Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. சினிமாவின் வயது நூறையும் தாண்டிவிட்டது! இன்று உலகின் பொழுதுபோக்கு சாதனங்களில் முதல் இடத்தில் இருப்பதும் சினிமாதான்! இந்தச் சினிமாதான் இன்று தமிழ் கலாச்சாரங்களை அழிக்கும் புதிய நோயாக உருமாறியிருக்கின்றது!. இப்பொழுது உருவாகின்ற சினிமாக்கள் எல்லாம் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு தமிழர் சமுதாயத்தை அழித்தே தீருவோம் என சபதமெடுத்து செயல்படுவதைப்போலவே வெளிவருகின்றன!. இந்தக் குற்றச்சாட்டு எங்கோ ஒரு மூலையில் இருந்து எழுந்தது அல்ல? தமிழ் மக்களின் எதிர்கால வாழ்வின்மீது அக்கறையுள்ளவர்களால் நாலா பக்கங்களில் இருந்தும் குவிந்தவண்ணமே இருக்கின்றது. முன்னர் வந்த திரைப்படங்களில் இப்படியான கலாச்சாரச் சீரழிவுகள் இருக்கவே இல்லை. இப்பொழுதுதான் மேலை நாட்டு நாகரீகங்களைப் பின்பற்றி ஆடை…

    • 2 replies
    • 1.5k views
  2. நடிகர் வடிவேலு குற்றவாளிகளை அடையாளங்காட்டினார் நடிகர் வடிவேலு வீடு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் ஆதரவாளர்கள் பதினைந்து பேர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்தது. குற்றவாளிகளை அடையாளங்காட்டுவதற்காக வடிவேலு அழைக்கப்படிருந்தார். வழக்கு சம்பந்தமான முதல் விசாரணையில் குற்றவாளிகளை அடையாளங்காட்டினார் வடிவேலு. ஆனால் குற்றவாளிகளில் ஐந்து பேர் மட்டுமே இன்று விசாராணைக்கு வந்தனர். விஜயகாந்த் மைத்துனர் எல்.கே.சுதீஷ் உட்பட பலர் வரவில்லை. இதனால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  3. சினிமாவில் யாரிடமும் ஆலோசனை கேட்க மாட்டேன் என்றார் நயன்தாரா. இதுகுறித்து அவர் கூறியதாவது: சினிமாவில் எனக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்கிறேன். யாருடைய ஆலோசனைகளையும் கேட்பதில்லை. என் மானேஜரிடம் மட்டுமே கலந்தாலோசிப்பேன். இந்த கேரக்டர் செய்யவேண்டாம், கிளாமராக நடிக்காதே போன்ற அட்வைஸ்களை மற்றவர்கள் சொல்ல தேவையில்லை என்று நினைக்கிறேன். அது என் தனிப்பட்ட பிரச்னை. தொடர்ந்து கிளாமருக்குத்தான் முக்கியத்துவமா என்கிறார்கள். அப்படியில்லை. கதையையும், உடன் நடிக்கும் ஹீரோ மற்றும் நிறுவனத்தை பொருத்தது அது. நான் நடிக்க வேண்டும் என்று நினைக்கிற போது நல்ல கேரக்டர்கள் கிடைப்பதில்லை. பெரிய ஹீரோ, பேனரிலிருந்து கிளாமராக நடிக்கச் சொல்லி கேட்கும் போது, அதை எப்படி மறுப்பது?…

    • 4 replies
    • 1.3k views
  4. என்னை கவனிப்பதைவிட நான் நடிக்கும் படங்கள் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்றார் திவ்யா.அவர் கூறியதாவது:என் வாழ்வில் பல முறை கடுமையான கட்டங்களை கடந்திருக்கிறேன். விளம்பரங்களுக்கு போஸ் கொடுக்க கேட்டு நிறைய வாய்ப்புகள் வருகிறது. தேர்வு செய்துதான் ஒப்புக்கொள்கிறேன். என்னை கவனிப்பதைவிட நான் நடிக்கும் படங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்று எண்ணுகிறேன். எவ்வித எதிர்மறை கேள்விகளுக்கும் இனி பதில் அளிக்கப்போவதில்லை. ஏதாவது ஒரு கருத்தை சொன்னால் அதை ஊதி பெரிதாக்கி விடுகிறார்கள். கதையே கேட்காமல் நட்புக்காகவும். மரியாதைக்காகவும் ஒப்புக்கொண்ட சில படங்கள் தோல்வியாக அமைந்தது. அதைப்பற்றி பேசுகிறவர்கள், 2008ல் பெரிய ட்டான எனது படங்களைப்பற்றி பேச தயங்குவது ஏன்? தமிழில் Ôபொல்லாதவன்Õ வெற்றிக்கு…

