வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
அசின் அளவுக்கு கிளாமராக நடிப்பேன் என்றார் பூனம் பஜ்வா.தெனாவட்டு ஹீரோயின் பூனம் பஜ்வா கூறியதாவது:தெலுங்கில் 4, கன்னடத்தில் ஒன்று என 5 படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் நடித்த தெனாவட்டுதான் நான் நடித்து கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற்ற படம். எனது சொந்த ஊர் புனே. ஆனாலும் தென்னிந்திய படங்களில் குறிப்பாக தமிழில் பிரபலமாக வேண்டும் என்பதுதான் ஆசை. ஹீரோவுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள்தான் தமிழில் அதிகம் என்பதை புரிந்திருக்கிறேன். எல்லா ஹீரோக்களுடனும் நான் நடிப்பேன். அதேநேரம் நடிப்பை வெளிப்படுத்தும் படங்களுக்கும், ஹீரோயினை மையமாக வைத்த கதைகளுக்கும் முன்னுரிமை தருவேன்.¨ நீங்கள் கிளாமராக நடிப்பீர்களா? என்கிறார்கள். கிளாமராக நடிக்கும் நடிகைகளை பற்றி நான் விமர்சிக்க …
-
- 0 replies
- 1k views
-
-
திரை விமர்சனம்: றெக்க மாறுபட்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துவரும் விஜய் சேதுபதி, முதல் முறையாக மசாலா தூக்கலாக உள்ள ஒரு கதையைத் தேர்ந்தெடுத் திருக்கிறார். மசாலா படங்களுக்கெனவே ஆகி வந்த 2 வில்லன்களின் பகையோடு கதை தொடங்குகிறது. டேவிட் (ஹரிஷ் உத்தமன்) - செழியன் (கபீர் சிங்) இடையே தொழில் பகை. காதலர்களைச் சேர்த்துவைக்கும் சிவா (விஜய் சேதுபதி) இவர்களுக்கு இடையில் வருகிறார். எதிர்பாராத சூழ்நிலையில் டேவிட்டிடம் சிக்கிக் கொள்ளும் சிவா, அதிலிருந்து மீள, அவனுக்காக அமைச்சரின் மகள் அஞ்சலியை (லட்சுமி மேனன்) கடத்திக் கொண்டு வர ஒப்புக்கொள்கிறார். அவரால் கடத்தி வரமுடிந்ததா, காதலர்களைச் சேர்த்துவைக்க அவர் காட்டும் ஆர்வத்தின் பின்னணி என…
-
- 0 replies
- 442 views
-
-
நடிகை பூஜாவுக்கு, தொழில் அதிபருடன் ரகசிய திருமணம். சென்னை: நடிகை பூஜாவுக்கு ரகசியமாக திருமணம் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜே ஜே படம் மூலம் கோலிவுட் வந்தவர் இலங்கையை சேர்ந்த நடிகை பூஜா. அவரது தாய் இலங்கையை சேர்ந்தவர், தந்தை கர்நாடகாவை சேர்ந்தவர். பெங்களூரில் படித்த பூஜா தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, சிங்கள மொழிப் படங்களில் நடித்து வந்தார்.அவருக்கும் இலங்கையை சேர்ந்த தொழில் அதிபர் தீபக் சண்முகநாதனுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் தங்களுக்குள் ஒத்துப் போகாது என்று கூறி பிரிந்துவிட்டனர். இந்நிலைில் பூஜாவுக்கும், தீபக்கிற்கும் கொழும்புவில் ரகசியமாக திருமணம் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பூஜா தமிழில…
-
- 0 replies
- 592 views
-
-
ம.கா.செந்தில்குமார் ''அடங்கப்பா... என் விரதத்தை விகடன் கலைச்சுப்பிடுச்சே!'' - கலகலவெனச் சிரிக்கிறார் கவுண்டமணி. 'பேட்டி’ என்றாலே விலகிச்செல்லும் அல்லது விரட்டிவிடும் நம்ம கவுண்டரேதான். ''ஒரு ஃப்ரெண்டா வா... ரசிகனா வா... எவ்வளவு நேரம் வேணும்னாலும் எது வேணும்னாலும் பேசலாம். ஆனா, பத்திரிகைக்காரனா வராத!'' என்று அன்பாக அதட்டும் அதே கவுண்டமணி. 'இதுக்குத்தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்கிறது’ முதல் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ வரை சாகாவரம் பெற்ற பன்ச்களின் நாயகன் இதோ என் முன் அமர்ந்திருக்கிறார். பல மாதத் துரத்தல், வற்புறுத்தல், ஏகப்பட்ட உரையாடல்களுக்குப் பிறகு நிகழ்ந்த பேட்டி இது. அரியலூர் அருகே அங்கராயநல்லூர் கிராமத்தின் '49ஓ’ படத்தின் படப்பிடிப்பு இடைவே…
-
- 0 replies
- 2.1k views
-
-
ஒப்பற்ற கலைஞர் ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதா பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய தகவல்கள்.
