வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
இணைய சூதாட்டம்: விராட் கோலி மற்றும் தமன்னாவை கைது செய்யுமாறு வழக்கு! இணைய சூதாட்ட விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னா ஆகியோரை கைது செய்யுமாறு கோரி தொடரப்பட்ட வழக்கில் மூன்று வாரங்களில் பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இணைய சூதாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி சட்டத்தரணி சூரியபிரகாசம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், இணைய சூதாட்டத்தை நிர்வகித்து வருபவர்களை கைது செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதோடு, அத்தகைய இணைய சூதாட்ட நிறுவனங்களுக்காக விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னா ஆகியோரையும் கைது செய்ய வேண்டும் என சட்…
-
- 0 replies
- 329 views
-
-
தென்னிந்திய சினிமா 2015: நட்சத்திர பலத்தை பின்னுக்குத் தள்ளிய நேர்த்தியான படைப்புகள்! தென்னிந்திய சினிமாவைப் பொறுத்த வரையில், இந்த வருடம் சுமார் 500 படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் படங்களுக்கான வரவேற்பும், வெற்றி வீதமும் கலவையாகவே இருந்தது. காஞ்சனா 2, பிரேமம், படாஸ், காக்கா முட்டை உள்ளிட்ட படங்கள் வெளிவந்து வெற்றிபெற்று, அனைவரையும் ஆச்சரியப்படுத்தின. அதே நேரத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகி கவலையையே தந்தன. தமிழகத்தில் 2015-ல் வெளியான சுமார் 200 படங்களில், 10 முதல் 15 படங்களே பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டடித்தன. இதுகுறித்து நம்மிடம் பேசிய சினிமா விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை, "…
-
- 0 replies
- 328 views
-
-
50 ஆண்டுகள், 200 திரைப்படங்களுக்குப் பிறகு ஜாக்கி சான் ‘ஒருவழியாக’ ஆஸ்கர் வென்றார் ஜாக்கிசான் 23 ஆண்டுகளுக்கு முன்னால் ஹாலிவுட் புகழ் சில்வஸ்டர் ஸ்டாலோன் வீட்டில் ஜாக்கி சான் ஆஸ்கர் விருதை பார்த்த போது தானும் ஆஸ்கர் பெற முடிவு செய்ததாக ஜாக்கி சான் தெரிவித்தார். கடைசியாக ஜாக்கி சானின் விருப்பம் சனிக்கிழமையன்று நிறைவேறியது. ஆம்! அவர் கைகளில் அந்த சிறிய ஆஸ்கர் விருது பொற்சிலை! ஆஸ்கர் பொற்சிலையைப் பெற்ற ஜாக்கி சான் கூறும்போது, “திரைத்துறையில் 56 ஆண்டுகள், 200 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளேன், கடுமையான உழைப்புக்குப் பிறகு ஒருவழியாக இப்போது என் கையில் ஆஸ்கர்” என்று நட்சத்திரங்கள் நிரம்பிய இரவு விருந்தில் ஜாக்கி சான் கூறினார்…
-
- 0 replies
- 328 views
-
-
அஞ்சலி: விவேக் (1961-2021) - சமூகத்தின் கலைஞன்! அகால மரணங்கள் எப்போதும் ஆழமான வடுக்களை ஏற்படுத்தக்கூடியவை. குறிப்பாகப் பொதுவாழ்வில் இருப்பவர்கள் சிலரை நாம் என்றைக்கும் நம்முடன் இருக்கப்போகிறவர் என்று கற்பனை செய்துவைத்திருப்போம். அப்படிப்பட்டவர்கள் திடீரென்று நம்முடன் இல்லை என்றாகும்போது ஏற்படும் அதிர்ச்சியையும் துன்பத்தையும் அளவிடவே முடியாது. விவேக்கின் மறைவு அத்தகையதே. கோவில்பட்டியில் பிறந்து, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டம் பெற்று, சென்னைத் தலைமைச் செயலகத்தில் பணியாற்றிவந்த விவேகானந்தன்,திறமையாளர்கள் பலரைப் பட்டை தீட்டிய கே.பாலசந்தரால் கண்டெடுக்கப்பட்ட வைரம். விவேக் என்னும் பெயர் மாற்றத்துடன் ‘மனதில் உறுதி வேண்டும்’ (1987) திரை…
