வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5548 topics in this forum
-
செல்வராகவனுக்கும் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பிஎஸ் ராமனின் மகள் கீதாஞ்சலிக்கும் இன்று சென்னையில் நிச்சயதார்த்தம் நடந்தது. மணமகளின் இல்லத்தில் நடந்த இந்த திருமண நிச்சயதார்த்தத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இயக்குநர் செல்வராகவனும் நடிகை சோனியா அகர்வாலும் சில வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்தனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று, இப்போது 'நண்பர்களாக' உள்ளனர். இந்த நிலையில் செல்வராகவனின் 'இரண்டாம் உலகம்' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்ற வந்தார் கீதாஞ்சலி. தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பிஎஸ் ராமனின் மகள் இவர். செல்வராகவனுக்கும் கீதாஞ்சலிக்கும் நாளடையில் காதல் மலர்ந்தது. பெற்றோர் துணையுடன் இருவரும…
-
- 0 replies
- 998 views
-
-
மொழி,அபியும் நானும் போன்ற நெஞ்சை நெகிழ வைக்கும் படங்களை எடுத்த ராதா மோகன் தனது வழக்கமான பாணியிலிருந்து விலகி ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ள படம் பயணம். தீவிரவாதியின் விடுதலை கோரி ஒரு விமானம் கடத்தப்படுகிறது.பயணிகளின் தவிப்பு,அதிகாரிகளின் மீட்பு நடவடிக்கைதான் திரைக்கதை. நாகார்ஜூன் தெலுங்கில் சூப்பர்ஸ்டார் ஆக இருந்தாலும் இந்தப்படத்தில் அண்டர் ப்ளே ஆக்டிங்க் செய்திருப்பது வரவேற்கத்தக்கது.ஆனால் பாடி லேங்குவேஜ்ஜில் அவர் காட்டிய மிடுக்கை கொஞ்சம் கெட்டப்பிலும் காட்டி இருக்கலாம்.நேஷனல் செக்யூரிட்டி கார்டாக வரும் அவர் க்ளோஸ் ஹேர் கட் பண்ணி இருந்தால் கூடுதல் கம்பீரம் சேர்த்திருக்கும்.படத்தில் அவருக்கு ஜோடி ஏதும் இல்லை என்பது டூயட்டை வெறுக்கும் பார்ட்டிகளுக்கு நிம்மதி. படத்தின…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆடுகளம் பார்த்தேன்... [Aadu kalam] நீண்டகால இடைவெளிக்குப் பின் யாழ்ப்பாணம் செல்லா திரையரங்கில் ‘ஆடுகளம்’ எனும் படத்தைப் பார்த்தேன். அந்தப் படத்தைப் பார்த்ததும் முப்பத்தைந்து ஆண்டு கால நினைவுகள் என்நினைவுத் திரையில் நிழலாடின. எனது நண்பரும் ஒரு சாலை மாணாக்கரும் உறவினருமான கவிஞர் வ.ஐ.ச. ஜெயாபாலன் இந்தப் படத்திலே தனுஷ் உடன் இணைந்து முக்கியபாத்திரத்தில் நடித்துள்ளார். மதுரை மாவட்டத்திலே ஒரு கிராமத்தில் ஒரு காலத்தில் நடைபெற்ற கோழிச்சண்டையை (சேவற்சண்டையை) மையமாகவைத்துப் பின்னப்பட்ட கதையிலே பரம்பரை பரம்பரையாகக் கோழிச் சண்டையை நடத்தி வரும் பேட்டையாராக இலங்கையைச் சேர்ந்த கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அவரது தோற்றம் அந்தப்பாத்திரத்திற்கு உயிர் கொடு…
-
- 0 replies
- 817 views
-
-
-
