Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. கமல் | படம்: கிரண் சா 'உத்தம வில்லன்' படத்தில் கமல் ‘உலக நாயகன்’ எனத் தனது ரசிகர்களால் அழைக்கப்படும் கமல் ஹாசனுக்கு 60-வது பிறந்தநாள். தமிழ் சினிமாவின் இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாக மட்டுமின்றி, சக படைப்பாளியாகவும் பயணிக்கும் கமல் ஹாசனைச் சந்தித்துப் பேசியதிலிருந்து… உங்களுக்கு இதுவரை தமிழ் சினிமா செய்தவை என்னென்ன? எதை நான் சொல்றது..? சம்பளம், பாடம், சவுக்கடிவரை எல்லாமே கொடுத்திருக்கிறது தமிழ் சினிமா. நான் பெற்றவை எல்லாம் இங்கிருந்து பெற்றவைதான். கற்றவையும் துன்புற்றவையும் இங்கிருந்து வந்தவைதான். தொழில்நுட்ப ரீதியில் ஏற்படும் மாற்றங்களை அப்டேட் செய்துகொண்டாலும்கூட, தமிழ் சினிமாவில் வர்த்தக ரீதியிலான சாதக நிலையை அனுபவிக்கும் சூழல் பரவலாகவில்லையே... தொழி…

  2. Published : 21 Dec 2018 15:50 IST Updated : 21 Dec 2018 15:51 IST சாகடிக்கவே முடியாத ஒருவனும் சாவுக்கே கடவுளான ஒருவனும் மோதினால் அதுவே 'மாரி 2'. சென்னைக்கு அருகில் உள்ள ஓர் ஊரில் ரவுடி ராஜ்ஜியம் நடத்துகிறார் மாரி (தனுஷ்). அவரின் நண்பன் கலையை (கிருஷ்ணா) போதைப் பழக்கத்திலிருந்து மீட்டெடுக்கிறார். எவ்வளவு பணம் கிடைத்தாலும் போதைப்பொருள் கடத்துவதில்லை என்பதில் மாரி தீர்மானமாக இருக்கிறார். இடையில் வளவன் தன் அண்ணன் கலையிடம் மாரி போதைப்பொருள் கடத்துவதாகவும், அதற்கு ஆட்டோ டிரைவரான அராத்து ஆனந்தி (சாய் பல்லவி) உதவுவதாகவும் கூறுகிறார். இதை கலை நம்ப, இருவரின் நட்புக்குள்ளும் பிரச்சினை வெடிக்கிறது. …

  3. விமர்சனம்: வணங்கான்! KaviJan 11, 2025 12:21PM உதயசங்கரன் பாடகலிங்கம் ’கும்பிடு’ போடும்படியாக இருக்கிறதா? ’நாச்சியார்’ படத்திற்குப் பிறகு ஏழு ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் இயக்குனர் பாலாவின் படம். இதுவே ‘வணங்கான்’ படத்தின் மீதான கவனக்குவியலுக்கான முதல் காரணம். சூர்யாவைக் கொண்டு தொடங்கப்பட்ட இத்திரைப்படத்தில் பின்னர் அருண்விஜய் நாயகனாக நடித்ததெல்லாம் அப்புறம் தான் நம் நினைவுக்கு வரும். படத்தின் ட்ரெய்லர், ஸ்னீக்பீக் எல்லாம் பார்த்தாலும், ‘இந்தப் படத்தில் என்ன செய்திருக்கிறார் பாலா’ என்ற எதிர்பார்ப்பே இதன் யுஎஸ்பி. சரி, ‘வணங்கான்’ படத்தில் நமக்கு எப்படிப்பட்ட திரையனுபவத்தை வழங்கியிருக்கிறார் இயக்குனர் பாலா? பாலா படங்களின் கதை!? …

  4. இசைப்புயல் "ரகுமான் ஜென்டில்மன்" படத்தின் "சிக்கு புக்கு ரயிலே" பாடலுக்குப் பிறகு தனது மெட்டுப் போட்டுக் கொடுக்கும் விதத்தை மாற்றிக்கொண்டாராம்.. ஏன்..... வீடியோ செய்தியைக் காண இங்கே சொடுக்கவும்

