ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142992 topics in this forum
-
விடுதலைப்புலி ஆதரவாளர் என குற்றஞ்சாட்டி காவல்துறை சேவையில் இருந்து நிறுத்தி விட்டார்கள்.இப்போது கூலி வேலை செய்தும் பயிர் செய்கை செய்தும் தான் எனது குடும்பத்தை நடாத்துகின்றேன் என முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர் பரமநாதன் அனுராஜ் தெரிவித்தார். 2008 ஆம் ஆண்டு ஆயுத குழு ஓன்றினால் கடத்தி செல்லப்பட்டு சுட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கும் பணிகள் இரண்டாவது தடவையாகவும் முன்னெடுக்கபட்டு எந்தவித மனித எச்சங்களும் இது வரை மீட்கப்படாத நிலையில் தோண்டும் பணிகள் இடைநிறுத்தப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 842 views
-
-
நாட்டில் மத சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்கும், அதனை மேம்படுத்துவத்றகும் அரசாங்கம் உறுதிக்கொண்டுள்ளதாக அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் ரொட்னி பெரேரா தெரிவித்திருக்கிறார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வோஷிங்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மத சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கான அமைச்சர்களுக்கான இரண்டாவது கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே தூதுவர் ரொட்னி பெரேரா இவ்வாறு கூறியிருக்கிறார். அத்தோடு இலங்கைக்கு வழங்கும் ஆதரவு மற்றும் இலங்கை மக்களுடனான ஒருமைப்பாடு என்பவற்றுக்காகத் தனது நன்றியையும் அங்கு வெளிப்படுத்தினார் என்று வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/60780
-
- 2 replies
- 644 views
-
-
ஒரு இனத்தின் வரலாற்றுச் சான்றுகளையும் அதன் பூர்வீகத்தையும் அழித்தல் என்பது அந்த இனத்தின் இருப்பை அழித்தலாகும் என தமிழர் மரபுரிமை பேரவை தெரிவித்துள்ளது. கன்னியா பிள்ளையார் ஆலயம் தொடர்பாக தமிழர் மரபுரிமைப் பேரவை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இன்றையதினம்(19) குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது . கடந்த 16.07.2019 அன்று தென்கயிலை ஆதினத்தால் கன்னியா பிள்ளையார் கோயிலை மையப்படுத்தி அங்கு சென்று சமய வழிபாடுகள் செய்யும் நோக்குடனும் கன்னியா தமிழரின் பூர்வீகம் என்பதை அடையாளப்படுத்தும் நடவடிக்கையாகவும் வடக்கு கிழக்கு தழுவிய கவனயீர்ப்பு போராட்டமொன்று ஒழுங்குப்படுத்தப்பட்டிருந்தது. அந்த கவனயீர்ப்பு…
-
- 3 replies
- 617 views
-
-
வீட்டுத்திட்டம் வழங்குவதில் ரிஷாட் மோசடி – பாதிக்கப்பட்ட மக்கள் விசனம்! முல்லைத்தீவில் வீட்டுத்திட்டம் வழங்கும் விடயத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். குறித்த வீட்டுத்திட்டங்களை அவர் தனது கட்சி ஆதரவாளர்களுக்கு மாத்திரமே வழங்கியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விடயம் தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) பாதிக்கப்பட்ட மக்கள் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “நீராவிப்பிட்டி, ஹிச்சிராபுரம் பகுதிகளில் நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்களுக்காக வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம் பல நிபந்தனைக…
-
- 0 replies
- 420 views
-
-
2 வது தடவையாகவும் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்படும் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் 2008 ஆம் ஆண்டு ஆயுத குழு ஓன்றினால் கடத்தி செல்லப்பட்டு சுட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கும் பணிகள் இரண்டாவது தடவையாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஆயுதகுழுவின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த சடலத்தினை தோண்டு நடவடிக்கை கடந்த 11.06.2019 மாலை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இன்று தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்ற…
-
- 0 replies
- 964 views
-
-
வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் பிரச்சினைகளில் தலையிட மாட்டேன் – மனோ வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் உரிமைப் பிரச்சினைகளில் தலையிடுவதில்லையென்ற முடிவிற்கு வந்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் அறிவித்துள்ளார். தமிழ் மக்களின் அவசர பிரச்சினைகள் குறித்து ஆராயும் நோக்கில் அமைச்சர் மனோ கணேசன் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த கலந்துரையாடல் நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதோடு, இதன்போது பல முக்கிய தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன. எனினும் இந்த கலந்துரையாடலில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில், இந்த விடயம் தொடர்பாக ஆதவன் செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் மனோ இவ்…
