வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
சென்னை:தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் வரும் 7ம் தேதி, மத்திய அரசுக்கெதிராக உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. சின்னத்திரையில் நடிக்கும் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் உட்பட பல்வேறு தொழில்நுட்ப கலைஞர்கள் வருமானத்துக்கு ஏற்ப சேவைக்கட்டணம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை எதிர்த்து, வருகிற 7ம் தேதி திங்கள் கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை, வள்ளுவர்கோட்டம் முன்பு அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளதாக சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராதிகா சரத்குமார் அறிவித்துள்ளார். மேலும் இதில் அனைத்து சின்னத்திரை, தயாரிப்பாளர்கள், சின்னத்திரை நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கூட்டமைப்பு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து…
-
- 0 replies
- 369 views
-
-
டாப்ஸி - ஜெக்குலின் மோதல் “ஆடுகளம்” திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமான டாப்ஸி, தமிழ், தெலுங்கிலும் வாய்ப்புகள் குறைந்ததால் ஹிந்திப் பக்கம் போனார். அங்கு அமிதாப்பச்சனுடன் நடித்த “பின்க்” திரைப்படம், டாப்ஸிக்கு ஹிந்தித் திரையுலகத்தின் கதவைத் தாராளமாகத் திறந்துவிட்டது. அதன் பின் ஹிந்தித் திரைப்படங்களில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டினார் . ஹிந்தித் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான சாஜித் நடியத்வாலா தயாரிப்பில் “ஜூட்வா 2” திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார் டாப்ஸி. படப்பிடிப்பு சமயத்தில் டாப்ஸியும், சாஜித்தும் நெருங்கிப் பழகுவதாக பொலிவுட் வட்டாரங்களில் செய்தி பரவியுள்ளது. ஆனால்,…
-
- 0 replies
- 274 views
-
-
கொஞ்சம் கொஞ்சம் திரை விமர்சனம் பெட்டி சி.கே. மற்றும் பி ஆர் மோகன் தயாரிப்பில் கோகுல் கிருஷ்ணா , அப்புக்குட்டி, மன்சூர் அலிகான், தவசி, பிரதீப் கோட்டயம் , ஜெயன் செர்தாலா, பிரியா மோகன், நீனு , ஆகியோர் நடிக்க, உதய் சங்கரன் என்பவர் இயக்கி இருக்கும் படம் கொஞ்சம் கொஞ்சம் . முழுசா பார்க்க முடியுமா ? பார்க்கலாம் . கேரளாவில் பழைய பேப்பர் கடை வைத்து இருக்கும் தமிழ் நாட்டு நபர் ஒருவரின் (அப்புக்குட்டி ) கடையில், வேலை பார்க்கும் தமிழ் நாட்டு இளைஞன் திரு என்கிற திருநாவுக்கரசு (கோகுல் கிருஷ்ணா) அவனுக்கும் அந்த ஊரைச் சேர்ந்த மலையாள பெண் குட்டி திவ்யாவுக்கும் (நீனு ) காதல…
-
- 0 replies
- 526 views
-
-
அமிதாப் பச்சன் 75: அமிதாப் எனும் அதிசயம்! அமிதாப் பச்சன் என்ற சூப்பர்ஸ்டார், ஒரு நல்ல நடிகராகப் பரிமாணம் அடைந்தது அவர் ஹீரோவாக நடிப்பதை நிறுத்திக்கொண்டபின்புதான். 1992வில், ‘ஹுதா கவா’ (Khuda Gawah) படத்திற்குப் பிறகு, ‘இனி திரைப்படங்களில் நடிப்பதில்லை’ என்ற முடிவை அவர் மேற்கொண்டபோது அவருக்கு வயது ஐம்பது. அந்த வகையில், இந்தியாவின் பல சூப்பர்ஸ்டார் நடிகர்களுக்கு அவர் முன்னுதாரணமாகவும் திகழ்ந்தார் எனலாம். ரஜினிகாந்துக்குத் தற்போது அறுபத்து ஏழு வயது. இன்றும் ஹீரோவாகவே நடித்துக்கொண்டிருக்கிறார். அதனாலேயே ‘லிங்கா’ போன்ற அபத்தங்கள் நிகழ்ந்தன. கமல்ஹாஸனுக்கு வயது அறுபத்து மூன்று. அவரும் இப்போது வரை ஹீரோதான். இவ…
