ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
யாழில் அண்மைக்காலமாக குழுமோதல்களும் வாள்வெட்டுச் சம்வங்களும் இடம்பெற்று வருகின்ற நிலையில் இதனை தடுப்பதற்கோ கட்டுப்படுத்துவதற்கோ முறையான நடவடிக்கைகள் அற்ற நிலையே காணப்படுகின்றது. இதனால் பொது மக்கள் இரவு வேளைகளில் தங்கள் தேவைகளுக்காக வெளியில் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். சாவகச்சேரி, சங்கானை .கொக்குவில் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள். அண்மையில் சங்கானை பஸ் நிலையம் முன்பாக இரு குழுக்களிடையே மோதல் இடம்பெற்றுள்ளது. நீண்ட வாள்கள் , பொல்லுகளுடன் இரு குழுக்களிடையே மோதல் சம்வம் நடைபெற்றபோது அப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் முன்னால் அடுக்கி வைக்கப்பட்டிருந…
-
- 0 replies
- 241 views
-
-
(எம் நியூட்டன்) மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாட்டிலுள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் இரண்டு வருடங்களுக்குள் தீர்த்து வைப்போம். எங்களைப் பொறுத்தவரை வடக்கு, தெற்கு என்ற பிரிவினை கிடையாது. நாங்கள் எல்லோரும் இலங்கையைச் சார்ந்த மக்கள்.அரசியலுக்காக இனங்களைப் பிரிக்கமுடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் ஏற்பாட்டில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக்கூட்டம் யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கல்லூரி மண்டபத்தில் நேற்றுமாலை இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாட்டிலுள்ள அனைத்த…
-
- 0 replies
- 180 views
-
-
எமது நாடு முன்னேற்றம் அடைந்துள்ளதாக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில், எமது நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது.எமது மேக்கப் போடுகிறார்கள் , செலுனூக்கு செல்கிறார்கள் அதற்காக பணம் செலவிடுகிறார்கள் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது. வீதியில் சென்று பாருங்கள் பெண் நவநாகரீக உடை அணிந்து ஹைஹீல் செருப்பு அணிகிறார்கள் என அவர் குறிப்பிட்டார் https://www.madawalaenews.com/2019/10/blog-post_378.html
-
- 1 reply
- 437 views
-
-
விலகுகிறார் சிவாஜிலிங்கம் டெலோ கட்சி தொடர்ந்து தன்மீது முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள தான் தயாரில்லை என்பதனால் கட்சியிலிருந்து விலகி சுயேட்சை உறுப்பினராக அரசியலில் செயற்பட தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். கட்சியின் செயலாளரை சந்தித்து தனது இராஜினாமா கடிதத்தை கையளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள எம்.கே.சிவாஜிலிங்கத்தின் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தான் அரசியலுக்கு பிரவேசித்தது தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கே அன்றி பணம் சம்பாதிப்பதற்கு அல்ல என தெர…
-
- 1 reply
- 411 views
-
-
கோத்தாபயவிற்கு எதிரான வழக்கு ஜனாதிபதி தேர்தலின் பின் 2020 வரை ஒத்திவைப்பு… October 15, 2019 டீ.ஏ. ராஜபக்ஸ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோத்தாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கொழும்பு விசேட நீதாய மேல் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கு 2020 ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழங்கு இன்று (15.10.19) சம்பத் அபயகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகீ ராஜரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது. எனினும், சட்டமா அதிபர் சார்பாக முன்னிலையான அரச பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ், இந்த வழக்கின் பிரதிவாதி கோத்தாபய ராஜபக்ஸ சமர்ப்பித்த மனு…
-
- 0 replies
- 429 views
-
-
