ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142931 topics in this forum
-
வடக்கின் புராதன சின்னங்களை மாகாண சபையே காப்பாற்றத் தவறியது – தவராசா குற்றச்சாட்டு! சந்தர்ப்பங்கள் கிடைத்தபோது பயன்படுத்தாது அசமந்தப் போக்காக இருந்துவிட்டு இன்று மாயகண்ணீர் வடிப்பதில் அர்த்தம் இல்லை. வடக்கின் தொல்பொருள் மற்றும் புராதன சின்னங்களை காப்பாற்றத் தவறியது வடக்கு மாகாணசபையே என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் வடக்கிலும் தொல்பொருள் மற்றும் புராதன சின்னங்களை அடையாளம் காண்பதற்கு செயலணி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் கிழக்கு மாகாணத்திலுள்ள மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட செயலணியின் உறுப்பினர் ஒருவர் கூறிய கருத்து தொடர்பில் கருத்து வெளி…
-
- 1 reply
- 482 views
-
-
யாழ்.மிருசுவில் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பளை பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிவந்த டிப்பர் வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டவேளை யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற டிப்பருடன்நேருக்குநேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் இயக்கச்சி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். https://www.ibctamil.com/srilanka/80/145535
-
- 7 replies
- 1.2k views
-
-
நயினை நாகபூசனி ஆலய காெடியேற்றம் இனிதே ஆரம்பம்! வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் – நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம் நேற்று (20) பக்திபூர்வமாக இடம்பெற்றது. இதன்போது கருவரையில் வீற்றிருக்கும் நயினை நாகபூசனி அம்மனுக்கும், வசந்தமண்டவத்தில் அருள்பாலித்து கொண்டிருக்கும் விநாயகர் மற்றும் முருகன் வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விசேட அபிசேகங்கள் மற்றும் ஆராதனைகள் என்பன முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து உள்வீதி வலம் கொடிமரத்தினை வந்தடைந்து 12 மணியளவில் சுபநேரத்தில் கொடிமரத்தில் பிரதம சிவாச்சாரரியர் தலைமையிலான சிவாச்சரியார்கள் மஹோற்சவ கொடியினை ஏற்றிவைத்தனர். இந்த மஹோற்வசம் எதிர்வரும் மாதம் மூன்றாம் திகதி இரதோற்சவம் மற்றும் மறு…
-
- 1 reply
- 399 views
-
-
கருணாவுக்கு கையை விரித்த மஹிந்த! முன்னாள் பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தமது கட்சியில் போட்டியிடவில்லை என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார். கடந்த நாட்களில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் போர்க்காலத்தில் 3000 படையினரை கொன்றதாக கருணா கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையிலேயே பொதுஜன முன்னணி இந்த அறிவிப்பை வெளியிட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://www.ibctamil.com/srilanka/80/145554?ref=home-imp-flag
-
- 1 reply
- 873 views
-
-
விமானப்படையினரை தவிர இராணுவம், கடற்படையின் விசேட படைப்பிரிவு, பயங்கரவாத தடுப்பு பிரிவு, குற்றவியல் விசாரணைப் பிரிவு, பொலிஸ் என பாதுகாப்பு துறையின் 150க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக போர் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதால், அவர்கள் வெளிநாடு சென்றால், கைது செய்யப்படும் ஆபத்து இருப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. இந்த அதிகாரிகளின் பெயர் பட்டியலை, ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரியும் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூகா, சுவிஸர்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஒஸ்ரியா, இத்தாலி உட்பட ஐரோப்பிய நாடுகள் மற்றும் போலடிக் நாடுகளின் விமான நிலையங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். சர்வதேச சட்டத்திற்கு அமைய இவர்களை கைது செய்யுமாறு…