-
- 0 replies
- 231 views
-
-
சினிமாவில் 14 வருடங்களை நிறைவு செய்த நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிசியாக நடித்து வரும் நயன்தாரா தனது திரையுலக பயணத்தில் 14 வருடங்களை நிறைவு செய்திருக்கிறார். சரத்குமார் நடித்த ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நயன்தாரா. ஹரி இயக்கிய இந்த படம் வெற்றி பெற்றதால் ராசியான நடிகை ஆனார். ஆரம்பத்தில் ஒருசில தமிழ் படங்களில் நடித்த இவர், குறுகிய காலத்தில் முன்னணி இடத்தை பிடித்தார். ‘சந்திரமுகி’ படத்தில் ரஜினி ஜோடி ஆனார். குசே…
-
- 0 replies
- 229 views
-
-
எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான எச்ஐவி வைரஸôல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதியுதவி செய்வதற்காக இனி விளம்பரப் படங்களில் நடிக்கப் போவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். எச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்த ஊடக கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழக அரசின் 5 கோடி நிதியுடன் ""எச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான தமிழ்நாடு அறக்கட்டளை'' ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது. இத்தகைய குழந்தைகளுக்கு மேலும் உதவ "பாப்புலேஷன் சர்வீஸஸ் இண்டர்நேஷனல்' (பிஎஸ்ஐ) என்ற தன்னார்வ அமைப்பு நிதி திரட்டும் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சியை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், பிஎஸ்ஐ, "ச…
-
- 0 replies
- 722 views
-
-
தலைசிறந்த கலைப்படைப்புக்களைத் தந்தவர்களுடனும், புகழ்மிகுந்த பெரும் கலைஞர்களுடனும் மனிதர்களுடனும் பழகும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அவர்களது படைப்பும் பிரபலமும் செயற்பாடும் கவர்ச்சியும் தரும் பிம்பத்தை அவர்களின் ‘மனவறுமை’ பெரும்பான்மையான இடங்களில் சிதறடித்திருக்கிறது. இன்னொரு மனிதரை வருத்தும் அல்லது அடிப்படை அறம், மனிதநேயமின்றி நடந்துகொள்ளும் மனிதர்களுடன் எனது மனம் ஒட்டுவதில்லை. ஆகக்குறைந்தது தவறை உணர்ந்து வருந்தாது ஞானச்செருக்குடன் அலையும் மனிதர்களிடத்தே ஒருவித வெறுப்பே உருவாகிறது. சில மனிதர்களது நல்நினைவுகள் மனதில் படிந்துவிடும். காலம் அவர்களை அழைத்துக்கொண்ட பின்னும் அந்நினைவுகளின் ஈரலிப்பும் கதகதப்பும் மனதைப் பல நேரங்களில் ஆற்றுப்படுத்தும். சில மனிதர்களின்…
-
- 0 replies
- 276 views
- 1 follower
-
-
வில்லு படத்தின் ஷ•ட்டிங் அங்கே நடைபெறும் நாளில் இருந்தே, தகவல்களுக்கு பஞ்சமில்லை. நயன்தாரா, விஜய் இருவரும் ஜாலி டூயட் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் ஒருபக்கம். ஆனால் டயலாக் பேசி நடிக்க வேண்டிய பிரகாஷ்ராஜ், டயர்டாகி திரும்பிவிட்டார் இன்னொரு பக்கம். காரணம்? வைகைப்புயல்... பாடல் கட்சிகள் மட்டுமல்ல, படத்தில் இடம் பெறும் வசனக்காட்சிகளையும் அங்கு எடுக்க திட்டமிட்டிருந்த இயக்குனர் பிரபுதேவா, நாயகன், நாயகி, மற்றும் பிரகாஷ்ராஜ், ஸ்ரீமன் ஆகியோருடன் ஸ்விட்சர்லாந்து போய்விட்டார். இவர்களுடன் பிளைட் ஏற வேண்டிய வடிவேலு மட்டும், கடைசி நேரம் வரைக்கும் ஏர்போர்ட்டுக்கு வரவேயில்லை. அடுத்த பிளைட்டில் வந்து சேர்வார் என்று நம்பி பிளைட் ஏறிய யூனிட்டிற்கு அதிர்ச்சி. அடுத்தடுத்த பிளைட்டுகள் ஸ்விட…
