வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
கௌதம் கார்த்திக்கின் ஐந்தாவது படம்... தம்ஸ்-அப் சொல்கிறதா?- ‘ரங்கூன்’ விமர்சனம் ‘பிறப்பதும், இறப்பதும் சுலபம். இதற்கு நடுவில் வாழ்வதுதான் கஷ்டம்’ என்னும் கெளதம் கார்த்திக்கின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்னைகளும், துரோகமும்தான் ரங்கூன். 80-களில் பர்மாவிலிருந்து அகதிகளாக பலர் இந்தியாவிற்கு வந்து செட்டிலானார்கள். அப்படி கெளதம் கார்த்திக் குடும்பம் சிறுவயதில் சென்னை வருகிறார்கள். கெளதம் வளர்ந்ததும், செளக்கார்பேட்டையில் உள்ள 'சீயான்’ என்றழைக்கப்படும் கடத்தல் வியாபாரி சித்திக்கிடம் வேலைக்குச் சேர்கிறார். தன்னுடைய இரண்டு நண்பர்களோடு சேர்ந்து, சித்திக்கின் கடத்தல் தொழில் தொடர்கிறார் கெளதம். இதற்கு நடுவே சனா மக்பூல் மீது காதல். காதலுக்காக கடத்தல் தொழிலை…
-
- 1 reply
- 391 views
-
-
ஒரு ஊர்ல ரெண்டு தாதாவாம்..!? - 'சத்ரியன்' விமர்சனம் கத்தி பிடித்தவனுக்கு காதல் வந்தால் என்ன நடக்கும் என்பதைச் சொல்கிறது இந்த சத்ரியன் ரிட்டர்ன்ஸ். திருச்சியையே ஆள நினைக்கும் இரண்டு நண்பர்கள் விக்ரம் பிரபு மற்றும் கதிர். இருவரும் திருச்சியைக் கலக்கும் வெவ்வேறு தாதாக்களிடம் சேர்கிறார்கள். அதில் விக்ரம் பிரபு, சமுத்திரத்திடம் (சரத்) வேலைக்கு சேர, கதிர் இவர்களின் எதிராளியான மணப்பாறை சங்கரிடம் (அருள் தாஸ்) வேலைக்கு சேர்கிறார். அமைச்சர் சொல்லியதன் பேரில் அருள்தாஸ், சரத்தைக் கொன்றுவிட திருச்சி அருள்தாஸ் கைக்கு செல்கிறது. இதற்கிடையில் சரத்தின் மகள் மஞ்சிமா மோகனுக்கு விக்ரம் பிரபு காவலனாக செல்ல நேரிடுகிறது. வழக்கம் போல ஹீரோவ…
-
- 1 reply
- 495 views
-
-
ஒளிரும் நட்சத்திரம்: அனுஷ்கா ஓவியம்: ஏ. பி. ஸ்ரீதர் 1. திரையில் கவர்ச்சிக் கதாநாயகியாக வாழ்க்கையைத் தொடங்கி காவியக் கதாநாயகியாக உயர்ந்து காட்டியவர் அனுஷ்கா. 1981-ம் ஆண்டு, நவம்பர் 7 அன்று கர்நாடகா மாநிலம் மங்களூரில் விட்டல் ஷெட்டி - ஊர்மிளா பிரபுல்லா தம்பதியின் மகளாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்குச் சூட்டிய பெயர் மகாலட்சுமி. சிறுவயதுமுதல் குடும்பத்தினர் ‘ஸ்வீட்டி’ என்ற செல்லப் பெயரால் அழைத்துவருகிறார்கள். இவருக்கு சாய் ரமேஷ், குணராஜ் ஆகிய இரு சகோதரர்கள் இருக்கிறார்கள். பெங்களூரு ஈஸ்ட்வுட் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்து, மவுண்ட் கார்மெல் கல்லூரியில் இளங்கலையில் கணினி அறிவியல் பயின்றவர். 2. …
-
- 0 replies
- 683 views
-
-
சினிமா விமர்சனம்: தி மம்மி திரைப்படம் தி மம்மி நடிகர்கள் டாம் க்ரூஸ், சோஃபியா புதெல்லா, அனபெல் வாலிஸ், ரஸல் க்ரோ நடிகர்கள் அனபெல் வாலிஸ், ரஸல் க்ரோ இயக்கம் அலெக்ஸ் கர்ட்ஸ்மன். 1999ல் ப்ரென்டன் ஃப்ரேஸர் நடித்து, ஸ்டீஃபன் சமர்ஸ் இயக்கி வெளிவந்த தி மம்மி திரைப்படம், ஒரு அட்டகாசமான சாகசம். எதிர்பாராதவிதமாக, ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமும்கூட. கி.மு. 13ஆம் நூற்றாண்டில் எகிப்தில், ஒரு மந்திரவாதிக்கும் அரச…
-
- 0 replies
- 479 views
-
-