-
- 0 replies
- 361 views
-
-
ஆஸ்கர் விருது பெற்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இம்முறை கோல்டன் குளோப் விருதை வெல்லும் வாய்ப்பை இழந்தார். டானி பாயிலின் இயக்கத்தில் உருவான '127 ஹவர்ஸ்' படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான பிரிவில் கோல்டன் குளோப் விருதுக்கு ரஹ்மான் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இப்பிரிவுக்கான விருதை 'தி சோஷியல் நெட்வொர்க்' படத்துக்காக இசையமைப்பாளர்கள் டிரெண்ட் ரெஸ்னர் - ஆட்டிகஸ் ரோஸ் வென்றனர். இதனால், ரஹ்மானுக்கு கோல்டன் குளோப் விருது கிடைக்கும் என்ற இந்திய ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு இம்முறை நிறைவேறவில்லை. முன்னதாக, டானி பாய்லின் 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்காக 2009-க்கான கோல்டன் குளோப் விருதை ரஹ்மான் பெற்றார். அதே படத்துக்காக அவர் இரண்டு ஆஸ்கர்களை அள…
-
- 0 replies
- 332 views
-
-
இந்தியாவின் பெரிய பிரச்னைகளில் போலி சாமியார்களும் உண்டு. ஹிந்து மதத்தில் மட்டும் இல்லாமல் முஸ்லிம்கள், க்ரிஸ்தவர்கள், இன்னும் இருக்கும் எல்லா மதங்களிலும் இவர்களே அதிகம். இவர்களை முக்கியமாக எடுத்துக்கொண்டு இப்படிப்பட்டவர்களின் பணம் சேர்த்தல், இவர்களை நம்பும் மக்கள், அதனால் விளையும் பிரச்னைகள் என்பவற்றையெல்லாம் நகைச்சுவை கலந்த திரைக்கதையாகச் சொல்லியிருப்பதுதான் பீகே. நம்மூரில் பல படங்களில் வந்துவிட்ட சப்ஜெக்ட் இது. எம்.ஆர் ராதாவின் ஃபேவரைட் விஷயம். ஹிந்தியில் ‘Oh My God’ படத்துக்குப் பின்னர் இப்போது மறுபடியும் எழுந்திருக்கிறது. பீகேவின் கதை இதற்குள் எல்லாருக்கும் தெரியும் என்பதாலும், அதைப்பற்றிப் பேசினாலும் படம் பார்க்காதவர்களை அது பாதிக்காது என்பதாலும் – வேறு கிரகம் ஒன…
-
- 0 replies
- 1.6k views
-
-
திருமணம் சில திருத்தங்களுடன் - திரை விமர்சனம்! திருமணம் நடக்கும் விதத்தில் உள்ள சிக்கல்களைப் பற்றிப் பேசும் படம் எப்படி இருக்கிறது? திருமணம் நடத்துவது நிச்சயம் எளிமையான விஷயம் அல்ல. காதலர்கள், வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்வதுகொள்வது என்பதும் கடினம்தான். அப்படி ஒரு திருமணத்தில் எத்தனை தடங்கல்கள் ஏற்படும் என்பதை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்தான் திருமணம் சில திருத்தங்களுடன். உமாபதி ராமையா, காவ்யா சுரேஷ், சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, மனோபாலா முதலானோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க, கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் சேரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜமீன் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, அக்காவின் பாசத்தம்பியாக அன்பிலும் …
