Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. நட்சத்திர கிரிக்கெட்: வீரர்களாக நடிகர்கள், விளம்பர தூதுவர்களாக நடிகைகள் கோப்பு படம் சென்னையில் நடைபெற இருக்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் நடிகர்கள் வீரர்களாகவும், நடிகைகள் விளம்பர தூதுவர்களாகவும் பணியாற்ற இருக்கிறார்கள். தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் புதிததாக கட்டிடம் கட்ட பல்வேறு திட்டங்களுடன் புதிய நிர்வாகிகள் பணியாற்றி வருகிறார்கள். இதில் முதல் திட்டமாக ஏப்ரல் 17ம் தேதி நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற இருக்கிறது. இக்கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் பங்கேற்க இருக்கிறது. ஒவ்வொர் அணியிலும் 6 வீரர்கள் இருப்பார்கள். சூர்யா, விஷால், விஷ்ணு விஷால், தனுஷ் மற்றும் ஜீவா ஆகியோர் 6 மாவட்டங்களின் பெயரிடப்பட…

  2. திரை விமர்சனம்: தோழா சர்வதேசத் திரைப்படங்களை அதிகார பூர்வமாகவே ரீமேக் செய்யும் போக்குக்கு கோலிவுட் மாறியிருக் கிறது. ‘தூங்காவனம்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களைத் தொடர்ந்து ‘தோழா’. ‘தி இன்டச்சபிள்ஸ்’ என்னும் பிரஞ்சுத் திரைப்படத்தைத் தழுவி, ‘தோழா’வை இயக்கியிருக்கிறார் டோலிவுட் இயக்குநர் வம்சி பைடிபள்ளி. அக்கினேனி நாகார்ஜுனா குவாட்ரி பிளேஜியாவால் (கழுத்துக்குக் கீழே உடலியக்கம் இல்லா நிலை) பாதிக்கப் பட்ட கோடீஸ்வரத் தொழிலதிபர். அவரைக் கவனித்துக்கொள்ளும் காப் பாளர் பணி நேர்காணலுக்குச் செல்கிறார் சிறையிலிருந்து பரோ லில் வெளியே வரும் கார்த்தி. கார்த்தியின் இயல்பான, கலகலப்பான சுபாவம் பிடித்துப்போக அவரையே காப்பாளராக நியமிக்கிறார…

  3. திரை விமர்சனம்: ஜீரோ அஸ்வினும் ஷிவதாவும் காதல் திருமணம் செய்துகொள் கின்றனர். ஷிவதாவுக்குப் பெற்றோர் இல்லை. அஸ்வினின் அப்பாவுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை. அப்பா வின் எதிர்ப்பை மீறிக் காதல் தம்பதி யர் வாழ்கையைத் தொடங்கு கின்றனர். இனிய கனவுபோலத் தொடங்கும் அவர்களது வாழ்க்கை விரைவிலேயே பயங்கரக் கனவாக மாறுகிறது. கார ணம், ஷிவதாவுக்கு வரும் கனவுகள். ஷிவதாவின் கனவில் வரும் அவரு டைய அம்மா, தான் வசிக்கும் மாய உலகத்துக்கு மகளை அழைத்துச் செல்கிறார். இரு உலகங்களுக்கிடை யில் ஊசலாடும் ஷிவதாவுக்கு, காது களில் இரைச்சல் கேட்கும் ஆடிட்டரி ஹாலுசினேஷன், கண் எதிரே பாம்பு வருவதுபோன்ற விஷுவல் ஹாலு சினேஷன் என்று உளவியல் கோளாறு களும…

  4. ஜீ தொலைக்காட்சி நடத்தி வரும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மீண்டும் நடத்தவுள்ளார். திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தாலும், படங்களை இயக்கினாலும், சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்திதான் தமிழக மக்களிடம் அதிகம் பிரபலமானார் லட்சுமி ராமகிருஷ்ணன். அந்த நிகழ்ச்சியில் பல்வேறு குடும்பப் பெண்கள் சந்தித்த பிரச்சனைகளை அவர் அலசினார். அதனால், அந்த நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய “என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா” என்ற வசனம் பட்டி தொட்டியெல்லாம் சென்றடைந்தது. இப்போதும் அந்த வசனம் திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு லட்சுமி ர…

