ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143263 topics in this forum
-
எஹேலியகொட பிரதேசத்தில் இரண்டு கைகள் மற்றும் ஒரு காலினை இழந்த மாணவி ஒருவர் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார். குறித்த மாணவி சாதாரண தர பரீட்சையில் 8A, 1B சித்தியை பெற்று பாடசாலைக்கும் குடும்பத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். எஹெலியகொட தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் ரஷ்மி நிமேஷா குணவர்தன என்ற மாணவி இம்முறை சாதாரண தர பரீட்சையில் சிறந்த சித்தியை பெற்றுள்ளார். ஆசிரியர்கள், பெற்றோர்கள், தனது பாடசாலை நண்பர்களின் உதவியுடன் பரீட்சையில் விசேட வெற்றியை பெற்று கொள்ள முடிந்ததாக ரஷ்மி தெரிவித்துள்ளார். தனது ஒ…
-
- 0 replies
- 221 views
-
-
(நா.தனுஜா) ஜெனீவா 30(1) தீர்மானத்தின் உள்ளடக்கம் குறித்து ஆரம்பத்திலிருந்தே ஜனாதிபதி அறிந்திருந்தார் என பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த தீர்மானம் தொடர்பில் ஆராய்வதற்கென சர்வகட்சி மாநாடொன்றையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன நடத்தியிருந்தார். இப்போது அதில் என்ன இருக்கின்றது என்பது தனக்குத் தெரியாதென திடீரென்று நித்திரையிலிருந்து எழுந்தவர் போல அவர் கூறுவது நகைப்பிற்குரியது எனத் தெரிவித்திருக்கின்றார். 30(1) தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான இருவருட காலநீடிப்பே 2017 மார்ச்சிலும், 2019 மார்ச்சிலும் இ…
-
- 0 replies
- 683 views
-
-
1 Min Read இவை நேற்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். இடம்: ஏழுகோயில் – ஏழாலை அத்தியடிப் பிள்ளையார் கோயிலுக்குப் பின்புறமாகவும் அத்தியடி முருகன் ஆலயத்துக்கு அருகாமையிலும் அமைந்துள்ள பூந்தோட்டக் கிணறு. இவ்விடம் சுன்னாகம் மின்சார நிலைய வீதியில் இருந்து ஏறத்தாழ 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. தற்போது நாடுமுழுவதும் என்று மில்லாதவாறு வெப்பம் அதிகரித்துள்ளது. நீரூற்றுக்கள் வற்றிப் போகின்ற நிலை காணப்படுகின்றது. கடுங் கோடையான இக்காலப்பகுதியில் நிலத்தடி நீரில் கலந்துள்ள கழிவு எண்ணெய் அதிகரித்துள்ளதை இப்படங்கள் தெள…
-
- 0 replies
- 676 views
-
-
கூட்டமைப்பினர் தமது அரச விசுவாசத்தைக் காட்ட முனைகிறார்கள்-செ.கஜேந்திரன் Mar 30, 20190 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடாத்திய ஊடகவியியலாளர் சந்திப்பின்போது சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போது யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் நிறைவடையும் நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் நடைபெற்றது. இக் கூட்டத் தொடரினூடாக ஒரு நீதி கிடைக்குமென தமிழ் மக்கள் பலத்த எதிர்ப்பார்ப்புக்களில் இருந்தனர். அதற்கமையவே இம்முறையும் இலங்கைக்கு சர்வதேச கண்காணிப்பு என்ற பெயரில் கால அவகாசம் வழங்கக் கூடாதென வடக்கு கிழக்கில் மக்கள் ஒன்று திரண்டு போராட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர் என செ.கஜேந்திரன் தெரிவித்…
-
- 0 replies
- 621 views
-
-
காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று சனிக்கிழமை கிளிநொச்சியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநாச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் முன்பாக ஏ9 வீதியில் இடம்பெற்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை தேடி கிளிநொச்சியில் 769 நாட்களாக சுழற்சி முறையிலான போராட்டத்தினை முன்னெடுத்து வரும் நிலையில் மாதம் தோறும் ஒவ்வொரு 30ஆம் திகதியும் கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர் அந்தவகையில் இன்றும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது …
