ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142945 topics in this forum
-
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பிரவேசிப்பதற்கு புதிய நெடுஞ்சாலை by : Benitlas கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பிரவேசிப்பதற்கான புதிய நெடுஞ்சாலையொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று(வியாழக்கிழமை) 9 மணியளவில் குறித்த நெடுஞ்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்ரசிறி மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் மேலதிக செயலாளர் சுனில் குணவர்தன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் இந்த கலந்து கொண்டிருந்தனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் பிரசன்ன ரணது…
-
- 1 reply
- 596 views
-
-
முள்ளிவாய்க்கால் நிகழ்வு தடைகளுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது Bharati May 13, 2020 முள்ளிவாய்க்கால் நிகழ்வு தடைகளுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது2020-05-13T14:02:31+00:00உள்ளூர் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் முதலாம் நாள் நிகழ்வுகள் இன்று புதன்கிழமை காலை யாழ்.செம்மணி பகுதியில் இடம்பெற்றது. பொலிஸார், இராணுவத்தினர் நிகழ்வை தடுத்தபோதும் எதிர்ப்பை மீறி இந்த நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது. 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்ந்த போரில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கான நினைவேந்தல் ஆண்டுதோறும் இடம்பெற்று வருகிறது. இதன்படி இந்த ஆண்டும் நினைவுகூரல் நிகழ்வுகள் செம்மணி படுகொலை நினைவிடத்த…
-
- 8 replies
- 943 views
-
-
கொரோனாவை காரணம் காட்டி தொழிலை பறிக்க முடியாது – பந்துல குணவர்த்தன by : Benitlas கொரோனாவை காரணம் காட்டி தனியார் துறை ஊழியர்களின் தொழிலை பறிக்க முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் பந்துல குணவர்த்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாட்டின் இப்போதுள்ள நிலையில் நாட்டிற்கான இறக்குமதியை குறைத்தாக வேண்டும். இது குறித்து ஆரம்பத்தில் அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ இறக்குமதியின் தடைகள் இல்லை. அத்துடன் கட்டுமானப்பணிகளுக்கான பொருட்…
-
- 2 replies
- 656 views
-
-
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் உடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார். நேற்று இரவு இந்த தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு தாம் ஒத்துழைப்பு வழங்குவதாக சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது http://www.tamilmirror.lk/செய்திகள்/இரநடட-ஜனதபதகளம-தலபசயல-கலநதரயடல/175-250265
-
- 0 replies
- 502 views
-
-
மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு வெவ்வேறு மின்பட்டியல் அனைத்து பாவனையாளர்களுக்கும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்காக வெவ்வேறாக மின் பட்டியல்களை வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை மின்சார தனியார் நிறுவனங்களுக்கு மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர இது தொடர்பான ஆலோசனை வழங்கியுள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மின்சார சபையினால் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்காக ஒரே மின்சார கட்டணப…
-
- 0 replies
- 623 views
-
-
5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு – 2 ஆயிரத்து 572 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு by : Dhackshala கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மே மாதத்திற்கான 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுகளை வழங்க 2 ஆயிரத்து 572 கோடி ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், அமைச்சரவை இணை பேச்சாளர்களில் ஒருவரான அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்தமையைத் தொடர்ந்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் பல பகுதிகளிலும் ஊரடங்கு…
-
- 0 replies
- 438 views
-
-
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டிருந்தனர். இந் நிலையில் கடந்த திங்கட்கிழமை 11 ஆம் திகதியிலிருந்து ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டு யாழ்ப்பாணம் மெல்ல மெல்ல வழமைக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளது. இருந்தும் மதுபானக் கடைகள் திறப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதேவேளை மதுபானக் கடைகள் திறப்பதற்கான அனுமதி இன்று காலை 11 மணியிலிருந்து வழங்கப்பட்டது. இதனால் யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கும் குடி மக்கள் படையெடுக்கத் தொடங்கினர். இதன் காரணமாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட எந்தவிதமான சுகாதார நடைமுறைகளும் பின்பற்றப்படாது, சமூக இடைவெளியும் சீர்குலைந்து காணப்பட்டது. ஓரிரு மத…
