வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
சமீபத்தில் தடாலடி கவுதம் அவர்கள் நடத்திய தடாலடிப் போட்டி ஒன்றில் பங்கேற்று முகல்-இ-ஆஸம் என்ற இந்தித் திரைப்படத்தின் தமிழ் Versionஐ காணும் வாய்ப்பு கிடைத்தது. இதைப் பற்றிய விமர்சனம் ஒன்றை தடாலடி கவுதம் அவர்கள் சிறப்பாசிரியராக பங்கேற்றிருக்கும் தமிழோவியம் மின் இதழுக்காக எழுதித் தரச் சொல்லியிருந்தார். தமிழோவியத்துக்காக எழுதிய அந்த விமர்சனம் இங்கே. தமிழோவியம் சுட்டி:- http://www.tamiloviam.com/unicode/09210613.asp வாய்ப்பளித்த தடாலடியாருக்கு நன்றிகள்! போர் - வாள் - இரத்தம் - வெற்றி... இடையில் இளைப்பாற அரண்மனை - அந்தப்புரம் - மது - மாது - இசை - நடனம்... இது தான் மொகலாயப் பேரரசர்கள்! புத்திரப் பாக்கியம் வேண்டி பாலைமணலில், கடும் வெயிலில் வெறும்காலுடன் …
-
- 0 replies
- 2k views
-
-
சமீபகால கமல்ஹாசன் குறித்த வலைப்பூ சர்ச்சைகளே இந்தப் பதிவை எழுதிடத் தூண்டியது. கமல்ஹாசன் பற்றி வெகுகாலமாக எழுதவேண்டும் என ஆவல் என்னை தூண்டினாலும் நேரம் கிடைக்காதது மட்டுமல்ல எழுதவேண்டியதின் அவசர அவசியமும் ஏதும் இல்லாமல் இருந்தது. பொதுவாக கமல்ஹாசனை ஒரு சதுரத்துக்குள்ளேயோ அல்லது வட்டத்துக்குள்ளேயோ அடக்குவது என்பது மிக சிரமம். இதுவரை இந்தியத் திரையுலகம் காணாத ஒரு திறமைசாலி அவர். நடிப்பிலோ, இயக்கத்திலோ, நடனத்திலோ, வசன உச்சரிப்பிலோ, பாடகராகவோ அல்லது திரைக்கதை எழுதுவதிலேயோ, வசனம் எழுதுவதிலேயோ, அந்தந்த துறைகளில் அவரை விட சிறந்தவர்கள் இருக்க முடியும். ஆனாலும் எல்லாத் துறைகளிலும் குறிப்பிடத்தக்க முத்திரை பதித்தவர் என்று பார்த்தால் கமல்ஹாசனை விட பொருத்தமான ஒருவரை காண்பது அரிது.…
-
- 6 replies
- 4.2k views
-
-
சினிமாவுக்கு குட்பை : தியா முடிவு அழகு கொப்பளிக்கும் குறும்பு தியா, சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு விரைவில் குடும்பஸ்திரியாகப் போகிறார். குறும்பு படத்தில் கவர்ச்சியில் கிறங்கடித்த தியா தற்போது 'செவன்',' வம்புசண்டை', 'சூறாவளி', மலையாளத்தில் 'ராத்திரி மழா' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். பட வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லையென்றாலும் கலையுலகிலிருந்து விடுபட்டு இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்தபோகிறாராம். தியாவின் கழுத்தில் மூன்று முடிச்சு போடப்போகும் பாக்கியசாலி, கப்பலில் கேப்டனாக பணிபுரிபவராம். கேரளாவை சேர்ந்த இவர் தியாவின் உறவுக்காரராம் கடந்த மாதம் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அடுத்த மாதம் கேரளாவில் திருமணம் நடைபெறவுள்ளது. திருமணம் முடிந்த…
-
- 27 replies
- 5.6k views
-
-
ரஜினியின் அடுத்த படம் "உண்மை" சிவாஜிக்கு பின்னர் ரஜினி நடிக்கவுள்ள படத்தை பிரேம்தான் இயக்கப் போகிறார் என்கிறார்கள். கன்னட திரையுலகை புரட்டிப் போட்டு வருபவர் இயக்குனர் பிரேம். இவர் இயக்கிய 3 படங்களுமே அடுத்தடுத்து சூப்பர் ஹிட். இதனால் பிரேம் மீது ரஜினிக்கு தனி மரியாதை. இவரது ஜோகி படம் தான் பரட்டை என்ற அழகுசுந்தரமாக எனும் பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் ரஜினியின் மருமகன் தனுஷ் நடிக்கிறார். தனுஷை இந்தக் கதையில் நடிக்கச் சொல்லி ரெக்கமெண்ட் செய்ததே ரஜினி தான்.
