வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
ரெடியாகும் சமந்தா சில மாதங்களுக்கு முன் பிரபல பின்னணி பாடகி சுசித்ரா பற்றி சமூக வலைதள சர்ச்சைகள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து இதில் பலரின் பெயரும் அடிபட்டது. இந்தச் சம்பவத்தை பிரதிபலிக்கும் வகையில், ராஜு காரி காதி- 2 திரைப்படத்தில், சமந்தா நடித்துள்ளாராம். பெண்களுக்கான பிரச்சினையை சமூகவலைதளங்களில் பார்த்து, இரசித்து, பரப்பிவிடுவோருக்கு மெசேஜ் சொல்லும் திரைப்படமாக இது இருக்கிறதாம். இம்மாதம் 6,7ஆம் திகதிகளில் திருமணம் செய்துகொண்ட சமந்தா, தன் அடுத்த வேலைகளை தொடங்கிவிட்டாராம். அத்தோடு மகாநதி திரைப்படத்தின் ஷூட்டிங்கிலும் இணைந்துவிட்டாராம். மேலும் மெர்சல் திரைப்படத்தின் …
-
- 0 replies
- 287 views
-
-
வீரபாண்டிய கட்டப்பொம்மன் http://video.google.com/videoplay?docid=-1747823027807698199
-
- 0 replies
- 710 views
-
-
நல்ல படம் மக்களே... ஆனா, கபாலியை கலாய்ச்சது ஏன்? - 'மதுரவீரன்' விமர்சனம் Chennai: சாதியைத் தூக்கிப்பிடித்துக் கொண்டாடும் மண்வாசனை சினிமாக்களுக்கு மத்தியில், 'இன்னும் எத்தனை நாளைக்குத்தான்யா இப்படி சண்டை போட்டுக்கிட்டே இருக்கப்போறீங்க?' என எழுந்திருக்கும் சமாதானக் குரல்தான், 'மதுரவீரன்'. சுத்துப்பட்டு கிராமங்கள் முழுவதும் மதிக்கும் மனிதர், சமுத்திரக்கனி. சாதிகளே வேண்டாம் எனவும், உழைப்பவனே முதலாளி எனவும் கருத்துரை பரப்பும் கருப்புச் சட்டை போட்ட கம்யூனிஸ்ட்காரர். சாதிகளால் பிளவுபட்டுக் கிடக்கும் ஊர்களை ஜல்லிக்கட்டால் இணைக்கமுடியும் என நம்புகிறார். அவரின் தீவிர முயற்சியால், ஜல்லிக்கட்டும் நடக்கிறது. ஆனால், நினைத்ததற்கு மாறாகப் பகை ம…
-
- 0 replies
- 262 views
-
-
நான்..ரஜினி..தனுஷ்: ஸ்ரேயா ரஜினி, தனுஷýடன் ஜோடி பெருமைப்படுகிறார் ஷ்ரேயா. ஒரே நேரத்தில் ரஜினி, அவரது மருமகன் தனுஷ் ஆகியோருடன் நடிப்பதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன். இது போன்ற வாய்ப்பு யாருக்கும் கிடைக்கும் என்று புளகாங்கிதப்படுகிறார் நடிகை ஷ்ரேயா. ரஜினி மிக மிக எளிமையானவர். சூப்பர் ஸ்டாருடன் நடிக்கிறோம் என நான் தான் பந்தா செய்து கொள்ள வேண்டும். அவரிடம் பந்தா எதுவும் இல்லை. சிவாஜி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம். படப்பிடிப்பு சமயங்களில் ஏகப்பட்ட அறிவுரைகளை சொல்வார். கஷ்டமான காட்சிகளிலும் தன்னுடைய ஸ்டைலில் அவர் நடிப்பதை பார்த்தது பிரமித்துவிட்டேன். சிவாஜி படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. இப்போது தனுஷூடன்…
-
- 0 replies
- 1.5k views
-
-
