Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் 7 சிறார் புத்த பிக்குகளுக்கு எச்.ஐ.வி. தொற்று - அமைச்சர் தகவல் 29 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைLAKRUWAN WANNIARACHCHI இலங்கையில் 7 சிறு பிராய பௌத்த பிக்குகள் எச்.ஐ.வி. தொற்றுக்கான சிகிச்சை பெற்றுவருவது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க இந்த தகவலை …

  2. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் பிரதமர் உட்பட முன்னாள் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான இரண்டு அமைச்சர்களும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் சாட்சியங்களை வழங்கினர். தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ருவான் விஜேவர்தன, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் பாதுகாப்பு படையினர் தனக்கு தகவல் தெரிவிக்கவில்லையென குறிப்பிட்டார். இதையடுத்து முன்னாள் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, ரஞ்சில் மத்தும பண்டார ஆகியோர் சாட்சியமளிக்க வரவழைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் விக்…

    • 1 reply
    • 329 views
  3. கட்டுவாபிட்டிய தேவாலயம் மற்றும் ஏனைய தேவாலயங்களில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக, உண்மையை அறிந்து கொள்வதற்கு உங்களுக்கு உள்ள உரிமையை நான் நன்கு அறிவேன் எனத் தெரிவித்த, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, நான் எந்தவொரு சக்திக்கும் பயப்படமாட்டேன். நான் எப்பொழுதும் உங்களுடனேயே உள்ளேன் என தெரிவித்தார். கட்டுவாபிட்டிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புனித செபஸ்த்தியார் சிலை மீது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு தாக்குதலையடுத்து, ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து அங்கு வருகைத் தந்த கர்தினால் மல்கம் ரஞ்சித் பிரதேசவாசிகள் முன்னிலையில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். http://www.tamilmirror.lk/செய்திகள்/எந்தவொரு-சக்திக்கும்-பயப்படமாட்டேன்/175-236363 …

    • 0 replies
    • 528 views
  4. யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகத்துக்கு இடமான வாகனங்கள் மறிக்கப்பட்டு சோதனையிடப்படுவதுடன் சில இடங்களில் அடையாள அட்டையும் பதிவு செய்யப்படுகின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா நாளை செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் திருவிழா நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு நல்லூர் ஆலய சூழலில் பொலிஸாரின் பாதுகாப்பு நடவடிக்கைக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் கொழும்புத்துறை பிரதான வீதி, ஸ்ரான்லி வீதி உள்ளிட்ட பல இடங்களில் வீதித் தடை போடப்பட்டு சந்தேகத்துக்கு இடம…

  5. அனைத்து திணைக்களங்களும் இணைந்து பணியாற்றுவதன் மூலமே நீர் பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும் ; சுரேன் ராகவன் அனைத்து திணைக்களங்களும் இணைந்து பணியாற்றுவதன் மூலமே வடமாகாண நீர் பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும் என்று வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.+ வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர், குடிநீர் தேவை என்பது வடமாகாணத்திற்கு எவ்வளவு சவாலானதாக இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். நீர் இன்றி அமையாது உலகு என்பதற்கிணங்க பல்வேறு வேலைதிட்டங்களை நாம் முன்னெடுத்து கொண்டிருக்கிறோம். எனவே அதற்கு அனைத்து திணைக்களங்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய தேவை இர…

    • 1 reply
    • 398 views
  6. கிளிநொச்சி ஊடகவியலாளர் எஸ்.என் நிபோஜனிடம் கொழும்பில் இன்று(06) பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மூன்று மணிநேரம் விசாரணை செய்துள்ளனர். விடுதலைப்புலிகளுடன் தொடர்புள்ளவர் என்ற சந்தேகத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தேடப்படும் ஒருவர் புலம்பெயர் நாடு ஒன்றிலிருந்து தொலைபேசி மூலம் அழைப்பை மேற்கொண்டு ஊடகவியலாளர் நிபோஜனிடம் உரையாடியது தொடர்பிலேயே அவரிடம் மூன்று மணிநேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் எஸ்.என்.நிபோஜன் பயன்படுத்தும் தொலைபேசி சிம் அட்டை அவருடைய தந்தையின் பெயரில் உள்ளமையால் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைக்காக இன்று(06) கொழும்பு ஒன்றில் உள்ள அவர்களது அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பாணை கிளிநொச்சி அலுவலகத்தின் ஊடாக வழங்கப்பட்டிருந்தத…

