Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இம் மாதம் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். பெரும்பாலும் இம் மாதத்தின் இரண்டாம் வாரம் அளவில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து, அவர் மேற்கொள்ளும் இரண்டாவது விஜயமாக இது அமைந்துள்ளது. கடந்த மாதம் சீனத் தூதுவர் மூலம் சீனாவுக்கு வருமாறு அந் நாட்டு ஜனாதிபதி ஜின்பிங் விடுத்த அழைப்புக்கு இணங்கவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது இரு நாட்டு தலைவர்களுக்கிடையிலும் பரஸ்பட விடயங்கள், முதலீட்டு நடவடிக்கைகள், சுற்றுலா மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தும…

    • 4 replies
    • 1k views
  2. யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மேற்கொள்ளப்படுகின்ற சென்னைக்கான விமானப் போக்குவரத்துக்காக, பயணிகளிடம் இருந்து, விமான நிலைய வரியாகப் பெருந்தொகைப் பணம் அறவிடப்படுகின்றமை தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்வதற்கு, அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டுக்கான முதலாவது அமைச்சரவை கூட்டம், நேற்று (02), ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிலையில், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால், மேற்படி விடயம் அமைச்சரவையின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்குப் பயணங்களை மேற்கொள்வோருக்கா…

    • 0 replies
    • 688 views
  3. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரும் சுயாதீன ஊடகவியலாளருமாகிய செல்வக்குமார் நிலாந்தனின் வீட்டிற்கு அவரை கைதுசெய்ய இரவில் சென்ற பொலிஸார் அவர் இல்லாததால் குடும்பத்தினரை அச்சுறுத்தி சென்றுள்ளனர். நேற்று இரவு 9.10 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரும் சுதந்திர ஊடகவியலாளருமாகிய செல்வக்குமார் நிலாந்தன் வீட்டிற்கு சிவில் உடையில் சென்ற ஏறாவூர் பொலிஸார் அவரை கைது செய்ய முயற்சித்துள்ளனர். ஊடகவியலாளர் வீட்டில் இல்லாத காரணத்தால் வீட்டாரை அச்சுறுத்திய தோடு ஊடகவியலாளர் செல்வக்குமார் நிலாந்தனை நாளை காலை 9 மணிக்கு ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு குடும்பத்தாரை அச்சுறுத்தி சென்றுள்ளனர். …

    • 0 replies
    • 645 views
  4. யுத்தத்தின் பாதிப்புக்களை மீளக் கட்டியெழுப்பவும் கடந்த காலங்களில் வடக்கு மாகாண மக்களுக்கு கிடைக்காதவற்றை பெற்றுக் கொடுப்பதற்கு உள்ளங்களில் இருக்கும் அளுத்தங்கள் இறுக்கங்கள் குறைகள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு இதய சுத்தியுடனும் திறந்த மனத்துடனும் குறைகள் தவறுகளை நேரில் சுட்டிக்காட்டுபவர்களாக என்னுடன் இணையுமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ஸ் தெரிவித்தார். வடமாகாண ஆளுநராக இன்று உத்தியோக பூர்வமாக கடமை ஏற்றுக் கொண்ட பின்னர் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், வவுனியா மாவட்டத்தில் இருந்து அரசாங்க அதிபராக வெளியேறியபோது லேசான இதயத்துடன் வெளியேறியிருந்தேன். ஏனெனில் எ…

    • 7 replies
    • 1k views
  5. கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை ரயில்கள் சேவைகள் நிறுத்தம் கொழும்பு, கோட்டை – காங்கேசன்துறை இடையே இயங்கும் இரண்டு ரயில்களின் சேவைகளை, டிசம்பர் 31 ஆம் திகதி முதல் நிறுத்துவதற்கு, ரயில்வேத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 87 மற்றும் 88 இலக்கம் கொண்ட ரயில்கள், (31) செவ்வாய்க்கிழமை முதல் இயங்கமாட்டாது. பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வேத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதற்கு பதிலாக இரண்டு ரயில்கள் கொழும்பு, கோட்டை மற்றும் தலைமன்னார் இடையே இயக்கப்படும். ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த இரண்டு ரயில்களும் கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இரவு 7:15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3:25 மணிக்கு தலைம…