-
- 11 replies
- 3.1k views
-
-
சமீபத்தில் பல தடைகளைத் தாண்டி ரிலீஸ் செய்யப்பட்ட "வேட்டையாடு விளையாடு" திரைப்படம் கமல்ஹாசனே எதிர்பார்க்காத அபார வெற்றியை அவருக்குத் தந்திருப்பதாகத் தெரிகிறது.... படத்துக்கு இருந்த மிகப்பெரும் எதிர்பார்ப்பால் ஓபனிங் கலெக்சனில் சந்திரமுகி, அந்நியன் திரைப்படங்களில் ரெகார்டை உடைத்த வேட்டையாடு விளையாடு இரண்டாவது வாரத்தில் கடுமையான சரிவைச் சந்தித்தது.... படம் ஆவரேஜ் ஹிட் எனப்படும் வகையில் தான் இருந்தது.... ஆனால் மூன்றாவது வாரத்தில் திடீரென Gear போட்டு கிளம்பி பட்டையைக் கிளப்பி வருகிறது.... இதுவரை சென்னை தியேட்டர்கள் கற்பனை கூட செய்துப் பார்க்காத அளவில் வசூலை வாரி குவிக்கத் தொடங்கியிருக்கிறது.... ஆகஸ்ட் 25 அன்று வெளியான இந்த திரைப்படம் செப்டம்பர் 6 வரை சென்னை தியேட்டர்…
-
- 4 replies
- 2.1k views
-
-
-
சூர்யா-ஜோதிகா திருமண புகைப்படங்கள்
-
- 23 replies
- 8.9k views
-
-
இந்திய வலைப்பதிவுகளிலேயே முதல்முறையாக உங்கள் லக்கிலுக் வழங்கும் "சில்லுன்னு ஒரு காதல்" திரைவிமர்சனம்.... சில நாட்களுக்கு முன் இம்சை அரசன் விமர்சனம் செய்தபோது நண்பர் வசந்தன் கதை சொல்லாமல் விமர்சனம் செய்யுங்கள் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். முடிந்தவரை படத்தின் கதையை சொல்லாமல் விமர்சிக்க முயல்கிறேன். படத்தின் ஆரம்பக்கட்டக் காட்சிகள் பிரமிக்க வைக்கிறது. அம்பா சமுத்திரத்தின் அருகில் அழகான கிராமம், சூது வாது தெரியாத மக்கள், ஆறு, மரம், பசுமை என கேமிரா அள்ளிக் கொள்கிறது. படத்தின் ஆரம்பக் கட்டக் காட்சிகளைக் கண்டால் இயக்குனர் கிருஷ்ணா ஒரு இலக்கியக் காதலர் என முடிவெடுக்கத் தோன்றுகிறது. முதல் 10 நிமிடம் எக்ஸ்பிரஸ் வேகம் தான். இப்படியொரு படமா என ஆவென வாயைத் திறந்தால் ஒரு வ…
-
- 23 replies
- 5.6k views
-
-
சாசனம் சாசனம் நரை தட்டிய பருவம் தொட்டபோதிலும் மகேந்திரனின் சிந்தனையில் குறை தட்டவில்லை. கண்ணாடி தொட்டியில் ஊற்றப்பட்ட தண்ணீராய் இயக்குனரின் ஆக்கத்தில் தெளிவு புலப்படுகிறது. பாத்திர படைப்பு, கதைச் சொல்லும் விதம் ஆகியவற்றில் 'முள்ளும் மலரும்', 'உதிரிப்பூக்களின்' சுவையில் கொஞ்சமும் மாற்றமில்லை மகேந்திரனிடம். பிள்ளை இல்லாதவர்களுக்கு தோளுக்கு மேல் வளர்ந்த மகனை சுவீகாரம் செய்து கொடுப்பது செட்டிநாட்டு மக்களிடம் இருந்த இருக்கும் ஒரு பழக்கம். அப்படித்தான் இந்த கதையின் நாயகன் அரவிந்த்சாமியும் சுவீகாரம் செய்து கொடுக்கப்பட்டவர். சுவீகாரம் செய்து கொடுத்துவிட்டால் பிறந்த வீட்டையும் பெற்றவர்களையும் பார்க்கக்கூடாது என்பது எழுதாத சாசனம். அந்த சாசனத்தில் சிக்கி ந…
-
- 0 replies
- 889 views
-
-
!!!சயனைடு!!! இப்படம் கன்னடத்தில் வெளியாகி சக்கைப் போடு போடுகிறதாம்.... தமிழில் விரைவில் வெளியாக உள்ளது.