-
- 0 replies
- 856 views
-
-
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடுத்த மாதம் முதல் 50 ரூபா நாளாந்த மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் எனத் தெரிவித்த தேசிய சகவாழ்வு, அரச கரும மொழிகள் மற்றும் இந்து கலாசார அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன், மலையக மக்களை, தேசிய நீரோட்டத்தில் இணைய விடாமல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தடுத்ததாகவும் குற்றம் சுமத்தினார். தேசிய தொலைக்காட்சியில் நேற்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். http://thinakkural.lk/article/31874
-
- 5 replies
- 1k views
-
-
இந்து ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், மேன்முறையீட்டாளரான கவுணவத்தை நரசிம்ம வைரவர் ஆலய நிர்வாகத்துக்கு வழக்குச் செலவை வழங்குமாறும் உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயம் சார்பில் மேன்முறையீட்டு மனுவை மூத்த சட்டத்தரணி கே.வி.எஸ். கணேசராஜா, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்தார். மனுவின் எதிர்மனுதாரர்களாக சட்ட மா அதிபர், சைவ மகா சபையினர் குறிப்பிடப்பட்டிரு…
-
- 3 replies
- 1.1k views
-
-
நுவரெலிய கந்தப்பளை தோட்டப் பகுதியில் உள்ள காவல் தெய்வச் சந்நிதியில் பௌத்த விகாரை அமைக்கும் முயற்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. கந்தப்பளை கோட்லோஜ் பகுதியில் உள்ள மாடசாமி காவல் தெய்வ ஆலயத்தில் பொலனறுவைப் பகுதியை சேர்ந்த தேரர் ஒரவரினால் இந்தப் பௌத்த கொடி ஏற்றப்பட்டது. இதற்கு எதிராக அப்பகுதி மக்கள் நேற்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் இது தொடர்பில் கந்தப்பளை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து நுவரெலிய பொலிஸ் நிலைய பொலிஸ் அத்தியட்சகர் ,நுவரெலியா பிரதேச கபைத்தலைவர் வேலு யோகராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கலந்துரையாடியபின் கொடியை அகற்றினர். இதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட…
-
- 0 replies
- 936 views
-
-
எந்த பதவி நிலைகளில் உள்ளவர்களாயினும் மகாசங்கத்தினரை அவமதிப்பதனை ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் அதனை கடுமையாக நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று பெலேந்த ரஜமகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தாது கோபுரம், நூல் நிலையம் மற்றும் சமய உரை மண்டபம் ஆகியவற்றை மகாசங்கத்தினரிடம் கையளிக்கும் புண்ணிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். மேலும் சிறந்ததொரு நாட்டையும் சமூ கத்தையும் கட்டியெழுப்ப முடியுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். நேற்று பிற்பகல் பெலேந்த ரஜ மகாவிகாரைக்குச் சென்ற ஜனாதிபதி முதலில் சமயக் கிரியைகளில் ஈடுபட்டு, ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து நினைவுப்பலகையை திர…
-
- 0 replies
- 434 views
-
-
தனது தந்தையாரான சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவிற்கு தொடர்பு இருப்பதாகக் குற்றஞ்சாட்டி அமெரிக்காவின் மத்திய கலிபோர்னியாவில் மாவட்ட நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக தன்னால் தொடுக்கப்பட்ட வழக்கிற்கும் இலங்கையில் நடத்தப்படக் கூடிய எந்தவொரு தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் இலங்கையில் இதுவரை எந்த தேர்தலுக்கான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எந்தவொரு கட்சியும் ஜனாதிபதி வேட்பாளரை இதுவரையில் அறிவிக்கவுமில்லை என்றும் அவரது மகள் அகிம்சா விக்கிரமதுங்க கூறியிருக்கிறார். பத்திரிகையொன்றுக்கு நேற்று புதன்கிழமை பிரத்தியேக பேட்டியொன்றை அளித்திருக்கும் அகிம்சா, கோதாபய ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபத…
-
- 2 replies
- 637 views
-
-
சேபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் தெரிவித்துள்ளார். சட்டத்தரணிகள் சங்கத்தினருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று மாலை அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதன் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த கலந்துரையடலில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரல மற்றும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உள்ளிட்டோரும் கலந்துக்கொண்டனர். இந்த சந்திப்பில் சட்டத்தரணிகள் சங்கத்தினர் சோபா உடன்படிக்கை தொடர்பிலும், மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் மற்றும் காணி விசேட திருத்தச்சட்டம் குறித்து பிரதமரிடம் கலந்துரையாடினர். சோபா உடன்…
