ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142967 topics in this forum
-
நீராவியடி ஆலயத்தில் புதிய சர்ச்சை!- இராணுவ முகாமில் ஆலய தொல்பொருள் சிதைவுகள் முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் தொல்பொருள் சிதைவுகள் இருப்பதாக, குறித்த பகுதிக்கு வருகை தந்த பௌத்த மதகுருமார்களிடம் விகாரை தரப்பு காண்பித்ததினால் புதிய சர்ச்சை ஒன்று நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தோன்றியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து பௌத்த மதகுரு ஒருவர் அங்கு விகாரை அமைத்து குடியிருந்த நிலையில் அந்த பகுதியில் பல்வேறு சிக்கல் நிலைமைகள் தோன்றியிருந்தது. அதனை தொடர்ந்து குறித்த விகாரையில் குடிகொண்டிருந்த விகாராதிபதி மரணமடைந்ததை தொடர்ந்து அவரது உடலை நீதிமன்ற அனுமதியையும் மீறி ஆலய கே…
-
- 0 replies
- 423 views
-
-
முரண்பாடான சாட்சியம் – தெரிவுக்குழுவை தவறாக வழிநடத்த முயன்ற சிறிலங்கா அதிபர் Oct 24, 2019 | 6:16by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரித்த நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்பாக, இரண்டு விடயங்களில் முரண்பாடான கூற்றுக்களை முன்வைத்து- சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவுக்குழுவை “வேண்டுமென்றே தவறாக வழிநடத்தியுள்ளார்” என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடந்த போது, சிங்கப்பூரில் தங்கியிருந்த சிறிலங்கா அதிபர், அனைத்து விமானங்களின் ஆசனங்களும் நிரம்பியிருந்ததால், தன்னால் அன்றே உடனடியாக நாடு திரும்ப முடியவில்லை என்று, ஒரு மூடிய சாட்சியத்தில் தெரிவித்திருந்தார். தாக்குதல் நடந…
-
- 2 replies
- 365 views
-
-
Friday, October 25, 2019 - 1:00am கோட்டாபய ராஜபக்ச வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்து கேள்வி எழுப்பினால், துப்பாக்கி மூலம் தான் பதில் கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும தெரிவித்தார். ஆனால், வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என ஆர்ப்பாட்டம் செய்பவர்களை சஜித் பிரேமதாச தாக்கவோ கொல்லவோ மாட்டார் எனவும் அவர் குறிப்பிட்டார். வொக்சோல் வீதியில் அமைந்துள்ள ஐ.தே.க செயற்பாட்டு நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது, கடந்த ஒக்டோபர் மாதம் பின்கதவால் பிரதமரான மஹிந்த ராஜபக்சவைப் பாராளுமன்றத்தில் மூன்று தடவை தோற்கடித்தோம். இம்முறையும் அவர்களின் முயற்சி தோற்கடிக்கப்படும். பிரதமராக பதவி ஏ…
-
- 1 reply
- 751 views
-
-
யாழ். செல்லும் கோத்தாபய பொதுஜனப் பெரமுனவின் ஜனாதிபதிவேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் பிரச்சார நடவடிக்கைகளுக்ககாக யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் ஆளுநரும் பொதுஜனப் பெரமுனவின் இணைப்பாளருமான றெஜினோல்ட் குரே தெரிவித்தார். எதிர்வரும் 28 ஆம் திகதி எமது கட்சியின் ஐனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையிலான குழுவினர் யாழில் மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக செல்லவுள்ளனர். எனவே இக் கட்சியின் வேட்பாளர்கள் மக்களை தேடி செல்கின்றமையினால் மக்கள் தமது ஆதரவை வழங்கிக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/67…
-
- 2 replies
- 542 views
-
-
ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்தின் தீர்மானம் அறிவிப்பு வடக்கிலுள்ள 5 கட்சிகளும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்ற தீர்மானத்தை எடுக்கின்றதோ அன்று ஜனாதிபதி வேட்பாளர் நிலையிலிருந்து நான் உடன் நீங்கிக் கொள்வேன் என ஜனாதிபதி வேட்பாளரான சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். 13 அம்ச கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளாகும். தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தயாரில்லாமல், அவர்களின் வாக்குகளை மட்டும் தெற்கு அரசியல்வாதிகள் கோருவது எந்தவகையில் நியாயமாகும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்…
-
- 1 reply
- 507 views
