ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142635 topics in this forum
-
இஷாரா செவ்வந்தியை கண்டுபிடிக்க அனுராதபுரத்தில் தேடல்! அனுராதபுரம் பகுதியில் திட்டமிட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ கொலையில் ஈடுபட்டு தற்போது தலைமறைவாகியுள்ள இஷாரா செவ்வந்தியை தேடும் நடவடிக்கை நேற்று (01)மேற்கொள்ளப்பட்டது. அந்த பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அவர் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. அங்கு அவரைப் போல தோற்றமளித்த ஒரு பெண்ணையும் மற்றொரு ஆணையும் பொலிஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதைப்பொருள் மற்றும் இரண்டு சொகுசு கார்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும் கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை பொலிஸாரால் கைது செய்ய முடியவில்லை. இதேவேளை, கம்பஹா – உக்கல்பொட பகுதியில், பொலிஸ் துப்பாக்கிச் சூ…
-
-
- 7 replies
- 311 views
- 1 follower
-
-
சாவகச்சேரி பிரதேச சபை தமிழரசிடம்! adminJune 24, 2025 யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசன் திருவுளச் சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்றைய தினம் திங்கட்கிழமை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது. இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை சேர்ந்த செல்வரத்தினம் மயூரனும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசனும் முன்மொழியப்பட்டனர். இதில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை சேர்ந்த செல்வரத்தினம் மயூரனுக்கு ஆதரவாக, அகி…
-
- 0 replies
- 221 views
-
-
இராஜேஸ்வரி அம்மனை சுதந்திரமாக வழிபட அனுமதிப்பதாக இராணுவத்தினர் கூறி 06 மாதங்கள் கடந்தும் சுதந்திரமாக செல்ல அனுமதியில்லை 24 JUN, 2025 | 10:27 AM யாழ்ப்பாணம் பலாலி வடக்கு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்வதற்கு தற்காலிக பாதை அமைக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி ஆலய சூழலில் உள்ள பகுதிகளான பலாலியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது. அந்நிலையில் யுத்தம் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த 2002ஆம் ஆண்டு கால பகுதியில், மறைந்த முன்னாள் அமைச்சர் தி. மகேஸ்வரன் இராணுவ தரப்புகளுடன் பேச்சுக்களை நடாத்தி ஆலயத்…
-
- 0 replies
- 159 views
-
-
பலாலி மீன்பிடி துறைமுக புனரமைப்பு பணிகளை இளங்குமரன் எம்பி பார்வையிட்டார் 24 JUN, 2025 | 11:11 AM பலாலி பகுதியில் உள்ள மீன்பிடி துறைமுகம் தற்போது துரித கெதியில் புனரமைக்கப்பட்டு வருகின்றது. கடந்த யுத்தத்தின் காரணமாக அப்பகுதி மக்கள் சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்த நிலையில், துறைமுகத்தினதும் அதனை சூழவுள்ள பகுதிகளின் நீர்ப்பாதைகள் மற்றும் அடித்தளங்கள் மோசமாக சேதமடைந்திருந்தன. மேலும், கடல் பகுதியில் பலத்த கற்கள் காணப்படுவதால், அப்பகுதியிலுள்ள கடற்தொழிலாளர்கள் படகுகளை கடலுக்குள் செலுத்தும்போது கடலின் ஆழம் சரிவர இல்லாததுடன், அடிக்கடி படகுகள் சேதமடைவது போன்ற இடர்களை எதிர்கொண்டு வந்துள்ளனர். இதனை அடுத்து, பல ஆண்டுகளாகக் கடற்தொழிலாளர்கள் துறைமுக பகுதிகளை புனரமைக்கக் கோரி வந்த…
-
- 0 replies
- 127 views
-
-
பூம்புகாரில் இன்னல்களுடன் வாழும் மக்கள் - நேரில் சென்ற நல்லூர் தவிசாளர் தலைமையிலான குழு 24 JUN, 2025 | 11:12 AM யாழ்ப்பாணம், அரியாலை, பூம்புகார் பகுதிக்கு திங்கட்கிழமை (23) நல்லூர் பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டனர். நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பூம்புகார் பகுதி மக்கள் உரிய அடிப்படை வசதிகள் இன்றி, பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக கடற்தொழில் செய்வோர், உரிய தொழில் உபகரணங்கள் இன்றியும் , மீன் பிடி துறைமுக வசதிகள், படகுகளை நிறுத்தி வைப்பதற்கான உரிய வசதிகள் இன்றி சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் இது தொடர்பில் பூம்புகார் கடற்தொழில் சங்க பிரதிநிதிகளின் அழைப்பினை ஏற்று , நல்ல…
-
- 0 replies
- 87 views
-
-