-
- 2 replies
- 479 views
-
-
அரச புலனாய்வு உத்தியோகத்தர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை June 19, 2020 அரச புலனாய்வு உத்தியோகத்தர் கடமை அறையில் துப்பாக்கியால் சுட்டு மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை(19) மாலை 7 மணியளவில் அம்பாறை – கல்முனைகாவல் நிலையத்தில் உள்ள அரச புலனாய்வு பிரிவில் இடம்பெற்றுள்ளது. இத் துப்பாக்கி சூட்டில் மரணமானவர் யாழ்ப்பாணம் நெல்லியடியை சேர்ந்த கமல்ராஜ் (21) என்ற அரச புலனாய்வு உத்தியோகத்தராவார். கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள தேசிய புலனாய்வு பிரிவு காரியாலயத்தில் கடமையாற்றிவரும் குறித்த உத்தியோகத்தர் சம்பவதினமான இன்று மாலை 6.30 மணியளவில் காரியாலயத்தில் தனிமையில் இருந்துள்ள நிலையில் பாதுகாப்புக்காக வைத்திருந்து (…
-
- 9 replies
- 1.3k views
-
-
In இலங்கை June 21, 2020 4:31 am GMT 0 Comments 1132 by : Dhackshala தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக பதுளை ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் நேற்று மாலை 6.30 மணியளவில் பட்டிப்பொல மற்றும் அம்பேவெல நிலையங்களுக்கு இடையில் 138ஆவது மைல் கல் இடத்தில் வைத்து தடம்புரண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிப்படைந்தன. இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணியளவில் ரயில் பாதை சீரமைக்கப்பட்டுள்ளதுடன், ரயில்கள் வழமைப் போன்று சேவையில் ஈடுபடுவதாக பதுளை ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.…
-
- 0 replies
- 462 views
-
-
எப்போது சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் புகுந்தாரோ அன்றோடு கூட்டமைப்பு அழிவை எதிர்நோக்கியது. இவ்வாறு தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சரும் திகாமடுல்லை (அம்பாறை) மாவட்ட வேட்பாளருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். பொத்துவில் ஊறணி எனுமிடத்தில் தேர்தல் பரப்புரையில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்: தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை உருவாக்கியது நானே. யுத்தம் நடைபெறுகையில் பாராளுமன்றில் தமிழர்களின் குரல் ஒலிக்கவேண்டும் என சிவராம் கூறியதற்கிணங்க தலைவரிடம் கூறி நானே த.தே.கூட்டமைப்பை உருவாக்கினேன். வடக்கு கிழக்கில் இம்முறை த.தே.…
-
- 0 replies
- 426 views
-
-
In இலங்கை June 21, 2020 4:51 am GMT 0 Comments 1123 by : Dhackshala மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு 88 ஆயிரத்து 842 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் ஆவணி மாதம் 5ஆம் திகதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளது. மன்னார் மாவட்டத்தில் பொது தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளும் முக்னெடுக்கப்பட்டு வருகின்றன. மன்னார் மாவட்டத்தில் பொதுத்தேர்தலை ஜனநாயக ரீதியிலும் சுகாதார முறைப்படி நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இம்முறை மன்னார் ம…
-
- 0 replies
- 366 views
-
-
பௌத்தத்தை பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதே தொல்பொருள் செயலணியின் நோக்கம்- சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம் Post Views: 16 June 18, 2020 பௌத்தத்தை ஊக்குவிக்கின்றோம்,பாதுகாக்கின்றோம் பேணுகின்றோம் என்ற போர்வையில் அடையாளம் காணப்பட்ட நிலங்களில் அடையாளம் காணப்பட்ட அளவிற்கு சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதே கிழக்கு மாகாண தொல்பொருள் முகாமைத்துவ செயலணி ஏற்படுத்தப்பட்டதன்நோக்கம் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன்இலங்கை ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கிழக்கு மாகாணத்தையும் முடிந்தளவிற்கு வடமாகாணத்தையும் சிங்கள பகுதிகளாக மாற்றுவதும் இதன் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார் …