-
- 0 replies
- 1.2k views
-
-
Published:Today at 9 AMUpdated:Today at 9 AM சாவின் விளிம்பிலிருந்து உயிர்பிழைத்த இருவரின் பயணமே இந்த 'மின்மினி'. 2016-ம் ஆண்டு, நிகழ்காலம் என இரண்டு அத்தியாயங்களாகப் பிரிகிறது கதை. முதல் அத்தியாயம் பாரி (கௌரவ் காளை), சபரி (பிரவீன் கிஷோர்), பிரவீனா (எஸ்தர் அனில்) ஆகியோரின் பள்ளிப் பருவத்தைப் பேசுகிறது. ஒன்றாகப் படிக்கும் பாரி, சபரி இருவருக்கும் இருக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டு, அது நட்பாகத் துளிர்க்கும் சமயத்தில் எதிர்பாராத விபத்து ஒன்று நடந்துவிடுகிறது. இது சபரியின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடுகிறது. சபரியை மீட்டெடுக்கப் புதிதாக உள்ளே நுழையும் நட்பான பிரவீனா என்ன செய்தார், லடாக்கில் நிகழும் இரண்டாவது அத…
-
- 0 replies
- 221 views
-
-
ஓம் சாந்தி ஓம் - திரை விமர்சனம் திருச்சி மாநகரில் உள்ள ஒரு கார் விற்பனை மையத்தில் வேலை செய்கிறார் வாசு (ஸ்ரீகாந்த்). தற்செயலாகச் சந்திக்கும் சாந்தி (நீலம்) என்னும் பெண் மீது கண்டதும் காதல் கொள்கிறார். சாந்திக்கும் வாசுவைப் பிடித்துவிடுவதால் அவர் வேலை செய்யும் இடத்திலேயே வேலைக்குச் சேர்கிறார். ஒரு முதியவர், ஒரு இளம்பெண், ஒரு சிறுவன், நடுத்தர வயதுப் பெண்மணி மற்றும் ஒரு ஆண் ஆகிய ஐந்து பேர் வாசுவைப் பின்தொடர்ந்து வருகிறார்கள். வாசுவின் அலுவலகம், வீடு என அவர் போகும் இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் அவர்களுக்கு என்ன வேண்டும் என்று விசாரிக்கிறார். தங்களது ஆசைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். உதவ முன்வரும் வாசுவுக்கு ஒரு கட்டத்தில் அவர்கள் தன் கண்கள…
-
- 0 replies
- 594 views
-
-
பெங்களூர் கோவிலுக்கு பிச்சைக்காரன் வேடத்தில் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை, நிஜமான பிச்சைக்காரன் என நினைத்து, மார்வாடிப் பெண் ஒருவர் 10 ரூபாய் பிச்சை போட்டாராம். அதை ரஜினி சந்தோஷமாக ஏற்றுக் கொண்டாராம். டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் எழுதியுள்ள தி நேம் இஸ் ரஜினிகாந்த் நூலில்தான் இந்த சுவாரஸ்யத் தகவல் பதிவாகியுள்ளது. ஆசியாவின் நம்பர் 2 சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் ரஜினி. ஜாக்கி சானுக்கு அடுத்து அதிகம் சம்பாதிப்பவர் ரஜினி. ஆனால் அவருக்கு பத்து ரூபாய் பிச்சையாக வந்தபோது, அவர் அதைத் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக மனதுக்குள் மாபெரும் தத்துவம் உதித்துள்ளது. அந்த சுவாரஸ்ய அனுபவத்தை காயத்ரியின் வார்த்தைகளிலேயே காண்போம் .. பணத்திற்குக் கணக்கே இல்லை என்ற போதிலு…
-
- 0 replies
- 850 views
-
-