-
- 0 replies
- 997 views
-
-
ஒன்பது படங்கள்.. ஓஹோன்னு புகழ் என இருக்கறவர் நம்ம சிவகார்த்திகேயன். பொது இடங்கள்ல அவரோட பணிவான பேச்சுக்கும், படங்கள்ல செம க்ரியேட்டிவா அவர் அடிக்கற கவுன்ட்டர் கமென்ட்டுக்கும் ரசிகர்கள் லைக்ஸ் கொட்டிட்டே இருக்காங்க. அவரோட அடுத்த படம் ‘ரெமோ’. மோஷன் போஸ்டர் ரிலீஸ் விழாவே ‘ஆஹா’ என்று கவனிக்க வைத்தது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நர்ஸ் வேடம். ‘என்னது பெண் வேடத்தில் நடிக்கிறாரா’ என்று பார்த்தால் கூடவே செம ஸ்டைலிஷாகவும் ஒரு ஸ்டில் வெளியானது. உடனே றெக்கை கட்டிக் கொண்டது பரபரப்பு. ஒரு ஹீரோ பெண் வேஷம் போட்டா கதை எப்படி இருக்கும்னு நாலைஞ்சு டெம்ப்ளேட் இருக்குமே... அதுக்குள்ள ஒண்ணுதான் படத்தின் கதைனு கோடம்பாக்க தகவல்.அதோட சேர்த்து நம் பங்குக்கு கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டோ…
-
- 0 replies
- 531 views
-
-
அழகழகாக கொடுத்த முத்தங்கள் இடம் பெற்ற காட்சிகளை தயவு செய்து படத்தில் சேர்க்காதீர்கள், அதை கட் செய்து விடுங்கள் என மிட்டாய் பட இயக்குநரிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறாராம் அப்படத்து நாயகி மாயா உண்ணி. இதென்ன கலாட்டா என்கிறீர்களா. தொடர்ந்து படியுங்கள். கேரளத்து அழகி மாயா உண்ணி, தமிழுக்கு வந்துள்ளார் மிட்டாய் படம் மூலம். முதல் படம் என்பதால் கவர்ச்சியில் சற்றும் வஞ்சம் வைக்கவில்லை மாயா. படத்தில் முத்தக் காட்சியும் இடம் பெறுகிறது. இதற்காக ஹீரோவுக்கு அழகழகாக முத்தம் கொடுத்து நடித்துள்ளார் மாயா. இது அவரது வீட்டுக்குத் தெரிய வரவே, என்ன கொடுமை மாயா இது என்று கோபமாகி விட்டார்களாம். இதெல்லாம் கூடாது, இப்படியெல்லாம் நடிக்க வேண்டும் என்றால் நீ நடிக்கவே வேண்டாம் எ…
-
- 0 replies
- 1.7k views
-
-
டைரக்டர் களஞ்சியம் ஊர் சுற்றி புராணம் என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இந்த படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடித்து வந்தார். அப்போதுதான் அவர் திடீரென்று வீட்டை விட்டு வெளியேறினார். இதுநாள் வரை அவர் அம்மா என்று அழைத்து வந்த பாரதி தேவி தனது அம்மா அல்ல, சித்தி என்றும், வீட்டில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும் பரபரப்பான தகவல்களை அஞ்சலி வெளியிட்டார். இதனால், ஊர் சுற்றி புராணம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அஞ்சலி நடிக்க வராததால் தனது படப்பிடிப்பு பாதிப்பட்டிருப்பதாக டைரக்டர்கள் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் களஞ்சியம் புகார் செய்தார். இந்த நிலையில், அஞ்சலி சில நாட்கள் ஐதராபாத்தில் தலைமறைவாக வாழ்ந்தார். பின்னர் அவர், புனேயில் நடந்த ஒரு தெலுங்கு படப்பிடிப்பில் கலந்து க…