    • 0 replies
    • 1.1k views
  5. 'ரிலீஸ் அதிகம், வெற்றி குறைவு': 2025-ஆம் ஆண்டு தமிழ் சினிமா பற்றிய ஒரு மீள் பார்வை பட மூலாதாரம்,PradeepRanganathan/Facebook படக்குறிப்பு,டியூட் கட்டுரை தகவல் மீனாட்சி சுந்தரம் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2025-ஆம் ஆண்டு தமிழில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 285 திரைப்படங்கள் வெளியாயின. பல ஆண்டுகள் தேங்கியிருந்த படங்களும் இந்த ஆண்டு வெளியாயின. சிறிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு, தயாரிப்பாளர்கள் காட்டிய ஆர்வம், சிறிய படங்களை ரிலீஸ் செய்ய திரையரங்குகள் கிடைத்தது என்பன போன்ற பலவும் இதற்கு காரணமாக அமைந்தது என்று திரைத்துறையினர் கூறினர். 2025-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு எப்படி இருந்தது? வசூல் ரீதியில் வெற்றி பெற்ற படங்கள் தமிழ்த் திரையுலகை…

  6. சென்னை: நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் இதுவரை 10 மோசடி புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 7 கோடி ரூபாய் அளவுக்கு அவர் மோசடி செய்திருப்பதால் சொத்துக்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மதுரை சிம்மக்கல்லை சேர்ந்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், பி.ஏ.பட்டப்படிப்பு படித்துள்ளார். அக்குபஞ்சர் மருத்துவ படிப்பை தபால் மூலம் படித்த சீனிவாசன், முதல் மனைவி விஜி பிரிந்து வாழ்கிறார். தற்போது, 2வது மனைவி ஜுலியுடன் வசித்து வருகிறார். மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது புகார் கூறி தினமும் மனுக்கள் வந்த வண்ணம் உள்ளன. இது வரை அவர் ரூ.7 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக புகார்கள் வந்துள்ளன. அவர் மீது ஏற்கனவே ரங்கநாதன் என்பவர் …

  7. சினிமாவுகான தனிக்கைக் குழு என்பது, தனித்த அதிகாரங்களைக் கொண்ட சுயாட்சி அமைப்பாகத்தான் இயங்க வேண்டும்! ஆனால் சென்சாரில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது! பணத்தைக் கொடுத்தால், யூ/ஏ சான்று தரவேண்டிய படத்துக்கு ‘யூ’ கூட வாங்கலாம் என்ற நிலை இருப்பதாகச் சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் சென்சாரில் சினிமா ஊடகம் பற்றித்தெரியாத, அதேநேரம் ஆளும்கட்சியின் ஊழியர்களாக அதில் அங்கம் வகிக்கும் ஆட்கள், தற்போது அந்த ஊடகத்தை எப்படிப்பார்க்க வேண்டும் என்பது தெரியாமல் பிரச்சனை செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது! இதற்கிடையில் செல்வாக்கு மிக்க மாஸ் ஹீரோக்களின் படங்களில், தனிக்கை விதிகளின்படி வெட்ட வேண்டிய பல காட்சிகளையே விட்டுவிடுகிறார்கள். ஆனால் சின்ன படங்களை எவ்வளவு நசுக்க முடியுமோ அவ்வளவு நசு…

  8. இதன் முதல் கட்டமாக சல்மான்கானுடன் ரெடி படத்தில் படுக்கையறை மற்றும் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்துள்ளாராம். படம் வெளியாவதற்கு முன்பு இந்தக் காட்சிகளை வெளியிட்டு, மார்க்கெட்டில் புதிய வாய்ப்புகளை பிடிக்க அவர் திட்டமிட்டுள்ளதாக மும்பை பத்திரிகைகள் கிசுகிசுக்கின்றன. வாய்ப்புக் குறைந்தால் அல்லது இல்லாமல் போனால் கவர்ச்சி ஆயுதத்தை முழுசாகப் பிரயோகிப்பது நடிகைகள் வழக்கம். அசினும் இதற்கு விலக்கில்லை. கஜினி மூலம் இந்திக்கு போன முதல் படத்திலேயே இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு லண்டன் டிரீம்ஸ் படத்தில் சல்மான்கானுடன் ஜோடி சேர்ந்தார். அது படு தோல்வி அடைந்தது. இதனால் பட வாய்ப்புகள் குறைந்தது. ஆரம்பத்தில் கஜினி வெற்றி தந்த மிதப்பில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன…