-
- 0 replies
- 595 views
-
-
(செ.தேன்மொழி) நாட்டு மக்களிடம் கொள்ளையிடப்பட்ட பணத்தை கொண்டு அரச ஊழியர்களுக்கு ஆறுமாதம் வரை எந்த சிக்கலும் இன்றி ஊதியம் பெற்றுக் கொடுக்க முடியும். நாட்டு மக்களின் நிதியை மோசடி செய்தவர்களுக்கு அரச ஊழியர்கள் எதற்கு சம்பளத்தை தியாகம் செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பிய ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, இவர்களுக்கு எதிராக அரச ஊழியர்கள் குரல் எழுப்பவேண்டும் என்றும் கூறினார். இதேவேளை, டைட்டானிக் கப்பல் மாதிரி பொருளாதார கப்பலொன்றை கடலுக்குள் அனுப்பி அது பொருளாதார நெருக்கடி எனும் பனிக்குன்றில் மோதி முழ்கிக் கொண்டடிருக்கையில் உழைக்கும் மக்களை தோணிகளில் ஏறும்படி கூறுவதே தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார சித்தாந்தம் என்றும் கு…
-
- 7 replies
- 1k views
-
-
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயப் பொங்கல் விழா கிரிகை நிகழ்வுகள் மாத்திரமே இடம்பெறும் – மக்களுக்கு அனுமதியில்லை முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது.இந்நிலையில் குறித்த பொங்கல் விழா தொடர்பாக நேற்று புதன்கிழமை முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.இக்கலந்துரையாடலில் மாவட்டசெயலர் க.விமலநாதன், மேலதிக மாவட்டசெயலர் க.கனகேஸ்வரன், சுகாதாரப்பணிப்பாளர், கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் மணிவண்ணன் உமாமகள், கரைதுறைப்பற்று பிரதேசசபைின் செயலாளர், பொரலிஸார், இராணுவத்தினர், கோயில் நிர்வாகத்தினர் எனப்பலரும் கலந்திருந்துகொண்டனர். இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று அச்சம் காரண…
-
- 1 reply
- 452 views
-
-
நல்லூர் பிரதேச சபை ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபை ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நபர் நல்லூர் பிரதேச சபையில் இருந்து கடமை முடிந்து சுன்னாகத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது, இணுவில் காரைக்கால் இந்து மயானத்திற்கு அருகில் வைத்து இவ்வாறு வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான சுன்னாகம் ரயில் நிலைய வீதியைச் சேர்ந்த தே.நடேசு (வயது 44) என்பவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அண்மைக்காலமாக யாழில். வாள் வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வரு…
-
- 0 replies
- 494 views
-
-
மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் ஊடகவியலாளர் உயிரிழப்பு! மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதி, பெரிய கல்லாறு நாகதம்பிரான் ஆலயத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் உழவு இயந்திரம் மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது, மோட்டர் சைக்கிளில் பிரயாணித்த ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர். தீபம் ஊடக நிறுவனத்தில் பணியாற்றிவரும் திருகோணமலை காபர் வீதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஊடகவியலாளர் மிதுன் என்றழைக்கப்படும் ஈ.மிதுன்சங்கர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த, ஊடகவியலாளர் மற்றும் அவரது நண்பர்களான இரு ஊடகவியலாளர் உட்பட 4 பேர் இரண்டு மோட்டார் சைக்கிளில் மட்டக்…
-
- 0 replies
- 461 views
-
-
(ஆர்.யசி) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சந்தித்து பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுக்கவுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை பிரதமரிடம் ஒப்படைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் இறுதியாக இடம்பெற்ற கூட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை தனக்கு தருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.எ.சுமந்திரனிடம் கேட்டிருந்தார். இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் பட்டியல் மற்றும் அவர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் உ…
-
- 21 replies
- 1.5k views
-
-
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழ் மக்கள் மத்தியில் போராட்டத்தை விற்று பிழைப்பு நடார்த்துபவர்களாக இருந்தார்கள். தமிழ் மக்களிடையே நேசிப்பவர்களாக போராட்டத்தை ஆதரிப்பவர்களாக தங்களை வெளிப்படுத்தினார்கள் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார். கல்முனை பகுதியில் இன்றையதினம் முற்பகல் கட்சி ஆதரவாளர்களை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், இன்று பல அரசியல் கட்சிகள் செயற்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழ் மக்கள் மத்தியில் போராட்டத்தை விற்று பிழைப்பு நடார்த்துபவர்களாக இருந்தார்கள். தமிழ் மக்களிடையே நேச…