ஆர்.எஸ்.கார்த்திக், அஞ்சலிராவ் நடிக்கும் படம் ‘பீச்சாங்கை’. அசோக் இயக்குகிறார். அவர் கூறியது: விபத்தில் சிக்கும் ஹீரோ, ஏலியன் ஹேண்ட் சின்ட்ரோரம் என்ற ஒரு நோயால் பாதிக்கப்படுகிறார். இதில் அவரது பீச்சாங்கை அவர் சொல்படி கேட்காமல் மாறுபட்டு செயல்படுகிறது. அதனால் ஏற்படும் விளைவுகள், அரசியல் சட்டையர், கடத்தல் என வெவ்வேறு களத்தில் கதை பயணிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பை சென்னையில் பகலில் நடத்துவதற்காக போலீஸ் மற்றும் உயர் அதிகாரிகளிடம் பேசிப்பார்த்தும் அனுமதி தரவில்லை. இரவில் ஷூட்டிங் செய்து கொள்ளுங்கள் என்றனர். எனது கதை பகலில் நடப்பது. அதை எப்படி இரவில் எடுக்க முடியும். இதுபோல் பல படங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இயக்குனர் ஷங்கர் படங்களுக்கு மட்டும் பகலில் பெரிய …
-
- 0 replies
- 276 views
-
-
உருவத்தைக் கேலி செய்தவர்களுக்கு நடிகை சரண்யா மோகன் உணர்வுபூர்வமான பதில்! தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை சரண்யா மோகன் 2015ம் வருடம் செப்டம்பரில் திருமணம் செய்துகொண்டார். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் அரவிந்த் கிருஷ்ணனை அவர் திருமணம் செய்தார். சரண்யாவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நடிகை சரண்யா மோகனின் சில புகைப்படங்கள் கேலிக்கும் விமரிசனங்களும் ஆளாகியுள்ளன. குழந்தை பிறந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் அவர் கூடுதல் எடையுடன் இருந்தார். இருப்பினும் அத்தகைய புகைப்படங்களைத் தொடர்ந்து தனது ஃபேஸ்புக்கில் …
-
- 1 reply
- 1.2k views
-
-
’யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை’ ஸ்ருதிஹாசன் ‘சங்கமித்ரா’ திரைப்படத்தில் இருந்து விலகிவிட்டார். அடுத்து ‘சபாஷ்நாயுடு’ திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ஹிந்தியில் நடித்துள்ள ‘பெஹன் ஹோகி தேரி’ திரைப்படம் 9ஆம் திகதி வெளியாகிறது. இந்த நிலையில், சுருதிஹாசன் அறுவை சிகிச்சை செய்து தனது உதட்டை அழகுபடுத்திக் கொண்டதாக சமூக வலைத்தளங்களில் சிலர் அவரை விமர்சித்தனர். இதற்கு பதில் அளித்துள்ள ஸ்ருதிஹாசன், “என் உடம்பு, என் முகம், என்ன வேண்டுமானாலும் செய்வேன். யாருக்கும் பதில் சொல்லவேண்டியது இல்லை. சமூக வலைத்தளங்களில் யார் என்னைப்பற்றி என்ன எழுதினாலும் எனக்கு கவலை இல்லை. நான் யாருக்கும் பதில…
-
- 4 replies
- 595 views
-
-
சிவாஜி, ரஜினி, விஜய்க்கு திரைக்கு பின் நடந்த கதை! சினிமா... அன்றும், இன்றும் மக்களின் பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி ஒவ்வொருவருக்குள்ளும் ஏதோ ஒரு வகையில் நெருக்கமாகவே இருந்துவருகிறது. 'கடவுள் யாரது, யார் பார்த்தார்... அதைக் கண்ணில் காட்டியது இந்த சினிமாதான்'. சினிமாவை ஒரே வரியில் இப்படித்தான் வர்ணிக்க முடியும். சினிமா ஏன் இப்படி மெச்சப்படுகிறது... தமிழ் சினிமாவின் பெரிய சாதனையாளர்கள் எப்படி உருவானார்கள்... இன்றைய தமிழ் சினிமா எப்படி இருக்கிறது... இவற்றை மூன்று பதிவுகளாகக் காணலாம், முதல் பதிவு இதோ! சினிமாவில் நுணுக்கமான விஷயங்கள் எக்கச்சக்கமாக இருக்கின்றன. அவை எல்லாமே ஒன்றிணைந்து அழகாய் வெளிவரும்போதுதான் முழுமையான சினிமாவாகிறது. காதல…