-
- 0 replies
- 328 views
-
-
நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார் - சமூக வலைதளங்களில் இரங்கல் சென்னை ’அபூர்வ சகோதரர்கள்’, ‘அன்பே சிவம்’, ‘கார்கி’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த ஆர்.எஸ்.சிவாஜி காலமானார். அவருக்கு வயது 66. நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி 1981ஆம் ஆண்டு வெளியான ‘பன்னீர் புஷ்பங்கள்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகரும் இயக்குநருமான சந்தானபாரதியின் சகோதரர் ஆவார். ‘மீண்டும் ஒரு காதல் கதை’, ‘விக்ரம்’, ‘சத்யா’, ‘ஜீவா’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், 1989ஆம் ஆண்டு வெளியான ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. ஜனகராஜுடன் சேர்ந்து இவர் பேசும் ‘எங்கேயோ போய்ட்டீங்க சார்’ என்ற வசனம் மிகவும் பிரபலம். …
-
- 4 replies
- 328 views
-
-
2282 கோடி ரூபா செலவில் மகாபாரத கதை..! இந்திய சினிமாத்துறை வரலாற்றில் சுமார் 2282 கோடி ரூபா (150 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) செலவில் மகாபாரத கதையை, படமாக 5 மொழிகளில் உருவாக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. குறித்த படமானது மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில், மலையாளத்தின் மூத்த எழுத்தாளரும், கதாசிரியருமான எம்.டி.வாசுதேவநாயரின் ‘இரண்டாம் ஊழம்’ என்ற நாவலை மையப்படுத்தி படம் எடுக்கப்போவதாக அறிவித்திருந்தனர். தற்போது அந்த செய்தியை உறுதிப்படுத்தும்விதமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர். மேலும் குறித்த படத்தை ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் இந்திய கோடீஸ்வரரான பி.ஆர்.ஷெட்டி என்ற தயாரிப்பாள…
-
- 0 replies
- 328 views
-
-
திரை விமர்சனம்: நிசப்தம் எட்டு வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படு வதால் ஏற்படும் பாதிப்புகளை யும், அவற்றிலிருந்து மீளும் வழியையும் உரக்கச் சொல்கிறது ‘நிசப்தம்’. பெங்களூருவில் வசிக்கும் ஆதி (அஜய்) ஆதிரா (அபிநயா) தம்பதியின் ஒரே மகள் எட்டு வயது பூமிகா (பேபி சாதன்யா). எளிய நடுத்தர வாழ்வை நடத்தி வரும் இக்குடும்பத்தில் திடீரென புயல் வீசுகிறது. பட்டாம்பூச்சியாய் சிறகடிக்கும் பூமிகா, ஒரு காம வெறியனால் பிய்த்தெறியப்படு கிறாள். கொடூரமான பலாத்காரத் துக்குப் பின் குற்றுயிராக மீட்கப் படும் அவள், உடலாலும் மனதாலும் அடையும் சேதாரங்களைக் கண்டு, அவளது பெற்றோரின் வாழ்க்கை நொறுங்கிப்போகிறது. ஊடகங்கள் செ…
-
- 0 replies
- 328 views
-
-
உலக அளவில் அதிக மரியாதைக்குரியதாக கருதப்படும் சர்வதேச திரைப்படவிழா, கேன்ஸ். அதில் கோச்சடையான் ட்ரைலரை வெளியிடுவதாக கோச்சடையான் படத்தின் இயக்குனர் சௌந்தர்யா உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர். கேன்ஸ் திரைப்பட விழாவில் ரஜினியும் கலந்து கொள்வார் என கூறப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை. ரஜினி கேன்ஸ் செல்லவில்லை, ட்ரைலரும் வெளியிடப்படவில்லை. இது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. ரஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டே கேன்ஸுக்கு செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக சிலர் கூறினர். ஆனால் அதனை படத்தின் தயாரிப்பாளர் தரப்பு மறுத்துள்ளது. படத்தின் ட்ரைலர் சிறப்பாக வர வேண்டும் என்று ரஜினி தெரிவித்ததால் ட்ரைலரை மேம்படுத்தும் பணி நடந்து வருவதாகவும், அதனா…
