ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
கொழும்பின் சில பகுதிகளில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் பராமரித்துச் செல்லப்பட்ட 25 சட்டவிரோத விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு பெண்கள் உட்பட 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக விபச்சார விடுதிகள் பராமரிக்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய 35 மசாஜ் நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன்போது, 25 விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு விபச்சார விடுதியின் முகாமையாளர்கள், விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரளை, வெல்லவத்தை, கிருலபனை, பம்பலப்பிட்டிய, நாரஹேன்பிட, கிரேன்பாஸ், மருதானை மற்றும் தலங்கம பிரதேசங்களில் பராமரித்துச் செல்லப்பட்ட விபச்சார விடுதிகளே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. கைது செய…
-
- 0 replies
- 497 views
-
-
0 கிளிநொச்சி இரணைமடுக் குளத்திற்குள் ஒரு லட்சம் மீன்குஞ்சுகள் இன்று (18) காலை 11 மணியளவில் இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபையினால் விடப்பட்டன. குறித்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இரணைமடு நன்நீர் மீன்பிடி கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இரணைமடு நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள மீனவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக ஒரு இலட்சம் மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். https://newuthayan.com/இரணைமடு-குளத்திற்குள்-100000-ம/
-
- 0 replies
- 532 views
-
-
கூட்டமைப்பின் தன்னிச்சையான போக்கே புதிய கூட்டணி உருவாகுவதற்கு காரணம் -சிவாஜிலிங்கம் வடக்கு முன்னாள் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியக் கட்சி, அனந்தி தலைமையிலான ஈழத் தமிழர் சுயாட்சி கழகம் என்பனவே தற்போது புதிய கூட்டணி பற்றி பேசி வருகின்றன.எனினும் குறித்த கட்சிகளில் ஈழமக்கள் புரட்சிகள விடுதலை முன்னணிக்கு மாத்திரமே அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்த்து உள்ளது. அந்த கட்சியின் பெயரை மாற்றுவது தொடர்பாக அதன் மத்திய குழுவில் ஆராய்ந்து அனுமதிகளை பெற்றுகொண்ட பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தன்னிச்சையான போக்கே புதிய கூ…
-
- 0 replies
- 333 views
-
-
மக்களுக்கு உதவ அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் -ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் வடக்கு மாகாண திணைக்களங்கள் சிலவற்றுடன் நேற்று வெள்ளிக்கிழமை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அனைத்து மக்களிடத்திலும் சமூக அக்கறையை மேம்படுத்தப்பட வேண்டும்.மக்களுக்கு உதவ அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அதாவது சுயமாக நம்மை நாமே முன்னேற்ற வேண்டும். எம்மால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் எப்பொழுதும் மற்றவர்கள் மீது பழி போடுவதிலேயே காலம் வீண் விரயமாகின்றது.எனவே இந்த நிலைமையை தொடராமல் இனம்காணப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வை விரைவாக அடையாளம் கண்டு செயற்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.பிறர் மீது பழிபோடுவதனை நிறுத்திவிட்டு, எம்மால் தீர்க்கப்பட வேண்டிய பிர…
-
- 0 replies
- 333 views
-
-
