வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
சினிமா செய்திகள்: பாடலாசிரியராக சிவகார்த்திகேயன், கிரிக்கெட் ஆடும் ஐஸ்வர்யா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழ் திரை உலகில் நடந்து வரும் சுவாரஸ்யமான சினிமா செய்திகளை தொகுத்து வழங்கி உள்ளோம். தமிழ் சினிமாவில் கிரிக்கெட் படம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் ஒரு படத்தை இயக்கிவருகிறார். படத்தின் காப்புரிமைTWITTER/SIVA_KARTIKEY…
-
- 0 replies
- 611 views
-
-
ஈழம் குறித்து தமிழகத்தில் எடுக்கப்படும் திரைப்படங்கள் இரண்டு வகையானவை. ஈழத்தின்பால் உணர்ச்சிகரமான ஈடுபாட்டுடன் எடுக்கப்படும் திரைப்படங்கள் ஒருவகை. ஈழம் குறித்த திரைப்படத்துக்கு சர்வதேச அளவில் சட்டென்று ஓர் அங்கீகாரம் கிடைக்கும், படத்துடன் நாமும் பிரபலமாகிவிடலாம் என்ற நப்பாசையில் எடுக்கப்படுபவை இரண்டாவதுவகை. இந்த இரண்டுவகை திரைப்படங்களும் ஈழம் குறித்த சித்திரத்தை சர்வதேச அரங்கில் முன் வைத்ததில்லை என்பது வேதனையான உண்மை. சினிமா என்பது ஒரு கலை வடிவம். உணர்ச்சிப்பெருக்குடன் அதனை அணுகும்போது கைவிரல்களுக்கிடையே நழுவும் நீரைப்போல சொல்ல வரும் விஷயங்கள் நழுவிவிடுகின்றன. தங்கராஜ் போன்ற உணர்ச்சிகரமான ஈழ ஆதரவாளர்களின் திரை ஆக்கங்களுக்கு நேர்ந்த சறுக்கல் இதுதான். சர்வதேச அரங்கில்…
-
- 0 replies
- 657 views
-
-
வசீகரா’, ‘பார்த்த முதல் நாளே’, ‘ஒன்றா ரெண்டா ஆசைகள்’, ‘நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை’, ‘கண்கள் இரண்டால்’, ‘எங்கேயும் காதல்’ என இதமான மெட்டு களுக்குள் குளிர்காற்றாய்... கதகதப்பாய் வரிகளை ஏற்றும் கவிஞர் தாமரையை முதல் முயற்சிக்காக ஒரு மாலை நேரத்தில் சந்தித்தோம். எனக்கு கோயம்புத்தூர்தான் சொந்த ஊர். சாதாரணக் குடும்பம். அரசுப் பள்ளிகளில்தான் தமிழ் வழிக் கல்வி படிச்சேன். அம்மா கண்ணம்மாள் தமிழாசிரியை. அப்பா சுப்பிரமணியன் கணித ஆசிரியர். சின்ன வயசுலயே பெற்றோர் நிறையப் புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பார்கள். அதிகம் விளையாடப் போக மாட்டேன். புத்தகங்கள் படித்துக் கொண்டே இருப்பேன். அப்போ வானொலிதான் ஒரே பொழுது போக்கு. பாட்டு கேட்டுக்கிட்டே இருப்பேன். எட்டாம் வகுப…
-
- 0 replies
- 8k views
-
-
கமலஹாசனுக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி விசித்திரமான சிந்தனைகள் ? மனித குலம் தோன்றி எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆயின என்றே யாராலும் சரியாகச் சொல்ல முடியவில்லை. காட்டுமிராண்டியாக, காடு மேடுகளிலும், மலைக்குகைகளிலும் விலங்குகளைப் போல் சுற்றித் திரிந்த மனிதன் ஒரு வழியாக விவசாயம் பண்ணத் தெரிந்து கொண்டு, நதிக்கரைகளில் நிலையாகத் தங்கி வசிக்கத் துவங்கவே பல்லாயிரம் ஆண்டுகளாயின. கொஞ்சம் கொஞசமாக நாகரீகம் அடைந்து, தனக்கென நிலம், நீர், இடம், பயிர், ஆடு மாடு என்று சொத்து சேர்க்கத் துவங்கினான். யார் வேண்டுமானாலும் - யாருடன் வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது போய், ஒருத்தனுக்கு ஒருத்தி என்று தனக்குப் பிடித்த ஆண் - பெண்ணுடன் சேர்ந்து இருக்க ஆரம்பித…