ஒரு சில படங்கள் நம் மனதை விட்டு அகலாமல் உழன்று கொண்டேயிருக்கும். சில படங்கள் பார்க்கும் போது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், ஆனால் படம் விட்டு வெளியே வந்ததும் ஞாபக அடுக்குகளிலிருந்து தேட வேண்டியிருக்கும். இன்னும் சில படங்கள் அங்கேயும் இல்லாமல் இங்கேயும் இல்லாமல் இருக்கும். இதில் யுத்தம் செய் எந்த விதம்? சென்னையில் ஒரு முக்கிய சரகத்தில் தொடர்ந்து மனித கைகள், ஒரு டப்பாவில் போடப்பட்டிருக்க, ஏற்கனவே தொலைந்து போன தன் தங்கையை கண்டுபிடிக்க முடியாமல் விரக்தியின் உச்சத்திலிருக்கும் ஜே.கே எனும் சிபிசிஐடி ஆபீஸரான சேரனிடம் இந்த கேஸ் கொடுக்கப்படுகிறது ஒரு வாய்ப்புடன். இந்த கேஸை கண்டுபிடித்தால் அவரது தங்கையின் கேஸை மீண்டும் ஓப்பன் செய்து விசாரிக்க அனுமதி தருவதாய் சொல்கிறார் சிபிசிஐட…
-
- 0 replies
- 1.2k views
-
-
காவலன் வெளியாகி இத்தனை வாரங்கள் கழித்து தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய். தன் படத்தை யார் வெளிவர விடாமல் தடுத்தார்கள் என்பதையும் ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். எப்பவுமே மிஸ்டர் அமைதியாக இருக்கும் விஜய், இப்போது ஆவேசப் பட்டிருப்பது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கப் போவது மட்டும் நிச்சயம். இனி அந்த பேட்டி- 'இதுவரைக்கும் என்னோட படங்கள் ரிலீஸ் விஷயத்தில் பெரிய பிரச்னைகள் வந்தது இல்லை. அப்படியே வந்தாலும், நாங்களே சுலபமா சமாளிச்சுத்தான் இருக்கோம். ஆனா, 'காவலன்' படத்துக்குப் பூதாகாரமா பிரச்னைகளை உருவாக்கினாங்க. புதுசு புதுசா, தினுசு தினுசா... பெரிய பிரஷரை ஏற்படுத்தினாங்க. பிரச்னையைத் தீர்க்க என்ன செய்றது, யாரிடம் போற…
-
- 13 replies
- 2.1k views
-
-
Inception (2010) - விமரிசனத்துக்கு அப்பால்... சமீபத்தில் பார்த்து அதிசயித்த படம், இந்த Inception. Christopher Nolan தான் இந்த கிரியேட்டர். மேக்கிங்கில் தனித்துவம் கொண்டிருக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில், தன் திரைக்கதையால் தனித்துவம் கொண்டிருக்கும் இயக்குநர் தான் இந்த நோலன் இந்த படத்தை பற்றி ஏற்கனவே ஜெய் அவர் ஸ்டைல்ல எழுதிய அழகான விமர்சனம். இருந்தாலும், சில விஷயங்களை சொல்லவேண்டும், படம் பார்ப்பவர்களுக்கு உதவியாக சில டெக்னிக்கல் விஷயங்கள். இந்த பதிவு இந்த படத்தை பற்றின என் 'ஆராய்ச்சியின்' பதிவும் கூட (சிரிக்கப்படாது). கதையும் அதன் முடிச்சும் பிரமிக்க வைப்பவை. ஒரு கனவை ஒருவர் காணமுடியும். இரு வேறு மனிதர்கள் 'சேர்ந்து' ஒரு கனவை காணமுடியுமா? சினிம…
-
- 14 replies
- 2.4k views
-
-
