Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பெருமளவான தமிழ்மக்களால் கோத்தாபய ராஜபக்ஷ நிராகரிக்கப்பட்டாலும் இன்னுமொரு பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவருக்கே தமிழ் மக்கள் வாக்களித்திருந்தார்கள். இது அரசியல் ரீதியான முடிவே தவிர இன ரீதியானதல்ல என்பதை புதிய ஜனாதிபதி புரிந்து கொண்டு ஒட்டுமொத்த நாட்டின் ஜனாதிபதி என்பதனை ஏற்றுக்கொண்டு எதிர்காலத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருக்கிறார். இன்று அவர் வெளியிட்டுள்ள விஷேட ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நிறைவடைந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றி பெற்று ஏழாவது ஜனாதிபதியாகத் தெரிவாகிய…

    • 0 replies
    • 289 views
  2. மஹிந்தவின் சேவை, மீண்டும் நாட்டுக்கு தேவையான தருணம்- கோட்டாபய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சேவையை மீண்டும் நாடு கோருவதற்கான நேரம் இதுவென புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (திங்கட்கிழமை) தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். இந்நிலையில் அவருக்கு அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோட்டாபயவும் மஹிந்தவுக்கு வாழ்த்து செய்தியொன்றினை அனுப்பியுள்ளார். அதில் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துவதாகவும் நாடு மீண்டும் தங்களின் சேவையை கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/மஹிந்தவின்-சேவை-மீண்டும்/

  3. நீதிமன்றங்களில் முன்னிலையாவதற்கு குருபரனுக்கு தடை… November 9, 2019 யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரனை நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடை செய்யும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முடிவை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிய முடிகிறது. அத்துடன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இந்த முடிவை சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரனுக்கு பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அறிவிக்கவேண்டும். அதுதொடர்பில் அவரால் மேன்முறையீடு முன்வைக்கப்படுமாயின் அதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிப்பது எனவும் பேரவை முடிவு செய்தது. மேலும் கலாநிதி குமாரவடிவேல் குருபரனை நீதிமன்றங்க…

  4. அரச அலுவலகங்களில் எனது படங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் தனது அதிகாரபூர்வ இலச்சினையை பயன்படுத்துமாறும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இன்று பதியேற்றுக்கொண்ட கோத்தாபய ராஜபக்ஷ தனது அதிகாரபூர்வ இலச்சினையை வெளியிட்டுள்ளார். இதன்போதே அவர் அரச அலுவலகங்களில் எனது படங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் தனது அதிகாரபூர்வ இலச்சினையை பயன்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் குறித்த இலச்சினை ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த உத்தியோகபூர்வ இலச்சினையின் நான்கு மூலைகளும் பௌத்தம் மற்றும் தேசத்தின் …

    • 0 replies
    • 303 views
  5. இலங்கையின் ’இரும்பு மனிதன்` கோட்டாபய ராஜபக்‌ஷ தமிழர்களை அரவணைப்பாரா? ஒடுக்குவாரா? நிலாந்தன்அரசியல் விமர்சகர் 58 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோட்டாபய (கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை கட்டுரையாளரின் கருத்துகள். இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்) …

  6. அமெரிக்க அரசின் புலனாய்வு இரகசியங்கள், வெளிநாட்டு உறவு ஆகியவற்றை பாதிக்கும் காரணங்களால். EO 13526 - 1.4(c) and 1.4(d), கோத்தாவின் அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்யும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டு இரகசிய விசாரணைக்கு மாற்றப்பட்டு விட்டது. இதுபற்றிய வேறுவிதமான அனைத்து ஆவணங்களும் தகவல்களும் போலியானவை என அமெரிக்க அரசு உத்தியோகபூர்வமாக கசிய விட்டுள்ளது.

