ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142992 topics in this forum
-
தமிழ்மக்களின் காணிகளை விடுவிப்பதன் மூலம் சமாதானத்தையும் பாதுகாப்பையும் ஏற்படுத்த முடியும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா தமிழ்மக்களின் காணிகளை சுவீகரிப்பதன் மூலம் சமாதானத்தையே பாதுகாப்பையே ஏற்படுத்தாது காணிகள் விடுவிப்பதன்மூலம் தான் சமாதானத்தை பாதுகாப்பை ஏற்படுத்த முடியும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா தெரிவித்தார். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாகமாற்றும் வேலைத்திட்டம் நேற்று ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்து பத்து ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் தமிழ் மக்களின் நிலங்கள் இராணுவத்தினரின் பிடிக்குள் இருப்பது அநீதியாகவுள்ளது. அந்த நிலங்கள் விடுவிக்கப்படவேண்டும். நிலங…
-
- 0 replies
- 259 views
-
-
ஞானசார தேரரின் பொது மன்னிப்பை ரத்து செய்யக் கோரி ஜெனீவாவில் மனு முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக தெரிவித்து பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரருக்கு எதிராக வெளிநாட்டிலுள்ள முஸ்லிம் புலம்பெயர் அமைப்பொன்றினால் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்திலுள்ள எஸ்.ரி.பீ. எனும் பெயரில் இயங்கும் அரச சார்பற்ற அமைப்பொன்றின் பெயரில் இந்த முறைப்பாட்டை மனித உரிமைகள் அமைப்பில் முன்வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த முறைப்பாட்டில் குறித்த தேரருக்கு வழங்கப்பட்டுள்ள ஜனாதிபதி பொது மன்னிப்பை நீக்குமாறு கோரப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த ஏப…
-
- 0 replies
- 309 views
-
-
திறமையான நிர்வாகத்தை நடத்திய பிரபாகரன் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டு தவறானது - விக்கி போதைப் பொருள் விற்றே பிரபாகரன் ஆயுதங்கள் வாங்கினார் என்ற ஜனாதிபதியின் ஆதாரமற்ற குற்றச்சாட்டு தவறானது அவர் அவ்வாறு கூறுவதற்கு என்ன ஆதாரங்கள், சாட்சியங்கள் உண்டு என வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதாரம் உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். . அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கொழும்பில் ஜோன் அமரதுங்கவின் தலைமையில் போதை பொருள் தடுப்பு சம்மந…
-
- 1 reply
- 458 views
-
-
கண்டி - போகம்பர மைதானத்தில், பொதுபல சேனா அமைப்பால் ஏற்பாடு செய்யப்படவுள்ள மாநாடு, ஞாயிற்றுக்கிழமை (7) நடைபெறவுள்ள நிலையில், இதன்போது, இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக, 7 தீர்மானங்களை நிறைவேற்றவுள்ளதாக, பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முற்றாக இல்லாதொழிப்பதும் அனைத்து இன மக்களையும் ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதன் கீழ் நெறிப்படுத்துவதே, இந்த மாநாட்டின் நோக்கம் என்றும், குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப் போன்று, இனியொரு பயங்கரவாத் தாக்குதல் இடம்பெற்றுவிடக் கூடாது என்பதில், பொதுபல சேனா தொடர்ந்தும் செயற்படும் என்றும் அதற்கான முதல் நடவடிக்கையாவே, இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். htt…
-
- 2 replies
- 472 views
-
-
எதிர்வரும் தேர்தலில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வர ன் போட்டியிட வேண்டும் என தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், அதில் அவர் கட்டுக்காசையும் இழக்கும் நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பங்கேற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வு கிடைக்காது விடின் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவது பற்றிச் சிந்திக்கவேண்டி வரும் என்ற சம்பந்தனின் கூற்று தமிழ் மக்களுக்குப் பாதிப்பையே ஏற்படுத்தும் என நேற்று கிளிநொச்சியில் நடந்த நிகழ்வு ஒன்றில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துத் தொடர்பில் சுமந்திரன் எம்.பிய…
