Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கோத்தாபயவின் பெரும்பான்மைத்துவ ஆட்சி எமக்கு பெரும் நெருக்கடி - மாவை அரச தலைவர் வெளியிட்டுள்ள தனது கொள்கை அறிக்கையில் பெரும்பான்மைத்துவ ஆட்சி என்று குறிப்பிட்டிருக்கின்றார். இது இன்னுமெரு பெரும் நெருக்கடியினை எமக்குத் தந்திருக்கின்றது. இதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இவ்வாறு இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில், 04.01நேற்று இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கருத்துரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தற்போது அரசதலைவராகத் தெரிவுசெய்யப்பட்டிருப்பவர், இந்த நீண்ட நெடிய வரலாற்…

    • 3 replies
    • 913 views
  2. பெரும்­பான்­மை­வாதம் தொடர்­வது பேரா­பத்து; தமிழ், முஸ்லிம் தரப்­புக்கள் கூட்டாக எச்­ச­ரிக்கை! ஆர்.ராம் ஜனா­தி­பதித் தேர்­தலில் மக்­களின் பிர­தி­ப­லிப்­புக்­களை அடி­யொற்றி தொடர்ந்தும் பெரும்­பான்மை வாதத்­தினை முன்­னி­லைப்­ப­டுத்தி செயற்­பட்டுக் கொண்­டி­ருப்­ப­தா­னது இனங்கள் மென்­மேலும் துரு­வப்­ப­டுத்­தப்­படும் பேரா­பத்­தையே தோற்­று­விக்கும் என்று தமிழ், முஸ்லிம் தரப்­புக்கள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளன. நாட்டின் சுபீட்­சத்­தையும், எதிர்­கா­லத்­தி­னையும் கருத்­திற்­கொண்டு ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க் ஷவின் மன­நி­லை­யிலும் அவ­ரது போக்­கிலும் மாற்­றங்கள் ஏற்­ப­ட­வேண்­டி­யது அவ­சியம் என்றும் அத்­த­ரப்­புக்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளன. ஜனா­தி­பதி கோத்­தா­ப…

    • 2 replies
    • 527 views
  3. மன்னார் பேசாலை ஓலைத் தொடுவாயை சேர்ந்த சூசைப் பிள்ளை இராசேந்திரம் (வயது 72 ) என்பவரே மேற்படி உயிரிழந்த வராவார். கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6ஆம் திகதி இவருடைய மகன் இ.அன்ரனி ரஞ்சன் காணா மல் ஆக்கப்பட்டார். தனது மகனை கடந்த 11 வருடங் களாக இவர் தேடி வருகிறார் - 3 வருடங்களாக தொடர் போராட்டங் களின் மூலம் தனது மகன் தொடர் பில் நீதி கேட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தி னம் இரவு மன்னார் வைத்திய சாலையில் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்ட உறவு களை தேடி வந்தவர்களில் இது வரை 56 பேர் உயிரிழந்துள் ளமை குறிப்பிடத்தக்கது. http://valampurii.lk/valampurii/content.php?id=20278&ctype=news

  4. ’21 - 22ஆவது திருத்தம் ஜனநாயகத்தை ஒழிக்கும் நடவடிக்கை’ நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ முன்வைத்துள்ள 21 மற்றும் 22ஆம் அரசியலமைப்பு திருத்த யோசனையின் ஊடாக, அண்மைக்கால அரசியலில் பெற்றுக்கொடுக்கப்பட்ட ஜனநாயகம் மீண்டும் இல்லாமலாக்கப்படுவதே நடைபெறும் என, நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பிரதான அரசியல் கட்சிகளின்றி ஏனைய கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சந்தர்ப்பத்தை இல்லாது செய்யும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த அரசியலமைப்பு திருத்த யோசனையை தோல்வியடைய செய்ய நாட்டு மக்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/21-22ஆவத-தரததம-ஜனநயகதத-ஒழககம-நடவடகக/175-243478

  5. -செ.கீதாஞ்சன் வன்னி மாவட்டம் முழுவதும் ஒரு பாரிய எழுச்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேசன், பல கட்சிகளின் தலைவர்களும் நாடாளுமன்றத்தில் இருக்கின்றவர்களும் தங்கள் எழுச்சியைக் கண்டு மிரண்டுபோயுள்ளனரெனவும் கூறினார். முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் புகுதியில், நேற்று (04) நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், மக்கள் மாற்று இனத்தவர்களுக்கு வாக்களிக்கக்கூடாதெனவும் ராஜபக்‌ஷ குடும்பத்தினர் அனைவரும் இணைந்து, வன்னியில், சிங்கள இனத்தவர் ஒருவரைக் கொண்டுவருவதற…

