ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142930 topics in this forum
-
வடமராட்சியில் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்ட எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்கள் தேர்தல்கள் திணைக்களத்தினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். மாலைசந்தி சின்னத்தம்பி வித்தியாலய வாக்குச்சாவடிக்கு அருகில்- வைரவர் கோயிலடியில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணியினர் நின்று எம்.ஏ.சுமந்திரனிற்கு வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களை அவர்கள் வற்புறுத்தி வந்தனர். இது தொடர்பில் தேர்தல் திணைக்கள கண்காணிப்பாளர்களிற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற கண்காணிப்பாளர்களும் பொலிசாரும் அவர்களை மடக்கிப்பிடித்தனர். தற்போது அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்கள். https://www.pagetamil.com/138169/
-
- 0 replies
- 467 views
-
-
திருகோணமலையில் சுமூகமான முறையில் வாக்களிப்பு 2020 பாராளுமன்றத் தேர்தல், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல வாக்களிப்பு நிலையங்களிலும் சுமூகமாகவும் அமைதியான முறையிலும் இன்று காலை 07.00 மணி முதல் இடம் பெற்று வருகிறது. வாக்களிப்பானது சுகாதார நடை முறைகளை பின்பற்றியவாறு வாக்களிப்பு இடம் பெறுகிறது. அதன் ஒரு பகுதியாக தம்பலகாமம் பகுதியில் உள்ள வாக்களிப்பு நிலையத்திலும் வாக்களிப்பு இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/87361
-
- 0 replies
- 402 views
-
-
யாழ்ப்பாணத்தில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி வாக்களிப்பு நடவடிக்கை ஒன்பதாவது பாராளுமன்ற பொதுத் தேர்தலின் வாக்களிப்பு செயற்பாடுகள் காலை 7.00மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண தேர்தல் தொகுதியின் வாக்களிப்பு நிலையங்களில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி மக்கள் வாக்களிப்பில் ஈடுபடுவதை காணமுடிகிறது. காலையிலேயே மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று சமூக இடைவெளி யினை பேணி சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வாக்களிக்கின்றனர் யாழ் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் எந்தவிதமான அச்சமும் இன்றி கட்டுப்பாடுகளுமின்றி மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதை அவதானிக்க முடிகின்றது. https://www.virakesari.lk/article/87360
-
- 0 replies
- 334 views
-
-
மட்டக்களப்பில் பொதுத் தேர்தல் வாக்களிப்பு அமைதியான முறையில் 9 ஆவது பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைககள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை 7 மணிக்கு அமைதியான முறையில் ஆரம்பமாகின. இத்தேர்தலில் மட்டக்களப்புத் தொகுதியில் 194 வாக்கெடுப்பு நிலையங்களும், கல்குடா தொகுதியில் 119 வாக்கெடுப்பு நிலையங்களும், பட்டிருப்புத் தொகுதியில் 115 வாக்கெடுப்பு நிலையங்களுமாக மொத்தம் 428 வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்களிப்புக் கடமைகளுக்காக இம்முறை 4 ஆயிரத்தி 710 அரச உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இம்முறை சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி வாக்கெண்ணும் பணிகளுக்காக பிரதான வாக்கெண்ணும் நிலையங்களாக கல்குடா மற்றும் பட்டிருப்புத் தொகுதிக்கென மட்…
-
- 0 replies
- 437 views
-
-
வாக்குச் சீட்டுகளைப் பெறாதவர்களும் வாக்களிக்கலாம் – முக்கிய அறிவிப்பு வாக்குச் சீட்டுகளைப் பெறாதவர்களும் இன்று நடைபெறும் பொதுத்தேர்தலில் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையதளத்தில் தங்கள் அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட்டு அவர்களின் பெயர்கள் தேர்தல் பதிவேட்டில் உள்ளதா என சரிபார்க்கலாம் அல்லது கிராம சேவகர்கள் வைத்திருக்கும் தேர்தல் பட்டியலில் பெயர்கள் இருந்தால், அதனை பெற்று சரியான அடையாளத்துடன் வாக்களிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பலர் தங்கள் வாக்குச் சீட்டுகளை இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை என கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த …