  6. ’சுமந்திரனின் முடிவுகளால் கூட்டமைப்புக்கு சரிவு’ “போர்முடிவடைந்த பின்னர் ‘ஒற்றுமை’ என்பதே தமிழர்களுக்கு எஞ்சியிருக்கும் பலம் பொருந்திய ஆயுதமாகும். அதனை சிதைப்பதற்கு பேரினவாதிகள் வழிமீது விழிவைத்து காத்திருக்கின்றனர். எனவே பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் சிக்கும் வகையில் தமிழ்க்கட்சிகள் தீர்மானங்களை எடுக்ககூடாது” என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார். 2020 ஏப்ரல் இறுதி வாரத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் கொழும்பு, கம்பஹா மற்றும் மலையகத்தில் போட்டியிடுவது தொடர்பில் பரீசிலிக்கப்பட்டுவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊ…

    • 3 replies
    • 826 views
  7. சிறுபான்மையினரை அரசியலிருந்து ஓரங்கட்டுகிறதா தனிநபர் பிரேரணை? சிறுபான்மையினரின் ஆதரவு இல்லாமல் அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு 15 ஆம் திருத்தச் சட்டத்தை மாற்றும் தனிநபர் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தனிநபர் பிரேரணை, அரச வர்த்தமானியில் நாடாளுமன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாவது, “இலங்கையின் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில், ஒரு தொகுதிக்கான வாக்கு வரம்பு மட்டம் 12.5 சதவீதமாக இருந்தது. எனினும் 1988 இல் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான எம்.எச்.எம்.அஷ்ரப்பின் வேண்…

  8. பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை நீக்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி! பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை நீக்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவினால் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இந்த அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் அமைச்சர் தினேஸ் குணவர்தனவின் ஆலோசனைக்கு அமைய புதி அரசாங்கம் குறித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டுவரப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/பயங்கரவாத-எதிர்ப்பு-சட்-4/

  9. யாழ்ப்பாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபராகக் கபில கடுவத்த நியமனம். யாழ்ப்பாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள கபில கடுவத்த, தமது கடமைகளை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7.05 மணிக்குப் உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றார். மூத்த பொலிஸ் அத்தியட்சகராக நீர்கொழும்பில் கடமையாற்றிய அவர், அண்மையில் பிரதிப் பொலிஸ்மா அதிபராகப் பதவி உயர்த்தப்பட்டார். முதன் முறையாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அவருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இருந்த மகேஷ் சேனாரட்ன, கொழும்பு குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/யாழ்ப்பாணப்-பிரதிப்-பொலி/ புத்த பிக்குமார், பாதிரியார் ஆகியோரை காணவில்ல…

  10. ஜனாதிபதி கோட்டாவின் அதிகாரங்களை பலப்படுத்த 22 ஆவது திருத்தம் தயார்! பாதுகாப்பு அமைச்சு மற்றும் வேறு அமைச்சுக்களையும் ஜனாதிபதி தமது வசம் எடுத்துக் கொள்வதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் தனிநபர் சட்டமூலம் ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சபையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் என இந்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தின் 19 ஆவது திருத்தத்தின் கீழ், சாம்பல் நிறப் பகுதியாக மாறியுள்ள ஜனாதிபதிக்கான அமைச்சுகள் ஒதுக்கீடு செய்யப்படுவது குறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த திருத்தம் கொண்…

