வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5563 topics in this forum
-
எந்திரன் பார்த்தேன் அ.முத்துலிங்கம் நான் என் வாழ்க்கையில் எந்த திரைப்படத்தையும் முதல் நாள், முதல் காட்சி பார்த்தது கிடையாது. நாற்பது வருடங்களுக்கு முன்னர் அது இலங்கையில் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று. கேட் பாய்ந்தோ, சுவரில் தொங்கியோ, ஆட்களின்மேல் நடந்தோ போக சாத்தியப்பட்டவர்களுக்கே அது முடியும். ஆகவே படத்தை 'இன்றோ நாளையோ மாற்றிவிடப் போகிறார்கள்' என்று செய்தி வந்ததும் போய்ப் பார்ப்பேன். அநேகமாக என்னுடைய நண்பர்கள் அந்தப் படம் பார்த்ததையே அப்போது மறந்துவிட்டிருப்பார்கள். கனடாவில் ‘எந்திரன்’ வருகிறது என்றதும் வழக்கம்போல பெரிய பரபரப்பும் ஆயத்தங்களும் தெரிந்தன. பகல் காட்சி, இரவுக்காட்சி, நடுஇரவுக்காட்சி என்று பல காட்சிகளை ஏற்பாடு செய்திருந்தார்கள…
-
- 9 replies
- 1.2k views
-
-
சின்ன பட்ஜெட்டில் தயாராகும் மலையாளப் படங்களில் பெரிய சம்பளம் வாங்கும் ரஹ்மான் இசை சாத்தியப்படாது என்று முடிவு செய்து, அவரை நடிக்க வைப்பதில் முனைப்பு காட்டி வெற்றியும் பெற்றுள்ளனர் மலையாளப் படவுலகினர்.ஜெயராஜ் இயக்கும் புதிய படத்தில் இசையமைப்பாளராகவே நடிக்கிறாராம் ஏ ஆர் ரஹ்மான்.இந்தப் படத்தில் மம்முட்டியும் ஜெயசூர்யாவும் நடிக்கிறார்கள். இந்தப் படம் ஒரு துப்பறியும் கதை. வழக்கம் போல துப்பறியும் நிபுணர் பாத்திரத்தில் மம்முட்டி நடிக்கிறார். அதில் சில காட்சிகளில் ஏஆர் ரஹ்மானிடம் விசாரிப்பது போல எடுக்க வேண்டியிருந்ததால், அவரையே நடிக்க வைத்துவிடலாம் என முடிவு செய்து கேட்டிருக்கிறார்கள். தயங்கித் தயங்கி கேட்டிருக்கிறார்கள்.ஒருநாள் கால்ஷீட் போதும், அதுவும் வீட்டிலேயே ஷூட்டிங் எ…
-
- 0 replies
- 764 views
-
-
டி.எம்.எஸ். மக்களின் பாடகன் ஷாஜி "நான் டி.எம்.எஸ் பாடல்களை வெறுக்கிறேன்" என்று இப்போதுள்ள ஒரு தமிழ் பின்னணிப்பாடகர் என்னிடம் சொன்னார். அந்த வெறுப்புக்கான காரணத்தைக் கேட்டபோது அவரால் சரியாகச் சொல்ல முடியவில்லை. "அவருடைய பாடல்கள் தமிழ்நாட்டின் வெயிலையும் புழுதியையும்தான் ஞாபகத்துக்குக் கொண்டு வருகின்றன’’ என்று சொன்னார். "நீங்கள் கோடைவிடுமுறைக்கு மட்டும் தமிழ்நாட்டுக்கு வந்திருப்பீர்கள். அப்போது மட்டுமே அந்தப்பாட்டுகளைக் கேட்டிருப்பீர்கள்’’ என்று நான் சொன்னேன். தமிழ்நாட்டில் பிறந்து வேறு பகுதிகளில் வளர்ந்த ஒரு சிறுவனின் மனப்பதிவு மட்டும் தான் அது. சிலர் அந்த மனப்பிராயத்தைத் தாண்டுவதேயில்லை! நானும் சிறுவயதில் டி.எம்.எஸ் பாட்டை அவ்வளவாக விரும்பவில்லை. ஜே…
-
- 0 replies
- 1.9k views
-
-
எந்திரனில் பாடப்பட்ட கிளிமஞ்சாரோவைப் பற்றி? http://www.youtube.com/watch?v=EDF63YLDtto இப்போது சமீபத்தில் வெளியான எந்திரன் படத்தில் வரும் கிளிமஞ்சாரோ பாடல் இந்த வருடத்தின் ஹிட்டான பாடல் என்ற பெயரை ஏற்கனவே பெற்றுவிட்டது. இதில் வரும் கிளிமஞ்சாரோ என்பது என்ன தெரியுமா? நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் இது ஒரு அழகான மலை என்பது. தெரியாதவர்களுக்கு இந்த மலையை பற்றி சில தகவல்கள். தான்சானியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மிக உயரமான எரிமலை வகையைச் சேர்ந்த மலை கிளிமஞ்சாரோ. இதுவே ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மலைகளிலேயே மிக உயர்ந்த மலை. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 5895 மீட்டர் (19,340 அடி) ஆகும். நம் இமயமலையின் மிக உயந்த சிகரம் எவரெஸ்ட் அது போல க…