-
- 0 replies
- 984 views
-
-
ஒருதலை ராகம் என்ற படத்தின் மூலம் புதிய மாற்றத்தையே தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியவர் சகலகலா வல்லவரான டி.ராஜேந்தர். பருத்தி வீரன் படத்தைப் பார்த்த பிறகு, இனி நல்ல படங்களை மட்டுமே தரவேண்டும் என்ற உணர்வு தனக்கு ஏற்பட்டதாக வெளிப்படையாகத் தெரிவித்தார் ராஜேந்தர். இதன் விளைவு, பிரமாண்ட செட், அடுக்குமொழி வசனங்கள், ஆகாயத்துக்கும் பூமிக்குமாய் எம்பிக் குதிக்கும் சண்டைகள் எதுவும் இல்லாத இயல்பான சினிமா ஒன்றை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். அந்தப் படத்துக்கு ஒருதலைக் காதல் என்று தலைப்பும் வைத்துள்ளாராரம். இதுகுறித்து சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ராஜேந்தர் கூறியதாவது: லட்சுமி மூவி மேக்கர்ஸ், சிம்பு சினி ஆர்ட்ஸுடன் இணைந்து புதிய படம் தயாரிக்கவுள்ளது. `ஒ…
-
- 0 replies
- 781 views
-
-
நேபாளில் நேற்று காலை நடந்த விமான விபத்தில் அமிதாபின் 'பா' படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் தருணி சச்தேவ் பலியானார் Video News
-
- 0 replies
- 1.1k views
-
-
போக்கிரி ராஜா - திரை விமர்சனம் கொட்டாவி விடுவதே பிரச்சினையாகக் கொண்ட ஒருவனுக்கு அதுவே அபார சக்தியாக மாறினால் என்ன நடக்கும்? அதுதான் ‘போக்கிரி ராஜா’. அடிக்கடி பெரிதாகக் கொட்டாவி விடுவது நாயகன் ஜீவாவின் பிரச்சினை. இதனால் அவரைச் சுற்றியிருப்பவர்களுக்கும் கொட்டாவி வர, இதுவே அவரது வேலை பறிபோகக் காரணமாகிறது. அவருடைய வேலை மட்டுமின்றிக் காதலும் இதனால் பாதிக்கப்படுகிறது. இந்தச் சூழலில் சமூக ஆர்வலர் ஹன்சிகா மோத்வானியின் அறிமுகம் கிடைக்கிறது. சாலையோரங்களில் சிறுநீர் கழித்து அசுத்தம் செய்பவர்கள் மீது தண்ணீர் அடித்துத் துரத்துதல், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க உதவுதல் ஆகிய சேவைகளில் ஈடுபட்டு வரும் ஹன்சிகாவுடன் ஜீவாவும் ச…
-
- 0 replies
- 408 views
-
-
ஏறத்தாள ஐந்து வருடங்களின் பின்னர் ஒரு தமிழ்ப்படத்தினைத் திரையரங்கு சென்று பார்த்தேன். ஜோ.டீ.குரூஸ் மீதும், தனுஸ் மீதும், ஏ.ஆர்.றகுமான் மீதும் இருந்த நம்பிக்கையில் தான் இந்த முடிவினை எடுத்திருந்தேன். படத்தில் நடித்தவர்கள் அத்தனைபேரும் நன்றாக நடித்திருந்தார்கள்--ஆபிரிக்க நடிகர்கள் உள்ளடங்கலாக. காட்சியமைப்பு பல இடங்களிpல் இரசிக்கும் படி இருந்தது. கதை காத்திரமான கருவுடையதாக இருந்தது. அப்போ படம் பிடித்ததா? திரையரங்கில், நான் அவதானித்தவரை, ஒன்றல்ல இரண்டல்ல ஆறு இடங்களில் நடிகர்கள் உயிரைப் பிழிந்து ஒரு நெகிழ்ச்சியினை பார்வையாளர்களிடம் பெறுவதற்காக நிகழ்த்திய காட்சிகளில், பார்வையாளர்களிடம் இருந்து சத்தமாக 'க்ளுக்' என்ற சிரிப்பொலி எழுந்தது. முதற்தடவை இது நடந்தபோது, எனக்குக் குழ…