குழந்தைகளைக் கவரும் வகையில் அவர்களுக்காகவே தயாரித்த ஸ்டீபென் ஸ்பீல்பெர்க்கின் மற்றுமொரு மிகச் சிறந்த படம் "ஆர்ட்டிஃபிசியல் இண்டலிஜென்ஸ்". ஒரு அம்மாவுக்கும் - பத்து வயது மதிக்கத்தக்க இயந்திர மகனுக்கும் இடையே இருக்கும் பாசப்பிணைப்பைச் சொல்வதே இப்படம். ஒரு தம்பதியினர் டேவிட் என்ற இயந்திர மகனை ஒரு விஞ்ஞானியிடமிருந்து வாங்கி வீட்டிற்கு அழைத்துவருகின்றனர். டேவிட் என்ற மகனின் குணாதிசியங்கள் அம்மாவுக்கும் தந்தைக்கும் பாசத்தைக் காட்டும் படியே வடிவமைக்கப்பட்டிருக்கும். எப்போதும் அம்மாவிடம் பாசமாய் கொஞ்சி, பழகி, அம்மாவின் புன்னகை பார்த்து மகிழும் வண்ணம் டேவிட் வடிவமைக்கப்பட்டிருப்பான். டேவிட்டோடு பேசி நடக்கும் திறன் கொண்ட மற்றொரு சிறிய இயந்திர கரடி பொம்மையும் கூடவே இருக்கும் எ…
-
- 0 replies
- 501 views
-
-
கமர்ஷியல் கெட்ட வார்த்தையல்ல - விக்ரம் வெள்ளி, 28 செப்டம்பர் 2007( 16:58 IST ) Webdunia இப்போது விக்ரமுக்குள் வியாபித்திருக்கும் பாத்திரம் கந்தசாமி. 'பீமா'-வில் இருந்து மெல்ல விடுதலையாகி 'கந்தசாமி'க்குள் நுழைந்திருக்கிறார். இனி கந்தசாமியையும் விக்ரமையும் பிரிக்க முடியாது. பீமாவுக்காக உடல் கனத்து முறுக்கேற்றியவர் இப்போது கந்தசாமிக்காக இளைத்து இளமைக் களை கட்டியிருக்கிறார். இனி கந்தசாமி alias விக்ரமுடன்...! 'பீமா'விலிருந்து 'கந்தசாமி' எவ்விதத்தில் வேறுபடுகிறான்...? இரண்டு படங்களும் வேறுவேறு ரகம். இரண்டு நிறம், மணம், குணம் கொண்டது. இரு படங்களையும் ஒப்பிட முடியாது. ஒப்பிடவும் கூடாது. அந்த அளவுக்கு கதைக்களம் காட்சிக்கான தளம் எல்லாவற்றிலும் வே…
-
- 0 replies
- 1.1k views
-
-
சீமான் நடித்த ’மகிழ்ச்சி’ படத்தை இயக்கியவர் கௌதமன். இவர் இந்தப் படத்தை இயக்குவதற்கு முன்பு "சினிமாவுக்குப் போன சித்தாளு" என்ற ஜெயகாந்தனின் குறுநாவலை டெலிஃபிலிமாக எடுத்தவர். இந்த முயற்சிகளின் மூலம் வெளிச்சத்துக்கு வராத வ.கௌதமன் மக்கள் தொலைகாட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் "சந்தணக்காடு" மெகா தொலைகாட்சித் தொடரின் மூலம் புகழ் பெற்றார். சந்தண வீரப்பனின் வாழ்க்கையை இந்தத் தொடரில் அவர் மிகநேர்மையாகவும் துணிச்சலாகவும், காட்சிபடுத்தி வந்தார். தொலைக்காட்சிக்கு முன் தணிக்கை இல்லாத காரணத்தால் பல உண்மைகளை மறைக்காமல் இந்த சந்தணக்காடு தொடர் ஒளிபரப்பானது. இந்நிலையில் ஈழமக்களின் விடுதலையில் அக்ககறை கொண்ட உணர்வாளராக, இவர் மக்கள் போராட்ட மேடைகளிலும் பிரபல்யமாகி வருகிற…
-
- 0 replies
- 896 views
-
-
இசையுடன் ஸ்காலர்ஷிப்பும் தருகிறார் ரஹ்மான் -சென்னையில் ஒரு (இசை)மழைக்காலம்! இசை உலகத்திற்கு இயற்கை தந்த பரிசாகவே கருதப்படுகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். உலகம் முழுக்க கிளை பரப்பியிருந்தாலும், தனது வேர்களை தமிழ்நாட்டில் பரவ விடுவதில் சந்தோஷம் காண்பவர் அவர். அதன் இன்னொரு வடிவமாக ஒரு மாபெரும் இசைப்பள்ளியை சென்னையில் நிறுவியிருக்கிறார் ரஹ்மான். இதுபற்றி பகிர்ந்து கொள்ள பத்திரிகையாளர்களை சந்தித்தார். கே.எம் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த பள்ளி துவங்கும் முன்பாகவே 150 மாணவர்கள் சேர்ந்துவிட்டார்களாம். அதென்ன கே.எம்? இதற்கு அர்த்தம் இல்லை. ஸ்பிரிச்சுவலா இப்படி ஒரு பெயரை வைத்திருக்கிறேன் என்கிறார் புன்முறுவலோடு. முழுக்க முழுக்க இசையின் மேலுள்ள காதலாலும், அன்பினாலும்தான் இந…
