Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. குவைட் செல்லவுள்ள பயணிகளுக்கான முக்கிய அறிவித்தல்! இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து குவைட் நாட்டிற்கு செல்லும் பயணிகளிடம் இருந்து புதிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட வைத்திய சான்றிதழ் ஒன்று சமர்ப்பிக்கப்படுதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு மேலதிகமாக இந்தியா, பங்களாதேஷ், பிலிபைன்ஸ், எகிப்து, சிரியா, லெபனான், துருக்கி, அஜர்பைஜான் மற்றும் ஜோர்ஜியா ஆகிய நாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு எதிர்வரும் 8 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வருவதாக குவைட் சிவில் விமான சேவை அதிகார சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, குவைட் நாட்டிற்கு செல…

    • 0 replies
    • 244 views
  2. இலங்கை, அமெரிக்க கடற்படை கூட்டு பயிற்சி பரிமாற்று நிகழ்ச்சி ஆரம்பம் இலங்கை கடற்படை மற்றும் அமெரிக்க கடற்படை இணைந்து மேற்கொள்ளும் கூட்டு பயிற்சி பரிமாற்று நிகழ்ச்சி 2020/1 (Joint Combined Exchange Training 2020/1) 2020 மார்ச் 02 ஆம் திகதி திருகோணமலை சிறப்பு படகு படைத் தலைமையகத்தில் தொடங்கியது. இப் பயிற்சியின் தொடக்க விழாவின் பிரதம அதிதியாக 4வது துரித தாக்குதல் ரோந்து படகு படையின் கட்டளை அதிகாரி கேப்டன் தம்மிக விஜேவர்தன கலந்துகொண்டுள்ளதுடன் இந் நிகழ்வுக்காக கடற்படை அதிகாரிகள், வீரர்கள் மற்றும் அமெரிக்க இராணுவ சிறப்புப் படைகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். மேலும் 4 வது விரைவு தாக்குதல் படகுகள் குழுவின் மற்றும் சிறப்பு படகுப் படை…

    • 0 replies
    • 184 views
  3. இமானுவேல் அடிகளார் தமிழ் மக்களுக்கு அறிவுரை. நாடாளுமன்றத் தேர்தலில்இ தமிழ் மக்கள் தமது இருப்பினை தக்கவைத்துக் கொள்வதற்கு தமது வாக்கு பலத்தினை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார் . யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்- ' நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழ் மக்கள் அனைவரும் கட்டாயமாக தமது வாக்குப் பலத்தை நிரூபிக்க வேண்டும். அனைவரும் வாக்களிப்பை மேற்கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் சரியானவர்களைத் தெரிவு செய்வதன் மூலமே, தமிழர்களின் இருப்பினை நிரூபிக்க முடியும். தற்பொழுது நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரத்தில் பல கட்சிகள் முளை…

  4. பூநகரியைச் சேர்ந்த நால்வர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது… March 3, 2020 உள்நாட்டுத் தயாரிப்பு குண்டுகளுக்கு பயன்படுத்தும் வெடிமருந்தை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் பூநகரியைச் சேர்ந்த நால்வர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை, வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு அண்மையாக வைத்து அவர்கள் நால்வரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நால்வரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். “இரகசியத் தகவலின் அடிப்படையில் இராணுவத்தினரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரும் முன்னெடுத்த தேடுதலில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிர…

  5. (ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடர் நேற்றைய தினம் ஜெனி வாவில் ஆரம்பமாகிய நிலையில், முதலாவது அமர்வில் உரையாற்றிய ஐ.நா. செயலாளர் அன்டோனியோ குடரஸ் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஆகியோர் இலங்கை தொடர்பாக எதுவும் பிரஸ்தாபிக்கவில்லை. உலகளாவிய ரீதியிலான மனித உரிமைகள் விவகா ரம் மற்றும் காலநிலைமாற்ற சவால் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அன்டோனியோ குட்றஸ்ஸும் மிச்செல் பச்லெட்டும் தமது உரைகளில் கூடிய கவனம் செலுத்தியிருந்தனரே தவிர தனிப்பட்ட நாடுகள் தொடர்பில் அதிகளவு விடயங்களை முன்வைக்கவில்லை. நேற்றைய ஆரம்ப அமர்வில் இரண்டாவதாக உரையாற்றிய ஐ.நா. செயலர் அன்டோனியோ குட்றஸ், மனித கடத்தல்கள் அனைத்…