மன்னார் மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்தில் விமல் வீரவன்ச…. January 18, 2020 மன்னாரிற்கு இன்று சனிக்கிழமை (18) காலை விஜயம் செய்த அமைச்சர் விமல் வீரவன்ச காலை 10 மணியளவில் மன்னார் பெரிய கடை பகுதியில் அமைந்துள்ள மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்திற்கு (மாந்தை சோல்ட் லிமிற்றெற்) சென்றிருந்தார். அங்கு சென்ற அமைச்சர் உப்பு உற்பத்தி நிலையத்தை பார்வையிட்டதோடு, அங்குள்ள பிரச்சினைகள் குறைபாடுகளை கேட்டறிந்து கொண்டார். மேலும் உப்பு பொதி செய்யும் பகுதிக்குச் சென்று பார்வையிட்டார். இதன் போது அங்கு கடமையாற்றுகின்ற ஊழியர்கள் தமது பிரச்சினைகளை அமைச்சாரிடம் நேரடியாக தெரிவித்தனர். குறிப்பாக குறித்த உப்பு உற்பத்தி நிலையத்தில் அதிகமான பெண் ஊழியர்களே கடமையாற்றுவமாகவும், கடி…
-
- 0 replies
- 631 views
-
-
காலில் விழுந்து அழுத போதும் அதைக் கண்டு கொள்ளாத சர்வதேசம் அரசியல் தீர்வை கொண்டு வராது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை இலங்கைக்கு உள்ளேயே பெற்றுக் கொள்ள வேண்டும். வெளிநாடுகள் வந்து எமக்கான தீர்வுகளை பெற்றுத் தர முடியாது என்று கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அழிவு யுத்தம் நடைபெற்ற போது எமது மக்கள் தம்மை விட்டு சர்வதேச சமூகம் வெளியேறக் கூடாது என்று காலில் விழுந்து அழுதபோதும் அதைக் கண்டுகொள்ளாமல் எமது மக்களை அழிவுகளுக்குள் கைவிட்டுச் சென்ற சர்வதேசம், எமது மக்களுக்கு தீர்வுகளைப் பெற்றுத் தருவதற்கு ஒருபோதும் வரப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்…
-
- 2 replies
- 970 views
-
-
ரஞ்சனின் குரல்பதிவுகள் ஜெனிவா செல்லும் அவதானம் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல்பதிவுகள் ஊடாக தெரிய வந்துள்ள விடயங்கள் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பயன்படுத்தும் அவதானம் காரணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் டி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ரஞ்சனால் மேற்கொள்ளப்பட்டது ஒரு முட்டாள் தனமாக செயல் என தெரிவித்தார். அதேபோல், அநேகமானோர் இந்த குரல் பதிவுகளை தமது அரசியல் தேவைக்காக பயன்படுவத்துவதாக தெரிவித்த அவர், இதன் மூலம் தனிப்பட்ட விதத்தில் ஏற்படும் பாதிப்பை விட நாடு எதிர்கொள்ளவுள்ள மோசமான சூழ்நிலை குறித்து சுட்டிக்காட்டினார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சுவிஸ்ச…
-
- 1 reply
- 1k views
-
-
அமைப்பாளர் பதவியில் இருந்து சந்திரிகாவை நீக்கியது சுதந்திரக் கட்சி சந்திரிகா பண்டாரநாயக்கவை அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. அந்தவகையில், அத்தனகல்ல அமைப்பாளர் பதவியிலிருந்து சந்திரிக்கா பண்டாரநாயக்கவை நீக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் அரசியல்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/73351
-
- 2 replies
- 610 views
-
-
புதிய வகை மா இனம் ஒன்று ஆராச்சியின் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என கிளிநொச்சி பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலைய மேலதிகப்பணிப்பாளர் (ஆராய்ச்சி) கலாநிதி.சி.ஜே. அரசகேசரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, பல்லாண்டு தாவரங்களை இனங்கண்டு, அவ்வாறு இனங்காணப்பட்ட தாய்த்தாவரங்களை குறிப்பிட்டு, அவற்றை நாற்றுக்கள் தயாரிப்பாளர்களுக்கு வழங்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதற்காக மாகாண விவசாயத்திணைக்களத்தினருடன் இணைந்து திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையத்தினர் மாவட்ட செயலகத்தின் நிதியுதவியுடன் 2005/2006ஆம் ஆண்டுகளில் ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தனர். இவ் ஆய்வில் பலதரப்பட்ட மாங்கன்றுகளும், பலாக்கன்றுகளும் தாவர ரீதியில் ஆராயப்பட்டு சிறப…
-
- 2 replies
- 1k views
-
-
