வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5548 topics in this forum
-
அப்பனும், ஆத்தாளும் மற்றும் பாரதிராஜாவும்! மண் வாசனை மாறாத இயக்குநர் பாரதிராஜா. அவர் கொடுத்த ஆரம்ப காலப் படங்களில் தெறித்த மண் வாசமும், மனிதர்களின் பாசமும், எத்தனை காலமானாலும் மறக்க முடியாத, ஜீவனுள்ள காவியப் படைப்புகள். அப்படிப்பட்ட பாரதிராஜா, அப்பேர்ப்பட்ட படங்களைக் கொடுத்து ரொம்ப காலமாகி விட்டது. எப்பேர்ப்பட்ட படங்கள் அவை என்ற பிரமிப்பு இன்னும் நீங்காமல் இருக்கும் நிலையில் இடையில் அவர் ஆடிய 'பொம்மலாட்ட'மும், 'கண்களால் கைது செய்'த விதமும் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தைக் கொடுத்தாலும் இப்போது மீண்டும் தனது மண்ணுக்கு பரிவாரங்களுடன் தடபுடலாக கிளம்பியுள்ளார் பாரதிராஜா. பண்ணைப்புரத்து பாண்டவர்களில் ஒருவரான இளையராஜா இல்லாத நிலையில், புரவி வேகத்திலான புதுமை…
-
- 0 replies
- 980 views
-
-
சேனாதிபதியின் சீக்ரெட் பிளான் சேனாதிபதி நடிகர் ஈழத்துக்கு எதிரான தேசிய கட்சியின் தலைவரின் மகனை சந்தித்ததில் ஈழத் தமிழர்களுக்கு பெரும் வருத்தம். சில வெளிநாடு வாழ் தமிழர்கள் இவரது படத்தை புறக்கணிக்கவும் செய்தனர். இந்தக் கசப்பை சீறும் தமிழனின் படத்தில் நடித்து போக்கிக் கொள்ள நினைக்கிறார் சேனாதிபதி. இதனால் சீறும் தமிழர் சிறையில் இருந்தாலும் இணைந்து படம் பண்ணுவது உறுதி என தயாரிப்பாளரிடம் வாக்கு கொடுத்திருக்கிறார். http://tamil.webdunia.com/entertainment/film/gossip/1008/25/1100825038_1.htm
-
- 0 replies
- 814 views
-
-
ஷங்கரின் தடாலடி முடிவு - சரிகிறதா சினிமா சாம்ராஜ்யம்? ஷங்கர் தனது எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தை தற்காலிகமாக மூடுகிறார் என்றொரு பரபரப்பு செய்தி சினிமா உலகத்தை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. இந்த செய்தி உண்மையா என்பது குறித்து ஷங்கர் தரப்பு இன்னும் விளக்கமளிக்கவில்லை. ஷங்கர் ஒருபோதும் எஸ் பிக்சர்ஸை மௌனமாக்கப் போவதில்லை, நஷ்டத்தை கண்டு பதறுகிற மனிதரல்ல அவர் என இன்னொரு தரப்பு நம்பிக்கையூட்டுகிறது. இந்த இரண்டில் எது உண்மை என்பதை ஆராய்வதல்ல நம் நோக்கம். இப்படியொரு பிரச்சனை எதனால் கிளம்பியது என்பதே இன்றைய கவலைதரும் விஷயம். காதல், வெயில், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, ஈரம் போன்ற நல்ல பல சினிமாக்கள் தமிழில் வரக் காரணமாக இருந்ததும், பாலாஜி சக்திவேல், வசந்தபால…
-
- 0 replies
- 792 views
-
-
இலங்கையில் நடைபெற்ற தமிழின அழிப்பு போருக்கு எதிராக போர்குரல் எழுப்பிய வீரமைந்தன் முத்துக்குமார் பற்றிய ஆவண படம் ‘ஜனவரி 29′ என்கிற பெயரில் உருவாகி உள்ளது. இந்த ஆவண படத்தின் வெளியீட்டு விழா நாளை மறுநாள் 29ம் தேதி மதியம் 2.30 மணிக்குஅண்ணா சாலையில் உள்ள பிலிம் சேம்பர் திரையரங்கில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் நடிகர் சத்யராஜ், இயக்குநர் அமீர் கலந்துகொண்டு முதல் சிடி வெளியிட, முத்துக்குமாரின் தந்தை குமரேசன், ரோட்டரி ஆளுநர் ஒளிவண்ணன் பெற்றுக்கொள்கின்றனர். இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, புகழேந்தி தங்கராசு, கவிஞர் அறிவுமதி, கவி…
