வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
பிரபல பாடலாசிரியர் அண்ணாமலை சென்னையில் காலமானார் அண்ணாமலை ‘வேட்டைக்காரன்’, ‘சகுனி’, ‘ஈட்டி’, ‘பிச்சைக்காரன்’ உட்பட பல படங்களில் பாடல்கள் எழுதிய பிரபல பாடலாசிரியர் அண்ணாமலை உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 49. ‘கும்மாளம்’ என்ற படத்தின் மூலம் 2003-ம் ஆண்டு பாடலாசிரியராக அறிமுகம் ஆனவர் அண்ணாமலை. அதைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் நூற்றுக்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். கும்மாளம் படத்தில் ‘திமுசு கட்ட’, வேட்டைக்காரன் படத்தில் ‘என் உச்சி மண்டையில சுர்ருங்குதே’, சகுனி படத்தில் ‘போட்டது பத்தல மாப்புள’, நினைத்தாலே இனிக்கும் படத்தில் ‘பனாரஸ் பட்டு கட்டி’, சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன…
-
- 3 replies
- 506 views
-
-
மீண்டும் ஜெனிலியா தமிழில் விஜய்யுடன் நடித்த ‘வேலாயுதம்’ தான் ஜெனிலியாவுக்கு கடைசி படம். அதன்பிறகு தலா ஒரு தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தவர், இந்தி நடிகர் ரித்திஷ் தேஷ்முக்கை 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து, சினிமாவை விட்டுவிலகியிருந்த அவர், 2 பிள்ளைகளுக்கு அம்மாவான பிறகு தற்போது மறுபடியும் .பொலிவூட்டில் சில படங்களில் கெஸ்ட் ரோல்களில் நடித்தபடி ரீ-என்ட்ரி கொடுத்து வருகிறார். இந்த நிலையில், அவர் தமிழில் ராம்பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கவிருக்கும் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆக, ஏ…
-
- 3 replies
- 2k views
-
-
கனவுகளை விற்கும் காகிதங்கள் : சிறப்புத் தொடர் ========================================= திரைப்படங்களை விளம்பரப்படுத்த பயன்படுத்தப்படும் சுவரொட்டிகள், கைகளால் வரையப்பட்ட காலம் முதல் டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் மிளிரும் இந்த காலம் வரையிலான வரலாற்றை ஆராயும் சிறப்புத் தொடரின் முதலாம் பாகம். தயாரித்து வழங்குகிறார் பிபிசி தமிழோசையின் செய்தியாளர் ஜெயகுமார். BBC
-
- 2 replies
- 420 views
-
-
ஆண்டவன் கட்டளை - திரை விமர்சனம் கடன் தொல்லை தாங்க முடியாமல் மதுரை அருகே யுள்ள கிராமத்திலிருந்து நண்பன் பாண்டியுடன் (யோகி பாபு) சென்னைக்கு வருகிறார் காந்தி (விஜய் சேதுபதி). சுற்றுலா விசாவில் லண்டனுக்குப் போய், அங்கே வேறு அடையாளத்துடன் ஒளிந்து வாழ்ந்து, பொருளீட்டி ஊர் திரும்புவதுதான் இவர்கள் நோக்கம். பாஸ்போர்ட் எடுப்பதற்காகப் போலி முகவரின் பேச்சைக் கேட்டுப் பல தகிடுதத்தங்கள் செய்கிறார்கள். பாஸ்போர்ட் கிடைத்தும் விசா கிடைக்காத காந்திக்கு, லண்டன் செல்ல வேறொரு வாய்ப்பு வருகிறது. ஆனால், பாஸ்போர்ட்டில் இருக்கும் ஒரு பொய்யான தகவலை நீக்கினால்தான் விசா கிடைக்கும். அந்தப் பெயரை நீக்க மேலும் குறுக்கு வழிகள், பொய்கள் என்று தொ…
-
- 6 replies
- 635 views
- 1 follower
-
-
