றும் காத்த அக்காளும் நான் தானே மாமா சோறு ஊட்டி தாலாட்டி வளர்த்த அம்மாவும் நான் தான் மாமா…
-
- 2 replies
- 984 views
-
-
காதலித்துப் பார்.. கடதாசி வீணாகும் கல்லாப்பெட்டி காலியாகும்.. கண்ணீர் பெருகும் கவலை மிஞ்சும்.. காதலித்துப் பார்.. கடற்கரை வெளியில் கருவாடாய் காய்வாய் கள்ளமில்லா உன் நெஞ்சில் களவும் பொய்யும் குவியும். காதலித்துப் பார்.. காற்சட்டைப் பொக்கட் கிழிஞ்சு போகும் காவாலியும் உன்னைச் சுரண்டுவான்.. காரில் பெற்றோல் தீரும் காண்போர் முகம் சுழிக்கும்... காதலித்துப் பார்.. கிரகம் பிடிக்கும் கிருபை இழக்கும்.. கறுமம் இவன் பிறப்பென்று கவிதை சுயம்பாடும். காதலிக்காமல் பார்.. உன்னை நீயே நேசிக்கப் பழகுவாய் உள்ளம் திடமாகும் உழைப்பு இதமாகும் உன்னை நீ அறிவாய் உலகம் உன்னில் …
-
- 17 replies
- 1.6k views
-
-
வருவாளா… அழகிய றோசா மலர் ஆடி ஆடி வந்ததுபோல் மெல்லென அருகில் வந்தாள் - என் மேனியெங்கும் சிலிர்த்ததுவே. கண்களால் தூண்டில் போட்டாள் கௌவ்வினேன் மீனாய் நானும். கையினால் பிடிப்பாளென களிப்புடனே முன்னே போனேன். அருகிலே இழுத்து என்னை அணைப்பாள்தானே என்ற ஆசையில் மனமும் பொங்க அமைதியாhய் நின்றேன் அங்கே கண்ணினால் சாடை செய்த கனிமுகத்தைப் பாhத்து நிற்க மண்ணிலே தள்ளி விட்டாள் மரம்போல வீழந்தேன் நானும் கொல்லெனச் சிரித்தாள் பார்;த்து கொவ்வையின் இதழ்கள் விரிய சட்டென எழுந்து நின்று தட்டினேன் உடலின் மண்ணை. சோகமாய் பார்த்தாள் என்னை துடித்தன விழிகள் மீனாய்; - அவை ஈரமாய் நனைந்து வடிய என் இதயமும் வாடியதப்போ நிலத்தினை நோக்கி நி…
-
- 4 replies
- 1.7k views
-
-
எந்தத் தூய கோவிலுள்ளும்தூசு நுழையும்ஆயினும் உள்ளெரியும் தீபம்பேசாதுஅதன் ஒளிர்வில் உள் நுழையும் தூசே தானொளிர்ந்து பேசும்...
-
- 1 reply
- 1.3k views
-
-
சின்னஞ்சிறிய குழந்தை - அதன் சிந்தையில் வஞ்சகம் இல்லை கன்னல் மழலை பொழிந்து - எங்கள் காதிற்கு அமுதமளிக்கும் ஆசையுமில்லை மோசமுமில்லை - அது ஆணவம் கொள்வது இல்லை காசையு மெண்ணுவதில்லை - இதால் கவலைப் படுவதுமில்லை பிஞ்சுக் குழந்தை மனதில் - ஒரு பேதம் வளர்வதேயில்லை அஞ்சுதல் என்பதுமில்லை - அதை யார் வெறுப்பார்? யாருமில்லை இவ்வளவு பெரிய உலகில் - துயர் பிடித் அலைந்திடும் மக்கள் மத்தியில் சின்னக் குழந்தையாய் மாறி வாழ்ந்திட ஆசை...
-
- 0 replies
- 766 views
-
-
அன்பு செய் அல்லல் தீரும் உண்மை சொல் உயர்வு உண்டு தொண்டு செய் தொண்டனவாய் நன்மை செய் நாடு போற்றும் கருணை செய் காதலோடு பொறுமை கொள் பூமியாழ்வாய் உரிமை சொல் உனது நாடு வற்மை தீர் வாழ்வு ஓங்கும்..
-
- 0 replies
- 1.1k views
-
-
அதிகாலை எழுந்து ....அம்மணமான உடையுடன் ....அம்மாவின் கையை பிடித்தபடி .....வீட்டின் முன்பக்கம் பின்வளவு ,,,,எல்லாம் சுற்றி திரிந்து ....அக்கா அண்ணா பள்ளி செல்லும் ....போது நானும் போகணும்....என்று கத்தியழுத அந்த காலம் ....வாழ்வின் "தங்க காலம் "......!!!பச்சைஅரிசிசோறு வேகும்போது ....அவிந்தது பாதி அவியாதது பாதி ....கஞ்சிக்கு கத்தும் போது ....பொறடாவாரேன் என்று சின்ன ....அதட்டலுடன் கஞ்சியை வடித்துதர ....பாதி வாய்க்குள்ளும் மீதி ...வயிற்றில் ஊற்றியும் குடித்த ....அந்த காலம் ....வாழ்வின் "பொற்காலம் "......!!!பாடசாலையில் சேர்ந்தபோது .....புத்தகத்தையும் என்னையும் ...தூக்கிகொண்டு சென்ற அம்மா ....சேலையின் தலைப்பை என் தலை ....மேல் போட்டு தன் தலை வெய்யிலில் ...வேக வேக வீட்டுக்கு வந்து .…
-
- 0 replies
- 838 views
-
-
அள்ளி எடுப்ப தூஉவும் இன்பம் எள்ளித் தடுப்ப தூஉவும் இன்பம் பள்ளி கொடுப்ப தூஉவும் இன்பம் தள்ளிப் படுப்ப தூஉவும் இன்பம் (பெண்ணே உன்னை அள்ளி எடுத்து அணைக்கும் போது இன்பமாகின்றது, அவ்வேளை நீ எள்ளி நகைசெய்து தடுப்பது இன்பமாகின்றது, பள்ளியறையில் நீ கொடுக்கின்றதெல்லாம் இன்பமாகின்றது, இருந்தும் ஊடலுற்று நீ தள்ளிப் படுப்பது கூடவும் அல்லவா இன்பமாகின்றது!) -அன்பு மனைவிக்காக 14பெப்பிரவரி2016-
-
- 0 replies
- 1.1k views
-