ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142699 topics in this forum
-
28 Apr, 2025 | 04:28 PM கொழும்பு - கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டேஸ் வீதி, நவகம்புர பிரதேசத்தில் பெண் ஒருவரை கொலை செய்து சடலத்தை துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசிய சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்டேஸ் வீதி, நவகம்புர பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, கொலை செய்யப்பட்ட பெண் தனது இரண்டாவது கணவர், மகள் மற்றும் மருமகனுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இந்த பெண் நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பெண் 25 வயதுடைய இளைஞனுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரி…
-
-
- 13 replies
- 646 views
- 2 followers
-
-
Published By: DIGITAL DESK 2 28 APR, 2025 | 03:56 PM படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான ஊடகவியலாளர்களான தராகி சிவராமின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், செல்வராசா ரஜிவர்மனின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் திங்கட்கிழமை (28) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் தராகி சிவராம் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி கொழும்பு - பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து இனம் தெரியாதவர்களால் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட பின்னர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் இலங்கை நாடாளுமன்றத்துக்கு அருகில் அவரது சடலம் மீட்கப்பட்டிருந்தது. ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் உதயன் பத்திரிகையின் அலுவலக செய்தியாளராக கடமையாற்றி வந்த வேளை கடந்த …
-
- 2 replies
- 156 views
- 1 follower
-
-
கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் இன்று (28) பிற்பகல் ஒரு மடிக்கணினியால் வெடிகுண்டு அச்சுறுத்தல் ஏற்பட்டது. வெளிநாட்டவர் ஒருவர் தூதரகத்திற்கு வந்து, மடிக்கணினி ஒன்றை கொடுத்து விட்டு அங்கிருந்து உடனடியாக வெளியேறியதால் இந்நிலை ஏற்பட்டது. அதன்படி, விசேட அதிரடிப்படை, விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு மற்றும் கறுவாத்தோட்டம் பொலிஸார் உள்ளிட்ட குழுவை உடனடியாக தூதரகத்திற்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆரம்ப விசாரணைகளைத் தொடர்ந்து, கறுவாத்தோட்டம் பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/317351
-
- 0 replies
- 207 views
- 1 follower
-
-
1.15 மில்லியனை விஞ்சிய பொது, அரை அரசு துறை வேலைவாய்ப்பு! இலங்கையில் உள்ள அனைத்து பொது மற்றும் அரை அரசு துறை நிறுவனங்களிலும் ஊழியர்களின் எண்ணிக்கை 1,156,018 ஐ கடந்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (DCS) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, இலங்கையில் உள்ள அனைத்து பொது மற்றும் அரை அரசு துறை நிறுவனங்களிலும் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டுக்குள் 1,156,018 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2016 ஆம் ஆண்டு கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போது 46,543 அதிகமாகும். அவர்களில், வேலை செய்யும் ஆண்களின் விகிதம் 50.5% ஆகும். இது பெண்களை விட (49.5%) சற்று அதிகம். பெரும்பாலான ஊழியர்கள் மத்திய அரசில் உள்ளனர், மொத்த பணியாளர்களில் 59.5% பேர் இதில் அடங்குவர். இர…
-
- 0 replies
- 141 views
-
-
26 APR, 2025 | 08:00 PM (எம்.மனோசித்ரா) கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் சனிக்கிழமை (26) வெளியிடப்பட்டன. 2024ஆம் ஆண்டுக்கான பரீட்சைகள் கடந்த நவம்பர் முதல் டிசம்பர் வரை இடம்பெற்றது. க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு 333,183 மாணவர்கள் தோற்றினர். அவர்களில் 253,390 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 79,793 பேர் தனியார் விண்ணப்பதாரர்களாவர். 2024 (2025) க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk , www.results.exams.gov.lk ஆகிய இணைய தளங்களில் பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/213032