விஷால் - வரலெட்சுமி காதல் முறிந்தது? பிறந்தநாளன்று வரலெட்சுமியுடன் விஷால். (கோப்புப் படம்) நடிகை வரலெட்சுமி நேற்று வெளியிட்ட ஒரு ட்வீட்டைத் தொடர்ந்து அவருக்கும் நடிகர் விஷாலுக்கும் இடையேயான காதல் முறிந்துவிட்டதாக கோலிவுட்டில் தகவல் பரவியது. இதனை வரலெட்சுமி மறுத்துள்ளார். விஷால் - வரலெட்சுமி இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பொது நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக பங்கேற்று வந்தார்கள். சமீபத்தில் நடந்த விஷாலின் பிறந்தநாள் நிகழ்ச்சியிலும் வரலெட்சுமி பங்கேற்றிருந்தார். சமீபத்தில் விஷால் அளித்திருந்த ஒரு பேட்டியில், “லெட்சுமிகரமான பெண்ணுடன் என் திருமணம் நடைபெறும். நடிகர் சங்க கல்யாண மண்டபத்…
-
- 1 reply
- 348 views
-
-
அதே டெய்லர்... அதே வாடகை... புது டீமில் என்ன சொல்ல வருகிறான் செவன் சாமுராய். #The Magnificent Seven படம் எப்படி? அகிரா குரோசவா இயக்கத்தில் 1954ல் ஜப்பானிய மொழியில் வெளியான “செவன் சாமுராய்” 1960-ஆண்டு வெஸ்டெர்ன் சினிமாவாக மறு ஆக்கம் செய்தது ஹாலிவுட். தற்போது அதை மீண்டும் மறு ஆக்கம் செய்து இருக்கிறார்கள்.அது தான் இந்த வாரம் வெளியாகி இருக்கும் “தி மெக்னிபிசென்ட் செவன்”. கதை 1879களில் நடக்கிறது. கைகளில் துப்பாக்கி, தலையில் வட்டத்தொப்பி என்று, அமெரிக்காவில் “கவ் பாய் “ கலாச்சாரம் இருந்த நேரம். ஒட்டு மொத்த கிராமத்தையும் அடிமையாக தன் கைக்குள் வைத்திருக்கிறார் பாகி. இவனின் அராஜகத்தால் தன் தன் கணவனை இழக்கும் எம்மா , பக்கத்து கிராமத்திலிருந்து உதவிக்க…
-
- 0 replies
- 466 views
-
-
யாழ் .சர்வதேச திரைப்பட விழா யாழ் .சர்வதேச திரைப்பட விழா செப் 23 முதல் 27 வரை! யாழ். பல்கலைக்கழக நுண்கலைத்துறை மற்றும் சிலோன் தியேட்டர்ஸ் என்பவற்றோடு அஜன்டா 14 ஆகியன இணைந்து இரண்டாவது யாழ்ப்பாண சர்வதேசத் திரைப்பட விழாவானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ். சர்வதேச திரைப்பட விழா சர்வதேச ரீதியாக பாராட்டப்பட்ட உலகெங்கிலுமுள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களை அவர்களது திரைப்படங்களை யாழ்ப்பாணத்தில் காட்சிப்படுத்துவதற்கும் அழைக்கின்றது. குடாநாட்டில் சுயாதீன திரைப்படங்களைக் கொண்டாடுதல் எனும் தொனிப்பொருளிலான இவ்விழா எதிர்வரும் 23ஆம் திகத…
-
- 5 replies
- 960 views
-
-
குழப்பமான என் வாழ்க்கையை மாற்றியவர் நாக சைதன்யா - சமந்தா 2016-09-26 10:49:16 தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா சில மாதங்களுக்கு முன்பு இளம் நடிகர் ஒருவரை காதலிக்கிறேன் என்றும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளோம் என்றும் பரபரப்பு அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் நடிகர் யார் என்பதை சொல்ல மறுத்து விட்டார். நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவைத் தான் அவர் காதலிக்கிறார் என்று கிசுகிசுக்கள் பரவின. அதை மெய்ப்பிக்கும் விதமாக இருவரும் பட விழாக்களுக்கும், விருந்து நிகழ்ச்சிகளுக்கும் ஜோடியாக சென்று வந்த படங்களும், ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வது போன…
-
- 0 replies
- 272 views
-
-