நீராவியடி பிள்ளையாா் ஆலய வளாகத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள விகாரையின் தேரர் உயிரிழந்த நிலையில், அவரது சடலத்தை ஆலய வளாகத்தில் தகனம் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை மீறியமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீ ஸ்கந்தராஜா, இந்த மனுவினை இன்று (14) தாக்கல் செய்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/நரவயட-வவகரம-மனமறயடட-நதமனறல-மன/175-239981
-
- 1 reply
- 601 views
-
-
இந்த அரசு தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித சலுகையும் பெற்றுக் கொடுக்க வில்லை. எனவே மலையக மக்கள் தேவைக்காக மாத்திரம் பயன்படுத்தும் ஊறுகாயோ கறிவேப்பிலையோ அல்ல என அருனலு மக்கள் முன்னணியின் தலைவரும் அரச சேவை ஆணைக்குழுவின் உறுப்பினருமான வைத்தியர் கே.ஆர் கிசான் தெரிவித்தார். நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்று பகல் டிக்கோயா அருனலு மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நல்லாட்சி அரசாங்கத்தில் வடக்கினை எடுத்துக்கொண்டாலும் சரி மலையகத்தினை எடுத்துக்கொண்டாலும் சரி எவ்வித அபிவிருத்தியும் செய்யப்படவில்லை. மாறாக தோட்டங்கள் காடாக மாறியுள்ளன. பல தோட்டங்கள்…
-
- 2 replies
- 474 views
-
-
(ஆர்.யசி) நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் சஜித் பிரேமதாசவின் செயற்பாடுகள் முழுமையாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்த முடியும் அமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்தார். அத்துடன் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது என்பது முஸ்லிம் வாக்குகளை திசைதிருப்பும் நோக்கத்தில் முன்னெடுக்கும் செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம். இது ஒரு சதித்திட்டமே தவிர வேறு ஒன்றும் இல்லை. இன்று நாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உட்பட ஏனைய பிரதான முஸ்லிம் தலைமைகள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு அணியாக தீர்மானம் எடுத்துள்ள நிலையில் நாம் இணைந்துள்ள அணியை பலப்படுத்துவதை விடுத்து ஏனைய ஒரு அணிக்காக துணை போவது முஸ்லிம் வாக்குகளை…
-
- 13 replies
- 1.3k views
-
-
தான் ஒரு இனவாதி என்பதை மீண்டும் காட்டியுள்ளார் கோத்தபாய என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் சுட்டிக் காட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் எதிர்வரும் பதினாறாம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற்றால் பதினேழாம் திகதி சிறையில் உள்ள அனைத்து இராணுவத்தினரையும் விடுதலை செய்வதாக இனவாத பேச்சுடன் அனுராதபுரத்தில் தனது பரப்பரையை ஆரம்பித்திருக்கிறார் கோத்தபாய. பல்லின மக்கள் வாழும் இலங்கை தேசத்தில் ஒரு ஜனாதிபதியானவர் அனைத்து இனங்களையும் சமமாக பார்க்க வேண்டும். தமிழர்களின் உரிமைக்காக போராடி அரசியல் கைதிகளாக இருபது வருடங்களுக்கு மேலாக சிறையில் தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை புறக்கணித்து சிங்கள இராணுவத்திற…
-
- 4 replies
- 829 views
-
-
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் எவ்வகையான முடிவை எடுக்கவேண்டுமென்பது தொடர்பில் சம்பந்தனுடன் இன்று பேச்சு நடத்திய வடக்கு - கிழக்கில் இருந்து கொழும்பு சென்ற மதத் தலைவர்கள், கட்டுரை ஆசிரியர்கள், மற்றும் புத்திஜீவிகள் சிலர் இன்று இரா.சம்பந்தனை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடிய குறித்த குழுவினர் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து ஆராய்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை தமிழர் பிரச்சினை தொடர்பில் இரண்டு முதன்மை வேட்பாளர்களும் எழுத்துமூல உத்தரவாதம் ஒன்றை தர மறுத்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வலியுறுத்தி மத தலைவர்கள் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து செய…
-
- 115 replies
- 8.4k views
-
-