-
- 1 reply
- 605 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் என பிரிட்டன் வேண்டுகோள் விடுத்துள்ளது. பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அன்றூ மியுரிசன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். மனித உரிமை பேரவைக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு பிரிட்டன் தொடர்ந்தும் இலங்கையை வலியுறுத்தி வருவதுடன் ஆதரவு வழங்கி வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நீதி மற்றும் நிரந்தர நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இதுவே மிகச்சிறந்த கட்டமைப்பு என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரிட்டிஸ் அரசாங்கம் தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்திற்கு இதனை வலியுறுத்தி வருகின்றது பிரிட்டிஸ் தூதுவ…
-
- 0 replies
- 472 views
-
-
கோதுமை மாவின் விலையினை குறைப்பதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியினை தொடர்ந்து நேற்று முதல் பாணின் விலையை 5 ரூபாவால் அதிகரிப்பதாக எடுத்த தீர்மானம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது என அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். உலக சந்தையில் கோதுமை மாவின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து உள்ளூர் மட்டத்தில் கோதுமை மாவின் விலை செவ்வாய்க்கிழமை முதல் கிலோ ஒன்றுக்கு 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக கோதுமை மா உற்பத்திசார்ந்த உணவு பொருட்களின் விலையினை அதிகரிக்க வேண்டிய தேவை பேக்கரி உரிமையாளர் சங்கத்திற்கு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/60709
-
- 0 replies
- 445 views
-
-
(இராஜதுரை ஹஷான்) 115 வருட கால பழைய மஹவ - ஓமந்தை புகையிரத பாதை முழுமையாக புனரமைக்கப்பட்டு தற்போது பாவனையில் உள்ள புகையிரத பாதையினை முழுமையாக நீக்கும் வேலைத்திட்டம் இன்று வியாழக்கிழமை போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. செயற்திட்ட ஒப்பந்த நிறுவனமான ஐகோன் இன்டர்நெஷனல் நிறுவனத்தின் பங்குதாரர்களுடன் குறித்த நிர்மாணப்பணி ஒப்பந்தத்தில் அமைச்சர் கைச்சாத்திட்டார். வடக்கு புகையிரத சேவையில் மஹவ - ஓமந்தை இடையிலான புகையிரத பாதை 133 கிலோ மீற்றராகும். மஹவ தொடக்கம் அநுராதபுரம் வரையிலான புகையிரதப்பாதை 1904…
-
- 0 replies
- 365 views
-
-
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் பிரிஜிங் லங்கா நிறுவனத்தால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் நலனை கருத்தில் கொண்டு மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவிற்குட்பட்ட வண்ணா குளம் பகுதியில் அமைக்கப்பட்ட ஆரோக்கியா உணவகம் மற்றும் கல்வி நிலையம் ஆகியவற்றை இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் டேவிற் கோலி வைபவ ரீதியாக திறந்து வைத்தார். மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள வண்ணா குளத்தைச் சேர்ந்த பெண்களினால் குறித்த உணவகம் முகாமைத்துவம் செய்யப்படவுள்ளது. போரினால் கணவனை இழந்த பெண்கள்,கைவிடப்பட்ட பெண்கள்,வலுவிழந்த கணவர்களுடன் வாழும் பெண்கள் தொடர்ச்சியாக வருமான…
-
- 0 replies
- 378 views
-
-
July 18, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn இந்த வருடத்தின் இறுதி சந்திரகிரகணம் கடந்த செவ்வாய்க்கிழமை(16) நள்ளிரவு நிகழ்ந்துள்ளது. பகுதியளவிலான இந்த சந்திரகிரகணத்தை காண்பதற்கான வாய்ப்பு இலங்கை மக்களுக்கு கிட…
-
- 0 replies
- 292 views
-
-
மன்னார் குருந்தன் குளம் பகுதியில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விநாயகர் ஆலயம் ஒன்று யாழ்ப்பாணம் பல்கலைகழக தொல்லியல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/story/16/பழமையான-விநாயகர்-ஆலயம்-க.html
-
- 6 replies
- 1.1k views
-
-
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை காப்பாற்றியது போல் கன்னியா விவகாரத்தில் தமிழ் மக்களை காப்பாற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் முயற்சி எடுக்க வேண்டும் என முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “அரசாங்கத்தை காப்பாற்றுவதில் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் காட்டும் அக்கறை தனது சொந்த தொகுதியில் தமிழ் மக்களுக்கு எதிராக பிக்குமார் முன்னெடுத்திருக்கும் ஆர்ப்பாட்டத்தில் காட்டாமல் இருப்பது சம்பந்தன் தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகும். இன்று நாட்டில் முக்கியமான பிரச்சினையாக திகழ்ந்து கொண்டிருக்கும…