திரை விமர்சனம்: தொடரி கட்டுப்பாட்டை இழந்து ஓடும் ரயிலில் நடக்கும் ஒரு காதல் பயணமே ‘தொடரி’. டெல்லியில் இருந்து சென்னைக்கு வரும் ரயில் கேன்டீனில் வேலைபார்க்கும் ஊழியர், பூச்சியப்பன் (தனுஷ்). அதே ரயிலில் பயணிக்கும் நடிகை ஷாவின் (பூஜா ஜாவேரி) ஒப்பனை உதவியாளர் சரோஜா (கீர்த்தி சுரேஷ்). முதல் பார்வையிலேயே கீர்த்தியின் மீது காதலைப் படர விடுகிறார் தனுஷ். ஆரம்பத்தில் பிடி கொடுக்காத கீர்த்தி ஒரு கட்டத்தில் மனம் மாறுகிறார். அதே ரயிலில் மத்திய அமைச்சர் ராதாரவி பயணிக் கிறார்.ரயில் ஓட்டுநர் ஆர்.வி.உதயகுமாருக்கும், உதவியாளர் போஸ் வெங்கட்டுக்கும் மோதல் ஏற்படுகிறது. அதன் பிறகு ரயில் மிகப் பெரிய ஆபத்தை எதிர்கொள்கிறது. அந்த ஆபத்து …
-
- 0 replies
- 489 views
-
-
திரை விமர்சனம்: சதுரம் 2 சதுர வடிவிலான ஓர் அறை. அதில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட 2 பேர். இருவரில் ஒருவர் ஒளிப்படக்காரர் (ரியாஸ்). உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களின் அந்தரங்கப் பக்கங்களை மறைமுகமாகப் படம் எடுத்துக்கொடுத்து பணம் பார்க்கும் இளைஞர். இரண்டா வது நபர் குடும்பத்தின் மீது பாசம் கொண்ட மருத்துவர் (யோக் ஜபீ). ஆனால் தனது சபலத்தால் சக ஊழியரிடம் சிக்கிக் கொண்டிருப்பவர். இவர்களுக்கு மத்தியில் ஒரு பிணம். இந்த இருவரையும் அடைத்து வைத்தது யார்? பிணமாகிக் கிடக்கும் மனிதர் யார்? இவர்கள் இருவரும் தப்பித்துச் செல்ல முடிந்ததா? ‘SAW’ என்ற ஆங்கில ஹாரர் படத்தின் பாதிப்பில் உருவான படம் என்பதை நேர்மையாகச் சொல்லிவிட்டே படத்தைத் தொடங்கு…
-
- 0 replies
- 302 views
-
-
ஆஸ்கர் போட்டிக்கு 'விசாரணை'யை அனுப்புகிறது இந்தியா 'விசாரணை' படப்படிப்பு. | கோப்புப் படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது பிரிவு போட்டிக்கு, இந்தியாவில் இருந்து அதிகாரபூர்வமாக 'விசாரணை' தெரிவு செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி உள்ளிட்ட பலர் நடிக்க, வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம் 'விசாரணை'. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த இப்படத்தை லைக்கா நிறுவனம் வெளியிட்டது. பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இப்படம் 3 தேசிய விருதுகளையும் கைப்பற்றியுள்ளது. சிறந்த தமிழ் படம், சிறந்த எடிட்டிங் மற்றும் சிறந்த உறுதுணை நடிகர் என 3…
-
- 0 replies
- 250 views
-
-
இணையத்தில் வெளியான படத்தால் நடிகை அதிர்ச்சி பிரபல கன்னட நடிகை சோனு கௌடா, தமிழில் ஆண்மை தவறேல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அமரா, 144, நாரதன் திரைப்படங்களில் நடித்தார். தற்போது கவலை வேண்டாம் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இதுதவிர நாய்குட்டி படம், ஆளுக்கு பாதி, எங்க காட்டுல மழை படங்களில் நடித்து வருகிறார். சோனு கௌடா ஒரு ஆணுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதோடு சோனு கௌடா பற்றிய தவறான தகவலும் அந்த படத்துடன் வெளிவந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சோனு கௌடா, "படத்தில் இருப்பது என் கணவர். எங்களது அந்தரங்க படத்தை யாரோ விஷமிகள் வ…
-
- 0 replies
- 405 views
-
-
'என் வீடியோவ பாத்து நானே பயந்துட்டேன்!' -லக லக கல்பனா அக்கா நம்மூருல கஜினி மொட்டைமாடி கல்பனாவ கூட தெரியாதுன்னு சொன்னாகூட விட்டுடுவானுங்க.ஆனா இந்த கல்பனா அக்காவ தெரியலைன்னு சொன்னா ஏற எறங்க பாப்பாங்க. எம்.எஸ்.வில இருந்து ஹாரிஸ் ஜெயராஜ் வர எல்லார் பாட்டையும் பாரபட்சம் பாக்காம பாடி அத வீடியோவா அப்லோடி நெட்டிசன்களை நாக்கு தள்ள சிரிக்கவைத்துக் கொண்டிருக்கும் கல்பனா அக்காவிடம் ஒரு சிட்-சாட் இதோ: சொல்லுங்க? நீங்க யாரு? இதுக்கு முன்னாடி நீங்க பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க? சொல்லுங்க! நான் பொறந்து வளர்ந்தது எல்லாம் இலங்கைதான்.நல்லாவே வசதியான எங்க குடும்பத்துல என் கூடப்பொறந்தவங்க மொத்தம் 7 பேரு.அதுல நான்தான் கடைக்குட்டி.பயங்கர செல்லம் வேற.16 வ…
