Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நயினை நாகபூசனி ஆலய காெடியேற்றம் இனிதே ஆரம்பம்! வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் – நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம் நேற்று (20) பக்திபூர்வமாக இடம்பெற்றது. இதன்போது கருவரையில் வீற்றிருக்கும் நயினை நாகபூசனி அம்மனுக்கும், வசந்தமண்டவத்தில் அருள்பாலித்து கொண்டிருக்கும் விநாயகர் மற்றும் முருகன் வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விசேட அபிசேகங்கள் மற்றும் ஆராதனைகள் என்பன முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து உள்வீதி வலம் கொடிமரத்தினை வந்தடைந்து 12 மணியளவில் சுபநேரத்தில் கொடிமரத்தில் பிரதம சிவாச்சாரரியர் தலைமையிலான சிவாச்சரியார்கள் மஹோற்சவ கொடியினை ஏற்றிவைத்தனர். இந்த மஹோற்வசம் எதிர்வரும் மாதம் மூன்றாம் திகதி இரதோற்சவம் மற்றும் மறு…

  2. இளைஞனை கொன்ற இராணுவத்துக்கு எதிராக வீதி மறியல்! கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று (20) மாலை மணல் ஏற்றச் சென்ற கெற்பேலியை சேர்ந்த இளைஞன் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏ-9 வீதியை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட இளைஞனின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். https://newuthayan.com/இளைஞனை-கொன்ற-இராணுவத்துக/ முகமாலையில் இராணுவத்தால் இளைஞன் சுட்டுக்கொலை! கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று (20) மாலை 6.15 மணியளவில் மணல் ஏற்றிச் சென்ற வாகனம் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிாசூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த…

    • 6 replies
    • 1k views
  3. அவர் சிறிசேன இவர் நந்தசேன இரண்டு சேனாக்களும் ஒன்றே.! ஹிருணிகா நாட்டின் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தான் அன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் கண்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அரச அதிகாரிகளை திட்டுவதால், மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நினைக்கவில்லை. தனது சகோதரரான பிரதமர் மீதுள்ள ஆத்திரத்தையே ஜனாதிபதி, மத்திய வங்கியின் அதிகாரிகளை கடுமையாக குற்றம் சுமத்தி, அந்த அதிகாரிகள் மீது தனது கோபத்தை காட்…

  4. அரச திணைக்கள ஊழல் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம்! மன்னாரில் சில அரச திணைக்களங்கள் ஊழலின் உச்சத்தை அடைந்துள்ளதாக கூறி, தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அவசர கடிதமொன்றை இன்று (20) அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில், ‘மன்னார் மாவட்டத்தில் சில அரச திணைக்கள அதிகாரிகள், பகிரங்கமாக இலஞ்சம் பெறுகின்றார்கள். குறிப்பாக புவிச்சரிதவியல் திணைக்களம், வனவளத் திணைக்களம், பொலிஸார் மற்றும் வேறு சில திணைக்கள அதிகாரிகளும் இதில் அடங்குகின்றனர். மேலும் மணல் அனுமதிப்பத்திரம் வழங்குவதில் பல்வேறு விதமான முறைகேடுகள் இடம்பெறுகின்றன. மணல் அனுமதிப்பத்திரம் பெறுபவர்களிடம் ஒவ்வொரு மாதமும் இலஞ்சம் பெறுகின்றனர்.…

  5. முல்லைத்தீவில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்…! முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது இராணுவத்தினரால் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அந்தவகையில் முல்லைத்தீவு – மாத்தளன், அம்பலவன் பொக்கணை, வலைஞர்மடம், சாலை உள்ளிட்ட கிராமங்கள் இராணுவத்தின் தீவிர கண்காணிப்பில் காணப்படுகின்றன. குறிப்பாக மாத்தளன் சந்தியில் இணைகின்ற இரணைப்பாலை வீதி, பொக்கணை வீதி, மாந்தளன், மற்றும் சாலை ஆகிய கிராமங்களுக்கான வீதி ஆகிய மூன்று வீதிகளிலும் இராணுவத்தால் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு இராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை இரட்டை வாய்க்காலி…