-
- 0 replies
- 719 views
-
-
ஏறத்தாழ நாற்பது வயதாவது இருக்கும் நதியாவுக்கு. இப்போதும் நதியில் குளித்த மலர் போல ஜில்லென்று இருக்கிறார் அவர். மிகப்பெரிய சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றுகிறார் நதியாவின் கணவர். இரண்டு பெண் குழந்தைகள். வேண்டாம் வேண்டாம் என்று விலகினாலும், இந்த கேரக்டரில் நீங்கதான் நடிக்கணும் என்று பழியாக கிடக்கிறார்கள் இயக்குனர்கள். சென்னைக்கு வாரா வாரம் வந்து போக பிளைட். தங்குவதற்கு ஸ்டார் ஹோட்டல் என்று ஹீரோயின்களுக்கு இணையாக மதிக்கப்படும் நதியா, போடுகிற கண்டிஷன்கள் சில. அதில் முக்கியமானது கட்டிப்பிடிப்பது, ஆடை குறைப்பு இதெல்லாம் நஹி. எல்லாவற்றையும் விட, மாலை ஏழு மணிக்கு மேல் கதவை தட்டி, “எல்லா வசதியும் முறையாக இருக்கா. ஹிஹி...” என்று விசாரிக்கும் இயக்குனரோ, தயாரிப்பாளரோ இருந்தால், அடு…
-
- 0 replies
- 926 views
-
-
நடிகர் சத்யராஜ் ரஜினி தன் மிகச்சிறந்த நண்பர் என்று கூறியுள்ளார்.ஓகேனக்கல் உண்ணாவிரதத்தின்போது சத்யராஜ் ஆற்றிய உரை நேரடியாக ரஜினியைத் தாக்குவதுபோலவே அமைந்திருந்தது. ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான உண்ணாவிரத மேடையில் ரஜினியைப் பாராட்டிப் பேசியது போல இருந்தது. பெரியார் வலைக்காட்சியின் முதலாமாண்டு நிறைவையொட்டி சத்யராஜ் வழங்கிய சிறப்புச் செவ்வியில் இது குறித்து உண்மையில் ரஜினி பற்றிய உங்கள் கருத்து என்ன? எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு சத்யராஜ் பதிலளிக்கையில், உண்மையில் ரஜினி சார் என்னுடைய நெருங்கிய நண்பர். என் மீது மிகவும் அக்கறை கொண்டவர்.ஓகேனக்கல் உண்ணாவிரதத்தின்போது நான் ரஜினியை திட்டிப் பேசவில்லை. கர்நாடகத் தமிழர்கள் பிரச்சினையில் அவர் கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டாரோ வ…
-
- 0 replies
- 1.6k views
-
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் அமெஸான் பிரைமில் வெளியாகியிருக்கும் "புத்தம் புது காலை", ஐந்து குறும்படங்களின் தொகுப்பு. கொரோனா ஊரடங்கின் பின்னணியில் பாஸிட்டிவான உணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட படங்கள் இவை. பட மூலாதாரம், PUTHAMPUTHUKALAI படக்குறிப்பு, இளமை இதே இதோ பட காட்சி முதல் படம் சுதா கோங்கரா இயக்கியிருக்கும் 'இளமை இதோ, இதோ'. மனைவியை இழந்த ஒரு ஆணுக்கும் கணவனை இழந்த பெண்ணும் இடையிலான காதலே இந்தப் படத்தின் கதை. இருவருக்கும் வளர்ந்த குழந்தைகள் இருந்தாலும், இளம் காதலர்களைப் …
-
- 0 replies