யாழில். வீசிய கடும் காற்றினால் 159 பேர் பாதிப்பு! யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை திடீரென மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் 45 குடும்பங்களைச் சேர்ந்த 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 2 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதமாகவும் அவர் தெரிவித்துள்ளார். வேலணை பிரதேச செயலர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகளும், சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் 11 குடும்பங…
-
- 0 replies
- 102 views
-
-
மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்! மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஐந்து சர்வதேச விமானங்களை மஸ்கட், ரியாத் மற்றும் துபாய் ஆகிய இடங்களில் உள்ள மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பாதிக்கப்பட்ட விமானங்கள் மாற்று வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAASL) திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட சரியான வழித்தடங்களை CAASL குறிப்பிடவில்லை. ஆனால் பயணிகள் நிகழ்நேர புதுப்பிப்புகளுக்கு விமான நிறுவனத்தைத் தொட…
-
- 0 replies
- 95 views
-
-
தமிழ் அரசியல்வாதிகள் உட்பட 28 பேர் மீது விசாரணை General20 June 2025 தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கடந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் உட்பட 28 அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் முக்கிய இரண்டு தமிழ் அரசியல்வாதிகளும் உள்ளடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறையின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால், இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக சம்பாதித்ததாக நம்பப்படும் பணத்தைப் பயன்படுத்தி பல அரசியல்வாதிகள் சொத்துக்களை வாங்கியுள்ளனர் என்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், பாதுகாப்புத்துறையின் முன்னாள் தலைமையதிகாரி ஜெனரல் ச…
-
- 6 replies
- 433 views
- 1 follower
-
-
கல்வி ஒரு இம்சையாக மாறிவிட்ட காலத்திலும் விளையாட்டின் மூலம் தலைமைத்துவத்தை வளர்த்துக்கொள்ள முடிந்துள்ளது - பிரதமர் ஹரிணி Published By: DIGITAL DESK 2 23 JUN, 2025 | 11:46 AM கல்வி ஒரு இம்சையாக மாறிவிட்ட காலத்திலும், விளையாட்டின் மூலம் தலைமைத்துவம், அணி உணர்வு மற்றும் சகிப்புத்தன்மை போன்ற மிகவும் முக்கியமான பண்புகளை வளர்த்துக்கொள்ள முடிந்திருக்கிறது. நாம் விளையாட்டைத் தேர்ந்தெடுப்பது ஒற்றுமை உட்பட விளையாட்டின் நற்பண்புகளை நமக்குள் வளர்த்துக்கொள்வதற்கே ஒழிய வெற்றியை மட்டும் இலக்காகக் கொண்டு அல்ல என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். சுகததாச விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற பாடசாலை நீச்சல் விளையாட்டு சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 50வது பாடசாலை…
-
- 1 reply
- 135 views
- 1 follower
-
-
23 JUN, 2025 | 02:50 PM கிளிநொச்சியில் மின் மற்றும் இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வாரம் - 2025 திங்கட்கிழமை (23) ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாண அலுவலகத்தின் ஏற்பாட்டில், கரைச்சி பிரதேச சபையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. "சுற்றாடல் எம்மைக் காக்கும் நாம் சுற்றாடலைக் காப்போம்" எனும் தொனிப்பொருளில் திங்கட்கிழமை (23) திகதி தொடக்கம் வெள்ளிக்கிழமை (27) ம் திகதி வரை இந்த வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது இதேவேளை, இலத்திரனியல் மற்றும் மின்கழிவு சேகரிப்பு நிகழ்வு கரைச்சி பிரதேச சபையில் இன்று இடம்பெறுகிறது. நிகழ்வை கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் கலந்து கொண்டு ஆரம்பித்து…
-
- 0 replies
- 103 views
- 1 follower
-
-
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் சிறை! 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது இலங்கை விளையாட்டு சம்மேளனம் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 53 மில்லியன் இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் வர்த்தகர் நலின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, சதொச ஊடாக 14,000 கேரம் பலகைகளை கொள்வனவு செய்ததன் மூலம் 53 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குறித்த இருவர் மீதும் குற்றம் சுமத்தியிருந்தது. அதற்கமைய, குறித்த வழக்கு இன்று மூவரடங்கிய நீதிபதிகள் குழாம…