    • 12 replies
    • 1.5k views
  6. இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை கைது செய்ய வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். http://www.hirunews.lk/tamil/235728/ஐ-தே-கட்சியின்-தலைவர்-கைது-செய்யப்பட-வேண்டும்-வாசுதேவ-நாணயக்கார

    • 1 reply
    • 236 views
  7. கோட்டா ஜனாதிபதியாக இல்லாத சமயத்தில் வழக்கு தொடரலாம் – அமெரிக்க நீதிமன்றம்! ஜனாதிபதியாக பதவி வகிக்காத சமயத்தில் ஜனாபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்கு தொடர முடியுமென லசந்த விக்ரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்ரமதுங்கவிற்கு அமெரிக்க நீதிமன்றம் அறிவித்துள்ளது. அமெரிக்க நீதிமன்றம் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்குத்தொடர முடியாது என தெரிவித்த தீர்ப்புக்கெதிராக அமெரிக்க மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் அஹிம்சா விக்ரமதுங்க தொடர்ந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் அஹிம்சா விக்ரமதுங்க சார்பில் இவ் வழக்கு தொடர்பாக நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான மையம் வாதிட்டது. இத் தீர்ப்பு தொடர்பாக கரு…

    • 2 replies
    • 482 views
  8. re0 சஜித் பிரேமதாச தரப்பினர் எவ்வாறான பலத்துடன் பொதுத் தேர்தலில் களமிறங்கினாலும், பொதுஜன பெரனமுனவின் வெற்றியை எவராலும் தடுக்க முடியாது என முன்னாள் கிரிக்கெட் வீரரும் பெரமுன உறுப்பினருமான திலகரத்ன டில்ஷான் தெரிவித்தார். காலியில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு பலமான தலைமையொன்று உள்ளது. இதனால், பொதுத் தேர்தலில் எமக்கான வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. எமக்கு எதிரான தரப்பினர் இன்னும் சின்னத்தைக்கூட முடிவு செய்யவில்லை. இவ்வாறானவர்கள் நாட்டை எவ்வாறு கட்டியெழுப்பப் போகிறார்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். ஜனாதிபதி கோத…

    • 1 reply
    • 557 views
  9. சஜித் தலைமையிலான கூட்டணி ஆளும் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும்: சென்னையில் ரவூப் ஹக்கீம். ஜனாதிபதி வேட்பாளராக களம் கண்ட சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் தொடர்ந்து நாங்கள் களம் காண்கின்றோம். இக்கூட்டணி ஆளும் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று (02) இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டபோது, சென்னை விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர் ஆசாத், ம…

  10. கொரோனா தொற்று அச்சுறுத்தல் – பயணிகள் கப்பல்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக கப்பலின் மூலம் நாட்டிற்குள் வரவுள்ள பயணிகளை இடைநிறுத்தம் செய்வதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக கொழும்பு துறைமுகத்திற்கு இதுபோன்ற பல பயணிகள் கப்பல் நாட்டிற்குள் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனினும் தற்பொழுது தெற்காசிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருவதால் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரா…

  11. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு காலவகாசம் நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பை வழங்கிமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுக்கள் குறித்து எதிர்ப்பு தெரிவிப்பதாயின், அடுத்த மூன்று வாரங்களுக்கு முன்னர் அதனை தெரிவிக்குமாறு குறிப்பிட்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதியரசர்கள் எல்.டி.பீ.தெஹிதெனிய, பிரீதிஉத்மன் சூரசேன மற்றும் எஸ்.துரைராஜா ஆகியோர் இந்த உத்தரவை நேற்று (திங்கட்கிழமை) பிறப்பித்தனர். ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கிமைக்கு எதிர்ப்பு தெ…