  7. கோட்டாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை சோசலிஷ குடியரசின் 7ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான 8 ஆவது ஜனாதிபதி தேர்தல் நேற்று முன்தினம் இடம்பெற்றது.இந்த தேர்தலில் 13 இலட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று இலங்கை சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளார்.அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்ளவுள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்க…

  8. புதிய ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார் கோட்டா! In அனுராதபுரம் November 18, 2019 6:08 am GMT 0 Comments 1183 by : Dhackshala இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாய ராஜபக்ஷ சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். அதனைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு அவர் விசேட உரையாற்றுகிறார். புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வு ஆரம்பம் இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாய ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்துகொள்ளும் நிகழ்வு சற்றுமுன்னர் ஆரம்பமானது. இந்த பதவிப் பிரமாண நிகழ்வு அனுராதபுரம் ருவான்வெலிசாய மண்டபத்தில் இன்று (த…

  9. ஐ.தே.க தலைவர் பதவி கருவுக்கு? Nov 18, 20190 ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியை கருஜயசூரியவுக்கு வழங்குவதற்கு தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி எதிர்வரும் பொதுத் தேர்தலை கருஜயசூரிய தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 1994ஆம் ஆண்டு முதல் 25 வருடங்களாக ரணில் விக்கிரமசிங்க இந்த கட்சியின் தலைவராக பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.samakalam.com/செய்திகள்/ஐ-தே-க-தலைவர்-பதவி-கருவுக்/

  10. புதிய ஜனாதிபதி கோட்டாபயவுக்கு சம்பந்தன் வாழ்த்து In இலங்கை November 18, 2019 5:41 am GMT 0 Comments 1028 by : Yuganthini இலங்கை ஜனநாயக சோசலிச குடியசரசின் 7ஆவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தி வாழ்த்து தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தொலைப்பேசி உரையாடலின்போது, இன்று பதவியேற்கிறேன் என கோட்டாபய கூறியதாகவும் ஆனாலும் இரா.சம்பந்தன் நிகழ்விற்கு வர வேண்டுமென அவர் அழைக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது. …

  11. புதிய ஜனாதிபதிக்கு எமது வாழ்த்துகள் மக்களின் ஆணையின் பிரகாரமே நாட்டின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் அதேவேளை, தமிழ் மக்கள் தமது கொள்கையில் உறுதியாக உள்ளனர் என்பதையே தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டியுள்ளன. அரசியல் ரீதியாக ஸ்திரமான நிலைமை ஏற்பட்டது இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராகவே உள்ளோமென இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவரது தெரிவு தொடர்பில் வினவிய போதே அவர்…

  12. ஐ.தே.க.வை முழுமையாக மறுசீரமைக்க வேண்டும்- பொன்சேகா தற்போதைய சூழ்நிலையில், ஐக்கிய தேசிய கட்சியை முழுமையாக மறுசீரமைக்க வேண்டுமென முன்னாள் இராணுவ தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் கட்சி தலைமைகளின் அணுகுமுறை மாற வேண்டுமெனவும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது, மக்களின் ஆலோசனைகள் பெறப்பட்டு அதனடிப்படையில் கட்சியை மறுசீரமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். http://athavannews.com/ஐ-தே-க-வை-முழுமையாக-மறுசீர/

  13. புதிய ஜனாதிபதியாக கோட்டா அறிவிப்பு – வர்த்தமானி வெளியீடு In இலங்கை November 18, 2019 3:00 am GMT 0 Comments 1223 by : Dhackshala இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 7ஆவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது. இலங்கை சோசலிஷ குடியரசின் 7ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான 8ஆவது ஜனாதிபதி தேர்தல் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இந்த தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ 6,924,255 வாக்குகளை (52.25%) பெற்று இலங்கை சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்தோடு அவர் இன்று காலை அ…

  14. பிரதமர் தலைமையில் அவசரமாக கூடிய அமைச்சரவை! ஜனாதிபதித் தேர்தல் ஏற்பட்ட தோல்வியையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சரவை கூட்டம் அலரிமாளிகையில் இடம்பெற்று வருகிறது. அமைச்சர் மங்கள சமரவீர, ஹரின் பெர்னாண்டோ மற்றும் அஜித் பி பெரேரா ஆகியோர் தமது அமைச்சுப் பதவியை இராஜனாமா செய்ய தீர்மானித்துள்ள நிலையில் இக் கூட்டம் அவசரமாக இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/69135