-
- 0 replies
- 848 views
-
-
நாளை சூப்பர்ஸ்டார் ரசிர்களுக்கு சரியான வேட்டைக் காத்திருக்கிறது! இதற்கிடையில் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு போனஸ் செய்தி. கோச்சடையான் படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். இந்த தகவலை படத்தின் டைரக்ஷன் மேற்பார்வையாளராக இருக்கும் இயக்குனர் மாதேஷ் இன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கோச்சடையான் படத்தின் டீஸரை வரும் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியிடப்போவதாக சௌந்தர்யா அறிவித்து நான்கு நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் சென்சார் சான்றிதழும் கிடைத்துவிட்டது நல்ல சகுனமாகவே கருதப்படுகிறது. மேலும் தெலுங்கு வெர்ஷனுக்கான சான்றிதழுக்காக இன்று படத்தை திரையிடுகிறார்கள். Source www.vuin.com
-
- 0 replies
- 397 views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TUGHLAQ DURBAR / OFFICIAL TRAILER/NETFLIX INDIA நடிகர்கள்: விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பகவதி பெருமாள்; இயக்கம்: டெல்லி பிரசாத் தீனதயாளன். வெளியீடு: சன் டிவி, நெட்ஃப்ளிக்ஸ். தமிழில் அரசியல் படங்கள் வெளியாவதே குறைவு. அப்படியே வெளியானாலும் சமீபகால அரசியலை விமர்சித்தோ அல்லது தொட்டுச்செல்லும் வகையிலோ இருப்பதில்லை. அதே பாணியில், துக்ளக் தர்பார் படமும் அரசியலைப் பின்னணியாக கொண்டிருந்தாலும் முழுமையான அரசியல் படமாக இல்லை. ஜே.கே. நகரின் அரசியல் பெரும்புள்ளியாக இருக்கிறார் ரா…
-
- 0 replies
- 273 views
-
-
The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்…. எப்போதாவது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்த ஏதோவொரு முடிவை, இப்போது நினைவு கூர்ந்து, அந்த சமயத்தில் நீங்கள் வேறுவிதமாக முடிவெடுத்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று யோசித்துப் பார்த்ததுண்டா? அந்த புது முடிவு உங்கள் வாழ்கையை எந்த மாதிரியான பாதையில் செலுத்தி இருக்கும் என்று வியந்ததுண்டா ? ஆமாம் என்றால், Welcome! இந்த படமும் அதை பற்றியது தான். உங்களுடைய வாழ்கையின் ஏதோ ஒரு பகுதியை திரும்பி வாழ வழி கிடைத்தால், அதில் நீங்கள் செய்த ஒரு மிகப்பெரிய தவறை சரி செய்ய வழி கிடைத்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? அப்படி அந்த தவறு சரி செய்யப்பட்டால், அது உங்கள் வாழ்கையை எப்படியெல்லாம் மாற்றிப் போடும்? இவான், பற்பல நிழல் நின…
-
- 0 replies
- 736 views
-
-