    • 2 replies
    • 771 views
  12. 600 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல் சர்வதேச கடற்பரப்பில் பாதுகாப்புப் பிரிவினால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 600 கோடி ரூபாயை விட அதிகமாகும் என கடற்படை தெரிவித்துள்ளது. தென் கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது, போதைப்பொருட்களுடன் 2 படகுகள் கைப்பற்றப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர், லெப்டினன் கமாண்டர் இசுறு சூரியபண்டார குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் கடற்படையினர் தெரிவிக்கையில், “பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஒரு சிறப்பு நடவடிக்கைக்காக இலங்கை கடற்படை தன…

    • 2 replies
    • 722 views
  13. வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற திருட்டு சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரால் இரு யுவதிகளை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இவ் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸில் மேற்கொள்ளப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கமைய வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி பிரனீத் திஸாநாயக்க தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளின் அடிப்படையில் இன்று மாலை வவுனியாவில் அடைவு வைக்கும் இடத்தில் அடைவு வைப்பதற்காக நகைகளுடன் சென்ற 23, 26 வயதுடைய இரு யுவதிகளை காப்பு, கைச்சங்கிலி, மோதிரம் என்பவற்றோடு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் வவுனியா பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டு…

    • 0 replies
    • 407 views
  14. Share0 முல்லைத்தீவு உடையார்கட்டு நஞ்சுண்டான்குள காட்டுப் பகுதியில் பாரிய மரக் கடத்தல் ஒன்று வனவளத் திணைக்களத்தினரால் முறியடிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மரங்களை கடத்தி உழவு இயந்திரத்தில் கொண்டு செல்ல முற்பட்ட போது வனவள திணைக்கள அதிகாரிகள் சுற்றிவளைத்து அவர்களை கைது செய்தனர். எனினும் இதன்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மூவர் தப்பியோடியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் ஆறு இலட்சம் ரூபா பெறுமதியிலான முதிரை மரதுண்டங்கள், பலகைகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட உழவியந்திரம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. மிக நீண்ட நாட்களாக வனப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த சட்டவிரோத மர…

  15. எப்.எம்,பஸீர் முன்னாள் நிதி அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவத்தின் முன்னாள் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் உட்பட 12 சந்தேக நபர்கள் தொடர்பில் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்து, சந்தேக நபர்களாக அவர்களை பெயரிட்டு, பிடியாணையினைப் பெற்றுக்கொண்டு கைது செய்து மன்றில் ஆஜர் செய்யுமாறு சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு இன்று ஆலோசனை வழனக்கியுள்ளார் 2016 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி மற்றும் மார்ச் 31 ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறிகள் ஏலத்தின் போது நிகழ்ந்ததாக கூறப்படும் க…

    • 1 reply
    • 261 views
  16. பிரதேச மக்கள், பிரதேச சபை எதிர்ப்பு தென்மராட்சி-சரசாலை குருவிக்காட்டு பகுதியில் 896 ஹெக்டேயர் காட்டு பகுதி மற்றும் விவசாய நிலங்களை வனவளத் திணைக்களத்தினர் அபகரிக்க முயற்சி எடுத்திருப்பதாக சாவகச்சேரி பிரதேச சபையினர் மற்றும் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். சரசாலைப் பகுதியில் உள்ள அரச காணிகள், தனியாரின் விவசாய நிலங்கள், மயானம், மேச்சல் தரவைகள், மீன்பிடி குளங்கள் மற்றும் மக்களுக்கான பொழுதுபோக்கு சவாரித் திடல் ஆகியவற்றை உள்ளடக்கி வனவளத் திணைக்களம் எல்லைப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளது. எல்லைப்படுத்தல் தொடர்பாக சாவகச்சேரி பிரதேச சபைக்கோ அல்லது பிரதேச செயலகத்திற்கோ தெரியாமல் இரகசியமான முறையில் ஓரிரு தினங்களுக்கு முன்னராக மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. …