    • 0 replies
    • 658 views
  9. தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி கோலிவுட்டின் கவர்ச்சிப் புயல் நமீதாவுக்கு ஒரு புது பட்டப்பெயரைச் சூட்டியுள்ளனர், இளம் ரசிகர்கள். அதுவும் மாணவர்கள். அது... 'தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி'! ஜேப்பியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்த அனைத்துக் கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் நமீதா. அப்போதுதான் இந்தப் பட்டப் பெயரைச் சூட்டி தங்கள் 'பக்தி'யை வெளிப்படுத்தினர் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள். சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான இசைவிழா நடந்தது. இதில் சென்னை மற்றும் புறநகரில் உள்ள 23 கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் பங்கேற்றனர். வி…

  10. Movie : Before the devil knows you're dead (2007) Director : Sidney Lumet Cast : Philip Seymour Hoffman, Ethan Hawke, Albert Finney, Marisa Tomei சில நேரங்களில் வாழ்க்கை நாம் எதிர்பார்த்ததைவிட குரூரமாக இருந்துவிடுகிறது. அதிர்ச்சியினால் அதனை எதிர்கொள்ள முடியாமல் நிலைதடுமாறும்பொழுது நமது எதிர்வினைகள் பிரச்சினையை மேலும் சிக்கலாக்குகிறது. அத்தகைய ஒரு சிக்கலான கதையுடன் ஒரு குடும்பத்தினுள் நடக்கும் crime thriller திரைப்படமாக வெளிவந்திருக்கிறது, "Before the devil knows you're dead". Sidney Lumet அவரது படங்களுக்கே உரிய வகையில், மனித உணர்வுகளை ஆழமாக தொட்டு செல்வதில் வெற்றி பெற்றிருக்கிறார். சிறு வயதிலிருந்தே பெற்றொரின் போதிய அன்பு கிடைக்காமல் வளரும் Andy, போதைப்பழக்க…

    • 0 replies
    • 1.4k views
  11. உலக அளவில் அதிக ம‌ரியாதைக்கு‌ரியதாக கருதப்படும் சர்வதேச திரைப்படவிழா, கேன்ஸ். அதில் கோச்சடையான் ட்ரைலரை வெளியிடுவதாக கோச்சடையான் படத்தின் இயக்குனர் சௌந்தர்யா உள்ளிட்டோர் தெ‌ரிவித்திருந்தனர். கேன்ஸ் திரைப்பட விழாவில் ர‌ஜினியும் கலந்து கொள்வார் என கூறப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை. ர‌ஜினி கேன்ஸ் செல்லவில்லை, ட்ரைலரும் வெளியிடப்படவில்லை. இது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. ர‌ஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டே கேன்ஸுக்கு செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக சிலர் கூறினர். ஆனால் அதனை படத்தின் தயா‌ரிப்பாளர் தரப்பு மறுத்துள்ளது. படத்தின் ட்ரைலர் சிறப்பாக வர வேண்டும் என்று ர‌ஜினி தெ‌ரிவித்ததால் ட்ரைலரை மேம்படுத்தும் பணி நடந்து வருவதாகவும், அதனா…

  12. திரைப்பட விமர்சனம் : புலிமுருகன் திரைப்படம் புலிமுருகன் நடிகர்கள் மோகன்லால், கமாலினி முகர்ஜி, லால், ஜெகபதிபாபு, வினுமோகன், கிஷோர் இசை கோபி சுந்தர் ஒளிப்பதிவு சஜி குமார் இயக்கம் விசாக் `புலி முருகன்`, கடந்த ஆண்டு அக்டோபரில் மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்றதோடு, இதுவரை மலையாளத்தில் வெளியான ப…

  13. பாலியல் தொழிலாளி, பாலியலை தூண்டும் படங்களில் நடிக்கும் நடிகை என யாராக இருப்பினும் அவர்களின் சமூக அந்தஸ்து அவர்கள் புழங்கும் இடங்கள், பண பலம், வர்க்க பலம் ஆகியற்றை முன்னிட்டே கட்டமைக்கப்படுகிறது. ஷகிலா பாலியலை தூண்டும் படங்களில் நடித்தவர். விரும்பி அல்ல, ஆரம்பகால நிர்ப்பந்தங்களால். ஆனால் நீலப்படம் அளவுக்கு அவள் கீழிறங்கவில்லை. ஷகிலாவின் இன்றைய சமூக அந்தஸ்து எப்படிப்பட்டது என்று அனைவருக்கும் தெரியும். படங்களிலும் அவரை பாலியல் நகைச்சுவைக்கு பயன்படும் போகப் பொருளாகவே பயன்படுத்துகிறார்கள். தூள், பாஸ் என்கிற பாஸ்கரன் படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அவரை சினிமா விழாக்களுக்கு அழைப்பதற்குக்கூட இங்கு ஆளில்லை. எனில் சினிமா தாண்டிய நிகழ்வுகளில் பார்வையாளராகக்கூட அவரை கற்பனை …