-
- 12 replies
- 1.8k views
- 1 follower
-
-
SLFP – SLPP கட்சிகளுக்கிடையிலான 6ம் கட்ட கலந்துரையாடல் இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுண கட்சிகளுக்கிடையிலான 6வது கட்ட கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. குறித்த கலந்துரையாடல் இன்று மாலை எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடல் தொடர்பில் சுதந்திர கட்சியின் முன்னாள் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச கருத்து தெரிவித்துள்ளார். இரு தரப்பினருக்குமிடையில் கடந்த 17ம் திகதி நடைபெறவிருந்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.dailyceylon.com/185227/
-
- 2 replies
- 477 views
-
-
(இராஜதுரை ஹஷான்) குண்டுதாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவு குழுவிற்கு ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் சட்டவொழுங்கு அமைச்சர் ஆகியோர் நிச்சயம் அழைக்கப்படுவார்கள். சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர பாராளுமன்ற தெரிவு குழுவிற்கு வராவிடின் சட்ட நடடிவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார். முஸ்லிம் அரசியல்வாதிகள் , மத தலைவர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்களை சாட்டுவதால் ஒருபோதும் தீவிரவாதத்தை இல்லாதொழிக்க முடியாது. அரசியல் இலாபத்திற்காகவே முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்…
-
- 0 replies
- 921 views
-
-
July 5, 2019 முல்லைத்தீவு மாவடடத்தின் நந்திக்கடல் களப்பு பகுதியில் பாரிய சத்தத்துடன் குண்டு வெடிப்பு இடம்பெற்றதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கேப்பாப்புலவு இராணுவ படை பிரிவின் அருகாமையில் உள்ள பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த குண்டு வெடிப்பு சத்தம் கேப்பாப்புலவு, முள்ளிவாய்க்கால் இரட்டைவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. நந்திக்கடல் களப்பு பகுதியில் தனியார் காணி ஒன்றை துப்பரவு செய்து அங்கு தீ வைத்த வேளையிலே அதில் இருந்தே குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது. குறித்த இடத்தில் காவற்துறையின் வ…
-
- 0 replies
- 395 views
-
-
முல்லைத்தீவு - செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவிலும் தென்னவன் மரவாடி முருகன் கோவில் ஆகிய தமிழர்களின் பூர்விக மதவழிபாட்டு இடங்கள், இன்று பௌத்த மத ஆக்கிரமிப்புகளால் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன என்று தெரிவித்த வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவஜிலிங்கம், ஒன்றுபட்டு ஒரேகுரலில் நின்றால்தான், ஆகிரமிப்புகளைத் தடுத்து நிறுத்த முடியுமென்றுக் கூறினார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வடக்கு மாகாணப் பிரதிநிதிகளான வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம், ஆ.புவனேஸ்வரன், சபா குகதாஸ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், நீராவிடியப் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று, அங்கு வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே, மேற்கண்டவாறு கூ…
-
- 0 replies
- 397 views
-
-
2020இல் தோட்டத் தொழிலாளர்களுக்கு 10000 வீடுகள் அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் 2020 ஆம் ஆண்டளவில் பெருந்தோட்ட பகுதிகளில் 10000 வீடுகள் தோட்டத் தொழிலாளர்களுக்காக அமைத்துக் கொள்ளப்படும் என மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். தோட்ட தொழிலாளர்களின் லயக்குடியிருப்பை மாற்றி அவர்களுக்கு தனியான வீடுகளை அமைத்து கொடுப்பதற்கு நாம் எடுத்த முயற்களுக்கு ஜனாதிபதி பிரதமர் ஆகியோர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளார்கள். இதற்காக மலையக மக்களின் சார்பில் நாம் இவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றோம் என்று மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம்…
