Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழரசுக்கட்சிக்கு எதிராக மேன் முறையீடு செய்யப்பட்ட வழக்கினை மீள பெற முடிவு! Vhg ஜூன் 17, 2025 முல்லைத்தீவு மாவட்ட தமிழரசுக்கட்சியின் தலைவர் வைத்திய கலாநிதி சிவமோகனால், தமிழரசுக்கட்சிக்கு எதிராக யாழ்.மேன் முறையீட்டு நீதிமன்றில் முறையிடப்பட்ட வழக்கானது இன்றையதினம் (17.06.2025) எடுத்துக்கு கொள்ளப்படவுள்ள நிலையில் சுமுகமான பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வைத்திய கலாநிதி சிவமோகன் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று வவுனியாவில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடம் ஒன்றில் இடம்பெற்றிருந்தது. சமூக செயற்பாட்டாளரும், மூன்று முன்னாள் போராளியின் சகோதரனுமான முல்லை ஈசனின் வேண்டுகோளுக்கிணங்க வழக்குகள் நீக்கப்பட வேண்டும்…

  2. ஜனாதிபதி ஜேர்மனியை சென்றடைந்தார் - ஜேர்மனி ஜனாதிபதியை பிற்பகல் சந்திக்கவுள்ளார் 11 JUN, 2025 | 03:06 PM ஜேர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (11) முற்பகல் பெர்லினின் பிராண்டன்பேர்க் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு, ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் (Frank-Walter Steinmeier) தலைமையில் இன்று பிற்பகல் பெர்லினில் உள்ள பெல்வீவ் மாளிகையில் (Bellevue Palace) நடைபெறும். இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியருக்கும் (Frank-Walter Steinmeier) இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு…

  3. பருத்தித்துறை நகரசபையை கைப்பற்றியது தமிழ்பேரவை June 17, 2025 10:29 am பருத்தித்துறை நகரசபையின் புதிய தவிசாளராக வின்சன் டிபோல் டக்ளஸ் போல் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தவிசாளரை தெரிவு செய்வதற்கு பகிரங்க வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இதில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் வின்சன் டீபோல் டக்ளஸ் போல் 7/4 என்ற வாக்குகளில் வெற்றிபெற்றார். இலங்கை தமிழரசு கட்சி சார்பில் தி.சந்திரசேகர் அவர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் வின்சன் டிபோல் டக்ளஸ்போல் ஆகிய இருவரின் பெயர்கள் தவிசாளர் பதவிக்கு முன்மொழியப்பட்டிருந்தது. இதனையடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வின்சன் டீபோல் டக்ளஸ் போல் வெற்றிபெற்று தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து உப தவிசாளர் தெரிவு இடம்ப…

  4. கலாநிதி கீதா கோபிநாத் இன்று இலங்கை செல்கின்றாா். adminJune 15, 2025 சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் இன்று (15) இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை செல்கின்றாா். அவா் தனது பயணத்தின் போது, நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது, கடன் மற்றும் நிர்வாகம்” என்ற தலைப்பில் 2025 ஜூன் மாதம் 16 ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ள மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய சீர்திருத்தத் திட்டத்தின் முதல் பாதி நிறைவடைந்துள்ள நிலையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், இலங்கையின் பொருளாதார …

  5. காணாமல் ஆக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் குழப்பம் ; அம்பாறையில் சம்பவம் 17 JUN, 2025 | 10:55 AM தமிழர் விரோத செயல்களுக்கும் தமிழர் தேச ஆக்கிரமிப்புகளுக்கும் எதிரான மக்கள் போராட்டம் '' தமிழர்களாக உணர்வோடும் உரிமையோடும் அணி திரள்வோம்'' என்ற தொனிப்பொருளில் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக திங்கட்கிழமை (16) நடைபெற்ற போது பதற்ற நிலைமை ஏற்பட்டது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் குழப்பம் ஏற்பட்டதுடன் திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளரால் சந்தை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த தடை என்ற விடயத்தினால் இப்பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு தவிசாளரது பெயரை கூறி வருகை தந்த சிலர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மிரட்டியது…

