வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5554 topics in this forum
-
விஜய் அசத்தும் பைரவா டீசர் விஜயின் 60வது படமான பைரவா படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்றே டீசரை வெளியிட்டு இருக்கிறார்கள். விஜய், கீர்த்தி சுரேஷ்,சதீஷ் ஆகியோர் நடித்திருக்கும் படத்தை அழகிய தமிழ் மகன் பட இயக்குனர் பரதன் இயக்கி இருக்கிறார் http://www.vikatan.com/news/cinema/70753-bairava-teaser-out.art
-
- 1 reply
- 643 views
-
-
Fift E. L. James ஆல் எழுதப்பட்ட ரோமான்டிக் ஏரோட்டிக் பிரிட்டிஷ் நாவல்Fifty Shades of Grey . மிகபிரபல்யமான இந்த நாவல் நூறு மில்லியனுக்கு மேல் உலகமெங்கும் பரபரப்பாக விற்றுத்தள்ளியது. 52மொழிகளில் மொழிபெயர்கப்பட்டது. பிரிட்டிஷ் நாவல் வரலாற்றில்மிகப்பெரிய சாதனையாக இடம்பிடித்து. ஏரோட்டிக் நாவல் என்றாலே உங்களுக்கு புரிந்திருக்கும் அஜால் குஜால் வகையை சார்ந்ததென்று. ஆனால் ஆண்களைவிட அதிகமாக பெண்களினால் இவ் நாவல் மிகரகசியமாக விரும்பி வாசிக்கப்பட்டது. எழுத்து வடிவில் சில சில்மிஷங்களை வாசிப்பது சுவரசியமானதாம், அந்த சைகலோஜிக்கை மெய்பித்திருகின்றது நாவலின் விற்பனை. Fifty Shades of Grey இன் கண்மண் தெரியாத வெற்றியை தொடர்ந்து அதன் தொடர்ச்சியான சீரிஸ் Fifty Shades Darker, Fifty Sha…
-
- 0 replies
- 9.9k views
-
-
சினிமா... என்னைக் கைவிடாத அம்மா: பிறந்தநாளில் சிவகுமார் நெகிழ்ச்சி பிறந்த நாள் விழாவில் சிவகுமார் பேசும் போது... சினிமா என் அம்மா. அவள் என்னைக் கைவிடமாட்டாள் என பிறந்த நாள் விழாவில் சிவகுமார் பேசினார். நடிகர் சிவகுமாரின் 75வது பிறந்த நாள் விழா மற்றும் 'Golden Moments of Sivakumar in Tamil Cinema' புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிவகுமார், சூர்யா, கார்த்தி, தனஞ்ஜெயன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். மேலும், சிவகுமாரைப் பற்றி 'தி இந்து' மாலதி ரங்கராஜன், தேவிமணி, சுதாங்கன், மோகன்ராமன், பயில்வான் ரங்கநாதன் மற்றும் ராம்ஜி உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் தங்களுடைய பார்வைகளைப் பகிர்ந்து க…
-
- 2 replies
- 1.5k views
-
-
தமிழின் முதல் பின்னணிப்பாட்டு முதல் இரவல் குரல் என்று சொல்வது கூடுதல் பொருத்தமாயிருக்கும். தமிழ்த் திரைப்படத்தின் ஆரம்ப காலத்தில், சரீர அழகும் சாரீர அழகும் உடையவர்களே வெள்ளித்திரையில் முன்னணியில் மின்னினார்கள். அப்படியோர் புதிய வரவே கே.அஸ்வத்தம்மா ஒரு நடிகையின் தேவைக்கு மிஞ்சிய சரீர அழகும், பாட்டுத்திறனும், கீச்சுக் குரல் தமிழ்ப்பேச்சுத் திறனுமான சாரீர அழகும் இவருக்குமிருந்தன. ”கன்னடத்துப் பைங்குயில்” என்று தாரளமாக அழைத்திருந்திருக்கலாம்... பாகவதரின் மூன்றாவது படமான ‘சிந்தாமணியி’ல், அவருக்கு ஜோடியாக சிந்தாமணியாக நடித்து பலரைப் பைத்தியமாகியவர் இவர். ஒருவருடத்திற்கும் மேலாக வெற்றிவாகை சூடிக்கொண்டு ஓடிய சிந்தாமணியின் புகழ் வெளிச்சத்தோடு கே.அஸ்வத்தம்மா நடி…