கார்ட்டூன் மற்றும் அனிமேஷன் பட உலகின் பேரரசான டிஸ்னி நிறுவனத்தின் 50 வது பெருமைமிகு படைப்புதான் TANGLED 3-D. விருதுகள். அனிமேஷன் பட வரலாற்றில் அதிகம் செலவு செய்து எடுக்கப்பட்ட படம் இது. பட்ஜெட் $260 மில்லியன். அமெரிக்காவில் நவம்பரில் வெளிவந்து போட்ட பணத்திற்கும் மேல் எடுத்துவிட்டு தற்போது இந்தியாவில் ரிலீஸ் ஆகி உள்ளது. சூரியனில் இருந்து விழும் ஒரு துளி ஒளி மலையில் உள்ள ஒரு பசுமையான இடத்தில் விழுகிறது. அதன் மூலம் ஒரு அதிசய மலர் உண்டாகிறது. நோயற்ற வாழ்வு, என்றும் இளமை எனும் பல அதிசயங்களை தரும் அரிய சக்தி உடையது அந்த மலர். இதை ஒரு மூதாட்டி பார்த்து விடுகிறாள். அதன் மூலம் தன் இளமையை மீட்டெடுக்கிறாள். அதே சமயம் அரண்மனை காவலாளிகள் அங்கு வர அவள் சென்றுவிடுகிறாள். அந்த பூவை…
-
- 0 replies
- 572 views
-
-
மல்லிகா ஷெராவத்தின் 17 லிப் டு லிப் சாதனையை முறியடித்திருக்கிறது பாலிவுட் இளம்ஜோடிகளின் காதல் படம். இப்படத்தில் 22 லிப் டு லிப் முத்தக் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. சினிமாவில் ‘லிப் டு லிப்’ முத்தம் அரிதாக இருந்தது ஒரு காலம். தமிழில் கமல் படங்களில் மட்டும் வரும். பரபரப்பாக பேசப்படும். இப்போது சர்வசாதாரணம். நமக்கு முன்பே இந்த கலாசாரத்தை துவக்கிவைத்த பாலிவுட்டில் இது இப்போது மேலும் அமோகமாய் நடக்கிறது. வெறுமனே ‘இச்’ பதிப்பதோடு இல்லாமல், யார் ‘இச்’சாதனையை படைப்பது என்ற போட்டியும் அங்கு அதிகரித்திருக்கிறது. ‘காயிஷ்’ (ஆசை) என்ற படத்தில் புதுமுக ஹீரோவுடன் நடித்த கவர்ச்சி குயின் மல்லிகா ஷெராவத் ஒன்று, இரண்டு இல்ல.. விரல் விட்டு எண்ண முடியாத அளவுக்கு 17 லிப் டு லிப் முத…
-
- 0 replies
- 654 views
-
-
வடிவேலு 25 வித்யாசமான ரோல்களில் நடிக்கும் புதியபடம் "உலகம்". இப்படத்தை புதுமுக இயக்குநர் ஆதம் பாவா என்பவர் இயக்குகிறார். ஒரு வருடத்திற்கு முன்பே இப்படத்தின் தலைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. படத்தை பா.ம.கா.வை கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் தயாரிக்கிறார். சமீபத்தில் இப்படத்திற்கான போட்டோசேஷன் நடைபெற்றது. போட்டோக்களை பார்த்து வடிவேலு பிரமித்து போனாராம். மேலும் இயக்குநர் ஆதம் பாவாவின் கற்பனையை வெகுவாக பாராட்டினாராம். இதற்கிடையில் செல்வராகவன் "இரண்டாம் உலகம்" என்ற படத்தை இயக்கி வருகிறார். இதை கேள்விபட்ட "உலகம்" படத்தின் தயாரிப்பாளரும், பா.ம.க., முக்கிய பிரமுகரும், செல்வராகவனை நேரில் சந்தித்து என்னுடைய படத்திற்கு ஏற்கனவே "உலகம்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்போது நீ…
-
- 0 replies
- 482 views
-
-
ராவணன் படத்தின் மூலம் பத்து தலைகளில் வலி ஏற்பட்ட மாதிரி மணிரத்னம் முடங்கி விடுவார் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அசராத மனிதர் அடுத்து கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை படமாக்கும் என்னத்தோடு நவீன எழுத்தாளர் ஜெயமோகனிடம் இந்தக்கதைக்கு மூன்று மணிநேரத்தில் முடிக்கிறமாதிரி திரைக்கதை எழுதித்தர முடியுமா என்று ஆலோசித்திருக்கிறார். அவரோ நிச்சய்மாக முடியும் என்று கூறி, திரைக்கதை வடிவத்துக்கான சுருக்கத்தை எழுதிக்கொடுத்து விட்டாராம். ஆனால் பொன்னியின் செல்வன் நாவலை தற்போது மக்கள் தொலைகாட்சிக்காக ஒரு தரப்பினர் சீரியாலாக எடுக்க முயன்று கொண்டிருக்க, ஏற்கனவே பலர் இதை சினிமாவாக எடுக்க நினைத்து தோற்றுப் போய் இருக்கிறார்கள் என்பதையும், இந்தநாவலை நவின நாடகமாக போட்ட வ…