  6. வலி.வடக்கில் படையினரின் பாதுகாப்பு வேலியால் பயனற்றுப்போனது காணிவிடுவிப்பு! 15 மில்லியன் ரூபா அரச நிதி வீண்; நிதிகோரி அடம்பிடிக்கும் இராணுவம் வலி. வடக்கின் பலாலி வடக்கில் கடந்த ஆண்டு விவசாய நடவடிக்கைக்காக காணிகள் விடுவிக்கப்பட்டு 15 மாதங்கள் கடந்துள்ளநிலையில், தற்போதும் இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இறுக்கமான கண்காணிப்பிலே உள்ளதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். காணி விடுவிப்புக்காக 15 மில்லியன் ரூபா அரச நிதி செலவு செய்யப்பட்டு அந்தக் காணிகள் துப்புரவாக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள பாதுகாப்பு வேலியை அகற்ற இராணுவத்தினர் 18 மில்லியன் ரூபா தேவை எனத் தெரிவித்து காணிகளை விடுவிக்க மறுத்து வருகின்றனர். அதனால் அந்தக் காணிகள் மீண்டும் பற்றைக்காடுகளாக மாற ஆரம்பித்துள…

  7. 290 குடும்பங்கள் இலங்கைக்கு மீள்வர விருப்பம் adminJune 16, 2025 written by admin June 16, 2025 தமிழகத்திலுள்ள 290 குடும்பங்கள் இலங்கைக்கு மீள்வர விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் இடம்பெற்ற சில எதிர்பாரத சம்பவங்களால் இது சவாலாகியதாக இலங்கை ஏதிலிகள் மறுவாழ்வு நிறுவனத்திற்கும் வடமாகாண ஆளுநருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துடையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு ஏதுவான பொறிமுறையை உருவாக்கும் வகையிலான கொள்கை ஆவண வரைவு தயாரிக்கப்பட்டு அது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கை ஏதிலிகள் மறுவாழ்வு நிறுவனம் (ஒஃபர் சிலோன்) மற்றும் Acted நிறுவன உத்தியோகத்தர்கள் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தின…

  8. வடக்கு ஆளுநரை சந்தித்த யாழ் . முதல்வர் adminJune 16, 2025 வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, யாழ். மாநகர சபையின் முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, இன்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினார். அதன் போது, யாழ். மாநகர சபையின் பல்வேறு தேவைகள் தொடர்பில் ஆளுநரிடம் கோரிக்கைகள் முன்வைத்தார். யாழ்ப்பாண நகர அபிவிருத்தி தொடர்பாக எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றவேண்டும் என ஆளுநர் இதன்போது கேட்டுக்கொண்டார். https://globaltamilnews.net/2025/216890/

  9. 16 JUN, 2025 | 09:11 PM (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இராணுவ வீரர்களை சிப்பாய்கள் என விளித்தமைக்காக ராஜபக்ஷர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். யுத்தம் நிறைவடைந்த பின்னர் அவர்கள் சிறைச்சாலையில் என்னை எவ்வாறு உபசரித்தனர் என்பதை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. நேருக்கு நேர் போர் களத்தில் மோதிய தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கூட என் குடும்பத்தை பழிவாங்கவில்லை. ஆனால் ராஜபக்ஷர்கள் அதனை செய்தனர் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார். களுத்துறையில் ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கடன் பெற்று அதனை மீள செலுத்தாமல் மோசடி செய்தமை தொடர்பில் பேசும் …