- 365 views
-
-
குண்டான கீர்த்திசுரேஷ் பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறை மகாநதி என்ற பெயரில் திரைப்படமாக தெலுங்கில் எடுத்து வருகின்றனர். தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்டு தமிழ், மலையாளத்தில் டப் செய்யப்பட்டு ஒரே நாளில் மூன்று மொழிகளில் “மகாநதி” திரைப்படம் வெளியாக உள்ளது. மகாநதி திரைப்படத்தில் சாவித்திரியாக நடிப்பவர் கீர்த்தி சுரேஷ். சாவித்ரியைத் திருமணம் செய்த ஜெமினி கணேசனின் பாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். சாவித்திரியிடம் பேட்டி எடுப்பதன் மூலம் அவரது கடந்த காலத்தை ப்ளாஷ்பேக்கில் கொண்டு வருவதற்கு உதவும் ரிப்போர்ட்டர் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். சாவித்ரியின் இளமைக்காலக் காட்சிகளில் தற்போது கீர்த்…
-
- 0 replies
- 344 views
-
-
இந்தி(ய) சினிமா..லாலும் வருத்தம் இந்தி சினிமா தான் இந்திய சினிமாவா, இந்தியை விட நல்ல படங்களைத் தரும் தென்னிந்திய சினிமா இந்திய சினிமா இல்லையா என்று துபாயில் இந்திக்காரக்கள் நிறைந்த சபையில் குரல் கொடுத்த கேரள சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்கு இன்னொரு கேரள நடிகரான மோகன் லால் முழு ஆதரவு தந்துள்ளார். சமீபத்தில் துபாயில் சர்வதேச இந்திய திரைப்பட விழா என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. வழக்கமாக இதில் இந்திப் படங்கள் மட்டுமே திரையிடுவார்கள். பெயரில்தான் இந்தியா இருக்கும். ஆனால் விழாவில் முழுக்க முழுக்க இந்திப் படங்கள் மட்டுமே திரையிடப்படும். ஆனால், வளைகுடாவில் பெருவாரியாக வசிக்கும் மøலாயாளிகள், தமிழர்களிடம் பணம் வசூல் பண்ண நினைத்த விழா அமைப்பாளர்கள் இம்முறை வழ…
-
- 0 replies
- 835 views
-
-
பொருத்தமான கதை அமைந்தால் நடிகர் அஜீத்துடன் இணைந்து நடிப்பேன் என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் போக்கிரி படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கு உரிமையாளருக்கு நினைவுப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் விஜய் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனது அடுத்த படம் அழகிய தமிழ் மகன். இந்தப் படத்தை இயக்குநர் தரணியிடம் உதவியாளர் இருந்த பரதன் இயக்குகிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும். இதில் ஸ்ரேயா, நமீதா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இந்தப் படம் போக்கிரி படத்தில் இருந்து மாறுபட்டு இருக்கும். ரீமேக் படங்களை நான் தேர்வு செய்து நடிப்பதில்லை. அதுவாக அமைந்து விடுகிறத…
-
- 0 replies
- 707 views
-
-