-
- 4 replies
- 795 views
-
-
சாதனை படைத்த தமிழ்த் திரைப்பட கலைஞர் பாரதிதாசனார் பற்றி பார்ப்போம். பார் போற்றும் பாவேந்தர் "மகாகவி பாரதி நமக்களித்த ஒப்பற்ற உயர்ந்த முதல் பாடலே பாரதிதாசன்" என்கிறார் நீதியரசர் மகாராசன். தமது ஆசான் பாரதியாரை அடியொற்றியே பாவேந்தரும்,"எளிய சொற்கள், எளிய சொற்றொடரழகு, எளிய சந்தம்,மக்கள் மனதில் பதியும்படியான இசை" என்றவாறாக பாடல்களை உருவாக்கினார். அவர் காலத்தின் திரைப்படங்களின் பிற்போக்கினை கண்டித்து ,கவிதையிலேயே ஒரு விமர்சனம் எழுதியுள்ளார் புரட்சிக்கவிஞர். சினிமா பாடல்கள் எழுதுவதில் இவருக்கு ஆர்வமிருந்ததில்லை. சினிமா பாடல்கள் எழுதும்படி வேண்டுபபவரிடம் "சினிமாப் பாட்டுத்தானே,அது கிடக்கட்டும்,எழுதினாப்போச்சு " என்று கூறிவிட்டு, இலக்கியம் சம்பந்தமா…
-
- 4 replies
- 3.1k views
-
-
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கவுண்டமணி! நடிகர் கவுண்டமணியின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வதந்திகள் பரவி வந்தது.இதுகுறித்து அவரது செய்தியாளர் விஜயமுரளி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.அதில், " அவ்வப்போது நடிகர் கவுண்டமணி குறித்து இது மாதிரி புரளிகளைக் கிளப்பிவிடும் அந்த நல்ல மனிதர்கள் யார் என்று தெரியவில்லை. இதனால் அவர்களுக்கு என்ன பயன் என்றும் புரியவில்லை.சமீபத்தில்கூட இதே போல், நடிகை கே.ஆர்.விஜயா உடல்நிலை குறித்து வதந்திகளைப் பரப்பினார்கள். அவர் அறிக்கை தந்து அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சற்றுமுன்பு இதுபற்றி கருத்து தெரிவித்த கவுண்டமணி, " உடல் நலம் ஆரோக்கியமாக இர…
-
- 0 replies
- 498 views
-
-
ரஜினி - லதா தம்பதியின் இளைய மகள் சௌந்தர்யா, 2010ல், தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாரை, திருமணம் செய்தார். இந்நிலையில், நான்கு மாதங்களாக, அஸ்வின் - சௌந்தர்யா இடையிலான உறவில் கசப்பு ஏற்பட்டு, பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. சென்னை, சேத்துப்பட்டில் தனியாக வசிக்கும் சௌந்தர்யா, விவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக, சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இது தொடர்பாக, ரஜினி குடும்பத்தினர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை; அதேநேரத்தில், மறுக்கவும் இல்லை. http://www.tamilmirror.lk/181997/ரஜ-ன-ய-ன-இள-ய-மகள-வ-வ-கரத-த-
-
- 2 replies
- 765 views
-
-