-
-
- 23 replies
- 1.1k views
- 2 followers
-
-
சிறுமியை துஸ்பிரயோகம் -இரு பெண்கள் உட்பட மூவர் கைது adminApril 27, 2025 யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவரை கடந்த இரண்டு வருட காலத்திற்கு மேலாக பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு யுவதிகள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை அயல் வீட்டு பெண்ணொருவரும் மற்றுமொரு பெண்ணொருவரும் இணைந்து சிறுமியை மிரட்டி பிற ஆண்களுடன் உறவு கொள்ள வைத்து , பணம் சம்பாத்தித்து வந்துள்ளனர். தாம் பணம் பெற்றுக்கொண்ட போதிலும் , சிறுமிக்கு பணம் கொடுக்காது இனிப்பு பண்டங்களை மாத்திரம் வழங்கியுள்ளனர் இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி , தனது உறவினர் ஒருவருக்கு இது தொடர்பில் தெரிவித்தமையை அடுத்து , வட்டுக்கோட்டை …
-
-
- 2 replies
- 317 views
-
-
Published By: VISHNU 28 APR, 2025 | 07:25 PM யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பொன் விழா நிகழ்வு திங்கட்கிழமை (28) மிக சிறப்பாக இடம்பெற்றது. பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் திங்கட்கிழமை (28) காலை இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கலைப்பீட வரலாற்றை வெளிப்படுத்தும் நூலொன்று வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா, கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம், பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள்,பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இதனொரு அங்கமாக பல்கலைக்கழக கலைப்பீட வரலாற்றை வெளிப்படுத்தும் புகைப்பட கண்காட்ச…
-
- 0 replies
- 148 views
- 1 follower
-
-
28 Apr, 2025 | 05:01 PM யாழ்ப்பாணத்தில் நிலவும் அதீத வெப்பம் காரணமாக முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இணுவிலை சேர்ந்த 75 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார் இணுவில் பகுதியில் வீதியோரமாக உள்ள தோட்டக்காணி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (27) முதியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அது தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு ஒப்படைத்தனர். மரண விசாரணையில் அதீத வெப்பம் காரணமாக உடலில் நீரிழப்பு ஏற்பட்டு மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழில் நிலவும் அதீத வெப்பம் ; ஒருவர் உயிரிழப்பு | Virakesari.lk
-
- 0 replies
- 151 views
-
-
போர்க்காலம், சமாதான காலம் என்ற நிலைமாறுதல்கள் எல்லாவற்றையும் கடந்து, கல்வி, பொருளாதார, சமூக மற்றும் அரசியல் தளங்களை சமநிலையில் மேலுயர்த்திய விடுதலைப் புலிகளின் காலத்தில், கிளிநொச்சி மண்ணின் அடையாளங்களுள் ஒன்றாக இருந்த ஆனைவிழுந்தான் தொழில்நுட்பக் கல்லூரியை இராணுவத்திடமிருந்து விடுவித்து, மீள இயக்குவதற்கு இந்த அரசாங்கமாவது நடவடிக்கை எடுக்குமா? என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று முன்தினம் வன்னேரிக்குளம் வட்டாரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் வன்னேரிக்குளம் வட்டாரக் கிளைத் தலைவர் தியா…
-
- 0 replies
- 148 views
- 1 follower
-
-
28 APR, 2025 | 11:29 AM எழுபத்தைந்து ஆண்டுகளாக ஊழலுக்கும் குற்றங்களுக்கும் இருந்துவந்த அரசியல் பாதுகாப்பை தற்போதைய அரசாங்கம் நீக்கியுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சூரியவெவ, ஹுங்கம மற்றும் தங்காலை பகுதிகளில் நேற்று (27) நடைபெற்ற மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் தனது உரையில் பிரதமர் கூறியதாவது: எழுபத்தைந்து ஆண்டுகளாக ஊழலுக்கும் குற்றங்களுக்கும் இருந்துவந்த அரசியல் பாதுகாப்பை நாங்கள் அகற்றியுள்ளோம். அந்த மக்கள் விரோத ஊழல்களுக்கும் குற்றங்களுக்கும் இனி எந்தப் பாதுகாப்பும் இல்லை. இதனால் பயந்து குழப்பமடைந்தவர்கள் அரச சேவையிலும் உள்ளனர். பாதுகாப்புத் தரப்பிலும் உள்ளனர். இவற்…
-
- 1 reply
- 153 views
- 1 follower
-
-