-
- 2 replies
- 1.1k views
-
-
கல்முனை விவகாரம் – பிரதமர் தலைமையில் முக்கிய கலந்துரையாடல் கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகம் குறித்து தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர். இந்தவிடயம் தொடர்பாக ஏற்கனவே முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மாலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடி இருந்தனர். இதன் அடிப்படையில் இன்றையதினம் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை…
-
- 1 reply
- 809 views
-
-
தமிழர்களுக்கு தீர்வு கிடைக்குமென தமிழ் தலைவர்கள் கூறுவார்களானால் அது அவர்களின் அரசியல் அறிவற்ற தன்மையே - சித்தார்த்தன் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என யாராவது தமிழ் தலைவர்கள் கூறுவார்களாக இருந்தால் அது அவர்களின் அரசியல் அறிவு அற்ற தன்மையே என தமிழ் விடுதலைக் கழகத்தின் ( புளொட்) தலைவரும் யாழ் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஓன்றின் பின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். கடந்த காலங்களில் செய்த தியாகங்கள் வீண்போகக் கூடாது. ஏன் மக்கள் தியாகம் செய்தார்களோ. அந்த இலக்கை அடையும் வரை நாம் செயற்பட வேண்டும். கடந்த காலங்களில் செய்த தியாகங்கள் வீண்போகக் க…
-
- 2 replies
- 527 views
-
-
இரண்டு ஆண்டுகால அவகாசத்தில் அரசியல் தீர்வை பெற்றுத்தருவோம் என்பது காலத்தை கடத்தும் கதையாகவே தெரிகின்றது. வாக்குறுதிக்கு அமைய இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். கல்முனை தமிழ் பிரதேச செயலக விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது ஆரோக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டார். அரசியல் தீர்வு குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் மற்றும் கல்முனை விவகாரம் குறித்து வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், யாழ்ப்பாணத்திற்…
-
- 5 replies
- 701 views
-
-
கன்னியா பிள்ளையார் கோவில் விவகாரம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. அடுத்த வாரம் ஜனாதிபதியை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச கூட்டமைப்பு தீர்மானம் எடுத்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் குறித்து கோடிஸ்வரன் எம்.பிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவரையும் கலந்துகொள்ள வேண்டாம் என கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/60690 கன்னியா பிள்ளையார் கோவில் விவகாரம் : ஜனாதிபதியை சந்தித்து பேச கூட்டமைப்பு தீர்மானம் அடுத்த வாரம் ஜனாதிபதியை தனிப்பட்ட முறையில்…
-
- 0 replies
- 252 views
-
-
திருகோணமலை - கன்னியாவில் பொலிஸ் பாதுகாப்பில் சென்ற தென் கைலை ஆதீனம் மற்றும் பிள்ளையாா் ஆலய உாிமையாளா் ஆகியோா் மீது எச்சில் தேனீா் ஊற்றப்படும் போது பொலிஸாா் பாா்த்துக் கொண்டிருந்ததாகவும், காடையா்களை கட்டுப்படுத்தவோ, கைது செய்யவோ அவா்கள் முயற்சிக்கவில்லை எனவும் பொது அமைப் புக்கள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனா்.கன்னியா வென்னீரூற்று பகுதியில் பிள்ளையாா் ஆலயத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் பௌத்த விகாரை கட்டப்படுவதை கண்டித்து அடையாள ஊா்வலம் ஒன்றையும் விசேட வழிபாடு ஒன்றையும் தென் கைலை ஆதீனம் ஒழுங்கமைத்திருந்தது.இதனை அடுத்து நீதிமன்ற தடை உத்தரவை பெற்ற பொலிஸாா், கலக தடுப்பு பொலிஸாா் மற்றும் இராணுவத்தினரை களமிறக்கி மக்களுடைய வழிபாட்டு உாிமையை தடை செய்திருந்தனா்.இதன்போது பௌத…
-
- 0 replies
- 747 views
-
-
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அடாத்தாக விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளன. கடந்த (06.07. 2019) அன்று நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் 108 பானைகளில் பிரம்மாண்ட பொங்கல் நிகழ்வு இடம் பெற்றது. இந்த பொங்கல் நிகழ்வின் போது ஆலய சூழலை அலங்கரிப்பதற்காக ஆங்காங்கே வீதியின் ஓரமாக வீதியின் மேலாகவும் நந்தி கொடிகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்றைய தினம் குறித்த நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளன. அத்தோடு அந்த நந்திக்கொடிகளை கட்டியிருந்த கம்பங்கள் பிடுங்கி ஓரிடத்தில் அடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர…
-
- 1 reply
- 641 views
-