  17. எச்.எம்.எம்.பர்ஸான் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஓட்டமாவடி கல்விக் கோட்டப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற தமிழ் மொழி தினப் போட்டியில் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் முதலிடம் பெற்றுள்ளதாக, பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தெரிவித்தார். குறித்த போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றி தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், மாணவிகளை தயார்படுத்திய ஆசிரியர்களுக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன் என்று அதிபர் மேலும் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/தமிழ்-மொழி-தினப்-போட்டியில்-முதலிடம்/73-246336

    • 0 replies
    • 470 views
  18. -செ.கீதாஞ்சன் ‘நாடாளுமன்ற தேர்தலில், வடக்கு - கிழக்கு இணைந்த தாயக பகுதியில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெரும்பான்மை வெற்றிக்காக ஜனநாயக போராளிகள் கட்சி உழைக்கும்” என்று, கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார். புதுக்குடியிருப்பு – கைவேலி பகுதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், கடந்த காலங்களில், ஐ.நா சபையில் கொண்டுவரப்பட்ட இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானங்கள் ஒரு வலுவான தீர்மானங்களாக அமைந்திருந்தால், இன்று இந்த முடிவை இலங்கை அரசாங்கம் எடுத்திருக்காதென்றார். இப்போது எடுத்த இறுக்கமான முடிவு, கடந்த காலங்களில் எடுக்கப்பட்டிருக்க வேண்ட…

    • 0 replies
    • 299 views
  19. தற்போதைய இலங்கையின் ஜனாபதியாக பதவி வகிக்கும் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அவர் ஜனாதிபதியாக பதவி வகிக்காத சமயத்தில் பின்னர் அவருக்கெதிராக வழக்கு தொடர முடியுமென லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் லசந்த விக்கிரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்கிரமதுங்கவிற்கு அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமெரிக்க நீதிமன்றம் கோத்தாபயவிற்கு எதிராக வழக்குத்தொடர முடியாது என தெரிவித்த தீர்ப்புக்கெதிராக அமெரிக்க மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் அஹிம்சா விக்கிரமதுங்க தொடர்ந்த வழக்கு தொடர்பில் அமெரிக்க மேல் முறையீட்டு நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது. அமெரிக்க மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் அஹிம்சா விக்கிரமதுங்க சார்பில் இவ் வழக்கு தொடர்பாக நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான மையம்…

    • 0 replies
    • 177 views
  20. சுமந்திரனும் ஓர் உறுப்பினர் அவருக்கு முடிவெடுக்க கூடிய அளவு அதிகாரம் இல்லை -ஈ.சரவணபவன் சுமந்திரன் தொடர்பில் வெளித்தோற்றம் ஒன்று உள்ளது. சுமந்திரனிடம் போனால் தான் தமிழரசு கட்சியில் காரியம் ஆகும் என்ற தோற்றப்பாடு உள்ளது.ஆனால் அது அப்படியல்ல. சுமந்திரனும் ஓர் உறுப்பினர். அவரால் முடிவெடுக்க கூடிய அளவு இல்லை. அவரது கருத்துக்கள் உள்வாங்கப்படுகின்றமை உண்மை. அவரால் பல விடயங்களை செய்யலாம். ஆனால் கட்சி என்பது கட்டுக்கோப்புடன் பல பேர் சேர்ந்து நிகழ்ச்சி திட்டங்களை செய்கின்ற நிலையே உண்டு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். சிறு வலியேனும் அனுபவிக்காத சுரேன் ராகவன், விக்னேஸ்வரன் போன்றோர்கள் தான் களத்தில் சந்தர்ப்பத்தை பாவிக்கின்றனர்.எமக்கு சுரேன்…