-
- 41 replies
- 9.2k views
-
-
சூர்யா, ஜோதிகா திருமணத்திற்கு எந்தவித மிரட்டலும் வரவில்லை என்று சென்னை மாநகர காவல் துறை ஆணையர் லத்திகா சரண் தெரிவித்துள்ளார். சூர்யா, ஜோதிகா திருமணத்திற்கு மிரட்டல் வந்துள்ளதால் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. மேலும், போலீஸாரின் அறிவுரைப்படி மேயர் ராமநாதன் அரங்கில் நடைபெறுவதாக இருந்த வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படட்து. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் இது குறித்துப் பேசிய காவல்துறை ஆணையர் லத்திகா சரண், சூர்யா,ஜோதிகா திருமணம் தொடர்பாக எந்தவித மிரட்டலும் வரவில்லை. திருமண வரவேற்பு நிகழ்ச்சி அடையார் பார்க் ஹோட்டலுக்கு மாற்றப்பட்டதிலும் எங்களுக்கு சம்பந்தம் இல்லை. திருமணத்தில் முக்கியப் பிரமுகர…
-
- 0 replies
- 1.4k views
-
-
எம்.ஜி.ஆர். சிலைகள் உடைப்பு: நடிகர் சத்யராஜ் கண்டனம் [வியாழக்கிழமை, 31 ஓகஸ்ட் 2006, 05:35 ஈழம்] [புதினம் நிருபர்] யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் எம்.ஜி.ஆர். சிலைகள் உடைக்கப்பட்டமைக்கு நடிகர் சத்யராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: இலங்கையில் எம்.ஜி.ஆர் சிலை உடைக்கப்பட்டதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கை தமிழர்கள் மீது பற்றும், பாசமும் கொண்டிருந்தவர், எம்.ஜி.ஆர். அவர் நடித்த எங்க வீட்டு பிள்ளை படம் திரைக்கு வந்தபோது, அவரை இலங்கைக்கு வரவழைத்து, உற்சாக வரவேற்பு கொடுத்தது இலங்கை அரசாங்கம். மிகப்பெரிய வள்ளலாக வாழ்ந்து காட்டியவர், அவர். மனிதாபிமானம் மிகுந்தவர். அவர் சில…
-
- 4 replies
- 1.6k views
-
-
தற்கொலை முயற்சி நாடகம் நடிகை விஜயலட்சுமி 4 பேரை காதலித்தார்: படக்குழு பெண் பரபரப்பு தகவல் டி.வி.நடிகை விஜயலட்சுமி தூக்க மாத்திரைகள் தின்று தற்கொலைக்கு முயன்றார். டைரக்டர் ரமேஷ் திருமணம் செய்து கொள்ளுமாறு தொந் தரவு செய்ததால் இந்த முடிவை எடுத்ததாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார். அவர் மீதும் டைரக்டர் ரமேஷ் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தனிப்படை போலீசார் பெங்களூர் சென்று டைரக்டர் ரமேஷிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது விஜயலட்சுமி தொடர்பாக பல புதிய தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன. நடிகை விஜயலட்சுமிதான் விரட்டி, விரட்டி டைரக்டர் ரமேஷை காதலித்ததும், பிறகு அவராகவே பிரிந்து சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து நடிகை விஜயலட்சுமி யார்-ய…
-
- 1 reply
- 1.9k views
-
-