-
- 0 replies
- 732 views
-
-
எந்திரன் திரைப்படம் இணையத்தளத்தில் கண்டுகளியுங்கள் http://www.kadukathi.com/?p=644
-
- 2 replies
- 1.7k views
-
-
எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்! சமஸ் First Published : 05 Oct 2010 12:35:27 AM IST Last Updated : ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) "ஜெமினி பிலிம்ஸ்' உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான "சந்திரலேகா' 1948-ல் தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் வெளியானது. இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது, இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை. தஞ்சாவூரில் "சந்திரலேகா' வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்…
-
- 0 replies
- 608 views
-
-
'பாலக்காட்டுக்கு போங்க... அதான் சேஃப்!' - அசின் அடம் 'காவலன் படத்தின் மிச்சப் பகுதியை கேரளாவிலே வச்சிக்கலாம். பாலக்காட்டுக்குப் போயிடலாம் அதான் சேஃப் சேட்டா!' -மேட்டுப் பாளையத்தில் பெரியார் திகவினர் மேற்கொண்ட கறுப்புக் கொடி போராட்டத்தைப் பார்த்து மிரண்டுபோன அசின் சொன்னது இது. ஹீரோயினாச்சே... அதிலும் விஜய்யின் பேவரிட் ஹீரோயின் சொன்ன பிறகு அப்பீலேது? அடுத்த நாளே பாலக்காடு பறந்தது காவலன் படக்குழு, ஹீரோ விஜய்யுடன். மேட்டுப் பாளையத்தில் எடுக்க வேண்டிய பல காட்சிகளை ஒத்தப்பாலம் மற்றும் பாலக்காடு பகுதியிலேயே வைத்து எடுத்துக் கொண்டார்களாம். மூன்று தினங்கள் நடந்த இந்தப் படப்பிடிப்பில் வடிவேலுவும் பங்கேற்றார். "இப்போதான் எனிக்கு ரிலீஃப்" என்று அசின் கூ…
-
- 0 replies
- 822 views
-
-
இணையதளத்தில் எந்திரன்: அதிர்ச்சியில் தியேட்டர் அதிபர்கள் First Published : 07 Oct 2010 08:59:33 AM IST Last Updated : 07 Oct 2010 09:57:25 AM IST சென்னை, அக். 6: இணையதளத்தில் "எந்திரன்' திரைப்படம் தெளிவான காட்சிகளாக வெளியாகி இருப்பதால் பல திரையரங்கு அதிபர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள். பல லட்ச ரூபாய் கொடுத்து தங்கள் தியேட்டர்களில் இந்தப் படத்தைத் திரையிட்டுள்ள தியேட்டர் அதிபர்கள், படம் வெளியாகி ஒரு வாரமே ஆகியிருக்கும் நிலையில் "எந்திரன்' திரைப்படத்தால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிடுமோ என்று பயப்படுவதாகவும் கூறப்படுகிறது. ÷சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள "எந்திரன்' திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் திரையிடப…
-
- 2 replies
- 840 views
-
-
வீரபாண்டிய கட்டப்பொம்மன் http://video.google.com/videoplay?docid=-1747823027807698199
-
- 0 replies
- 716 views
-
-