-
- 1 reply
- 551 views
-
-
தனிநபர் ஆதிக்கத்தில் நடிகர் சங்கமா?... வில்லங்க புகார்கள்...விறுவிறு காட்சிகள்! நடிகர் சங்கத்தில் நடந்துவரும் களேபரங்கள் ஒரு நிஜ சினிமாவை விஞ்சி பல நுாறு நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு திரைப்படத்தை விடவும் சுவாரஸ்யமாக பல பாகங்களில் நடப்பதுதான் வேடிக்கை. முதல் பாகத்தில் முந்தைய நிர்வாகம் வெர்சஸ் பாண்டவர் அணி என அளப்பரையை தந்தன. இரண்டாம் பாகத்தில் முந்தைய நிர்வாகம் வெர்சஸ் புதிய நிர்வாகம் என ரவுண்ட் கட்டியது. மூன்றாவது பாகத்தில் புதிய நிர்வாகம் வெர்சஸ் வாராகி என்ற தனிநபர் என பட்டையை கிளப்பியது. இப்போது நான்காம் பாகத்தில் அதிரடி திருப்பம்...நிர்வாகிகள் மத்தியிலேயே புகைச்சல் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். கலைவாணர், இயக்குனர் கே.ச…
-
- 0 replies
- 455 views
-
-
2006 - 2016 தீபாவளி ரிலீஸ் படங்கள்... ஒரு ஹிட் ரன்! இந்த வருட தீபாவளி ரிலீஸ் வரிசையில் கொடி, காஷ்மோரா, கத்திசண்டை, சைத்தான், கடவுள் இருக்கான் குமாரு என ஐந்து படங்கள் வரிசையில் நின்றன. கடைசியில் மூன்று படங்கள் விலகிக் கொள்ள இப்போது கொடி, காஷ்மோராவுடன், கடலை, திரைக்கு வராத கதை இணைந்திருக்கிறது. கடந்த பத்து வருடங்களில் தீபாவளி ரிலீஸ் ஆக என்னென்ன படங்கள் வந்திருக்கிறது என ஒரு க்விக் ப்ரிவ்யூ இதோ... 2006: எதிர்பார்த்தது போலவே ஹிட்டானது 'வரலாறு' தான். பயோவார் பயங்கரம் பற்றிய செய்தியோடு வந்த 'ஈ' விமர்சனங்களில் அதிகம் கவனம பெற்றது. அஃபீஷியலாக சிம்பு இயக்குநராக அறிமுகமான 'வல்லவன்', சரண் இயக்கத்தில் ஆர்யா நடித்த 'வட்டாரம்' இரு படங்களும் நல்ல வசூலை…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஜெயலலிதா அறிமுகமான படம் "வெண்ணிற ஆடை'. இந்தப் படத்தில் ஜெயலலிதாவுடன் நிர்மலா, மூர்த்தி, ஸ்ரீகாந்த் ஆகியோரும் அறிமுகமானார்கள். அதில் மூர்த்தியும், நிர்மலாவும் "வெண்ணிற ஆடை'யைத் தங்கள் பெயருக்கு முன் போட்டுக் கொண்டனர். "காதலிக்க நேரமில்லை' நகைச்சுவைப் படத்தைத் தயாரித்து வெற்றி கண்ட ஸ்ரீதர், அடுத்த படத்தை முற்றிலும் மாறுபட்ட படமாகத் தரவிரும்பினார். . பி.ஆர்.பந்துலுவின் "சின்னத கொம்பே', கன்னடப்படத்தின் ரஷ்களைப் பார்த்த ஸ்ரீதர், அதில் நடித்த சின்னப் பெண் யார் என்று கேட்டார். அவர் நடிகை சந்தியாவின் மகள் ஜெயலலிதா என்று கூறினார்கள். தான் எடுக்கவிருக்கும் "வெண்ணிற ஆடை'யின் நாயகி என அவரை முடிவு செய்துகொண்டு, சந்தியாவுக்குத் தகவல் தந்தார். அவரும் தன் மகளைக் கூட்டிக் கொண்டு "சித்…
-
- 0 replies
- 698 views
-
-