-
-
ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய மற்றும் சஜித் பிறேமதாசவின் வாக்குகளை புறக்கணிப்போம் என தெரிவித்து தாயகத்தில் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 978 வது நாளாக காணாமல்போன உறவினர்களால் சுழற்சிமுறை போராட்டம் இடம்பெறும் கொட்டகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது அமெரிக்க ஐரோப்பிய கொடிகளை தாங்கியிருந்ததுடன், தமிழர்கள் போர்க்குற்றவாளியை விரும்பினால், வெள்ளை வேன் வேண்டும் என்றால், துரோகிகள் டக்ளஸ் கருணாவை விரும்பினால் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு வாக்களியுங்கள், தமிழ் தாயகத்தில் புத்தமும் சிங்கள குடியேற்றத்தையும், சிங்கள எக்கிய ராஜ்ஜிய என்று கூறப்படும் ஒற்றையாட்சியையும் விரும்பினால் சஜித் பிரேம…
-
- 2 replies
- 786 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் 9 மாகாணங்களில் கண்காணிப்பு நடவடிக்கை ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் 30 பிரதிநிதிகள் 9 மாகாணங்களுக்கு செல்லவுள்ளனர். இலங்கைக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வரும் இவர்கள் இன்று முதல் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். அத்தோடு அதற்கு முன்னதாக அவர்கள் கொழும்பில் ஊடகங்களை சந்திக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நீண்டகால கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள். ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் மொத்தமாக 60 தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடவுள்ளனர். இவர்களுள் குறுகிய கால கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள 30 பேர் எதிர்…
-
- 2 replies
- 645 views
-
-
-சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள ஏழு குளங்களைப் புனரமைப்பதற்கான ஒப்பந்தங்கள், வௌ்ளிக்கிழமை (25) கைச்சாத்திடப்படவுள்ளதாக, மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இரணைமடுக்குளம் முழுமையாகப் புனரமைக்கப்பட்டுள்ள போதும், ஏனைய குளங்களின் புனரமைப்புப் பணிகள் கடந்த காலங்களில் பகுதியளவில் முன்னெடுக்கப்பட்டாலும் பல்வேறு தேவைப்பாடுகள் காணப்படுகின்றன. இந்நிலையில், தற்போது, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கல்மடுக்குளம், அக்கரயான்குளம், பிரமந்தனாறுக்குளம், குடமுருட்டிக்குளம், கரியாலை நாகபடுவான் குளம், வன்னேரிக்குளம், கனகாம்பிகைக்குளம் உள்ளிட்ட பாரிய நீர்ப்பாசனக் குளங்களை, உலக வங்கியின் நிதியுதவியுடன் புனரமைப்பதற்கா…
-
- 1 reply
- 681 views
-
-
லசந்த விக்ரமதுங்கவின் மகள் அகிம்சா விக்ரமதுங்க அமெரிக்க கலிபோர்னியா மானிலத்தில் கோத்தாவுக்கு எதிராக தொடுத்த வழக்கை அந்த நீதிமன்றம் தள்ளுபடிசெய்த நிலையில் அகிம்சா விக்ரமதுங்க மேல் முறையீடு செய்ய உள்ளதால் அவ் வழக்கை சட்ட ரீதியாக சிந்திப்போம் என கோத்தபாயவின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கோத்தபாயவின் ஜனாதிபதி சட்டத்தரணிகளான ரஷீக் சறூக், குஷான் டி அல்விஸ், மயூர குணவன்சே, வீரகோன் ஆகியோர் குறிப்பிட்டனர். கோத்தபாய ராஜபக்ஷவிற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் அவரை தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் முகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு ஜனநாயக சூழலில் இவ்விதமான நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கதல்ல. கோத்தாவ…
-
- 0 replies
- 375 views
-
-
(இரா. செல்வராஜ்) தோட்டத்தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகையின் மேலதிக முற்பணமாக 5 ஆயிரம் வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவுக்கு எதிராக தேர்தல் சட்டவிதிகளின் கீழ் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளப்போவதில்லை எனசுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தோட்டத்தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் ருபாவிற்கு மேலதிகமாக 5 ஆயிரம் ரூபாவை வழங்க தேயிலை சபையினுடாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியிருந்தது. இவ்விவகாரம் தொடர்பாக பல தரப்பிலும் தேர்தல் காலத்தில் மேலதிகமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க முடியுமா என்ற வாத விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் இது குறித்து சுயாதீன தேர்தல்கள்…