’’அந்தப் பொண்ணுகிட்ட ஏதோ இருக்கு!’’ ஜூலியை காம்பியராக மாற்றிய கலா மாஸ்டர் #VikatanExclusive நாளை முதல் (செவ்வாய்க்கிழமை) ஒளிபரப்பாகவிருக்கும் 'ஓடி விளையாடு பாப்பா' நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக புதிய அவதாரம் எடுக்கவிருக்கிறார், 'பிக் பாஸ்' ஜூலி. இதுபற்றி 'ஓடி விளையாடு பாப்பா' நிகழ்ச்சியின் இயக்குநர் கலா மாஸ்டரிடம் பேசினோம்... ''என்ன திடீர்னு ஜூலியைத் தொகுப்பாளராகக் கொண்டுவந்திருக்கீங்க?'' ''இவ்வளவு நாள் இருந்த சஞ்சீவுக்குக் கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது. அதனால், புதுமுகம் ஒருத்தருக்கு வாய்ப்பு கொடுக்கலாம்னு தோணுச்சு. அதில் என் முதல் சாய்ஸ், ஜூலியாக இருந்தாங்க. 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில்கூட 'ஆங்கராக ஆகணும்'னு அவ…
-
- 0 replies
- 2.5k views
-
-
செம்பி - சினிமா விமர்சனம் பட மூலாதாரம்,@TRIDENTARTSOFFL ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நடிகர்கள்: கோவை சரளா, அஸ்வின் குமார், தம்பி ராமையா, நிலா, நாஞ்சில் சம்பத், பழ கருப்பையா, கு. ஞானசம்பந்தன்; ஒளிப்பதிவு: எம். ஜீவன்; இசை: நிவாஸ் கே. பிரசன்னா; இயக்கம்: பிரபு சாலமன். மலை, காடு சார்ந்த பகுதிகளை மையப்படுத்தி தொடர்ந்து படங்களை இயக்கி வரும் பிரபு சாலமன் 'காடன்' படத்திற்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் இது. பெரிதும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலேயே நடித்துவரும் கோவை சரளா, கதையின் நாயகியாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். செம்பி படத்தின் கதை இதுதான்: கொடைக்கானலின் ப…
-
- 0 replies
- 673 views
- 1 follower
-
-
சென்னை மழை வெள்ளப் பாதிப்புகளையும் சாதி, மதங்களை மறந்து மக்கள் உதவியதையும் காட்சிப்படுத்தி நடிகர் விக்ரம் புதிய பாடல் ஆல்பம் உருவாக்குகிறார். இதில் சூர்யா, கார்த்தி, ஜெயம்ரவி, பிரபுதேவா, ஜீவா, பரத், நடிகைகள் அமலாபால், வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சென்னையில் கடந்த மாதம் வரலாறு காணாத மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்தனர். ஹெலிகாப்டர்களில் வந்து ராணுவத்தினர் போட்ட உணவுப் பொட்டலங்களுக்காக மக்கள் அல்லாடிய பரிதாபங்களை பார்க்க நேர்ந்தது. அடையாறு, கூவம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு வந்து நகரம் முழுவதையும் மிதக்க வைத்தது. அரசு துறையினர், தொண்டு நிறுவத்தினர், நடிகர், நடிகைகள், இளைஞர்கள் இரவு பகலாக நிவார…
-
- 0 replies
- 355 views
-
-
‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்தின் மூலம் வித்தியாசமான கதைக்களத்தை எடுத்துக் கொண்டு கவனம் ஈர்த்த அதியன் ஆதிரையின் இரண்டாவது படம். சமூக அக்கறையுள்ள படங்களை லாப நோக்கம் உள்ளிட்ட சமரசங்களுக்கு உட்படுத்தாமல் தொடர்ந்து தயாரித்து வரும் பா.ரஞ்சித்தின் அடுத்தப் படம் போன்ற லேபிள்களுடன் வெளியாகியுள்ள ’தண்டகாரண்யம்’ எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். மலைக் கிராமம் ஒன்றில் தமிழக வனத் துறையில் பணிபுரியும் முருகன் (கலையரசன்). இவரது மூத்த சகோதரர் சடையன் (அட்டகத்தி தினேஷ்) பழங்குடி மக்களுக்காக போராடி வருபவர். சில காரணங்களால் வனத் துறையிலிருந்து வெளியேற்றப்படும் முருகன், ஜார்க்கண்ட் மாநிலத்தில் துணை ராணுவப் படையில் சேர்கிறார். இங்கு பயிற்சி பெறுபவர்கள் நாடு முழுவதும் நக்சல் ஒழ…