நகைச்சுவை நடிகர் சந்திரபாபு - சில உண்மையான குறிப்புகள் தமிழ் சினிமாவின் உலகில் முதன்முதலாக மிகவும் நேர்த்தியாக உடை அணியும் பழக்கத்தை (கோட், சூட் அணியும் பழக்கம்) கொண்டுவந்த பெருமை சந்திரபாபுவையே சாரும். அவர் உடை அணியும் அழகே தனி. புதிய நாகரிகத்தை தன்னை பார்த்து பிறர் தெரிந்துகொள்ளும்படி உடை அணிவார்.சந்திரபாபுவுக்கு மிகவும் பிடித்த உடை - வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட். சட்டையின் கையை மடித்துவிட்டிருப்பது அழகாக இருக்கும். பேண்ட் பாக்கெட்டுக்கு வெளியே கர்சிப் தெரிவதுபோல் ஸ்டைலாக வைத்திருப்பார்.Perfume மீது அதிக காதல் கொண்டிருந்தார் சந்திரபாபு. அவருக்கு மிகவும் பிடித்த Perfume - Channel 5. படபிடிப்புகளில், காட்சியில் நடித்துவிட்டு வந்ததும் - 'ரெவ்லான்' என்ற உய…
-
- 0 replies
- 983 views
-
-
சிவகுமாரின் 75-வது பிறந்த நாள் சிறப்பு ஓவியக் கண்காட்சி தந்தை சிவகுமாரின் 75வது பிறந்த நாளை, சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்கள். 1965ம் ஆண்டு 'காக்கும் கரங்கள்' மூலமாக தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் சிவகுமார். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நாயகனாக நடித்தார். வரும் அக்டோபர் 27ம் தேதி தனது 75வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் சிவகுமார். இதனை சிவகுமாருடைய மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் 'மார்க்கண்டேயனுக்கு வைரவிழா' என்ற தலைப்பில் பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்கள். சிவகுமார் வரைந்துள்ள பல்வேறு ஓவியங்களில் இருந்து 140 ஒ…
-
- 2 replies
- 1.8k views
-
-
இசையமைப்பாளர் திரு கங்கை அமரன் அவர்கள்... பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், "அன்னக்கிளி" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந்த ராசய்யா என்ற இளையராஜாவின் அறிமுகத்தோடு அவரது இளைய சகோதரர் அமர்சிங்கிற்கும் ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. இளையராஜாவின் ஆரம்ப காலப்படங்களில் "பத்ரகாளி" உட்பட இசை உதவி அமர்சிங் என்றே இருக்கும். ஆனால் அந்த அமர்சிங் என்ற கலைஞன் வெறும் நார் அல்ல அவரும் சிறந்ததொரு படைப்பாளி என்பதை நிரூபித்தது அவர் தனியாக நின்று தன்னை வெளிக்காட்டிய போது. ஆமாம் கங்கை அமரன் என்று பேர் வைத்த முகூர்த்தமோ என்னவோ இவருக்கும் ஒரு தனித்துவம் கிட்டியது இசையமைப்பாளனாக, பாடலாசிரியனாக, இயக்குனராக. இங்கே தொட்டுச் செல்வது இசையமைப்பாளர்…
-
- 1 reply
- 1k views
-
-
உலகின் பணக்கார நாடு புருனே..! அந்த நாட்டில் மன்னராட்சி நடக்கிறது. மன்னன் மகள் அஜீத் நடித்த வேதாளம் படத்தின் ‘ஆலுமா டோலுமா’ பாடல் கேட்டு அசந்து போய் தல பற்றி விசாரித்தார். அவரது மெய்க்காப்பாளர்கள் தல நடித்த மொத்த படத்தின் டிவிடிக்கள் வாங்கி கொடுத்துள்ளனர். படங்கள் பார்த்த இளவரசி, அஜித்தின் கொள்ளை அழகில் மயங்கிப் போனாராம். அவரை விருந்திற்கு அழைக்க ஏற்பாடு செய்வதாக கடந்த மாதம் செய்தி வெளியானது.அதற்க்கு’ தல’ தரப்பில் இருந்து எந்த பதிலும் தரப்படவில்லை.ஆனால் இளவரசி தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டார். இப்போது தல புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள சம்மதம் சொல்லி விட்டாராம். அதற்காக தனி சொகுசு விமானம், ரத்தினக் கம்பள வரவேற்பு..வழி நெடுக தோரணங்கள…