-
- 3 replies
- 774 views
-
-
கொவிட்-19 தொற்றொழிப்பு நடவடிக்கைகளுக்காக இதுவரை விதிக்கப்பட்டிருந்த விதிமுறைகள் ஓரளவு தளர்த்தப்பட்டுள்ள போதிலும், இந்நோய் இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கப்படவில்லை என்று தெரிவித்த சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க, அதற்கு இன்னும் காலமெடுக்கும் என்றார். அதனால், கொவிட்-19 காலப்பகுதியில் நடைமுறைப் படுத்திய வாழ்க்கை முறையையே தொடர்ந்தும் கடைபிடிக்குமாறு, கொழும்பில் நேற்று (10) நடத்திய ஊடகச் சந்திப்பின்போது, பொதுமக்களை அவர் அறிவுறுத்தினார். நாட்டில் கொவிட்-19 பரவல் அதிகமாகக் காணப்பட்ட போது நாம் எவ்வாறு கவனமாக இருந்தோமோ, அதேபோல் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்க வேண்டுமென்றும் வலியுறுத்திய அவர், அதன் மூலமே, நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடி…
-
- 3 replies
- 585 views
-
-
இலக்குடன் செயற்பட்டால், நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு விரிவானதொரு பங்களிப்பை வழங்கும் இயலுமை பெருந்தோட்டத் துறையிடம் உள்ளதென, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டுவந்து, பொருளாதாரச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பெருந்தோட்டத்துறைக் கட்டியெழுப்புவதற்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பது குறித்து, நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்துரைத்த ஜனாதிபதி, பெருந்தோட்டத் துறையினால் உற்பத்தி செய்யமுடியுமான பல விடயங்கள் அநாவசியமாக இறக்குமதி செய்யப்படுவதாகவும் சுதேச பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் பெருந்த…
-
- 2 replies
- 949 views
-
-
இலங்கையர்கள் அனைவருக்கும் விரைவில் டிஜிட்டல் அடையாள அட்டை by : Jeyachandran Vithushan அனைத்து பிரஜைகளினதும் தனிப்பட்ட தகவல்களை வாழ்நாளில் ஒரே முறை பெற்றுக்கொண்டு வழங்கப்படவுள்ள பயோ-மெட்ரிக் டிஜிட்டல் அடையாள அட்டைகளின் தற்போதைய நிலை பற்றி ஆராயும் கலந்துரையாடல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இந்த புதிய அடையாள அட்டை மூலம் மக்கள் தங்கள் தனிப்பட்ட தரவை இணையம் ஊடாக பார்ப்பதற்கான அனுமதி வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய அடையாள அட்டையில், மிகவும் துல்லியமான தரவுகள் உள்ளடக்கப்படுவதுடன், பல்வேறு சட்டங்களால் நிர்வகிக்கப்படும் திணைக்களங்கள் மற்றும்…
-
- 2 replies
- 676 views
-
-
அரசியல் கைதிகள் விடுதலை, தீர்வு விடயம் தொடர்பாக ஒரு மணி நேரம் பேச்சு…! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்த பேச்சுக்களின் போது, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு குறித்து பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயராம மாவத்தையிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் தமிழ் அரசியல் கைதிகள் குறித்த தகவல்கள் அடங்கிய ஆவணங்களை தான் கையளித்ததாகத் தெரிவித்த சுமந்திரன், அவர்களுடைய விடுதலைக்கு உரிய நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக ஜனாதிபதியின் க…
-
- 1 reply
- 589 views
-
-
சிறுபோக நெற் செய்கையில் நோய்த் தாக்கம் WhatsApp எம்.எஸ்.எம். ஹனீபா அம்பாறை, அக்கரைப்பற்று மேற்கு விவசாய விரிவாக்கல் நிலையப் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் தற்போது 2020 சிறுபோக நெற்செய்கையில் “எரிபந்தம்” எனும் நோய் பரவி வருவதாக, கமநல சேவைகள் மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரியும் விவசாய போதனாசிரியருமான வீ. நாகேந்திரன், இன்று (13) தெரிவித்தார். நெல்லில் ஏற்படும் நோய்களில் எரிபந்தம் மிகவும் கூடிய பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு நோயாகுமென்றும் நெற் தாவரத்தின் எந்தவொரு வளர்ச்சிப் பருவத்திலும் தொற்றக் கூடிய இந்தப் பங்கசு, இலை…
-
- 0 replies
- 637 views
-
-
கொழும்பு பங்குப்பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் ஏழு வார காலமாக மூடப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு மீள ஆரம்பித்த முதல் நிமிடத்திலேயே வியாபார நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டது. 2020 ஏப்ரல் 30 ஆம் திகதி இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட பங்குப்பரிவர்த்தனையின் செயற்பாடுகள் தொடர்பான விதிமுறைகளின் பிரகாரம், S&P SL 20 சுட்டி 196.93 புள்ளிகளால் அல்லது 10.11% இனால் வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து பங்குப்பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் இன்றைய தினத்துக்கு மூடப்பட்டது. இன்றைய கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் புரள்வு பெறுமதி ரூ. 24 மில்லியனாக பதிவாகியிருந்தது. சந்தை செயற்பாடுகள் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்ட போது அபவிசு 179.…