எக்குத்தப்பாக கேள்வி கேட்ட பத்திரிகையாளர்- பளார் விட்ட சன்னிலியோன்! பாலிவுட் நடிகை சன்னி லியோன் பேட்டி, நிகழ்ச்சி என எங்கு சென்றாலும் அவரிடம் ஒரு பெண் என்றும் பாராமல் கேட்கக் கூடாத சில கேள்விகளைக் கேட்டு நிருபர்கள் வாங்கிக் கட்டிக்கொள்வது நடந்தேறி வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் சன்னி லியோனுடன் ஹோலி கொண்டாடும் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஹோட்டலில் சன்னியை பார்த்த பத்திரிக்கையாளர் ஒருவர் அவரிடம் முன்பு நீங்கள் ஆபாச பட நடிகையாக இருந்தீர்கள், தற்போது நீங்கள் ஒரு பாலிவுட் நடிகை. இப்போது எவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்கள் என்று கேட்டார். அதைக் கேட்டு கோபம் அடைந்த சன்னி லியோன் அந்த கேள்வியை மீண்டும் கேட்குமாறு கூறினார். …
-
- 0 replies
- 283 views
-
-
தெலுங்கு நடிகரை காதலிப்பதாக வந்த தகவலில் உண்மையில்லை என்றார் பாவனா.கொச்சியில் மலையாள ஷ¨ட்டிங்கில் இருக்கும் அவர் கூறியதாவது: என்னை சந்திக்கும் சில பத்திரிகையாளர்கள், ‘உங்களைப் பற்றி ஏன் கிசுகிசுக்களே வருவதில்லை?’ என்று கேட்பார்கள். அவர்களுக்காகவே இப்போது என்னையும், தெலுங்கு ஹீரோ நிதினையும் சேர்த்து காதல் கிசுகிசு வருகிறதோ என்னவோ. இதற்குமுன் ஜெயம் ரவியுடனும், தெலுங்கு ஹீரோ கோபி சந்துடனும் என்னை இணைத்து கிசுகிசுக்கள் வந்தது. அது எல்லாமே வதந்திகள் என்று புரிந்துகொண்டனர். இதுவரை எந்த ஹீரோவையும் காதலித்தது இல்லை. காதலிக்கவும் மாட்டேன். தெலுங்கில் நிதின் ஜோடியாக ‘ஹீரோ’, மலையாளத்தில் பிருத்விராஜுடன் ‘லாலிபாப்’, மீண்டும் அவருடன் ஒரு படம், திலீப்புடன் ‘ட்வென்டி ட்வென்…
-
- 0 replies
- 937 views
-
-
[size=2] [size=2] [size=4]நமது இதிகாசங்களும் புராணங்களும் இன்னபிற பண்பாட்டுச் சாதனங்களும் நமது பொதுப்புத்தியிலும் நம்ம வீட்டு பெண்களின் பொதுப்புத்தியிலும் மிகுந்த சூழ்ச்சியோடு ஏற்றி வைத்திருக்கும் கருத்துக்களில் ஒன்றுதான் “ கல்லானாலும் கணவன்..புல்லானாலும் புருசன் “ என்பது. இதை ஒரு கருத்தாகவன்றி தங்களின் வாழ்க்கை தத்துவமாகவே நமது பெண்கள் வரித்துக்கொண்டுவிட்டனர். அது நம்மைப்போன்ற வல்லாட்டம் போடும் ஆண்களுக்கு மிகுந்த வசதியாகப் போய் விட்டதால், ‘ஆமாமாம்..பேஷ்..பேஷ்..அப்படித்தான் பொண்ணா லட்சணமா சமர்த்தா நடந்துக்கணும்‘ என அதற்கு அவ்வப்போது தூபம் போட்டு வளர்த்தும் வருகிறது ஆணாதிக்கச் சமூகம். அந்த பித்தலாட்டத்திற்கு வலு சேர்க்கத்தான், புருசனை விலைமாது வீட்டுக்கு கூடையில் வை…
-
- 0 replies
- 660 views
-
-
நடிகர்கள்: ஸ்ரீகாந்த், ஜனனி, கோவை சரளா, பரோட்டா சூரி, பாண்டி இசை: ஜேம்ஸ் வசந்தன் ஒளிப்பதிவு: லட்சுமணன் பிஆர்ஓ: ஜான் தயாரிப்பு: விபி புரொடக்ஷன்ஸ் எழுத்து - இயக்கம்: அஸ்லம் பொதுவாக ஒரு திரைப்படத்தில் ஹீரோ தன் கதையைச் சொல்வார். அல்லது அவ்வப்போது இயக்குநர் குரல் எட்டிப்பார்க்கும். ஆனால் பாகனில் ஒரு சைக்கிள் தன் வரலாறு கூறுகிறது...! கேட்கவே சுவாரஸ்யமாக இருக்குல்ல... படம் முழுக்க அந்த சுவாரஸ்யத்தைக் காப்பாற்றியிருக்கிறார் புது இயக்குநர் அஸ்லம்! மொபெட்கள், பைக்குகள் என்று காலங்கள் மாறினாலும், சைக்கிள் பயணங்கள் தனி சுகமானவை. சுப்பிரமணிக்கு (ஸ்ரீகாந்த்) சைக்கிள் என்றால் அப்படி ஒரு பிரியம். நினைவு தெரிந்த நாளிலிருந்து தன் குடும்பத்தில் ஒரு அங்கமாக அவன் பார்க்கும் அந்த சைக்கிளை …