-
- 0 replies
- 247 views
-
-
வந்தாறுமூலையில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலி March 30, 2019 மட்டக்களப்பு வந்தாறுமூலை சந்தைக்கு அருகில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் இரண்டு மோட்டர் சைக்கிள்கள் தீப்பற்றி எரிந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் வந்தாறுமூலையைச் சேர்ந்த 22 வயதுடைய மோகன் மயூரன், 23 வயதுடைய முருகுப்பிள்ளை பவித்திரன் ஆகியோர் இவ்வாறு உயிரிழந்ததுடன் உயிரிழந்த மற்றையவர் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பை நோக்கி 4 பேர் இரண்டு மோட்டார் சைக்கிள்களை சமாந்தரமாக ஓட்டிச் சென்று கொண்டிருந்த போது இரு மோட்டர் சைக்கிள…
-
- 0 replies
- 280 views
-
-
வீதியும் வேண்டாம் அபிவிருத்தியும் வேண்டாம் குடிக்க குடிநீர் வழங்குங்கள் March 28, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் எமக்கு வீதியும் வேண்டாம் அபிவிருத்தியும் வேண்டாம் குடிக்க குடிக்க குடிநீர் வழங்குங்கள் என காரைநகர் மக்கள் இரைஞ்சி கேட்டுள்ளனர். யாழில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வெப்ப நிலை காரணமாக வரட்சி காரணமாக தீவக பகுதிகளில் கடுமையான வரட்சி நிலவி வருகின்றது. நீர் நிலைகளில் நீர் வற்றியுள்ளன. காரைநகர் பகுதிகளில் குடிநீரை பெறுவதற்கு மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அந்நிலையிலேயே மக்கள் தமக்கு குடிநீரினை வழங்குமாறு மன்றாடி கேட்டுள்ளனர். அது தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், நாங்கள் உயிர் வாழ்வதற்கு குடிநீரை தாருங்கள். அ…
-
- 7 replies
- 1.1k views
- 1 follower
-
-
மின் தடை காரணமாக சிகிச்சைகள் வழங்க முடியாத நிலை…. March 29, 2019 நடைமுறையில் உள்ள மின் தடை காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைகள் வழங்க முடியாத நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது பகலில் மூன்று மணி நேரமும் இரவில் ஒரு மணி நேரமும் மின் தடை அமுலில் உள்ளது. அந்நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் இருந்த மின் பிறப்பாக்கி பழுதடைந்த நிலையில் உள்ளமையால் மின் தடை ஏற்படும் போது சிகிச்சை வழங்களில் பெரும் சாவல்களை வைத்தியர்கள் எதிர் கொண்டு வருகின்றனர். குறிப்பாக நேற்றைய தினம் 14 நோயாளர்களுக்கு சத்திர சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு 5 நோயாளர்களுக்கு சத்திர சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் மின் தடை பட்டமையால் தொடர்ந…
-
- 3 replies
- 661 views
-
-
க.பொ.த (சா/த) பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகின கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையதளத்தில் பார்வையிடலாம் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு உங்கள் டயலொக் கையடக்கத் தொலைபேசியில் Exams என டைப் செய்து இடைவெளியின் பின்னர் உங்கள் சுட்டிலக்கத்தை குறிப்பிட்டு 7777 என்ற எண்ணுக்கு அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்ரொயிட் தொலைபேசிகளில் doenets.lk என்ற செயலியின் (App) ஊடாகவும் அப்பிள் தொலைபேசிகளில் doenets என்ற செயலியின் (App) ஊடாகவும் பரீட்சை முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும். …
-
- 4 replies
- 2k views
-
-