  5. எக்குத்தப்பாக கேள்வி கேட்ட பத்திரிகையாளர்- பளார் விட்ட சன்னிலியோன்! பாலிவுட் நடிகை சன்னி லியோன் பேட்டி, நிகழ்ச்சி என எங்கு சென்றாலும் அவரிடம் ஒரு பெண் என்றும் பாராமல் கேட்கக் கூடாத சில கேள்விகளைக் கேட்டு நிருபர்கள் வாங்கிக் கட்டிக்கொள்வது நடந்தேறி வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் சன்னி லியோனுடன் ஹோலி கொண்டாடும் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஹோட்டலில் சன்னியை பார்த்த பத்திரிக்கையாளர் ஒருவர் அவரிடம் முன்பு நீங்கள் ஆபாச பட நடிகையாக இருந்தீர்கள், தற்போது நீங்கள் ஒரு பாலிவுட் நடிகை. இப்போது எவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்கள் என்று கேட்டார். அதைக் கேட்டு கோபம் அடைந்த சன்னி லியோன் அந்த கேள்வியை மீண்டும் கேட்குமாறு கூறினார். …

  6. ஜெயிக்காமலே இருந்திருக்கலாம்- மனம் வருந்தும் ஆனந்த் அரவிந்தக்‌ஷன்! விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் பிரச்னை , அட இன்னுமா முடியவில்லை என்றால் முதலும் முக்கியஸ்தருமான வெற்றிக்குச் சொந்தக்காரர் ஆனந்த் இப்போதுதானே மனம் திறந்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் தனது வெற்றி மற்றும் அதற்காகப் பட்ட கஷ்டங்கள் என அனைத்தையும் பதிவிட்டுள்ளார், அவர் கூறியுள்ளதாவது, கடந்து இரண்டு நாட்களாக நான் கஷ்டப்பட்டு அடைந்த வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தேன். இப்போதும் கனவு போல் இருக்கிறது. எனக்கு ஆதரவாக இருந்த சேனல் மற்றும் மக்களுக்கு நன்றி. பத்து வருடங்கள் காத்திருந்து பத்து மாதங்கள் போட்டி, இசைப் பயிற்சி, என அனைத்தையும் கடந்து இந்த வெற்றியை அடைந்துள்ளேன். இத்தனை ஆண்டுகளாக …

  7. திரை விமர்சனம்: கோடை மழை பாரம்பரியமான திருட்டுத் தொழில் மிச்சமிருக்கும் கிராமம் ஒன்றின் முகத் தைக் குறைவான ஒப்பனையுடன் நமக்குக் காட்ட முயற்சிக்கிறார் அறிமுக இயக்குநர் கதிரவன் பல தலைமுறைகளைப் பின் தொடர்ந்த திருட்டுத் தொழிலில் ஒரு சிலர் மட்டும் ஆர்வம் காட்டிவரும் கிராமம் அது. அங்கே நேர்மையாகவும் கவுரவமாகவும் வாழ்கின்றன பல குடும்பங்கள். அந்த ஊரின் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றுகிறார் உள்ளூர்வாசியான களஞ்சியம். அவரது தங்கையான ஸ்ரீப்ரியங் காவைக் கண்டதும் காதலிக்கிறார் ராணுவ வீரரான கண்ணன். விடுமுறையில் ஊருக்கு வந் தால் நண்பன் பொடுங்குதான் அவரது உலகம். பொடுங்குவோ கண்ணனுக்குத் தெரியாமல் திருட்டுத் தொழிலைச் செய்து வருகிறான…

  8. வணக்கம் உறவுகளே IBCஇல் ஒளிபரப்பாகும் யாழினி தொடரை பார்க்கும் நண்பர்கள் யாராவது இருக்கின்றீர்களா? அப்படி இருந்தால் அந்த நாடகம் பற்றிய உங்களின் கருத்துக்களை இங்கே ஒரு சில வரிகளில் பதிய முடியுமா?