-
- 0 replies
- 530 views
-
-
நடிகை குஷ்புவை தன்னுடைய காதலுக்கு தூது போகும்படி கேட்டுள்ளாராம் சிம்பு. வயசு வித்தியாசம் பார்க்காமல் பிரண்ட்லியாக பழகுவது குஷ்புவுக்கு கைவந்த கலை. ஒருபுறம் அரசியலில் பிசியாக இருந்தாலும் கோடம்பாக்க நண்பர்களுக்கு தினமும் ஒரு முறையாவது ஹலோ சொல்ல யோசிப்பதேயில்லை அவர். சமீபத்தில் கூட ஹன்சிகா மோத்வானியை தன் வீட்டுக்கு வரவழைத்து ஆசி வழங்கி அனுப்பியுள்ளார். ஹன்சிகாவுக்கும் குஷ்புவுக்கும் இருக்கிற நட்பை மனதில் கொண்டு அண்மையில் குஷ்புவை சந்தித்தாராம் சிம்பு. ஐந்து வருடம் கழித்து கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்கிறா. நீங்கதான் எப்படியாவது அவளை கன்வின்ஸ் பண்ணணும் என்றாராம். சிம்புவுக்காக இப்போது பெரிய ஹன்சிகா தூது போக ஆரம்பித்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.http://gold…
-
- 0 replies
- 403 views
-
-
"காற்றின் மொழி"யில் பேச தயாராகும் ஜோதிகா 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார் என தொடர்ந்து 3 வெற்றிப்படங்களைக் கொடுத்து முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கும் ஜோதிகா நடிக்கும் புதிய படத்திற்கு "காற்றின் மொழி" என்று பெயரிடப்பட்டிருக்கிறது. பயணம், கௌரவம், உப்புக்கருவாடு, பிருந்தாவனம் என வரிசையாக தோல்விப்படங்களை கொடுத்த இயக்குநர் ராதா மோகன் மீண்டும் ஜோதிகாவுடன் இணைந்து பணியாற்றும் படம் தான் காற்றின் மொழி. ஹிந்தியில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற "துமாரி சுலு" என்ற படத்தை "காற்றின் மொழி" என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்து வெற்றிப் பெறவேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார் ராதா மோகன். இந்த படத்தில் ஜோதிகா கதையின் நாயகியாகவ…
-
- 0 replies
- 391 views
-
-
'வாளமீன்' பாடல் புகழ் மாளவிகா விரைவில் தன் காதலரை கைப்பிடிக்கவுள்ளார். 'ரோஜாவனம்', 'பூப்பறிக்க வருகிறோம்', 'உன்னைத்தேடி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மாளவிகா. 'சித்திரம் பேசுதடி' படத்தில் 'வாளமீன்' பாடலுக்கு போட்ட ஆட்டத்தால் இவருக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின. 'திருட்டு பயலே' படத்தில் நடிப்பு திறமையை நிருபித்த மாளவிகா தற்போது 'அற்புதத்தீவு','திருமகன்','சபரி','வியாபாரி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துவருகிறார். மாளவிகாவும் மும்பையை சேர்ந்த சுமேஷ் என்ற வாலிபரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். மும்பையில் உள்ள மாளவிகாவின் வீட்டில் இருவரும் ஒன்றாக வசிக்கின்றனர். மாளவிகாவின் பெற்றோர் பெங்களூரில் வசிக்கின்றனர். தற்போது ஒப்பந்தமாகியுள்ள படங்கள…