4 மணி நேரத்தில் ரூ 50 லட்சம்-டிக்கெட் விற்பனையில் எந்திரன் சாதனை! ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 26, 2010, 12:40[iST] சென்னை: திரையுலகம் இதுவரை காணாத பெரும் வசூல் சாதனையைச் செய்து வருகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம். இந்த சாதனைகளை முறியடிக்க இனியொரு படத்தை ரஜினியைத் தவிர வேறு யாராலும் தரமுடியுமா என்ற கேள்விதான் இன்று கோடம்பாக்கத்தில் பிரதானமாக எழுந்து நிற்கிறது. டிக்கெட் விற்பனையில்தான் இந்தப் புதிய சாதனை. சென்னை அபிராமி மெகா மாலில் 20 நிமிடங்களில் 8 நாட்களுக்கான மொத்த டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. நான்கு மணி நேரத்தில் ரூ 50 லட்சத்தை எந்திரன் வசூல் செய்திருப்பதாகவும், இது இந்தியத் திரையுலகில் முன்னெப்போதும் நிகழாத பெரும் சாதனை என்றும் அபிரா…
-
- 3 replies
- 938 views
-
-
திருமண உறவு முறித்த பிறகு,சீதாவுக்கு ஒரு சினேகிதன் கிடைத்துவிட்டார்.பார்த்திபனுக்கு ஒரு சிநேகிதி கிடைக்கவில்லையா? தென்றல் வீசிய கலைஞனின் வாழ்க்கையில் தீ பரவியது ஏன்? அண்மையில் ‘மைனா’படப் பாடல் வெளியீட்டு விழாவில் ஒரு தொகுப்பாளரைப் போல இருந்தாரே, படங்கள் எதுவும் இல்லாததாலா? ‘வித்தகன்’ தயாரிப்பாளருடன் மனக்கசப்பா? ஆளாளுக்கு அரசியல் மேளம் அடிக்கும் போது பார்த்திபனும் இறங்க வேண்டியதுதானே?ஒரு திறமைசாலிக்கு உரிய மரியாதை கிடைக்காமல் போனது ஏன்? இப்படி பல கேள்விகளுடன் விடை தேடிச் சென்றபோது, ‘‘எனது வாழ்க்கையில் மட்டும் தென்றலும் தீயும் ஏன் என்பது எனக்கு நானே கேட்டுக் கொள்கிற கேள்வி!இருபது வருடங்களுக்கு முன்பு ‘புதியபாதை’ எடுத்தபோது புதிய கருத்துகளை சொல்லணும்கிற த…
-
- 0 replies
- 1.1k views
-
-
திரையுலகம் இதுவரை காணாத பெரும் வசூல் சாதனையைச் செய்து வருகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம். இந்த சாதனைகளை முறியடிக்க இனியொரு படத்தை ரஜினியைத் தவிர வேறு யாராலும் தரமுடியுமா என்ற கேள்விதான் இன்று கோடம்பாக்கத்தில் பிரதானமாக எழுந்து நிற்கிறது. டிக்கெட் விற்பனையில்தான் இந்தப் புதிய சாதனை. சென்னை அபிராமி மெகா மாலில் 20 நிமிடங்களில் 8 நாட்களுக்கான மொத்த டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. நான்கு மணி நேரத்தில் ரூ 50 லட்சத்தை எந்திரன் வசூல் செய்திருப்பதாகவும், இது இந்தியத் திரையுலகில் முன்னெப்போதும் நிகழாத பெரும் சாதனை என்றும் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் மற்ற திரையரங்குகளில் முன்பதிவு துவங்கிய ஒரு மணிநேரத்தில் ஒரு வாரத்துக்கான டிக்கெட்ட…
-
- 5 replies
- 1.6k views
-
-
அனுஷ்கா தமிழில் ஜோடி போடுவதற்கு ஏற்ற ஒரே நடிகர் சத்யராஜாகத்தான் இருப்பார் போலிருக்கிறது. அந்த அளவுக்கு இவர் யாருடன் நடித்தாலும் அவர்களுடைய உயரம் இவருக்கு செட் ஆகவில்லை. சிங்கம் படத்திலும் சூர்யாவுடன் நடித்த போது இவரது உயரம் அதிகம் என்று படப்பிடிப்பிலேயே குறைப்பட்டுக் கொண்டார்கள். இவர்கள் இப்படி பார்ப்பதை அனுஷ்காவோ வேறு மாதிரியாக பார்க்கிறார்.‘இந்த நடிகர்கள் உயரம் குறைவாக இருந்துவிட்டு என்னை உயரம் குறைவு என்று சொல்கிறார்கள். ஹீரோ குள்ளமா இருந்தா எப்படி? இன்னும் வளராமலேயே நடிக்கிறாங்கப்பா…’ என்று கிண்டலாக சொல்கிறார் அனுஷ்கா.http://ulavan.net/?p=4823