-
- 0 replies
- 364 views
-
-
சென்னை: முஸ்லிம்களை தவறாகச் சித்தரிப்பது கமலின் வழக்கம். எனவே அந்தப் படம் வெளியாகும் முன்பு இஸ்லாமிய அமைப்புகளுக்குக் காட்ட வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கமல் எழுதி இயக்கி தயாரித்து நடித்துள்ள விஸ்வரூபம் படம் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது. தியேட்டர்களுக்கு வரும் முன் இந்தப் படம் டிடிஎச்சில் வெளியாகும் என்பதில் ஆரம்பித்து, முஸ்லிம்கள் எதிர்ப்பு வரை சர்ச்சைகள் கொஞ்சமல்ல. இந்தப் படத்தை வெளியாகும் முன்பு தாங்கள் பார்க்க வேண்டும் என்று முன்பு சில இஸ்லாமிய அமைப்புகள் கேட்டிருந்தன. ஒருவேளை கமல் முஸ்லிம்களை தவறாக சித்தரிக்காவிட்டால், 10000 ஏழைகளுக்கு பிரியாணி விருந்தளிப்போம் என்று கூறியிருந்தனர். அதற்கு பதிலளித்த கமல், அண்டா அ…
-
- 0 replies
- 1.7k views
-
-
தமிழ்த் திரைப் பாடல்களில் நவீன வாழ்க்கையை, நவீன கவிதை ஆக்க முறையைப் பயன்படுத்தியவன் ரொம்ப வளத்தியான முத்துக்குமார் உறங்கிக்கொண்டிருக்கிறான். யார் வந்தார்கள், யார் போனார்கள் என்று எதையும் சட்டைசெய்யாமல். அகிரா குரோசோவாவின் ‘ராஷோமோன்’படத்தைப் பல முறை பார்த்த அவனுக்கு தன்னைப் பார்த்துச் செல்லும் ஒவ்வொருவரும் தன்னுடைய இனி கலையவே முடியாத உறக்கம் குறித்து ஒவ்வொரு கதை சொல்வார்கள் என்பது தெரிந்துதான் இருக்கும். தெரிந்தவர், தெரியாதவர் எனப் பலர் அவனுக்காக இரங்குவர் என்பதும் அவனை முன்வைத்து மற்ற காரியங்களைச் சொல்வர் என்பதும் அவனுக்கு உறுதியாகத் தெரிந்திருக்கும். ஏனெனில், அவன் இருக்கும்போதே அவனைக் குறித்த கதைகளைக் கேட்டுச் சிரித்திருக்கிறான். அவன் இறந்ததாய் தவறுதலாய் செய்திகள் ம…
-
- 0 replies
- 377 views
-
-
இளைய தளபதி விஜய்யின் பைரவா போஸ்டர் இணையத்தை கலக்குகிறது இளைய தளபதி விஜய் நடிக்கும் பைரவா படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. விஜய்யின் 60 ஆவது திரைப்படமான பைரவாவை பரதன் இயக்குகிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். ஜெகதீஷ் பாபு, வை.ஜீ. மகேந்திரா, டானியல் பாலாஜி ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். இன்று வெளியிடப்பட்ட பைரவா பெர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் ரசிகர்களால் இணையத்தை கலக்கி வரு - See more at: http://www.metronews.lk/article.php?category=entertainment&news=19000#sthash.eUKPiQW8.dpuf
-
- 0 replies
- 502 views
-
-