-
- 9 replies
- 693 views
-
-
வல்வெட்டித்துறையில் திடீர் சுற்றிவளைப்பு; இருவர் கைது! யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை, கெருடாவில், சீலாப்புலம் பகுதியில் இன்று (21) அதிகாலை முதல் சுமார் 3 மணிநேரம் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்தனர். இதன்போது நீதிமன்றப் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். வல்வெட்டித்துறை, கொம்மாந்துறையில் கடந்த வாரம் கிணறு ஒன்றிலிருந்து 3 குண்டுகள் மற்றும் துப்பாக்கியும் மீட்கப்பட்டன. இந்நிலையில் சீலாப்புலம் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணி முதல் காலை 7.30 மணிவரை இராணுவம் மற்றும் பொலிஸாரால் சுற்றிவளைப்புத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. ஊரணி இராணுவ முகாம் பட…
-
- 0 replies
- 390 views
-
-
யாழ். மக்களே அவதானம்- சுமந்திரன் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக புத்திஜீவிகள் எச்சரிக்கை!! இம்முறை தேர்தலில் சுமந்திரனையிட்டு யாழ் தமிழ் மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று யாழ். பல்கலைக்கழக புத்திஜீவிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இந்தவிடயம் தொடர்பாக அவர்கள் துண்டுப்பிரசுரம் ஒன்றையும் யாழ். குடா முழுவதும் விநியோகித்துள்ளார்கள். அந்த துண்டுபிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அன்பார்ந்த யாழ் மக்களே! இம்முறை நாடாளுமன்ற தேர்தல் என்பது வழமைபோன்ற ஒரு தேர்தல் அல்ல. தமிழர்களாகிய நாங்கள் மிக மிக அவதானமாகச் செயற்பட்டேயாக வேண்டிய ஒரு தேர்தல். சீனாவின் பக்கம் முழுவதுமாகவே சென்றுவிட்டுள்ள ஸ்ரீலங்காவை வழிக்கொண்டு வருவதற்கு தமிழ் மக்க…
-
- 25 replies
- 2.1k views
-
-
வட, கிழக்கு சுவீகரிப்பைத் தடுப்பதற்கு த.தே.கூவுக்கே வல்லமையுள்ளது’ ஆர்.ஜெயஸ்ரீராம், எம்.எம்.அஹமட் அனாம் வடக்கு, கிழக்கிலே தமிழ் மக்களின் வாழ்விடங்களை சுவீகரிப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துகின்ற வல்லமை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பில்தான் இருப்பதாக, கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். பல தமிழ்க் கட்சிகள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வாக்குப் பலத்தை உடைப்பதற்க்காக அரசாங்கத்தால் களமிறக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார். …
-
- 8 replies
- 1.5k views
-
-
நூருள் ஹுதா உமர். முன்னாள் பிரதியமைச்சரும், திகாமடுள்ள மாவட்ட வேட்பாளருமான வி. முரளிதரன் (கருணா அம்மான்) என்னுடைய அரசியல் இருப்பை இல்லாதொழிக்க வேண்டும் என்பதையும் தாண்டி என்னுடைய உயிருக்கும் இலக்கு வைத்துள்ளார். அது தொடர்பில் அரச புலனாய்வு பிரிவின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக விசாரணைகள் நடைபெற்று வருகிறது. விசாரணைகள் முடிவுற்றதும் முழு விபரங்களையும் பகிரங்கப்பட்டுவேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். இன்று(20) காலை நடைபெற்ற பொத்துவில் விவகாரம் குறித்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். …
-
- 1 reply
- 522 views
-
-
அவர் சிறிசேன இவர் நந்தசேன இரண்டு சேனாக்களும் ஒன்றே.! ஹிருணிகா நாட்டின் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தான் அன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் கண்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அரச அதிகாரிகளை திட்டுவதால், மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நினைக்கவில்லை. தனது சகோதரரான பிரதமர் மீதுள்ள ஆத்திரத்தையே ஜனாதிபதி, மத்திய வங்கியின் அதிகாரிகளை கடுமையாக குற்றம் சுமத்தி, அந்த அதிகாரிகள் மீது தனது கோபத்தை காட்…
-
- 0 replies
- 466 views
-
-