-
- 0 replies
- 882 views
-
-
பிரபுதேவாவை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று அவரது மனைவி ரமலத் நேற்று சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.பிரபுதேவாவை நயன்தாரா தன்னோடு அழைத்து சென்று விட்டார் என்றும் நயன்தாராவை விரைவில் திருமணம் செய்வேன் என்று என் கணவர் அறிவித்து இருப்பதால் எனது வாழ்க்கை நாசமாகி விடுமோ என அஞ்சுகிறேன் என கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். என்னோடு சேர்ந்து வாழ கணவருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார். ரம்லத் வழக்கு தொடர்ந்தது பிரபுதேவாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரம்லத்துக்கு எதிர் மனு தாக்கல் செய்ய வக்கீல்களு டன் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். விரைவில் மனுதாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் மத்தியஸ்தர்க…
-
- 0 replies
- 1k views
-
-
பிரிட்டனின் பாக்ஸ் ஆபீஸில் எந்திரன் சாதனை புரிந்து வருகிறது. வெளியான முதல் நாள் மட்டும் ரூ35. 33 லட்சம் குவித்துள்ளது எந்திரன். இந்தப் படத்தை விட அதிக தியேட்டர்களில் வெளியான இந்திப் படம் அஞ்ஜானா அஞ்ஜானி ரூ 35 லட்சம் வசூலித்துள்ளது.பிரிட்டனின் பெருமைக்குரிய பாக்ஸ் ஆபீஸ் டாப் 10-ல் எந்திரனுக்கு எந்த இடம் என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும். இந்த நிலையில் பிரிட்டனில் 40 திரையரங்குகளில் எந்திரன் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் 40 திரையரங்குகளில் திரையிடப்பட்ட எந்திரன் முதல் நாளில் மட்டும் 50424 பவுண்ட்களையும் (ரூ. 35,32,496.26) , இந்தப் படத்துடன் வெளியான அஞ்ஜானா அஞ்ஜானி 53 திரையரங்குகளில் 50036 பவுண்ட்களையும் (ரூ 35, 07,711.50) வசூலித்துள்ளதா…
-
- 1 reply
- 752 views
-
-
எந்திரன். எந்திரன்- இந்த வார்த்தைதான் இன்றைய தேதியில் உலக தமிழர்களால் அதிகமாக உச்சரிக்கப்படும் வார்த்தையாக இருக்குமென்று அடித்து கூறலாம். கடந்த ஒரு வாரத்தில் பெரிசு முதல் சிறுசுவரை, பாமரன் முதல் படித்தவன்வரை, ஏழை முதல் பணக்காரன்வரை, ரஜினியை பிடித்தவர்கள் முதல் பிடிக்காதவர்கள்வரை, உலகின் பெரும்பான்மை தமிழர்களின் பேச்சும் எதிர்பார்ப்பும் எந்திரன்தான் என்றால் அது மிகையில்லை. இப்படியாக பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகிய எந்திரன் அதன் மிகை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா என்றால் நிச்சயமாக பூர்த்தி செய்துள்ளதென்பதுதான் எனது பதில்(இவன் ரஜினி ரசிகன் என்பதால் இப்படி கூறுகிறான் என்று நீங்கள் நினைத்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல, நிச்சயமாக நடுநிலை ரசிகர்களின…
-
- 12 replies
- 2.6k views
-
-
ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நயன்தாரா நடித்தார். சிவாஜியில் ரஜினியுடன் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடினார். அதன் பிறகுதான் சிம்புவுடனான காதலை முறித்தார்.தற்போது பிரபுதேவாவும், நயன்தாராவும் தீவிரமாக காதலித்து வருகின்றனர். விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது. பிரபுதேவா நயன்தாராவை காதலிப்பது பற்றி ரம்லத் முறையிட்டார் என்றும், ரஜினி தலையிட்டு பஞ்சாயத்து நடத்தினார் என்றும், ரஜினியின் முடிவுக்கு இருவரும் கட்டுப்படவில்லை என்றும் பேசப்பட்டது. இந்த நிலையில், கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் நயன்தாரா ஒரு விளம்பர படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அதே ஸ்டூடியோவில் ரஜினியும் எந்திரன் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக தயாரான சீன்களில் நடித்துக் கொண்டிருந்தார். …
-
- 0 replies
- 991 views
-
-
ஈழத்தமிழர்களை ஈவு இரக்கமின்றி சிங்கள ராணுவம் கொன்று குவித்ததால் தமிழ் நட்சத்திரங்கள் யாரும் இலங்கைக்கு செல்லக்கூடாது என்று தமிழ்த்திரைப்பட நடிகர் சங்கம் அறிவித்திருந்தது. ஆனால் தடையை மீறி நடிகை அசின் இலங்கை சென்றுவந்தார். தடையை மீறியதற்காக அவர் இதுவரை மன்னிப்பு கேட்கவும் இல்லை. இதனால் அசினுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவியது. இந்த எதிர்ப்பினால் அவரி இனி தமிழகம் வரமுடியாது என்ற நிலை இருந்தது. ஆனால் விஜய்யுடன் காவலன் படத்தில் நடிப்பதற்காக சென்னை வந்தார். எந்த எதிர்ப்பும் இல்லை. அதன்பிறகு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலும் கலந்துகொண்டார். இலங்கை சென்றது குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்தார். இந்நிலையில் காவலன் படத்தின் படப்பிடிப்பு கோவை அருகே மேட்டு…
-
- 0 replies
- 693 views
-
-
குடிப்பது போல நடிக்காதீர்கள். அது இளைஞர்களைப் பாதிக்கிறது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் மன்சூர் அலிகான். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காந்தி ஜெயந்தி நாளில் மது கொடுமைகளை நினைவு கூர்வது அவசியம். 16, 18 வயது சிறுவர்கள் உள்பட வயதானவர்கள் வரை இன்று மது அடிமைகளாக உள்ளனர். அதோடு பான்பராக், புகையிலை, கவுச்சி என எங்கும் நாறுகிறது. பள்ளியில் பட்டாணி சாப்பிடும் காலம் போய் பாருக்கு போகின்றனர். சாயா குடிப்பது போய் சாராயம் பழக்கத்துக்கு வந்துள்ளது. கட்சி மாநாடு, ஊர்வலம், சண்டை, பட ரிலீஸ், பண்டிகை, காதல் தோல்வி, கிரிக்கெட் வெற்றி-தோல்வி, மத கலவரம் என எல்லா வற்றுக்கும் குடிக்கிறார்கள். கால்கள் தள்ளாட, கண்கள் மங்க, இருமல், மண்டைக்கேற, சிறுநீரகம் சேதமாக, கணையம் வீங்…
-
- 0 replies
- 822 views
-
-
சிம்புவின் அடுத்தப் படம் வானம். தெலுங்கில் வெளியான வேதம் படத்தின் ரீமேக். வேதத்தில் நடித்த அனுஷ்கா இதிலும் நடித்திருக்கிறார். இதுபற்றி கூறிய சிம்பு, நான் அனுஷ்காவின் ரசிகன், அவர் நடித்த அருந்ததியைப் பார்த்து அப்படியே அசந்துட்டேன் என்றார். அனுஷ்காவை பிடிக்கும் என்பதாலேயே வானத்தில் அவரை ஹீரோயினாக்கியிருக்கிறார். இவர்கள் தவிர வேகா, பரத், சோனியா அகர்வால், பிரகாஷ்ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். வேதத்தை இயக்கிய கிரிஷ் வானத்தையும் இயக்கியுள்ளார். இசை யுவன் ஷங்கர் ராஜா. செல்வராகவனுடனான திருமணம் மற்றும் விவாகரத்துக்குப் பிறகு சோனியா அகர்வால் நடிக்கும் முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. பரத்துடன் நடித்தது பற்றி குறிப்பிட்ட சிம்பு, எந்த ஹீரோவுடனும் இணைந்து நடிக்க…