-
- 4 replies
- 516 views
- 1 follower
-
-
நிலத்தடி நீர்த் தேவை பற்றிய ஆய்வு Jun 22, 2025 - 10:20 - யாழ்ப்பாணத்தில் வழுக்கியாற்றைப் புனரமைப்பு செய்து நிலத்தடி நீர்த் தேவை மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஆய்வு ஒன்றினை யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் நேற்று (21) ஆரம்பித்தனர். யாழ்ப்பாணம் வறுத்தலைவிளான் பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பிக்கும் வழுக்கையாற்றில் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், அரச திணைக் களத்தை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். குறித்த ஆராய்ச்சி பயணத்தில் வருத்தலைவிளான் பகுதியில் ஆரம்பிக்கும் வழுக்கையாற்று பயணம் அராலியில் முடிவடையும். இதன்போது பொறியியலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மருத்துவ பீடம் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். -யாழ். நிருபர் பிரதீபன்- h…
-
- 0 replies
- 161 views
- 1 follower
-
-
Published By: VISHNU 22 JUN, 2025 | 08:52 PM யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு திடீரென காற்றுடன் பெய்த மழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) மாலை தென்னிந்திய இசை கலைஞர்களின் பங்கேற்புடன் இசை நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தனியார் நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் 5000, 3000 மற்றும் 2000 ரூபாய் பெறுமதியான நுழைவு சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு, நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இசை நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக, மங்கள விளக்கேற்றும் வேளை திடீரென கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தமையால், நிகழ்வுக்காக போடப்பட்டிருந்த கதிரைகள், அருகில் இருந்த பந்தல்களின் தகரங்கள் என்பன காற…
-
-
- 4 replies
- 505 views
- 2 followers
-
-
வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் நீதிக்கான நீண்டகாத்திருப்பு ஆவனப்பட திரையிடலும் கருத்துப்பகிர்வும் Published By: VISHNU 23 JUN, 2025 | 02:37 AM வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் நீதிக்கான நீண்டகாத்திருப்பு ஆவனப்பட திரையிடலும் கருத்துப்பகிர்வும் ஞாயிற்றுக்கிழமை (22) மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி திருமதி அ.அமலநாயகி தலைமையில் அமெரிக்கமிசன் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது வடகிழக்கில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி அலைந்து உயிர்நீர்த்த உறவுகளை நினைவுகூரும் வகையில் ஈகச்சுடர் ஏற்றப்பட்ட அகவணக்கம் செலுத்தப்பட்டது. இதன்போது காணாமல்ஆ…
-
- 0 replies
- 93 views
-
-
Editorial / 2025 ஜூன் 19 , பி.ப. 02:58 - 0 - 35 முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மேலும் இரண்டு மகள்களான சமித்ரி ஜெயனிகா ரம்புக்வெல்ல மற்றும் அமலி நயனிகா ரம்புக்வெல்ல ஆகியோரும் அமலியின் கணவரும் பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வின் கூற்றுப்படி, ரூ. 134 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள அறிவிக்கப்படாத சொத்துக்கள் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது.இதில் ரூ. 40 மில்லியன் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், ரூ. 20.5 மில்லியன் மதிப்புள்ள பென்ஸ் கார் மற்றும் ஏற்கனவே ந…
-
-
- 7 replies
- 526 views
-
-