மனோஜ்நந்தனா திருமணம் கன்ஃபர்ம்ட்! பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜுக்கும், நடிகை நந்தனாவுக்கும் இடையே திருமணம் நடைபெறுவது உறுதியாகி விட்டது. இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் தாஜ்மஹால் மூலம் நடிகராக மாறினார். தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ள மனோஜ், லெமன் படத்தில் வில்லனாக நடிக்கிறார். அவருக்கும் கேரளத்தைச் சேர்ந்த நடிகை நந்தனாவுக்கும் காதல் என்று சில மாதங்களுக்கு முன்பு செய்தி கசிந்தது. இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்தி பரவியது. ஆனால் திடீரென இந்த காதல் முறிந்து விட்டதாகவும், கல்யாணம் நடைபெறாது எனவும் கூறப்பட்டது. அதன் பிறகு மனோஜ், நந்தனா குறித்து எந்த செய்தியும் வெளியாகவில்லை. இந்த நிலையில் இருவரும் கல்யாணம் செய்த…
-
- 3 replies
- 2.3k views
-
-
வேட்டையாடு விளையாடு ஒருவழியாய் ரிலீஸ் வேட்டையாடு விளையாடு படம் இன்று ரிலீஸாகும் நிலையில் கமல் தனக்துத் தர வேண்டிய சம்பள பாக்கியைக் கேட்டு நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் கமல் சமரசத்திற்கு ஒத்து வந்ததால், பிரச்சினை சுமூகமாக¬ முடிந்தது. காஜாமைதீன் தயாரிப்பில் வேட்டையாடு விளையாடு படத்திற்கு பூஜை போடப்பட்டது. ஆனால் பணப் பிரச்சனையில் காஜாமைதீன் சிக்கிக் கொண்டதால் படம் ஆஸ்கர் பிலிம்ஸுக்கு கை மாறியது. ஆனால் திடீரென ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலிருந்து விலகிக் கொண்டது. இதையடுத்து படத்தைத் தயாரிக்கும் பொறுப்பை செவன்த் சானல் நிறுவனத்தின் மாணிக்கம் நாராயணன் ஏற்றார். இதைத் தொடர்ந்து கமல்ஹாசன்ஜோத…
-
- 10 replies
- 5.6k views
-
-
கலக்கிய முன்னாள் கனவு கன்னிகள்! அந்தக் கால கனவுக்கன்னிகளான பத்மினி, சரோஜாதேவி, மஞ்சுளா, ராஜ சுலோச்சனா, சச்சு உள்ளிட்டோர் நாடோடி மன்னன் படத்தின் 49வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பழைய நினைவுகளை அசைபோட்டு ரசிகர்களின் காதுகளுக்கு விருந்து கொடுத்தனர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த நாடோடி மன்னன் வெளியாகி நேற்றுடன் 48 ஆண்டுகள் முடிவடைந்தது. இதையொட்டி சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் நாடோடி மன்னனின் 49வது ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாகவும், எம்.ஜி.ஆர். படங்களிலும் நடித்த பழைய நடிகைகள் பலர் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். நாடோடி மன்னன் நாயகி சரோஜாதேவி, பத்மினி, ராஜ சுலோச்சனா, மஞ்சுளா, சச்சு, எம்.என்.ராஜம், ராஜஸ்…
-
- 4 replies
- 4.5k views
-
-
அன்பான............தமிழ் மக்களே....ஜாக்கிரதை....... ஈழத்தில் ஒரு விடியலுக்காக எத்தனையோ இன்னல்களுக்கு எமது உறவுகள் முகம் கொடுத்து ஈழம் எங்கும் குருதி ஆறு பாய்ந்து கொண்டுள்ள இந்நேரத்தில்.......ஒரு தரமேனும் கண்டன அறிக்கையோ அல்லது அனுதாப அறிக்கையோ வெளியிடாத இந்த சுப்பர்ஸ்டார்கள் (ரஜனி-சங்கர்-ஏவிஎம்.சரவணன்)100 கோடிகள் முதலிட்டு சினிமா எடுத்து ஈழத்தமிழர்களிடம் படம் காட்ட வருகிறான்கள்.........ஜாக்கிரதை........ .தமிழின உணர்வுள்ள அனைத்து தமிழர்களும் ஒன்றாக இணைந்து இப்படியானவர்களுக்கு சரியான பாடம் படிப்பிக்க வேண்டும். நன்றிகள் :evil: கிங் எல்லாளன் :P
-
- 20 replies
- 4.7k views
-
-
-