  6. வவுணதீவு பொலிஸாரின் கொலையின் மர்மம் துலக்கப்பட்டது ; சீயோன் தேவாலய தாக்குதல் விசாரணையின் போதே அம்பலம் (எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தின தொடர் குண்டுத் தாக்குதல்களில், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் குறித்த விசாரணையின் போது கையேற்ற சந்தேக நபர்களை விசாரித்த போதே, வவுணதீவு பொலிஸ் காவலரணில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் மர்மம் துலக்கப்பட்டதாக சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் சமன் வீரசிங்க தெரிவித்தார். இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களை கொலை செய்துவிட்டு கொள்ளையடிக்கப்பட்ட ரிவோல்வர்க…

    • 1 reply
    • 597 views
  7. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆதரவு யாருக்கு? வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிவிப்பு Post Views: 55 June 20, 2020 எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரையும் எதிர்த்தோ அல்லது ஆதரித்தோ யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை எதனையும் வெளியிடவில்லை என்று அதன் செயலாளர் தெரிவித்துள்ளார். நேற்றுக்காலை முதல் பல்கலைக்கழக வளாகத்தினுள் காணப்பட்டவை எனக்கூறப்படும் சில அநாமதேய துண்டுப்பிரசுரங்கள் தொடர்பில், மாணவர் ஒன்றியத்துடன் தொடர்புபடுத்தி சமூக வலைத் தளங்களில் பரவிய செய்தி தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் எம். பாலேந்திரா இவ்வாறு தெரிவித்துள்ளார். பொத…

  8. நூருள் ஹுதா உமர். முன்னாள் பிரதியமைச்சரும், திகாமடுள்ள மாவட்ட வேட்பாளருமான வி. முரளிதரன் (கருணா அம்மான்) என்னுடைய அரசியல் இருப்பை இல்லாதொழிக்க வேண்டும் என்பதையும் தாண்டி என்னுடைய உயிருக்கும் இலக்கு வைத்துள்ளார். அது தொடர்பில் அரச புலனாய்வு பிரிவின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக விசாரணைகள் நடைபெற்று வருகிறது. விசாரணைகள் முடிவுற்றதும் முழு விபரங்களையும் பகிரங்கப்பட்டுவேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். இன்று(20) காலை நடைபெற்ற பொத்துவில் விவகாரம் குறித்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். …

    • 1 reply
    • 526 views
  9. 71 இராணுவ அதிகாரிகளுக்கு பதவியுர்வு இராணுவத்தைச் சேர்ந்த 71 பேருக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இராணுவத்தின் கேணல் பதவியில் இருந்த 41 அதிகாரிகள், பிரிகேடியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். அதேபோன்று, லெப்டினன் கேணல் பதவியில் இருந்த 30 பேர், கேணல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். ஜூன் மாதம் 15ம் திகதி முதல் குறித்த பதவியுயர்வு அமுலுக்கு வந்துள்ளது. https://newuthayan.com/71-இராணுவ-அதிகாரிகளுக்கு/

  10. தரையாக மாறிய கடலில் இலங்கையில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய பூங்கா! இலங்கையில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய பூங்காவை அடுத்த மாதம் மக்கள் பாவனைக்காக திறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. காலி முகத்திடல் போன்று மூன்று மடங்கு பெரிய பூங்காவை எதிர்வரும் ஓரிரு மாதங்களில் மக்கள் பாவனைக்கு திறக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்படும் இந்த பூங்கா 35 ஏக்கர் சதுர கிலோ மீற்றர் அளவில் நிர்மாணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வடிக்கால் மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பலவிதமான அபூர்வ தாவரங்கள் இங்கு நடப்பட்டுள்ள நிலையில் சிறுவர்களுடன் ஓய்வு பெற கூடிய வகையிலும் ஈர…