-
- 0 replies
- 234 views
-
-
கிழக்கு தமிழர் ஒன்றியம் தனது பத்திரிகையாளர் மாநாட்டில் ஹிஸ்புல்லாவின் இரண்டாவது வாக்கு தெரிவின் மூலம் இந்த நாட்டின் ஜனாதிபதியை தெரிவு செய்ய வைத்திருக்கும் முறைமை மிகச்சிறந்த இராஜதந்திரம் எனவும் நடைமுறைக்கு மிகவும் சாத்தியமானது எனவும் பாராட்டியிருக்கிறார்கள். தமிழர் தரப்பில் இராஜதந்திர நகர்வை தவறிவிட்டார்கள்.தமிழர்களின் வாக்கையும் மொத்தமாக ஒருவருக்கு வழங்கிவிட்டு அதனை உறுதி செய்ய முடியாமல் நமது உரிமையை இழந்து நிற்கின்றோம். ஹிஸ்புல்லாவின் முன்னெடுப்பைப் போல் ஒரு தமிழர் முன்வந்து பொது வேட்பாளராக அவரது இரண்டாவது தெரிவை கொண்டு ஒரு ஜனாதிபதியை உருவாக்கி பேரம் பேசும் சக்தியாக மாறி இருக்க வேண்டும். ஹிஸ்புல்லாஹ் தனது முஸ்லிம் வாக்குகளை கொண்டு ஒரு ஜனாத…
-
- 0 replies
- 416 views
-
-
முஸ்லிம் சமூகம் இரு பக்கமும் நிற்பதே நமக்குப் பாதுகாப்பாகும் – பைஸர் முஸ்தபா முஸ்லிம் சமூகம் இரு பக்கமும் நிற்பதே நமக்குப் பாதுகாப்பாகும். எனவே, இரு தரப்பாக முஸ்லிம் மக்களும் நின்று கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கும் தமது வாக்குகளை அளிக்க முன்வர வேண்டும் என, ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார். இராஜகிரியவிலுள்ள அவரது அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று, நேற்று (23) மாலை இடம்பெற்றது. இச்சந்திப்பில் கலந்து கொண்டு அவர் மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது, கடந்த அரசாங்கத்தில் அளுத்கம, பேருவளை போன்ற இடங்களில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, அந்த அரசாங்கத்தை மாற்றுவதற்கு முத…
-
- 0 replies
- 304 views
-
-
சஹ்ரானுடன் தொடர்புடையவர்கள் தெரிவு குழு அறிக்கையின் ஊடாக பாதுகாக்கப்பட்டுள்ளார்கள் : செஹான் Published by R. Kalaichelvan on 2019-10-24 14:28:53 (இராஜதுரை ஹஷான்) ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் குறித்து பாராளுமன்றத்தில் தெரிவு குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் எவ்வித புதிய விடயங்களும், கண்டுப்பிடிப்புக்களும் உள்ளடக்கப்படவில்லை. புலனாய்வு பிரிவினரை மையப்படுத்தியே குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன. பயங்கரவாதிகளுடன் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்கள் குறித்து எவ்வித விடயங்களும் வெளிப்படுத்தப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின்…
-
- 0 replies
- 244 views
-
-
ஈஸ்டர் ஞாயிறன்று இந்திய தூதரகமும் இலக்கு Oct 24, 2019 | 6:11by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் கொழும்பில் உள்ள இந்திய தூதரகமும், இந்தியர்கள் அடிக்கடி வந்து செல்லும் விடுதி ஒன்றும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரிகளால் இலக்கு வைக்கப்பட்டிருந்ததாக, 21/4 தாக்குதல் குறித்து விசாரித்த நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிவுக்குழுவின் அறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையிலேயே, கிடைத்துள்ள புலனாய்வு அறிக்கைகளின்படி, இந்தியத் தூதரகமும் வாய்ப்புள்ள இலக்குகளில் ஒன்றாக இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர…
-
- 0 replies
- 230 views
-
-
முன்னாள் மீள்குடியேற்ற அமைச்சர் சஜித்துக்கு ஆதரவு Oct 24, 2019 | 6:07by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கரந்தெனிய தொகுதி அமைப்பாளரும், முன்னாள் மீள் குடியேற்ற அமைச்சருமான குணரத்ன வீரக்கோன், புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். காலியில் நடந்த ஐதேகவின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று அவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்க முடிவு செய்ததை அடுத்து, அந்தக் கட்சியின் அமைப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகள் பலரும் ஐதேக வேட…