-
- 0 replies
- 1.1k views
-
-
பவளக்கொடி படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த தியாகராஜ பாகவதர் 1937ஆம் ஆண்டில் நடித்து வெளிவந்த படமான சிந்தாமணி 52 வாரங்கள் தொடர்ந்து ஓடி, அதுவரை வெளியான படங்களில் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமையைப் பெற்றது. (இன்று 52 நாள் ஓட திக்கு முக்காடும் படங்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்). . மதுரை ராயல் டாக்கீஸ் தயாரித்த இந்தப் படத்தில் பாகவதருக்கு ஜோடியாக நடித்தவர் அஸ்வத்தம்மா. கன்னடத்தில் பிரபல பாடகியாகத் திகழ்ந்த அஸ்வத்தம்மா, பாகவதருடன் போட்டி போட்டு, தமிழில் பாடி நடித்தார். படத்தை இயக்கியவர் ஒய்.வி.ராவ். (நடிகை லட்சுமியின் தந்தை). வசனங்களை அய்யாலு சோமயாஜுலு எழுதினார். பாடல்களை எழுதியவர் பாபனாசம் சிவன். ஒய்.பி. வாஷிகர் என்பவர் கேமராவைக் கையாண்டார். செருகளத…
-
- 0 replies
- 463 views
-
-
"என் வாழ்வின் மிகச் சிறந்த தருணம்" - நடிகர் சிவகுமார் சிறப்பு நேர்காணல் படம்: சி.குமார் 1965–ல் வெளியான ‘காக்கும் கரங்கள்’ படத்தின் மூலம் திரைப் பிரவேசம் செய்தவர் சிவகுமார். ஒரு நீண்ட திரைப் பயணத்துக்குப் பிறகும் ஒரு சினிமா நட்சத்திரமாகத் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாதவர். திரையுலகில் இப்படியும் ஒரு முன்மாதிரிக் கலைஞரைக் காணமுடியுமா என்று வியக்கும் விதமாகத் தூய வாழ்முறையால் ‘கலையுலக மார்க்கண்டேயனாக’ கொண்டாடப்படும் அவர் தனது 75- பிறந்த நாளில் அடியெடுத்துவைக்கிறார். சிறந்த நடிகர், தலைசிறந்த ஓவியர் ஆகிய அடையாளங்களையும் தாண்டி, தேர்ந்த எழுத்தாளராகவும், ஆற்றல்மிக்க பேச்சாளராகவும் தனது தளங்களை கடந்த 15 ஆண்டுகளில் விரித்துக்கொண்டுள்ளார…
-
- 0 replies
- 326 views
-
-
பொலிவூட்டை சூடேற்றும் ஐஸ்வர்யா ராய், ரன்பீர் கபூர் புகைப்படங்கள் 2016-10-23 10:20:55 நடிகை ஐஸ்வர்யா ராயும் நடிகர் ரன்பீர் கபூரும் இணைந்து போஸ்கொடுத்த போது பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் பொலிவூட்டை சூடேற்றிக் கொண்டிருக்கின்றன. இவ்விரு நட்சத்திரங்களும் இணைந்த நடித்த 'ஏ தில ஹாய் முஸ்கில்' படத்தை எதிர்வரும் 28 ஆம் திகதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், பாகிஸ்தான் நடிகர் பவாத் கானும் இப்படத்தில் நடித்ததால் மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா எனும் கட்சி இப்படத்தை வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. பாகிஸ்தானிய நட்சத்திரங்கள் இந்திய திரைப்படங்களில் பணியாற்றுவதை தடுப்பது சரியா என்பத…