    • 0 replies
    • 440 views
  7. கூட்­டணி உதயமாகிறது ! ஜனா­தி­பதித் தேர்­தலை வெற்­றி­கொள்­வதே ஒரே இலக்கு - ரணில் (எம்.மனோ­சித்ரா) தனிக்­கட்­சி­யாக ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்டு வெற்றி பெறு­வதில் உள்ள கடின தன்­மை­யினை கடந்த கால அர­சியல் குறித்து அவ­தா­னத்தில் கொள்ளும் போது அனை­வ­ராலும் உண­ர­மு­டியும். எனவே தான் பரந்­து­பட்ட கூட்­ட­ணியை அமைத்து வெற்­றிப்­பெற கூடிய வகையில் அதனை வலுப்­ப­டுத்தும் பணி­களில் முழு அளவில் ஈடு­பட்­டுள்ளோம். இந்த இலக்­கி­லி­ருந்து நானோ எனது பங்­காளி கட்­சி­களின் தலை­வர்­களோ விலக போவ­தில்லை. ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மைத்­து­வத்­தி­லான கூட்­ட­ணி­யுடன் ஜனா­தி­பதி தேர்­தலை வெற்­றிக்­கொள்­வதே எமது ஒரே இலக்­காகும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க …

    • 1 reply
    • 870 views
  8. அமைதி காக்கும் படைக்காகச் செல்லும் விமானப்படையின் ஹெலிகொப்டர் Editorial / 2019 ஓகஸ்ட் 05 திங்கட்கிழமை, பி.ப. 05:01 Comments - 0 ஐக்கிய நாடுகளின் அமைதிப் படை நடவடிக்கைகளுக்காக, மத்திய ஆபிரிக்கா நோக்கி பயணிக்கவுள்ள, இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டருக்கான பிரியாவிடை நிகழ்வுகள் , விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் தலைமையில், இன்று இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படைக்காக, இலங்கையிலிருந்து 2014ஆம் ஆண்டு முதலாவது ஹெலிகொப்டர் மத்திய ஆபிரிக்கா நோக்கிச் சென்றுள்ளதுடன் இன்று 5ஆவது ஹெலிகொப்டர் புறப்படவுள்ளது. குறித்த ஹெலிகொப்டரில் 18 அதிகாரிகள் உள்ளிட்ட 92 பேரும் கட்டளையிடும் அதிகாரியாக விங்க கமான்டர் கே.எம…

  9. பலாலி விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமானங்களை இயக்குவதற்கு சர்வதேச வான் போக்குவரத்து சங்கம் (IATA) அனுமதி அளித்துள்ளது என சிவில் விமான சேவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பலாலி விமான நிலையம், யாழ்ப்பாணம், காங்கேசன்துறை விமான நிலையம் என்றே சர்வதேச விமான சேவைப் பதிவுகளில் இடம்பெற்றுள்ளது. தென்னிந்திய நகரங்களுக்கு விமான சேவைகளை ஆரம்பிக்கும் நோக்கில் பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்தும் நடவடிக்கைகள் அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்தமாதம். பலாலியில் இருந்து தென்னிந்தியாவுக்கு விமான சேவைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசவட்டாரங்கள் கூறுகின்றன. இந்தநிலையில், வெளிநாடுகளுக்கான விமான சேவைகளை பலாலி…

  10. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் மடு மாதா ஆலய ஆடிப் பெருநாளுக்கு வருகை தந்த மக்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இமானுவேல் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம், கொழும்பு உள்ளிட்ட சிங்களப் பிரதேசங்களில் இருந்து மக்கள் வருகை தரவில்லையென ஆயர் கூறியுள்ளார். மடு மாதா திருத்தலத்தின் இவ்வருட ஆடி மாதப் பெருநாள் கடந்த யூன் மாதம் 26 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. யூலை மாதம் 2 ஆம் திகதி மடுத்திருப்பதியின் இறுதி நாள் உற்சவம் ஆயர் கலாநிதி இமானுவேல் பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்றது. பெருநாளை முன்னிட்டு மடு ஆலயப் பகுதியில் இலங்கை இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். ஆலய வழிபாட்டிற்கு வந்த மக்களைய…