-
- 0 replies
- 347 views
-
-
குழப்பம் விளைவிப்பவர்களுக்கு எதிராக துப்பாக்கி பிரயோகம் நடத்த பொலிஸாருக்கு அனுமதி நடைபெறுகின்ற பொதுத்தேர்தல் வாக்குச் சாவடியில் வாக்குப் பெட்டிகளைக் கொள்ளையிட முயற்சி செய்தால் அல்லது குழப்பத்தை விளைவிக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஆயுத மேந்திய தலா இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு இடம்பெறுகின்ற நிலையில் வன்முற…
-
- 0 replies
- 307 views
-
-
தமிழ் தேசிய கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தக் கூடிய கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு கனடிய தமிழர் தேசிய அவை வேண்டுகோள் தமிழ் தேசிய கோட்பாடுகளை சொல்லிலும் செயலிலும் வரித்துக் கொள்வது மட்டும் அல்லாமல் அவற்றை நடைமுறைப்படுத்தக் கூடிய அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளை இனம் கண்டு வாக்களிக்குமாறு கனடிய தமிழர் தேசிய அவை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இலங்கைத் தேர்தலில் மக்களின் சனநாயக வாக்கு வலிமை என்பது இன்றியமையாதது. தமிழீழ மக்கள் அனைவரும் தமது வாக்குகளைத் தவறாமல் எமக்கு நடப்பது இனவழிப்பு என்பதை சொல்லிலும் செயலிலும் வலியுறுத்தி, அதற்காக பரிகார நீதி வேண்டி உளசுத்தியுடன் தொடர்ச்சியாக அகத்த…
-
- 0 replies
- 309 views
-
-
யாழ். மாவட்ட இராணுத் தளபதி இடமாற்றம்; கிழக்குத் தளபதி யாழ்ப்பாணம் வருகின்றார் August 4, 2020 யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொண்டர் படையணியின் தளபதியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இடமாற்றம் உடனடியாக நடைமுறைக்கு வரும் என தெரிவீக்கப்பட்டுள்ளது. அதேநேரம் யாழ்ப்பாணம் மாவட்ட புதிய தளபதியாக தற்போதைய கிழக்கு மாகாணத் தளபதி மேஜர் ஜெனரல் சேனரத் பண்டார நியமிக்கப்படவுள்ளார். பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த திடீர் இடமாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது http://thinakkural.lk/article/59979
-
- 0 replies
- 418 views
-
-
நாடுமுழுவதும் உள்ள மதுபான சாலைகளுக்கு பூட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் நாளை (புதன்கிழமை) மற்றும் நாளை மறுதினமும் மூடப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. இத்தீர்மானத்திற்கு எதிராக செயற்படும் மதுபான உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் விற்பனை நிலைய அனுமதி பத்திரமும் இரத்து செய்யப்படும் என்றும் அத்திணைக்களம் எச்சரித்துள்ளது. அத்தோடு, இவ்விடயம் தொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்கள் 1913 இலக்கத்தின் ஊடாக முன்வைக்க முடியும் எனவும் மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. நாளை பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், பாதுகாப்பினை பலப்படுத்த உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வன்…
-
- 0 replies
- 409 views
-
-
பேராசிரியர் தீபிகா உடுகம பதவியில் இருந்து இராஜினாமா இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் தீபிகா உடுகம பதவியில் இருந்து இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அவர் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்து கொள்வதாக அரசியலமைப்பு சபைக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த பாராளுமன்றத்தினால் நியமிக்கப்பட்ட அரசியலமைப்பு சபை இறுதியாக நேற்று (03) மாலை ஒன்று கூடியது. முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியலமைப்பு சபை ஒன்று கூடி இருந்தது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மஹிந்த சமரசிங்க, பிமல் ரத்நாயக்க ஆகியோர் உட்பட அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் 6 பேர் இதில் கலந்து கொண்டனர். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராக ச…