Share0 மஹிந்த என்னிடம் கோரினார், சமஸ்டி என பேச வேண்டாம் ‘இந்திய மொடல்’ என கேளுங்கள் என்றார். என்னுடைய ‘இந்திய மொடல்’ எனும் யோசனையை கோட்டாவும் ஏற்றுக்கொண்டுள்ளார் என்று யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் (17) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். மேலும், அமிர்தநாயகம் உயிரோட இருக்கும் வரையில் மாவை கட்சியின் ஊழியன். சம்பளம் வாங்கி வேலை செய்தவர். பிறகு அமிர்தலிங்கத்தின் ஆசனத்தை கேட்டு சண்டை பிடித்தவர். தந்தையின் ஆசனத்தை தனக்கு தருமாறு கோரிய போது கொள்கை அடிப்படையில் அதனை நாம் வழங்க மறுத்த போது , எம்முடன் முரண்பட்டு தனித்து போட்டியிட்டவர் குமார் பொன்னம்பலம். சுகதேகியாக இருந்த ஜீ.ஜீ. பொன்னம்பலம் அப்…
-
- 7 replies
- 2.9k views
-
-
(நா.தனுஜா) 2025 ஆம் ஆண்டு தேர்தலில் நான் களமிறங்கப்போவதில்லை. எனவே 2023 அல்லது 2024 ஆம் ஆண்டாகும் போது கட்சியின் தலைமைத்துவம் குறித்து ஆராயமுடியும். தற்போது இருக்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வாக்குகளும் இல்லாமல் போனால் கட்சியின் வாக்கு வங்கியில் பாரிய சரிவேற்படும். எனவே தற்போது இருப்பதைத் தக்கவைப்பதற்கும், வாக்கு வங்கியை மேலும் பலப்படுத்துவதற்கும் நான் தலைமைத்துவத்தில் தொடரவேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார். ஆனால் நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சியின் விசேட பாராளுமன்றக்குழுக் கூட்டத்தில் 52 பேர் சஜித் பிரேமதாஸ தலைமைப்பொறுப்பை ஏற்றுச்செயற்படுவதற்கு ஆதரவளித்திருக்கிறார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உற…
-
- 0 replies
- 378 views
-
-
ராஜிதவின் பிணை உத்தரவுக்கு எதிரான மீளாய்வு மனு மீதான நீதிமன்றின் தீர்மானம் ஒத்திவைப்பு! by : Benitlas முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு வழங்கப்பட்ட பிணை உத்தரவுக்கு எதிராக, சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு மீதான நீதிமன்றின் தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று(வெள்ளிக்கிழமை) முன்னிலையானார். வெள்ளை வான் ஊடக சந்திப்பு விவகாரம் தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் திகதி, கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ராஜி…
-
- 1 reply
- 371 views
-
-
பொதுத் தேர்தலில் ஜனாதிபதிக்கு சுதந்திர கட்சி ஆதரவு! எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொது தேர்தலில் 3 இல் 2 பெரும்பான்மை பெறுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://www.elukathir.lk/NewsMain.php?san=30172
-
- 1 reply
- 666 views
-
-
மீண்டும் இயங்கவுள்ள ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை: நேரடி விஜயத்தில் அமைச்சர் அறிவிப்பு by : Yuganthini முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இன்னும் மூன்று மாதங்களுக்குள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் கைத்தொழில், சிறு கைத்தொழில், அரசு முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் விமல் வீரவன்ஸ இன்று (வெள்ளிக்கிழமை) முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டார். இதன் ஒரு நிகழ்வாக ஓட்டுத் தொழிற்சாலையை பார்வையிட்ட விமல் வீரவன்ச, தொழிற்சாலையயை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக கருத்துத் தெரிவித்தார். இதுகுறித்து மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், “1983ஆம் ஆண்டு தொடக்கம…
-
- 0 replies
- 362 views
-
-
சஜித் தலைமையில் இன்று முதல் கூட்டணி அமைக்கும் நடவடிக்கை அடுத்த வார ஆரம்பத்தில் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கருஜய சூரிய மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் கலந்துக்கொள்ளவுள்ளனர். கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று (16) மாலை நடைபெற்ற கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார். குறித்த கலந்துரையாடலில் பங்கேற்ற பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் சஜித் பிரேமதாச க…
-
- 0 replies