  9. தமிழர்களை முட்டாளாக்கிய விஜய் டிவி…! – பின்னணி பாடகரை போட்டியாளராக்கி 70 லட்சம் மோசடி…. விஜய் டிவியின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் மக்களால் பெரிதும் விரும்பப்படுபவை. அதிலும் ‘சூப்பர் சிங்கர்’ என்ற நிகழ்ச்சியை பார்க்காதவர்கள் மிகவும் குறைவாகவே இருப்பர். குறிப்பாக, இசை மீது நாட்டம் உள்ள அனைவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். தமிழக மக்கள் மட்டுமின்றி, உலகம் முழுக்க உள்ள தமிழ்மக்களின் அபரிமிதமான வரவேற்பைப் பெற்ற ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் சீசன் 5 கடந்த வாரம் நிறைவுற்றது. சென்னையைச் சேர்ந்த ராஜ கணபதி, பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஃபரீதா, கேரளாவைச் சேர்ந்த லட்சுமி பிரதீப்,…

  10. தமிழ்த்திரையுலகின் முதல் பிஆர்ஓ பிலிம்நியூஸ் ஆனந்தன் காலமானார் 1958 எம்.ஜி.ஆர். நாடோடி மன்னன் படம் தயாரித்துக் கொண்டிருந்த நேரம் அலுவலக மேளாளராக இருந்தவர் திரு. ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் அவரது மேஜையில் நாடோடி மன்னன் பட ஸ்டில்கள் இருந்தன. பத்திரிகைகளுக்கு விளம்பர ஏஜெண்ட் மூலமாகத்தான் ஸ்டில்கள் அனுப்புவது அந்நாளைய வழக்கம் “ஐயா பத்திரிகையாளர்கள் அனைவரும் எனது நண்பர்கள், இந்த ஸ்டில்களை அவர்களுக்கு நான் கொடுக்கட்டுமா” - என்று கேட்டேன். “பத்திரிகைகளில் ஸ்டில் வரவேண்டும், இதை யார் கொடுத்தால் என்ன? நீங்களே கொடுங்களேன்” - எனக் கூறி ஸ்டில்களை என்னிடம் கொடுத்தார். அடுத்த வாரமே எல்லா பத்திரிகைகளிலும் ஸ்டில்கள் ஜொலிக்க ஆரம்பித்தன. எம்.ஜி.ஆர். பாராட்டினார். P.R.O…

  11. ரஜினி படத்துக்கு 330 கோடி ரூபாய் காப்புறுதி பிரபல தமிழ் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ஒன்று சுமார் 330 கோடி ரூபாய்க்கு காப்புறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அளவுக்கு இதுவரை எந்தத் திரைப்படமும் இந்தியாவில் காப்புறுதி செய்யப்பட்டத்தில்லை எனவும் காப்புறுதி வல்லுநர்கள் கூறுகின்றனர். எந்திரன் 2 எனப் பெயரிடப்பட்டு சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அந்தப் படம் தற்போது தயாராகி வருகிறது. மிகப் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படும் இந்தப் படம், இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களால் காப்பீடு செய்யப்பட்டுள்ளன. இந்தியத் திரைபடத்துறையில் அண்மைக் காலமாக பல படங்கள் காப்புறுதி செய்யப்பட்டு வருகின்றன. படப்படி…

  12. இளைய தளபதி விஜய் நடிக்கும் தெறி படத்தின் ஜித்து ஜில்லடி பாடல் வெளியாகியது. 2016-03-20 00:11:10 அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய், சமந்தா, எமி ஜக்சன் நடிக்கும் 'தெறி' படத்தின் 'ஜித்து ஜில்லடி' பாடல் வெளியாகியுள்ளது. ஜீ.வீ. பிரகாஷ்குமார் இப்படத்துக்கு இசையமைக்கின்றமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.metronews.lk/article.php?category=entertainment&news=15623#sthash.5ozXABUx.dpuf