பட மூலாதாரம்,SIXTH SENSE PUBLICATIONS கட்டுரை தகவல் எழுதியவர்,விக்ரம் ரவிசங்கர் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் நான்கு முழ வேட்டியும், மேல்சட்டை அணியா வெற்று உடம்புமாக, அரைகுறை ஆங்கிலத்தோடும், அடித்து வீசும் வார்த்தைகளோடும் எத்தனையோ நடிகர்களையும் கையாண்டவர். மருதமலை முருகன், எம்.ஜி.ஆர், விலங்குகள் - இவை மூன்றும்தான் திரையுலகில் அவரது முதலீடு. யாரும் எளிதில் நெருங்கிப் பழகிட முடியாத எம்.ஜி.ஆர்., விடாமல் இறுதிவரை பாராட்டிய ஆச்சர்யத்துக்குரிய நட்புக்குச் சொந்தக்காரர் சாண்டோ சின்னப்பா தேவர். முகம் காட்ட முடியாத சிறு சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கி, தயாரிப்பாளராக உயர்ந்…
-
- 0 replies
- 562 views
- 1 follower
-
-
இணையத்தைக் கலக்கும் இளையராஜாவின் இசை முன்னோட்டம்! இன்றைய தேதிக்கு இணையதளங்களில் பல ஆயிரம் முறை பகிரப்பட்ட, பார்த்து ரசிக்கப்பட்ட, ஆசை தீர பாராட்டி எழுதிக் கொண்டாடப்படும் இசைக் கோர்வை நீதானே என் பொன்வசந்தம்தான்! லண்டன் ஸ்டுடியோவில் புகழ்பெற்ற சிம்பொனி இசைக் கலைஞர்கள் மற்றும் தனது குழுவினர் 108 பேருடன் இளையராஜா நடத்திய இசை ராஜாங்கத்துக்கு ஒரு சாம்பிளாக இந்த இசைக் கோர்வையை நீதானே என் பொன்வசந்தம் இயக்குநரும் தயாரிப்பாளரும் வெளியிட்டுள்ளனர். ஒரு நிமிடத்துக்கும் குறைவாக ஒலிக்கும் இந்த இசைக் கோர்வை, இசைஞானியின் புதிய இசைப் பரிமாணத்தைக் காட்டுவதாக உள்ளது. இதுபோன்று இன்னும் சில இசைக் கோர்வைகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை…
-
- 0 replies
- 705 views
-
-
பிரபுதேவா டைரக்ஷனில் ‘வில்லு’ படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து பாபுசிவன் இயக்கும் ‘வேட்டைக்காரன்’ படத்தில் நடிக்கிறார். இதையடுத்து விஜய்யின் 50-வது படம் உருவாகிறது. இதை எஸ்.ஏ.சந்திரசேகரனின் வி.வி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. அப்படத்தை இயக்க மூன்று டைரக்டர்களின் பெயர் பரிசீலனையில் இருக்கிறது. அவர்கள் பிரபுதேவா, ஹரி, ‘ஜெயம்’ எம்.ராஜா. http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=314
-
- 0 replies
- 1k views
-
-
கோயிலில் அர்ச்சகராக இருக்கும் சிம்பு, அம்மாஞ்சி அம்பி. பருப்பு சாதம் சாப்பிடும் அம்பி, ஒரு கட்டத்தில் ரௌடிகளைக் கொத்து பரோட்டா போடும் சூழல் வருகிறது. 'என்னமோமேட் டருப்பா' என யோசிக்கும்போதே, ஜெயிலில் இருந்து ரிலீஸான பிரபு, சிம்புவைத் தேடி வருகிறார். அங்கே விரிகிறது இன்னொரு சிம்புவுக்கான வீர ஃப்ளாஷ்பேக். பங்காளிச் சண்டையில்ஃப்ளாஷ் பேக் முடிவில் சிம்பு உயிரை விடுகிறார். அதிரடி சிம்புவுக்கும் இந்த அம்மாஞ்சி சிம்புவுக்கும் என்ன தொடர்பு என்பதை ரத்தம், சத்தம், ஆபாசம் தெறிக்கச் சொல்லும் ஆட்டம்! ஐயர் சிம்பு யார் என்பதில் சஸ்பென்ஸ் வளர்த்துக்கொண்டே சென்று, படாரென்று உண்மையை உடைக்கும் இடத்தில் நிமிர்ந்து உட்காரவைக்கிறார் அறிமுக இயக்குநர் சரவணன். மகா மெகா மைனஸ்... நெளியவைக…
-
- 0 replies
- 1.4k views
-
-