-
- 0 replies
- 383 views
-
-
தாமரை மொட்டு கட்சி வெற்றி பெற்றால் உடனடியாக புதிய பிரதமர் பதவியேற்பார் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு வெற்றி பெற்றால் ஓகஸ்ட் 7 அல்லது 8 திகதிகளில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே புதிய பிரதமர் பதவியேற்பார் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் வெற்றிபெற்றதும் முதலில் பிரதமர் பதவியேற்பார் என்றும் பின்னர், அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றால் தேசிய அரசாங்கத்தினை அமைக்கும் நோக்கம் தமக்கு கிடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அடுத்த நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத்…
-
- 0 replies
- 428 views
-
-
இந்திய இராணுவத்தின் வல்வை படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு வல்வைப் படுகொலையின் 31ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (02) வல்வெட்டித்துறை தீருவில் வெளியில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வு, எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் மாலை ஏழு மணியளவில் ஈகைச் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. 1989ம் ஆண்டு இந்திய இராணுவத்தால் அப்பாவிப் பொதுமக்கள் 84 பேர் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர். https://newuthayan.com/இந்திய-இராணுவத்தின்-வல்வ/
-
- 4 replies
- 623 views
-
-
யாழ். தேர்தல் மாவட்ட முடிவுகள் வியாழன் நண்பகலுக்கு முன்னர் வெளிவரும்; அரச அதிபர் தகவல் August 4, 2020 யாழ். தேர்தல் மாவட்ட முடிவுகள் எதிர்வரும் 6ஆம் திகதி வியாழக்கிழமை நண்பகலுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டு விடும் என மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலர் க. மகேசன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்றுக் கட்சிப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்- “யாழ். தேர்தல் மாவட்டத்தில் பொதுத் தேர்தல் ஏற்பாடுகள்அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை காலை வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்படும். இம்…
-
- 0 replies
- 396 views
-
-
மட்டக்களப்பில் முருகன் சிலை ஒன்றை கடத்தி விற்பனை செய்ய முயற்சித்தவர் கைது! மட்டக்களப்பில் சட்டவிரோதமாக முருகன் சிலை ஒன்றை கடத்தி விற்பனை செய்ய முயற்சித்த பதவியில் இருந்து இடை நிறுத்திப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது திருகோணமலை இருந்து மட்டக்களப்பிற்கு சட்டவிரோதமாக முருகன் சிலை ஒன்றை கடத்தி விற்பனை செய்ய முயற்சித்த கடமையில் இருந்து இடை நிறுத்திப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் முருகன்சிலையை கைப்பற்றியுள்ள சம்பவம் நேற்று (திங்கட்கிழமை ) இரவு இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றிற்கமைய சம்பவதினமான நேற்று திங்கட்கிழமை இரவு திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பிற்கு சட்டவிரோதமாக ஜம்பொன்…
-
- 0 replies
- 400 views
-
-
இலங்கையின் அரிய ஒளிபடத்தை நாசா வெளியிட்டுள்ளது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இலங்கை மற்றும் இந்தியாவின் தெற்கு முனை தென்படும் விதமாக அழகான ஒளிபடமொன்றை நாசா வெளியிட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஜூலை 24ஆம் திகதி, விண்வெளி வீரர்களான பெஹன்கென் மற்றும் டக் ஹர்லி ஆகியோரால் எடுக்கப்பட்ட ஒளிபடங்களை நாசா வெளியிட்டு இருந்தது. அதிலேயே இலங்கை மற்றும் இந்தியாவின் பிரகாசமான ஒளிரும் தெற்கு முனையும் காட்டப்பட்டுள்ளன. மேலும் பொப் பெஹன்கென் மற்றும் டக் ஹர்லி ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இரண்டு மாதங்கள் கழித்த பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பூமியை வந்தடைந்தனர். இதேவேளை நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் என்ற விண்வெளி ஆய்வு தொழில்நுட்பங்கள் நிற…