    • 4 replies
    • 825 views
  15. Monday, November 18, 2019 - 6:00am தேர்தல் விஞ்ஞாபனங்களில் தெரிவித்த விடயங்களை செயற்படுத்த புதிய ஜனாதிபதியும் தோல்வியடைந்த வேட்பாளர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று கேட்டுக் கொண்டார். காணாமலாக்கப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை நடத்த புதிய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரினார். 2019 ஜனாதிபதி தேர்தல் உத்தியோகபூர்வ இறுதி முடிவுகளை அறிவிக்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்றது. இதில் சகல வேட்பாளர்களும் கலந்து கொண்டதோடு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். தொடர்ந்து உர…

    • 0 replies
    • 411 views
  16. பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று வந்த ஒரு சிங்களத் தலைவர் என்ற முறையில் கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சனைகளுக்கு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு ஒன்றை பெற்றுத்தருவார் என்று நம்புகிறேன் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரவித்துள்ளார் மேலும், "நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதே நேரம் அவர் தமது பொறுப்புக்களை உணர்ந்து சிறப்பான ஒரு ஆட்சிக்கு வித்திடுவார் என்று நம்புகின்றேன். நா…

  17. வடக்கு கிழக்கு மக்கள் தெளிவாக கூறும் செய்தி – தமிழரசுக் கட்சி அறிக்கை In இலங்கை November 17, 2019 4:03 pm GMT 0 Comments 1014 by : Litharsan வடக்கு கிழக்கு மக்கள் இந்த ஜனாதிபதி தேர்தலிலே தமது இந்த வாக்களிப்பின் மூலம் பிரத்தியேகமான செய்தி ஒன்றை பதிவியேற்கவுள்ள ஜனாதிபதிக்குச் சொல்லியிருக்கின்றார்கள் என இலங்கை தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது. இவ்வாறு தேர்தல் மூலம் வழங்கப்பட்டிருக்கின்ற ஆணையினை புதிய ஜனாதிபதி கருத்திற்கொண்டு செயற்படுவார் என நம்புவதாக கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அமோகமான வாக்களிப்பினை மேற்கொண்ட மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ப…

  18. யாழில் கோட்டாபய ஆதரவாளர்கள் ஆட்டம் பாட்டம் என மகிழ்ச்சி ஆரவாரம் நேற்றைய தினம் நடந்து முடிந்த 8ஆவது ஜனாதிபதி தோதலின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தலின் முடிவுகள் நள்ளிரவு முதல் இன்று மாலை வரை வெளியாகியிருந்தன.வெளியாகிய தேர்தல் முடிவுகளின் படி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ 69 இலட்சம் வாக்குகளால் அமோக வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்தே யாழில் கோட்டாவின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அது மட்டுமன்றி மேளதாளங்களுடன் ஆதரவாளர்கள் ஆட்டம் பாட்டம் என மகிழ்ச்சி ஆரவாரம் செய்தமையையும் காணக்கூடியதாக இருந்தது.மேலும் ஐனாதிபதி தேர்தலிலில் கோட்டாபய ராஐபக்ச வெற்றி பெற்றமையால் யாழிலுள…

  19. இலங்கை ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றிருக்கும் நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்தும் இந்தத் தேர்தல் முடிவுகள் சிறுபான்மை இனத்தினருக்கு சொல்வது என்ன, இந்திய - இலங்கை உறவில் மாற்றம் ஏற்படுமா என்பதெல்லாம் குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பேசினார் தி இந்து குழுமத்தின் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான என். ராம். பேட்டியிலிருந்து: கே. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரும் முந்தைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றிருக்கிறார். இந்த தேர்தல் முடிவு சொல்வதென்ன? ப. ஒரு கணிசமான வாக்குகளைப் பெற்றுத்தான் அவர் வெற்றிபெற்றிருக்கிறார். அங்கே வெற்றிபெற ஐம்பது சதவீத…

