Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தெகிவளை விடுதிக் குண்டுத் தாக்குதல்தாரி ஜமீல் முகமட் அப்துல் லத்தீவ் சிரியாவில் பயிற்சி பெற்றவர்.. April 30, 2019 இலங்கையில் உயிர்த்தஞாயிறு தினத்தில் தாக்குதல்களை மேற்கொண்டவர்களில் ஒருவர் சிரியாவில் ஐஎஸ் அமைப்பினரிடம் பயிற்சி பெற்றார் என விசாரணைகளுடன் தொடர்புள்ளவர்கள் தெரிவித்ததாக வோல்ஸ்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. தெகிவளை விடுதியொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பிற்கு காரணமான ஜமீல் முகமட் அப்துல் லத்தீவ் சிரியா சென்றமை தெரியவந்துள்ளது என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வோல்ஸ்ரீட் ஜேர்னல் சுட்டிக்காட்டியுள்ளது. லத்தீவ் 2014 இல் சிரியாவின் ரக்காவிற்கு சென்றார் அவ்வேளை ரக்கா ஐஎஸ் அமைப்பின் தலைநகரமாக விளங்கியது வெளிநாட்டு தீவிரவாதிகள் …

  2. முன்னாள் போராளிகள் விசாரணைக்காக அழைப்பு April 30, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ் நகரில் வசிக்கும் முன்னாள் போராளிகளை இன்று மாலை 4.00 மணிக்கு யாழ்.நகரத்தில் உள்ள கஜபாகு றெஜிமன்ட் முகாமிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஈஸ்ரர் தினத்தன்று இஸ்லாமிய தீவரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் பல அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர். இதனையடுத்து நாடுமுழுவதும் சோதனை நடவடிக்கைகளும் கைதுகளும் நடைபெற்றுவருகின்ற நிலையில் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது முன்னாள் போராளிகளின் விபரங்கள் படையினரிடம் ஏற்கனவே உள்ள நிலையில் முதலில் தொலைபேசியில் முன்னாள் போராளிகளுக்கு அழைப்பு எடுத்து…

  3. 2 கோடி ரூபா பெறுமதியான அபின் மீட்பு! யாழ்ப்பாணம் வடரமாட்சி, தொண்டமனாறு பகுதியில் சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான அபின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. “வடமராட்சி தொண்டமனாறு – கெருடாவில் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் சந்தேகத்துக்கு இடமான இருவர் நடமாடியபோது, அவர்கள் பொலிஸார் வருவதைக் கண்டதும் பொதி ஒன்றை போட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். இதையடுத்து குறித்த பொதியினை மீட்டெடுத்த பொலிஸார் அதிலிருந்து ஒன்றரைக் கிலோ கிரேம் அபின் போதைப்பொருளை மீட்டுள்ளனர் மீட்கப்பட்ட அபின் போதைப்பொருளின் பெறுமதி 2 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/55068

  4. வெள்ளை ஆடைவாங்க செல்ல பயன்படுத்திய வேன் சாரதி உட்பட வேனை வாடகைக்கு வழங்கிய மூவர் கைது ; வேனும் மீட்பு தற்கொலைக் குண்டு தாரிகள் கல்முனையில் கடை ஒன்றில் ஆடைவாங்க செல்வதற்காகப் பயன்படுத்திய வேன் சாரதி மற்றும் வேனை வாடகைக்குக் கொடுத்த 3 பேரை இன்று செவ்வாய்க்கிழமை காலை (30) மட்டு மாவட்ட புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். அத்தோடு குறித்த வேனையும் மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.எம்.டி. கீத்த வத்துர தெரிவித்தார். பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ்.சமந்த தலைமையிலான புலனாய்வு பிரிவினர் நேற்று திங்கட்கிழமை (29) இரவு தற்கொலைக் குண்டு …