    • 4 replies
    • 964 views
  11. படுவான்கரை பிரதேசத்தில் தொடரும் அவலம்! முப்பது வருட கால உள்நாட்டு யுத்தம் ஓய்ந்து போனாலும் அதன் பாதிப்பு இன்னும் காணப்படுகின்றது. எமது நாட்டில் யுத்தம் காரணமாக ஏற்பட்ட விளைவுகள் மிகப் பாரியதாகும். மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கே படுவான்கரை பிரதேசம் என அடையாளப்படுத்தப்படுகின்ற போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் யுத்தம் தீவிரமாக இடம்பெற்ற காலத்தில் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதனால் கூடியளவு பெண்கள் கணவனை இழந்து விதவைகளாகினர்.இங்கு 2010க்கு மேற்பட்ட விதவைகள் உள்ளதாக பிரதேச செயலக அறிக்கை மூலமாக அறியக் கூடியதாகவுள்ளது. இவர்களில் அநேகமானோர் இளவயதினராகக் காணப்படுகின்றனர். திடீரென கணவனை இழந்த அவர்கள் எந்தவிதமான முன்னனுபவங்களும் இன்றி குடும்ப தலைமைத…

    • 0 replies
    • 431 views
  12. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றினார் ரஞ்சன் ராமநாயக்க! In இலங்கை August 5, 2019 9:29 am GMT 0 Comments 1608 by : Benitlas பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று(திங்கட்கிழமை) உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார். ஸ்ரீஜயவர்தனபுர கோட்டே பிரதேசத்திலுள்ள ஆனந்த பாலிகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள, பரீட்சை மத்திய நிலையத்திலேயே அமைச்சர் ரஞ்சன் பரீட்சைக்கு தோற்றியுள்ளார். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று காலை ஆரம்பமாகியுள்ளது. நாடளாவிய ரீதியிலுள்ள இரண்டாயிரத்து 678 பரீட்சை மத்திய நிலையங்களில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். 315 பரீட்ச…

    • 2 replies
    • 847 views
  13. வெற்றியடையக்கூடிய வேட்பாளருக்கே எமது ஆதரவு: ரிஷாட் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடையக் கூடிய கட்சிக்கே நாம் எமது ஆதரவினை வழங்குவோமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ரிஷாட் மேலும் கூறியுள்ளதாவது, “2010 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவுக்கு எமது ஆதரவினை வழங்கினோம் அவர் வெற்றிப்பெற்றார். அதேபோன்று 2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவுக்கு எங்களது ஆதரவினை வழங்கினோம். அந்தவகையில் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் வெற்றியடையக்கூடிய வேட்பாளருக்கே ஆதரவு வழங்குவோம்” என ரிஷாட் தெரிவித்துள்ளார். http://athavannews.com/வெற்றிய…

  14. ஆயிரம் வருட அபிவிருத்தியை ஒரு வருடத்தில் செய்துள்ளோம் என அமைச்சர் சம்பிக ரணவக்க குறிப்பிட்டார். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில் 15 ஆயிரம் வீடுகள் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பெருநகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க, இந்த வீடமைப்பு வேலைத்திட்டத்தினால் அரசாங்கம் எந்த விதத்திலும் கடன் சுமைக்குள் தள்ளப்படவில்லை என்றும் குறிப்பிட்டார். கொழும்பு - கொம்பனித்தெரு பகுதியில் ' மெட்ரோ ஹோம்ஸ் ' வீட்டுத்திட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது : இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்க…

  15. நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மஹோற்சவம், செவ்வாய்க்கிழமை (6) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. உற்சவகால முன்னாயத்தமாக, திங்கட்கிழமை (5) மதியத்திலிருந்து 01 ஆம் திகதி நள்ளிரவு வரை, வீதி தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக, யாழ்ப்பாண மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் அறிவுறுத்தியுள்ளார். வீதித்தடையின் போது, வாகனப் போக்குவரத்துக்கான மாற்று பாதை ஒழுங்குகள், கடந்த ஆண்டுகளைப் போல இம்முறையும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர், உற்சவ காலத்தில், சாதாரண காவடிகள், பிரதான வீதிகள் ஊடாக உட்செல்ல அனுமதிக்கப்படும் என்றும் தூக்குக் காவடிகள், பறவைக்காவடிகள் என்பன, பருத்தித்துறை வீதியூடாக மாத்திரமே உட்செல்ல அனுமதிக…