-
- 0 replies
- 277 views
-
-
குண்டான கீர்த்திசுரேஷ் பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறை மகாநதி என்ற பெயரில் திரைப்படமாக தெலுங்கில் எடுத்து வருகின்றனர். தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்டு தமிழ், மலையாளத்தில் டப் செய்யப்பட்டு ஒரே நாளில் மூன்று மொழிகளில் “மகாநதி” திரைப்படம் வெளியாக உள்ளது. மகாநதி திரைப்படத்தில் சாவித்திரியாக நடிப்பவர் கீர்த்தி சுரேஷ். சாவித்ரியைத் திருமணம் செய்த ஜெமினி கணேசனின் பாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். சாவித்திரியிடம் பேட்டி எடுப்பதன் மூலம் அவரது கடந்த காலத்தை ப்ளாஷ்பேக்கில் கொண்டு வருவதற்கு உதவும் ரிப்போர்ட்டர் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். சாவித்ரியின் இளமைக்காலக் காட்சிகளில் தற்போது கீர்த்…
-
- 0 replies
- 344 views
-
-
சினிமா என்னை சிதைத்துவிட்டது – சன்னி லியோன் நடிகையாக ஜெயித்திருந்தாலும் நிஜத்தில் நிறைய தோல்வியடைந்துள்ளதாக சன்னி லியோன் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் தற்போது மும்பையில் செட்டில் ஆகி பொலிவூட் படங்களில் நடித்து வருகிறார். கவர்ச்சி கதாபாத்திரங்களே அவரை தேடி வருகின்றது. இந்நிலையில் சினிமா பற்றி அவர் கூறும்போது, இன்று நான் பெரிய நடிகையாக நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருக்கலாம். ஆனால், நான் நிஜ வாழ்க்கையில் நிறைய தோல்விகளை சந்தித்துவிட்டேன். நட்சத்திர அந்தஸ்தை பெற நான் நிறைய இழந்திருக்கிறேன். அந்த இழப்பு இன்றும் கூட தொடர்கிறது. நடிக்க வ…
-
- 1 reply
- 369 views
- 1 follower
-
-
ஒரு மாறுபட்ட கோணத்தில் இளையராஜாவை பற்றி சீமான் விமர்சனம்
-
- 0 replies
- 238 views
-
-
ஒரு வாரத்தில் கல்யாணம்... ஏழாவது நாள் என்ன நடக்கிறது? -‘7 நாட்கள்’ விமர்சனம்! ஒரு வாரத்தில் கல்யாணம் ஆகவிருக்கும் பிரபுவின் மகனுக்கு ஏழாவது நாள் என்ன ஆகிறது? என்பதுதான் '7 நாட்கள்' படத்தின் கதை. மாநிலத்தின் முதலமைச்சரையே 'வாடா... போடா!' என்றழைக்கும் பணக்காரத் தொழிலதிபர் பிரபுவுக்கு ஒரு மகன், ஒரு வளர்ப்பு மகன். மகன் ராஜீவ், ப்ளேபாய். வளர்ப்பு மகன், போலீஸ் கதாபத்திரத்துக்கென்றே குத்தகைக்கு எடுத்த கணேஷ் வெங்கட்ராம், ஒரு மாறுதலுக்கு சைபர் க்ரைம் ஆபீஸர். பிரபுவின் புகழுக்குக் களங்கம் வரவிருக்க, அதைத் தடுக்கும் முக்கியமான பொறுப்பை வளர்ப்பு மகனிடம் ஒப்படைக்கிறார். இடியாப்பச் சிக்கலான இந்தப் பிரச்னைக்குள், அப்பார்ட்மென்ட் ஒன்றில் வசிக்கும் ச…
-
- 0 replies
- 271 views
-
-
F8-க்கு சவால் விடுகிறதா போங்கு டீம்? - போங்கு விமர்சனம் யாரோ செய்த கார் திருட்டுக் குற்றச்சாட்டில் சிக்கி வேலையைத் தொலைத்த மூன்று நண்பர்கள், பிறகு கார் திருட்டையே வாழ்க்கையாக்கிக்கொள்கிறார்கள். திருட்டிலிருந்து திருந்தினார்களா, அவர்களைத் திருந்தவிட்டார்களா என்பதே இந்த ‘போங்கு’ ஆட்டம். நட்டி, ருஹி சிங், அர்ஜுனன் மூவரும் நண்பர்கள். கார் கம்பெனி வேலை, நிறைவான சம்பளம், சொகுசான வாழ்க்கை என வாழ்கிறார்கள். டெலிவரிக்குப் போன காஸ்ட்லி கார் ஒன்று திருடப்படுகிறது. அந்தத் திருட்டுக் குற்றச்சாட்டு, இவர்கள் மீது விழுகிறது. ஜெயிலுக்குச் செல்கிறார்கள். வெளியே வந்த பிறகும் மற்ற கம்பெனிகளில் வேலை தர மறுக்கிறார்கள். ஜெயில் நட்பை பயன்படுத்தி கா…