  5. (எம்.எப்.எம்.பஸீர் ) உயிர்த்த ஞாயிறன்று தொடர் தற்கொலை தாக்குதல்களை நடத்தி 250 பேருக்கும் மேற்பட்டோரின் உயிர்களைக் காவுகொண்ட பயங்கரவாத தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பின் அனுசரணைப் பெற்ற மொஹம்மட் சஹ்ரானின் தேசிய தெளஹீத் ஜமாத் உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரவாத குழுவின் அனைத்து தொடர்புகளும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் கீழ் இடம்பெறும் சிறப்பு விசாரணைகளிலேயே இந்த தொடர்புகள் குறித்து முழுமையாக வெளிப்படுத்தப்பட்டுவிட்டதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். …

  6. உயிர்ப்பு ஞாயிறு படுகொலைகள் நியுசிலாந்து கிறைஸ்ட்சேர்ச் தாக்குதலுக்கான பழிவாங்கல்தான் என்று இலங்கையின் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் கூறியிருந்தது நினைவிருக்கலாம். ஆனால், தமது நாட்டில் நடந்த சம்பவம் ஒன்றிற்கான பழிவாங்கலாக இலங்கைக் குண்டுவெடிப்புகளை காட்டியது தொடர்பாக நியுசிலாந்து அரசு இலங்கையைக் கண்டித்திருக்கிறது. இதுபற்றி நியுசிலாந்து பிரதி பிரதமர் கருத்துக் கூறுகையில், “ இப்படி கூறுவதற்கு அவர்களிடம் எந்த ஆதாரங்களும் இல்லை. நிபுணர்களின் கருத்துப்படி இத்தாக்குதலுக்கான ஏற்பாடுகள் நியுசிலாந்துத் தாக்குதல் நடைபெறுவதற்கு பல மாதங்களுக்கு முன்னமே நடைபெற்றிருக்கின்றன”. “இது மிகவும் கீழ்த்தரமான செயற்பாடு. உங்களின் பாதுகாப்புத்துறையில் உள்ள ஓட்டைகளை மறைப்பதற்காக,…

  7. உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை ராஜபக்சக்கள் மேற்கொண்டார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கடந்த 2005ம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கி வடக்கு மக்கள் வாக்களிப்பதனை தவிர்க்கச் செய்தவர்கள் ராஜபக்சக்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவிதமாக இந்த தாக்குதல்களின் பின்னணியிலும் ராஜபக்சக்கள் இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆரம்ப காலங்களில் இந்த தௌஹீத் ஜமாத் அமைப்பு உருவாவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டமை, இந்த அமைப்பின் சில புலனாய்வுப் பிரிவு என்ற அடிப்படையில் அரசாங்கத்தின் சம்பளம் பெற்றுக் கொண்டமை என்பன குறித்து விசாரணை செய்ய…

  8. தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் தலைவரான சஹ்ரானின் நெருங்கியவரும் அவரின் தம்பியுடன் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டவருமான அப்துல் கபூர் முகமது ரிஸ்வின் (வயது 38) கைதுசெய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணையடுத்து வவுணதீவு விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி மாரசிங்க தலைமையில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் மட்டு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ். சமந்த தலைமையிலான புலனாய்வு பிரிவினர். இன்று காலை காத்தான்குடி 2 ஆம் பிரிவு ரெலிகோம் வீதி ஏ.எச்.எம். பௌசி மாவத்தையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். …

  9. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புபட்ட சிலர் அப்போது நடத்தப்பட்டதை விட பெரிய, புதிய தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி சேவை (REUTERS.COM) இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும், தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்களை கைது செய்வதில் மிகச்சிறப்பான முன்னேற்றத்தை காண முடிந்துள்ளது. ஆனால் இந்த கதை முடிவடைந்துவிட்டது என நான் இன்னமும் கருதவில்லை. இன்னமும் பல தாக்குதல்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என நாங்கள் கருதுகின்றோம். அத்துடன் இன்னமும் தாக்குதல் நடக்க கூடிய பேராபத்து காணப்படுகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன…