  5. விஜய், நயன்தாரா நடிக்கும் படம் 'வில்லு'. பிரபுதேவா இயக்கியுள்ள இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. படத்தை தணிக்கை குழுவினர் நேற்று முன்தினம் பார்த்தனர். சில காட்சிகளுக்கு கட் கொடுத்துவிட்டு யு/ஏ சர்டிபிகேட் வழங்கியுள்ளனர். இதில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் விஜய். -தினகரன் http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=470

    • 0 replies
    • 1.5k views
  6. சூர்யா நடிக்கும் படத்துக்கு ‘ஆதவன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது கே.வி.ஆனந்த் இயக்கும் ‘அயன்’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதையடுத்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘ஆதவன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சூர்யா ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்கள் ஏற்கனவே ‘கஜினி’ படத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து மிஷ்கின் இயக்கும் ‘முகமூடி’ படத்தில் சூர்யா நடிக்கிறார். http://www.cinemaseithi.com/

    • 0 replies
    • 1.2k views
  7. Started by nunavilan,

    அபியும் நானும் குண்டு குழிகள் நிறைந்த கோலிவுட் நெடுஞ்சாலையில், நின்று நிதானமாக நடை போடுபவர் ராதாமோகன். காட்டுக் கூச்சல்களுக்கு நடுவிலும், ராதாமோகன் பேசும் 'மொழி'யில் எப்போதும் இருக்கும் ஒரு தாலாட்டின் அழகு! அப்படி ஒரு தாலாட்டுதான் அபியும் நானும்... 'குழந்தை பிறக்கும் போதே கூடவே ஒரு அப்பாவும் பிறக்கிறான். ஆனால் குழந்தைகள் வளர்ந்துவிடுகின்றன. அப்பா மட்டும் அப்படியே வளராமலே இருக்கிறான்'. க்ளைமாக்சில் வரும் இந்த வசனங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். தனது பெண் குழந்தை மீது இவர் வைத்திருக்கும் அளவு கடந்த பாசம்தான் கதை. முன்று வயது குழந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஒரு பிச்சைக்காரனையே வீட்டுக்குள் சேர்த்துக் கொள்ளும் பிரகாஷ்ராஜ், அவள் வளர்ந்து பெர…

  8. பெர்லின் திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவில் முதன்முறையாக தமிழ் குறும்படம் இடம்பெறுகிறது.பிரதீபன் என்பவர் இயக்கி உள்ள குறும்படம் ‘என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம்’. இலங்கையில் போரினால் தமிழ் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பை கருவாக கொண்ட இப்படத்திற்கு சி.ஜே. ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராகவா அர்ஸ் எடிட்டிங் செய்துள்ளார். இந்த படம் பிப்ரவரி மாதம் நடைபெறும் பெர்லின் திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் பங்கேற்கிறது. தென்னிந்திய படம் ஒன்று இங்கு போட்டி பிரிவில் பங்கேற்பது இதுவே முதல்முறை. http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=458 -தினகரன்

  9. நடிகைதானே… இவர்களுக்கென்ன மரியாதை வேண்டியிருக்கிறது…’ இதுதான் நடிகைகளைப் பற்றிய பலரது மனநிலை. தங்களைப் பற்றிய எத்தனையோ அசிங்கமான செய்திகளைப் படித்தாலும் அதற்கெல்லாம் கொஞ்சமும் வருந்தாமல் அல்லது அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பொழுதுபோக்குத் துறையில் சிரிப்போடு வலம் வருவதும் ஒரு சவால்தான். இன்று தென்னிந்தியாவின் முன்னணி நடிகை த்ரிஷாவுக்குப் பிறந்த நாள். நிச்சயம் சக நடிகர் நடிகைகளுக்கு அமர்க்களமாக அவர் இரவு விருந்து கொடுத்திருப்பார் என்றாலும், அதற்கு முன் அவர் செய்த ஒரு நல்ல காரியம் அனைவரையும் நெகிழச் செய்தது. மாலை 4 மணிக்கு மேல் அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்கு வந்த த்ரிஷா, அங்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் ஏராளமான குழந்தைகளுடன் சேர்…