  11. நாவாந்துறையில் 520 கிலோ இறைச்சி மீட்பு; இருவர் கைது! யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் இன்று (20) காலை அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 520 கிலோகிராம் மாட்டிறைச்சி மீட்கப்பட்டதோடு இறைச்சிக்காக வெட்டுவதற்கு தயாராக கட்டி வைத்திருந்த மூன்று மாடுகளும் இரண்டு ஆடுகளும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் சட்டவிரோதமாக கால்நடைகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதாக அப்பகுதி பொதுமக்களால் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இத்தகவலின் அடிப்படையில் இன்று காலை அங்கு மாநகர சபை ஊழியர்களுடன் சென்ற பொது சுகாதார பரிசோதர்கள் அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து இறைச்சி வெட்டப்பட…

  12. தாக்குதலுக்கு சென்ற ஏழுபேர் கைது! யாழ்ப்பாணம் – நல்லூரில் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தச் சென்றனர் என்ற குற்றச்சாட்டில் 7 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இளைஞர் ஒருவரைத் தாக்குவதற்காக 7 பேர் கொண்ட குழு இளைஞரது வீடு தேடி மோட்டார் சைக்கிள்களில் நேற்று பிற்பகல் சென்றது. இதனை அறிந்த இளைஞனின் மூத்த சகோதரன், குறித்த குழுவை விரட்டிச் சென்ற போது, மோட்டார் சைக்கிள் ஒன்று நிலை குலைந்து வீதியில் விபத்துக்கு உள்ளாகியதால் இரண்டு பேர் சிக்கினர். குறித்த இளைஞர்கள் இருவரையும் தாக்கிய பின் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினர் அவர்கள் இருவரையும் சிறப்பு அதிரடிப் படையினரிடம் ஒப்படைத்தனர். இளைஞர்கள் இருவரிடம் முன்னெடுக…

  13. 115,000 கோடியை கடனுக்காக வழங்குவதால் ரூபாவின் பெறுமதி குறையும் ஆபத்து மிகவும் மோசமான முறையில் வீழ்ச்சி அடைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் உறங்குவதாக நாட்டின் உயர்மட்ட வங்கியின் அதிகாரிகளை ஜனாதிபதி கடுமையாக குற்றசாட்டிய தினத்தன்றே இலங்கை மத்திய வங்கியினால் 115,000 கோடியை விடுவிக்கும் முடிவானது ரூபாவின் மதிப்பிழப்பு உள்ளிட்ட பேரழிவான விளைவுகளை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். வணிக வங்கிகளால் மத்திய வங்கியில் கட்டாயம் வைப்புச் செய்ய வேண்டிய நிதியின் அளவை நான்கு வீதத்தில் இருந்து இரண்டு வீதமாக சட்டரீதியான இருப்பு விகிதத்தை (SRR) குறைப்பதன் மூலம் கடன் வழங்க வசதியாக 115 பில்லியன் ரூபாவை விடு…

  14. வரணி சிட்டிவேரம் கண்ணகி அம்மன் ஆலய இரதோற்சவம் தென்மராட்சி – வரணி சிட்டிவேரம் கண்ணகி அம்மன் ஆலய இரதோற்சவம் இன்று (20) காலை 6 மணிக்கு வெகு விமர்சையாக இடம்பெற்றது. கொரோனா நிலைமை காரணமாக சுகாதார நடைமுறகைள் பின்பற்றப்பட்டு குறித்த இரதோற்சவம் நடைபெற்றது. இதன்போது குறிப்பிட்டளவிலான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர். அத்துடன் சுகாதார நடைமுறைகளை கண்காணிக்க சுகாதார அதிகாரிகளும் இரதோற்சவத்தில் பிரசன்னமாகியிருந்தனர். https://newuthayan.com/வரணி-சிட்டிவேரம்-கண்ணகி/

  15. யாழ்.ஊடக மன்றம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. June 19, 2020 யாழ்ப்பாண ஊடகவியலாளர்களால் யாழ்.ஊடக மன்றம் எனும் அமைப்பு இன்றைய தினம்(19.06.2020) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. டில்கோ தனியார் விடுதியில் இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் ஊடக மன்றத்திற்கான இலட்சினையை மதத் தலைவர்கள் ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து நாடாவை வெட்டி அங்குரார்பணம் செய்து வைத்தனர். நிகழ்விலே சர்வமதத்தலைவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசியல் துறை பேராசிரியர் கணேசலிங்கம், யாழ் பல்கலைக்கழக கிறிஸ்தவ துறை விரிவுரையாளர் அருட்தந்தை இ.இரவிச்சந்திரன் அடிகளார் ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் தமிழ்பேசும் மக்களின் நோக்கு நிலையில் இருந்து எதிர்வரும்…