-
- 0 replies
- 327 views
-
-
சமீபத்தில் வெளிவந்த 'கோமாளி' படத்தின் டிரெய்லர் பல்வேறு விவாதத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. குறிப்பாக, டிரெய்லரின் இறுதியில் இடம்பெற்றிருந்த ரஜினிகாந்த்தின் அரசியல் வருகையை கலாய்க்கும் காட்சிக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகளும் கிளம்பின. தமிழ்நாட்டில் மட்டுமில்லை, ஒட்டுமொத்த உலகத்திலும் எவர்கிரீன் டாப்பிக்காக இருப்பது 90'ஸ் குழந்தைகளின் வாழ்வியல். அதைத் தூண்டும் வகையான ஏதோவொரு நினைவுகளைக் கடக்கும்போது மொத்த 90'ஸ் நினைவுகளும் மின்னலென வெட்டிச் செல்லும். ஸ்கூலில் ஆரம்பித்து 90'ஸ் நினைவுகளைப் பற்றி பேச நிறைய இருக்கிறது. அப்போதிருந்த சூழல், தற்போது அப்படியே நேரெதிராக மாறிவிட்டது. முக்கியமாக வளர்ந்த சூழலும், டெக்னாலஜியும் அசுர வேகத்தில் வளர்ந்துவிட்டன. அப்படியான …
-
- 0 replies
- 327 views
-
-
தளபதி-65 படத்தின் தலைப்பு வெளியானது- மீண்டும் ஆங்கிலத்தில் பெயர்! நடிகர் விஜய்யின் தளபதி-65 படத்தின் தலைப்பும் முதல் பார்வையும் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளதுடன் படத்துக்கு ‘பீஸ்ட் (Beast)’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இவ்வாண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ படமும் ஆங்கிலப் பெயருடன் வெளியாகியிருந்தது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கின்றார். இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஜோர்ஜியாவில் நடைபெற்றுள்ள நிலையில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் அரங்குகள் அமைக்கப…
-
- 0 replies
- 326 views
-
-
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ‘ராவணன்’ படப் பாடலுக்கு மறுவடிவம் தந்த சுருதி ஹாசன் மணி ரத்தினம் இயக்கத்தில் முன்னர் வெளியான ‘ராவணன்’ இந்திப் படத்தில் இடம்பெற்ற ’ரஞ்சா, ரஞ்சா’ என்ற பாடலுக்கு நடிகை ஷ்ருதி ஹாசன் தற்போது மறுவடிவம் தந்து பாடியுள்ளார். மணி ரத்தினம் இயக்கத்தில் முன்னர் வெளியான ‘ராவணன்’ இந்திப் படத்தில் இடம்பெற்ற ’ரஞ்சா, ரஞ்சா’ என்ற பாடலுக்கு நடிகை சுருதி ஹாசன் தற்போது மறுவடிவம் தந்து பாடியுள்ளார். எம்.டி.வி. தயாரித்துள்ள ’ராயல் ஸ்டாக் பேரல் சீசன் சிக்ஸ்’ இசை நிகழ்ச்சிக்காக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இந்தப் …
-
- 0 replies
- 326 views
-
-
நடிகர்கள் ஜோக்கர்களாக தெரிந்தார்கள்... நடிகர் சங்கத்தை விட்டு விலகுகிறேன் #சிம்பு அதிரடி நடிகர் சங்கம் பிரச்னை ஆரம்பித்த நாள் முதல் சிம்புவும், அஜித்தும் நட்சத்திர கிரிக்கெட் சார்பாக அமைதி காத்ததும் மேலும் நட்சத்திர கிரிக்கெட்டுக்கு வருகை தராமல் இருந்ததும் என பல செய்திகள் உலாவி வந்தன. இந்நிலையில் சிம்பு சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் சங்கத்தை விட்டு விலகுவதாக பகிரங்கமாக அறிவிப்புக் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, ‘நான் நடிகர் சங்கத்தை விட்டு சில காரணங்களுக்காக விலகுகிறேன். ஒரு சங்கமாக நடிகர்களுக்கு சிக்கல்கள், பிரச்னைகள் வரும் வேளையில் உதவ வேண்டும். ஆனால் அவர்கள் அதில் தோல்வியடைந்துவிட்டனர். நான் சிக்கல்களை சந்தித்த வேளையில் எந்த ஒரு ஆதரவையும் ப…