  10. துருக்கியை தளமாக கொண்டு இயங்கும் (Fethullahist Terror Organization (FETO) தீவிரவாத குழுவின் 50 உறுப்பினர்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டு அமைச்சுக்கு துருக்கி தூதுவர் தகவல் வழங்கியுள்ளதாக அப்போதய வெளிநாட்டு அலுவல்கள் ராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார். கடந்த 2017 , 2018 காலப்பகுதியில் இது தொடர்பில் மூன்று தடவைகள் துருக்கி தூதரகம் தங்கள் அமைச்சுக்கு அறிவிருத்தல் வழங்கியதாக கூறிய அவர் அது விடயமாக பாதுகாப்பு தரப்பிற்கு பெக்ஸ் மூலம் அறிவித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதே நேரம் இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசாரணைகளை முழுவீச்சில் நடத்தாமையை தொடர்ந்து துருக்கி தூதுவர் நேரடியாக பாத…

    • 0 replies
    • 549 views
  11. (எம்.மனோசித்ரா) நாட்டில் ஊடுறுவியுள்ள தீவிரவாத்தை அழிப்பதற்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவுக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு வழங்குவதே சிறந்த தீர்வாக இருக்கும் என ஐ.தே.க அமைச்சர்கள் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் வலியுறுத்தியதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தம் இடம்பெற்றபோது இன்னொரு இராணுவ தளபதிக்கு இதனைத் தொடர்வதற்கு இடமளிக்…

  12. April 30, 2019 யாழ்ப்பாண ஊடகங்கள் யாழ்ப்பாணத்திலே வாழும் முஸ்லிம் மக்கள் குறித்து இழிவான முறையிலும், பொறுப்பற்ற வகையிலே செய்திகளை வெளியிடுவது குறித்து நேற்று யாழ்ப்பாணத்திலே இடம்பெற்ற சர்வமதங்களையும் உள்ளடக்கியவர்களின் ஒரு கூட்டத்திலே ஒரு முஸ்லிம் மனிதர் தனது கருத்துக்களையும், ஆதங்கத்தினையும் வெளியிட்டார். அவருடைய கருத்துக்களை துளசி முத்துலிங்கம் ஆங்கிலத்திலே பதிவு செய்திருந்தார். துளசி முத்துலிங்கத்தின் பதிவின் தமிழாக்…

  13. நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குல் சம்பவங்களை அடுத்து அதிவணக்கத்திற்குரிய பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் குண்டு துளைக்காத கார் வழங்கப் பணிக்கப்பட்டது. எனினும் பேராயர் அந்தக் காரை வாங்க மறுத்துள்ளார். “நான் பயப்படவில்லை. எனது பாதுகாவலர் கடவுளே. மக்களுக்கும் , நாட்டுக்குமே பாதுகாப்பு வழங்குங்கள்” என்று தெரிவித்துள்ளார். https://newuthayan.com/story/17/பிரதமர்-வழங்கிய-காரை-ஏற்.html

  14. புர்காவுக்கு தடை குறித்த அறிவிப்பு ஸ்ரிக்கர்!! நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமையை அடுத்து முகத்தை மூடியவாறு அணியும் புர்காவுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து இளைஞர் அமைப்பினால் பேருந்துகள் மற்றும் பொது இடங்களில் புர்கா அணிய தடை என்ற ஸ்டிக்கர்களை ஒட்டப்பட்டு வருகின்றன. https://newuthayan.com/story/15/பர்தாவுக்கு-தடை-குறித்த.html

  15. சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்திற்கு வெடிபொருட்களை எடுத்துச் செல்ல உதவியதாக சந்தேகிக்கும் வேன் ஒன்றினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மரதங்கடவொல, இகல புளியம்குளம் பகுதியில் வைத்து குறித்த வேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.250-5680 என்ற இலக்கத்தை உடைய வேன் ஒன்றே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட வேன் கெகிராவ பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/55037