-
- 0 replies
- 944 views
-
-
அரசாங்கம் படத்தில் விஜய்காந்த் ஜோடியாக நடித்த நவநீத் கவுருக்கும் மராட்டிய மாநில சுயேச்சை எம்எல்ஏ ரவி ராணாவுக்கும் திருமணம் நடக்கிறது. பஞ்சாபைச் சேர்ந்தவர் நவநீத் கவுர். தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துள்ளார். தமிழில் அரசாங்கம், அம்பாசமுத்திரம் அம்பானி ஆகிய படங்களில் நடித்தார். பிரபல சாமியார் பாபா ராம்தேவிடம் விதர்பா அருகே உள்ள அமராவதி ஆசிரமத்தில் யோகா கலை கற்று வந்தார் நவநீத் கவுர். அப்போது அங்கே யோகா கற்க வந்த சுயேச்சை எம்எல்ஏவான ரவி ராணாவுக்கும் நவநீத்துக்கும் அறிமுகம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் அதை வெறும் தனிப்பட்ட நிகழ்வாக செய்யாமல், பல ஏழை ஜோடிகளுடன் சேர்ந்து செய்து கொள்ள விரும்பினர்.அமரா…
-
- 0 replies
- 699 views
-
-
ரஜினி நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்த எந்திரன் படம் ஈட்டிய லாபம் எவ்வளவு என்பதை சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது. எந்திரன் படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தியிலும் வெளியானது. மூன்று மொழிகளிலும் இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. வெளிநாடுகளிலும் வசூலை குவித்தது எந்திரன். மூன்று மொழிகளிலும் சேர்த்து இதுவரை சன் பிக்சர்ஸுக்கு எந்திரன் ஈட்டித் தந்த லாபம் 179 கோடிகள். இதில் சேட்டிலைட் ரைட்ஸான 15 கோடியை சன் பிக்சர்ஸ் சேர்க்கவில்லை. அவர்களே சன் தொலைக்காட்சியில் படத்தை திரையிட இருக்கிறார்கள். இந்தத் தொகை சன் பிக்சர்ஸுக்கு மட்டும் கிடைத்த லாபம். விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் லாபம் தனி. எந்திரன் படத்துக்கு சன் பிக்சர்ஸ செலவழித்தது…
-
- 5 replies
- 700 views
-
-
பசங்க படம் மூலம் லைம்லைட்டுக்கு வந்த நடிகை வேகா இப்போது திரைப்படங்களில் நடிப்பதைப் படிப்படியாக குறைத்துக் கொண்டு முழு நேர பைலட்டாகப் போகிறாராம். சரோஜா படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார் வேகா. ஆனால் அவருக்குப் பெயர் வாங்கிக் கொடுத்தது பசங்க படம்தான். அதில் பால்வாடி டீச்சர் வேடத்தில் வந்து, விமலுக்கு ஜோடியாக அவர் நடித்த நடிப்பு அவருக்கு நிறையப் பெயரை வாங்கிக் கொடுத்தது. பசங்க படத்திற்குப் பின்னர் தனி நாயகியாக நடிக்க அவர் உறுதியாக இருந்தாலும், பட வாய்ப்புகள் பிரமாதமாக வரவில்லை. தற்போது வானம் படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது சினிமாவை விட்டுவிட்டு பைலட்டாக முடிவு செய்துள்ளாராம் வேகா. இதற்கான பயிற்சியிலும் அவர் தீவிரமாக ஈ…
-
- 3 replies
- 1k views
-
-