  13. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜெயிக்கப்போவது யார்? போட்டியாளர்களின் பரபர பேட்டி இதோ களை கட்டிவிட்டது விஜய் டிவியின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீசன் 5. இன்றைக்கு இறுதிச்சுற்று. நான்கு சீசன்களை வெற்றிகரமாக முடித்துவிட்டு ஐந்தாவது சீசனிலும் ஃபைனலைத் தொட்டுவிட்டது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. செம பிசியாக தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் ஃபைனல் போட்டியாளர்கள் ஐந்து பேரும் , கொஞ்சம் பேசுங்களேன் என்றால் படபடக்கிறார்கள், சியாத், செம எக்ஸைட்டா இருக்கு, ஆனால் வெற்றி பத்தி எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அந்த பெரிய ஸ்டேஜ்ல போய் நிற்கறதே பெரிய சேலஞ்சா பார்க்கறேன். எனக்கு சொந்த ஊரு பாலக்காடு, கேரளா. டிகிரி முடிச்சிட்டு இப்போ முழு நேரமா மியூசீஷியனா இ…

  14. Started by nunavilan,

    THE LAST HALT

    • 0 replies
    • 400 views
  15. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் வருகிற 20 –ஆம் தேதி காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடக்கிறது. இதில் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரைப்படத் துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். காலை 10 மணிக்கு டி.கே.எஸ். கலைவாணன் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. எம்.ஜி.ஆர். திரைப்பட பாடல்கள் இதில் பாடப்படுகின்றன. காலை 11 மணிக்கு கருத்தரங்கம் நடக்கிறது. எம்.ஜி.ஆரைப் பற்றி பல்வேறு தலைப்புகளில் தலைவர்கள் பேசுகிறார்கள். பிற்பகல் 3 மணிக்கு எம்.ஜி.ஆர். படங்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலை 4 மணிக்கு சி.என்.எஸ். குழுவினர் எம்.ஜி.ஆர் படப்பாடல்களை பாடுகிறார்கள். இரவு 7 மணிக…

  16. தெறித்து விட்டது ‘தெறி’ பட கதை இளையதளபதி விஜய் நடித்துள்ள ‘தெறி’ படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கும் இந்த படத்தின் ஸ்டில்களை வைத்து விஜய் இந்த படத்தில் 2 வேடத்தில் அல்லது 3 வேடங்களில் நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் உண்மையில் விஜய்க்கு இந்த படத்தில் ஒரே வேடம்தான் என்றும், 3 விதமான தோற்றங்களில் அவர் தோன்றுகிறார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. விஜய்-சமந்தா அன்பான ஜோடியின் மகள்தான் நைனிகா என்றும், வில்லன் கோஷ்டியினர் சமந்தாவை கொலை செய்தவுடன் நைனிகாவை மொட்டை ராஜேந்திரன் மூலம் வட நாட்டிற்கு ரகசியமாக அ…

  17. மீண்டும் களமிறங்கும் இண்டியானா ஜோன்ஸ் இண்டியானா ஜோன்ஸ் திரைப்பட வரிசையின் அடுத்த பாகத்தை உருவாக்க இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பர்கும் ஹாரிசன் ஃபோர்டும் மீண்டும் இணைவதாக வால்ட் டிஸ்னி நிறுவனம் தெரிவித்துள்ளது. இண்டியானா ஜோன்ஸ் அண்ட் த கிரிஸ்டல் ஸ்கல் படத்தில் ஹாரிசன் ஃபோர்ட். இது இந்த வரிசையில் வெளியாகும் ஐந்தாவது படமாகும். இந்தப் படம் 2019 ஜூலை மாதம் வெளியாகும். இதற்கு முந்தைய இண்டியானா ஜோன்ஸ் படம், கிங்டம் ஆஃப் கிரிஸ்டல் ஸ்கல் என்ற பெயரில் 2008ஆம் ஆண்டில் வெளியானது. முதலாவது இண்டியானா ஜோன்ஸ் திரைப்படம் ரெய்டர்ஸ் ஆஃப் தி லாஸ்ட் ஆர்க் என்ற பெயரில் 1981ல் வெளியானது. முதலாவது படத்தில் அகழ்வாராய்ச்சியாளரான ஜோன்ஸ் ஆர்க் ஆஃப் தி கான்வென்ட்…