  20. ஜனநாயக ரீதியில் பிளவுபட்டுள்ள இரு தேசங்களையும் ஒன்றாக்குக – புதிய ஜனாதிபதியிடம் வேண்டுகோள்! In இலங்கை November 17, 2019 2:35 pm GMT 0 Comments 1692 by : Litharsan ஜனநாயக ரீதியில் பிளவுபட்டு நிற்கும் இரண்டு தேசங்களையும் ஒன்றாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவிடம் வடகிழக்கு சிவில் சமூக அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள அரசியல் யாப்பு சீர்திருத்த பணிகளை முன்னெடுத்து அதனூடாக சிறுபான்மை மக்களுக்கான அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும் எனவும் சிவில் அமைப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர். இது தொடர்பாக அந்த அமைப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) …

  21. கோட்டாபய ராஜபக்ஷ: இலங்கையின் ஜனாதிபதி ஆகிறார் - பிரதமர் மோதி வாழ்த்து 10 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபஷ தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து நாளை (திங்கட்கிழமை) அதிபராக பதவி ஏற்க இருக்கிறார். அநுராதபுரத்தில் உள்ள …

  22. அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தினால் ஆட்சிமுறையில் கொண்டுவரப்பட்ட சிக்கல்கள் காரணமாக முன்னைய சகல ஜனாதிபதி தேர்தல்களையும் விட தற்போது நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தல் வேறுபட்டதாக இருந்தது என்று கூறியிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ச, புதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டபிறகு அந்த திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராய்ந்து தங்களது உடனடி செயற்திட்டத்தை வகுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். இன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான தனது சகோதரர் கோதாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னர் அறிக்கையொன்றை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி …

    • 0 replies
    • 372 views
  23. புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அமைச்சர் மனோ கணேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போதைய நிலவரத்தின்படி கோட்டாபய ராஜபக்ஷ அதிக வாக்குகள் வித்தியசத்தில் முன்னிலை வகிக்கின்றார். இந்நிலை டுவிட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் மனோ, “ஜனாதிபதியாக தெரிவு செய்யபட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எனது வாழ்த்துக்கள். ஜனாதிபதி கோட்டாபய, நம் பொது தாய்நாட்டில், இலங்கையர் அடையாளத்தை பலப்படுத்தி, உயர்த்துவார் என நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார். http://athavannews.com/கோட்டாபய-ராஜபக்ஷவிற்கு-அ/

  24. தனது வெற்றிக்கு வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கை ஜனநாயக குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அத்துடன் இன மற்றும் மத வேறுபாடுகள் இன்றி நாட்டில் வாழும் அனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்வதாகவும் உறுதியளித்துள்ளார். https://www.virakesari.lk/article/69140 மக்களின் வாக்குகளால் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட கோட்டபய ராஜபக்ஷ, அநுராதபுரம் ருவன்வெலிசாயவுக்கு அருகில் நாளை (18) முற்பகல் 11 மணிக்கு உறுதிமொழி எடுத்துக்கொண்டு தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/மறபகல-11-மணகக-கடமகள-ஆரமபம/175-241104 ஜனாதிபதி கோட்டாபய ந…

    • 3 replies
    • 550 views
  25. ஸ்ரீலங்காவின் அரசியலில் தீர்க்கமான சக்தியாக இனி தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருக்காது என்ற தெளிவான பதிலை இம்முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வழங்கியிருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த தேர்தல் முடிவுகளின் ஊடாக ஸ்ரீலங்கா ஒற்றையாட்சி நாடு என்பதை மக்கள் உறுதிசெய்திருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச கூறினார். நடைபெற்றுமுடிந்த ஸ்ரீலங்காவின் 08ஆவது ஜனாதிபதி தேர்தலில் இதுவரை வெளியிடப்பட்ட முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச முன்னிலை வகித்து வருகின்றார். இந்த நிலையில், பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச, இந்த வெற்றி தொடர…

    • 2 replies
    • 469 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.