-
- 0 replies
- 621 views
-
-
எந்திரன் படத்தின் பாடல்கள் வீடியோ பார்க்க http://www.thedipaar.com/enthiran/
-
- 2 replies
- 1.6k views
-
-
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ள எந்திரன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் 11.09.2010 அன்று நடைபெற்றது. கலாநிதிமாறன் முன்னிலையில் படத்தின் டிரெய்லரை ரஜினி வெளியிட்டார். படத்தின் இயக்குனர் சங்கர் மற்றும் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் நடிகைகள் மற்றும் தயாரிபாளர்கள், இயக்குனர்கள் உள்பட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் உடன் இருந்தனர். விழாவில் பேசிய கலாநிதிமாறன், எந்திரன் படத்தின் டிரெய்லரை தமிழக முதல்வர் கருணாநிதியிடம் போட்டுக் காண்பித்தேன். டிரெய்லரை பார்த்துவிட்டு வியந்து பாராட்டினார். முதல்வர் கருணாநிதிக்கு எங்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் படத்துக்கு இந்தியா மட்டுமல்ல. உலகம் முழுவதும் அதிகமான எதிர்பார…
-
- 14 replies
- 1.5k views
-
-
சந்திரபோஸ் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டார். அதற்காக, அவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 24ம்தேதி அவருடைய உடல்நிலை மோசமானதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். மேலதிக புகைப்படங்கள் பார்க்கவும்
-
- 1 reply
- 805 views
-
-
காங்கிரஸில் சேருகிறார் அஜீத்?! அஜீத்தைச் சுற்றி எப்போதும் சர்ச்சைகள் இருந்து கொண்டேயிருக்கும் போலுள்ளது. சமீப நாட்களாக அவர் பற்றி உலா வரும் சர்ச்சை... "அஜீத் காங்கிரஸ் [^] கட்சியில் சேரப் போகிறார்" என்பதே. சில நாட்களுக்கு முன்பு அதிமுக பிரமுகர் சைதை துரைசாமி இல்ல திருமண நிகழ்ச்சியில் மனைவி ஷாலினியுடன் பங்கேற்ற அஜித், அங்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். அதனைத்தொடர்ந்து அஜித் அதிமுகவில் சேரப்போகிறார் என்ற செய்தி வெளியானது. ஆனால் அஜித் தரப்பு அதனை மறுத்தது. ஒரு அரசியல் கட்சித் தலைவர் என்கிற முறையில் அவரிடம் அஜித் ஆசீர்வாதம் பெற்றார் என்று அஜித் வட்டார தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் அஜித் விரைவ…
-
- 0 replies
- 553 views
-
-
மறக்காத முகங்கள்: சிதம்பரம் ஜெயராமன் “எம்.ஆர். ராதாவுக்காக கடைசியில் நான் பாடிய பாட்டு” “சங்கீத சௌபாக்யமே...” என்று சம்பூர்ணராமாயணக்’ குரல் வளைய வந்தபோது ரொம்ப சுகமாய்த் தலையாட்டியவர்கள் நிறையபேர். “ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே...” கேட்டு, “காவியமா... ஓவியமா...” கேட்டு ஒன்றிப் போய் சிலாகித்தவர்கள் அநேகம் பேர். நெறுநெறுவென்ற குரல். நல்ல உச்சிக்குப் போய் சாவகாசமாக கீழிறங்கும் ராக ஒழுக்கு. வயதாகியும் குரல் உடையாமலிருக்கிற சிதம்பரம் ஜெயராமனைப் பார்த்தோம். ஒடிசலான வீட்டின் முன் அறை. அடிக்கடி வெற்றிலையும், சீவலையும் மென்று கொண்டு உற்சாகமாகப் பேசுகிறார். செழிப்பான தஞ்சை மாவட்டத்தின் திருவிடை மருதூர். பாரம்பரியமான சங்கீதக் குடும்பத்தில் மூன்று ஆண்பிள்ளைகளில் ஒருவ…
-
- 1 reply
- 2k views
-