  16. சாய்ந்தமருது தாக்குதலுக்கு உதவி – சந்தேகத்தில் வான் ஒன்று புளியம்குளத்தில் பறிமுதல்.. சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்திற்கு வெடிபொருட்களை எடுத்துச் செல்ல உதவியதாக சந்தேகிக்கும் வான் ஒன்றினை காவற்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மரதங்கடவொல, இகல புளியம்குளம் பகுதியில் வைத்து குறித்த வேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 250-5680 என்ற இலக்கத்தை உடைய வேன் ஒன்றே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வான் கெகிராவ காவற்துறை நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. …

  17. சிரிய நகரை இழந்ததற்கான பதிலடியே சிறிலங்கா தாக்குதல் – ஐஎஸ் தலைவர் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய காணொளி ஒன்றின் மூலம் தோன்றியுள்ள இஸ்லாமிய தேசம் எனப்படும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்- பக்டாடி, சிரியாவின் கடைசிக் கோட்டையை இழந்ததற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே சிறிலங்காவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளார். நேற்று ஐஎஸ் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அந்தக் காணொளியில், ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்- பக்டாடி, தனது மூன்று முக்கிய தலைவர்களுடன் பேசுகின்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. சிரியாவின் ஐஎஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரமான பக்கூஸ் கடந்த மாதம், சிரியப் படைகளிடம் வீழ்ச்சியடைந்திருந்தது. இதுகுறி…

  18. மன்னாரில் மௌலவி உட்பட 12 பேர் கைது..!: இன்றும் தொடரும் அதிரடி சோதனை மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தேடுதல்களின் போது மௌலவியொருவர், உட்பட 12 பேர் இராணுவத்தினரினால் கைது செய்யப்பட்டு மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான தௌஹித் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் குறித்த 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று திங்கட்கிழமை காலை தொடக்கம் மாலை வரை இடம் பெற்ற இராணுவத்தின் சுற்றிவளைப்பின்போது புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து குறித்த 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மௌலவி உள்ளிட்ட 12 சந்தேக நபர்களும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து …

  19. மட்டக்களப்பில் தமிழ் இளைஞர்களைக் கொண்ட ஊர்காவல் படை உருவாக்க வேண்டுமென சிங்களப் பேரினவாத அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்! இது தொடர்பான விசேட கூட்டம், மட்டக்களப்பு – மண்முனை வடக்கு பிரதேச சபை செயலகத்தில் நடைபெற்றது." தமிழ் இளைஞர்களைக் கொண்ட ஊர்காவல் படை உருவாக்கப்பட வேண்டும் என கோரிக்கை! இன்றைய சூழ்நிலையில் தமிழர் பகுதிகளை பாதுகாக்க தமிழ் இளைஞர்களைக் கொண்ட ஊர்காவல் படையினை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மட்டக்களப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகர் உட்பட பல பகுதிகளிலும் பாடசாலைகள் மற்றும் மதத்தலங்கள் உட்பட கிராமங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக பொதுமக்களின் பங்களிப்பனை பெற்றுக்கொள்வது தொடர்பான விசேட கூட்டம் …

    • 5 replies
    • 1.2k views
  20. யாழில் முப்படையினர் இணைந்து பாரிய சுற்றிவளைப்பு யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் முப்படையினரும் இணைந்து பாரிய சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். 51ஆவது படைப்பிரிவு இராணுவம், கடற்படையினர், விசேட அதிரடிப்படையினர், மற்றும் பொலிஸார் இணைந்து இன்று அதிகாலை 4 மணிமுதல் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. குருநகர் கடற்கரையை அண்டிய பகுதியென்பதால் கடல் வழியாக தீவிரவாதிகள் உள்நுழையலாம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சுற்றிவளைப்பு தேடுதல் இடம்பெற்றது. குருநகரின் சுமார் 300 வீடுகள் இவ்வாறு சோதனையிடப்பட்டது. எனினும், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கிடைப்பெறவில்லையென தெரிவிக்கப்படுகிறது. கடந்த உயிர்த்த …