  10. கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் NPP வசமானது கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர் விராய் கெலி பல்தஸார் 7 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார். 117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் 61 வாக்குகளை விராய் கெலி பல்தஸார் பெற்றுக்கொண்டதோடு, ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் ரியா சாருக் 54 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார். இன்றைய வாக்கெடுப்பில் மொத்தமாக 117 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றில் 2 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத கொழும்பு மாநகர சபையின் கன்னிக் கூட்டம் உள்ளூராட்ச…

  11. Published By: VISHNU 16 JUN, 2025 | 06:58 PM 2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை நாட்டில் உருவாக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். பொருளாதார வீழ்ச்சியின் போது ஒரு நாட்டின் சுயாட்சி மற்றும் இறையாண்மையைப் பேண முடியாது என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒரு தேசமாக சுயாட்சி மற்றும் இறையாண்மையை அடைவதே, இறுதி பெறுபேறாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதற்காக, மிகவும் கடினமான மற்றும் கைவிடாத முயற்சியில் தனது தலைமையிலான அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும், அரச அதிகாரிகள் மற்றும் பிரஜைகள் என அனைவரின் ஆதரவையும் இதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவி…

  12. Published By: VISHNU 16 JUN, 2025 | 09:38 PM போதியளவு எரிபொருள் வருகை தரவுள்ளதாகவும் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ். மாவட்டத்தில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் திடீரென மக்கள் வரிசைகளில் நின்று வாகனங்களுக்கு பெற்றோல் நிரப்புவதில் முண்டியடிக்கின்றனர். இந்நிலையிலேயே யாழ். மாவட்ட அரச அதிபர் அவசர வேண்டுகோள் ஒன்றை ஊடகங்கள் வாயிலாக விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், யாழ். மாவட்டத்தில் திங்கட்கிழமை (16) எரிபொருளுக்காக ஒரு செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கியிருப்பதாக அறிந்தேன். இன்றையதினம் அநுராதபுரத்திலிருந்து 23 பௌசர்களில், ஒரு பௌரில் 6 ஆயிரத்து 63 லீற்றர் வீதம் ஒரு இலட்சத்து 51 ஆயி…

  13. வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் உள்ள சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட மீசாலை அல்லாரை பிரதான வீதி தற்போது புனரமைக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வீதி புனரமைக்கப்படுகின்ற பொழுது வீதியின் குறிப்பிட்ட சில இடங்களில் ஒரு அடி ஆழமான நீளமான குழிகள் தோண்டப்பட்டு அதற்குள் காவோலைகள் போடப்பட்டு அதற்கு மேலாக கற்கள் போடப்பட்டு வீதி புனரமைப்பது பொதுமக்களிடையே ஆச்சரியத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான முறையில் பிரதான வீதி ஒன்று புனரமைக்கப்படுமா என்று மக்கள் விசனத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதோடு அதற்கான விளக்கத்தையும் பொதுமக்களுக்கு தெளிவ…

  14. 16 JUN, 2025 | 04:58 PM முதியோர்களுக்கு எதிராக இடம்பெறும் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறையிடுவதற்கு சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சினால் வாட்ஸ்அப் இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே முதியோர்களுக்கு எதிராக இடம்பெறும் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறையிட தேசிய முதியோர் செயலகத்தின் 0707 89 88 89 என்ற வாட்ஸ்அப் இலக்கத்தை பயன்படுத்த முடியும். இந்த வாட்ஸ்அப் இலக்கமானது 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சு தெரிவித்துள்ளது. ஜூன் 15 அன்று அனுசரிக்கப்படும் உலக முதியோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/217645

  15. Published By: DIGITAL DESK 2 16 JUN, 2025 | 03:49 PM அரசாங்கத்தின் முதன்மை நோக்கமானது மோசடி மற்றும் ஊழலை ஒழித்தல் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷண சூரியப் பெரும தெரிவித்தார். நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷண சூரியப் பெரும மற்றும் இலங்கைக்கான கொரிய தூதுவர் மியான் லீ ஆகியோருடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் நிதி ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கைியலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். புதிய அரசாங்கத்தின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை தூதருக்கு விளக்கிய அமைச்சர் சூரியப் பெரும மேலும் தெரிவிக்னையில், அரசாங்கத்தின் முதன்மை நோக்கமானது, மோசடி மற்றும் ஊழலை ஒழித்தல், வெளிப்படைத்தன்மையை உற…