  10. ராசு மதுரவன் இயக்கும் படம் ‘மாயாண்டி குடும்பத்தார்’. இதில் தருண்கோபி, பொன்வண்ணன், சீமான் உட்பட 10 இயக்குனர்கள் இணைந்து நடிக்கின்றனர். ஹீரோயின்களாக பூங்கொடி, தமிழரசி அறிமுகமாகின்றனர்.இப்படத்தில

    • 1 reply
    • 2.2k views
  11. தமிழில் கவர்ச்சி மோகம் விரைவில் மாறும் என்றார் டைரக்டர் விக்ரமன். அவர் கூறியதாவது:பொள்ளாச்சியை தொடர்ந்து மூணாறு, மற்றும் கேரள பகுதிகளில் மரியாதை படப்பிடிப்பு முடிந்து இப்போது காரைக்குடியில் நடக்கிறது. Ôவானத்தை போல, சூர்ய வம்சம் படத்துக்கும், மரியாதைக்கும் துளியும் சம்பந்தம் இருக்காது. குடும்பத்தில் மூத்த அண்ணனாக வானத்தை போலபடத்தில் அமைதியாக வருவார் விஜயகாந்த். இப்படத்தில் கம்பீரமான தந்தையாக வருகிறார். எல்லா இளைஞர்களுக்கும் இந்த அப்பாவை பிடிக்கும். கதையுடன் நகைச்சுவையும் இணைந்து வரும். நாயகி மீரா ஜாஸ்மின், ரமேஷ் கண்ணா, ஹீரோ விஜயகாந்த் என எல்லா கேரக்டர்களுமே காமெடியில் கலக்குவார்கள். இப்போதெல்லாம் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் படங்கள்தான் ஓடுகிறது என்கி…

  12. அசின் அளவுக்கு கிளாமராக நடிப்பேன் என்றார் பூனம் பஜ்வா.தெனாவட்டு ஹீரோயின் பூனம் பஜ்வா கூறியதாவது:தெலுங்கில் 4, கன்னடத்தில் ஒன்று என 5 படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் நடித்த தெனாவட்டுதான் நான் நடித்து கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற்ற படம். எனது சொந்த ஊர் புனே. ஆனாலும் தென்னிந்திய படங்களில் குறிப்பாக தமிழில் பிரபலமாக வேண்டும் என்பதுதான் ஆசை. ஹீரோவுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள்தான் தமிழில் அதிகம் என்பதை புரிந்திருக்கிறேன். எல்லா ஹீரோக்களுடனும் நான் நடிப்பேன். அதேநேரம் நடிப்பை வெளிப்படுத்தும் படங்களுக்கும், ஹீரோயினை மையமாக வைத்த கதைகளுக்கும் முன்னுரிமை தருவேன்.¨ நீங்கள் கிளாமராக நடிப்பீர்களா? என்கிறார்கள். கிளாமராக நடிக்கும் நடிகைகளை பற்றி நான் விமர்சிக்க …

  13. மோதி விளையாடு’ படத்தில் டிரம்ஸ் சிவமணி நடிக்கிறார். உலகப் புகழ்பெற்ற டிரம்ஸ் இசைக்கலைஞர் சிவமணி. சரண் இயக்கும் படம் ‘மோதி விளையாடு’. வினய், காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கின்றனர். ஹரிஹரன், லெஸ்லி இணைந்து இசையமைக்கின்றனர். இப்படத்தின் பாடல் மற்றும் சண்டைக்காட்சிகள் கிரீஸ், துபாயில் நடைபெற இருக்கிறது. இந்தப் படத்துக்காக, வைரமுத்து எழுதிய, ‘மோதி விளையாடு’ என்று தொடங்கும் பாடல் காட்சியில் ஹரிஹரன், லெஸ்லியுடன் டிரம்ஸ் சிவமணி நடிக்கிறார். இப்பாடலை ஹரிஹரன், லெஸ்லியுடன் இசையமைப்பாளர் தேவா பாடியுள்ளார். -தினகரன் http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=451