-
- 0 replies
- 149 views
-
-
[size=2] ‘தீராத விளையாட்டு பிள்ளை’ பட நடிகை தனுஸ்ரீ தத்தா, மொட்டை அடித்து சாமியாராக மாறியுள்ளார். [/size] [size=2] காரணம் என்ன தெரியுமா?[/size] [size=2] "உங்களுக்கு மனஅமைதி வேண்டுமானால், அதற்கு பரிகாரம்... நடிப்பதை கைவிட வேண்டும். மொட்டை அடித்து ஆன்மிக சேவை செய்தால் மட்டுமே சாத்தியம்” என ஜோதிடர் ஒருவரின் அறிவுரைதான்! [/size][size=2] நடிகர் பாலகிருஷ்ணா உள்ளிட்ட தெலுங்கு நடிகர்கள் 20 பேரும் இது போன்ற சிறப்பு பூஜைகள் நடத்தி உள்ளார்கள். [/size] [size=2] திரை நட்சத்திரங்களுக்கு பரிகார பூஜை செய்யும் பெரம்பலுரைச் சேர்ந்த ராஜ ராகவனை, சிறு தேடலுக்கு பிறகு தொடர்புகொண்டோம். முதலில் பேச மறுத்தவர், பிறகு பல விஷயங்களை சொன்னார்.[/size] [size=2] "உலகில் மிகவும் மனது…
-
- 0 replies
- 814 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=o_uHS6Kb_6I[/xml] [xml]http://www.youtube.com/watch?feature=player_embedded&v=AdE6yYVkMX0 http://www.youtube.com/watch?feature=player_embedded&v=y6YJxxiBFmI[/xml] [xml]http://www.youtube.com/watch?feature=player_embedded&v=0nwupqcRK_A
-
- 0 replies
- 283 views
-
-
பாலிவுட்டில் விரைவில் ரிலீசாகவிருக்கும் 'ராமய்யா வஸ்தாவய்யா' ஹிந்திப்படத்தை இயக்கியிருப்வர் பிரபுதேவ. இது தெரிந்த செய்திதான்! ஆனால் தெரியாத செய்தி.. இந்தபடத்தின் படப்பிடிப்பில் நடனக்காட்சி படமாக்கப்பட்டபோது பிரபுதேவாவுக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் ஏற்பட்ட லடாய்! சில நடன அசைவுகள் ஸ்ருதிஹாசனுக்கு வராத நிலையில் பிரபுதேவ கடுமயான வார்த்தைகளை பிரயோகித்ததாகவும், நீங்கள் சொல்லித் தந்தது நடன அசைவுகளே அல்ல என்று ஸ்ருதிஹாசன் சொன்னதாகவும் பரபரத்துக் கிடந்தது! தற்போது ஸ்ருதி மீதான இந்தக் கோபத்தை வெளிகாட்ட ஸ்ருதிஹாசன் போலவே தோற்றம் கொணட் ஒரு மாடலை அறிமுகப்படுத்த முடிவு செய்து ஒப்பந்தமும் செய்து விட்டாராம் பிரபுதேவா! See more at: http://vuin.com/news/tamil/prabhudeva-introducing-shruti-haas…
-
- 0 replies
- 503 views
-
-