  14. 2009 இல் வெளிவந்த இந்தப் படம்,இரு மனிதர்களின் போராட்டத்தைப் பற்றியது.The struggle of two men, to uplift a beaten up nation by uplifting a beaten up sports team.இது தான் கதை. 1990 வருடம் நெல்சன் மண்டேலா தன்னுடைய நீண்ட சிறைத் தண்டனையில் இருந்து விடுவிக்கப்படுவதை காட்டி ஆரம்பிக்கறது படம்.அவரை விடுவித்துச் செல்லுவதை பார்க்கும் ஆப்ரிக்க சிறுவர்கள் குதூகலப்படும் அதே நேரம்,ஒரு வெள்ளையன் இன்னொருவனிடம், “நம் நாடு நாய்களுக்கு போகும் காலம் இது!(This is the day our country(??) goes to the dogs)“ என்கிறான். எங்கே இவர் நிலைமையை சீர் செய்து விடுவாரோ என்று பயப்படும் ஆங்கில அரசாங்கம்,தீவிரவாத கும்பல்களுக்கு மறைமுகமாக ஆயுதம் கொடுத்து நாட்டில் வன்முறையை கட்டவிழ்த்து நிலைமையை மேலு…

  15. மூளையில் ரத்தக்கசிவு: லண்டன் மருத்துவமனையில் பாம்பே ஜெயஸ்ரீ JegadeeshMar 24, 2023 18:26PM பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் இன்று (மார்ச் 24 ) அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார் பாம்பே ஜெயஸ்ரீ. தமிழில் இவர் பாடிய ‘வசீகரா’, ‘ஒன்றா ரெண்டா ஆசைகள்’, ‘யாரோ மனதிலே’ உள்ளிட்ட பல பாடல்கள் இன்றும் ரசிகர்களின் பேவரைட் ப்ளே லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், பாம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்திற்கு இசைக் கச்சேரி நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அங்கு எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம்ஏற்பட்டு ச…

  16. ஓர் இரவு, இரண்டு கோடி பணம்... தமிழ் சினிமாவின் 186-வது த்ரில்லர் படம்..! - 'போத' விமர்சனம் சுரேஷ் இயக்கிய 'போத' படத்தின் விமர்சனம் ஒரு நாள் இரவு, இரண்டு கோடி பணம், மூணு கார், நான்கு துப்பாக்கி, ஐந்தாறு கதாபாத்திரங்களென தமிழ் சினிமா தந்திருக்கும் 186-வது த்ரில்லர் படமே இந்த `போத'. சினிமாவில் பெரிய ஹீரோவாகும் லட்சியத்தோடு வாழ்ந்து வருகிறான, மணிகண்டன் (விக்கி). ஏ.வி.எம் உருண்டை, பிரசாத் லேப் என ஸ்டுடியோ ஸ்டுடியோவாக ஏறி இறங்கியும் வாய்ப்பு கிடைக்காமல் வாழ்க்கையை வெறுக்கிறான். அப்போது ஒரு குறும்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவன் சட்டையை பிடித்து இழுக்கிறது, அதேநேரத்தில் அதற்கு முப்பதாயிரம் பணமும் வேண…

  17. ஹீரோவாக நடிப்பதும், சினிமா தயாரிப்பதும் ரொம்பக் கஷ்டமான வேலை என்று பிரமிக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், அன்புத்தோழி படத்தின் புரட்சி நாயகனுமான தொல்.திருமாவளவன். தமிழ்ப் படங்களுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரி ஒரு காலத்தில் தீவிரமாகப் போராடியவர் திருமா. திரையுலகினருக்கு திருமாவும், ராமதாஸும் சிம்ம சொப்பனமாக விளங்கினார்கள். அதே சினிமாவில் திருமா நடிகராக களம் புகுந்தபோது அத்தனை பேரும் ஆச்சரியப்பட்டார்கள். அன்புத்தோழி படத்தில் புரட்சி வீரனாக நடித்துள்ளார் திருமா. நண்பர்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று நடிக்க வந்திருப்பதாகவும், இதுவே முதலும், கடைசியும் என்று அப்போது விளக்கினார் திருமா. நீண்ட இழுபறிக்குப் பின்னர் அன்பு…