-
- 0 replies
- 231 views
-
-
அரச புலனாய்வு சேவை தலைவரே முக்கிய பொறுப்பு – தெரிவுக்குழு Oct 24, 2019 | 6:05by கார்வண்ணன் in செய்திகள் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுப்பதற்குத் தவறியதில், அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் நிலந்த ஜெயவர்த்தனவுக்கு பெரும் பங்கு இருப்பதாகவும், ஏனைய புலனாய்வுப் பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு செயலர், காவல்துறை மாஅதிபர், ஆகியோர் தமது பொறுப்புக்களில் தவறியுள்ளதாகவும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு குற்றம்சாட்டியுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரித்த தெரிவுக்குழுவின் 240 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை, அதன் உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். சிறிலங்கா அதிபர், பிரதமர், பாதுகாப்பு இராஜ…
-
- 0 replies
- 228 views
-
-
2005ம் ஆண்டு ரோயல் பார்க் தொடர்மாடியில் கொலை செய்யப்பட்ட சுவீடன் யுவதி யுவோன் ஜோன்சனின்சகோதரி கரோலின் ஜோன்சன் பிரட்லி தனது சகோதரியை படுகொலை செய்த நபரிற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளமைக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.முகநூலில் இதனை பதிவு செய்துள்ள அவர் இலங்கை ஜனாதிபதியின் இந்த முடிவு தனது இதயத்தை நொருக்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.ரோயல் பார்க் தொடர்மாடியில் படுகொலை செய்யப்பட்ட யுவதியின் சகோதரி தனது முகநூலில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.2005 இல் ரோயல் பார்க் தொடர்மாடியில் ஈவிரக்கமற்ற முறையில் கொலை செய்யப்பட்ட 19 வயது சுவீடன் யுவதியான எனது சகோதரி குறித்து செய்திகள் மூலம் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.எனது…
-
- 0 replies
- 336 views
-
-
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், காவற்துறை உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது…. October 22, 2019 ஆயுதக்குழு ஒன்றைச் சேர்ந்தவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபையின் அம்பாறை மாவட்ட உறுப்பினருமான ஒருவரும், காவற்துறை உத்தியோகத்தரும் மன்னார் இலுப்பைக் கடவை பிரதேசத்தில் சொகுசு வாகனம் ஒன்றில் 164.3 கிலோ கிராம் கஞ்சாவுடன், கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரையும் எதிிர்வரும் 14 நாட்டகள் விளக்கமறியலில் வைக்கு மாறு மன்னார் நீதவான் நீதிமன்ற நீதவான்எம். கணேசராஜா இன்று செவ்வாய்க்கிழமை (22.10.19) உத்தரவிட்டார். மன்னார் இலுப்பைக்கடவை வீதியல் அமைக்கப்பட்டிருக்கும் கடற்படையின் வீதி சோதனை சாவடியில் சம்பவ தினம் 19 ஆம் திகதி சொகுசு வானம் ஒன்று வீதிச் சோதன…
-
- 0 replies
- 363 views
-
-
இலங்கையில் கடற்படையின் பல இரகசிய முகாம்கள்- முக்கிய அதிகாரிகளிற்கு தொடர்பு -திருகோணமலை இரகசிய முகாமிற்கு கோத்தாபய பல தடவை சென்றார்- சர்வதேச அமைப்பு அதிர்ச்சி அறிக்கை இலங்கை கடற்படையினரின் பல இரகசிய முகாம்களில் 2008 முதல் 2014 வரை இடம்பெற்ற சித்திரவதைகளில் முக்கிய அதிகாரிகளிற்கு தொடர்புள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு இதன் காரணமாக உலக நாடுகள் இலங்கை கடற்படையுடனான உறவுகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தனது புதிய அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. 2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னரும் கடற்படையினர் தமது சித்திரவதைகளை நிறு…
-
- 0 replies
- 371 views
-
-
(எம்.மனோசித்ரா) நாட்டில் தமிழ் மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. மாறாக சுமந்திரனுக்கும் விக்கினேஸ்வரனுக்கும் மாத்திரமே பிரச்சினை இருக்கிறது. கிறிஸ்தவ மதத்தவரான சுமந்திரன் இந்து ஆலயம் குறித்து அக்கறை காட்ட வேண்டிய அவசியம் என்ன? என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கேள்வியெழுப்பினார். இராஜகிரியவில் உள்ள பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் தற்போது தனி அரசாங்கமே காணப்படுகிறது. பிரிவினை வாதத்தை வளர்க்கும் தமிழ் தேசிய கூ…