இந்தியாவின் மிக முக்கிய கடல் வாழ் பல்லுயிர் பகுதியான மன்னார் வளைகுடாவில் 62 புதியவகை உயிரினங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் தென்கோடியில் ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை மட்டுமின்றி இலங்கை வரையிலும் மன்னார் வளைகுடா பரந்து விரிந்துள்ளது. சுமார் 10 ஆயிரத்து 500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள இந்தப் பகுதியில் 21 தீவுக் கூட்டங்கள் உள்ளன. கடல் வாழ் பல்லுயிர் உயிர்கோளமாக அறிவிக்கப்பட்ட இப்பகுதியில் ஏராளமான பவளப்பாறைகள் உள்ளன. இந்தப் பவளப்பாறைகள் மீன்கள் உள்ளிட்ட ஏராளமான கடல் வாழ் உயிரினங்களுக்கு முக்கியமான வாழ்விடமாக அமைந்துள்ளன. இங்கு 4 ஆயிரத்து 223 வகையான கடல்வாழ் தாவரம் மற்றும் உயிரினங்கள், அழிந்துவரும் இனமான கடல் பசு, 117 வகை பவளப்பாறைகள், 14 வக…
-
- 10 replies
- 1.4k views
-
-
(தி.சோபிதன்) மஹிந்த -மற்றும் கோத்தபாய ராஜபக் ஷவினர் இன அழிப்பை செய்தவர்கள் என்பதால் அவர்களை வெற்றி பெறச்செய்யக் கூடாது என்று கடந்த காலங்களில் கூறி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இப்போது கோத்தபாய ராஜபக் ஷவுடன் பேசுவதில் என்ன நியாயம் இருக்கின்றது எனக் கேள்வியெழுப்பியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலர் செ.கஜேந்திரன் இதுவரைக்கும் தாம் சொல்லி வந்த நிலைப்பாடுகளையும் இப்போது எடுத்திருக்கின்ற நிலைப்பாடுகளையும் வெளிப்படுத்த வேண்டுமெனவும் கோரியுள்ளார். யாழ். கொக்குவிலில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்த…
-
- 4 replies
- 493 views
-
-
நவம்பர் 17 ம் திகதி சிறையிலுள்ள படைவீரர்கள் அனைவரையும் உடனடியா விடுதலை செய்வேன் என பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தனது அனுராதபுர பிரச்சாரக்கூட்டத்தில் தெரிவித்துள்ளமை குறித்து மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் பாதிக்கப்பட்டு நீதிக்காக போராடிக்கொண்டிருக்கும் குடும்பங்களை சேர்ந்தவர்கள் கவலையும் அச்சமும் வெளியிட்டுள்ளனர். கோத்தாபய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் தனது கணவர் குறித்த விசாரணைகள் முற்றாக கைவிடப்படலாம் என காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட சண்டே ஒப்சேவரிற்கு தெரிவித்துள்ளார். நான் நேரடியாக ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராகவே போராடுகின்றேன் என்பதால் எனக்கும் எனது குழந்தைகளிற்கும் ஆபத்து என …
-
- 4 replies
- 476 views
-
-
(ஆர்.யசி) ஆட்சியாளர்கள் கொள்ளையடித்து தன்வசப்படுத்தியுள்ள அரச சொத்துக்களை எமது ஆட்சியில் மக்கள் மயப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்கள் என அனைவருக்கும் கொடுக்கும் அனாவசிய சலுகைகளை முழுமையாக நிறுத்துவோம் என தேசிய மக்கள் சக்கிதியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். பத்தரமுல்லயில் இன்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார மக்கள் கூட்டத்தில் பேசியபோதே அவர் இதனைக் கூறினார். நாட்டில் சகல பகுதிகளிலும் ஜனாதிபதிக்கான மாளிகைகள் உள்ளன. ஆனால் அதில் எவரும் குடியிருப்பதும் இல்லை, ஒரு இரவைக்கூட அங்கிருந்து அனுபவிப்பர்களா என தெரியவில்லை. ஆனால் இந்த மாளிகைகளை பராமரிக்க கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கப்படுகின்றது. …
-
- 1 reply
- 407 views
-
-
(இராஜதுரை ஹஷான்) பொதுக் கொள்கையுடன் ஒத்துப்போகும் வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தால் சாதகமான தீர்மானங்களை இரு தரப்பும் முன்னெடுக்கும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகல காரியவசம் தெரிவித்தார். அத்துடன் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் பாராளுமன்ற அங்கிகாரத்துவம் பெற்றுள்ள அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் உள்ளடங்ககாக இதுவரையில் 23 கட்சிகள் கூட்டணியமைத்துக் கொண்டுள்ளார்கள். தற்போதும் 12 அரசியல் கட்சிகளுடன் தொடர் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றது. எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் 35 கட்சிகளுடன் பலமான கூட்டணியை அமைத்துக் கொள்வோம் என்றும் அவர் கூறினார். https://www.virakesari.lk/article/…