பிரபல கன்னட நடிகை ஜெயமாலா சபரிமலை அய்யப்பனை தொட்டு வணங் கிய சர்ச்சை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது அடங்குவதற்குள் தற்போது சபரிமலை தந்திரி என்று அழைக் கப்படும் தலைமை பூசாரி கண்டரரு மோகனரரு மீதான செக்ஸ் புகார் விசுவரூபம் எடுத்துள் ளது. மோகனரரு அழகிகளுடன் உல்லாசமாக இருப்பது போன்று படங்கள் எடுத்து அவரை ஒரு கும்பல் மிரட்டி யது. இதையடுத்து தந்திரி போலீசில் புகார் செய்தார். இந்த விவகாரத்தில் மோக னரரு பதவி நீக்கம் செய்யப் பட்டார். இது தொடர்பாக மோகனர ருவிடம் போலீசார் விசா ரணை நடத்தினார்கள். அவர் தொடர்பு வைத்திருந்த விபசார அழகிகள் ஷோபா, சாந்தா ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மோகனரு பற்றி எர்ணாகுளம் போலீசார் விசாரணை நடத்திய போது நடி…
-
- 3 replies
- 2.8k views
-
-
நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் இன்று நடந்தது. தலைவராக சரத்குமார் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார். மற்ற நிர்வாகிகளை தேர்ந்து எடுக்க ஓட்டுப்பதிவு நடந்தது. தியாகராய நகர் அபிபுல்லா ரோட்டில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தில் காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. நடிகர் சங்கத்தில் உறுப் பினராக உள்ள நடிகர்-நடிகைகள் மற்றும் நாடக நடிகர்- நடிகைகள் ஓட்டுப் போட்டனர். மொத்தம் 1928 ஓட்டுகளும், 595 தபால் ஓட்டுகளும் உள்ளன. எம்.கே.வி.ராஜாமணி தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தலை நடத்தினார். ஆண் வாக்காளர்களும், பெண் வாக்காளர்களும் தனித்தனி வரிசையில் நின்று ஓட்டுப் போட்டனர். இதற்காக அங்கு சாமியானா பந்தல் போடப்பட்…
-
- 0 replies
- 1.4k views
-
-
பிரபல சினிமா பின்னணி பாடகர் ஹரிஸ் ராகவேந்தரா. பாரதி படத்தில் இடம் பெற்றுள்ள "நிற்பதுவே நடப்பதுவே'' என்ற பாடல் மூலம் பிரபலமான இவருக்கும், மலேசிய தலைநகர் கோலாலம்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் கோவிந்த ராஜாவின் மகள் உமாதேவி (வயது30)-க்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்த 2003-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இதன் பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து உமா தேவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு சென்னை முதன்மை குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக உமாதேவி மற்றும் இவரது தந்தை கோவிந்தராஜன் ஆகியோர் மலேசியாவில் இருந்து சென்னை வந்தனர். பின்னர் போலீஸ் கமிஷனர் லத்திகாசர…
-
- 0 replies
- 1.2k views
-
-
படப்பிடிப்பில் இருந்த சத்யராஜ் பெரியார் படம் பற்றி கூறியதாவது:- நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பெரியார் படத்தில் நடிக்க ஆசைப்பட்டார். அது நிறைவேறவில்லை. எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். ஆனால் அவற்றில் சில படங்கள்தான் மனதில் நிற்கும். அந்த படங்களையும் தாண்டி பெரியார் படம் நிற்கும். பெரியார் வேஷத்தை நான் போடும்போது இன்னொரு முறை பிறப்பு எடுத்ததாகத்தான் உணர்ந்தேன். பெரியார் வேடம் என்னோட கனவு என்றும் அந்த படத்தை எடுத்தால் சம்பளம் வாங்காமல் நடிப்பேன் என்றும் ஏற்கனவே நான் கூறியிருந்தேன். இப்போது அது நடந்துள்ளது. பெரியாருடன் பழகியவர்களை தேடிப்பிடித்து பெரியாரின் பாடிலேங்க்வேஜ் மேனரிஷம் போன்றவற்றை கேட்டு தெரிந்து …