-
- 1 reply
- 640 views
-
-
பெங்களூருவின் ‘ஆனந்தா நகரில்'யாரைக் கேட்டாலும்,வாணி கணபதியின் அழகான வீட்டை அடையாளம் காட்டி விடுகிறார்கள்.வீடு முழுவதும் அற்புதமான அலங்காரப் பொருட்கள்.நடனக் கலைஞர்,ஆடை வடிவமைப்பாளர், இண்டீரியர் டெகரேட்டர் என வாணிக்குப் பல முகங்கள் இருந்தாலும் கமலின் முன்னாள் மனைவி என்பது தமிழர்கள் மறக்காத விஷயம். கமலுடன் விவாகரத்துக்குப் பிறகு மறுமணம் செய்யாமல் தனித்து வாழ்கிறார். இனிமையாகப் பேசுகிறார். ‘‘20 வருடங்களுக்கு முன்பு கமலைப் பிரிந்து பெங்களூர் வந்தபோது ஒரு செக்கில் கையெழுத்திட மட்டுமே தெரிந்திருந்தது.வேறு ஒன்றையும் தெரிந்து வைத்திருக்கவில்லை.பிறந்த வீட்டில் செல்லமாக வளர்ந்து, புகுந்த வீட்டிலும் சாருஹாசன் அண்ணா, மன்னி, ஹாசினி அக்கா, தங்கைகள் என அனைவரின் அன்புப் பிடியில…
-
- 3 replies
- 4.8k views
-
-
எந்திரன் ஆடியோ ரிலிஸ் பலர் கண்டு களித்தாலும், ஹிந்தி ஆடியோ ரிலீசை பலர் கவனிக்கவில்லை.. உண்மையில் அதுதான் சூப்பராக இருந்ததது,,, ரஜினியின் பேச்சு வெளிப்படையாகவும் , சம்பிரதாயம் அற்றும் இருந்தது... நேமையாக பேசினார். என்னதான் பேசினார்? " ரகுமான் புனித்ததன்மை நிறைந்தவர்,,, ஆன்மிக கடல்,,நன்றாக இசை அமைத்துள்ளார்.. எனக்கு ஜோடியாக நடிக்க ஒத்து கொண்டதற்கு ஐஸ்வர்யா ராய்க்கு நன்றி... நான் மிகைபடுத்தவில்லை,, உண்மையிலேயே நன்றி.. சமிபத்தில் என் சகோதரன் வீட்டுக்கு சென்று இருந்தேன்,, நான் இருப்பதை கேள்விப்பட்டு என்னை பார்க்க ஒரு ராஜஸ்தானி வந்தார்.. அவர்க்கு அறுபது வயது இருக்கும்.. என்ன எப்படி இருக்கீங்க என ஜாலியாக விசாரித்தார்.. என்ன முடியை காணோம் என கிண்டலடித்தார…
-
- 0 replies
- 787 views
-
-
டென்ஷனில் இருக்கிறது திரையுலகம்.இன்னும் யார் யார் பெயர்கள் எல்லாம் வெளிவரப் போகிறதோ என்று பயந்து கிடக்கிறது. காரணம்,ஹைதராபாத்தில் பிடிபட்ட போதை ஆசாமிகள்.தெலுங்கில் பிரபல நடிகர் ரவிதேஜாவின் சகோதரர்கள் இருவர் போதைப்பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட,அவர்களுடன் நைஜீரிய ஆசாமி ஒருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது லேப்டாப்பில் பல நடிகர், நடிகைகளின், வி.ஐ.பி. மகன்களின் தொலைபேசி எண்கள். த்ரிஷா, சார்மி, மதுஷாலினி,காம்னா என்று நடிகைகளின் லிஸ்ட் நீளுகிறது.இந்த நடிகைகள் கடுமையாக இதை மறுத்திருக்கிறார்கள். ‘‘சமீப காலமாகவே திரையுலகில் ராத்திரி பார்ட்டிகளும் ரகசிய விருந்துகளும் அதிகமாகிவிட்டன. இந்த போதை பயங்கரத்துக்கு இதுதான் அடிப்படை காரணம்’’ என்கிறார் திரையுலக…
-
- 0 replies
- 913 views
-
-