என் கால்கள் மட்டுமே.... இந்தியாவில், 15 பொருட்களை விற்கிறது : பிரியங்கா சோப்ரா. மும்பை: தனது கால்கள் மட்டுமே இந்தியாவில் 12 முதல் 15 பொருட்களை விற்பனை செய்வதாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டிலும் பிரபலமாகிவிட்டார். பே வாட்ச் என்ற ஹாலிவுட் படத்தில் வில்லியாக நடிக்கிறார். மேலும் குவான்டிகோ என்ற ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரிலும் நடித்து வருகிறார். ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்து வரும் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்.... நான் பதின்வயதில் இருக்கும்போது பையன்கள் போன்று தான் இருந்தேன். என் உடம்பில் தழும்புகள் இருந்தன. அடிக்கடி விழுந்து எழுந்திரிப்பேன். இதனால் காலில் அடிபடும். கால்க…
-
- 4 replies
- 926 views
-
-
விசாரணை - என்னுடைய FIR வழக்கம் போல நல்ல படங்களுக்கு வரும் குறைவான மக்கள் கூட்டத்தோடு சிட்னியிலுள்ள திரையரங்கில் விசாரணை படம் பார்த்தேன். இப்படியான வகையில் நம்பிக்கை கொடுக்கும் ரசிகர்களால் தான் முன்னர் "அவதாரம்" படத்தின் ஆஸி விநியோகஸ்தருக்கும் அதுவே கடைசிப் படம் ஆனது. அப்போது 15 பேருடன் மெல்பர்ன் திரையரங்கில் பார்த்திருந்தேன். "அங்காடித் தெரு" பட சிட்னி விநியோகஸ்தரும் மூன்று பேருடன் படம் காட்டிய அனுபவத்தில் அப்படியான விஷப் பரீட்சைக்கே பின்னர் இறங்கும் நிலை இல்லாமல் போனது. இதுதான் நல்ல படங்களுக்கும் அவற்றைத் திரையரங்கில் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்குமான இடைவெளியை ஏற்படுத்தும் சமாச்சாரங்கள். சரி இனி "விசாரணை" க்கு வருவோம். …
-
- 1 reply
- 812 views
-
-
உலகளவில் அதிக வருவாய் ஈட்டும் டிவி நடிகைகள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா உலகிலேயே அதிகம் சம்பளம் பெறும் சின்னத்திரை நடிகைகள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டது. இதில் இந்தியாவின் பிரியங்கா சோப்ராவும் இடப்பெற்றுள்ளார். "குவாண்டிகோ" என்ற அமெரிக்க டிவி தொடரில் நடித்ததன் மூலம் பிரியங்காவுக்கு இந்த பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாது இந்தியாவிலிருந்து இந்த பட்டியலில் இடப்பெற்றுள்ள முதல் நடிகையும் பிரியங்காதான். 'குவாண்டிகோ" டிவி தொடரில் நடித்ததன் மூலம் பிரியங்கா பெற்ற வருமானம் 1கோடியே 10 லட்சம் ஆகும். குவாண்டிகோ நாடகத்தில் பிரியங்கா சோப்ரா. இந்த பட்டியலில் அமெரிக்க…
-
- 0 replies
- 271 views
-
-
சன்னி லியோனின் வாழ்க்கை - ஆவணப்படமாக வெளியானது டொரான்ட்டோ சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை சன்னி லியோனின் வாழ்க்கையை சித்தரிக்கும் ‘மோஸ்ட்லி சன்னி’ என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட கரஞ்சித் கவுர் வோரா கனடாவில் வசித்துவந்த தனது பெற்றோருடன் வாழ்ந்தபடி, மாடலிங் துறையில் கால் பதிக்க முயன்றார். பூசி மெழுகினாற்போன்ற மேனி, குள்ளமான உருவம் என பல்வேறு புறக்கணிப்புக்குள்ளான அவருக்கு அந்தரங்க காட்சிகளை காசுக்கு விற்கும் ‘நீலப்பட’ உலகம் சிகப்பு கம்பளம் விரித்து, ஒரு புதியபாதைக்கு பச்சைக்கொடி காட்டியது. பாலுறவு காட்சிகளை பாலபாடமாக விளக்கும் நீலப்பட உலகத்துக்காக ஆடைகளுடன், வெட்கம், நாணம் போன்றவற்றையும் துறந்த கரஞ்சி…
-
- 0 replies
- 573 views
-
-
நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் அதிரடி சஸ்பெண்ட்! சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் நாசர் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில் பொதுச்செயலாளர் விஷால், துணை தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு காவிரி நீரை பெற்றுத் தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா, எந்த முடிவு எடுத்தாலும், அதற…