-
- 0 replies
- 326 views
-
-
இலங்கைக்கு வருகை தந்த சிவகார்த்திகேயன்! ‘அமரன்’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகும் புதிய திரைப்படம் ‘பராசக்தி’. இயக்குனர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவாகிவரும் இத் திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடி மற்றும் மதுரையில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் சுதா கொங்கரா உள்ளிட்ட படக்குழு இலங்கை வருகைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Athavan Newsஇலங்கைக்கு வருகை தந்த சிவகார்த்திகேயன்!'அமரன்' படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பின்னர் சிவகார்த்திகேயன் நடிப…
-
- 0 replies
- 326 views
-
-
தமிழ்த்திரையுலகின் முதல் பிஆர்ஓ பிலிம்நியூஸ் ஆனந்தன் காலமானார் 1958 எம்.ஜி.ஆர். நாடோடி மன்னன் படம் தயாரித்துக் கொண்டிருந்த நேரம் அலுவலக மேளாளராக இருந்தவர் திரு. ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் அவரது மேஜையில் நாடோடி மன்னன் பட ஸ்டில்கள் இருந்தன. பத்திரிகைகளுக்கு விளம்பர ஏஜெண்ட் மூலமாகத்தான் ஸ்டில்கள் அனுப்புவது அந்நாளைய வழக்கம் “ஐயா பத்திரிகையாளர்கள் அனைவரும் எனது நண்பர்கள், இந்த ஸ்டில்களை அவர்களுக்கு நான் கொடுக்கட்டுமா” - என்று கேட்டேன். “பத்திரிகைகளில் ஸ்டில் வரவேண்டும், இதை யார் கொடுத்தால் என்ன? நீங்களே கொடுங்களேன்” - எனக் கூறி ஸ்டில்களை என்னிடம் கொடுத்தார். அடுத்த வாரமே எல்லா பத்திரிகைகளிலும் ஸ்டில்கள் ஜொலிக்க ஆரம்பித்தன. எம்.ஜி.ஆர். பாராட்டினார். P.R.O…
-
- 0 replies
- 326 views
-
-
‘இளையராஜா நீ ஒரு கொசு, என்னை உன்னால் தொடக்கூட முடியாது’ : கவியரசு வைரமுத்து பொளேர்! இளையராஜா அன்று வைரமுத்துவுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பினாராம் அதற்கு வைரமுத்துவின் பதில். இசை ஞானியே! என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை. உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை. என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே! உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன. கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குருவியைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பா…
-
- 0 replies
- 325 views
-
-
"ஆமா... நானும் கணேஷும் ஒண்ணா இல்லை...எங்களுக்குள்ள பிரச்னை!" - ஆர்த்தி காதல் கணவர் கணேஷுடன் விவாகரத்து... ஹீரோயின் ஆசையில் சைஸ் ஸீரோவுக்கு முயற்சி... காமெடி நடிகை ஆர்த்தியைச் சுற்றி இப்படி ஏகப்பட்ட செய்திகள்....'நெசமா' என ஆர்த்திக்கு வாட்ஸப்பினால், ஸ்மைலியை அனுப்பிவிட்டு அதே ஸ்மைலுடன் 'ஹாய் அக்கா' என லைனில் வருகிறார் ஆர்த்தி. ''ஆமாம்... நானும் கணேஷும் ஒண்ணா இல்லை... செம அடிதடி... பயங்கர பிரச்னை...''சின்ன இடைவெளி விட்டு பெரிய சிரிப்புடன் தொடர்கிறார் ஆர்த்தி. ''புருஷன், பொண்டாட்டின்னா சண்டை, சச்சரவு இருக்கணும். பிரச்னை இருக்கணும். அப்பதான் இந்த சமுதாயம் நம்மை உத்துப் பார்க்கும். அமைதியா இருந்தா, அட அவங்களுக்கென்ன... நல்லாத்…