  14. கோயிலில் அர்ச்சகராக இருக்கும் சிம்பு, அம்மாஞ்சி அம்பி. பருப்பு சாதம் சாப்பிடும் அம்பி, ஒரு கட்டத்தில் ரௌடிகளைக் கொத்து பரோட்டா போடும் சூழல் வருகிறது. 'என்னமோமேட் டருப்பா' என யோசிக்கும்போதே, ஜெயிலில் இருந்து ரிலீஸான பிரபு, சிம்புவைத் தேடி வருகிறார். அங்கே விரிகிறது இன்னொரு சிம்புவுக்கான வீர ஃப்ளாஷ்பேக். பங்காளிச் சண்டையில்ஃப்ளாஷ் பேக் முடிவில் சிம்பு உயிரை விடுகிறார். அதிரடி சிம்புவுக்கும் இந்த அம்மாஞ்சி சிம்புவுக்கும் என்ன தொடர்பு என்பதை ரத்தம், சத்தம், ஆபாசம் தெறிக்கச் சொல்லும் ஆட்டம்! ஐயர் சிம்பு யார் என்பதில் சஸ்பென்ஸ் வளர்த்துக்கொண்டே சென்று, படாரென்று உண்மையை உடைக்கும் இடத்தில் நிமிர்ந்து உட்காரவைக்கிறார் அறிமுக இயக்குநர் சரவணன். மகா மெகா மைனஸ்... நெளியவைக…

  15. நடிகர் சத்யராஜ் ரஜினி தன் மிகச்சிறந்த நண்பர் என்று கூறியுள்ளார்.ஓகேனக்கல் உண்ணாவிரதத்தின்போது சத்யராஜ் ஆற்றிய உரை நேரடியாக ரஜினியைத் தாக்குவதுபோலவே அமைந்திருந்தது. ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான உண்ணாவிரத மேடையில் ரஜினியைப் பாராட்டிப் பேசியது போல இருந்தது. பெரியார் வலைக்காட்சியின் முதலாமாண்டு நிறைவையொட்டி சத்யராஜ் வழங்கிய சிறப்புச் செவ்வியில் இது குறித்து உண்மையில் ரஜினி பற்றிய உங்கள் கருத்து என்ன? எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு சத்யராஜ் பதிலளிக்கையில், உண்மையில் ரஜினி சார் என்னுடைய நெருங்கிய நண்பர். என் மீது மிகவும் அக்கறை கொண்டவர்.ஓகேனக்கல் உண்ணாவிரதத்தின்போது நான் ரஜினியை திட்டிப் பேசவில்லை. கர்நாடகத் தமிழர்கள் பிரச்சினையில் அவர் கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டாரோ வ…

    • 0 replies
    • 1.6k views
  16. "இலங்கையில் நடைபெறும் கொடிய போரினால் ஈழத் தமிழர்கள் படும் அவலங்களையும், காஷ்மீர் மாநில மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும், திரைப்படமாக வெளியிட தயாரிப்பாளர்கள் முன்வந்தால் அதை அதை நான் ஒரு ரூபா கூட வாங்காமல் இலவசமாக இயக்கத் தயாராகவுள்ளேன்." - இவ்வாறு ஈழத் தமிழர் ஆதரவாளரும் தென்னிந்தியத் திரைப்பட இயக்குநருமான அமீர் உறுதியளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:- இலங்கையில் நடைபெறும் இன அழிப்புப் போரினால் ஈழத் தமிழர்கள் சொல்லெண்ணாத் துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இவர்களின் உண்மையான முகத்தை வெளியுலகிற்கு கொண்டுவர இது ஒரு நல்ல சந்தர்ப்பம். அதேபோல் காஷ்மீர் மாநிலத்திலும் மக்கள் பெரும் துன்ப துய…

  17. "புரட்சி முடியவில்லை. போர் தான் வெற்றி கொள்ளப்பட்டிருக்கிறது. புரட்சி இப்பொழுதுதான் தொடங்குகிறது." - கியூப போர் முடிவுக்கு வந்ததும் சே குவேரா சொன்னது. சே குவேரா (பாகம் 1) சே குவேரா பற்றிய திரைப்படம் (/ஆவணப்படம்). சே குவேராவின் REMINISCENCES OF THE CUBAN REVOLUTIONARY WAR என்கிற புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம்: 1) http://www.zshare.net/video/53086229b851eacd/ 2) http://www.zshare.net/video/53087580354f86c8/ 3) http://www.zshare.net/video/530878292bcfcd06/