  6. முடக்­கப்­பட்­டுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்பை முன்­னெ­டுக்­கு­மாறு கோரும் கூட்­ட­மைப்பு: கோத்­தா­வுக்கு ஒத்­து­ழைக்கவும் தயார் - சுமந்­திரன் (ஆர்.ராம்) முடக்­கப்­பட்­டுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்பு செயற்­பா­டு­களை தொடர்ந்தும் முன்­னெ­டுப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக் ஷ மேற்­கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கோரிக்கை விடுத்­துள்­ளது. குறித்த அர­சி­ய­ல­மைப்பு பணிகள் முன்­னெ­டுக்­கப்­படும் பட்­சத்தில் அதற்கு தமது பூரண ஒத்­து­ழைப்­பினை வழங்­கு­வ­தற்கு தயா­ராக உள்­ள­தா­கவும் கூட்­ட­மைப்பு மேலும் தெரி­வித்­துள்­ளது. இது தொடர்பில் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன்…

  7. யாழ் - சென்னை விமான சேவை : விமான நிலைய வரியாக பெருந்தொகை அறவிடப்படுவதாக குற்றச்சாட்டு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கான விமான பயணத்திற்கு பயணிகளிடம் இருந்து விமான நிலைய வரியாக பெருந்தொகை பணம் அறவிடப்படுவதாக கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்வதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: நல்லாட்சி என்று சொல்லப்பட்ட கடந்த ஆட்சி காலத்தில் யாழ்ப்ப…

  8. பருத்தித்துறையில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் வாகனத்தை பிரதேச மக்கள் கைப்பற்றினர் பருத்தித்துறை, பொற்பதி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை பிரதேச மக்கள் தடுத்து நிறுத்தி கைப்பற்றியுள்ளனர்.மூன்று டிப்பர் வாகனங்களில் மண் ஏற்றிக்கொண்டு செல்லப்பட்ட நிலையில் இரண்டு வாகனங்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ஒரு வாகனத்தை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் பிரதேச மக்களுக்கும் மணல் கொள்ளையர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வு செய்வதற்கு மக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வரும் நிலையில் இன்று சனிக்கிழமை அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்…

  9. மட்டு. சிறைக்கைதிகள் கூரை மேல் ஏறிப் போராட்டம் மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் இன்று (05)கூரை மேல் ஏறி போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். சிறைச்சாலையின் கூரைக்கு மேல் ஏறிய 12க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் இந்தப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். சிறைச்சாலையில் இருந்த கைதியொருவர் இன்று காலை மரணமானதைத் தொடர்ந்து குறித்த கைதியின் மரணம் தொடர்பில் நீதிபதி நேரடியாக வந்து விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தியே, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. -வா.கிருஸ்ணா http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/மடட-சறககதகள-கர-மல-ஏறப-பரடடம/73-243483

  10. தமிழ் மக்களுக்கான உரிமைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து பெற்றுத் தர எம்மால் முடியும் எனத் தெரிவித்திருக்கிறார் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த செவ்வியலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதையும் தர மாட்டேன் என்கிறார். இந்நிலையில் தமிழ் மக்களுக்கான உரிமைகளை எப்படிப் பெற்றுக் கொடுப்பீர்கள் எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில், சாப்பிடமாட்டேன் என்று குழந்தை அடம்பிடித்தால் சரி போ என்று விட்டுவிடுவீர்களா? எத்தி, அதட்டி குழந்தையை சாப்பிடப் பண்ண வேண்டும். ஒரு தாயால் அது முடியும். எம்முள் அன்பும் உண்மையும் கொண்டிருந்தால் நாமும் தாயைப் போன்றவர்க…

  11. இலங்கை மத்திய வங்கி பிணை முறி விநியோகச் செயற்பாடுகளில் இடம்பெற்ற மோசடிகளின் பிரதான சூத்திரதாரியாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இருந்துள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார். மத்திய வங்கி பிணைமுறிகள் விநியோகத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக அவர் வெ ளியிட்டுள்ள புத்தம் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதேபோல் மேற்படி குற்றச்சாட்டுக்களுக்கான அனைத்து சாட்சியங்களையும் தனது புத்தகத்தில் இணைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/ரணல-பரதன-சததரதர/175-243468

    • 1 reply
    • 823 views
  12. பதுளையில் விமானப்படை விமானம் விபத்து – நான்கு பேர் பலி January 3, 2020 (க.கிஷாந்தன்) பதுளை மாவட்டம் ஹப்புத்தனை பிரதேசத்தில் இன்று (03.01.2020) காலை 9.20 மணியளவில் விமான விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த நான்கு பேர் உயிரிழந்துள்ள நிலையில், குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்த பெண் ஒருவர் காயமடைந்து ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீரவில பகுதியில் இருந்து ரத்மலான நோக்கி 4 பேருடன் பயணத்தை ஆரம்பித்த இலங்கை விமான படைக்கு சொந்தமான Y-12 என்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கேப்டன் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். ஹப்புத்…