ஆனந்த விகடனில் தொடராக வந்த சொர்ணமுகி படத்தோட ஒன்லைன் தான் கதை..(கே எஸ் அதியமான் டைரக்ஷனில் ஆர் பார்த்திபன் நடித்த படம்).அதாவது காதலி ஒரு சிக்கலான கட்டத்தில் ஒரு கால அவகாசம் கொடுத்து காதலனை வரச்சொல்ல அவனால் வர முடியாமல் போவதால் ஏற்படும் குழப்பங்களும், பிரச்சனைகளும்தான் திரைக்கதை. படத்தோட மெயின் கதையை விட சில சமயங்களில் கிளைக்கதை எனப்படும் ஃபிளாஷ்பேக் கதை ஆழமாகவும்,மனதைத்தைப்பது போலவும் அமைந்து விடுவது உண்டு.. அது படத்தின் மெயின் கதையை டாமினேட் பண்ணும்போது ஏற்படும் சிக்கல் இந்தப்படத்துக்கும் ஏற்படுகிறது. அழகி படத்தில் வருவது போல் காட்டப்படும் அந்த கிராமத்துக்காதல் கதையில் வரும் ஹீரோயின் நல்ல நடிப்புத்திறமையும்,சட் சட் என மாறும் முக பாவமும் பிளஸ் என்றால் அவரது …
-
- 0 replies
- 1.3k views
-
-
ரஜினி மகள் சவுந்தர்யா ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள கே.கே.சி. என்ற தனியார் சட்ட கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்கான தேர்வு நேற்று புத்தூரில் உள்ள அரசு கல்லூரியில் நடந்தது. சவுந்தர்யா தேர்வு எழுதுவதற்காக புத்தூர் அரசு கல்லூரிக்கு சென்றார். சவுந்தர்யா தேர்வு எழுத வருவதை அறிந்ததும் அங்கு ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் ரஜினி மகளை பார்க்க முண்டியடித்தனர்.பின்னர் ஒருவழியாக ரசிகர்களிடம் இருந்து தப்பித்து தேர்வுக் கூடத்துக்கு சென்றார். அவர் தேர்வு எழுதும் போது அந்த ஹாலில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த அனைவரும் சவுந்தர்யாவையே பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால் சவுந்தர்யா அதிருப்தி அடைந்து தேர்வு எழுத முடியாமல் தவித்தார். பின்னர் அவர் அந்த க…
-
- 0 replies
- 514 views
-
-
பிரபல கன்னட நடிகை யமுனா. இவர் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். யமுனாவை பெங்களூர் போலீசார் விபசார வழக்கில் கைது செய்தனர். அவருடன் மேலும் சில அழகிகளும் கைதானார்கள். யமுனா பற்றி ஏற்கனவே போலீசாருக்கு புகார்கள் வந்து கொண்டு இருந்தன. ஆந்திரா போலீசாரும் யமுனா விபசாரத்தில் ஈடுபடுவதாக தகவல் அனுப்பினர். இதைத் தொடர்ந்து கர்நாடக போலீசார் பொறி வைத்து கைது செய்தனர். யமுனாவிடம் விசாரணை நடத்தியபோது விபசாரத்தில் ஈடுபடும் மேலும் நடிகைகள் பற்றிய தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. வேறு மொழிப் படங்களில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் விபசாரத்தில் ஈடுபடுவதாக கூறியுள்ளார். அந்த நடிகைகளின் பெயர் பட்டியலையும் அளித்துள்ளாராம். அவர்களை கையும் களவுமாக பிடிக்க போலீசார் தயாராகி வர…
-
- 0 replies
- 1.3k views
-
-
