Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எம்.சி.சி ஒப்பந்தத்தை இன்று கைசாத்திட்டாலும் தான் மகிழ்ச்சியடைவேன் எனத் தெரிவிக்கும் முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, அந்த ஒப்பந்தத்தால் ஒரு மாத்திரை அளவுக்கூட இலங்கையின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பு ஏற்படாதெனவும் தெரிவித்தார். மாத்தறையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ இந்தியாவில் கடன் சலுகை கோரியதால் வேறு எந்த நாடும் இலங்கைக்கு சிறிய வட்டிக்கு கடன் தர முன்வராத நிலைமை காணப்படுவதாகவும், இதுவரை இலங்கையிலுள்ள எந்தவொரு நிதி அமைச்சரும் வெ ளிநாடுகளிடம் அவ்வாறதொரு கோரிக்கையை முன்வைக்கவில்லை என்றும் தெரிவித்தார். அதேபோல் மறுதிசையில், அரச ஊழியர்கள் சம்பளத்தை 10…

  2. புத்திசாலித்தனமாகச் செயற்படுவதன் மூலமும் வைத்தியர்களின் ஆலோசனைகளை முறையாகப் பின்பற்றுவதன் மூலமும், நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பத்துடன் கூடிய வானிலையால் ஏற்படக்கூடிய ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பு பெறலாமென்று, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதிக வெப்பத்துடன் கூடிய வானிலை தொடர்பில், சுகாதார அமைச்சின் நல்வாழ்வுத்துறைத் திணைக்களம், விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சுற்றுச்சூழல் வெப்பநிலையானது, சாதாரண நிலைமையை விட, இந்நாள்களில் அதிகளவில் காணப்படுகின்றது. இந்த அதிக வெப்பநிலை காரணமாகவும் அதனால் மனித உடலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும், பொதுமக்கள் அவதானமான இருக்கவேண்டும். அதிக ஆபத்துள்ள பிரிவுகள்: சாதாரணமாக, உட…

  3. (ஆர்.விதுஷா) நாட்டில் இராணுவ ஆட்சியினை ஏற்படுத்தும் நோக்கிலேயே அரசாங்கம் செயற்படுகின்றது எனத் தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, சேவை தொடர்பில்; பாதுகாப்பு தரப்பினருக்கிடையில் முரண்பாட்டினைத் தோற்றுவிக்க அரசாங்கம் முற்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார். அத்துடன் போக்குவரத்து சேவையில் பொலிசாருடன் இராணுவ பொலிசாரும் இணைத்துக் கொண்டுள்ளமைக்கான நோக்கமென்ன? பல நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே பொலிசார் வீதிப்போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான நிலையில் இராணுவப்பொலிசாரையும் சேவையில் இணைத்து அவர்களுக்கு மாத்திரம் விசேட சலுகைகளை வழங்குவதனால் இருதரப்பினருக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றும் வாய்ப்புக்கள் ஏற்படும். …

    • 4 replies
    • 964 views
  4. முல்லைத்தீவு மாவட்டத்துக்கான புதிய அரச அதிபராக க.விமலநாதன் நியமனம் Feb 29, 20200 மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவரான க.விமலநாதன் முல்லைத்தீவு மாவட்டத்துக்கான புதிய அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.மேலதிக அரசாங்க அதிபராகவும் பல்வேறு அரச உயர் பதவிகள் வகித்து வந்த நிலையிலேயே முல்லைத்தீவுக்கான புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.சமூக நலனோம்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய க.விமலநாதன் மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.(15) http://www.samakalam.com/செய்திகள்/முல்லைத்தீவு-மாவட்டத்த-19/