  13. இலங்கை தமிழரசு கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு முல்லைத்தீவு நகரில் இன்றைய தினம் இடம்பெற்றது.இந்த நிகழ்வை முன்னிட்டு முல்லைத்தீவு நகரைச் சுத்தப்படுத்தும் பணியில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் தலைவர்கள் தமிழரசு கட்சியின் தொண்டர்கள் இணைந்து ஈடுபட்டிருந்தனர். இந்த சிரமதான பணியில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் முன்னாள் வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சியின் அங்கத்தவர்களை உறுப்பினர்கள் கட்சியின் அங்கத்தவர்கள் கலந்து கொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/72510

    • 0 replies
    • 289 views
  14. சுதந்திர தினத்தன்று தமிழில் தேசிய கீதம் பாடப்படமாட்டாது? இலங்கையின் 72ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி கொழும்பின் சுதந்திர சதுக்கத்தில் இலங்கையின் 72ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் மிகப் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுதந்திரதின நிகழ்வு குறித்து முன்னேற்பாட்டு கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) அனர்த்த முகாமைத்துவம், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சில் நடைபெற்றது. இதன்போதே, சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் பாட முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், அனைத்து அமைச்…

  15. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நோக்கம் இல்லை -இரா. சம்பந்தன் Jan 04, 20200 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நோக்கம் தமக்கில்லை எனவும் அது தொடர்பில் கட்சி இறுதி முடிவு மேற்கொள்ளும் எனவும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம் கொழும்பில் 2ஆம் திகதி இரவு நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் நேற்று கருத்து தெரிவித்த போது குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.(15) http://www.samakalam.com/செய்திகள்/எதிர்வரும்-நாடாளுமன்றத்/

    • 4 replies
    • 634 views
  16. குற­வன்­பட்­டவான் மலை அடி­வா­ரத்தில் கிரவல் அகழ்வால் பதற்­ற­ம­டைந்த மக்கள் (மூதூர் நிருபர்) திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் மூதூர் பிர­தேச செய­லாளர் பிரிவில் உள்ள கட்டைப் பறிச்சான் கணே­ச­புரம் பகு­தியில் இயற்­கை­ய­ழ­குடன் திகழ்ந்த குற­வன்­பட்­டவான் மலை­ய­டி­வா­ரத்தில் வெளியார் சிலர் கிரவல் அகழ்வில் ஈடு­பட்­ட­தனால் பொது­மக்கள் பதற்­ற­ம­டைந்­தனர். கிரவல் அகழ்வில் ஈடு­பட்­ட­வர்கள் திரு­கோ­ண­மலை நகரின் நான்காம் கட்டைப் பகு­தியைச் சேர்ந்­த­வர்கள் எனவும் இவர்கள் மூதூர் பிர­தேச செய­லா­ள­ரிடம் அனு­ம­தியைப் பெற்­றி­ருந்­த­தா­கவும் பொது­மக்­க­ளிடம் தெரி­வித்­துள்­ளனர். இத­னை­ய­டுத்து வன இலாக உள்­ளிட்ட கிராம அதி­கா­ரி­க­ளுக்கும் பொது­மக்கள் தகவல் வழங்­கி­ய­துடன் குறித…

  17. காணாமல் போனோர் விவகாரம் : தீர்வுக்கு விசேட குழு காணாமல் போனோர் பிரச்சினை தொடர்பில் கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு காண்பதற்கு விசேட குழுவொன்றினை அமைப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் 02.01.2020 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட காணாமல் போனோர் விவகாரம் தொடர்பான கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் மேற்குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த வாரம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த காணாமல் போனோரின் உறவினர்கள், தமது சார்பாக அரசாங்கத்துடன் கலந்து…

  18. 26 வருடங்களின் பின்னர் பதவியில்லா சாதாரண எம்.பியான ரணில் கடந்த 26 வருடங்களாக பாராளுமன்றத்தில் பதவிகளை வகித்து வந்த ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க அதன் பின்னர் இன்று முதல் முதற்தடவையாக சாதாரண எம்.பியாக பதவி வகிக்கின்றார். எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவின் பெயர் இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் சாதாரண எம்.பியாகியுள்ளார். 1993ஆம் ஆண்டு அப்போதிருந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மரணத்தின் பின்னர் அப்போதிருந்த பிரதமர் டீ.பி.விஜேதுங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அப்போது ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றார். அதன் பின்னர் 1994ஆம் ஆண்டில் ஐ.தே.கவின் தலைவரான காமினி திஸாநாயக்கவின் இறப்புக்கு பின்னர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின…