  18. இப்ப வர்ற பாட்டெல்லாம் கேட்காதீங்க.. இளையராஜா தடாலடி ..! சேலம்: இப்போ வர்ற சினிமா பாட்டை கேட்காதீங்க.. பாரம்பரிய இசையை மீட்டெடுக்க வேண்டும் என்றால் திரையிசை பாடல்களை கேட்பதை நிறுத்த வேண்டும் என்று பிரபல இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். முன்பெல்லாம் இளையராஜா பொது விழாக்களில் கலந்து கொள்வது அரிது. எப்போதாவது மேடை கச்சேரிகள் செய்வார். அதற்கே ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்து வரும். ஆனால் சமீப காலமாகவே பல்வேறு நிகழ்ச்சிகளில் குறிப்பாக கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். சுவாரஸ்ய தகவல்கள் இன்றும்கூட சேலத்தில் ஒரு தனியார் கல்லூரி விழாவில் இளையராஜா பங்கேற்றார். அப்போது மாணவர்களிடையே அவர் பேசினார். தான் எப்படி முதன்முதலாக இசையமைக்க வந்தது…

  19. தமிழ் சினிமாவின் பரிணாமம்: வளர்ச்சியா? வீழ்ச்சியா? முதல் பகுதி பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கான எதிர்வினை என்பது என்னவாய் இருக்கக்கூடும்? கேள்விகளை கேட்பவர்களின் நடத்தையின் மீதோ, ஒழுக்கத்தின் மீதோ ஒரு சில எதிர் கேள்விகளை எழுப்பி, எதிராளியின் அறநிலையின் மீது ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துவதன் மூலம், உன்னுடைய கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டுமா? என்று தப்பித்துக் கொள்ளல், இல்லையெனில் கேள்வியே தவறு என்று எதிர் வினையாடல், அதுவும் இல்லையெனில், இதுதான் சமூகத்தின் வழக்கம் இப்படி இருப்பதால்தான் சம்ச்சீர்மை இருக்கிறது என்று பொய்யாய் ஒரு பதிலைச் சொல்லி ஒப்பேற்றுதல். பெரும்பாலான சமயங்களில் இதுவே எதிர் வினைகளாய் இருந்திருக்கின்றன. தன்னை ஒரு முறை மீண்டும் சுய பரிசோதனை செ…

    • 0 replies
    • 1.8k views
  20. விஜய், நயன்தாரா நடிக்கும் படம் 'வில்லு'. பிரபுதேவா இயக்கியுள்ள இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. படத்தை தணிக்கை குழுவினர் நேற்று முன்தினம் பார்த்தனர். சில காட்சிகளுக்கு கட் கொடுத்துவிட்டு யு/ஏ சர்டிபிகேட் வழங்கியுள்ளனர். இதில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் விஜய். -தினகரன் http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=470

    • 0 replies
    • 1.5k views
  21. கெத்தாக மீசை முறுக்கி இருக்கிறாரா ஆதி? - ‛மீசைய முறுக்கு’ விமர்சனம் இசையமைப்பாளரிலிருந்து கதாநாயகனாக மாறியிருக்கும் ‘ஹிப் ஹாப்’ ஆதி தன் பயோகிராஃபியையே ‘மீசைய முறுக்கு’ என்று படமாக்கியிருக்கிறார். வாழ்க்கை அனுபவங்களோடு, கொஞ்சம் கற்பனையையும் கலந்துகட்டி ஆதி முறுக்கும் மீசை கூர்மையாக இருக்கிறதா? மிடில் கிளாஸ் வீட்டுப் பையன் ஆதிக்கு ஒரு தம்பி, அம்மா, அப்பா என அழகான குடும்பம். கூச்சமும், பயந்த சுபாவமுமாய் திரியும் ஆதிக்கு இசை உயிர். அப்பாவின் நச்சரிப்புக்காகப் படித்தாலும், இசையில் சாதிக்கவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு ஓடுகிறார். இடையே ஹீரோயினுடன் காதலும், காதலால் பிரச்னையும் வருகிறது. கல்லூரி நண்பர்களுடனான ஜாலி மொமண்ட…