  16. ஒருவாக்கு வித்தியாசத்தில் வவுனியா மாநகரசபையை கைப்பற்றியது சங்கு கூட்டணி! June 16, 2025 10:39 am வவுனியா மாநகரசபையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியை சேர்ந்த சுந்தரலிங்கம் காண்டீபன் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அந்த கூட்டை சேர்ந்த ஜனநாயக தேசிய கூட்டணி உறுப்பினர் பரமேஸ்வரன் கார்த்தீபன் பிரதிமுதல்வராக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் வவுனியா மாநகரசபைக்கான முதல்வர், பிரதி முதல்வர் தெரிவு வடக்குமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி தலைமையில், வவுனியா மாநகரசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது. இதன்போது முதல்வர் தெரிவு மற்றும் பிரதி முதல்வர் தெரிவுகள் பகிரங்க வாக்களிப்பின் மூலம் நடத்தப்பட்டது. அந்தவகையில் சங்கு கூட்டணியின் சார்பாக போட்ட…

  17. முக்கிய வழக்குகளை கையில் எடுத்த அநுர – சிக்கவுள்ள இரு ராஜபக்சர்கள்..! நாமல் ராஜபக்ச மற்றும் யோசித ராஜபக்ச ஆகியோரிடம் குற்றப்பத்திரிகை ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், பல வழக்குகள் தொடர்பில் விரைவில் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து குற்றப்பத்திரிகையை வெளியிடுவார்கள் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; நாட்டில் உள்ள பல விசாரணைகள் தொடர்பில் நீதவான் நீதிமன்றத்திற்கு ஏராளமான வழக்குகள் தொலைநகல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. அதன் பிறகு அந்த விடயங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.அதுதான் கடைசி படி. அதன் பிறகு நீதிமன்றத்திற்கு தண்டனை வழங்க அதிகாரம் உள்ளது. அரச நிறுவனங்களின் முக்கியமான பங்கு, வழக்…

  18. 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள் குடியேற்றப்படவில்லை! வலி. வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள்! adminJune 16, 2025 வலிகாமம் வடக்கில் இருந்து தாம் வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்னமும் தம்மை தமது சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தவில்லை என அப்பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில், போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ளபோதும் எங்களின் காணிகள் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் இன்னமும் இராணுவத்தினரின் கட்டுபாட்டிலையே உள்ளது. 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் ஆண்டு எமது சொந்த இடங்களில் இருந்து யுத்தம் காரணமாக வெளியேற்றப்பட்டோம். நாம் வெளியேறினதும்,…

  19. முள்ளியவளை பகுதியில் திடீரென உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம் June 12, 2025 10:49 am முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் திடீரென தனியார் காணி ஒன்றில் உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம் இனம்தெரியாத நபர்களினால் அகற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு அருகில் தனியார் காணி ஒன்றில் இரு நாட்களுக்கு முன்னர் இரவோடு இரவாக பௌத்த சமயத்தை போதிக்கும் வகையில் மகிந்த தேரரின் இலங்கை வருகையும், பௌத்த மதத்தினை ஸ்தாபித்தலும் என தலைப்பிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், நேற்று புதன் கிழமை (11.06.2025) இரவு இனம் தெரியாதோரால் காட்சிப்படுத்தப்பட்ட பதாதை கிழித்தெறியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/…