-
- 0 replies
- 279 views
-
-
அமெரிக்காவுடனான உடன்பாட்டுக்கு எதிராக நீதிமன்றம் செல்கிறது கூட்டு எதிரணி அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்துடன் சிறிலங்கா அரசாங்கம் உடன்பாடு செய்து கொள்வதற்கு எதிராக, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளது. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே இந்த தகவலை வெளியிட்டுள்ளார். “நெறிமுறையற்ற உடன்பாடுகளை அடுத்த 90 நாட்களுக்குள் அங்கீகரிக்க சிறிலங்கா அரசாங்கம் முயற்சிக்கிறது. இந்த உடன்பாடுகளை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்க அரசாங்கம் முற்படும் போது, கூட்டு எதிரணி அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும். …
-
- 0 replies
- 263 views
-
-
1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு பயணம்.. July 5, 2019 இந்த ஆண்டில் இதுவரை சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு பயணம் செய்துள்ளதாக இலங்கை சுற்றுலா துறை தரவுகள் தெரிவிக்கின்றன. ஜூன் மாதம் வரை, 1,008,449 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு பயணம் செய்துள்ளதாகவும் இதில் 97,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சீனாவில் இருந்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஏனையவர்கள் இந்தியா, அவுஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் மாலைத்தீவில் இருந்து இலங்கைக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் காரணமாக கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது சுற்றுலாப்…
-
- 0 replies
- 689 views
-
-
தமது காணிகளை அடையாளப்படுத்தி அளவீடுகளை மேற்கொள்ள முடியும் - ஆளுநர் சுரேன் ராகவன் தமது காணிகளை அடையாளப்படுத்தி அளவீடுகளை மேற்கொள்ள முடியும் என ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். வலி வடக்கு ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள பொதுமக்களின் காணிகளை இனங்காணும் நடவடிக்கை ஆரம்பம். யாழ். வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையினை சூழவுள்ள பொதுமக்களின் 62 ஏக்கர் தனியார் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கையின் ஆரம்ப கட்டமான காணிகளை இனங்காணும் நடவடிக்கை வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பங்குபற்றலுடன் நேற்று ஆரம்பமானது. இந்த 62 ஏக்கர் காணிகளை நான்கு வலயங்களாக பிரித்து, அவற்றினை அளந்து அப்பிரதேச மக்களுக்கு வழங்குவது தொடர்…
-
- 0 replies
- 544 views
-
-
பொலிசாரின் துப்பாக்கி அபகரிப்பு ; மட்டக்களப்பில் குவிக்கப்பட்ட இராணுவத்தினரால் பதற்றம் - இது வரை இருவர் கைது மட்டக்களப்பு புதுநகர் திமிலைதீவு பிரதேசத்தில் போக்குவரத்து பொலிசார் இன்று பகல் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மோட்டர் சைக்கிளில் சென்ற இருவருக்கும் பொலிசாருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் கைதுப்பாக்கியை குறித்த இருவரும் பறித்துச் சென்றதையடுத்து குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மட்டு தலைமையக பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள புதுநகர் திமிலைதீவு ஆலயத்துக்கு அருகில் சம்பவமினமான இன்று வியாழக்கிழமை பகல் 11 மணியளவில் வீதி போக்குவரத்து பொலிசார் இருவர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில…
-
- 3 replies
- 1.1k views
-
-
2015 முதல் 2018 வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு, முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் சொத்து மற்றும் பொறுப்புக்களின் விபரங்களை வழங்குமாறு நாடாளுமன்ற செயலாளரிடம் கோரியுள்ளது. அதிகாரம்கொண்ட அதிகாரி ஊடாக இன்று முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் இந்த விபரங்களை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. முறையற்ற வகையில் 3000 ஏக்கர் காணிகளை கொள்வனவு செய்திருப்பதாக றிசாத் பதியுதீன் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணைக்காக இந்த விபரங்களை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கோரியுள்ளது. ஆனாலுமும், 1975ம் இலக்க சொத்து பொறுப்புகள் சட்டத்தின் 1ம் சரத்தின் படி, சொத்துப்பொறுப்பு விபரங்களை வெளிய…