அசின் மற்றும் விவேக் ஓபராய் படங்களுக்கு செருப்பு மாலை! புதன், 25 ஆகஸ்ட் 2010 19:49 அண்மையில் இலங்கையின் தலைநகர் கொழும்பில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. தமிழ் மக்களை இலங்கை அரசு நடத்தும் விதம் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்ததனால் இந்த திரைப்பட விழாவில் இந்திய நடிகர் நடிகைகள் கலந்து கொள்ளக் கூடாது என எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அதனையும் மீறி இந்தி நடிகர் விவேக் ஓபராய், நடிகை அசின் ஆகியோர் அவ்விழாவில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பல்வறு தரப்புக்களில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நடிகர் விவேக் ஓபராய், நடிகை அசின் ஆகியோரை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் பல்லடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்லடம் தாசில்தார் அலுவலகம் ம…
-
- 1 reply
- 739 views
-
-
இது சினிமாக்காரர்களின் வாரம்' என்று சொல்லும் அளவுக்கு செப்டம்பர் முதல்வாரம் அமையவிருக்கிறது. 3ஆம் தேதி சூப்பர்ஸ்டார் ரஜினி வீட்டுக் கல்யாணம்.மகள் சவுந்தர்யாவுக்கு 3நாள் கல்யாணம் நடத்தி அழகு பார்க்கிறார்.5ஆம் தேதி கவிப்பேரரசு வைரமுத்து வீட்டுக் கல்யாணம்.மகன் கபிலனுக்கும் டாக்டர் ரம்யாவுக்கும் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திருமணம் நடக்கிறது. 4ஆம் தேதி குஷ்புவின் தயாரிப்பான 'நகரம்' படத்தின் ஆடியோ லாஞ்ச். முதல்வர் கருணாநிதி வெளியிடுகிறார்.கமல்ஹாசன் கலந்து கொள்கிறார். 1ஆம் தேதி 'குவார்ட்டர் கட்டிங்' பட ஆடியோவை சூர்யா வெளியிடுகிறார். (எப்பூடி!) * 'நெல்லு' படத்துக்கு நம்ம ஊரு சென்சார் தடைபோட்டிருக்கு. கீழ வெண்மணியில் நிகழ்ந்த தீகொளுத்தி நிகழ்வை அப்படியே கதை நினைவுபடுத…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஹைதராபாத்: போதை மருந்து கடத்தல் மற்றும் விற்பனையில் தொடர்புடைய நடிகர் நடிகர்கள் யார் யார் என்று ஆந்திர போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த கும்பலுடன் தொடர்பில்லை என்று நடிகை த்ரிஷா மறுத்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் தம்பிகளும், நடிகர்களுமான ரகுபாபு, பரத்ராஜ், இவர்களின் நண்பர் நரேஷ் ஆகியோரை கடந்த 19ம் தேதி 'கோகைன்' என்ற போதை பொருள் கடத்தல் வழக்கில் ஆந்திரா போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு அந்த போதை பொருளை சப்ளை செய்ததாக நைஜீரியா நாட்டைச் சேர்ந்த விக்டர் என்கிற பிரட்லர் சிமா கிளமெண்ட் என்பவர் பிடிபட்டார். நைஜீரியா வாலிபரிடம் இருந்து ஒரு 'லேப் டாப்' கம்ப்ïட்டர், செல்போன், 50 ஆயிரம் ரூபாய், பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள், ந…
-
- 1 reply
- 1.1k views
-
-