    • 4 replies
    • 1.1k views
  16. புர்கா, நிகாப் உடைக்கு நிரந்தர தடையுத்தரவு வரக்கூடாது – ஹக்கீம்! In இலங்கை August 5, 2019 8:37 am GMT 0 Comments 1312 by : Benitlas முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் புர்கா, நிகாப் உடைக்கு நிரந்தர தடையுத்தரவு வரக்கூடாது என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இலங்கையில் மாத்திரம் இந்த சட்டத்தை கொண்டுவருவதற்கு அவசியமில்லை. நிரந்த தடைக்கான அமைச்சரவ…

  17. சஜித்துடன் இணையவுள்ளதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்தது சுதந்திர கட்சி! In இலங்கை August 5, 2019 9:52 am GMT 0 Comments 1275 by : Benitlas சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய கூட்டணி ஒன்றினை உருவாக்கவுள்ளதாக வெளியான தகவலினை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முற்றாக மறுத்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இவ்வாறு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்க வேண்டிய அவசியம் சுதந்திர கட்சிக்கு கிடையாது. பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி சாத்தியமாவதற்கு வாய்ப்பில…

  18. தனி நபர்களுக்கு அதிகாரத்தை வழங்கும்பொருட்டு எவரும் வாக்களித்துவிடக்கூடாது – அநுர In இலங்கை August 5, 2019 8:48 am GMT 0 Comments 1287 by : Benitlas இந்த ஜனாதிபதித் தேர்தலில் தனி நபர்களுக்கு அதிகாரத்தை வழங்கும்பொருட்டு, எவரும் வாக்களித்துவிடக்கூடாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘சாதாரணமாக முன்னரெல்லாம், தேர்தல் காலத்தில்தான் தேர்தல் சமர் இடம்பெறும். ஆனால், இப்போது அது மாற்றமடைந்து தேர்தலுக்கு முன்னரே கட்சி…

  19. ஜனநாயக தேசிய முன்னணி குறித்து ரணில் முக்கிய அறிவித்தல்! In ஆசிரியர் தெரிவு August 5, 2019 8:00 am GMT 0 Comments 1251 by : Benitlas ஜனநாயக தேசிய முன்னணி இம்மாத இறுதிக்குள் உதயமாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் ‘ஜனநாயக தேசிய முன்னணி’ கூட்டணிக்கான ஒப்பந்தம் இன்று(திங்கட்கிழமை) கைச்சாத்திடப்படும் என, ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது. எனினும், கூட்டணி தொடர்பாக எழுந்த சர்ச்சை காரணமாக குறித்த நிகழ்வு மற்றுமொரு தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி நேற்று அறிவித்தது. இந்தநிலையில் இதுகுறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று வெ…

  20. பாறுக் ஷிஹான் -FAROOK SIHAN- முஸ்லீம் திருமணச்சட்ட விவகாரத்தில் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட முடியாதுஎன்பதே எமது நிலைப்பாடாகும் என முபாற‌க் அப்துல் மஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார்.முஸ்லீம் உலமா கட்சி ஞாயிற்றுக்கிழமை(4) மாலை நடாத்திய ஊடக சந்திப்பு ஒன்றில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்முஸ்லீம்கள் இந்த நாட்டில் உயிர் வாழக்கூடிய சந்தர்ப்பம் இல்லாத மாபெரும் பிரச்சினை இருந்து வருகின்றது.திருமண சட்டத்தை மாற்ற வேண்டும் என சில பெண்களும் படித்தவர்களும் முயன்று வருகின்றனர்.முஸ்லீம் திருமண சட்டத்தை மாற்றுவது தான் பிரச்சினையா? என்பதை கேட்க விரும்புகின்றேன்.இந்த நாட்டில் சுமார் 20 இலட்சம் முஸ்லீம…