மணிரத்னம் தமிழ், இந்தியில் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கிறார். தமிழில் இப் படத்துக்கு `அசோகவனம்’ என்றும் இந்தியில் `ராவணா’ என்றும் பெயரிட்டுள்ளனர். ராமாயண கதையை கருவாக வைத்து தயாராகிறது. தமிழில் விக்ரம் ராமன் கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்கிறார். ராவணன் வேடத்துக்கு நடிகர் தேர்வு நடக்கிறது. இந்தியில் விக்ரம் ராவணனாக நடிக்கிறார். ராமனாக அபிஷேக் பச்சன் நடிக்கிறார். விக்ரம் கேரக்டரை வித்தியாசப்படுத்தி காட்ட மொட்டை போட வைத்துள்ளார் மணிரத்னம். சத்யா படத்தில் கமல் மொட்டை போட்டு லேசாக முடி வளர வைத்திருப்பார். அதே போல் விக்ரம் இப்படத்தில் தோன்றுகிறார். மொட்டை போட்டதால் பொது நிகழ்ச்சிகளில் தலையில் தொப்பி போட்டு பங்கேற்கிறார். இலங்கை தமிழர்க…
-
- 0 replies
- 1.4k views
-
-
திரை விமர்சனம்: நிசப்தம் எட்டு வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படு வதால் ஏற்படும் பாதிப்புகளை யும், அவற்றிலிருந்து மீளும் வழியையும் உரக்கச் சொல்கிறது ‘நிசப்தம்’. பெங்களூருவில் வசிக்கும் ஆதி (அஜய்) ஆதிரா (அபிநயா) தம்பதியின் ஒரே மகள் எட்டு வயது பூமிகா (பேபி சாதன்யா). எளிய நடுத்தர வாழ்வை நடத்தி வரும் இக்குடும்பத்தில் திடீரென புயல் வீசுகிறது. பட்டாம்பூச்சியாய் சிறகடிக்கும் பூமிகா, ஒரு காம வெறியனால் பிய்த்தெறியப்படு கிறாள். கொடூரமான பலாத்காரத் துக்குப் பின் குற்றுயிராக மீட்கப் படும் அவள், உடலாலும் மனதாலும் அடையும் சேதாரங்களைக் கண்டு, அவளது பெற்றோரின் வாழ்க்கை நொறுங்கிப்போகிறது. ஊடகங்கள் செ…
-
- 0 replies
- 316 views
-
-
சிங்கம் இரண்டாம் பாகம் படத்தை தொடர்ந்து கெளதம்மேனன் இயக்கும் துருவநட்சத்திரம், லிங்குசாமி இயக்கும் படம் ஒரே நேரத்தில்என இரண்டு படங்களில் நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் திடீரென்று துருவநட்சத்திரம் எரிநட்சத்திரம் ஆகி படம் டிராப் ஆகிவிட்டதாக அடுத்த பரபரப்பு கிளம்பியது! ஆனால் “ அந்தப் டிராப் ஆகவில்லை ! நானும், கெளதம்மேனனும் ஒரு நல்ல படத்தை கொடுப்பதற்கானஆலோசனையில் இருக்கிறோம்! See more at: http://vuin.com/news/tamil/suryas-new-decision
-
- 0 replies
- 458 views
-
-
திரை விமர்சனம்: தங்கரதம் சந்தைக்கு காய்கறி ஏற்றிச் செல்லும் இரண்டு டெம்போ வேன் ஓட்டு நர்களிடையே நடக்கும் மோத லும், அதில் மலரும் ஒரு காதலும்தான் தங்கரதம். சித்தப்பாவை (‘ஆடுகளம்’ நரேன்) நம்பி வாழ்க்கையை ஓட்டும் நாயகன் வெற்றி. ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்குச் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து காய்கறி களை ஏற்றிவரும் டெம்போ ஓட்டுநர் வேலை. அதேபோல காய்கறிகளை ஏற்றி வரும் சவுந்தரராஜாவுக்கும் வெற் றிக்கும் தொழில் போட்டி. இருவருக்குமிடையேயான மோதலுக்கு மத்தியில் சவுந்தரராஜாவின் தங்கை அதிதி கிருஷ்ணாவை காத லிக்கிறார் வெற்றி. ஒரு கட்டத்தில் தொழில் போட்டி பெரிதாகி வெற்றியைக் கொல்ல திட்டம் போடுகிறார் சவு…
-
- 0 replies
- 400 views
-
-