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆதரவு யாருக்கு? வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிவிப்பு Post Views: 55 June 20, 2020 எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரையும் எதிர்த்தோ அல்லது ஆதரித்தோ யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை எதனையும் வெளியிடவில்லை என்று அதன் செயலாளர் தெரிவித்துள்ளார். நேற்றுக்காலை முதல் பல்கலைக்கழக வளாகத்தினுள் காணப்பட்டவை எனக்கூறப்படும் சில அநாமதேய துண்டுப்பிரசுரங்கள் தொடர்பில், மாணவர் ஒன்றியத்துடன் தொடர்புபடுத்தி சமூக வலைத் தளங்களில் பரவிய செய்தி தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் எம். பாலேந்திரா இவ்வாறு தெரிவித்துள்ளார். பொத…
-
- 3 replies
- 659 views
-
-
வவுணதீவு பொலிஸாரின் கொலையின் மர்மம் துலக்கப்பட்டது ; சீயோன் தேவாலய தாக்குதல் விசாரணையின் போதே அம்பலம் (எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தின தொடர் குண்டுத் தாக்குதல்களில், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் குறித்த விசாரணையின் போது கையேற்ற சந்தேக நபர்களை விசாரித்த போதே, வவுணதீவு பொலிஸ் காவலரணில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் மர்மம் துலக்கப்பட்டதாக சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் சமன் வீரசிங்க தெரிவித்தார். இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களை கொலை செய்துவிட்டு கொள்ளையடிக்கப்பட்ட ரிவோல்வர்க…
-
- 1 reply
- 588 views
-
-
அரச திணைக்கள ஊழல் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம்! மன்னாரில் சில அரச திணைக்களங்கள் ஊழலின் உச்சத்தை அடைந்துள்ளதாக கூறி, தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அவசர கடிதமொன்றை இன்று (20) அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில், ‘மன்னார் மாவட்டத்தில் சில அரச திணைக்கள அதிகாரிகள், பகிரங்கமாக இலஞ்சம் பெறுகின்றார்கள். குறிப்பாக புவிச்சரிதவியல் திணைக்களம், வனவளத் திணைக்களம், பொலிஸார் மற்றும் வேறு சில திணைக்கள அதிகாரிகளும் இதில் அடங்குகின்றனர். மேலும் மணல் அனுமதிப்பத்திரம் வழங்குவதில் பல்வேறு விதமான முறைகேடுகள் இடம்பெறுகின்றன. மணல் அனுமதிப்பத்திரம் பெறுபவர்களிடம் ஒவ்வொரு மாதமும் இலஞ்சம் பெறுகின்றனர்.…
-
- 0 replies
- 405 views
-
-
முல்லைத்தீவில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்…! முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது இராணுவத்தினரால் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அந்தவகையில் முல்லைத்தீவு – மாத்தளன், அம்பலவன் பொக்கணை, வலைஞர்மடம், சாலை உள்ளிட்ட கிராமங்கள் இராணுவத்தின் தீவிர கண்காணிப்பில் காணப்படுகின்றன. குறிப்பாக மாத்தளன் சந்தியில் இணைகின்ற இரணைப்பாலை வீதி, பொக்கணை வீதி, மாந்தளன், மற்றும் சாலை ஆகிய கிராமங்களுக்கான வீதி ஆகிய மூன்று வீதிகளிலும் இராணுவத்தால் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு இராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை இரட்டை வாய்க்காலி…
-
- 0 replies
- 477 views
-
-
71 இராணுவ அதிகாரிகளுக்கு பதவியுர்வு இராணுவத்தைச் சேர்ந்த 71 பேருக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இராணுவத்தின் கேணல் பதவியில் இருந்த 41 அதிகாரிகள், பிரிகேடியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். அதேபோன்று, லெப்டினன் கேணல் பதவியில் இருந்த 30 பேர், கேணல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். ஜூன் மாதம் 15ம் திகதி முதல் குறித்த பதவியுயர்வு அமுலுக்கு வந்துள்ளது. https://newuthayan.com/71-இராணுவ-அதிகாரிகளுக்கு/
-
- 0 replies
- 403 views
-
-