உயர்தர பரீட்சை பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க (Sampath Amaratunge) அறிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பெறுபேறுகளை வெளியிடும்போது உரிய நபரின் சுட்டெண் வேறு நபர்களிடம் சென்றடைந்தால் அதனைக் கொண்டு வேறு நபர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கு சந்தர்ப்பங்கள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அதனைக் கணினி முறைமையில் இருந்து அகற்றி உரிய நபர்கள் விண்ணப்பிப்பதற்கு மீள ஏற்பாடுகள் செய்வதற்கு நீண்ட நாட்கள் எடுக்கும். எனவே உயர்தர பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்நிலையில், இந்த ஆண்டு க.பொ.த உய…
-
- 0 replies
- 131 views
- 1 follower
-
-
Published By: VISHNU 28 APR, 2025 | 01:47 AM (ரொபட் அன்டனி) மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை பாராளுமன்றம் செய்து தரவேண்டும். நாம் இதற்காக தொடர்ந்து காத்துக் கொண்டிருக்கிறோம் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்பிரமணியம் அச்சுதன் தெரிவித்தார். முன்னை பாராளுமன்றத்தில் முன்னாள் எம்.பி. சுமந்திரன் கொண்டுவந்த தனி நபர் பிரேரணை போன்ற ஒன்றை தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொண்டு வந்து அதனை நிறைவேற்றினால் பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். மாகாண சபைத் தேர்தல் தொடர்ந்தும் தாமடைந்து வருகின்ற நிலையில் அதற்கான நகர்வுகள் தொடர்பில் வினவிய போதே மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டின…
-
- 0 replies
- 95 views
- 1 follower
-
-
பாதுகாப்பு காரணங்களுக்காக வடக்கு, கிழக்கில் அரசாங்கம் கையகப்படுத்திய அனைத்து காணிகளையும் மிக விரைவில் விடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். காணிகளை விடுவித்து மக்கள் விவசாயம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி கூறினார். தாம் சிங்கள மக்களுடன் அதிகளவில் நெருங்கிப்பழகுகின்ற போதிலும் அவர்கள் மத்தியில் அதிகளவில் பொதுக் கூட்டங்களை நடத்திய போதிலும் தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் தம்மீது வைத்த நம்பிக்கையை கடுகளவேனும் சீர்குலைக்கப் போவதில்லை என ஜனாதிபதி இந்த சந்தர்ப்…
-
- 0 replies
- 265 views
- 1 follower
-
-
கே.கே.எஸ். வீதியை ஏ.கே.டி.வீதியாக மாற்றினாலும் கேட்கமுடியாது! adminApril 28, 2025 கே.கே.எஸ். வீதியை ஏ.கே.டி.வீதி என மாற்றினால் கூட யாரும் எதுவும் செய்ய முடியாது. அவ்வாறு மாற்றினால் அந்தக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் நாடாளுமன்றத்தில் கூட குரல் எழுப்ப முடியாது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (28.04.25) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும் எமது தமிழ் இனத்திற்கும் இந்த தேர்தல் மிக முக்கியமானது.இந்த தேர்தலானது எங்களுடைய தமிழ் இனத்திற்கும் குறிப்பாக யாழ்ப்ப…
-
- 0 replies
- 146 views
-
-
ஸ்ரீ தலதா வழிபாட்டின் இறுதி நாள் இன்றாகும்! உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் மிகவும் மதிக்கப்படும், இந்நாட்டில் பௌத்தர்களின் சிகரமாகத் திகழும் மிகவும் புனித தந்த தாதுவை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் தங்கள் கண்களால் காணும் வாய்ப்பை வழங்கும் “ஸ்ரீ தலதா வழிபாட்டின்” இறுதி நாள் (27) இன்றாகும். இன்று காலை 11.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை பக்தர்கள் புனித புனித தந்த தாதுவை பார்வையிட்டு வழிபடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் அமைந்துள்ள புனித தந்ததாது நினைவுச் சின்னத்தைக் பார்வையிட்டு வழிபடும் வாய்ப்பு 18 ஆம் திகதி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்களுக்கு கிடைத்தது. கடந்த 9 நாட்களில், இலட்சக்கணக்கான யாத்ரீகர்கள் புனித தந்த தாதுவை வழிபட வாய்…
-
- 1 reply