பழம்பெரும் நடிகர் ஏ.கே.வீராசாமி சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 84. தென்னிந்திய நடிகர் சங்கத்தில் துணைத் தலைவர் பதவி வகித்த பெருமைக்குரியவர் வீராசாமி. முதல் மரியாதை படத்தில் இவர் பேசிய எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி என்ற வசனமும், அந்தப் படத்தில் இவர் ஏற்று நடித்த பாத்திரமும் இன்றளவும் மக்கள் மனதை விட்டு அகலவில்லை. ஜெமினி கணேசனின் உன்னைப் போல் ஒருவன் படத்தில் நடித்தவர். அதற்காக தேசிய விருதும் பெற்றழர். எம்.ஜி.ஆருடன் பணம் படைத்தவன் படத்தில் நடித்துள்ளார். கமல்ஹாசனின் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் நடித்திருந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் வீராசாமி நடித்துள்ளார். வயோதிகம் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டிருந்தார். இந்த …
-
- 0 replies
- 1.5k views
-
-
விஞ்ஞானி வசீகரன் தனது பத்து வருட உழைப்பில் ஒரு ரோபோவை உருவாக்குகிறார். அதற்கு மனிதனைப் போல் ஆறறிவு உண்டு. ஒரு கட்டத்தில் விஞ்ஞானி ரஜினி, தனது காதலி ஐஸ்வர்யாராயை, தான் உருவாக்கின ரோபோவிற்கு அறிமுகப்படுத்துகிறார். ரோபோவைப் பார்த்து ஆச்சர்யப்படும் ஐஸ்வர்யாராய், நான் உங்களைப் பார்க்கும் முன் இந்த ரோபோவைப் பார்த்திருந்தால் கண்டிப்பாக இந்த ரோபோவைத்தான் காதலிப்பேன் என்று கூறுகிறார். இதை கேட்ட ரோபோ ரஜினிக்கு ஐஸ்வர்யாராய் மேல் காதல் பிறக்கிறது. ஐஸ்வர்யாராயை எப்படியும் அடைந்தே தீருவேன் என்று முரண்டு பிடிக்கிறது. இதை கேட்டு அதிர்ச்சியுற்ற விஞ்ஞானி ரஜினி, அதன் மனதை மாற்ற எவ்வளவோ முயற்சி எடுக்கிறார். ஒரு கட்டத்தில் விஞ்ஞானி ரஜினியைக் கொன்றுவிட்டு, ஐஸ்வர்யாராயை அடைய திட்டமிடும் ரோ…
-
- 0 replies
- 888 views
-
-
சல்மான்கானோடு இலங்கை சென்ற அசினுக்கு எழுந்த எதிர்ப்பைப் பார்த்து கோலிவுட் மீது செம கடுப்பில் இருக்கிறதாம் பாலிவுட். ‘தென்னிந்திய நடிகைகளோடு இனி நடிக்கமாட்டோம்’ என்று சல்மான்கானை வைத்து மற்ற ஹீரோக்களிடம் ஒரு சஸ்பென்ஸ் பிரசாரமே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.இதன் முதல் கட்டமாக பிரியதர்ஷன்தன் இந்திப்படத்தில் சல்மான்கானையும், பிரியாமணியையும் ஒப்பந்தம் செய்திருக்கிறார். இது தெரிந்து சல்மான் -‘‘பிரியாவை நீக்கிவிட்டு வேறு யாரையாவது போடுங்கள்.அதுவும் பாலிவுட் ஹீரோயினாகத்தான் இருக்க வேண்டும்’’ என்று கண்டிஷன் போட்டு விட்டாராம். இது பற்றி பிரியாமணியிடம் பேசினோம். கோடம்பாக்கத்தின் மேல் அப்படியென்ன கோபம், உங்களை அதிக படங்களில் பார்க்க முடியவில்லையே? ‘‘நல்ல ர…
-
- 2 replies
- 1.3k views
-
-
சென்னை கம்பன் விழாவில், ஈழத் தமிழர் நிலை பற்றிய பேச்சை கேட்டு நடிகர் ரஜினிகாந்த் கண்கலங்கினார். கம்பன் கழகம் சார்பில், 36-வது ஆண்டு கம்பன் விழா சென்னை மைலாப்பூரில் உள்ள ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் 3 நாட்கள் நடைபெற்றது. இறுதி நாளன்று, “கம்பன் புலமை, திருவள்ளுவர் வழியில் பெரிதும் வெளிப்படுவது அறத்திலா, பொருளிலா, இன்பத்திலா” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. விழாவில், கம்பன் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், புதுவை தர்மராஜன், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், ஏ.வி.எம்.சரவணன், சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி மோகன், மூத்த வக்கீல் காந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். பட்டிமன்றத்தில் இலங்கையைச…