-
- 0 replies
- 298 views
-
-
July 4, 2019 தமிழர் பிரதேசங்களை சிங்கள மயமாக்கும் இரகசியத்திட்ட நோக்கத்துடன் பௌத்த தேரர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் முல்லைத்தீவு – பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் இருப்பையும், தமிழர்களின் நிலவுரிமையையும் உறுதிப்படுத்தி ஆலயத்திற்கான தமிழ் மக்களின் ஆதரவுப் பலத்தினை ஆக்கிரமிப்பாளர்களுக்கு காண்பிக்கும் முகமாக “தமிழர் திருவிழா” எனும் தொனிப்பொருளில் நாளை மறுதினம் (06) அதே ஆலயத்தில் 108 பானைகளை வைத்து பொங்கல் விழாவை முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி அன்றைய தினம், சிங்கள பௌத்த மயமாக்கலினால் பறிபோய்கொண்டிருக்கும் எ…
-
- 1 reply
- 555 views
-
-
பௌத்த தேரர்களின் அரசியல் செயற்பாடுகள் குறித்து அலிஸாஹிர் மௌலானா அதிருப்தி! இலங்கையின் சட்டம் – ஒழுங்கு ஸ்தீரமான நிலையில் இருக்கும்போது, தேரர்கள் சட்டத்தை கையில் எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘வேண்டும் என்றே சில அரசியல்வாதிகள் நாட்டின் தற்போதைய நிலையை பயன்படுத்தி குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கப்பார்க்கிறார்கள். காவியுடையில் வரும் சிலர் போர்க்குரல் செய்கின்றார்கள். இவை மிகவும் அசிங்கமான, அநாகரீகமான விடயங்களாகும். போர்த்திக்கொண்டு இருக்கும் பிக்குகளை …
-
- 0 replies
- 644 views
-
-
இலங்கையில் சைலன்ஸ் குழு இணையக் கொள்ளை!- ரஷ்யா எச்சரிக்கை இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய ஆசிய நாடுகளை இலக்கு வைத்து சைலன்ஸ் குழு இணையக்கொள்ளை நடத்துவதற்கு முனைவதாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவை தலைமையகமாகக் கொண்ட குரூப்-ஐ.பி என்ற நிறுவனம் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. சைலன்ஸ் என அடையாளப்படுத்தப்பட்ட இணையக்கொள்ளையில் பயிற்றப்பட்ட குழுவொன்று வங்கிகள் மீது இணையத்தாக்குதல்களை நடத்தி வருவதாக அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு முன்னதாக இந்த குழுவினர், ரஷ்யா, முன்னாள் சோவியத் நாடுகள் மற்றும் கிழக்கு ஐரோப்பாவிலுள்ள வங்கிகளை குறிவைத்து செயற்பட்டிருந்தன எனவும் தற்போது ஆசிய நாடுகளை இலக்கு வைத்திருப்பதாகவும் குரூப்-ஐபி நிறுவனம் குறிப்பிட்டுள…
-
- 0 replies
- 321 views
-
-
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக கூறப்படும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர், தமிழர்களுக்கு எவ்வாறான தீர்வை முன்வைக்கப்போகிறார்கள் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் இதனைத் தெரிவித்துள்ளார். இல்லாவிட்டால், தேர்தல் காலத்தில் வேட்பாளர்கள் முன்வைக்கும் கொள்கைக்கு அமைய, தமிழ் மக்கள் விரும்பினால் வாக்களிக்கும் நிலையை கொண்டிருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/219634/தமிழர்களு…
-
- 3 replies
- 758 views
-
-
எம்.ஆர்.எம்.வஸீம்) சரணாகதி என்ற பெயரில் முஸ்லிம்கள் நாட்டுக்குள் வருவதை உடனடியாக தடைசெய்யவேண்டும் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸலநாயக்க, நாட்டில் தற்போது மாறிவரும் இன, மத அடிப்படையிலான மக்கள் தொகையை கட்டுப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டமுறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் 2050 ஆகும்போது சிங்கள பெளத்தர்கள் சிறுபான்மையாகும் அபாயம் இருக்கின்றது என்றும் குறிப்பிட்டார். பொரளையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பரிமாற்று கேந்திர நிலையதில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். …
-
- 1 reply