  5. உலக நாடுகளால் கொண்டுவரப்படும் முடிவுகளை இலங்கை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது- ஸ்ரீதரன் by : Litharsan ஐக்கிய நாடுகள் பிரேரணையில் இருந்து இலங்கை விலகிக்கொள்வதாகத் தீர்மானித்திருப்பது, உலக நாடுகளால் கொண்டுவரப்படும் முடிவுகளை கேள்விக்குட்படுத்தும் செயற்பாடு என நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீறிதரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் மக்கள் சார்பாக ஜெனிவாவுக்குச் சென்றுள்ள அவர் அங்கிருந்து கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ்ர கூறகையில், “ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டிலே, ஏற்கனவே கொண்டுவரப்பட்டுள்ள 30/1 40/1 தீர்மானங்களில் இருந்து விலகிக்கொள்வதாகவும் அதன் அனைத்து செயற்பாடுகளில் இருந்தும் ஒதுங்கிக் கொள்வதாகவு…

  6. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 40/1, 34/1 மற்றும் 30/1 பிரேரணைகளுக்கான இணை அனுசரணையிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகுவதானது வடகிழக்கு தமிழ் மக்களுக்கும் உலகம் பூராகவும் உள்ள மக்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளதென முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். எனினும் இவ்வாறான முடிவு வியப்படையத்தக்கதொன்றல்ல. தொடர் பத்தாண்டு கால கட்டத்தின் முடிவே ஜெனிவாவில் அமைச்சர் குணவர்தன வெளியிட்ட அறிவிப்பு எனவும் தெரிவித்தார். இது தொடர்பில் முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்…

    • 4 replies
    • 462 views
  7. சர்வதேச பொறிக்குள் சிக்கிய கோட்டாபய நடக்கப்போவது என்ன?

  8. இந்தியாவிலிருந்து பூக்கள், பழங்கள், சிற்றுண்டிகள் கொண்டு வர யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்தில் தடையாம்.! தமிழகத்திலிருந்து கொண்டுவரப்படும் அல்வா, மல்லிகை பூ மற்றும் சுவிற் வகைகள் யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்தில் பயங்கரமான பொருட்களின் வகைப்பாட்டுக்குள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக பொதுமக்கள் கடும் விசனம் தொிவித்திருக்கின்றனா். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பரிசோதனைக் கருவி இன்மை காரணமாக பலவகையான பொருட்கள் எடுத்துச் செல்லும் அனுமதிகள் மறுக்கப்படுகின்றது. பரிசோதனையின் போது யாழ்ப்பாணம் விமான நிலையம் ஊடாக பயணிக்கும் பயணி தனது உடமைகளை கை மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய அவலம் காணப்படுகின்றது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து இலங்கை வரும் பயணிக…

    • 3 replies
    • 1.1k views
  9. தகுதி பெற்ற இலங்கையர்களுக்கு பராமரிப்பு சேவை தொழில் துறையில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இஸ்ரேல் அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் கைச்சாத்திட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு கடந்த 24 ஆம் திகதி இஸ்ரேலில் ஜெருசலேமில் உள்ள அந் நாட்டு வெளிநாட்டு அலுவலகத்தில் இடம்பெற்றது. இஸ்ரேல் அரசாங்கத்தின் சார்பில் இந்த ஒப்பந்தத்தில் அந் நாட்டு வெளிநாட்டு அமைச்சின் சார்பில் உள்நாட்டு அமைச்சர் ஆர்ய மௌலப் டெரி (Aryeh Machluf Deri) கைச்சாத்திட்டார். இலங்கையின் சார்பில் செயல்திறன் அபிவிருத்தி தொழில் மற்றும் தொழில் பாதுகாப்பு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஸ் குணவர்தன சார்பில் திறனாற்றல் அபிவிருத்தி, தொழில் மற்றும் தொழில் பாதுகாப்பு அமைச்சின் …

    • 15 replies
    • 1.3k views
  10. (எம்.மனோசித்ரா) ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடியது. ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல்களின் பின்னர் எவ்வித இணக்கப்பாடுகளும இன்றி நிறைவடைந்துள்ளது. இன்றைய தினம் ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் சுமார் 2 மணித்தியாலங்களுக்கும் மேல் இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் பொதுத் தேர்தல் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகள், சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணியின் சின்னம் என்பன தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. புதிய கூட்டணிக்கான…