இயக்குனர்: மணிகை தயாரிப்பு : P.அருமைச்சந்திரன் நடிகர்கள் : நந்தா,சரண்,யாஷிகா, இசை : சித்தார்த் ஹீரோக்கள் 2 பேர் ,ஹீரோயின் 1 ஆள் என்றதுமே அது முக்கோணக்காதல் கதைதான் என நினைத்துப்பார்த்தால் ம்ஹூம்..சம்திங்க் டிஃப்ரண்ட்தான்.. எல்லாம் இடைவேளை வரைதான்.அதற்குப்பிறகு.... காதல் கோட்டை படத்தின் ஒன்லைன் தான் கதை.அதுல பாக்காமயே 2 பேரு லவ் பண்ற மாதிரி இதுல பாக்காமயே நண்பர்கள் ஆன 2 ஆண்களின் கதை. நெட் செண்ட்டர் (சுத்த சைவம்) என போர்டை பார்த்ததுமே காமெடி களை கட்டப்போகிறது என்பது தெரிந்து விடுகிறது.ஹீரோவும்,காமெடியனும் நெட் செண்ட்டர் வைத்திருப்பவர்கள் என கதைக்களன் வைத்தது இயக்குநரின் புத்திசாலித்தனம். ஹீரோ எது செய்தாலும் அல்லது என்ன சொன்னாலு…
-
- 0 replies
- 980 views
-
-
முன்னாள் கனவுக் கன்னி ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் நடிக்க வருகிறார். இந்தியிலோ, தமிழிலோ அவரை அறிமுகப்படுத்தாமல் முதலில் தெலுங்கில் களம் இறக்குகிறார் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவிக்கு, கணவர் போனி கபூர் மூலம் 2 மகள்கள். இவர்களில் ஜான்வியை நடிகையாக்க முடிவு செய்துள்ளார் ஸ்ரீதேவி. அவரை தெலுங்கு சினிமா மூலம் நடிகையாக்க தீர்மானித்துள்ளார். தமிழில் நிறையப் படங்களில் நடித்தவரானாலும், தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், தெலுங்கு சினிமா மூ்லம்தான் இந்திக்கு டிக்கெட் கிடைத்தது ஸ்ரீதேவிக்கு. காரணம், தமிழை விட தெலுங்கில்தான் ஸ்ரீதேவி நிறைய கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். இதன் காரணமாக தெலுங்கு சினிமா மூலம் தனது மகளை நாயகியாக்கவுள்ளார் ஸ்ரீதேவி. நாகார்ஜூனாவின் மகன் அகில் வளர்ந்து வாலிப…
-
- 0 replies
- 705 views
-
-
கிராமத்து பக்கம் எல்லாம் சில விஷயங்களைத்தான் திருவிழாவாக கொண்டாடுவார்கள். அது எது? என்னன்னு? பார்த்தீங்கன்னா வீட்டில யாருக்காவது உடல் நிலை சரியில்லைன்னா சாமிக்கிட்ட வேண்டிக்குவாங்க. உடம்பு சரியாயிடுச்சுன்னா கெடா வெட்டுறேன்... கோழி அடிக்கிறேன்... பொங்கல் வைக்கிறேன்னு சொல்லுவாங்க! இதெல்லாம் அவங்களுடைய மனசைப் பொறுத்தது. அந்த நோயை பொறுத்தது. ரொம்ப சீரியஸôன விஷயமாக இருந்தால் மொட்டை அடிச்சுக்கிறேன்னு வேண்டிப்பாங்க. வீட்டில் உள்ள ஆடு, மாடுகளுக்கு ஏதாவது பிரச்சினையோ, பிரசவ நேரமாகவோ இருந்தால் அதுக்கும் இந்த மாதிரி வேண்டிக்கொள்வார்கள். ஒரு பெரிய உயிரைக் காப்பாற்ற சின்ன உயிரை பறிப்பதாகவும் சில நேரங்களில் இருக்கும். இது கிராம வாழ்க்கையில் எளிதாக காணக்கிடைக்கிற விஷயம்!'' ஆசுவாசமா…
-
- 0 replies
- 739 views
-
-
சான்பிரான்சிஸ்கோவில் உள்ள டுவிட்டர் தலைமை அலுவலகத்திற்கு சமீபத்தில் வருகை தந்தார் பாலிவுட் கவர்ச்சிக் கன்னி மல்லிகா ஷெராவத். அப்போது தனது டுவிட்டர் நண்பர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு அவர்களுடன் ஜாலியாக பேசி மகிழ்ந்தார். டுவிட்டர் நண்பர்களுடன் மல்லிகா ஜாலியாக இருந்த போது எடுத்த ஏராளமான புகைப்படங்கள் மற்றும் காணொளியைப் பார்க்க..... http://www.thedipaar.com/cinema/cinema.php?id=6134
-