  22. தமிழ்நாட்டில் மட்டும் தான் நடிகைகளை தெய்வமாக மதிக்கின்றனர் - தமிழகத்தை பாராட்டிய தமன்னா [Monday, 2014-03-17 21:45:37] வீரம் படத்திற்கு பிறகு கோலிவுட்டில் தமன்னாவுக்கு படம் இல்லை. இருப்பினும், தெலுங்கில் ராஜமவுலி இயக்கி வரும் பாகுபாலி படத்தில் அனுஷ்காவுடன் இன்னொரு நாயகியாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இப்படத்தில் சிறிய கேரக்டருக்கு ஒப்பந்தமான தமன்னாவின் பர்பாமென்ஸ் தூக்கலாக இருந்ததால் பின்னர் அவருக்கான காட்சிகளை அதிகப்படுத்தி அனுஷ்காவுக்கு இணையாக மாற்றி விட்டார் டைரக்டர். இதனால், இப்படம் தெலுங்கில் தனக்கு அடுத்தடுத்து புதிய படங்களுக்கு வழிவகுக்கும் என்று உற்சாகத்துடன் நடித்து வரும் தமன்னாவுக்கு தாய்மொழியான இந்தியிலும் தற்போது இரண்டு படங்…

  23. திரிஷா திரிஷா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘சகலகலா வல்லவன்’. இதில் ஜெயம் ரவி, அஞ்சலி, சூரி, விவேக், பிரபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். சுராஜ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் ஜூலை 31ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் திரிஷா, அஞ்சலியுடன் இணைந்து நடித்திருக்கிறார். இது போல் எந்த நடிகையுடன் இணைந்து நடிக்க ஆசை என்று திரிஷாவிடம் கேட்டதற்கு, நயன்தாராவுடன் இணைந்து நடிக்க ஆசை என்று கூறியிருக்கிறார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ‘நயன்தாரா என்னுடைய நெருங்கிய தோழி. அவருடன் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஏற்கனவே, என்னையும் நயன்தாராவைவும் வைத்து பெண்களை மையப்படுத்தும் கதையம்சம் கொண்ட ஒரு படத்தை இயக்க வெங்கட் பிரபு மு…

    • 0 replies
    • 431 views
  24. [size=5]சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்- சகுனி முதலிடம்[/size] [size=4]5. தடையறத் தாக்க புதுப்படங்கள் எதுவும் பாக்ஸ் ஆஃபிஸ் பக்கமே தென்படவில்லை. தடையறத்தாக்க சென்ற வார இறுதியில் 84 ஆயிரங்களை மட்டும் வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. அப்படியானால் மற்றப் படங்களின் நிலையை யோசித்துப் பாருங்கள். இதுவரை சென்னையில் இப்படம் 50 லட்சங்களை வசூலித்துள்ளது. 4. முரட்டுக்காளை சென்ற வார இறுதியில் இப்படம் 1.8 லட்சங்களை வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இப்படம் இதுவரை வசூலித்துள்ளது 26 லட்சங்கள் மட்டுமே. 3. கலகலப்பு முரட்டுக்காளைக்கு அப்படியே உல்டா இந்தப் படம். சென்ற வார இறுதியில் 3.8 லட்சங்களை வசூலித்திருக்கும் இப்படம் இதுவரை சென்னையில் 6.3 கோடிகளை தனதாக…

  25. அம்மனுக்கு லீவு... பேய்க்கு ஓவர் டைம்! - ‘அரண்மனை-2’ விமர்சனம் ஆக்‌ஷனோ... ரொமான்ஸோ... பேய் படமோ.. எது எடுத்தாலும் எனக்கு அது காமெடி படம்தான் என்கிற சுந்தர்.சியின் செல்லுலாய்டு அரண்மனை. பயப்பட போனால் ஏமாற்றமும், சிரிக்க போனால் நிம்மதியும் கிடைக்கலாம். முதல் பாகம் ஹிட் என்பதால் கூடுதல் தைரியமும், குறைவான வேலையும் தேவைப்பட்டிருக்கிறது. ”ஆண்ட்ரியா நகரு நகரு... த்ரிஷா உட்காரும்மா.. ஹன்சிகா, நீ அப்படியே இரும்மா. வினய் ஸாரி... சித்தார்த் ஜி ஆவோ ஆவோ. சந்தானம் இல்லையா? அப்ப சூரி ஓகே!” - இவ்வளவுதான் மாற்றங்கள். அம்மன் சிலையை மறுபிரதிஷ்டை செய்ய கருவறையை விட்டு வெளியே எடுக்கிறார்கள். அந்த விடுமுறை நாளில் அம்மனுக்கு சக்தி இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.