-
- 0 replies
- 1.1k views
-
-
பின்னணி பாடுவதில் ஜேசுதாஸ் குடும்பத்தின் புதிய வாரிசு பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாசின் பேத்தி அமேதா மலையாள சினிமாவில் பாடி, தனது இசைக் குரலை பதிவு செய்திருக்கிறார். அந்த படம் விரைவில் வெளிவர இருக்கிறது. அமேதா, கானகந்தர்வன் ஜேசுதாஸ் குடும்பத்தின் நான்காவது தலைமுறை பின்னணி பாடகியாவார். அவரது தந்தை அகஸ்டின் ஜோசப் 1950-ம் ஆண்டு நல்லதங்காள் சினிமாவில் பாடினார். அந்த படத்திற்கு இசை அமைத்தவர், பிரபல இசை அமைப்பாளர் வி.தட்சிணாமூர்த்தி. 1962-ம் ஆண்டு அதே இசை அமைப்பாளரின் விதி தந்த விளக்கு என்ற சினிமாவில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடினார். 25 வருடங்கள் கழித்து 1987-ல் ‘இடநாழியில் ஒரு காலோச்ச’ என்ற படத்தில் அவரது மகன் விஜய் ஜேச…
-
- 0 replies
- 376 views
-
-
எம்.ஜி.ஆர். படங்களின் பெயர்களுக்கு இன்றும் நல்ல டிமாண்ட். தனது புதிய படத்திற்கு விஜய் எம்.ஜி.ஆர். படத்தின் பெயரையே தேர்வு செய்துள்ளார். விஜய் எம்.ஜி.ஆர்.ரசிகர். அவரது ரசிகராகவே ஒரு படத்தில் நடித்துள்ளார். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனின் பந்தயம் படத்தில் விஜய் நடிக்கவில்லையென்றாலும், விஜய்யின் ரசிகராக வரும் பந்தயம் ஹ“ரோ நிதின்சத்யா விஜய்யின் படப்பிடிப்பை வேடிக்கைப் பார்க்கும் காட்சியொன்று இடம் பெறுகிறது. இதில், விஜய்யை இயக்குனர் பேரரசு இயக்குவதுபோலவும், நிதின்சத்யா அதனை வேடிக்கை பார்ப்பதாகவும் காட்சி அமைத்துள்ளார் எஸ்.ஏ.சி. குறிப்பிட்ட காட்சியில் விஜய் இடம்பெறும் படத்திற்கு எம்.ஜி.ஆர். என்று பெயர் வைத்திருந்தார் எஸ்.ஏ.சி. நிற்க நமது விஷயத்திற்கு வருவோம். வில்லு …
-
- 0 replies
- 908 views
-
-
ஆஸ்கார் படங்களை திருடி எடுக்கும்போது தமிழ்ப்படத்திற்கு எங்கிருந்து ஆஸ்கார் கிடைக்கும்? ப.கவிதாகுமார் இந்தியாவில் எத்தனையோ மொழிகளில் திரைப்படங்கள் வெளியானாலும், தமிழ்மொழியில் வெளியாகும் படத்துடன் முடிந்து போவதில்லை. அப்படம் குறித்த தாக்கங்கள். வெற்றி, தோல்விகளைப் பற்றி அக்கறைப்பட்டு படங்கள் எடுத்த காலம் போய், அடுத்த முதல்வர் கனவோடு படங்கள் எடுக்கும் சமூக அவலம், தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் காணமுடியாததாகும். கடந்த நாற்பதாண்டு தமிழக வரலாறு என்பது திரையுலகத்தோடு பின்னப்பட்டது என்றால் அது மிகையாகாது. அறிஞர் அண்ணா துவங்கிய அப்பயணம் மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர், வி.என்.ஜானகி, ஜெயலலிதா எனத் தொடருகிறது. அதன் நீட்சியாக அடுத்த முதல்வர் நான்தான் என்ற விஜயகாந்தின்…
-
- 0 replies
- 1.5k views
-
-