  20. 14 JUN, 2025 | 07:18 PM தமிழ் அரசியல்வாதிகளின் ஒரே குறிக்கோள் பதவியில் உயிர்வாழ்வதே. அவர்கள் எந்த தொலைநோக்கு பார்வையையும் இல்லாதவர்கள் இதனால் நாங்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை என தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியாவில் சனிக்கிழமை (14) காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், போரின் இறுதிக் கட்டத்தின் போதும் அதற்குப் பின்னரும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளின் தமிழ் தாய்மார்களான எங்கள் போராட்ட பயணம் 3036 வது நாளாக, தொடர்கிறது. எங்கள் குழந்தைகளை கண்ட…

  21. 15 JUN, 2025 | 12:59 PM தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்ட துரோகியென முத்திரைக்குத்தப்பட்ட தரப்புடன், அதிகாரத்துக்காக கூட்டு சேர்வது சாக்கடை அரசியலாகும். அப்படியான அரசியலை முன்னெடுக்கும் தரப்பின் முகத்திரை தற்போது கிழிந்துவிட்டது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். சாவக்கச்சேரியில் சனிக்கிழமை (14) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, நாடு தழுவிய ரீதியில் உள்ளூராட்சி சபைகள் அமைக்கப்பட்டு வருகின்றது. வடக்கிலும் இதற்குரிய நடவடிக்கை இடம்பெறுகின்றது. தெற்கில் கடைபிடித்த அணுகுமுறையை இதுவிடயத்தில் நாம் வடகிழக்கில் கடைப்பிடிக்கவில்லை. இங்கு நடுநிலை…

  22. Published By: DIGITAL DESK 3 15 JUN, 2025 | 04:24 PM யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் நேற்று சனிக்கிழமை (14) இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர். இரண்டு குழுக்குளுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில், அது மோதலாக மாறி வாள்வெட்டு நடைபெற்றுள்ளது. இதில் படுகாயமடைந்த நால்வர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/217533

  23. 15 JUN, 2025 | 12:25 PM (நமது நிருபர்) உயிர்களைப் பாதுகாப்பதை தமது பொறுப்பாக கருதி வீதி விபத்துகளைத் தடுப்பதற்குப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் சட்டங்களினால் மட்டுமன்றி சிறந்த தெளிவோடு அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டம் மற்றும் இலங்கை பொலீஸ் இணைந்து '' Tack care '' வீதியைப் பாதுகாப்போம்' என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட வீதி விபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றுமுன்தினம் கொழும்பு றோயல் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ப…

  24. Published By: VISHNU 15 JUN, 2025 | 05:56 PM (எம்.வை.எம்.சியாம்) இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கீடு சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலரினால் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வொன்றில் வெளிக்கொணரப்பட்டுள்ளது. சீன மக்கள் வங்கியுடன் (People’s Bank of China – PBoC) உள்ள 10 பில்லியன் (அ.டொலர் 1.4) பெறுமதியான நாணய பரிமாற்றத்தை ஒதுக்கீடாக கருதியமையால் இந்த நிலைமை உருவாகியுள்ளதாக வெரிட்டே ரிசேர்ச் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது தற்போது சர்வதேச அளவில் வெளிநாட்டு ஒதுக்கீடாக கருதப்பட வேண்டிய தரநிலையை பூர்த்தி செய்யவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ள ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவத…

  25. கடற்படை வசமுள்ள காணிகளை அளவிடும் நடவடிக்கை கைவிடப்பட வேண்டும் - செல்வம் அடைக்கலநாதன் General15 June 2025 மன்னார் - பள்ளிமுனை பகுதியில், கடற்படையினரின் வசமுள்ள காணிகளை அளவிடும் நடவடிக்கை கைவிடப்பட வேண்டும் என, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்த அவர், குறித்த காணிகள் தொடர்பில் ஜனாதிபதிக்கும் கடிதங்கள் அனுப்பியிருந்த போதிலும், தற்போது காணி அளவீடு தொடர்பான அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மக்களுக்கு இந்தக் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனவும், அவற்றைக் கடற்படையினர் அபகரிக்கும் செயல்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதாகவு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.