    • 4 replies
    • 1.2k views
  11. காணாமல்போனோர் பிரச்சினை தொடர்பில் கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து அதனடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் காண்பதற்கு விசேட குழுவொன்றினை அமைப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் மற்றும் நிர்வாக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று 02.01.2020 இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட காணாமல் போனோர் விவகாரம் தொடர்பான கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் மேற்குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த வாரம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த காணாமல் போனோரின் உறவினர்கள், தமது சார்பாக அரசாங்கத்துடன் கலந்துரையாடி கௌரவமான தீர்வினைப் பெற்றுத் தருமாறு வேண்டுகோள் வ…

    • 0 replies
    • 348 views
  12. (எம்.எப்.எம்.பஸீர்) இன்டர் போல் எனப்படும் சர்வதேச பொலிஸாரின் தகவல் பாதுகாப்பு அதிகாரியாக (Data Protection Officer) இலங்கையில் செயற்பட்ட சி.ஐ.டி.யின் பொலிஸ் அத்தியட்சர் ரஞ்ஜித் வெதசிங்கவுக்கும் வெளிநாடு செல்ல தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் இலங்கையில் உள்ள இன்டர்போல் கிளையின் பொறுப்பாளராக செயற்பட்ட அவரது பணியின் தன்மையின் அடிப்படையில் அவருக்கு எதிராக அவ்வாறான தடைகளை பிறப்பிப்பது பொருத்தமானதல்ல என பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். இந் நிலையில் சி.ஐ.டி.யின் 704 பேருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணம் தொடர்பிலான தடைகள், தனக்கெதிராகவும் முன்வைக்கப்பட்டுள்ளமை ஊடாக தமது உரிமை மீறப்படுவதாக கூறி பொலிஸ் அத்தியட்சர் ரஞ்ஜி…

    • 0 replies
    • 310 views
  13. அரசாங்கத்தின் மீது சுவிஸுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது – தினேஷ் சுவிஸ் தூதரகத்தின் உள்ளூர் அதிகாரியின் சம்பவத்தை இலங்கை அரசு கையாண்ட விதம் குறித்து சுவிஸ் அரசு மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இதனால் இருநாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவு மேலும் வலுப்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டள்ளார். கொழும்பில் ஊடகவிலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மூன்று நாட்களுக்கு முன்பு சுவிஸ் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு, இலங்கை அரசாங்கத்தின் நியாயத்தன்மையை தெளிவாகக் சுட்டிக்காட்டுகின்றது. எனவே இலங்கை அரசாங்கத்துடன் இருதரப்பு உறவையும் நட்பையும் தொடர்ந்து சுவிஸ் பேணுமென நம்புகின…

    • 1 reply
    • 678 views
  14. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வலியுறுத்தி யாழிலுள்ள ஈ.பி.டி.பி கட்சி அலுவலகத்தின் முன்பாக இன்று காலை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க இணைப்பாளர் தாக்கப்பட்டது, மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தொடர்பிருப்பதாக தெரிவித்து, அவரை கைது செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். அதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களின் பதாகைகளை ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் சிலர் பறிக்க முற்பட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர். அத்துடன் அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் உறவுக…

    • 0 replies
    • 251 views
  15. ராஜபக்‌ச அரசு ஏமாற்ற முடியாது – சம்பந்தன் தெரிவிப்பு “இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் வெளிநாடுகளினதும் சர்வதேச அமைப்புகளினதும் தீவிர கண்காணிப்புக்குள் இந்த நாடு உள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு தமிழ் மக்களை இனியும் ஏமாற்ற முடியாது.” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, “பிறந்துள்ள புதிய ஆண்டில் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான – நீதியான அரசியல் தீர்வை காலதாமதமின்றி ராஜபக்ச அரசு வழங்க வேண்டும். 2019ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு திருப்தி தரக்கூடிய விடயங்கள் எதுவும…