யாழில் கொள்ளையிலீடுபட்டு வந்த இரு இந்தியர்கள் கைது பொருள் விற்பனையாளர் என்ற போர்வையில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இரு இந்தியப் பிரஜைகளை ஊர்காவற்றுறைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஊர்காவற்றுறைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரம்பன், நாரந்தனைப் பகுதிகளில் அண்மைக்காலமாக கைதுசெய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கபெற்றது. இதையடுத்து மண்டைதீவு பொலிஸ் சோதனைச்சாவடியில் பாதுகாப்பினை பொலிஸார் பலப்படுத்தினர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை (27) மாலை கரம்பன் மற்றும் நாராந்தனை பகுதிகளில் பொருள் விற்பனைக்காக சென்ற சந்தேகநபர்கள் இருவரும், வீடுகளில் தனித்திருந்த பெண்களிடம் நகைகளை கொள்ளையட…
-
- 2 replies
- 691 views
-
-
தமிழர்களுக்கு ஐ.நா தீர்மானம் ஏமாற்றத்தை அளித்துள்ளது' - சி.வி. விக்னேஸ்வரன் 2 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசி.வி. விக்னேஸ்வரன் இலங்கையின் அரசியல் அமைப்பின் பிரகாரம் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை அமைக்க முடியாது என்ற அரசாங்கத்தின் கூற்று பொருத்தமற…
-
- 1 reply
- 771 views
- 1 follower
-
-
ஓமானில் புலம்பெயர்ந்துள்ள தம்பதியின் நிதியுதவியில் இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீடு இன்று பயனாளியிடம் கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் தொல்புரம் மூட்டடியில் புற்றுநோயால் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு சுமார் 10 லட்சம் ரூபா நிதியில் இந்த வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி தர்ஷன ஹெட்டியராச்சி மற்றும் நன்கொடையாளரான ஓமானைச் சேர்ந்த மோகன் சங்கர் தம்பதி இணைந்து வீட்டைப் பயனாளியிடம் கையளித்தனர். நன்கொடையாளர்களால் வீட்டுக்குத் தேவையான உபகரணங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. …
-
- 3 replies
- 1.5k views
-
-
டுபாயில் வைத்து கைதான மாகந்துரே மதுஷ், பாடகர் அமல் பெரேரா உள்ளிட்டவர்களை இலங்கைக்கு நாடுகடத்த, டுபாய் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, விரைவில் அவர்கள் நாடு கடத்தப்படுவார்களென, அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://globaltamilnews.net/2019/117068/
-
- 1 reply
- 341 views
-
-
தெரு மூடி மண்டபம், வாகன விபத்தால் சேதம்… March 29, 2019 பருத்தித்துறை தும்பளை வீதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த தெரு மூடி மண்டபம் வாகன விபத்தால் சேதமடைந்துள்ளது. தொல் பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான குறித்த மண்டபம் இரண்டு மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற வாகன விபத்தின் போதும் சிறிதளவு பாதிபடைந்திருந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலை சீமெந்து ஏற்றி வந்த வாகனம் மோதி விபத்துள்ளனத்தில் மடத்தின் கூரைகள் சேதமடைந்துள்ளன. பழமை வாய்ந்த குறித்த மண்டபத்தினை சீராக பராமரிக்கவோ விபத்துக்களில் இருந்து பாதுக்காப்பதற்கான பொறிமுறைகளையோ பருத்தித்துறை நகர சபை முன்னெடுக்க வில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://globa…
-
- 2 replies
- 657 views
-
-
யாழில் குடிநீர் பிரச்சனை காரணமாக கருத்தரிக்கும் வீதம் குறைகின்றது March 27, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில் உள்ள குடிநீர் பிரச்சனை காரணமாக பெண்கள் கருத்தரிக்கும் வீதம் குறைவடைந்து செல்வதாக வடமாகாண ஆளூநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். தனது அலுவலகத்தில் நேற்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , யாழில் குடிநீர் பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. அதனாலே நான் ஆளுனராக இருக்கும் இக்கால பகுதிக்குள் அதற்கு ஒரு தீர்வினை பெற வேண்டும் என முழு வீச்சாக நடவடிக்கைகளில் இறங்கியுள்ளேன். யாழில் பெண்களின் கருத்தரிப்பு வீதம் குறைவடைந்து வருகின்றது. இங்கிருந்து பலர் கருத்தரிப்புக்காக…
-
- 7 replies