-
- 0 replies
- 325 views
-
-
நியாயத்துக்கும் விசுவாசத்துக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் ஒருவன் இறுதியில் எதைத் தேர்வு செய்கிறான் என்பது ‘கருடன்’ படத்தின் ஒன்லைன். தேனியில் உள்ள கோம்பை அம்மன் கோயில் நிலத்தை அபகரிக்கத் துடிக்கிறார் அமைச்சர் தங்கபாண்டி (ஆர்.வி.உதயகுமார்). இதற்கான பட்டா கோயிலுக்குச் சொந்தமான வங்கி லாக்கரில் உள்ளது. அதனை எப்படியாவது எடுத்தாக வேண்டும் என்பதில் அமைச்சர் முனைப்புக் காட்ட, அதனை பராமரித்து வருகிறது செல்லாயி (வடிவுக்கரசி) குடும்பம். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆதி (சசிகுமார்), கர்ணா (உன்னி முகுந்தன்). இணை பிரியாத் தோழர்கள். இதில் சிறுவயதில் தனக்கு அன்னமிட்டு அடைக்கலம் கொடுத்த ஆதிக்கு தீவிர விசுவாசியாக இருக்கிறார் சொக்கன் (சூரி). இவர்களைத் தா…
-
-
- 3 replies
- 325 views
-
-
பெரும்பாளும் இயக்குநர் கவுதம் மேனனின் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பதில் தவியாய் தவிப்பார்கள் ஹீரோயின்கள். ஏன் எனில் அவரது திரைப்படங்கள் எல்லாம் கதநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட கதையம்சமுள்ள படங்களாக இருக்கும். இந்நிலையில் கவுதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்தில் நடிகர் சூர்யாவுடன் ஜோடி சேர அமலா பாலுடன் போட்டி போடுகிறார் த்ரிஷா. ஏற்கனவே கவுதம் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்து அசத்தியவர் த்ரிஷா, இதனால் துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யாவுடன் ஜோடியாகும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆனால் இதில் த்ரிஷா நடிப்பது 50 சதவீதம்தான் உறுதியாகியுள்ளது. காரணம், பட ஹீரோயின் வேடத்துக்காக அமலா பால் பொருத்தமாக இருப்பார் என்றும் யூ…
-
- 0 replies
- 325 views
-
-
ஏழு வருடங்களுக்கு பின்... மீண்டும் நடிக்க வரும், மீரா! நடிகை மீரா ஜாஸ்மின் ஏழு வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தில் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்திருந்தார். பின்னர் அணில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு திரைத்துறையில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1244791
-
- 0 replies
- 324 views
-
-
இந்த மே மாதத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வோம். இந்த மாதம் நாம் ஓடிடியில் பார்த்த படங்கள் என்னென்ன? இதில் எத்தனை நாம் தியேட்டர்களுக்கு விரும்பிச் சென்று பார்க்கும் நடிகர்களின் படங்கள், எத்தனை வேற்று மொழிப்படங்கள், மாஸ் ஹீரோக்களின் படங்கள் ஓடிடியில் பார்க்கும்போது எப்படி இருக்கிறது, மாஸ் ஹீரோக்களின் பில்ட் அப் காட்சிகளை ஓடிடியில் பார்க்கும்போது எப்படி இருக்கிறது, இடையில் வரும் பாடல்களை ரசிக்கிறோமா, ஓடிடியில் படம் பார்க்கும்போது நம்முடைய தேர்வு கதையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதா அல்லது நடிகர்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதா?! இந்தக் கேள்விகளுக்கான பதில்களை நாம் பட்டியிலிட்டாலே சினிமா என்னவாக மாறிக்கொண்டிருக்கிறது, இனி என்னவாக மாறும் என்பதை ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம…