- 259 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ கண்காணிப்புக் குழு இன்று இலங்கை வருகை! ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ கண்காணிப்புக் குழுவானது இன்றைய (28) தினம் இலங்கைக்கு வருகை தரவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான முன்னுரிமைத் திட்டம் + (GSP+) வர்த்தக முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் 27 சர்வதேச மரபுகளைச் செயற்படுத்துவதில் இலங்கையின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்காக இன்று இலங்கை வரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவானது எதிர்வரும் மே 07 வரை நாட்டில் தங்கியருப்பார்கள். இலங்கையானது, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 2024 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதிகள் அமெரிக்க டொலர்களில் 3 பில்லியன் பெறுமதியைக் கொண்டுள்ளதுடன், இது, இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதித் தளமாக விளங்குகிறது. இலங்கைய…
-
- 0 replies
- 114 views
-
-
27 APR, 2025 | 04:56 PM கடந்த காலங்களில் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது முறையாக நடைபெறவில்லை என்றும், எதிர்காலத்தில் வெற்றிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஒவ்வொரு துறையிலும் உள்ள பிரச்சினைகளைக் கண்டறிந்து, திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்து, தேவையான திறமையான உத்தியோகத்தர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அரசாங்கம் செயற்படுகிறது. அந்தத் திட்டங்களை கிராமத்திற்குக் கொண்டு செல்வதற்கு இந்தத் தேர்தல் எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அரசியலின் உயர் மட்டங்கள் தூய்மைப்படுத்தப்பட்டது போல, கீழ் மட்டமும் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். எங்கள் போட்டி குழுக்களுக்கு வெவ…
-
-
- 3 replies
- 308 views
- 1 follower
-
-
27 APR, 2025 | 02:48 PM அலரி மாளிகைக்கு முன்பாக மூடப்பட்டிருந்த பாதையை திறந்து இருக்கின்றோம். ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக மூடப்பட்டிருந்த பாதையை திறந்து இருக்கின்றோம். எதற்காக நாம் கிளிநொச்சிப் பாதைகளை மூடி வைத்திருக்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சனிக்கிழமை (26) பிற்பகல் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கிளிநொச்சியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து உரையாற்றுகையில், அனைத்து மக்களும் சமனான உரிமைகளை பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த அரசாங்கம் அமைந்துள்ளது. இந்தப் பகுதிகளில் முப்பது வருடமாக யுத்தம் இடம்பெற்றது. இலட்சக்கணக்கான மக…
-
- 0 replies
- 156 views
- 1 follower
-
-
27 APR, 2025 | 01:26 PM கிளிநொச்சி விவசாயிகளிடமிருந்து உரிய நிதி கையாளல்களின்றி விவசாயிகளிடம் இருந்து அறவிடப்பட்ட பலகோடி ரூபா நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் நீதியான விசாரணை ஒன்றினை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். செவ்வாய்க்கிழமை (26) அனுப்பியுள்ள குறித்த கடித்த்தில் கிளிநொச்சி இரணைமடுக்குளத்ததின் கீழ் வாழ்வாதாரத் தொழிலான விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளாகிய நாங்கள் போரினால் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாது கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை அழிவுகள் நோய்த் தாக்கங்கள் என்பவற்றாலும் பெரும் பாதிப்புக்களை எதிர் நோக்கியுள்ளோம். இவ்வாறு இருந்தும் ஒவ்வொரு போகத்திலும் மாவட்ட பயிர்செய்கை கூட்டத் தீர்மானங்களின் …
-
- 0 replies
- 211 views
- 1 follower
-
-
27 APR, 2025 | 05:16 PM திறனாளிகளின் சுய உதவிக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (25) தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ. ஸ்ரீபதி வழிகாட்டலில் பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது, சுயஉதவி குழுக்களை எவ்வாறு வலுப்படுத்துவது, அவர்களின் வருமான மட்டத்தை எவ்வாறு அதிகரிப்பது மற்றும் மாற்றுத்திறனாளி சமூகத்தின் மனித உரிமைகள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது. மேலும் சுயஉதவி குழுக்களின் கடந்த கால செயல்பாடுகள் மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது. எதிர் வரும் தினங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் ஒன்றை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் உத்தியோகத்தர் மூலமாக தெளிவூட்டல்கள் இடம் பெற்றன. இதில் ச…