    • 0 replies
    • 992 views
  11. டி.எல்.ஜவ்பர்கான் 'மட்டக்களப்பு மாவட்ட தொழிற்சந்தை வழிகாட்டுதலுக்கான திறவு கோள்' எனும் தொனிப்பொருளில், 'மாவட்டச் செயலக மனிதவள மேம்பாட்டுத் திறன் அபிவிருத்தித் திணைக்களம், எஸ்கோ நிறுவனம் என்பன இணைந்து, தொழில் வழிகாட்டும் சந்தையை, மட்டக்களப்பு திருகோணமலை வீதியிலுள்ள செல்வநாயகம் மண்டபத்தில், நேற்று (27) நடத்தின. இந்தச் சந்தையை, மாவட்டச் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா, சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட மேலதிகச் செயலாளர் சுதர்சினி ஸ்ரீகாந், உதவி மாவட்டச் செயலாளர் ஏ.நவேஸ்வரன், எஸ்கோ நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி கோதை, தொழில்நுட்பக் கல்லூரி அதிபர்கள், தேசிய தொழிற் பயிற்சி கைத்தொழில் அதிகார சபை, இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகம்,…

  12. (ஆர்.விதுஷா) நுண்கடன்களை பெற்றவர்களிடமிருந்து அவற்றை மீளப்பெறாது நிறுத்துமாறும்., நுண்கடன் வழங்கும்நிறுவனங்களை ஒரு ஒழுங்கமைப்பின் கீழ் கொண்டுவருமாறும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார். பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது , நாட்டு மக்களின் ஜீவனோபாயம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அவர்களால் வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்நுண்கடன் திட்டத்தின் காரணமாகவும் இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும்பெண்தலைமைத்துவ குடும்பத்தை சேர்ந்த பெண்கள் பலருடைய வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. அவர்கள் , கடன் சுமையை தாங்க இயலாது தற்கொலை செய்து கொள்ள…

  13. -டி.விஜித்தா சென். ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் ஆரம்பிக்கப்பட்டு 40ஆவது வருடங்கள் நிறைவடைந்ததையிட்டு, அதன் நிகழ்வுகள், யாழ். மத்திய கல்லூரியில் நடைபெற்றது. யாழ். மாவட்ட ஆணையாளர் எஸ். சேல்வரஞ்சன் தலைமையில், இன்று (28) முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து, பாடசாலை வளாகத்தில் சென்.ஜோன்ஸ் அம்பியூலன்ஸுக்கான புதிய அறை ஒன்றை அதன் தலைவர் சரத் சமரகே, மத்திய கல்லூரி அதிபர் எஸ்.கே.எமில்வேந்தன் ஆகியோர் திறந்து வைத்தனர். அதன்பின்னர், கடந்த ஆண்டு சிறந்தமுறையில் அம்பியூலன்ஸ் பாசறையில் பயிற்சி பெற்ற மற்றும் சேவையாற்றிய மாணவர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டதுடன், சென்.ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் தலைவருக்கான சின்னமும் சூட்டப்பட்டன. http://www.tamilmirror.lk/யாழ்ப்பா…

  14. ஜெனிவா பிரேரணையிலிருந்து இலங்கை விலகுவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெற்று ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் தேசிய பொருளாதாரத்தை முன்னேற்றவில்லை. அபிவிருத்தி என்ற பெயரில் நாட்டின் இறையாண்மையை விட்டுக் கொடுக்க முடியாது என வியத்மக அமைப்பின் இணைப்பேச்சாளர் பேராசிரியர் நாலக கொடஹேவா தெரிவித்தார். .கம்பஹா நகரில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இலங்கை தொடர்பில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஜெனிவா பிரேரணை நாட்டுக்கு எதிரான காட்டிக்கொடுப்பு என்றே குறிப்பிடவேண்டும். தூர நோக்கு கொள்கையை அடிப்படையாகக் கொண்டே அ…