-
- 1 reply
- 945 views
-
-
-
- 4 replies
- 5.6k views
-
-
-
எந்திரன் படத்தில் இரும்பிலே ஒரு இருதயம் முளைத்ததோ என்ற பாடலைப் பாடிய லேடி கேஷ் கிரிஸ்ஸி ஒரு வானொலிக்கு கொடுத்த பேட்டியை தமிழ் வாசகர்களுக்காக இங்கு தருகிறோம். http://www.youtube.com/watch?v=AcclTaRF_Yk&feature=player_embedded
-
- 0 replies
- 815 views
-
-
நல்ல ஆங்கில படங்கள். ஆங்கில படங்கள் பார்ப்பதென்றால் எனக்கு அலாதி பிரியம். யாழ்ப்பாணத்தில் ரீகல்,றியோ,மனோகரா,சிறீதர்,லிடோ,ராஜா போன்ற தியேட்டர்களில் ஆங்கிலப் படங்கள் வரும்.ரீகல் மாத்திரம் தான் நிரந்தர ஆங்கில எனக்கு பிடித்த தியேட்டர்.சிறுவயதிலேயே அப்பா போர்ன் பிறீ,தெ இன்கிறடிபில் ஜேர்ணி இந்த இரு படத்திற்கும் கூட்டிக் கொண்டு போனார்.பின்னர் வளர எத்தனையோ படங்கள் பார்த்தேன்.இப்பவும் எனது நம்பர் வன் படம் வன் புலு ஓவெர் தெ கூகூஸ் நெஸ்ட் அங்குதான் பார்த்தேன். எனது கட்டாய லிஸ்டில் கொஞ்சப் படங்களுள்ளது ஆங்கில பட பிரியர்கள் விரும்பினால் பார்க்கவும். 2.கோட் பாதெர். 3.கிறமர் Vஸ் கிறமர் 4.டக்சி ட்ரிவெர் 5.மிட்னைட் எக்ஸ்பிரஸ் பட்டியல் ரொம்ம்ப நீளம் சந்தர்ப்பம் வரும் போது ஒ…
-
- 6 replies
- 5.9k views
-
-
http://www.youtube.com/watch?v=roU0oalmLwE&feature=player_embedded நன்றி: http://www.thedipaar.com/showtime.php?filmname=Paiyaa&country=canada
-
- 4 replies
- 1.2k views
-
-
தமிழு.." மற்றும் "வதை" ஆகிய குரும்படங்களால் பரவலான வரவேற்பை பெற்றவர் கீரா. பல சிறு கதைகளைப் படைத்தவர். இவர் தங்கர்பச்சானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். ஈழத்தமிழர் அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டவர். பச்சை என்கிற காத்துப் அடத்தின் மூலம் இயக்குநர் ஆகியிருக்கும் அவரைச் சந்தித்தோம். உற்சாகத்துடன் பேசினார். குரும்படம் "பல படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறேன். ஒரு பாலியல் தொழிலாளியின் நிஜ வாழ்க்கையை "தமிழு" என்ற குரும்படமாக்கினேன். அது போலவே ஈழத்தமிழ்பெண் ஒருத்தியின் கதையை "வதை" குரும்படமாக உருவாக்கினேன். இரண்டு குரும்படங்களும் எனக்கு நல்ல அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது. அதுதான் தற்போது நான் இயக்குனர் அவதாரம் எடுப்பதற்கு காரணமாக இருந்திருக்கிறது. …
-
- 1 reply
- 1k views
-
-