-
- 1 reply
- 415 views
-
-
'ஹ்யூமன் வெப்பன்லாம் இருக்கு. ஆனா, திரைக்கதை ட்விஸ்ட்!?' - முன்னோடி விமர்சனம் யார் உனக்கு முன்னோடியோ அவரைப் பொறுத்தே உன் வாழ்க்கை அமையும். அப்படி கெட்டவனை முன்னோடியாக எடுத்துக்கொள்ளும் ஒருவனின் வாழ்க்கை என்னவாகிறது என்பதே இந்த ‘முன்னோடி’யின் கதை. ‘தம்பிக்கே முக்கியத்துவம் தருகிறார்கள்’ என நினைத்து குடும்பத்தோடு ஒட்டாமல் இருக்கும் ஹீரோ ஹரிஷ், ஆபத்து ஒன்றில் சிக்கிய வில்லன் அர்ஜுனாவை காப்பாற்றுகிறார். அதில் இருந்து ஹரிஷை தன் மகன்போல பாசம் காட்டி வளர்க்கிறார் அர்ஜுனா. இவர்களின் இந்த திடீர் உறவு அர்ஜுனாவின் மைத்துனருக்கு பிடிக்கவில்லை. தவிர அர்ஜுனாவுக்கு ஸ்கெட்ச் போட்டபடி அவரைத் தூக்க காத்திருக்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி. இந்த நி…
-
- 0 replies
- 367 views
-
-
பாலச்சந்திரனின் ஒளிப்படம் ஜோதிகா நடிக்கும் படத்தில் இயக்குநர் பிரம்மாவின் இயக்கத்தில் ஜோதிகா நடித்திருக்கும் திரைப்படம் மகளிர் மட்டும். அந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. அதில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் புதல்வன் பாலச்சந்திரனின் ஒளிப்படம் ஏந்தியவாறு பெண்கள் விளக்கை கையில் வைத்துக் கொண்டு போராட்டம் நடத்துவது போன்ற காட்சி அமைந்துள்ளது. மெரினாவில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டதாகவே காட்சி அமைக்கப்பட்டுள்ளது. பாலச்சந்திரன் எத்தனை காலங்கள் கடந்தாலும் இந்த 21ஆம் நூற்றாண்டில் நடந்த மிகப் பெரும் மனிதப் படுகொ…
-
- 0 replies
- 370 views
-
-
எனக்கு சினிமாவை தவிர வேறு தொழில் தெரியாது : நடிகர் கமல்ஹாசன்
-
- 1 reply
- 333 views
-
-
நடிகை ஷெர்லி தாஸை மணந்த இயக்குநர் வேலு பிரபாகரன்! நாளைய மனிதன், கடவுள், புரட்சிக்காரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். முப்பது படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ள வேலு பிரபாகரன் இயக்கிய 'ஒரு இயக்குநரின் காதல் டைரி' திரைப்படம் நேற்று தான் வெளியானது. இந்நிலையில் வேலு பிரபாகரன் நடிகை ஷெர்லின் தாஸையை இன்று (3 ஜூன்) காலை 10.25 மணியளவில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சென்னையில் உள்ள லீ மேஜிக் லேண்டர்ன் திரையரங்கில் திருமணம் செய்துள்ளார். வேலு பிரபாகரன் இயக்கிய 'காதல் கதை' திரைப்படத்தில் ஷெர்லின் தாஸ் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வேலு பிரபாகரன் ஷெர்லினை விட 25 வயது மூத்தவர் …
-
- 5 replies
- 4.5k views
-
-