    • 1 reply
    • 484 views
  16. இந்த ஆண்டு தேர்தல் வருடமாகும் – மஹிந்த! இந்த ஆண்டு தேர்தல் வருடமாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று(புதன்கிழமை) கதிர்காம புனிதத் தலம் உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். பிரதமர் முதலில் கதிர்காம புனிதத் தலத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்போது புனிதத் தலத்தின் அபிவிருத்திக்கான சகல பணிகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என பிரதமர் கூறியுள்ளார். நாளாந்தம் ஏற்பட்டுவரும் பௌத்த எழுச்சியினால், சமூகத்திற்கு சிறந்த நன்மைகள் கிடைத்திருக்கின்றன. மஹா சங்கத்தினரை இழிவுபடுத்திய காலம் முடிவிற்கு வந்திருப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, தங்காளை பிரதேசத்தி…

    • 1 reply
    • 262 views
  17. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழர்களின் பிரதிநிதிகளே காரணம்! டக்ளஸ் தேவானந்தா இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு பிரதான காரணம் இந்திய அரசாங்கமோ இலங்கை அரசாங்கமோ அல்ல. தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொல்பவர்களே அந்த பிரச்சனைகளுக்கு காரணம், வேறு எவரும் இல்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்றையதினம் இடம்பெற்ற கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், காணாமல் போனோரின் உறவுகளை பல மாவட்டங்களிலும் சந்தித்திருக்கின்றேன். குறிப்பாக காணாமல் ப…

  18. யாழ்ப்பாணத்திற்கு அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படும்: லொஹான் ரத்வத்த hare மத்திய அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதன் பின், யாழ்ப்பாணம் வரை அதிவேகப் நெடுஞ்சாலை அமைக்கப்படுமென்று பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார். கண்டி - கொழும்பு மத்திய அதிவேகப் நெடுஞ்சாலை 3 கட்டங்களின் கீழ் அமைக்கப்படுகிறது. இவற்றில் 2 கட்டங்களின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 2 வருடங்களுக்குள் மத்திய அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், கொழும்பிலிருந்து இரத்தினபுரி வரையான ருவன்புர அதிவேகப் நெடுஞ்சாலையும், குருநாகலில் இருந்து தம்புள்ளை வரையான…

    • 2 replies
    • 801 views
  19. யாழ் பல்கலைக்கழக பேரவை தீர்மானத்துக்கு எதிராக கலாநிதி குருபரன் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு சட்டத்துறையில் பணியாற்றும் சட்டத்தரணிகள் நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடைவிதித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியமைக்கும் தான் நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவை எடுத்த தீர்மானத்துக்கு எதிராகவும் சடத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் சார்பில் சட்டத்தரணி மோகன் பாலேந்திரா இந்த மனுவை கடந்த 17ஆம் திகதி உயர் நீதிமன்றில் சமர்ப்பித்தார். ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் வரும் 15ஆம் திகதி தைப்பொங்கலுக்கு…

  20. கூட்­ட­மைப்புத் தலை­மையின் தவ­றான செயற்­பா­டு­களே மாற்றுத் தலை­மைக்­கான தேவையை ஏற்­ப­டுத்­தி­யுள்ளது - சுரேஷ் (தி.சோபிதன்) தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைமை பல தவறுகளை இழைத்­தி­ருக்­கின்­றது. அதனால் மக்கள் மத்­தியில் விர­க்­தியும் கோபமும் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. அந்தத் தலை­மையின் இத்­த­கைய செயற்­பா­டு­களே மாற்றுத் தலை­மையின் தேவையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. ஆகை­யினால் இந்த மாற்றுத் தலை­மையை மக்கள் முழு­மை­யாக ஆத­ரிப்­பார்கள் என்றே நம்­பு­கின்றோம் என ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்­துள்ளார். சம­கால அர­சியல் நிலை­மைகள் தொடர்பில் அவர் ஊட­கங்­க­ளுக்கு நேற்று கருத்­துக்­களை தெரி­விக்கும்போதே அவர் இதனை தெரி­வித்தார். அ…