    • 0 replies
    • 162 views
  15. சஜித்தின் கூட்டணிக்கு மு.கா ஆதரவு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் பொது, தமது சமகி ஜனபலவேகய கட்சிக்கு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்கவுள்ளதாக, அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்ட மு.காவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், சமகி ஜனபலவேகய எனும் கூட்டணிக் கட்சிக்கு, தமது கட்சி முழுமையான ஆதரவை வழங்குமென்றார். http://www.tamilmirror.lk/செய்திகள்/சஜததன-கடட…

  16. -எஸ்.நிதர்ஷன் தற்போதைய சூழ்நிலையில் சர்வதேசத்தின் முழுமையான மேற்பார்வையுடன் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என தெரிவித்த டெலோ அமைப்பின் தேசிய அமைப்பாளர் குருசாமி சுரேந்திரன், சர்வதேசம் தமிழ் மக்களின் பக்கம் ஒன்றிணைந்து நிற்க முக்கிய காரணம், சர்வதேசத்தினுடைய நிகழ்ச்சி நிரலுக்கு தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பு சாணக்கியமாக காய் நகர்த்தியமையே என்றும் கூறினார். யாழ். ஊடக அமையத்தில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், இலங்கை அரசாங்கம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட் தீர்மானத்தின் இணை அனுசரணையில் இருந்து விலகுவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ்குணவர்த்தன அறிவித்திருந்தாரெனவும்…

    • 0 replies
    • 230 views
  17. -மு.தமிழ்ச்செல்வன் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அரசியல் பிரிவின் பிரதானியான அந்தோனி எப் ரென்ஸ்சுள்ளி அவர்களுக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமாருக்கிடையிலான சந்திப்பொன்று, கிளிநொச்சியில் உள்ள சமத்துவக் கட்சியின் அலுவலகத்தில், நேற்று நடைபெற்றது. இதன் போது, இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை, ஜெனீவா விடயம், அதிகரித்த வேலையின்னை, முதலீடுகளின் தேவை போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற விடயம் கண்டறியப்படல் வேண்டும் என்பதோடு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் எனவும், அவர்களுக்கு நீதி வ…

    • 0 replies
    • 458 views
  18. 800 பயனாளிகளுக்கு 4 மாதங்களில் 17 கோடி ரூபாய் வருவாய் February 27, 2020 வடமாராட்சி பிரதேசத்தில் நீர்நிலைகளில் மேற்கொள்ளப்படும் நீர் வேளாண்மையை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் சுமார் 170 குடும்பங்கள் சுமார் 4 மாத காலப் பகுதியில் அண்ணளவாக 17 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட வருமானத்தை பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத் திட்டத்திற்கு அமைய மேற்கொள்ளப்பட்டது. வடமாராட்சி பிரதேசத்தில் நீர் வேளாண்மையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் 40 இலட்சம் இறால் குஞ்சுகளை தொண்டமானாறு மற்றும் உப்பாறு நீர் நிலைகளில் இடுவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழங்கிய ஆலோசனைக்கு அமைய கடந்த 02.02.2020 அன்று முதற்கட்டமாக இறால் குஞ்சு விடும் நிக…

    • 2 replies
    • 645 views
  19. கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா மார்ச் 6 -7 கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா எதிர்வரும் 6 ஆம் 7 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இம்முறை இந்த திருவிழாவில்சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் வரையில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து 3,000 பக்தர்களும், இலங்கையில் இருந்து 7,000 பக்தர்களும் இந்த புனித தேவாலய திருவிழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை கடற்படை ஊடக போச்சாளர் லெப்டினன் கமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், பக்தர்களின் வசதி கருதி போக்…