"என் கணவர் மீது பொய் புகார் கொடுத்து கைது செய்ய வைத்துள்ள தந்தையும், நடிகருமான விஜயகுமார் தொடர்பான ரகசியங்களைத் தொடர்ந்து வெளியிடுவேன்,'' என டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் கொடுக்க, குழந்தைகளுடன் வந்த, நடிகை வனிதா விஜயகுமார் கூறினார். நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவியான மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். இவரது இரண்டாவது கணவர் ஆனந்தராஜன். இவர், சென்னை, நுங்கம்பாக்கம், கோத்தாரி ரோட்டில் வசித்து வருகிறார். கடந்த 7ம் தேதி, விஜயகுமாரின் முதல் மனைவி முத்துக்கண்ணுவின் மூத்த மகனும், நடிகருமான அருண் விஜய், தன்னை அடித்து உதைத்ததாக மதுரவாயல் போலீசில் வனிதா புகார் அளித்திருந்தார். இந்நிலையில், கடந்த 15ம் தேதி ஆனந்தராஜன், தன் கையை உடைத்து விட்டதாக போலீசில் நடிகர் விஜயகுமா…
-
- 0 replies
- 1.4k views
-
-
வீரம், விவேகம், விஸ்வாசம் இதெல்லாம் இருந்தும் அல்லு அர்ஜூனுக்கு ஒரு பிரச்னை..! - `என் பெயர் சூர்யா. என் வீடு இந்தியா' படம் எப்படி? அங்கே எல்லையில் பணியாற்ற வேண்டுமென்பதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட ஒரு ராணுவவீரன். அவனது முரட்டு குணமே அதற்கு முட்டுக்கட்டை போடுகிறது. லட்சியத்திற்காக தனது குணத்தை மாற்றிக்கொள்கிறானா, அல்லது குணம்தான் முக்கியம் என லட்சியத்தை துறக்கிறானா என்பதுதான் `என் பெயர் சூர்யா. என் வீடு இந்தியா' படத்தின் ஒன்-லைன் என ஒரேயொரு லைனைச் சொல்ல ஆசைதான். என்ன செய்ய இதேபோல் படத்தில் ஆறேழு ஒன்-லைன்கள் இருக்கின்றன. `பசிச்சா நல்லா சாப்பிடுவேன், தூக்கம் வந்தால் நல்லா தூங்குவேன், கோபம் வந்தால் நல்லா அடிப்பேன்' என எடுத்ததெற்கெல்…
-
- 0 replies
- 603 views
-
-
இதுவொன்றும் புது விஷயமில்லை. 'குஷி' படத்தில் வரும் 'மொட்டு ஒன்று மலர்ந்திட....' பாடலில் எம்.ஜி.ஆர். போல நடன அசைவுகளை விஜய்யை வைத்து செய்திருப்பார் சூர்யா. 'நியூ' படத்தில் வரும் 'படகோட்டி' படப் பாடலான 'தொட்டால் பூ மலரும்...' ரீ-மிக்ஸ் இன்னொரு உதாரணம். 'திருமகன்' படத்திலும் உண்டு எம்.ஜி.ஆர். காப்பி. இதில் இடம் பெறும் சிலம்ப சண்டையை எம்.ஜி.ஆர். படத்தைப் பார்த்து அப்படியே அமைத்திருக்கிறார்கள். 'பெரிய இடத்து பெண்' போன்ற பல படங்களில் எம்.ஜி.ஆர். போட்ட கம்பு சண்டைகளை சி.டி. யில் போட்டுப் பார்த்து அப்படியே 'திருமகனில்' பெர்பார்ம் செய்திருக்கிறார் சூர்யா. 'வியாபாரி' க்குப் பிறகு இவரும் ஷக்தி சிதம்பரமும் இணைந்து நடிக்கும் படத்துக்கு 'உங்க வீட்டு பிள்ளை' என்று பெயர் வைத்திர…
-
- 0 replies
- 966 views
-
-
ஆர். பி. செளத்ரி வீட்டில் இன்னொரு முறை டும் டும் டும் கொட்டப்படவுள்ளது. அண்ணன் ரமேஷை தொடர்ந்து ஜீவாவும் இல்லற வாழ்வில் இணைகிறார். தயாரிப்பாளர் ஆர். பி. செளத்ரியின் கடைக்குட்டி மகன் ஜீவா. ரவிமரியா இயக்கிய 'ஆசை ஆசையாய்' படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அவரைத் தொடர்ந்து அவரது அண்ணன் ரமேசும் 'ஜித்தன்' படம் மூலம் அறிமுகமானார். அண்ணனுக்கு முன்பாகவே படத்தில் அறிமுகமான ஜீவா அவருக்கு முன்பாகவே வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 'ராம்', 'டிஷ்யூம்', 'ஈ', 'கற்றது தமிழ்' என படத்துக்கு படம் வித்தியாசமான வேடங்களை ஏற்று கலக்கி வரும் ஜீவா தற்போது 'தெனாவட்டு', 'ராமேஸ்வரம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இளம் நடிகர்களில் பிஸியாக திகழும் ஜீவாவுக்கு விரைவில் க…