  19. அரசாங்க ஊடக பேச்சாளர்களாக இராஜாங்க அமைச்சர்களான கெஹேலிய ரம்புக்வெல, மஹிந்தானந்த அளுத்கமகே ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். 2020.01.02ம் திகதி ஜனாதபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையில் இடம் பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம் பெற்றது. இச்சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/72468

    • 1 reply
    • 418 views
  20. வன்னியில் களமிறங்குகிறது தமிழ் முற்போக்கு கூட்டணி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களில் களமிறங்கவுள்ளதென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மக்களின் கோரிக்கைக்கமையவே இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் கொழும்பு, கம்பஹா மற்றும் மலையகத்தில் போட்டியிடுவது தொடர்பாக பரீசிலிக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக ஏனைய கட்சிகளின் தமிழ் அரசியல்வாதிகள் வ…

  21. வட மாகாணத்தில் 120 தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்! வட மாகாணத்தில் 120 தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தற்போது கடமையாற்றும் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் பிரிவிலிருந்து மாகாணத்துக்குள் வேறு பிரிவுகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வடக்கு மாகாணத்திலிருந்து தென் மாகாணத்துக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் சேனநாயக்கவால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் மணல் கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், வாள்வெட்டு வன்முறை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோருடன் தமிழ் பொலிஸ் …

    • 6 replies
    • 1.2k views
  22. வடக்கு மாகாண மக்களுக்காக, மக்களின் உணர்வுகளுக்காக, மாகாண மக்களின் ஏக்கங்களுக்காக ஜனாதிபதி தர விரும்பிய பதவியாகவே ஆளுநர் பதவியை நான் பார்க்கின்றேன். வடக்கு மக்களின் நாடித் துடிப்பை நன்கறிந்துள்ளேன். வடக்கு மக்களின் தேவைகளை நிறைவேற்றவும் அவர்களின் வேதனைகளை ஆற்றுப்படுத்தவும் என சகல நடவடிக்கைகளுக்கும் உத்தரவாதம் பெற்ற பின்னரே நான் இங்கு ஆளுநராக வந்துள்ளேன்" என்று வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பிஎஸ்எம் சார்ள்ஸ் தெரிவித்தார்.

    • 0 replies
    • 263 views
  23. (ஆர்.யசி, எம்,ஆர்.எம்.வஸீம்) ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை தொடர்பாகவோ அதற்கான தீர்வுகள் தொடர்பாகவோ எந்த விடயமும் குறிப்பிடப்படால் இருந்தமை கவலையளிக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை பாராளுமன்ற எதிர்க்கட்சி காரியாலயத்தில் சந்தித்தி கலந்துரையாடியமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதியின் கொள்கைப்பிரகடன உரையில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஒற்றையாட்சிக்கான நிகழ்ச்சி நிரல், பெளத்த மதத்தை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் அவரது பேச்சில் இருந்தன. …

  24. (ஆர்.யசி, எம்,ஆர்.எம்.வஸீம்) ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையைத் தொடர்ந்து சபை ஒரு மணிவரை ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சபாநாயகரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர். விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி கோத்தாபய ராஜகபக்ஷ், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் ஆயியோருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் ஆர். சம்பந்தன் மிகவும் சுவாரஷ்யமாக கலந்துரையாடிக்கொண்டிருந்தார். மேலும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் ஆர். சம்பந்தன் மிகவும் சுவாரஷ்யமாக கலந்துரையாடிக்கொண்டிருந்தார்.இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.…

  25. - பா. நிரோஷ் அரசமைப்புக்கு எதிரான பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் செயற்பாடுகளே, தான் ஐ.தே.கவில் இணையக் காரணமென, புதிதாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பெற்ற வருண லியனகே தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் வருண லியனகே, நாடாளுமன்றத்தின் இன்று, எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்துக்கொண்டார். மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசமைப்புக்கு எதிரானச் செயற்பாடுகளால், தான்அதிருப்தி அடைந்ததாகவும் இதனாலேயே, தான் ஐ.தே.கவில் இணைந்து கொண்டதாகவும், தனது முதலாவது நாடாளுமன்ற உரையில் அவர் தெரிவித்தார். மேலும், எதிர்வரும் தேர்தலில் ஐ.தே.கவின் சார்பிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் கூறிய அவர், …

    • 1 reply
    • 382 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.