திரை விமர்சனம்: ரெமோ ஒரு இளைஞன், ஒரு பெண்ணைத் துரத்தித் துரத்திக் காதலிக்கவைக்கும் அதே கதைதான். நாயகனின் பெண் வேடமும் காதலுக்கு உதவுகிறது என்பது ‘ரெமோ’ காட்டும் வித்தியாசம். நாயகன் சிவா (சிவகார்த்திகேயன்), பெரிய நடிகனாகும் கனவுகளுடன் இருக்கும் வெட்டி ஆபீஸர். காவ்யா (கீர்த்தி சுரேஷ்) தனியார் மருத்துவமனையில் டாக்டர். சிவாவுக்கு கீர்த்தியைப் பார்த்ததும் (வழக்கம்போல) காதல் பற்றிக்கொள்கிறது. ஆனால், அவருக்கு நிச்சயம் ஆகிவிட்டது தெரிந்ததும் நொந்துபோகிறார். நடிப்புக்கான தேர்வுக்காக சிவா பெண் வேடமிட வேண்டியிருக்கிறது. நர்ஸாக வேடமிட்டிருக்கையில் தற்செயலாகச் சந்திக்கும் கீர்த்தியுடன் நட்பு கிடைக்கிறது. அந்த நட்பைப் பயன…
-
- 0 replies
- 342 views
-
-
@teakkadai1 என்னும் முரளிக்கண்ணன் பதிவு. கே எஸ் அதியமான் இயக்கத்தில் ரகுவரன், ரேவதி, கார்த்திக் நடிப்பில் தொட்டாச்சிணுங்கி படம் வந்து வெற்றி பெற்றிருந்த நேரம். அதை இந்தியில் தயாரிக்கப் போவதாக செய்தி வந்திருந்தது. நான் அப்போது தங்கியிருந்த மேன்ஷனில் இருந்த உதவி இயக்குநர் ஒருவர் இன்னொருவரிடம் கேட்டார் “ரகுவரன் ரோல அங்க யாரு பண்ணப்போறா?”. உடனே அங்கே ஒரு மௌனம் நிலவியது. அங்குதான் ஏகப்பட்ட நல்ல நடிகர்கள் இருக்கிறார்களே, இந்த வேடத்தை பண்ண மாட்டார்களா? என்ன? என்று நான் யோசித்தேன். ஒரு கணவன், தன் மனைவி தன்னை மட்டுமே நாயகனாக ஆராதிக்க வேண்டும், அன்பைப் பொழிய வேண்டும் என்று நினைக்கிறான். மனைவியோ ஒரு பாடகனிடம் தாய்மை அன்பு செலுத்துகிறாள். கணவன் இதனால் மனைவி…
-
- 0 replies
- 679 views
-
-
இனமான தமிழ் திரைப்பட இயக்குனர்களில் சிறந்து விளங்கியவர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மணிவண்ணன். இவர் இன்று சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பகல் 12 மணி அளவில் திடீர் மாரப்டைப்பால் மரணம் அடைந்தார். நெசப்பாக்கத்தில் உள்ள அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15895:mani-died-political-leaders,-actors,-actresses-tribute-150-pics&catid=39:cinema&Itemid=107
-
- 0 replies
- 955 views
-
-
சென்னை: பாடலாசிரியர் சினேகன் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். இளையராஜா இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு ராஜராஜனின் போர்வாள் எனப் பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்துக்கான ட்யூன்களை மக்கள் முன்னிலையிலேயே மெட்டமைக்கப் போகிறார் இசைஞானி. ‘யோகி' படத்தில் அமீருடன் நடிகராக அறிமுகமானார் சினேகன். அடுத்து பாரதிராஜாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பிரேம்நாத் இயக்கிய ‘உயர்திரு 420' என்ற படத்தில் நடித்தார். இப்படம் அவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைத் தேடித் தரவில்லை.இந்நிலையில், மீண்டும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு சினேகனுக்கு கிடைத்துள்ளது.ஆர்.எஸ்.அமுதேஷ்வர் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார். ‘இராஜராஜ சோழனின் போர்வாள்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு இளையர…