தரையாக மாறிய கடலில் இலங்கையில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய பூங்கா! இலங்கையில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய பூங்காவை அடுத்த மாதம் மக்கள் பாவனைக்காக திறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. காலி முகத்திடல் போன்று மூன்று மடங்கு பெரிய பூங்காவை எதிர்வரும் ஓரிரு மாதங்களில் மக்கள் பாவனைக்கு திறக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்படும் இந்த பூங்கா 35 ஏக்கர் சதுர கிலோ மீற்றர் அளவில் நிர்மாணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வடிக்கால் மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பலவிதமான அபூர்வ தாவரங்கள் இங்கு நடப்பட்டுள்ள நிலையில் சிறுவர்களுடன் ஓய்வு பெற கூடிய வகையிலும் ஈர…
-
- 0 replies
- 394 views
-
-
9 மாகாணங்களும் பெளத்த – சிங்களவர்களுக்கே சொந்தமானவை; ஞானசார தேரர் அதிரடியாகக் கருத்து June 19, 2020 “9 மாகாணங்களும் பெளத்த – சிங்களவர்களுக்கே சொந்தமானவை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஓர் அடி நிலம்கூட தமிழர்களுக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ சொந்தம் இல்லை. இந்தநிலையில், வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் சொந்தப் பூமி என்ற நினைப்பில் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கருத்துக்களை வெளியிடுவதை உடன் நிறுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர். கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் இடங்களை அடையாளம் கண்டு பாதுகாப்பதற்கு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி, பெளத்த மதத்த…
-
- 5 replies
- 713 views
-
-
தேர்தலை தமிழ் மக்கள் தமது கருவியாக பயன்படுத்த வேண்டும் – உருத்திரகுமாரன் இலங்கையில் நடைபெறுகின்ற தேர்தல்களினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை. எனினும் அத்தேர்தல்களை தமிழர்கள் தமது ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். சமூகவலைத்தளத்தின் ஊடாக இடம்பெற்ற இணையவழி மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘தேர்தல் தொடர்பாக கொள்கை முடிவுகளே, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடந்த பத்து ஆண்டுகளாக எடுத்து வருகின்றது. அந்தவகையில் எம்மைப் பொறுத்தவரை தேர்தல் மூலம் தமிழ்மக்களுக்கு விடிவு கிடைக்கப்போவதில்லை. மேல…
-
- 1 reply
- 416 views
-
-
நாவாந்துறையில் 520 கிலோ இறைச்சி மீட்பு; இருவர் கைது! யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் இன்று (20) காலை அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 520 கிலோகிராம் மாட்டிறைச்சி மீட்கப்பட்டதோடு இறைச்சிக்காக வெட்டுவதற்கு தயாராக கட்டி வைத்திருந்த மூன்று மாடுகளும் இரண்டு ஆடுகளும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் சட்டவிரோதமாக கால்நடைகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதாக அப்பகுதி பொதுமக்களால் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இத்தகவலின் அடிப்படையில் இன்று காலை அங்கு மாநகர சபை ஊழியர்களுடன் சென்ற பொது சுகாதார பரிசோதர்கள் அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து இறைச்சி வெட்டப்பட…
-
- 0 replies
- 510 views
-
-
தாக்குதலுக்கு சென்ற ஏழுபேர் கைது! யாழ்ப்பாணம் – நல்லூரில் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தச் சென்றனர் என்ற குற்றச்சாட்டில் 7 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இளைஞர் ஒருவரைத் தாக்குவதற்காக 7 பேர் கொண்ட குழு இளைஞரது வீடு தேடி மோட்டார் சைக்கிள்களில் நேற்று பிற்பகல் சென்றது. இதனை அறிந்த இளைஞனின் மூத்த சகோதரன், குறித்த குழுவை விரட்டிச் சென்ற போது, மோட்டார் சைக்கிள் ஒன்று நிலை குலைந்து வீதியில் விபத்துக்கு உள்ளாகியதால் இரண்டு பேர் சிக்கினர். குறித்த இளைஞர்கள் இருவரையும் தாக்கிய பின் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினர் அவர்கள் இருவரையும் சிறப்பு அதிரடிப் படையினரிடம் ஒப்படைத்தனர். இளைஞர்கள் இருவரிடம் முன்னெடுக…
-
- 0 replies
- 386 views
-