டிக்கெட் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகுவேன்: கமல் திடீர் அறிவிப்பு சினிமா டிக்கெட்டுகள் மீதான 28 சதவீத ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகுவதாக நடிகர் கமல் ஹாசன் அறிவித்துள்ளார். வருகிற ஜுலை 1-ந் தேதி முதல் மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வரவிருக்கிறது. சினிமாவுக்கு 28% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், திரையரங்குகளில் டிக்கெட் விலை உயரும் என்ற அச்சம் நிலவியுள்ளது. இதனால், சினிமா உலகமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகர் கமல் கூறியுள்ளார். இதுகுறித்து இன்று சென்…
-
- 0 replies
- 165 views
-
-
நாயகன் விதார்த்துக்கு திருமணம் நடந்தால் குலதெய்வம் கோவிலில் கிடாய் வெட்டி சாமி கும்பிடுவதாக அவரது அம்மா வேண்டிக் கொள்கிறார். இந்நிலையில், விதார்த்துக்கும் ரவீணாவுக்கும் திருமணம் நடைபெறுகிறது. இதனால், தனது வேண்டுதலை நிறைவேற்ற குலதெய்வம் கோவிலுக்கு செல்ல முடிவெடுக்கிறார் விதார்த்தின் அம்மா. அதன்படி, விதார்த், ரவீணா, விதார்த்தின் அம்மா, ரவீணாவின் பெற்றோர், ஹலோ கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம் என அவரது சொந்த பந்தங்கள் எல்லோரும் ஒரு லாரியில் குலதெய்வம் கோவிலுக்கு பயணமாகிறார்கள். அந்த லாரியை விதார்த்தே ஓட்டி செல்கிறார். கோவிலை நெருங்கும் சமயத்தில் எதிரே வந்த மோட்டார் வண்டியில் லாரி மோதி விடுகிறது. இதில், மோட்டார் வண்டியில் வந்தவர் சம்பவ இடத்திலேயே இறந்துபோகிறார். விபத்து நடந…
-
- 1 reply
- 711 views
-
-
அன்னக்கிளியில் தொடங்கி ஆறாயிரம் பாடல்கள் தாண்டிய தெய்வீக இசைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! 1943 ஆம் ஆண்டு தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் பிறந்த ஞானதேசிகன் எனும் இளையராஜாவுக்கு இன்றோடு வயது 74. ஞானதேசிகன் என்றிருந்த இயற்பெயரை பள்ளியில் சேர்க்கும் போது ராஜைய்யாவாக்கினார் ராஜாவின் தந்தை. வீட்டுக்கு ராஜைய்யாவாக இருந்தாலும் ஊர்மக்களுக்கு ராசைய்யாவாக இருந்தார் சில காலம். 70 களின் நடுவில் இசை வாய்ப்புகள் தேடி சென்னைக்கு ரயிலேறியதும் ராஜையாவை அவரது இசை ஆசிரியரான தன்ராஜ் மாஸ்டர் ‘ராஜா’ மட்டும் போதுமென சுருக்கினார். தமிழ் சினிமாவில் முன்னதாக பிரபலமான இசையமைப்பாளராக ஏ.எம்.ராஜா இருக்கும் போது மேலுமொரு ர…
-
- 1 reply
- 2.5k views
-
-
ஒளிரும் நட்சத்திரம்: சிவகார்த்திகேயன் ஓவியம்: ஏ.பி.ஸ்ரீதர் 1. தொலைக்காட்சியிலிருந்து திரையுலகில் நுழைந்து முன்னணிக் கதாநாயகனாக வென்ற பலர் வட இந்தியாவில் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் அப்படியொரு இடத்தைப் பெற்றிருப்பவர் சிவகார்த்திகேயன். 1985, பிப்ரவரி 17-ம் தேதி தாஸ்- ராஜி தம்பதிக்கு மகனாகச் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பிறந்தவர். இவரது தந்தை சிறைத் துறையில் தலைமை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து தமிழக அரசின் தங்கப் பதக்கம் வென்றவர். தந்தையின் வேலை காரணமாகக் குடும்பம் பல ஊர்களுக்குக் குடிபெயர்ந்து சென்றது. அதில் ஒன்று திருச்சி. அங்கே பள்ளிப் படிப்பை முடித்த சிவகார்த்திகேயன் 18 வயதில் …
-
- 0 replies
- 4k views
-
-