- 495 views
-
-
தமிழ் மக்களுக்கு விரோதமாக செயற்பட்டால் டக்ளஸ் அமைதியாக இருக்க மாட்டார்! எமது அரசு தமிழ் மக்களுக்கு விரோதமாகவோ, அவர்களின் அபிலாசைகளுக்கு மாறாகவோ செயற்படப் போவதில்லை. நாம் தமிழ் மக்களுக்கு விரோதமாக செயற்படுவோமாக இருந்தால் எமது அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒருபோதும் அமைதியாக இருக்க மாட்டார் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் அலரி மாளிகையில் நடைபெற்ற தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது, தமிழில் தேசிய கீதம் பாடப்படுவது தொடர்பாக வெளியாகும் செய்தி தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பிரதமர், இது பல கட்சிகள் சேர்ந்ததாக அமைந்த அரசாங்கம் என்பத…
-
- 7 replies
- 1.4k views
-
-
கொழும்பில் இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவரிற்கு பதவி உயர்வு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட இலங்கை கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டீகேபி தசநாயக்கவிற்கு அரசாங்கம் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தசநாயக்க ரியர் அட்மிரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் இவருக்கு தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டுதடுத்துவைக்கப்பட்டிருந்த இவர் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். 2008 முதல் 2009 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பி;ல் காணாமல் போன 11 இளைஞர்கள் தொடர…
-
- 0 replies
- 780 views
-
-
சஜித்தின் விசேட அறிவித்தல் : மனோ , திகா , ஹக்கீம் இணைவு சஜித் பிரேமதாச தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய கூட்டணி தொடர்பான விசேட அறிவிப்பொன்று இன்று வெளியிடப்படவுள்ளது. இன்றைய தினம் பிற்பகல் விசேட ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி இந்த அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது. இதில் தமிழ் கட்சிகளினதும் மற்றும் முஸ்லிம் கட்சிகளினதும் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இன்று பிற்பகல் 2.30 மணியளவில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. -(3) http://www.samakalam.com/செய்திகள்/சஜித்தின்-விசேட-அறிவித்த/
-
- 0 replies
- 326 views
-
-
சந்தேகநபர்களுக்கு அடைக்கலம் கொடுத்த தமிழ் பெண் பொலிஸ் – யாழில் சம்பவம்! தெல்லிப்பளையில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டுக்குள் மறைந்திருந்த கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் – கோப்பாய் மற்றும் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ‘சந்தேகநபர்கள் இருவரும் கொள்ளையிட்ட நகைகளை வவுனியாவில் விற்பனை செய்துள்ளமையை அறிந்து மானிப்பாய் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் தெல்லிப்பளையில் உள்ள தமிழ் பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் மறைந்திருப்பதாக பொலிஸா…
-
- 0 replies
- 858 views
-
-
யாழில் வங்கி முகாமையாளர் வீட்டில் தாக்குதல்! யாழில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற இனந்தெரியாத குழு காருக்குத் தீ வைத்துள்ளது. யாழ்.கல்வியங்காட்டு பகுதியில் அமைந்துள்ள வரதராஜா கேதீஸ்வர சர்மா என்பவரது வீட்டுக்குள் நேற்று (வியாழக்கிழமை) இரவு புகுந்த இனம் தெரியாதவர்கள் வீட்டு வளவினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு தீ வைத்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். எனினும் காருக்கு வைக்கப்பட்ட தீ முழுமையாக அதன்மீது பரவாததால், பகுதியளவில் கார் சேதமடைந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். http://athavannews.com/யாழில்-வங்கி-முக…
-
- 0 replies
- 294 views
-
-