  16. அரச புலனாய்வு உத்தியோகத்தர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை June 19, 2020 அரச புலனாய்வு உத்தியோகத்தர் கடமை அறையில் துப்பாக்கியால் சுட்டு மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை(19) மாலை 7 மணியளவில் அம்பாறை – கல்முனைகாவல் நிலையத்தில் உள்ள அரச புலனாய்வு பிரிவில் இடம்பெற்றுள்ளது. இத் துப்பாக்கி சூட்டில் மரணமானவர் யாழ்ப்பாணம் நெல்லியடியை சேர்ந்த கமல்ராஜ் (21) என்ற அரச புலனாய்வு உத்தியோகத்தராவார். கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள தேசிய புலனாய்வு பிரிவு காரியாலயத்தில் கடமையாற்றிவரும் குறித்த உத்தியோகத்தர் சம்பவதினமான இன்று மாலை 6.30 மணியளவில் காரியாலயத்தில் தனிமையில் இருந்துள்ள நிலையில் பாதுகாப்புக்காக வைத்திருந்து (…

  17. தேர்தலை தமிழ் மக்கள் தமது கருவியாக பயன்படுத்த வேண்டும் – உருத்திரகுமாரன் இலங்கையில் நடைபெறுகின்ற தேர்தல்களினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை. எனினும் அத்தேர்தல்களை தமிழர்கள் தமது ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். சமூகவலைத்தளத்தின் ஊடாக இடம்பெற்ற இணையவழி மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘தேர்தல் தொடர்பாக கொள்கை முடிவுகளே, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடந்த பத்து ஆண்டுகளாக எடுத்து வருகின்றது. அந்தவகையில் எம்மைப் பொறுத்தவரை தேர்தல் மூலம் தமிழ்மக்களுக்கு விடிவு கிடைக்கப்போவதில்லை. மேல…

    • 1 reply
    • 423 views
  18. மணல்காடு மணல் அகழ்வு விவகாரம்; ஒப்பந்தம் மூலம் தீர்த்து வைப்பு! யாழ்ப்பாணம் – வடமராட்சி, கிழக்கு பகுதியில் ஏற்பட்ட மணல் விநியோக முரண்பாடு பருத்தித்துறை பொலிஸார், அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரச அதிகாரிகளின் தலையீட்டால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தமது பகுதி வாகனங்களை மணல் விநியோகத்திற்கு இணைத்துக் கொள்ளவில்லை என்பதால் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதி மக்கள் மணல் விநியோக மறியல் போராட்டத்தில் நேற்று (17) முன்தினம் ஈடுபட்டிருந்தனர். அன்றைய தினம் சம்பவ இடத்திற்கு வருகை தந்த முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன், பிரதேச செயலாளருடன் ஏற்படுத்திக்கொண்ட உரையாடலின் அடிப்படையில் இரண்டு நாட்களுக்குள் உரிய தீர்வை தருவதாக தெரிவித்திருந்தால், அன்…

  19. ஒரே இரவில் தாம் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரையிலான இராணுவ வீரர்களை கொன்றொழித்துள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். ஆனையிறவு பகுதியில் வைத்து ஒரே இரவில் இவ்வாறு இராணுவப் படைவீரர்களை கொன்றொழித்ததாகத் தெரிவித்துள்ளார். தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு வருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கையை தாம் நிராகரித்து விட்டதாகத் தெரிவித்துள்ளார். கருணா அம்மான் கொரோனா வைரஸ் தொற்றை விடவும் அபாயமானவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசியப் பட்டியல் ஊடாக தெரிவாவதனை விடவும் தாம் மக்களின் ஆணையின் அடிப்படையில் நாடாளுமன்றம் செல்லவே விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் தேர்தல் பிரச்சாரக்…