-
- 0 replies
- 288 views
-
-
(ஆர்.யசி) கோத்தாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதா அல்லது சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதா என்பது தெரிவாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், இன்று எமக்குள்ள ஒரேயொரு ஜனநாயக ஆயுதம் வாக்குரிமை என்பதை மறந்துவிடக்கூடாது என்றும் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி தேர்தல் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைபாடுகள் குறித்து வினவிய போதே கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் இதனைக் கூறினார். கோத்தாபய ராஜபக் ஷவை ஆதரிப்பதாக அல்லது சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக என்பது குறித்தும் நாம் தீர்மானமெடுக்க காலம் உள்ளது. இப்போது பிரதான வேட்பா…
-
- 0 replies
- 495 views
-
-
வடக்கு கிழக்கு பல்கலைக்கழக பிரதிநிதிகளுக்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான நான்காவது சந்திப்பு இணக்கமேதும் எட்டப்படாமல் முடிவடைந்துள்ளது. பொது உடன்படிக்கையில் கட்சிகள் எவையும் ஒப்பமிடாத நிலையில் நாளை காலை மீண்டும் சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமும், சர்வதேச சமூகத்திடமும் தமிழர்கள் சார்பில் முன்வைக்கப்பட வேண்டிய சரத்துக்கள் அடங்கிய பொது உடன்படிக்கையில் கட்சிகள் முன்வைத்த திருத்தங்களுடன் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு ஒப்பமிடுவதற்கு கலந்துகொண்ட கட்சிப் பிரமுகர்களிடையே இணக்கம் ஏற்பட்டிருப்பதாக அறியவருகிறது. தமிழ் கட்சிகளின் ஒருமித்த முடிவு என்ன? – நான்காவது சுற்று பேச்சு இடம்பெறுகிறது …
-
- 9 replies
- 1.8k views
- 1 follower
-
-
நான் யாருடைய முகவராகவும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. முஸ்லிம் சமூகத்தின் முகவராக மாத்திரம்தான் போட்டியிடுகின்றேன் என ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். காத்தான்குடியில் தனது முதலாவது பிரசாரக் கூட்டத்தை கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இன்று எந்த நேரமும் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நான் படுகொலை செய்யப்பட்டால் தேர்தல் சட்டத்தின் படி உடனடியாக இன்…
-
- 2 replies
- 302 views
-
-
ஏதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது நிலைப்பாடொன்றை வெளிப்படுத்தும் நோக்கில், தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே இணக்கம் ஏற்படுத்தும் வகையில் யாழ், கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியங்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் யாழ். பல்கலைக் கழகத்துக்கு அண்மையில் அமைந்துள்ள ‘ப்றைட் இன்’ விடுதியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகியது. யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுடன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை. சோ. சேனாதிரஜா, ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன், வடக்கு மாகாண சபையின் அவைத்…
-
- 0 replies
- 293 views
-
-
(இராஜதுரை ஹஷான்) தேசிய பாதுகாப்பினை அலட்சியப்படுத்தி 250ற்கும் அதிகமான உயிர்களை கொன்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் வேண்டுமா, அல்லது 30வருட கால சிவில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்து தேசிய பாதுகாப்பினை பலப்படுத்திய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் வேண்டுமா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். கடவத்த நகரில் நேற்று இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஏப்ரல் 21 ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதலை ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் தற்போது முழுமையாக மறந்து விட்டது. தொடர் குண்டுத்தாக்குதல் கத்தோலிக்…