-
- 0 replies
- 106 views
- 1 follower
-
-
27 APR, 2025 | 05:09 PM கிளிநொச்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) பகல் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கடும் மழை காரணமாக ஆங்காங்கே வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான வீதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பொது மக்களின் போக்குவரத்து சில மணிநேரம் நெருக்கடிக்குள் உள்ளானது. அத்தோடு பொது மக்களின் வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் சென்றமையால் அவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக நகர் புறங்களில் அமைக்கப்பட்டுள்ள முறையற்ற மதில்கள் காரணமாக வெள்ள நீர் வடிந்தோட முடியாத நிலையில் வீடுகளுக்குள்ளும், வீதிகளிலும் வெள்ளம ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீரை வெளியேற்ற முடியாது பொது மக்கள் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/2130…
-
- 0 replies
- 113 views
- 1 follower
-
-
27 APR, 2025 | 05:05 PM திக்கம் வடிசாலை தொடர்பாக சொல்லப்படுவது அப்பட்டமான பொய் என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், அரசியல் நோக்கங்களுக்காக திட்டமிட்டு தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாவும் தெரிவித்தார். யாழ். ஊடக மையத்தில் சனிக்கிழமை (26) நடைபெற்ற ஊடக சந்திப்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், திக்கம் வடிசாலையை வெளிநாட்டு தனியார் நிறுவனத்திடம் கையளிப்பதற்கான ஒப்பந்தத்துடன் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களையும் சம்மந்தப்படுத்தும் வகையில் சில ஊடகங்களி்ல் செய்தி வெளியாகியுள்ளது. உண்மையில், பனை அபிவிருத்தி சபையுடன் சம்மந்தப்பட்டவர்களினால் அவ்வாறான தகவல் வெளிப்படுத்தப்பட்டிருப்பின், அதில் எந்தவித உண்ம…
-
- 0 replies
- 128 views
- 1 follower
-
-
யாழ். பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு! April 27, 2025 4:33 pm யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகளின் போது மாணவ ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் பலகலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒழுக்காற்று விதிகளை மீறி, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கமைவாக நடந்து கொள்வதாகவும், இந்த விதி மீறல்கள் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்வதாகவும் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளனர். கடந்த மாதம் 29ஆம் திகதி பல்கலைக்கழக விடுதி ஒன்றுக்குள் நான்காம் வருட மாணவர் ஒருவர் குடிபோதையில் வந்து அறையொன்றில் அனுமதி பெறாமல் தங்கியிருந்த சம்பவம் தொடர்பில் …
-
- 0 replies
- 138 views
-
-
தீக்கிரையாக்கப்படவுள்ள 500 கிலோ கிராம் ஹெரோயின்! இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 500 கிலோ கிராம் ஹெராயின் போதைப்பொருள் நாளை திங்கட்கிழமை புத்தளத்தில் எரித்து அழிக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில், நீதிமன்ற ஆதாரமாக வைக்கப்பட்டிருந்த மொத்தம் 494.48 கிலோ ஹெராயின் புத்தளம், பாலாவியவில் உள்ள ஒரு சிமென்ட் தொழிற்சாலையில் எரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது 2021 டிசம்பரில் கைப்பற்றப்பட்ட 250.996 கிலோ ஹெராயின் இதில் அடங்கும். இதன் மூலம் ஆறு வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். மேலும், 2…
-
-
- 3 replies
- 412 views
-
-
2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ்.இந்துக் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களை பெற்றுள்ளனர். மேலும் குறித்த இருவரும் தேசிய மட்டத்தில் 3ஆம் மற்றும் 5ஆம் இடங்களை பெற்றுள்ளனர். சி.ஜமுனானந்தா பிரணவன்(முதலாம் இடம்) மற்றும் சி.ஜமுனானந்தா சரவணன்(இரண்டாம் இடம்) ஆகிய இருவருமே இவ்வாறு உயர்தரத்தில் சாதனை படைத்துள்ளனர். மேலும், குறித்த மாணவர்களின் தந்தை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
-
- 9 replies
- 625 views
-