-
- 0 replies
- 601 views
-
-
கொஞ்சம் விட்டிருந்தால் எஸ்.பி.பியை விஞ்சியிருப்பார் இந்த மனுஷன்! #KamalAsSinger ஆண்பாடகர்களில் எஸ்.பி.பியை விடச் சிறந்த ஒருவர் இல்லவே இல்லை என்று நண்பர்களிடத்தில் உச்சஸ்தாயியில் வாதிட்டாலும் ஒருத்தரை மட்டும் நினைக்கும்போது ‘ஒருவேளை இந்த ஆளு முழுநேரப் பாடகராக மட்டுமே ஆகியிருந்தால் எஸ்.பி.பியை மிஞ்சியிருப்பாரோ’ என்று தோன்றும். கமல்ஹாசன். 'அந்தரங்கம்’ என்ற படத்தில் ஜி.தேவராஜன் இசையமைப்பில் ‘ஞாயிறு ஒளிமழையில் திங்கள் குளிக்க வந்தாள் என்றொரு பாடல்தான் கமல் பாடிய முதல் பாடல். கிட்டத்தட்ட கே.ஜே. ஏசுதாஸின் குரல் போல ரொம்ப சீரியஸாக இருக்கும் பாடல். பயந்து கொண்டே பாடியது போல் தெரியும். ஹிட்டான பாடல்தான். அதன்பிறகு இளையராஜா இசையில் அவள் அப்படித்தான…
-
- 0 replies
- 780 views
-
-
உங்கள் மனதை புண்படுத்துவதற்காக இதை இணைக்கவில்லை. இதை பார்த்தபின் ஏற்படும் மனமாற்றத்திற்கு நாம் பொறுப்பில்லை....
-
- 4 replies
- 656 views
-
-
சமந்தாவுடன் காதல் முதல் திருமணம் வரை: மனம் திறந்த நாக சைதன்யா சமந்தாவுடனான காதல் மலர்ந்தது, திருமணம் மற்றும் மதம் மாற்றம் சர்ச்சை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் நாக சைதன்யா மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ப்ரேமம்' படம் தெலுங்கில் ரீமேக்காகி வருகிறது. தெலுங்கிலும் 'ப்ரேமம்' என்ற பெயரிலேயே அக்டோபர் 7-ம் தேதி வெளியாக இருக்கிறது. நாக சைதன்யா, ஸ்ருதிஹாசன், மடோனா செபஸ்டின், அனுபமா பரேமஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை சந்து இயக்கி இருக்கிறார். இப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக அளித்துள்ள பேட்டியில் சமந்தாவுடனான காதல் மலர்ந்தது எப்படி, சமந்தா மதம் மாறுகிறாரா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு…
-
- 2 replies
- 379 views
-
-
என்னை விமர்சிப்பது பற்றி கவலைப்படமாட்டேன் -ஸ்ருதி ஹாசன் 2016-10-17 20:26:59 ‘‘விமர்சனங்கள் பற்றி கவலைப்பட மாட்டேன். என் தந்தை கமல்ஹாசனைப்போல் மன உறுதியுடன் இருக்கிறேன்’’ என்று நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். நடிகை சுருதிஹாசன் இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு:– ‘‘தெலுங்கில் நான் நடித்துள்ள ‘பிரேமம்’ படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த படம் வெளிவருவதற்கு முன்னால் நான் நடித்துள்ள கதாபாத்திரம் பற்றி இணையதளங்களில் விமர்சனங்கள் வந்தன. அவதூறான கருத்துக்களை பதிவு செய்து இருந்தார்கள். வேலையில்லாமல் வெட்டியாய் இருப்பவர்கள் இதுமாதிரி…
-
- 4 replies
- 585 views
- 1 follower
-
-