- 0 replies
- 553 views
-
-
கே.எஸ்.பாலச்சந்திரனும் திரைப்படங்களும் http://ksbcreations5.blogspot.com/2010_11_01_archive.html
-
- 0 replies
- 674 views
-
-
ரஜினியின் அடுத்த படம் ராணா... மூன்று வேடங்களில் நடிக்கிறார்! சனிக்கிழமை, ஜனவரி 29, 2011, 10:19[iST] சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் பெயர், ராணா. இந்தப் படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார் ரஜினி. முத்து, படையப்பா ஆகிய மெகா ஹிட் படங்களுக்குப் பிறகு ரஜினியுடன் இந்தப் படத்தில் கைகோர்க்கிறார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார். ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் மற்றொரு செய்தி, இந்த ராணா, அனிமேஷன் படம் அல்ல… 100 சதவீத பொழுதுபோக்குகள் நிறைந்த பக்கா ரஜினி படம்! தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில சப் டைட்டிலுடன் கூடிய வெளிநாட்டுப் பதிப்புகளாக வெளியாகிறது. எந்திரன் தயாரிப்பு வாய்ப்பை நழுவவிட்ட ஈராஸ் என்டர்டெயின்மெண்ட், இந்த முறை பெரும் பொர…
-
- 4 replies
- 2.1k views
-
-
திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, தர்மபுரி, பழனி, திருவண்ணா மலை என கமர்ஷியல் டூர் அடித்த இயக்குநர் பேரரசு இப்போது ‘திருத்தணி’யில் செட்டிலாகியிருக்கிறார். ‘‘உங்க டூர் இப்போ எப்படிப் போகுது?’’ “இன்னிக்கு மக்கள் மத்தியில் சுயநலம்தான் அதிகம் பரவியிருக்கு. அது மாறணும். நம்ம மனசுல பொது நலமும் இருக்கணும். இளைஞர்கள் ஜிம்முக்கு போய் உடற்கட்டை சூப்பராக்குற மாதிரி,அவங்க மனநலத்தையும் பத்திரமாக பார்த்துக்கணும்னு ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கேன். பரத், சுனேனா, ராஜ் கிரண் என ‘திருத்தணி’ கொண்டாட்டமாக இருக்கும்.’’ இப்படியே ஊர்ப் பெயர்கள்ல படமெடுக்கிறீங்களே. உங்களுக்கே அது போரடிக்கலையா? “(சிரிக்கிறார்) இது என்னோட தனி அடையாளமாக மாறினதுல பல ப்ளஸும் இருக்கு. நமக்கு கிடைச்ச…
-
- 0 replies
- 624 views
-
-
பாலிவுட்டின் இந்த வருட 'மோஸ்ட் வான்டட்’ திரைப்படம் 'Ra. One’. 'Random Access Version 1.0’ என்பதன் சுருக்கம்தான் 'ரா-1’. ஷங்கரின் 'ரோபோ’வை (இந்தி 'எந்திரன்’)விட பவர்ஃபுல் சினிமாவாக 'ரா-1’ இருக்க வேண்டும் என்று தூக்கம் பார்க்காமல் உழைத்துக்கொண்டு இருக்கிறார் ஷாரூக் கான். ஷங்கர் சொன்ன 'எந்திரன்’ கதை பிடிக்காமல், அதில் இருந்து விலகினாலும், அந்தக் கதையின் ஒன் லைனைத் தழுவித்தான் ஷாரூக் இந்தப் படத்தை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார் என்று ஏற்கெனவே ஒரு பேச்சு பரவிக்கிடக்கிறது. அதனால், 'எந்திரன்’ படத்தின் அட்வான்ஸ்டு ரீ-மேக்தான் ரா.1 என்ற கிண்டல் பேச்சை அடித்துத் தூள் தூளாக்கும் வெறியுடன் உழைத்துக்கொண்டு இருக்கிறார் ஷாரூக். பெரும் பட்ஜெட் படம் பற்றிய சிறு துளித் தகவல்கள்! …
-
- 2 replies
- 976 views
-