என் இனிய இயந்திரா... இந்த தூர்தர்சன் சீரியல்...பள்ளிகாலங்களில் 8 அல்லது 9 வகுப்போ என சரியாக நினைவில் இல்லை...சிவரஞ்சனி... நடித்திருப்பார்.. நல்லதொரு தொல்லை காட்சி தொடர்.. முன்கூடியே ரொம்ப அட்வான்சாக சுஜாதாவினால் எழுதப்பட்டது... 3000 ஆண்டுகளில் உலகம் எப்படி இருக்கும் என்பதானா ஒரு தொடர்... அப்போது உலகம் முழுவதும் இயந்திர மனிதன் (ரோபோ) கட்டுபாட்டில் இருக்கும்... மனிதர்கள் அதற்கு அடிமைகளாக இருப்பார்கள்..60 வயதிற்குமேல் யாரும் உயிரோடு இருக்கமுடியாது ... எல்லாம் மக்கள் தொகை பெருக்கம் தான்... ரோபாக்கள் அழைத்து சென்று கொன்றுவிடும்.. அதே போல பிள்ளை பெறுவதற்கு இயந்திர அரசாங்கத்திடம் லைசன்ஸ் பெறவேண்டும்... ஜீனோ என்ற நாய்குட்டி அதுவும் ரோபோதான் ... ஆனால் மனிததன்மையோடு அவர்களுக்க…
-
- 0 replies
- 1.7k views
-
-
சூர்யா - ஸ்ருதி கமல் இணையும் ஏழாம் அறிவு on 04-08-2010 22:14 சூர்யாவும் ஸ்ருதி கமலும் இணைந்து நடிக்கும் படம் 7 ஆம் அறிவு. இந்தப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சூர்யாவும், முருகதாஸும் இணையும் இரண்டாவது படம் ஏழாம் அறிவு. இந்தப் படத்தை முழுக்க முழுக்க வெளிநாடுகளில் எடுக்கத் திட்டமிட்டுள்ளது ஏழாம் அறிவு படக்குழு. ஏழாம் அறிவு - க்கு இசையமைக்க இருப்பது ஹாரீஸ் ஜெயராஜ். படத்தின் அதிகபட்சக் காட்சிகளை சீனாவில் படம் பிடிக்கத் திட்டமிட்டுள்ளார் முருகதாஸ். இப்படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் சர்க்கஸ் கம்பெனியில் விலங்குகளுக்கு ட்ரெய்னிங் கொடுக்கும் கதாபாத்திரம் என்ற ஒரு பேச்சும் அடிபடுகிறது. இதுபற்றித் தெரிவித்த ஏ.ஆர்.முருகதாஸ், இந்தப்படம் உலகையே திரும்பிப் பா…
-
- 26 replies
- 4.3k views
-
-
பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலே http://video.google.com/videoplay?docid=-3662048737353732425
-
- 0 replies
- 756 views
-
-
எந்திரன் தெலுங்குப் பதிப்பின் உரிமை ரூ 30 கோடிக்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்திய சினிமாவில் மொழிமாற்றம் செய்யப்பட்ட ஒரு படம் இந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தமிழைப் போலவே தெலுங்கிலும் ரசிகர்கள் ஏராளம் உள்ளனர். அவரது அனைத்துப் படங்களுமே தமிழில் வெளியாகும் அதே நேரம் தெலுங்கிலும் வெளியாவது வழக்கம். பாட்ஷா படம் தெலுங்கில் வெள்ளி விழாவைத் தாண்டி ஒடி வசூலில் புதிய சாதனைப் படைத்தது. முத்து, அருணாச்சலம், படையப்பா, சிவாஜி போன்ற படங்கள் வெளியான போது, தெலுங்கின் மற்ற முன்னணி நடிகர்களது படங்களைக் கூட நிறுத்திவைத்தனர் விநியோகஸ்தர்கள். இப்போது பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ள எந்திரன் படம், தெலுங்கில் ரோபோ…
-
- 0 replies
- 511 views
-
-
இந்தியாவில் அதிக செலவில் தயாராகியுள்ள முதல் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ள எந்திரன் திரைப்படம். எதிர் வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஸ்டில்ஸ் பல இப்போது வெளியாகி படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை கூட்டியுள்ளன என்பதை இங்குள்ள படங்களைப் பார்த்தாலே நீங்கள் புரிந்து கொள்வீகள். நன்றி: http://www.thedipaar.com/cinema/cinema.php?id=4347
-
- 3 replies
- 882 views
-