    • 1 reply
    • 874 views
  21. மட்டக்களப்பு விபத்தில் இருவர் காயம்! மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை கரடியனாறு பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட சங்கத்தலைவியும் எட்டுமாவட்டங்களினதும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர் சங்கத்தின் உபதலைவியுமான அமலநாயகி அமல்ராஜ் மற்றும் அவரது மகளே இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர். திட்டமிட்ட வகையில் இனந்தெரியாத இருவரினால் இந்த விபத்து ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்தநிலையில் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்ன…

  22. நல்லூரில் மௌன பேரணி தமிழர் பிரதேசங்களில் விகாரைகள் அமைத்தல் உட்பட பௌத்த மேலாதிக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை ஆட்சேபித்தும் இந்து ஆலயங்கள் பாதிப்புக்குள்ளாவதானால் அச்சமடையும் இந்துக்களின் மண உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்கிலும் அமைதி வழியிலான மௌன பேரணி 3 ஆம் திகதி காலை 9மணி தொடக்கம் 10மணி வரை நல்லை ஆதீன முன்றலில் இடம்பெறவுள்ளது என இந்து அமைப்புகளின் ஒன்றியத்தின் உபதலைவர் சீ. வீ. கே. சிவஞானம் தெரிவித்தார். மேற்படி விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, இந்த பேரணி எந்தவொரு அரசியல் கட்சியும் சார்ந்தது அல்ல என்பதை தெரிவித்துக்கொள்வதுடன் இது இந்து அமைப்புகளின் ஒன்றியம…

    • 22 replies
    • 2.5k views
  23. கிளிநொச்சி மாவட்டத்தில் 7900 குடும்பங்கள் வறட்சியினால் பாதிப்பு கிளிநொச்சி மாவட்டத்தில் 7947 குடும்பங்களை சேர்ந்த 27564பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. அதனடிப்படையில் நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் வறட்சியினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. கரைச்சியில் - 3001 குடும்பங்களை சேர்ந்த 10454 பேர். கண்டாவளையில் - 757 குடும்பங்களை சேர்ந்த3009 பேர். பூநகரியில் 3693 குடும்பங்களை சேர்ந்த 12629 பேர். பச்சிலைப்பள்ளியில் 496 குடும்பங்களை சேர்ந்த 1472 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்தவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. …

    • 2 replies
    • 658 views
  24. ஏப்ரல் தாக்குதலுக்கு பின்னர் முஸ்லிம் சமூகம் தற்போது ஊடக பயங்கரவாதத்தையே எதிர்கொண்டு வருவதாக அசை்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மூத்த பத்திரிகையாளர் கலாபூஷனம் மறைந்த க.ப. சிவத்தின் நினைவஞ்சலிக்கூட்டம் இன்று கண்டியில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். சம உரிமை சமத்துவத்தை இல்லாமலாக்குவதிலே இன்று அதிகார வர்க்கத்தின் காலம் சென்றுகொண்டிருக்கின்றது. இதனால்தான் தேவையில்லாத பிரச்சினைகள் சர்ச்சைகள் கலவரங்களில் நாங்கள் மாட்டிக்கொள்கின்றோம். அத்துடன் அனைத்து ஆயுதப்போராட்டங்களுக்கும் அடிப்படைக்காரணமாக இருந்திருப்பதும் அந்த இடங்களில் அதிகாரவர்க்கம் மற்றவர்களின் சமத்துவம் சம உரிமையை இல்லாமலாக்க முற்படுவதில…

    • 0 replies
    • 344 views
  25. தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை ஆரம்பம்! நாடளாவிய ரீதியில் 2019ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நடைபெற்று வருகிறது இதற்கமைய அனைத்து மொழி பாடசாலைகளிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு இந்த பரீட்சைகள் ஆரம்பமாகின. பரீட்சைகளுக்கு முன்னர் மாணவர்கள் சோதனையிடப்பட்டதுடன், பாடசாலையில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு, மலையகம் என அனைத்து பகுதிகளிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் பரீச்சைக்கு சமூகமளித்திருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர். இம்முறை நாடளாவிய ரீதியில் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலம் 3 இலட்சத்து 39 ஆயிரத்து 369 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இதன்படி கு…

    • 1 reply
    • 492 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.