-
- 0 replies
- 502 views
-
-
இந்தியா-இலங்கை இடையே பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த தீர்மானம் இந்தியா-இலங்கை இடையே பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரும் இந்திய கடற்படையின் தலைவருமான விகாஸ் சூட், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவை கடந்த ஜூலை 27-ஆம் திகதியும் இலங்கை கடற்படையின் துணைத் தலைவா் நிஷந்தா உல்கிடேனியை ஜூலை 29ஆம் திகதியும் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது இரு நாட்டு பாதுகாப்புத் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒத்துழைப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்…
-
- 0 replies
- 311 views
-
-
பொதுத்தேர்தல் – வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பம் பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளன. இதற்கமைய குறித்த பணிகள் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரின் கண்காணிப்பின் கீழ் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 2020 பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த முறை பொதுத்தேர்தலில் 22 மாவட்டங்களில் அங்கிகரிக்கப்பட்ட 20 அரசியல் கட்சிகளும் 34 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடவுள்ளன. அவற்றில் 7 ஆயிரத்து 452 வேட…
-
- 0 replies
- 284 views
-
-
கொழும்பு துறைமுக நகரத்திற்கு, அருகே.. மற்றுமொரு தீவு கொழும்பு துறைமுக நகரத்திற்கு அருகில் கடற்பரப்பில் மண்மேட்டை உருவாக்கி இன்னுமொரு துறைமுக நகரத்தை நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. துறைமுக நகரத்தின் பணிகளை இவ்வருடத்தின் இறுதிக்குள் நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. ஆகவே புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள துறைமுக நகரத்தின் பணிகளை துரிதப்படுத்தவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனால் கொழும்பு தலைநகரில் புதிதாக ஒரு நிலப்பரப்பு தோற்றம் பெறும் அத்தோடு துறைமுக நகரம் மற்றும் புதிய துறைமுக நகரம் அபிவிருத்தி ஊடாக அதிக தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அ…
-
- 1 reply
- 602 views
-
-
தனிமைப்படுத்தல் நிலையங்களுக்குள் வாக்களிப்பு நடைபெறாது கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்தவர்கள் ஓகஸ்ட் 5 ஆம் திகதி மாலை 4 மணிக்குப் பின்னர் வாக்களிக்க முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்குள் வாக்களிப்பு நடைபெறாது என்றும் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,”கொரோனா அச்சுறுத்தல் நீடித்து வரும் நிலையில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான சுகாதார ஏற்பாடுகள் அனைத்தும் பூரணமாகியுள்ளன. மக்களின் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய பொறுப்பு எம்மிடம் உள்ளது. இந்த பொது…
-
- 0 replies
- 295 views
-
-
பதிவு செய்துள்ள ஊடக நிறுவனங்களுக்கு மாத்திரமே தேர்தல் முடிவுகளை வெளியிட அனுமதி கொடுப்பனவை செலுத்தி, பதிவு செய்துள்ள இலத்திரனியல் ஊடக நிறுவனங்களுக்கு மாத்திரமே பொதுத் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகளை அறிவிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தற்சமயம் பிரதான ஊடக நிறுவனங்கள் சில இதற்கான பதிவை மேற்கொண்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு.. https://athavannews.com/பதிவு-செய்துள்ள-ஊடக-நிறு/
-
- 1 reply
- 460 views
-
-
பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு! பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. அதன்படி பொதுத் தேர்தல் தொடர்பான கூட்டங்களை நடத்துதல், வீடு வீடாகச் செல்லுதல், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல், விளம்பர பலகைகளைக் காண்பித்தல், சுவரொட்டிகளைக் காண்பித்தல், தேர்தல் தொடர்பான விளம்பரம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைத்திற்கும் இன்று நள்ளிரவுக்குப் பின்னர் தடை விதிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று நள்ளிரவுக்குப் பின் ஆரம்பமாகும் அமைதிக் காலத்தில், எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடாது, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்த அனைவரும் ஆதரவளிக்க வேண்ட…
-
- 4 replies
- 940 views
-
-
வட்டுவாகல் ஆற்றை ஆழப்படுத்தும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது; தேர்தல் விதி முறை மீறல் August 3, 2020 தேர்தல் விதியை மீறி இடம்பெற்ற வட்டுவாகல் ஆற்றை ஆழப்படுத்தும் நடவடிக்கை நேற்று தடுத்து நிறுத்தப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் திணைக்களம் நேற்று இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. கடந்த வாரம் முல்லைத்தீவுக்கு சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வட்டுவாகல் ஆற்றை ஆழப்படுத்த நடவடிக்கையை முன்னெடுத்தார். தேர்தல் காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது என்றபோதிலும், வாக்குகளை கவர்வதற்காக இத்தகைய செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதையடுத்தே இந்த திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது. அத்துடன் தேர்தல் நிறைவடைந்த பின்னர் இந்தப் பணியை முன…
-
- 0 replies
- 321 views
-
-
அரசியலமைப்பு பேரவையின் கூட்டம் இன்று நடைபெறுகின்றது; முக்கிய விடயங்கள் ஆராய்வு August 3, 2020 அரசியலமைப்பு பேரவையின் கூட்டம் அதன் தலைவரும், எட்டாவது பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தலைமையில் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்,ஷ முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதன் போது மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் அரச சேவை ஆணைக்குழு ஆகியவற்றில் காணப்படும் வெற்றிடங்கள் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக அரசியலமைப்பு பேரவையின் செயலாளரும், பாராளும…
-
- 0 replies
- 290 views
-
-
வடக்கு மாகாணத்திலேயேஅதிகளவான தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் பதிவு- வீவ் வடக்கு மாகாணத்திலேயே அதிகளவான தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்புக்கான தன்னார்வ முயற்சி (வீவ்) தெரிவித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தேர்தல் கண்காணிப்புக்கான தன்னார்வ முயற்சியின் ஒன்றிணைந்த செயற்குழு உறுப்பினர் ஆதில் அலி சப்ரி இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சட்ட விரோத பரப்புரை நடவடிக்கைகள், வாக்காளர்களுக்கு பணம் வழங்குதல், வாக்காளர்களை மத ரீதியான சுற்றுலாக்கள் அழைத்துச் செல்லல், கட்சியின் பெயர்,இலக்கம் பொறிக்கப்பட்ட பத்திரங்களை விநியோகித்தல், தனிமைப்படுத்தல் சட்ட ஒழுங்க…
-
- 0 replies
- 377 views
-
-
ஒட்டு மொத்த சர்வதேச நாடுகளும் சம்பந்தனுடன் வந்தாலும் மாற்றத்தை ஏற்படுத்தாது.! இந்தியா வந்தாலென்ன.? அமெரிக்கா வந்தாலென்ன.? ஒட்டு மொத்த சர்வதேச நாடுகளும் சம்பந்தனுடன் வந்தாலும் இலங்கை அரசு தனது நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தாது. இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள்தான் அரசியல் தீர்வு காணப்படும். சமஷ்டி என்ற வார்த்தைக்கே இங்கு இடமில்லையென தெரிவித்துள்ள அமைச்சர் தினேஷ் குணவர்தன, கூட்டமைப்பு விரும்பினால் அரசுடன் பேசலாமென்றும் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற ஒரே காரணத்துக்காகவே சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினரை எமது புதிய ஆட்சியில் பேச்சுக்கு அழைப்போம். ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தை கூட்டமைப்பினர் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். சர்…
-
- 0 replies
- 568 views
-