  21. சமூகவலைத்தளம் மீதான தடையை நீக்க ஜனாதிபதி பணிப்பு! சமூகவலைத்தளங்கள் மீதான தடையினை நீக்கக் கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைத் தொடர்பு ஆணைக்குழுவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கடந்த 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தற்கொலைத் குண்டுத் தாக்குதலை தொடர்ந்து சமூக வலைத்தளங்களினூடாக பரவிய பொய்யான வதந்திகள் மற்றும் சமூக வலைத்தளங்களை மையப்படுத்தி தீவிரவாதத்தை திணிக்கும் நடவடிக்கைகள் போன்ற காரணத்திற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமூகவலைத்தள நடவடிக்கைகளை தற்காலிமாக நிறுத்தி வைத்தார். இந் நிலையிலேயே 8 நாட்களுக்குப் பிறகு ஜனாதிபதி இந்த பணிப்புரையினை விடுத்துள்ளார். http://www.virakesari.lk/article/54993

  22. ஜஹ்ரானின் மனைவி மகளின் நிலை எவ்வாறு உள்ளது- ரொய்ட்டர் தகவல் தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமின் மனைவியினதும் மகளினதும் உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சம்மாந்துறையில் மோதல்கள் இடம்பெற்ற வீட்டிலிருந்து ஜஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா சய்தாவும் நான்கு வயது மகள் முகமட் ருசானியாவும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சாதியாவிற்கு உயிர்த்தஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்பிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இருவரும் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் அம்பாறை தேசிய வைத்தியசாலையில் கிசிச்சை பெற்றுவருகின்றனர். தாயும் மகளும் பத்துமுதல் 15 வீத எரிகாயங்களிற்கு உள்ளாகியுள்ளனர் என தெரிவித்துள்ள மருத்துவமனையின் பொது…

  23. April 29, 2019 வெசாக், பொசன் என எந்தவொரு உற்சவங்களையும் நாட்டில் நடத்துவதற்கு இடமளிக்க வேண்டாம். 50 பௌத்த விகாரைகளில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளமை குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் தன்னை சந்திக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். காணா…

  24. மே 30 க்குள் மூன்று தேவாலயங்களும் மீள்நிர்மாணம் செய்யப்படும் (ஆர்.யசி) பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளான மூன்று தேவாலயங்களையும் மே மாதம் 30 ஆம் திகதிக்குள் மீள் நிர்மாணம் செய்வதாகவும் பாதிக்கப்பட்ட சகல குடும்பங்களுக்கும் உயரிய சலுகைகளை அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும் என வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளான தேவாலயங்கள் மீள் நிர்மாணம் செய்யும் வகையில் முப்படை பிரதானிகளுடன் பாராளுமன்றத்தில் நடத்திய கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில். அவர் மேலும் கூறியதானது, புனித உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளான கொழும்பு கொச்…

  25. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் மத்திய நிலையம் ஆமர் வீதியில் கண்டுபிடிப்பு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் மத்திய நிலையமாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வீடொன்று கிராண்ட்பாஸ், ஆமர் வீதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண உளவுத்துறையினர் குறித்த வீட்டினை கடுமையான சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இதன்போது தேசிய தெளஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானினால் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் ஐ.எஸ். ஐ.எஸ். இன் கருத்துக்கள் அடங்கிய இறுவெட்டுக்கள், கணினி, 12 கையடக்கத் தொலைபேசிகள், 5 கடவுச் சீட்டுக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும் மேல் மாகாண உளவுத் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் குறித்த மத்திய நிலையத்தை அமைப்பதற்கு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.