  21. நுண்நிதிக் கடன் அழுத்தத்தில் இருந்து வட மாகாண மக்களை மீட்க பிரதமர் நடவடிக்கை நுண்நிதி நிறுவனங்களின் அதிக வட்டி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை அதிலிருந்து விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கமைவாக வழங்கப்படும் குறைந்த வட்டியிலான கடன் தொகையை 40 ஆயிரம் ரூபாவிலிருந்து 60 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். விசேடமாக வடக்கு மற்றும் வடமத்திய மாகாண மக்கள் எதிர்கொண்டுள்ள இந்த அழுத்தத்தில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காக கூட்டுறவு கிராமிய வங்கிகள் மற்றும் சிக்கன கடன் சங்கங்கள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்படும் இந்த குறைந்த வட்டியிலான …

    • 1 reply
    • 333 views
  22. விக்னேஸ்வரனிற்கு எதிராக பேச பயந்தார்கள், அவரை எதிர்க்க துணிந்தார்கள் என கேசவன் சயந்தன் குறிப்பிட்டுள்ளார். ஆனால், விக்னேஸ்வரனின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கையளிக்க துணிச்சலில்லாமல் எனது கையில் திணித்தார்கள். மாகாணசபையிலிருந்தவர்களே அவரை எதிர்க்க பயந்தார்கள். இது மாதிரி அவர்கள் பேசினால், இன்னும் பல விடயங்களை பேச வேண்டி வரும் என குறிப்பிட்டுள்ளார் வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம். நேற்று முன்தினம் (1) வடமராட்சி மாலுசந்தியில் நடந்த தமிழ் அரசு கட்சியின் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றியபோதே இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முதலிலே நேற்றைய தினம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற கருத்து அடிப்படையில், சில கருத்துக்களை கூறலாம் என நான் நினைக்…

  23. தேசிய செயற்பாட்டு பாதுகாப்பு குழு கூட்டத்தில் பல தீர்மானங்கள் கொரோனா வைரஸ் தொடர்பில் தேசிய செயற்பாட்டு பாதுகாப்பு குழு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் இன்று (03) முற்பகல் சுகாதார அமைச்சில் கூடியது. பின்னர் இதன்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அறிவிப்பதற்காக விசேட ஊடக சந்திப்பொன்று சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது. இதில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார். " சீன அரசாங்கம் இந்த வைரஸை தடுப்பதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதும் தற்போது சுமார் 262 நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளதால் ஐக்கிய நாடுகள் சபை போன்று சர்வதேச சுகாதார அமைப்பு ஆகியன இதனை…

    • 0 replies
    • 373 views
  24. இலங்கை பெண்ணிற்கு கொரோனா உறுதியானது! உலகினை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை பெண்ணொருவர் இத்தாலியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த பெண், இத்தாலியில் வசிப்பவர் என்றும் இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகம் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு வைரஸினால் பாதிக்கப்பட்டவர் லோம்பார்டியில் உள்ள ப்ரெசியாவில் வசிக்கும் 46 வயதுடைய பெண் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது. இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக இலங்கையில் 18பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் உள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் முகமூடி அணிய வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. எனினு…

    • 1 reply
    • 458 views
  25. மன்னாரில் இராணுவத்தினரால் வெடி பொருட்கள் மீட்பு மன்னாரில் இரண்டு இடங்களில் இருந்து இராணுவத்தினரால் வெடி பொருட்கள் மற்றும் வெடி மருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் சௌத்பார் கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கிலோகிராம் வெடி மருந்து மற்றும் அதற்கு பயன்படுத்தும் 27 குச்சுகளும் நேற்று (2) மாலை இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர் குறித்த பகுதியில் மேற்கொண்ட சோதனை நவடிக்கைகளின் போது குறித்த வெடி மருந்து மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. …

    • 0 replies
    • 345 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.