-
- 0 replies
- 314 views
-
-
ராதிகா ஆப்தேயின் 'பார்ச்ட்' திரைப்படம் 23ஆம் திகதி வெளியாகுகிறது ராதிகா ஆப்தே நடிக்கும் பார்ச்ட் எனும் பொலிவூட் திரைப்படம் எதிர்வரும் 23 ஆம் திகதி வெளியிடப் படவுள்ளது. 30 வயதான ராதிகா ஆப்தே ‘கபாலி’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். கபாலி படத்துக்கு முன்னர் “பார்ச்ட்” எனும் பொலிவூட் திரைப் படத்தில் அவர் நடித்திருந்தார். அப் படத்தில் நடிகர் ஆதில் ஹுஸைனுடன் ராதிகா ஆப்தே மிக நெருக்கமாக நடித்த படுக்கையறைக் காட்சிகளின் புகைப் படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில…
-
- 0 replies
- 446 views
-
-
வெனிஸ் திரைப்பட விழா: பிலிப்பைன்ஸ் திரைப்படத்திற்கு தங்க சிங்க விருது பிலிப்பைன்ஸில் நடைபெறும் பழிவாங்கும் கதை ஒன்று வெனிஸ் திரைப்பட விழாவில் உயரியதொரு விருதை வென்றிருக்கிறது. கறுப்பு வெள்ளை வண்ணத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பிலிப்பைன்ஸை சேர்ந்த இயக்குநர் லே டையஸால் இயக்கப்பட்ட “த வுமென் கு லெப்ட்” என்ற திரைப்படம் அநியாயமாக சிறைப்படுத்தப்படும் ஆசிரியை பற்றி விவரிக்கிறது. விடுதலையான பின்னர் சிறைக்குள் தள்ள காரணமான அவருடைய முன்தைய காதலனுக்கு தண்டனை கிடைக்கச் செய்ய திட்டமிட்டு அந்த ஆசிரியை செயல்படுவது தான் இந்த திரைக்கதையின் சாராம்சம். பிலிப்பைன்ஸ் மக்கள் சந்தித்து வருகின்ற போராட்டங்களின் சாட்சியம் தான் இந்த திரைப்படம் என்று டையஸ் கூறுகி…
-
- 0 replies
- 405 views
-
-
மீண்டும் ஜேம்ஸ்பொண்ட் படங்களில் நடிப்பதற்காக டேனியல் கிறேக்குக்கு 2,230 கோடி ரூபா 2016-09-11 09:33:04 ஜேம்ஸ்பொண்ட் வேடத்தில் மீண் டும் நடிப்பதற்காக டேனியல் கிறேக்குக்கு 150 மில்லியன் டொலர்களை (சுமார் 2,230 கோடி ரூபா) வழங்க தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கெசினோ ரோயல் (2006), குவாண் டம் ஒவ் சோலாஸ் (2008), ஸ்கை போல் (2012), ஸ்பெக்ரர் ஆகிய நான்கு திரைப்படங்களில் ஜேம்ஸ்பொண்ட் வேடத்தில் டேனியல் கிறேக் நடித்தார். தொடர்ந்தும் ஜேம்ஸ் பொண்ட் வேடத்தில் நடிப்பதற்கு தான் விரும்பவில்லை என அவர் தெரிவித்திருந்தார். அதையடுத்து ஜேம்ஸ் பொண்ட் வேடத்தில் நடிக்கவிருப்பார் ய…
-
- 0 replies
- 235 views
-
-
கடின உழைப்பு, தொடர் முயற்சி விக்ரமின் கூடவே பிறந்தது. என்றும் தோல்விகள் கண்டு அஞ்சாது புதுபுது முயற்சிகளை எடுத்துவரும் விக்ரமின் அடுத்தக்கட்ட முயற்சி தான் இந்த இருமுகன். ஐ படத்தை மிஞ்சும் அளவிற்கு அதிக திரையரங்குகளில் இந்த படம் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது. கதைக்களம் படத்தின் ஆரம்பத்திலேயே இந்தியன் எம்பஸியை ஒருவர் மட்டுமே தாக்குகிறார். அவருக்கு எப்படி இத்தனை பலம் வந்தது என்று பார்த்தால் ஹின்ஹேல்லர் (Inhaler) மூலம் ஒரு கெமிக்கல் எடுத்துக்கொள்கிறார் என்பது தெரிய வருகிறது. பிறகு தன் மனைவி இறந்த சோகத்தில் இருக்கும் விக்ரமை இந்த கேஸில் நியமிக்கின்றனர். அவரும் ஒரு பெயரை கேட்டதும் உடனே ஓகே சொல்கிறார். அவர் பெயர் தான் லவ். பிறகு தான் தெரிகிறது இந்த கெமி…
-
- 1 reply
- 733 views
-