  20. 'கமிசன்' கேட்டால் தக்க பாடம் புகட்டுங்கள் - ஆயிரம் ரூபா உறுதி என தொண்டமான் மீண்டும் அறிவிப்பு! "மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் தனி வீட்டுத் திட்டத்துக்கு பயனாளிகள் பணம் வழங்க வேண்டியதில்லை. எனவே, யாராவது தரகு பணம் கேட்டு வந்தால் தக்க பாடம் புகட்டுங்கள்." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். மனிதவள அபிவிருத்தி நிதியம் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகாரசபை ஊடாக பதுளை மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள வீடுகளுக்கான காணி உறுதி பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் நிகழ்வு இன்று (28) சமூக வலுவூட்டல்…

  21. தினேஸ் குணவர்தன UNHRCயில் சமர்ப்பித்த எழுத்து மூலமான புதுப்பித்தல் அறிக்கை (தமிழில்) தினேஸ் குணவர்தன UNHRCயில் சமர்ப்பித்த எழுத்து மூலமான புதுப்பித்தல் அறிக்கை (தமிழில்) நிகழ்ச்சி நிரல் விடயம் 2 - பொது விவாதம்: மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 40/1, ´இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்´ குறித்த மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கைக்கு அமைவான மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 30/1 ஐ நடைமுறைப்படுத்துவது குறித்த எழுத்துமூலமான புதுப்பித்த தகவல்களை மனித உரிமைகள் ஆணையாளர் வழங்குதல் (A/HRC/43/19) 27 பெப்ரவரி 2020 இலங்கையின் வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்…

  22. எம்.இஸட்.ஷாஜஹான் வருகின்ற காலம் மிக சவாலான காலமாகும் எனத் தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஹுப் ஹக்கீம், நடைபெறவுள்ள தேர்தலில், எமது சமூகம் சார்ந்த அரசியல் பிரிதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வது தொடர்பிலும், அதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பிலும் அவதானமாக இருக்க வேண்டும் என்றார். நீர்கொழும்பு-அல் - ஹிலால் மத்திய கல்லூரியின் நூற்றாண்டை முன்னிட்டு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்விக் கண்காட்சி நிகழ்வில், நேற்று(26) பங்கேற்று உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், மஹர சிறைச்சாலையிலுள்ள பள்ளிவாசல், ஏப்ரல் குண்டுத் தாக்குதலின் பின்னர் மூடப்பட்டுள்ளது. தற்போது அங்கு வேறு மதச் சின்னங்க…

  23. சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு! ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக லலித் பத்திநாயக்க, முன்னர் செயற்பட்டிருந்தார். இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக சாட்சியமளிக்க ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம்.பீ.பி. ஹேரத் தெரிவித்துள்ளார். லலித் பத்திநாயக்க இதற்கு முன்னரும் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்ததுடன், ஆணைக்குழுவில் இது வரையில் 72 பேர் சாட்சியமளித்துள்ளனர் என…

  24. காணாமல் போனவர்களை கண்டுபிடித்த உதய கம்மன்பில. ! இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளன எனக்கூறும் தமிழ் அடிப்படைவாதிகள், அதற்கான சாட்சிகளை இன்னும் முன்வைக்கவில்லை. 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு ஊகத்தின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ளது – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஜெனிவா கூட்டத்தொடர் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். ” தமது நாட்டுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கே இணை அனுசரணை வழங்கிய ஒரே நாடு இலங்கை என்ற சாதனையை 30/1 தீர்மானம் நிறைவேற்றப்படும்போது ஐக்கிய தேசியக்கட்சி படைத்தது. நல்லிணக்கம…

  25. 2021 ஆம் ஆண்டுவரை ஐ.நா. தீர்மானத்தில் இருந்து விலக முடியாது – ரணில் அதிரடி! போருக்குப் பின்னரான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகுவதாக ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. எவ்வாறாயினும், 2021 ஆம் ஆண்டு வரை குறித்த தீர்மானத்திலிருந்து இலங்கை வெளியேற முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்திருந்த நல்லாட்சி அரசாங்கமே குறித்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக தி ஹிந்து நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து தெர…

    • 3 replies
    • 985 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.