  18. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகர் சாய் பிரசாந்த். நடனம், மிமிக்ரி என பன்முக திறமை கொண்ட இவர் சினிமாவிலும் நடித்துள்ளார். வடகறி படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார். சமீபத்தில் தான் இவருக்கு திருமணமானது. இந்நிலையில் இன்று இவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த செய்தி கோடம்பாக்கத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபகாலமாக சீரியல் நடிகர்கள், இயக்குனர்கள் தற்கொலை செய்துவருவது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.cineulagam.com/tamil/news-tamil/tv/124363/

  19. சென்னை, நடிகர் சாய்பிரசாந்த் தற்கொலை சம்பவம் பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர்-நடிகைகளின் தற்கொலைகளை தடுக்க ‘கவுன்சிலிங்’ நடத்தும்படி கோரிக்கைகள் எழுந்துள்ளன. சாய்பிரசாந்த் தற்கொலை நடிகர் சாய்பிரசாந்த் சென்னையில் நேற்று முன்தினம் விஷம் குடித்து இறந்தார். இவர் நேரம், முன்தினம் பார்த்தேனே, தெகிடி, வடகறி போன்ற படங்களில் நடித்துள்ளார். அண்ணாமலை, செல்வி, இதயம் ஆகிய டெலிவிஷன் தொடர்களில் நடித்தும் பிரபலமாக இருந்தார். சாய்பிரசாந்துக்கு 30 வயதுதான் ஆகிறது. இந்த வயதில் அவர் தற்கொலைக்கு, துணிந்தது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மன உளைச்சல் காரணமாகவே அவர் சாக முடிவு எடுத்தார் என்று கூறப்படுகிறது. சாய்பிரசாந்துக்கும் நிரஞ்சனா என்ற பெ…

  20. நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து சரத்குமார், ராதாரவி நீக்கம்? சென்னை: நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து சரத்குமார், ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் ஆகியோரை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. நடிகர் சங்கத்தின் முன்னாள் அறங்காவலர்களாக இருந்த சரத்குமார், ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாகவும், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் நடிகர் சங்கம் சார்பில் கடந்த 3-ம் தேதி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், நடிகர் சங்க செயற்குழு கூட்டம் இன்று (14-ம் தேதி) நட…

  21. ”என் காதல் உண்மையானது” தற்கொலை செய்த சாய் பிரசாந்தின் உருக்கமான கடிதம்! சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர் மன உளைச்சலே இந்த முடிவுக்குக் காரணம் என அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார். தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிறகு வெள்ளித்திரையிலும் நடிக்கத் தொடங்கியவர் சாய்பிரசாந்த். நேரம், வடகறி என முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் நடிக்கத் துவங்கிய நிலையில் அவரது தற்கொலை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் தனது மனைவி சுஜிதாவின் மீது வைத்திருந்த அதீத காதலும், மனைவியின் பிரிவுமே அவரது தற்கொலைக்குக் காரணமாக இருந்துள்ளது. தற்கொலை செய…