- 1.1k views
-
-
அமெரிக்க நிதீமன்றில் கோட்டா மீது கொலை வழக்கு! இரத்தானது குடியுரிமை!!! முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் கொலை வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேற்படி அமெரிக்க நீதிமன்றத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கொலை வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகச் தென்னிலங்கை சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் கோட்டா மீது தொடரப்பட்ட வழக்கு தொடர்பில் தெரியவருகையில்,ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்தமை தொடர்பில் கோட்டாபய மீது குற்றம் சுமத்தி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டால்…
-
- 1 reply
- 518 views
- 1 follower
-
-
சிறிலங்கா நாடாளுமன்றில் இரண்டு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தோல்வி அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, வஜித அபேவர்த்தன ஆகியோரின் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் இன்று நாடாளுமன்றத்தில் குழுநிலை வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டன. சம்பிக்க ரணவக்கவின் கீழ் உள்ள பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும், வஜித அபேவர்த்தனவின் கீழ் உள்ள உள்துறை , உள்நாட்டு விவகார, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான வரவுசெலவுத் நிதி ஒதுக்கீடுகள் குறித்த குழுநிலை விவாதம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்றது. இந்த விவாதத்தின் முடிவில், வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கூட்டு எதிரணியைச் சேர்ந்த ரஞ்சித் சொய்சா கோர…
-
- 0 replies
- 406 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு வலிமை உள்ளது… ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் March 29, 2019 வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை விரைவில் அமைக்கவுள்ளதாக வடக்கு மாகாணத்தின் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதிகோரி தொடர்ச்சியாக போராடி வரும் நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே ஆளுனர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பணிகள் எவ்வளவு சீக்கிரம் நடக்க வேண்டுமோ அவ்வளவு சீக்கிரமாக நடைபெற வேண்டும் எனத் தெரிவித்த அவர் பாதிக்கப்பட்டவர்கள் வழக்குத் தாக்கல் செய்யலாம். என்பதுடன் குற்றம் செய்தவர்களை நீதிக்கு …
-
- 1 reply
- 408 views
-
-
குளோபல் தமிழ்செய்தியாளர் மன்னார்-மாந்தை சந்தியில் அமைக்கப்பட்டிருந்த திருகேதீஸ்வர ஆலயத்தின் அலங்கார நுழைவாயில் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான சந்தேக நபர்கள் சட்டத்தரணி ஊடாக இன்று ஞாயிற்றுக்கிழமை (24) காலை மன்னார் காவல் நிலையத்தில் பிரசன்னமாகி இருந்தனர். அருட்தந்தை ஒருவர் உற்பட 10 பேர் இவ்வாறு சட்டத்தரணி ஊடாக மன்னார் காவல் நிலையத்தில் பிரசன்னமாகி இருந்தனர். இவர்களில் மூன்று பெண்களும்,ஆறு ஆண்களும் அடங்குகின்றனர்.குறித்த 10 பேரிடமும் வாக்கு மூலத்தை பெற்றுக் கொண்ட மன்னார் காவல்துறையினர் பின்னர் அவர்களை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்;. …
-
- 1 reply
- 275 views
-
-
பொலிஸ் அதிகாரிகளுக்கு புதிய சீருடை? தற்போது பாவனையிலுள்ள காக்கி சீருடைகளுக்குப் பதிலாக பொலிஸ் அதிகாரிகளுக்கு பொருத்தமான சீருடையொன்றை அறிமுகப்படுத்துதல் தொடர்பாக தான் சம்பந்தப்பட்ட துறையினருடன் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பொலிஸார் தொடர்பில் மக்களிடையே நிலவும் எதிர்மறையான எண்ணங்களை மாற்றி தரமும் கௌரவமுமிக்க பொலிஸ் சேவை ஒன்றினை கட்டியெழுப்புவதற்காக பொலிஸ் திணைக்களத்தினுள் மேற்கொள்ளப்படும் உள்ளார்ந்த மாற்றங்களின் மற்றுமொரு நடவடிக்கையாக எதிர்காலத்தில் பொலிஸ் சீருடையில் மாற்றம் ஏற்படுத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி நேற்று பிற்பகல் இடம்பெற்ற கொஸ்கம பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டட திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்தார். இதன்…