  18. நான் கிளாமராக நடித்தால் மட்டும் குற்றம் சொல்கிறார்கள் என்று பிரியாமணி கூறினார்.‘ஆறுமுகம்’ படப்பிடிப்பில் இருந்த பிரியாமணி கூறியதாவது: இந்தப் படத்தில் கிளாமராக நடிக்கிறீர்களாமே என்று கேட்கிறார்கள். நான் கிளாமராக நடித்தால் மட்டும் ஏன் குற்றம் சொல்கிறார்கள். மற்றவர்கள் நடித்தால் அதை பற்றி எதுவும் பேசுவதில்லை. தெலுங்கில் ‘துரோனா’ படத்தில் நீச்சல் உடையில் நடித்தது பற்றி கேட்கிறார்கள். நீச்சல் குளத்தில் குளிக்கப் போகும்போது பட்டுச்சேலை கட்டிக் கொண்டு யாரும் குளிப்பதில்லை. சினிமாவில் கிளாமர் தவறில்லை. அதை ஒரு விஷயமாக பேசிக் கொண்டிருப்பதுதான் தவறென்று நினைக்கிறேன். http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=445 -தினகரன்

  19. ரஜினி நடிக்கும் எந்திரன் படத்தின் ஷூட்டிங் 3 நாட்களாக மீஞ்சூரில் நடந்தது. ரஜினிகாந்த்-ஐஸ்வர்யாராய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. தினமும் இரவு 7 மணிக்கு படப்பிடிப்பு தொடங்கி, மறுநாள் அதிகாலை 3 மணி வரை படப்பிடிப்பு நடந்து வந்தது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக, ரஜினி தனது போயஸ் கார்டன் வீட்டிலிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டார். கோயம்பேடு 100 அடி ரோடு வழியாக மீஞ்சூருக்கு போய்க் கொண்டிருந்தபோது மணலி அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல கிலோ மீட்டர் தூரத்துக்கு பஸ், கார், வேன் மற்றும் கண்டெய்னர் லாரிகள் நின்றிருந்தன. இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கியவர் இரவு 7 மணி வரை மீஞ்சூரை அடை…

  20. பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா தம்பதியின் மகள் த்ரிஷா. மகள் மீது அதிக பாசம் கொள்ளும் பிரகாஷ்ராஜ், அவள் பள்ளிக்குச் செல்லும்போது ஏற்படும் சிறு பிரிவைக்கூட தாங்க முடியாமல் பரிதவிப்பவர். தந்தையும், மகளும் இணைபிரியாத நண்பர்களாகப் பழகுகின்றனர். த்ரிஷாவுக்கு டெல்லியில் எம்.பி.ஏ படிக்க இடம் கிடைத்து, விஷயத்தைச் சொன்னதும், ‘பொண்ணை பிரிஞ்சு என்னால இருக்க முடியாது’ என்று பிரகாஷ்ராஜ் குதிக்கிறார். ஆனால், ஐஸ்வர்யாவின் வார்த்தைகளால் மனம் மாறி டெல்லிக்கு அனுப்புகிறார். இரு வருடங்கள் கழித்து திரும்பி வந்த த்ரிஷா, பஞ்சாப் இளைஞன் கணேஷ் வெங்கட்ராமைக் காதலிப்பதாக வெடிகுண்டு வீசுகிறார். மகள் மீது கொண்ட அதீத பாசத்தால், மனம் உடைந்து சிதறும் பிரகாஷ்ராஜ், திருமணத்துக்கு சம்மதிக்க மறுக்கிறார். பிற…

  21. மலையாள திரையுலகில் இருந்து ஐயா படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. மலையாளத்தில் நடித்துக் கொண்டிருந்த போது அதிகம் பிரபலமாகாத இவர், தமிழில் நடிக்க தொடங்கிய சில வருடங்களில் நடிகர் ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நம்பர் ஒன் நடிகையானார்.தொடர்ந்து தமிழிலிலிருந்து தெலுங்கில் கால் பதித்த நயன்தாரா அங்கும் தனி முத்திரை பதித்தார். தெலுங்கு படஉலகில் அதிக சம்பளம் வாங்கும் முதல் நடிகை என்ற பெயரையும் பெற்றார். தெலுங்கில் டைரக்டர் லிங்குசாமி இயக்கும் பையா படத்திற்காக நயன்தாராவுக்கு ரூ.1.25 கோடி சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல நகைக்கடை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நடிகை நயன்தாரா நேற்று திருவனந்தபுரம் வந்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்து க…