-
- 0 replies
- 1k views
-
-
சென்ற வாரம் சென்னையில் பாரத் மற்றும் ராஜ் திரையரங்குகளில் புரட்சித்தலைவரின் நாடோடி மன்னன் ரீ-ரிலீஸ் ஆகியது.... திவ்யா பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கிறார்கள்.... 1958ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் இப்போது ரிலீஸ் செய்யப்பட்டும் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த வாரம் ஆல்பட், கோபிகிருஷ்ணா மற்றும் கணபதிராம் திரையரங்குகளில் நாளை முதல் ரிலீஸ் ஆகிறது.... இன்றே ரிசர்வேஷனும் தொடங்கியிருக்கிறது.... இந்தப் படம் தான் புரட்சித்தலைவரை தமிழ்நாட்டின் மன்னன் ஆக்கியது என்று சொன்னாலும் மிகையில்லை.... இந்தப் படம் வெளியாவதற்கு முன்னர் புரட்சித்தலைவருக்கு அவ்வளவாக திரையுலக மார்க்கெட் இல்லையாம்.... சிவாஜி சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தாராம்.... எனவே தலைவரே இந்தப் படத்தை தயாரித்து, இயக…
-
- 4 replies
- 3.9k views
-
-
பாசமலர் டைப்பில் அண்ணன் + தங்கச்சி, தங்கச்சி ரொம்ப அழகு, ஸ்மார்ட்டான பாரின் ரிட்டர்ன் பையன், ஒரு கிராமத்து வில்லன், ஒரு பேராசைக்கார பணக்கார வில்லன், அந்த வில்லனுக்கு ஒரு பொறாமைக்கார பொண்ணு, காதல், பாசம், சுயமரியாதை, கலாச்சாரம், மண், விவசாயம், இளமை, இசை, நடனம்..... போதாதா ஒரு வெற்றிகரமான மசாலா படம் எடுப்பதற்கு? கலைஞரின் கேளிக்கை வரி சலுகையில் முதன் முதலாக தன் ஆங்கில டைட்டிலை இழந்து சலுகை பெற்றிருக்கும் படம் "உனக்கும், எனக்கும்".... சம்திங்... சம்திங்... இருந்திருந்தாலும் ரொம்பப் பொருத்தமாகத் தான் இருந்திருக்கும்.... இருந்தாலும் வரிச்சலுகைக்காக நீக்கியிருக்கிறார்கள்.... தன் அத்தை மகளின் திருமணத்துக்காக தமிழ்நாட்டுக்கு வருகிறார் லண்டன் வாழ் கதாநாயகன்.... திருமணத்து…
-
- 16 replies
- 5.5k views
-
-
சூர்யா ஜோதிகா செப். 11ல் திருமணம்!ஆகஸ்ட் 06, 2006 சென்னை: நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா திருமணம் செப்டம்பர் 11ம் தேதி நடைபெறும். 12ம்தேதி சென்னையில் திருமண வரவேற்பு நடைபெறும் என சூர்யாவின் தந்தையும், பிரபல நடிகருமான சிவக்குமார் அறிவித்துள்ளார். சரவணன் என்ற இயற்பெயர் கொண்ட சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா, நேருக்கு நேர் படம் மூலம் அறி¬கமானார். வாலி படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார் ஜோதிகா. இருவரும் இணைந்து நடித்த முதல் படம் பூவெல்லாம் கேட்டுப்பார். இந்தப் படத்தின் போது தான் இருவருக்கும் காதல் பிறந்தது. தொடர்ந்து உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, மாயாவி ஆகிய படங்களில் சேர்ந்து நடித்தனர். விரைவில் வரவுள்ள சில்லுன்னு ஒரு காதல் படத்திலும் இருவரும்…
-
- 15 replies
- 3.5k views
-