- 807 views
-
-
போர்க்குற்றவாளிகள் தேர்தலில் நின்றால் படுதோல்வி அடைவார்கள் என இந்த நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். போர்க்குற்றவாளிகள் என்று ரணில் விக்கிரமசிங்க யாரைக் குறிப்பிடுகிறார் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். இப்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறிய விடயத்தில் ஒரு சட்ட விவகாரம் எழுகிறது. அதாவது போர்க்குற்றவாளிகள் தேர்தலில் இறங்கினால், படுதோல்வியடைவார்கள் என்று பிரதமர் கூறியிருப்பதற்குள் போர்க்குற்றவாளிகள் யார் என்பது அவரால் இனங் காணப்பட்டுள்ளது. எனவே போர்க்குற்றம் இழைத்தவர்கள் மீது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? கைது செய்து நீதிமன்றில் நிறுத்தி அவர்கள் இழைத்த போர்க்குற்றம் தொடர்பில் விசாரணை நடத்தாதது எதற்…
-
- 0 replies
- 463 views
-
-
முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் ஹெக்டர் தர்மசிறி, ஆறு ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் மூன்று வருட சிறைத்தண்டனைக்கு ஆளாகியுள்ளார். கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் லங்கா ஜயரட்ன நேற்று அவருக்கு இந்த சிறைத் தண்டனையை வழங்கினார். அத்துடன் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு மேற்படி ஊழல் குற்றச்சாட்டு ஒவ்வொன்றுக்கும் 50 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. பின்னர் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். இலஞ்ச ஆணைக்குழு அவர் மீது 15 ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது. எனினும் 6 குற்றச்சாட்டுகளில் மட்டுமே அவரை நீதிபதி குற்றவாளியாகத் தீர்ப்பளித்ததுடன் ஏனைய 9 குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை விடுதலை செய்தார். முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் மீது சுமத்தப்பட்ட ஒவ்வொர…
-
- 8 replies
- 930 views
- 1 follower
-
-
நா.தனுஜா) சவுதி அரேபிய அரசாங்கம் இலங்கையில் இயங்கும் சில வங்கிகளின் ஊடாக முஸ்லிம்களுக்கு ஒரு சதவீத வட்டி அறவீட்டுடன் கடன்களை வழங்குவதாக முன்வைக்கப்பட்ட கருத்தை இலங்கையிலுள்ள சவுதி அரேபிய தூதரகம் முற்றாக மறுத்துள்ளது. இலங்கையில் இயங்கும் சில வங்கிகளின் ஊடாக சவுதி அரேபிய அரசாங்கம் முஸ்லிம்களுக்கு ஒரு சதவீத வட்டியுடனான கடன்களை வழங்கி வருகிறது என்று கடந்த மாதம் 13 ஆம் திகதி தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் முன்னாள் மேல்மாகாண ஆளுநர் கலாநிதி ஹேமகுமார நாணயக்கார கூறியிருந்தார். இவ்விடயம் தொடர்பில் விளக்கமளித்து கொழும்பிலுள்ள சவுதி அரேபிய தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையி…
-
- 1 reply
- 414 views
-
-
(எம்.மனோசித்ரா) முஸ்லிம் சமூகத்தின் மீது பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்காகவே பொதுபல சேனா அமைப்பினால் எதிர்வரும் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டியில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவின் கண்டி மாவட்ட கிளை குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : 7 ஆம் திகதி பொது பல சேனா அமைப்பு கண்டியில் மாநாடோன்றினை ஏற்பாடு செய்துள்ளமை அனைவரும் அறிந்த விடயமாகும். அந்த மாநாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவுள்ளதாக அற…
-
- 0 replies
- 367 views
-
-
July 4, 2019 வலி வடக்கு ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள பொதுமக்களின் காணிகளை இனங்காணும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. யாழ் வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையினை சூழவுள்ள பொதுமக்களின் 62 ஏக்கர் தனியார் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கையின் ஆரம்ப கட்டமான காணிகளை இனங்காணும் நடவடிக்கை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பங்குபற்றலுடன் இன்று ஆரம்பமானது. …
-
- 0 replies
- 247 views
-