  22. இப்போது தான் 2007 ஆண்டு முடிந்தது போல் இருந்தது. உடனே 2009ஆம் ஆண்டு நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறோம் என்றால் நம்ப முடியவில்லை. வேகமான உலகத்தில் காலச் சக்கரம் அதி வேகமாகச் சுழன்றுகொண்டு இருக்கிறது. தமிழ் சினிமாவின் வேகம், உலகத் தரத்தை நோக்கிச் செல்லும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறது. கிராமத்தில் நிலத்தை விற்றுப் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் எல்லாம் மறைந்து பல கார்ப்பரேட் நிறுவனங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் சினிமா தயாரிப்பில் நுழைந்து இருப்பது இந்த ஆண்டு ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் பல நடிகர், நடிகைகளின் முகத்தில் சந்தோஷம் வரத் தொடங்கியிருக்கிறது. சரி ! இந்த வருடம் வெளிவந்த படங்களை ஒரு பார்வை பார்ப்போம். நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினி, கமல் படங்கள் ஒரே…

  23. பையா படத்தில் நடிக்க மறுத்ததால் நயன்தாராவுக்கு தடை விதிப்பது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஆலோசித்து வருகிறது.லிங்குசாமி தயாரித்து இயக்கும் படம் பையா. இதில் கார்த¢தி ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் வேடத்துக்கு நயன்தாரா ஒப்பந்தமானார். இப்படத்துக்காக ரூ. 1 கோடியே 25 லட்சம் அவருக்கு சம்பளமாக பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ரூ. 25 லட்சத்தை அட்வான்சாக அவருக்கு வழங்கப்பட்டதாம். இப்படத்தின் ஷ¨ட்டிங் அக்டோபரில் தொடங்குவதாக இருந்தது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். அப்பட ஷ¨ட்டிங் முடியாததால் பையா பட ஷ¨ட்டிங் தள்ளிப்போனது. Ôதனது கால்ஷீட்டை வீணடித்து விட்டதாகவும் இனி அப்படத்தில் நடிக்கும் எண்ணம் இல்லைÕ என்றும் நயன்தாரா கூற¤னார். இதையடுத்த…

  24. தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவனுக்கு அழகான மனைவி அமைந்தால்...? அதனால் ஏற்படும் பிரச்னைதான் ‘திண்டுக்கல் சாரதி’.திருமணத்துக்கு பார்த்த பெண்கள் எல்லோரும், ‘இவரா... மாப்பிள்ளை, வேண்டாம்‘ என்று சொல்ல, வருத்தத்தில் இருக்கிறார் கருணாஸ். புரோக்கர் மூலமாக கார்த்திகாவை பெண் பார்க்கச் செல்கிறார்கள். இவளும் தன்னை வேண்டாம் என்று சொல்லிவிடுவாள் என நினைத்து கிளம்ப நினைக்கிறார் கருணாஸ். ஆனால், மாப்பிள்¬ளையை பிடித்திருக்கிறது என்கிறார் கார்த்திகா. ஆச்சர்யமடையும் கருணாஸ், சந்தோஷத்தில் திக்குமுக்காடுகிறார். அழகான மனைவி அமைந்ததில் அவர் மீது வைக்கும் பாசம் எல்லை மீறி போகிறது. சந்தேகமடைகிறார். விவகாரம் பெரிதாகி, குடும்பத்தில் பிரச்னை. தனது வீட்டுக்குச் சென்றுவிடுகிறார் கார்த்திகா. பிறகு எ…

  25. விஜய், நயன்தாரா நடிப்பில் பிரபு தேவா இயக்கியுள்ள படம் வில்லு. இந்தியில் ட்டான சோல்ஜர் படத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக் காட்சி டியூப் தமிழ் என்ற வெப்சைட்டில் வெளியாகியுள்ளது. இதில் வில்லன் கூட்டத்தாருடன் விஜய் மோதுவது போன்ற சண்டைக் காட்சி இடம்பெற்றுள்ளது. தகவல் அறிந்த வில்லு படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். படப்பிடிப்பு முடியாத நிலையில் சண்டைக் காட்சி எப்படி இன்டர்நெட்டில் வெளியானது என படக்குழு குழப்பத்தில் உள்ளது. கடந்த ஆண்டு ரஜினியின் சிவாஜி படத்தின் மூன்று பாடல்கள் இதே போல இன்டர்நெட்டில் வெளியானது. சில மாதங்களுக்கு முன் வாரணம் ஆயிரம் படத்தின் இரண்டு பாடல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.