பழம்பெரும் நடிகர் கே.என்.காளை காலமானார் பழம்பெரும் நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவருமான கே.என்.காளை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 84 'கிடாரி' படத்தில் மூக்கையா கிழவராக நடித்தவர் கே.என்.காளை. நேற்றிரவு திடீர் மாரடைப்பால் இவருடைய உயிர் பிரிந்தது. தென்னிந்திய நடிகர் சங்கத்தில் துணைத்தலைவர், பொருளாளர், செயலாளர் உள்ளிட்ட பதவிகளில் இருந்தவர். சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் இவருடைய உடலுக்கு நேரில் அஞ்சலில் செலுத்தினார்கள். மேலும், பல்வேறு திரையுலகினர் கே.என்.காளையின் குடும்பத்தினருக்கு தங்களுடைய இரங்கலைத் தெரிவித்துள்ளனர். தஞ்சை மாவட்ட…
-
- 0 replies
- 358 views
-
-
தமிழ்த் திரையுலகத்தில் இந்த வாரம்… அஜித்தின் 'விவேகம்' பட முதல் பார்வை வெளியீடு, மணிரத்னம் - ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியின் 'காற்று வெளியிடை' படத்தின் 'அழகியே…' பாடல் வெளியீடு, ஜெயம் ரவி, அரவிந்த்சாமி நடிப்பில் 'போகன்' படத்தின் வெளியீடு, சந்தானம் நடித்துள்ள 'சர்வர் சுந்தரம்' படத்தின் டிரைலர் வெளியீடு என இந்த வாரத்தில் தமிழ்த் திரையுலகத்தில் சில முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. காற்று வெளியிடை - அழகியே…பாடல் வெளியீடு இயக்குனர் மணிரத்னம் - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இருவரது கூட்டணியில் உருவாகியுள்ள 'காற்று வெளியிடை' படத்தின் 'அழகியே…' என்ற பாடல் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. வைரமுத்து, மதன் கார்க்கி எழுதியுள்ள இந்தப…
-
- 0 replies
- 401 views
-
-
‘ஒரு ஊர்ல ஒரு சச்சின்' அல்ல.. ஒரே ஒரு சச்சின்தான்!’ #Sachin a Billion Dreams - படம் எப்படி? கிரிக்கெட்டில் 1989-ல் அறிமுகம் ஆனதில் இருந்து, கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றது வரை... கிரிக்கெட்டின் மீது தீராக் காதல்கொண்ட விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கரின் டாக்குமென்டரியாக உருவாகியிருக்கும் 'சச்சின் - எ பில்லியன் ட்ரீம்ஸ்' திரைப்படம் என்ன சொல்கிறது? ஒரு கனவு முளைக்கும்போது அதைப் பத்திரப்படுத்தி, பாதுகாத்து, சரியான சமயத்தில் சிறகை மாட்டிப் பறக்கவிடவேண்டும். கனவுகளைச் சுமந்து சிறகை விரித்துப் பறப்பவன், உயரத்தைத் தீர்மானித்துக்கொள்வான். 'சச்சின் - எ பில்லியன் ட்ரீம்ட்ஸ்' திரைப்படம் சொல்வது, சச்சின் டெண்டுல்கர் என்ற கிரிக…
-
- 0 replies
- 718 views
-
-
``தொகுதிக்கு வராத அரசியல்வாதியும், டிக்கெட் எடுத்துப் படம் பார்க்கும் ரசிகனும்!" - `எம்.எல்.ஏ' படம் எப்படி? #MLAreview காதலித்த பெண்ணைத் திருமணம் செய்துதரக் காதலன் கேட்க, பெண்ணுடைய அப்பா பிக்பாஸ் மாதிரி கொடுக்கும் 'எம்.எல்.ஏ ஆகவேண்டும்' என்ற டாஸ்க்கை நிறைவேற்றுகிறாரா ஹீரோ என்பதைப் 'புதுமையான' ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்து சொல்ல முயற்சி செய்திருக்கிறது, `எம்.எல்.ஏ' திரைப்படம். தனியார் கம்பெனியில் வேலை செய்து வரும் நடுத்தர வயது இளைஞன், கல்யாண் பாபு (நந்தாமுரி கல்யாணம்). `உண்மைக் காதல்னா உயிரைக் கொடுக்கக்கூடிய' கல்யாண், தன் குடும்பத்தை எதிர்த்து தங்கை மற்றும் நண்பன் வெண்ணிலா கிஷோரின் காதல் திருமணத்தை நடத்தி வைக்கிறார்…