-
- 0 replies
- 289 views
-
-
(இரா.செல்வராஜா) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்க எடுத்த முடிவு ஒன்றும் புதிதல்ல அவர்களின் முடிவு குறித்து நாம் அலட்டிக்கொள்ள தேவையில்லை என விசேட பிரதேசங்களுக்கான அபிவிருந்தி அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். அமைச்சர் இராதாகிருஸ்ணன் மேலும் தெரிவித்ததாவது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கும் என்பதை எம் அனைவருக்குமே தெரியும். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் காலத்திலும் , பொது தேர்தல் நடைபெற்ற காலத்திலும் ஸ்ரீலங்கா சுதந்த…
-
- 0 replies
- 209 views
-
-
ஜனாதிபதி தேர்தலில் ஒருமித்த முடிவே இன்றைய தேவாயாகவுள்ளதென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டிதன் அவசியம் பற்றி வடக்கில் தீவிரமான கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. முதலாவதாக இந்த நிலை தோன்றியதற்கான காரணத்தை ஆராய்வது அவசியம் என்று கருதுகிறேன். தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஆயுதப் போராட்டம் 2009ஆம் ஆண்டு மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர், தமிழ் மக்களுக்கு இருந்த ஒரே தெரிவு பாராளுமன்ற ஜனநாயக அரசியல்தான். அதனால்தான் தமிழ் மக்கள் ஒன்றுபட்ட…
-
- 1 reply
- 309 views
-
-
வழமை போன்று புலிப் பூச்சாண்டி பிரச்சாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ரி-56 ரக துப்பாக்கியொன்றுடன் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் சேருநுவர பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சேருநுவர இராணுவ முகாமின் அதிகாரி ஒருவருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர் தங்கியிருந்த வீட்டிலிருந்து கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள், குண்டுகள், செல்லிடப்பேசிகள், பிரபாகரனின் உருவம் பொறிக்கப்பட்ட ரீசேர்ட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்படி குறித்த வீட்டியில் தங்கியிருந்த சந்தேக நபரின் மனைவி, சகோதரி ஆகியோரையு…
-
- 1 reply
- 451 views
-
-
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வுகாண தயாராக உள்ளோம். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த விடயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தமிழ் தேசிய கூட்டமைப்புடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளேன். எமது தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்ட பின்னர் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறும் என்று எதிர்க்கட்சி தலைவரும் பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எமக்கு ஆதரவு வழங்க முன்வருவார். 99.9 வீதம் அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது. மலையகத்தில் முரளிதரன் குறித்தும் மக்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்…
-
- 0 replies
- 187 views
-
-
யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தராக பேராசிரியர் எஸ். சிறீசற்குணராஜாவை நியமிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்திருக்கிறது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒக்டோபர் மாதத்துக்கான முதலாவது கூட்டம் கடந்த 10 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்தக் கூட்டத்திலேயே பேராசிரியர் எஸ். சிறீசற்குணராஜாவை யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தராக நியமிப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் பேராசிரியர்களான எஸ். சிறிசற்குணராஜா, கே. மிகுந்தன் ஆகியோரின் பெயர்களை யாழ். பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தர் பதவிக்காக முன்மொழிந்து, அவர்களின் பெயர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக…
-
- 0 replies
- 305 views
-