-
- 0 replies
- 1.2k views
-
-
[size=2]இப்போது காஜல் அகர்வால் காட்டில் தான் அடைமழை பெய்கிறது. தெலுங்கில், "மார்க்கெட் உச்சத்தில் இருந்த நேரத்தில் தான், தமிழில், "துப்பாக்கி, மாற்றான் படங்களில் ஒப்பந்தமாகி, கோலிவுட்டுக்கு வந்தார். [/size] [size=2] இங்கு வந்து, "பிசியானவர், தெலுங்கில் நடித்து வந்த இரண்டு படங்களை திரும்பி கூட பார்க்கவில்லை. இதனால், காஜலை வைத்து, சில நாட்கள் படப்பிடிப்பு நடத்திய அவர்கள், பின், வேறு நடிகைகளை ஒப்பந்தம் செய்து, படத்தை முடித்திருக்கின்றனர். மகேஷ்பாபு, ராம்சரண் போன்ற முன்னணி கதாநாயகர்களின் படங்களையே, "டீலில் விட்டதால், காஜல் மீது, தெலுங்கு பட அதிபர்கள் கடுப்பில் உள்ளனர். [/size] [size=2] இதையடுத்து, தற்போது பாலிவுட் சினிமாவில், தன் கவனத்தை திருப்பி இருக்கும் காஜல், தமிழ…
-
- 0 replies
- 598 views
-
-
இந்திய சினிமா நடிகை மல்லிகா ஷெராவத், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, நடிகை மல்லிகா ஷெராவத், பாரீஸ் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு எடுத்து தங்கியுள்ளார். அவருடன், சிரில் ஆக்ஸன்ஃபன்ஸ் என்ற ஆண் நண்பர் ஒருவரும் தங்கியுள்ளார். இந்நிலையில், இவர்கள் இருவரும் இன்று தனிமையில் இருந்தபோது, திடீரென மர்ம நபர்கள் சிலர் அந்த வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் முகமூடி அணிந்திருந்ததாகவும், தன்னையும், தனது ஆண் நண்பரையும் தாக்கிவிட்டு, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியபின், தப்பியோடி விட்டனர் என்று, மல்லிகா ஷெராவத் பாரீஸ் நகர போலீசில் புகார் செய்துள்ளார். சமீபத்தில் ஹாலிவுட் நடிகையான கிம் கார…
-
- 0 replies
- 259 views
-
-
தமிழ் திரையிசை வானில் துருவநட்சத்திரங்களாக வலம்வரும் இசைஞானி இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் இணைந்து பாடல் ஒன்றை உருவாக்க இருக்கின்றனர். இந்தப் பாடலானது படத்திற்காக இல்லை, இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்காக. இந்தத் தகவலை தென்னிந்திய சினிமா வர்த்தக சபையின் தலைவரான சி கல்யாண் தெரிவித்துள்ளார்.இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக இப்பாடல் இடம்பெற இருக்கிறதாம். இதனை இசைஞானி இளையராஜாவும், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானும் இணைந்து இசையமைத்து உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் என அவர்களிடம் நேரில் வேண்டுகோள் விடுத்துள்ளனர் விழா அமைப்பாளர்கள். See more at: http://vuin.com/news/tamil/ilaiyaraaja-and-ar-rahman-joins-for-a-special-single
-
- 0 replies
- 351 views
-