192 உள்ளூராட்சி மன்றங்கள் தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில்! தேசிய மக்கள் சக்தி (NPP) இப்போது இலங்கை முழுவதும் 192 உள்ளூராட்சி மன்றங்களின் கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளது. இவற்றில், NPP 151 நிர்வாகங்களில் நேரடி பெரும்பான்மையைப் பெற்றது. அதே நேரத்தில் அவர்கள் 41 பிற மன்றங்களில் தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பான்மையைப் பெற்று நிர்வாகங்களை அமைத்தனர். NPP இப்போது கொழும்பு, களுத்துறை, காலி, குருநாகல், புத்தளம் மற்றும் நுவரெலியா உட்பட பல முக்கிய மாநகர சபைகளை ஆளுகிறது. அக்கரபத்தனை, கொட்டகலை மற்றும் நுவரெலியா பிரதேச சபைகளில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் பதவியை வகிக்கிறது. அதே நேரத்தில் துணைத் தலைவர்கள் பதவிகளை NPP பிரதிநிதிகள் பெற்றுள்ளனர். இதற்கிடையில், எந்தவொரு கட்சிக்கும்…
-
- 0 replies
- 81 views
-
-
22 JUN, 2025 | 05:17 PM வவுனியா மாநகரசபை உறுப்பினர் ஒருவர் 18 மணித்தியாலயத்திற்கு மேலாக நீர் விநியோகம் தடைப்பட்டிருந்த பகுதிகளில் தனது சொந்த நிதியில் வாகனத்தை கூலிக்கு அமர்த்தி நீர் விநியோகம் மேற்கொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. வவுனியா மாநகர சபையின் பண்டாரிக்குள வட்டார உறுப்பினரான சி.பிறேமதாஸ் என்பவராலேயே குறித்த வேலைத்திட்டம் ஞாயிற்றுக்கிழமை (22) மேற்கொள்ளப்பட்டது. வவுனியா நகரின் சில பகுதிகள், மன்னார் வீதி, குருமன்காடு, நகரசபை விடுதி, அரச விடுதிப் பகுதி உளளிட்ட சில பகுதிகளில் சனிக்கிழமை (21) பிற்பகல் 3 மணி முதல் தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பினால் வழங்கப்படும் நீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டு சுமார் 18 மணித்தியாலயத்திற்கு மேலாக நீர் விநியோகம் தடை…
-
- 1 reply
- 191 views
- 1 follower
-
-
உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு நிகழ்வு Published By: DIGITAL DESK 2 16 JUN, 2025 | 03:40 PM 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை மாகாண மட்டத்தில் பாராட்டும் நிகழ்ச்சித் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஏற்பாடு செய்துள்ளது. அங்கு, 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 60 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு நிதி புலமைப்பரிசில் மற்றும் சான்றிதழ்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 2023/2024 பரீட்சைகள் தொடர்பாக பரீட்சைகள் திணைக்களம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட ப…
-
- 1 reply
- 142 views
- 1 follower
-
-
22 JUN, 2025 | 01:08 PM (நா.தனுஜா) இலங்கையில் தூய, தரமான, குறைந்த செலவிலான வலுசக்தி உற்பத்தி செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்காக 150 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்குவதற்கு உலக வங்கிக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது. இச்செயற்திட்டத்தின் ஊடாக இலங்கையினால் குறைந்த செலவில் பாதுகாப்பானதும், நிலைபேறானதுமான வலுசக்தியை உற்பத்தி செய்யமுடியும் எனவும், இது அதிக செலவில் இறக்குமதி செய்யப்படும் புதைபடிவ எரிபொருளில் நாடு தங்கியிருப்பதைக் குறைப்பதற்கும், சோலார் மற்றும் காற்று மூலமான வலுசக்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் உலக வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. 'இச்செயற்திட்டத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் உள்ள குடும்பங்களுக்கும் வணிகங்களுக்கும் குறைந்த விலையில், தீங்கற்ற மின்சாரத்தை…
-
- 0 replies
- 164 views
- 1 follower
-
-
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த தமிழரசு கட்சி உறுப்பினர் நீக்கம் சேருவில பிரதேச சபையின் தவிசாளர் தெரிவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முடிவுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினருக்கு வாக்களித்த, உறுப்பினரை கட்சியின் தலைமைப் பீடம் இடை நிறுத்தியுள்ளதாக கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரகசிய வாக்கெடுப்பில் கலந்து கொண்டு தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினருக்கு வாக்களித்த தங்கநகர் வட்டார உறுப்பினர் கந்தசாமி சுதேஸ்குமார் என்பவரையே, கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்தும், பிரதேச உறுப்பினர் பதவியில் இருந்தும் கட்சியின் தலைமைப் பீடம் இடை நிறுத்தியுள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கட்சி அறிவித்துள்ளது https…
-
- 0 replies
- 148 views
-
-