  20. நாளை கொடியேற்றம் காண்கிறாள் நயினை நாகபூஷணி வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்தப் பெருந் திருவிழா நாளை ( 20) நண்பகல்- 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. தொடர்ச்சியாக 16 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும் 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தேர்த் திருவிழாவும், மறுநாள் சனிக்கிழமை (04) தீர்த்தோற்சவமும் இடம்பெறும். தற்போது நாட்டிலும், உலகம் முழுவதும் தலைதூக்கியுள்ள கொரோனாத் தொற்று நோய் காரணமாக அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இவ்வாறான சூழ்நிலை காரணமாக நயினாதீவைச் சேர்ந்த 30 அடியவர்கள் மாத்திரமே மஹோற்சவ தினங்களில் கலந்து கொள்ள அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். …

  21. பலம்மிக்க ஐதேகவின் பிளவு கவலையே – தயாசிறி குமுறல் பலமான ஐக்கிய தேசியக்கட்சி பிளவுபட்டது கவலை அளிக்கிறது. ஏதற்கான பொறுப்பை சஜித் பிரேமதாச ஏற்கவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் இன்று (19) ஹட்டனில் திறந்து வைக்கப்பட்ட போது இதனை தெரிவித்தார். மேலும், ‘நுவரெலியா மாவட்டத்திலும் இணைந்து பயணித்திருக்கலாம். ஆனால், பொதுஜன பெரமுனவால் இந்த மாவட்டத்தில் எமக்கு அநீதி இழைக்கப்பட்டது. இதன்காரணமாகவே தனித்து போட்டியிடுகின்றோம். ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. இதனால் இரு அணிகளுமே பொதுத்தேர்தலில் படுதோல்வியடையும் என்பது உறுதி. பலம்ம…

  22. ஸ்ரீலங்காவின் பூதாகர சக்தியாக வளர்ச்சியடைந்த கோட்டாபய! சூடு பிடிக்கும் அரசியல் களம் ஸ்ரீலங்காவின் பூதாகர இனவாத சக்தியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வளர்ச்சியடைந்துள்ள காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கிறோம் என ரெலோ கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பா. கஜதீபன் தெரிவித்திருக்கிறார். ஐபிசி ஊடகத்தின் நிலவரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்கள். இது தொடர்பில் நமது ஊடகத்திற்கு அவர் வழங்கிய விசேட நேர்காணலில் தெரிவித்ததாவது, https://www.ibctamil.com/srilanka/80/145469?ref=imp-news

  23. முதலீட்டாளர்களைக் கவர்வதற்கு 3 முக்கிய விடயங்கள் நாட்டில் இருக்க வேண்டும்- மங்கள சுட்டிக்காட்டு by : Litharsan ஜனாதிபதி கூறுவது போன்று முதலீட்டாளர்களை கவர்வதற்கு முதலில் நாட்டில் ஜனநாயகம், சுதந்திரமான நீதித்துறை மற்றும் சட்டத்திற்கு அமைவாக இயங்கக்கூடிய சூழ்நிலை என்பன காணப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டின் பொருளாதார சீர்குலைவிற்கு கடந்த 7 மாதங்களாக இடம்பெற்ற முறையற்ற நிர்வாகமே காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், அதற்கு மத்திய வங்கி ஊழியர்களும், கொவிட்-19 தொற்றும் காரணமல்ல என்று குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த புதன்கிழமை மத்திய…

    • 0 replies
    • 370 views
  24. கூட்டமைப்பில் இருக்கும் சிலர் கட்சியை பலவீனப்படுத்துகின்றர்! – செல்வம் குற்றச்சாட்டு by : Vithushagan தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருந்து கொண்டு ஒரு சிலர் கூட்டமைப்பை பலவீனப்படுத்துகின்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார். எனவே மக்களாகிய நீங்கள் யாரை தெரிவு செய்ய வேண்டும்? யாரை தெரிவு செய்யக் கூடாது என்கின்ற தீர்மானத்தை எடுப்பது உங்கள் கைகளில் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தா…

    • 1 reply
    • 458 views
  25. ரிசாட் பதியுதீன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை by : Yuganthini முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காகவே ரிசாட் பதியுதீன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை மத்தியவங்கி பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் முன்ன…

    • 0 replies
    • 376 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.