-
- 5 replies
- 1.2k views
-
-
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்தானது சுமந்திரன் அவர்களுடைய அண்மைக்கால கருத்தோ அல்லது இன்றைய கருத்தோ கிடையாது. அவருடைய நிகழ்ச்சி நிரலே இதுதான் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சுகாஸ் மேலும் தெரிவிக்கையில்.... தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய ஆயுதப் போராட்டமும், அதன் வழிமுறையும் பிழையென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கு நேற்றைய தினம் எங்களுடைய கண்டனத்தை தெரிவித்து அவருக்கு அத்தகைய கருத்தை தெரிவிப்பதற்கு அருகதையோ, தகுதியோ கிடையாது என்ற விடையத்தையும் தெரிவி…
-
- 1 reply
- 610 views
-
-
(எம்.நியூட்டன் ) தமிழீழ விடுதலைப் புலிகளை பற்றியும் அவர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்து இல்லை என இலங்கை தமிழர கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். சுமந்திரனின் கருத்து தொடர்பில் மாவை வெளியிட்ட அறிககையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விடுதலைப்புலிகள் பற்றி சுமந்திரன் அளித்த பேட்டியில் சிங்கள மொழியில் வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிராக எம்மிடம் கண்டனங்களும் விமர்சனங்களும் தெரிவிக்கப்படுவதாலும் இந்த அறிக்கையை வெளியிட வேண்டிய தேவையும் நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கமும் ஆயுதப் போராட்டம் தொடர்பில் சுமந்திரன் தெரிவித…
-
- 19 replies
- 1.7k views
-
-
ஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன் Friday, May 08, 2020 www.jaffnamuslim.com 6 கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கட்டணமின்றி ஆஜராகுவதற்கு, பிரபல சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இணக்கம் தெரிவித்ததாக அறிய வருகிறது. http://www.jaffnamuslim.com/2020/05/blog-post_778.html முஸ்லிம்கள் வெட்கப்பட வேண்டும் - என் சமூகத்தை நினைத்து வேதனையும், கவலையும்தான் மிச்சம் …
-
- 71 replies
- 6.3k views
-
-
இலங்கையில் திருமணம் செய்வதற்கு காத்திருப்போருக்கு சுகாதார அமைச்சு சுகாதார பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. அதற்கமைய திருமண தம்பதிகள் மற்றும் உறவினர் ஒருவரை கட்டிப்பிடித்தல், முத்தம் கொடுத்தல் மற்றும் கைகுலுக்கி கொள்வதனை தவிர்த்து வேறு முறையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பிப்பதற்கு முன்னர் திருமண ஏற்பாடுகள் செய்து தடைப்பட்டவர்கள் மீண்டும் திருமணங்களை நடத்த முடியும். எனினும் அழைக்கப்பட்ட விருந்தினர்களின் பாதி பேர் மாத்திரமே மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதார அமைச்சின் பிரதி இயக்குனர் நாயகம் லக்ஷ்மன் கம்லத் தெரிவித்துள்ளார். மண்டபத்திற்குள் வருபவர்கள் முக கவசங்களை அணிய வ…
-
- 10 replies
- 1k views
-
-
சுமந்திரன் விடுதலைப் புலிகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், தம்பி பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எப்படி பாராளுமன்ற உறுப்பினராக அவர் இதுகாறும் இருந்திருக்க முடியும்? தாய் பகை குட்டி உறவு என்ற கதையாகவல்லவா இருக்கின்றது? இவ்வாறான கருத்தை உடையவர் அவர்களால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அரசியல் பிரவேசம் செய்திருக்கக் கூடாது. தனது கருத்துக்களை வெளிப்படையாக கூறி சுயேச்சையாக வாக்குக் கேட்டிருக்கலாம். அல்லது சிங்களக் கட்சிகள் ஊடாக வாக்குக் கேட்டிருக்கலாம். யாழ் தமிழ் மக்களின் தோளில் ஏறி பயணம் செய்து கொண்டு பெரும்பான்மையினரின் அடிவருடி போல் வேஷம் ஆடுவது சகிக்க முடியாது இருக்கின்றது என காட்டமாக தெரிவித்துள்ளார் தமிழ்…
-
- 3 replies
- 580 views
-
-
இலங்கை மாணவர்களுக்கான புலமைப் பரிசில்கள்; இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவிப்பு ஆயுஷ் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் 2020-21 கல்வியாண்டுக்கான ஆயுள்வேதம், யோகா, யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகள் சார்ந்த UG/PG/PhD கற்கைகளுக்கான புலமைப்பரிசில்களை கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இலங்கை உயர் கல்வி அமைச்சின் ஆலோசனையுடன் திறமையான இலங்கை மாணவர்களை இந்த புலமைப்பரிசில் திட்டங்களுக்காக இந்திய அரசாங்கம் தேர்வு செய்கின்றது. இந்தப் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் முழுமையான கல்விக்கட்டணம் மற்றும் கற்கைநெறி காலம் வரையிலுமான மாதாந்த வாழ்க்கைச் செலவு ஆகியவை வழங்கப்படுகின்றன. அத்துடன் தங்குமிடத்திற்கான கொடுப்பனவு மற்றும் வருடாந்த ஒது…
-
- 0 replies
- 355 views
-