-
- 0 replies
- 324 views
-
-
ஈழத்தில் நடந்த உண்மையை எடுத்து சொல்லும் யாழ் படம்: - பிப்ரவரி மாதம் 26ம் தேதி வெளியீடு! [Saturday 2016-01-23 21:00] புதுமுக இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் ஈழத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட உருவாகியுள்ள திரைப்படம் யாழ்.பல தமிழ் அமைப்புகள் மற்றும் ஈழம் சார்ந்த மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு எதிர்ப்பார்ப்புக்குள்ளாக்கிய படம். நீண்ட போராட்டத்துக்கு பிறகு வருகிற பிப்ரவரி மாதம் 26ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.மேலும் இப்படத்தில் நடிகர் வினோத் கிஷ்ணன், மிஷா மற்றும் பாலுமகேந்திராவால் பெரிதும் பாராட்டப்பட்ட சஷி நடித்துள்ளார். ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய திரைப்படமாக வந்துள்ளது, இதில் இடம் பெற்றுள்ள சிவாய நம பாடல் நல்ல வரவேற்பை பெற்றது குறிப…
-
- 0 replies
- 324 views
-
-
விஜய் சேதுபதி: எளிய தோற்றம், வித்தியாசமான கதாபாத்திரங்கள் - சுவாரஸ்ய தகவல்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை96/VIJAYSETHUPATHI எளிமையான பேச்சு, இயல்பான தோற்றம் என சமீபக் காலங்களில் அதிக ரசிகர்களை பெற்ற ஒரு நடிகர் விஜய் சேதுபதி. இன்று அவருக்கு பிறந்தநாள். அவர் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்களை இங்கே த…
-
- 0 replies
- 324 views
- 1 follower
-
-
@ராசவன்னியன் பொன்னியின் செல்வன் எப்படி இருக்கு. படத்தில்.... இலங்கை, என காட்டப்பட்ட காட்சிகள், தாய்லாந்தில் எடுக்கப் பட்டதாம்.
-
- 0 replies
- 324 views
-
-
தமிழ் சினிமா 2016: யார் நாயகி? சினிமாவில் நாயகனுக்கு ஈடாக நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொறுப்பு இயக்குநர்களின் கைகளில் மட்டுமே உள்ளது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மைதான். அதேசமயம் கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் பொருந்தி, திறமையை நிரூபித்து முதன்மையாக இருக்கும் வெற்றி நாயகிகள் யார்? 2016-ம் ஆண்டு தமிழ் சினிமா நாயகிகளில் யாருக்கு முதலிடம்? # சமந்தா ‘24', ‘தெறி' என இரு படங்கள் மூலம் முன்னணி நடிகர்களுடன் நடித்த வாய்ப்பு சமந்தாவுக்கு. வழக்கமும் பழக்கமுமான நாயகி வேடத்தை மிகச் சரியாகச் செய்திருக்கிறார். சவாலான பாத்திரம் இல்லாததும், குணச்சித்ர நடிப்புக்கான களமாக அமைந்து…
-
- 0 replies
- 324 views
-
-
நம்பியாரை விஞ்சிய ஒரு வில்லன் உலகில் இதுவரை கூறப்பட்டு வந்திருக்கும் எல்லாக் கதைகளும் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போராட்டமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. திரைப்படம் பிறந்த பிறகு நன்மையின் உருவமாக வடிக்கப்பட்ட கதாநாயகனின் ஆளுமைகளை நிலைநாட்ட, தீமையின் உருவமாக வடிக்கப்பட்டுவரும் வில்லன் கதாபாத்திரம் தேவைப்படுகிறது. கதாநாயகனைவிட வில்லன் கதாபாத்திரம் உயர்ந்து நின்றுவிடும் பல படங்கள் ஹாலிவுட் உலகுக்கு அறிமுகப்படுத்தியது. அதன் தாக்கம் தமிழ் சினிமாவில் 40-களிலேயே தென்பட்டது. பி.யு. சின்னப்பா நடிப்பில் 1940-ல் வெளியான ‘உத்தமபுத்திரன்’ சிறந்த உதாரணம். அதன் பிறகு பத்து ஆண்டு…
-
- 0 replies
- 323 views
-