காலம் அழிக்காத கவி வரிகளைத் தந்து, அனுபவ மொழிகளால் தமிழுக்கு அழகு சேர்த்த கவியரசர் கண்ணதாசனின் நினைவுதினம். "நான் மானிட இனத்தை ஆட்டிவைப்பேன் அவர் மாண்டு விட்டால் அதை பாட்டில் வைப்பேன் நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.. " சீசரின் நண்பன் கண்ணதாசன்...! - நினைவு தினச் சிறப்புப் பகிர்வு ‘‘யாருக்காகவும் உன்னை மாற்றிக்கொள்ளாதே; ஒருவேளை மாறநினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டி வரும்’’ என்றவர் கவிஞர் கண்ணதாசன். அவருடைய நினைவு தினம் இன்று. ‘‘ஆயிரம் பாட்டுக்கு அடி எடுத்துக்கொடுப்பான்டி!’’ மருது பாண்டியர்கள் நீதி தவறாது ஆட்சி செய்த சிவகங்கைச் சீமையின் சிறுகூடல்பட்டியில் வசித்த …
-
- 0 replies
- 5.8k views
-
-
கிரிக்கெட் வீரர் பிராவோவுடன் ஸ்ரேயா காதல்! தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஸ்ரேயா. இவர் 2003-ல் ‘எனக்கு 20 உனக்கு 18’ என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஜெயம்ரவியுடன் நடித்த ‘மழை’, தனுசுடன் நடித்த ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படங்கள் அவரை பிரபலபடுத்தின. இதைத்தொடர்ந்து ரஜினிகாந்துடன் சிவாஜி படத்தில் ஜோடி சேர்ந்தார். இந்த படம் 2007-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. விஜய், விக்ரம், விஷால், ஜீவா உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்தார். ஆனால் சமீபகாலமாக புதுமுக கதாநாயகிகள் வரத்து அதிகமானதால் ஸ்ரேயாவுக்கு படங்கள் குறைந்து விட்டன. அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்கவே அழைப்புகள் வருகின்றன. ஸ்ரேயாவுக…
-
- 0 replies
- 416 views
-
-
கலக்கல் ஹாலிவுட்: குயின் ஆஃப் காட்வே! பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமானால் மிகைப்படுத்தல்கள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். இப்படி இடைச்செருகல்கள் இல்லாமல் ஒரு பிரபலத்தின் உண்மைக் கதையை ஊருக்கு உரைக்க வருகிறது ‘குயின் ஆஃப் காட்வே’ படம். வாழ்க்கையில் வறுமையும் துன்பமும் சோகமும் நோயும் ஒன்றாகச் சேர்ந்து மிரட்டும் உகாண்டா நாட்டுக் குடும்பத்தில் பிறந்து, இன்று செஸ் விளையாட்டில் கொடிக் கட்டிப் பறக்கும், பியோனா முட்டேசியின் வாழ்க்கை வரலாறுதான் படத்தின் கதை. உகாண்டாவின் தலைநகர் கபாலாவில் உள்ள காட்வே நகரில் குடிசைகள் நிறைந்த பகுதியில் வாழ்கிறார் படத்தின் நாயகி மடினா நல்வாங்கா (பியோனா முட்டேசி). 3 வயதில் தந்தையையும், இரண்…
-
- 1 reply
- 989 views
-
-