  22. தமிழ் சினிமா முன்னோடிகள்: தமிழ்த் திரை உலகின் முதல் கதாநாயகி டி.பி.ராஜலஷ்மி! பேராசிரியர் வா.பாலகிருஷ்ணன் ஓய்வு பெற்ற வரலாற்றுத்துறை பேராசிரியர். திண்டிவனம் அரசு கலைக் கல்லூரியிலும் பின் தொழுதூரில் உள்ள தனியார் கலைக்கல்லுாரி ஒன்றில் முதல்வராகவும் பணியாற்றியவர். ஆரம்ப கால சினிமா மீதும், அது தொடர்பான விஷயங்களிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பள்ளிக்காலத்திலிருந்து சினிமா இதழ்கள் மற்றும் அது தொடர்பான ஆளுமைகள் குறித்த தகவல்களை திரட்டிவரும் இவர், 67 வயதிலும் அதை விடாமல் தொடர்ந்துவரும் இளைஞர். சினிமா மற்றும் பொதுவான தலைப்புகளில் இதுவரை 4 நூல்களை வெளியிட்டுள்ளார். ------------------------------ தமிழ் சினிமா இன்று தொழில்நுட்பம், பிரம்மாண்டம், அசாத்திய திறமைமிக்க கலைஞர்…

  23. "கமல் சார்னா பயம்... ரஜினி சார்னா பக்தி!” ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார் டிடி. இளையராஜா, மாதவன் என அடுத்தடுத்து காபி வித் டிடி கமகமக்கிறது. வீட்டில், கால்களை அதிகம் அசைக்காமல் பொறுமையாக நடந்து வந்து வரவேற்கிறார். ``கால் இன்னும் முழுமையா குணமாகலை. ஒரு மாசத்துல டக்குனு ரெடியாகிடுவேன்’’ என்றபடி காபியோடு உட்கார, டிடி வித் காபி ஆரம்பம். ``நடுவுல கொஞ்சம் ஆளைக் காணோமே... எங்கே போனீங்க, என்னாச்சு?’’ ``இந்த வீட்லயேதான் இருந்தேன். கால்ல கொஞ்சம் பிரச்னை, சரியா நடக்க முடியலை. சின்னச் சின்னதா சில ஆபரேஷன்ஸ்; எக்கச்சக்க ரெஸ்ட். நடக்கும்போதுகூட கடகடனு ஸ்பீடா நடக்கிற ஆள் நான். ஆனா, நடக்க முடியாம ஆகிருச்சு. எப்பவும் வலியோடுதான்…

  24. திரை விமர்சனம்: காதலும் கடந்து போகும் ‘சூது கவ்வும்’ படத்தின் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந் திருக்கும் படம், ‘பிரேமம்’ புகழ் மடோனாவின் அறிமுகம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருக் கிறது ‘காதலும் கடந்து போகும்’. 2010-ல் வெளியான கொரிய திரைப்படம் ‘மை டியர் டெஸ்பிராடோ’வை அதிகாரபூர்வ மாகத் தமிழில் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குநர் நலன் குமரசாமி. ஐடி துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுகளுடன் விழுப்புரத்திலிருந்து சென்னைக்கு வருகிறார் யாழினி (மடோனா செபாஸ்டியன்). அவர் வேலை பார்க்கும் நிறுவனம் எதிர்பாராத விதமாக இழுத்து மூடப்படுகிறது. தோல்வியுடன் ஊருக்குத் திரும்பிச் செல்லப் பிடிக்கா மல், தன் ஹாஸ்டலை காலிசெய்துவிட்டு, ஒரு சாத…

  25.  நகைச்சுவை நடிகர் செல்வகுமார் விபத்தில் மரணம் நகைச்சுவை நடிகர் செல்வகுமார், வீதி விபத்தில் காயமடைந்து மரணமடைந்துள்ளார். ரமணா, அந்நியன், அலெக்ஸ் பாண்டியன், பூலோகம் ஆகிய திரைப்படங்களில் பெரிய கேரக்டர்களில் நடித்ததுடன் சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கோவை அருகே உள்ள துடியலூரைச் சேர்ந்த செல்வகுமார், சென்னை தி.நகர் சீனிவாச தெருவில் மனைவி கீதா, மகள்கள் ரோகிணி, கார்த்திகாக ஆகியோருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் செல்வகுமார், தனது நண்பர் கோவை செந்திலுடன் பர்கிட் ரோட்டில் உள்ள நண்பன் வீட்டுக்கு சென்றுவிட்டு ஸ்கூட்டரில் திரும்பிக் கொண்டிருந்தார், அப்போது தி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.