களவுத் தொழிற்சாலை திரை விமர்சனம் எம் ஜி கே மூவி மேக்கர்ஸ் சார்பில் ரவிசங்கர் என்பவர் தயாரிக்க, வெங்கி பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில், வெங்கடேஷ் ராஜாவும் எஸ் 2 என்ற நிறுவனமும் சேர்ந்து வெளியிட, கதிர் , வம்சி கிருஷ்ணா , குஷி, மு.களஞ்சியம் , செந்தில் , ரேணுகா நடிப்பில் கிருஷ்ணஷாமி என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் களவுத் தொழிற்சாலை . எப்படி இயங்குது தொழிற்சாலை ? பார்க்கலாம் . சர்வதேச சிலைக் கடத்தல் முக்கிய அமைப்பின் முக்கிய நபர் ஒருவன் (வம்சி கிருஷ்ணா ) , கும்பகோணம் பகுதியில் உள்ள ராஜ ராஜபுரம் என்ற ஊரின் கோவிலில் உள்ள, ஆயிரக் கணக்கான ஆண்டுகள் பழமையான மருத்துவ குணம் மிக்க, ச…
-
- 0 replies
- 400 views
-
-
வாலு பட கால்ஷீட் பிரச்சினை குறித்து நடிகை ஹன்சிகாவிடம் விசாரணை நடத்துகிறது தயாரிப்பாளர் சங்கம். சிம்புவும் ஹன்சிகாவும் வாலு படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போதுதான் இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டது. படம் முடிவதற்குள் கருத்து வேறுபாடு வந்துவிட்டது. படமும் அந்தரத்தில் நிற்கிறது. இப்போது அந்த படத்தில் நடிக்க ஹன்சிகா மறுத்து வருகிறார். தான் கொடுத்த கால்ஷீட்டை வீணாக்கிவிட்டார்கள் என்று பதிலுக்கு குற்றம் சாட்டினார். இதையடுத்து ஹன்சிகா மீது வாலு பட தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். வாலு படத்தில் நடிக்க ஹன்சிகாவுக்கு 70 இலட்சம் சம்பளம் பேசி அதில் 55 இலட்சத்தை கொடுத்து விட்டதாகவும், பாடல் காட்சி முடிந்ததும் மீதி 15…
-
- 0 replies
- 536 views
-
-
Wednesday, February 23rd, 2011 | Posted by thaynilam நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் விடுதலைப் புலிகளின் ‘ எல்லாளன் ‘ இலங்கையின் அனுராதபுரம் விமானப் படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் நடத்தப்பட்ட தாக்குதலை மையப்படுத்தி அந்த இயக்கத்தின் கலைஞர்களின் நடிப்பில் வெளியான எல்லாளன் திரைப்படம் எதிர்வரும் நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறப்பு திரைப் படங்களில் ஒன்றாக திரையிடப்பட உள்ளது. இவ்வாண்டுக்கான நோர்வே தமிழ் திரைப்பட விழா அடுத்த ஏப்ரல் மாதத்தில் 20 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை ஒஸ்லோவில் இடம்பெற உள்ளது. இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து நோர்வேயில் வாழ்ந்து வரும் பாடல் ஆசிரியர் சிவலிங்கம் வசீகரனின் ஏற்பாட்டில் இவ்விழா இடம்பெறுகின்றது. …
-
- 0 replies
- 709 views
-
-
60 ஆண்டுகள் நாடோடி மன்னனும்: எம்ஜிஆருக்கு ராசியான 22-ம் தேதியும் அ+ அ- "இந்தப் படம் ஓடினால் நான் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி" என்று சொல்லி அடித்தவர் எம்.ஜி.ஆர். ஆம், நாடோடி மன்னன் படத்தைப்பற்றிதான் அவர் இப்படிப் பேசியிருந்தார். நாடோடி மன்னன் திரைப்படம் 1958 ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியானது. இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாடோடி மன்னன் படத்துக்கு பல சிறப்புகள் உண்டு. அதேபோல் எம்ஜிஆருக்கும் 22-ம் தேதிக்கும் ஒப்பிட்டுச் சொல்ல பல சிறப்புகள் உண்டு. கனவு நனவானது: 'மலைக்கள்ளன்', 'அலிபாபாவும் 40 திருடர்களும்', 'மதுரை வீரன்'…
-
- 0 replies
- 1.2k views
-