வடிவேலு என்ற பெயரைக் கேட்டாலே தமிழர்களுக்கு உற்சாகம் கொப்பளிக்கும். சினிமாவில் அவருக்கு நீண்ட இடைவெளி விழுந்துவிட்டாலும் இன்னமும் நகைச்சுவை சேனல்களின் நாயகன் வடிவேலுதான். பலரின் இரவு, வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சியைப் பார்த்து ரசித்து சிரிப்பதிலேயே முடிகிறது. தொடக்கத்தில் ‘கறுப்பு நாகேஷ்’ என்ற அடையாளத்துடன் கிராமத்து அப்பாவி இளைஞன் கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த வடிவேலு, குறுகிய காலத்திலேயே சுதாரித்துக்கொண்டு தனக்கான தனித்துவமான பாணியையும் பாத்திரங்களையும் வடிவமைத்துக்கொண்டார். வடிவேலுவை ஒருவகையில் சிவாஜிகணேசனோடு ஒப்பிடலாம். விதவிதமான பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் விதவிதமான கெட்டப்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டியவர் சிவாஜி. அதேபோல் ஒரு பா…
-
- 2 replies
- 5.7k views
-
-
இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் 2016-10-10 13:38:46 இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் வெள்ளவத்தை மெரைன் ட்ரைவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார். இதன்போது நகைச்சுவை நடிகர் செந்திலை புரவலர் ஹாசிம் உமர் பொன்னாடை போர்த்தி கௌரவித்த பின் “ஞானபீடத்தைக் கண்டேன்” நூலினை கலைஞர் கலைச்செல்வன் செந்திலுக்கு வழங்குவதையும் அருகில் புரவலர் ஹாசிம் உமர், மனித நேயன் இர்ஷாத் ஏ காதர், தொழிலதிபர் எம்.எம்.சப்ரி ஆகியோர் அருகில் நிற்பதனையும் படத்தில் காணலாம். http://www.metronews.lk/article.php?category=news&news=19833
-
- 0 replies
- 252 views
-
-
திரை விமர்சனம்: றெக்க மாறுபட்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துவரும் விஜய் சேதுபதி, முதல் முறையாக மசாலா தூக்கலாக உள்ள ஒரு கதையைத் தேர்ந்தெடுத் திருக்கிறார். மசாலா படங்களுக்கெனவே ஆகி வந்த 2 வில்லன்களின் பகையோடு கதை தொடங்குகிறது. டேவிட் (ஹரிஷ் உத்தமன்) - செழியன் (கபீர் சிங்) இடையே தொழில் பகை. காதலர்களைச் சேர்த்துவைக்கும் சிவா (விஜய் சேதுபதி) இவர்களுக்கு இடையில் வருகிறார். எதிர்பாராத சூழ்நிலையில் டேவிட்டிடம் சிக்கிக் கொள்ளும் சிவா, அதிலிருந்து மீள, அவனுக்காக அமைச்சரின் மகள் அஞ்சலியை (லட்சுமி மேனன்) கடத்திக் கொண்டு வர ஒப்புக்கொள்கிறார். அவரால் கடத்தி வரமுடிந்ததா, காதலர்களைச் சேர்த்துவைக்க அவர் காட்டும் ஆர்வத்தின் பின்னணி என…
-
- 0 replies
- 444 views
-
-
திரை விமர்சனம்: தேவி பேயிடம் ஒப்பந்தம் போட்டு தன் மனைவியை மீட்க போராடும் ஒரு கணவனின் கதைதான் ‘தேவி’. நாகரிகமான பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது மும்பையில் வேலை பார்க்கும் கிருஷ்ணகுமாரின் (பிரபுதேவா) லட்சியம். சிக்கலான சூழலில், மாடு மேய்க்கும் கிராமத்துப் பெண் தேவியை (தமன்னா) திருமணம் செய்துகொள்ள நேரிடுகிறது. வேண்டா வெறுப்போடு மணம் முடித்து தமன்னாவுடன் மும்பை செல்லும் பிரபுதேவா, ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்துக் குடியேறுகிறார். வீட்டில் நுழைந்ததும் தமன்னாவிடம் தலைகீழ் மாற்றங்கள் நடக்கின்றன. பிரபுதேவாவை அதிரவைக்கும் அந்த மாற்றங்களின் பின்னணியும், விளைவுகளும்தான் படம். பேய்ப் படங்களுக்கென்…
-
- 0 replies
- 333 views
-