ரோஹண விஜயவீரவின் மனைவி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு காணாமல் போனதாக கூறப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோகண விஜயவீரவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான உத்தரவு ஒன்றை அரசாங்கம் விடுக்க வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதி மன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது. ரோஹண விஜயவீரவின் மனைவி சித்ராங்கனீ விஜயவீரவினால் இந்த மேல் முறையீட்ட மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்றைய தினம் (16) நீதியரசர் குழாமினால் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதி அரசர்களான சிசிர டி.ஆக்குருப், எஸ்.துரைராயா, காமினி அமரசேகர ஆகியோர் நீதிபதி குழாமில் இடம் பெற்றிருந்தனர். மனுதாரரான சித்ராங்கனீ…
-
- 0 replies
- 565 views
-
-
எதிர்க்கட்சிக்கு சென்ற பின்பும் அடக்குமுறை தொடர்கிறது தற்போதைய எதிர்க்கட்சியின் செயற்பாடு, ஆட்சியில் இருக்கும் போது மேற்கொண்ட மந்தமான செயற்பாட்டை ஒத்ததாக காணப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனை தெரிவித்தார். எதிர்க்கட்சிக்கு சென்ற பின்னரும் வழக்கமான அடக்குமுறை தொடர்வதாக அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி தொடர்பில் அச்சம் மற்றும் சந்தேகமின்றி அனைவரும் வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதனை பொருத்துக் கொள்ளமுடியாமல் சில காரணங்களை கொண்டு அத்தகைய சூழ்நிலையை மீண்டும் உருவாக்க சில சக்திகள் முயற்சிப்பதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். …
-
- 0 replies
- 379 views
-
-
இந்திய மீனவர்களின் அத்துமீறல் விவகாரம் - விரைவில் பேச்சுவார்த்தை இந்திய மீனவர்கள் இலங்கை கடற் பரப்புக்குள் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபடுகின்ற போதும் தடை செய்யப்பட்ட தொழில் உபகரணங்களை பாவித்து கடல் வளங்களையும் அழித்தும் வருகின்றனர். இவ்விடயம் தொடர்பாக இரு நாட்டுப் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் இம்மாத இறுதியில் கொழும்பில் நடைபெறலாம் என எதிர்பார்ப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அண்மையில் பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது, இலங்கை கடற் பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்பான பிர…
-
- 0 replies
- 313 views
-
-
மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ள வைத்தியர் ஷாபி by : Dhackshala குருநாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியராக கடமையாற்றிய ஷாபி சிஹாப்தீனுக்கு எதிரான வழக்கில் பயங்கரவாதி சஹ்ரானின் பெயரால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் வைத்தியர் ஷாபிக்கு எதிரான வழக்கு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது கருத்தடை விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் தாய்மார்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சாணக, சந்தேகநபரான ஷாபி, லாபிர் எனும் சந்தேகநபருடன் தோன்றும் ஒளிப்படத்துடன் கூடிய இறுவெட்டொன்று சி.ஐ.டி.யிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அந்த லாபிர்…
-
- 0 replies
- 558 views
-
-
உண்மைகளை மூடி மறைத்து ஆட்சி செய்கிறது அரசாங்கம்- பிமல் குற்றச்சாட்டு I by : Yuganthini புதிய அரசாங்கம் உண்மைகளை மூடி மறைத்து ஆட்சி செய்து வருகின்றதென மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த கூட்டத்தில் பிமல் ரத்னாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவானவுடனே சில முக்கிய அமைச்சர்கள் உடனடியாக பதவி துறந்தார்கள். இவ்வாறு இவர்கள் உண்மையாகவே பதவி விலகினார்களா அல்லது பதவி விலக்கப்பட்டார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. …
-
- 0 replies
- 409 views
-