  21. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கிழக்கில் த.தே.கூ உடன் இணைந்து செயற்படும்! எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நாடாளுமன்ற தேர்தலிலும், மாகாணசபை தேர்தலிலும் சேர்ந்து இயங்குவதற்கு தயாரான நிலையில் இருக்கின்றது என கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெத்தினம் இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, வாவிக்கரை வீதியில் அமைந்திருக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் கட்சி காரியாலயத்தில் நேற்று ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், கடந்த மாதம் ஈழமக்கள் புரட்சிகர விடு…

    • 2 replies
    • 864 views
  22. -எஸ்.நிதர்ஷன் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான மாற்று அணி உருவாக்கும் முயற்சிகள், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து, மிக விரைவில், கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு, கூட்டணி தொடர்பான உத்தியோகபூர்வ முடிவுகளும் அறிவிக்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இந்தக் கூட்டணி உருவாக்கத்திலும் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான ஆசனப் பங்கீடுகள் தொடர்பிலும் சில முரண்பாடுகள் இருப்பதாகத் தெரியவருகிறது. http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மறற-அண-உரவககம-மயறச-இறதக-கடடதத-எடடயளளத/71-243257

  23. ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: 3 இலங்கையர்களுக்கு டுபாயில் சிறைத்தண்டனை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த 3 இலங்கையர்களிற்கு டுபாய் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. மட்டக்களப்பு சீயோன் தேவாலய தாக்குதலில் உறவினரை இழந்த மட்டக்களப்பு இளைஞன் மற்றும் இரண்டு சிங்கள இளைஞர்களுக்கே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும், தங்களது கையடக்கத் தொலைபேசியின் வழியாக சமூக ஊடகங்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்புடைய படங்களை பகிர்ந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர். மட்டக்களப்பை சேர்ந்த குணதாஸ் டிரான் மற்றும் ரமேஷ் பெர்னாண்டோ, விஸ்வா டி சில்வா ஆகியோரே தண்டனைக்குள்ளாகியுள்ளனர். ஹோட்டலொன்றின் பாதுகாப்பு அதிகாரியா…

    • 3 replies
    • 625 views
  24. இனியபாரதி என்ற குமாரசாமி புஸ்பகுமாரின் விளக்கமறியல் நீடிப்பு… January 1, 2020 கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இனியபாரதி என அழைக்கப்படும் குமாரசாமி புஸ்பகுமாரின் விளக்கமறியல் உத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரான இனியபாரதி அக்கரைப்பற்று மேலதிக நீதவான் பி. சிவகுமார் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது எதிர்வரும் 9ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அம்பாறை – திருக்கோவில், அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசங்களில் 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை 7 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலேயே இனியபாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியல…

  25. BMW காருக்கு ஆசைப்பட்டு பல இலட்சங்களை பறிகொடுத்த குடும்பத்தினர் – யாழில் சம்பவம்! பி.எம்.டபிள்யூ காருக்கும், ஸ்ரேலிங் பவுண்ஸ்க்கும் ஆசைப்பட்டு 31 இலட்ச ரூபாயை குடும்பம் ஒன்று இழந்துள்ளது. யாழில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த குடும்பத்தின் குடும்ப தலைவர் மன்னாரில் பணி நிமிர்த்தம் அங்கு தங்கி நின்று பணியாற்றி வரும் நிலையில் தாயும், மகளும் யாழில் வசித்து வருகின்றார்கள். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னர் மகளின் கைத்தொலைபேசிக்கு, லண்டனில் நடந்த சீட்டிழுப்பு ஒன்றில் உங்களுடைய கைத்தொலைபேசி இலக்கத்திற்கு புதிய ரக பி.எம்.டபிள்யூ கார் ஒன்றும் ஸ்ரேலிங் பவுண்ஸ் பணமும் விழுந்துள்ளதாகவும் அது தொடர்பாக மேலதிக தகவல்களை பெற்று…

    • 10 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.