-
- 0 replies
- 494 views
-
-
பூவாக இருந்த ஐஸ்வர்யாவை புயலாக்கி பார்த்துள்ளனர் ராஜஸ்தான் நிருபர்கள் ஐஸ் - அபிஷேக்பச்சன் ஜாதகத்தில் தடைகள் இருப்பதாகவும் அதற்கு பரிகாரம் செய்ய ஐஸ்வர்யா கோயில் கோயிலாக சுற்றுவதாகவும் சமீபகாலமாக பத்திரிகை செய்திகள் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற அஜ்மீர் தர்காவுக்கு நேற்று காலை ஐஸ்வர்யா வந்தார். அப்போது அவரை சூழ்ந்துகொண்ட நிருபர்கள் ஜாதகம் விஷயம் பற்றி கிளற, திடீரென ஆவேசமடைந்துள்ளார் ஐஸ். "நான் வெளியிடங்களுக்கு செல்லும்போது அந்த பகுதிகளில் உள்ள புகழ்பெற்ற கோவில்களுக்கு செல்வது எனது வழக்கம். இதனை எனது திருமணம் தொடர்பான வதந்திகளுடன் தொடர்புபடுத்தி பேசுவதும் எழுதுவதும் சரியல்ல. நீங்களாக கற்பனை செய்துகொண்டு தப்பு தப்பாக யோசிப…
-
- 0 replies
- 942 views
-
-
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியிருக்கிறது 'பச்சைக்கிளி முத்துச்சரம்.' சென்னை மல்டிபிளிக்ஸ் தியேட்டர்களில் கௌதமின் இந்தப் படத்திற்கு நேற்று நூறு சதவீத ஆடியன்ஸ். புறநகர் பகுதிகளிலும் கணிசமான கூட்டத்தை காணமுடிந்தது. கௌதம் கதையை நகர்த்தும் விதமும், வசனங்களும், சரத், ஜோதிகா, ஆன்ட்ரியா மற்றும் மிலிந்த் சோமனின் நடிப்பும் ஏ கிளாஸ்! அதிலும், காதில் மூன்று நான்கு வளையங்கள், மூக்குத்தி, பாசிமணி மாலை, அழுத்தமான லிப்ஸ்டிக், கண் நிறைய மை என வித்தியாசமான மேக்கப்பில் வரும் ஜோதிகாவின் தோற்றமும் நடிப்பும் கைத்தட்டல்களை அள்ளுகிறது. ஹாரிஸ் ஜெயராஜின் இசையும் அர்விந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் குறை சொல்ல முடியாதவை. ஆயினும், சரத், ஜோதிகாவிடம் மனைவிக்கு தெரியாமல் உறவ…
-
- 0 replies
- 953 views
-
-
பயணங்கள் முடிவதில்லை, மெல்லத் திறந்தது கதவு, விதி, 24 மணி நேரம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து அக்காலத்ஹ்டில் வெற்றிநடை போட்டவர் மோகன். பல படங்களில் மேடைப் பாடகராக நடித்ததால் 'மைக்' மோகன் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். 'உருவம்' படத்தினை அடுத்து படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். பின்னர் அவரை தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க அழைப்பு விடுத்தனர். அதற்கு மறுத்த மோகன், பெரியதிரை தான் என் இடம் என சொல்லி அனுப்பிவிட்டார். பிற ஹீரோக்கள் நடிக்கும் படத்தில் குணசித்திர வேடத்தில் நடிக்க வந்த வாய்ப்புகளையும் 'நடித்தால் - ஒன்லி ஹீரோ' என தவிர்த்த மோகன், பல வருடங்கள் கழித்து 'அன்புள்ள காதலுக்கு' என்னும் படத்தை இயக்கி நடித்தார். அப்படம் மக்களிடையே வரவேற்…
-
- 0 replies
- 419 views
-