-
- 0 replies
- 376 views
-
-
⋅⋅⋅⋅⋅ வெள்ளவத்தையில் ரயிலுடன் மோதி, வெளிநாட்டவர் உயிரிழப்பு! – காணொளியில் பதிவானது கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற ரயில் விபத்தில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் ரயில் பாதையைக் கடக்க முற்பட்டவேளை, ரயில் வருவதனை அவதானிக்காத அவர் ரயிலுடன் மோதி தூக்கியெறியப்பட்டு உயிரிழந்துள்ளார். அதே இடத்தில் ஒளிப்படம் எடுத்துக்கொண்டிந்த ஒருவரின் தொலைபேசியில் இந்த விபத்துக் காணொளி பதிவாகியுள்ளது. இது குறித்த மேலதிக தகவல் இன்னும் வெளியாகவில்லை. http://athavannews.com/வெள்ளவத்தையில்-ரயிலுடன்/
-
- 3 replies
- 820 views
-
-
பல்கலைக்கழகங்களின் நற்பெயர்களை சீரழிக்கும் பாழ்பட்ட செயல்களில் ஒன்றாக சமகாலத்தில் பகடிவதை எனும் பெயரில் முன்னெடுக்கப்படும் அரக்கச் செயல்களை அடையாளப்படுத்த முடிகின்றது. இவர்களின் மூர்க்கத்தனமான செயல் வடிவங்களை பார்க்கும் போது இது பல்கலைக்கழகமா இல்லை கடையர்களின் கழகமா எனும் சந்தேகங்களே வலுக்கிறது. பன்னிரண்டு பதிமூன்று வருட கால பாடசாலை கல்வியை கற்று அங்கிருந்து நாடளவில் தெரிவு செய்யப்படும் 4-5% மான மாணவர்களுள் ஒருவராக, கற்பனை மிகுந்த கனவு உலகத்தில் சஞ்சரிக்கின்றான் அப்பாவி மாணவன் ஒருவன். பாவம் பஸ் ஏறி பலிபீடம் போகிறோம் என்பதை கிச்சிந்தும் மறந்தவனாக , ஆனாலும் ஓரிரு வாரங்களில் பின்னால் செய்தி வருகின்றது சிரேஷ்ட மாணவன் ஒருவனின் ப…
-
- 1 reply
- 721 views
-
-
இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் வரவர மோசமாகவுள்ளது. போர்க்குற்றம் இழைத்த இராணுவ அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்கி அவர்களை உடன் சிறையில் அடைக்கவேண்டும் அரசு. அப்போதுதான் ஐ.நாவின் பிடியிலிருந்து இலங்கை தப்பித்துக்கொள்ளலாம். இவ்வாறு இலங்கை அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா. வெளிநாட்டு செய்திச் சேவையொன்றின் கொழும்பு செய்தியாளருக்கு வழங்கிய செவ்வியிலேயே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: …
-
- 0 replies
- 471 views
-
-
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விவகாரம் குறித்து சபையில் தமிழ் முஸ்லிம் எம்.பி.க்களுக்கிடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. தமிழர்களை அடக்கும் திட்டமிட்ட சூழ்ச்சியை முஸ்லிம் தலைமைகள் ஏற்படுத்துவதாக தமிழ் எம்.பி.க்கள் குற்றம் சுமத்துகையில் இதுவரை இல்லாத பிரசினைகளை இப்போது உருவாக்க முயற்சிப்பதாக முஸ்லிம் எம்.பி.க்கள் கருத்துக்களை முன்வைத்தனர். பாராளுமன்றத்தில் இன்று உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்றது. இதன்போதே இதில் கலந்துகொண்ட தமிழ் முஸ்லிம் எம்.பிக்கள் கல்ம…
-
- 0 replies
- 281 views
-
-
March 28, 2019 பிரபல பாதாள உலகக் குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட மொஹமட் நஜீம் இம்ரான் எனும் கஞ்சிப்பான இம்ரான் உள்ளிட்ட மூவர் டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்த அவர் கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். கஞ்சிப்பான இம்ரான் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மாலைத்தீவு நோக்கி செல்ல இருந்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகார…
-
- 1 reply
- 448 views
-