-
- 0 replies
- 705 views
-
-
ஈழத்து கலைஞர்களின் கூட்டுத்தயாரிப்பில் "உயிர்வரை இனித்தாய்" முழுநீளத் திரைப்படம் தயாராகிவருகிறது. அதன் முதற் கட்டமாக திரைப்படத்தின் பாடல் முன்னோட்ட கட்சி வெளியிடப்பட்டுள்ளது. உலகத்தமிழரை ஒன்றிணைக்கும் காதல், காமடி கலந்த புத்தம் புதுப்படைப்பாக வெளிவரவிருக்கும் "உயிர்வரை இனித்தாய்" திரைப்படம் டென்மார்க்கைச்சேர்ந்த மூத்தகலைஞர் கே.எஸ்.துரை அவர்களின் இயக்கத்தில், தென்னிந்திய திரைப்படம் மற்றும் பாடல்கள் மூலமாக பிரபல்யமான ஈழத்து கலைஞன் வசந்த் செல்லத்துரை, நர்வினிதேரி ரவிஷங்கர் மற்றும் பலரின் நடிப்பிலும், அவதாரம் குழுமத்தின் டேசுபன் அவர்களின் பிரதான ஒளிபதிவிலும் சுரேந்த் புவனராஜா மற்றும் அஜிந்த் ஆகியோரின் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவிலும், வசந்த் செல்லத்துரை அவர்களின் இசை மற்றும் ப…
-
- 0 replies
- 513 views
-
-
தப்பு தண்டா திரை விமர்சனம் சினிமாவில் இப்போதிருக்கும் சூழ்நிலையில் படம் வெளிவருவது என்பதே பெரிய விசயமே. தேதி கிடைத்தாலும் போட்டியிருக்குமா எனும் கேள்வியும் இருக்கும். இதிலும் சில தவறுகள் நடந்தேறும். பெரிதளவில் போட்டியில்லை எனினும் படத்தின் வெற்றி, கதை மற்றும் வழங்கக்கூடிய விதத்தில் தான் இருக்கிறது. கதைக்களம் படத்தின் ஆரம்பமே கொலையில் தான். ஊரில் எக்ஸ் எம்.எல்.ஏவாக மைம் கோபி நடித்திருக்கிறார். இவரிடம் வேலை செய்யும் டிரைவர் காளியாவின் நண்பனாக வருகிறார் ஹீரோ. ஜான் விஜய் தனக்கென ஒரு கேங்கை வைத்துகொண்டு தன் சீடர்கள் மூலம் சம்பாதித்து வருகிறார். வேலைக்காக இந்த கும்பலோடு கூட்டு சேர்கிறார் ஹீரோ சத்யமூர்த்…
-
- 0 replies
- 866 views
-
-
காலிவுட்டில் அசின் போல 'சோப்பு'ப் போடுவதில் யாரும் கிடையாது என்கிறார்கள். மலபார் மல்லியான அசின், ஆள் பார்த்துப் பழகுவதில் அசத்தல் பார்ட்டியாம். அதாவது தனக்கு காரியம் ஆக வேண்டும் என்றால், யாரைப் பிடித்தால் காரியம் ஆகும் என்பதில் கில்லி போல சொல்லி அடிப்பாராம். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் மட்டுமே இப்போதைக்கு அசின் ஆர்வம் காட்டுகிறார். மலையாளத்தை இப்போதைக்கு பெரிதாக அவர் கண்டுகொள்வதில்லை. காரணம் இந்த இரு மொழிகளில் மட்டுமே நல்ல டப்பும், தனி ஆவர்த்தனம் செய்ய பெரிய அளவில் வாய்ப்புகளும் கிடைப்பதால். இரு மொழிகளிலும் முன்னணியில் உள்ள இளம் ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பது என்பதும் அசினின் கொள்கை முடிவாம். கமல் போன்ற ஒரு சில மூத்த ஹீரோக்களுக்கு மட்டும் விதி…
-
- 0 replies
- 790 views
-