வாகரை பிரதேச சபையை பிள்ளையான் கட்சி கைப்பற்ற உதவிய கறுப்பு ஆடு யார்? மட்டக்களப்பு, கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை தவிசாளராக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் தெரிவு செய்யப் பட்டு ஆட்சியை கைப்பற்றியதுடன் அதற்கு தேவையான ஒரு வாக்கை தமிழரசு கட்சி உறுப்பினரா? அல்லது சிறிலங்கா முஸ்லீம் காங்கரஸ் கட்சி உறுப்பினரா ? ஆதரவு வழங்கிய கறுப்பு ஆடு ? என அரசியல் கட்சிகளுக்குள்ளே கறுப்பாடு தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டுள்ளது. வாகரை பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர்களை தெரிவு செய்யும் அமர்வு வெள்ளிக்கிழமை (20) பிரதேச சபை மண்டபத்தில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்றது. இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அ…
-
- 0 replies
- 138 views
-
-
11 Jun, 2025 | 05:11 PM தமிழ் மக்கள் கூட்டணியும் தமிழரசு கட்சியும் உள்ளுராட்சி மன்ற சபைகளை அமைப்பது தொடர்பிலான ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். இது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டதரணியுமான எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இருகட்சிகளின் இணக்கப்பாடு தொடர்பிலான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் விக்னேஸ்வரனின் கொழும்பு இல்லத்தில் இன்றுமாலை கையெழுத்திட்டுள்ளனர். சீ.வி. விக்கினேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்குமிடையில் முக்கிய சந்திப்பு : ஒப்பந்தம் கைச்சாத்து | Virakesari.lk
-
-
- 14 replies
- 716 views
-
-
காணிகளைச் சுவீகரிக்கும் வர்த்தமானியை இரத்துச் செய்வதற்கு தயங்குவது ஏன்? - எம்.ஏ. சுமந்திரன் http://www.samakalam.com/wp-content/uploads/2021/03/111103829_sumanthiran-04.jpg வடக்கில் காணிகளைச் சுவீகரிக்கும் வர்த்தமானியை இரத்துச் செய்வதற்கு தீர்மானித்திருந்த அரசாங்கம், குறித்த இரத்து செய்யும் நடவடிக்கையை நடைமுறைப்படுத்த ஏன் தாமதிக்கிறது என தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் வினவியுள்ளார். தனது முகநூலில் இட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ”வடக்கில் 5941 ஏக்கர் காணிகளுக்கான தமது உரித்தை நிரூபிக்குமாறு காணி நிர்ணய சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் 28.03.1025 அன்று 2420/25 இலக்கமிட்ட வர்த்தமானி, காணி உரிமையாளர்களுக்கு கொடுத்த காலக்கெடு…
-
- 0 replies
- 98 views
-
-
22 JUN, 2025 | 11:22 AM மலையக மக்கள் சிறுபான்மையினமா? தேசிய இனமா? இந்திய வம்சாவழியா? மலையகத் தமிழரா? என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேள்வி எழுப்பியுள்ளது. மலையக மக்களின் காணி உரிமை பிரச்சனை தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சனிக்கிழமை (21) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லகீதரன், யாழ்ப்பாண பல்கலைக்கழக மலையக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மைக்கல் பெவன், கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் உப தலைவர் திருச்செல்வம் , மற்றும் மலையக மாணவர் ஒன்றியத்தின் உப தலைவர் லக்சரண், முகாமைத்துவ பீடம், விஞ்ஞான பீடம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக்கொண்டு மலையக மக்களின…
-
- 0 replies
- 141 views
- 1 follower
-
-
Published By: VISHNU 22 JUN, 2025 | 12:22 AM 2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படுவது தொடர்பாக கல்வி அமைச்சு சிறப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. 2024 (2025) சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் 21ஆம் திகதி சனிக்கிழமை நள்ளிரவில் வெளியிடப்படும் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்புடைய தேர்வு முடிவுகள் இன்று நள்ளிரவில் வெளியிடப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று நள்ளிரவில் வெளியிடப்படாது என்றும், முடிவுகள் வெளியிடப்படும் என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் அனைத்து செய்திகளும் தவறானவை என்றும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில…
-
- 0 replies
- 88 views
- 1 follower
-