ஜூன் மாதத்தையே நடிகர் விஜய்க்கு சொந்தமாக்கி அமர்க்களப்படுத்தும் ரசிகர்கள் படத்தின் காப்புரிமைTWITTER Image captionடிவிட்டர் பதிவு ஜூன் 22-ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடவுள்ள நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர்களும், அபிமானிகளும் தற்போதே ஒரு ஹேஷ்டேக் உருவாக்கியுள்ள சூழலில், அந்த ஹேஷ்டேக்டிவிட்டரில் வைரலாகி கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. Image captionகோப்புப்படம் "THALAPATHY VIJAY MONTH BEGINS" - தளபதி விஜய் மாதம் துவங்கியது என்று இந்த ஹேஷ்டேக்கின் பெயர். இந்த ஹேஷ்டேக் டிவிட்டரில் சென்னை நகர ரீதியாகவும், அனைத்து இந்திய ரீதியாகவும் டிரெண்டிங்கில் உள்ளது. படத்தின் காப்புரிமைTWITTER Image c…
-
- 0 replies
- 1.3k views
-
-
சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை: சுருதிஹாசன் சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்று நடிகை சுருதிஹாசன் கூறினார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம். நடிகை சுருதிஹாசன் அளித்த பேட்டி வருமாறு:- “சினிமாவில் எல்லா முடிவுகளையும் நானே எடுக்கிறேன். எனது தந்தை உனக்கு எது பிடிக்கிறதோ அதை சுதந்திரமாக செய் என்று கூறியிருக்கிறார். அவர் சொன்னதுபோல் சுதந்திரமாக இருக்கிறேன். அதற்காக கட்டுப்பாடுகளை மீறி செயல்படுவது இல்லை. சுதந்திரத்தை நல்லபடியாகவே பயன்படுத்துகிறேன். இந்தி படம் மூலம் சினிமாவில் அறிமுகமா…
-
- 0 replies
- 912 views
-
-
"நான்கு நாள்களுக்கு ஒருமுறைதான் சாப்பாடு!'' - பழம்பெரும் நடிகை கீதா கண்ணீர் வயதானவர்களை அம்போவென விட்டுவிட்டு ஓடிவிடும் அவலநிலை தற்போது அதிகரித்துவருகிறது. நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பதுபோல, முதியோர் இல்லங்களும் திறக்கப்பட்டுவருகின்றன. சாதாரண மனிதரிலிருந்து பிரபலங்கள் வரை இந்தக் கொடுமையிலிருந்து தப்ப முடியவில்லை. பழம்பெரும் இந்தி நடிகையான கீதா கபூரும் அதற்கு விதிவிலக்கல்ல. இவர், 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்களில் மீனாகுமாரியுடன் நடித்த 'பகீஷா ' மற்றும் 'ரஷ்ய சுல்தான் ' படங்கள் பிரசித்திப்பெற்றவை. வயது முதிர்ந்த நிலையில், தன் மகனுடன் வசித்துவந்தார் கீதா. கடந்த ஏப்ரல் மாதம் ரத்த அழுத்தம் மிகவும் குறைந்…
-
- 1 reply
- 470 views
-
-
உப்புமா கம்பெனியும் 250 ரூபாயும்! - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 1 தமிழ் சினிமாவின் ஒவ்வொரு வெற்றிப்படத்திற்குப் பின்னேயும் கோடம்பாக்கக் கனவுகளோடு சென்னைக்கு வண்டி ஏறுபவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். இயக்குநர் ஆகவேண்டும், நடிகர் ஆகவேண்டும் எனப் பெரிய லட்சியங்களின் முதல் அடியாகக் கோடம்பாக்கத்தில் காலடி எடுத்து வைப்பவர்களும், சினிமாவின் ஒரு மூலையிலாவது தனது பங்கிருக்க வேண்டும் எனும் தாகத்தோடு லைட்மேன், அஸிஸ்டென்ட் ஆக விரும்புகிறவர்களும் இந்தப் பெரும் பட்டியலில் இருக்கிறார்கள். காலத்தின் வேகத்தில் கேமரா ட்ராலியின் பின்னே ஓடமுடியாதவர்கள் மூச்சு வாங்கிப் பாதியிலேயே நின்று விடுகிறார்கள். முயன்று முன் செல்பவர்கள் டைட்டில் கார்டுகளில் மி…
-
- 17 replies
- 5.3k views
-