-
- 0 replies
- 263 views
-
-
(எம்.மனோசித்ரா) ஐந்து பிரதான கட்சிகளினால் முன்வைக்கப்பட்டிருக்கும் 13 கோரிக்கைகளை பிரதான வேட்பாளர்களான சஜித் பிரேமதாச அல்லது கோத்தாபய ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டால் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலக தயார் என்று முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். கொழும்பு - இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வு மாத்திரமின்றி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கும் இது வரையில் எந்த தலைவரும் தீர்வு வழங்கவில்லை. கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட 10,000 பேர் இராணுவத்திடம் சரணடைந்தார்கள். அவ்வாறு சரணடைந்தவர்களுக்கு என்ன ஆனது என்பதற்கு பதில் கிடை…
-
- 1 reply
- 535 views
-
-
சவேந்திர சில்வாவின் நியமனம் - இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்- அமெரிக்கா யுத்த குற்றச்சாட்டுகள் மனித உரிமை குற்றச்சாட்டுகளிற்கு உள்ளானவரை இலங்கை இராணுவதளபதியாக நியமித்துள்ளதன் காரணமாக இலங்கையுடனான பாதுகாப்பு உறவினை குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைத்துகொள்ளவேண்டியநிலையேற்படலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஜனநாயகம் மனித உரிமை தொழிலாளர் பணியகத்தின் உதவி செயலாளர் ரொபேர்ட் ஏ டெஸ்டிரோ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அமெரிக்க காங்கிரசின் விசாரணை குழு முன்னிலையில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு நல்லிணக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்ற ஒரு தருணத்தில்…
-
- 5 replies
- 745 views
-
-
(ஆர்.யசி) பிரதான கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தை அவதானித்துவிட்டு தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பிரதான கட்சிகள் எவ்வாறு முன்வைக்கின்றனர் என்ற காரணிகளை அவதானித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு இறுதித் தீர்மானம் எடுக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார். அத்துடன் நாளை வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து தமிழ் கட்சிகளும் கொழும்பில் கூடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த சில தினங்களாக பிரதான கட்சிகள் தமது தேர்தல் நிலைப்பாடுகளை அறிவித்து வருகின்ற நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்ப…
-
- 3 replies
- 1k views
-
-
சர்ச்சைக்குரிய காணொளியை வெளியிட்ட, மௌலவிக்கு பிணை! இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றநிலையில் அது தொடர்பாக சர்ச்சைக்குரிய காணொளி ஒன்றினை பேஸ்புக் மூலமாக வெள்ளியிட்டிருந்த மௌலவி எம்.கே. முனாஜித்திற்கு வவுனியா மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. வவுனியா செட்டிக்குளத்தைச் சேர்ந்த குறித்த மௌலவி ஈஸ்டர் தினத் தாக்குதல் நடைபெற்ற நாளில் மத்திய கிழக்கு நாடொன்றில் தங்கியிருந்தநிலையில், அங்கிருந்தவாறே பேஸ்புக் மூலமாக குறித்த காணொளியை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் கடந்த மே மாதம் 11ஆம் திகதி அவர் நாடு திரும்பிய போது கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யபட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப…
-
- 0 replies
- 437 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் கொழும்பில் இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதன்போது ஜனாதிபதி தேர்தலுக்காக தமிழ் கட்சிகள் முன்வைத்துள்ள யோசனைகள் தொடர்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுக்கொள்வது குறித்தும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க வேண…
-
- 3 replies
- 1.3k views
-