Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்பாணத்தில் சந்திரசேகர் குழுவினரின் சித்து விளையாட்டுக்கள் விரைவில் வெளியாகும்! தமது ஆட்சியில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துவோம், ஊழல் மோடிகளை இல்லாதொழிப்போம், சமூக சீர்திருத்தங்களை செய்வோம் என்று கூறிவரும் சந்திரசேகர் குழுவினர் யாழ்பாணத்தில் பல கிராமங்களிலும் சமூக சீர்கேடாக பல விளையாட்டுக்களை செய்கின்றார்கள். அவர்களது இந்த சித்து விளையாட்டுக்கள் விரைவில் புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் வெளியாகும் என வலிகாமம் கிழக்கின் முன்னாள் தவிசாளர் நிரோஸ் சவால் விடுத்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை (18) நடாத்திய ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசார மேடைகளில் ஜனாதிபதியின் பிரசாரப் பேச்சுக்கள் மிகவும் கீழ்த்தரமானதாகவும் மக்களை அச…

      • Like
    • 1 reply
    • 311 views
  2. 18 APR, 2025 | 02:01 PM (எம்.மனோசித்ரா) பிள்ளையான் என்பவர் நாட்டில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் மிக முக்கிய சாட்சியாளராவார். எனவே அவர் அவற்றை வெளியளிடுவதைத் தடுப்பதற்கு ஒரு குழு முயற்சிக்கின்றது. அவருக்கு சுயாதீன சட்டத்தரணிகள் குழுவையும், சிறப்பு பாதுகாப்பையும் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர வலியுறுத்தினார். கடுவலையில் வியாழக்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடு;கையில், மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்படுவார் என தேர்தல் பிரசாரங்களின் போது தேசிய மக்கள் சக்தி கூச்சலிட்டுக் கொண்டிருந்தத…

  3. தையிடி விகாரையின் கட்டுமானத்துக்கு காரணமாக இருந்தவர்கள் தேசிய மக்கள் சக்தியினர்! adminApril 19, 2025 தையிடி விகாரையின் கட்டுமானத்துக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் தேசிய மக்கள் சக்தி என்கிற ஜே.விபி யினர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இனவாதத்துக்கு இடமில்லை என்று கூறும் அனுர அரசே தையிட்டி விகாரையின் கட்டுமாணத்துக்கு முக்கிய கரணமாக இருந்தனர். இவர்களே அன்று இந்த திஸ்ஸ விகாரையின் கட்டுமாணம் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் குறித்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, விகாரையை அ…

    • 2 replies
    • 443 views
  4. 19 APR, 2025 | 02:08 PM பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மொஹமட் ருஷ்டி என்ற இளைஞன் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதன் பின்னர் ஏப்ரல் 11 ஆம் திகதி அவர் எந்தவொரு பயங்கரவாத அமைப்புடனும் தொடர்பில் இல்லை என கூறப்பட்டது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஒரு முஸ்லிம் இளைஞரை 90 நாட்கள் சிறையில் அடைக்க பயங்கரவாதச் சட்டங்களைப் பயன்படுத்தியமை 'பெரிய தலைப்பாக' மாறியதால் மன்னாரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கேலிக்குள்ளான பிரதமர் அந்த சட்டத்தை நீக்க 'நீக்க' ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் அறிவித்திருந்தார். மார்ச் 25 அன்று கொழும்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், மொஹமட் ருஷ்டி என்ற இளைஞரை தீவிரவாத அல்லது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புபட்டுள்ளதாகக் கூறி 90 நாட்கள் த…

  5. யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கில் மீட்கப்பட்ட 220 கிலோ தங்கமும் எங்கே போனது ? யுத்தம் முடிவடைந்த பின்னர் 220 கிலோ தங்கம் வடக்கில் பல்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டதாகவும் அவற்றுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுதா கிரியடேஷன் என்ற யூடிப் தளத்திற்கு வழங்கிய நேர்காணலின் போதே முன்னாள் இராணுவத் தளபதி இவ்வாறு கூறியுள்ளார். அதன்போது சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளதாவது, யுத்தம் முடிவடைந்து மூன்று மாதங்களில் நான் இராணுவத் தளபதி பதவியில் இருந்து விலகிவிட்டேன். ஆனால் நான் இராணுவத்தளபதியாக இருந்த காலத்தில் 220 கிலோ தங்கத்தை பல்வேறு இடங்களில் குழிகளில் இருந்து மீட்டோம். இரும்பு பெட்டிகளில் அவை…

  6. Published By: VISHNU 18 APR, 2025 | 07:38 PM (எம்.ஆர்.எம்.வசீம்) இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்காமல் மறைத்துக்கொண்டிருப்பதால் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் சந்தேகங்களை தடுக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வியாழக்கிழமை (17) இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடு என்ற வகையில் உலகில் எங்களுக்கு தனித்து பயணிக்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தி நாங்கள் நம்புவதில்லை. அதனால் ஏனைய ந…

  7. மற்றவர்களிடம் களவாடிக் கொடுக்கும் நத்தார் பாப்பாவாக மாறியுள்ளார் அநுரகுமார! நத்தார் பாப்பா என்றால் தங்களிடம் உள்ள பரிசையே வழங்கவேண்டும். மற்றவர்களிடம் களவாடிக்கொடுக்கும் நத்தார் பாப்பாவாக அநுர குமார திசாநாயக்க மாறியுள்ளதாகவும் இதுதான் இன்றைய நாட்டின் நிலைமை என மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபைக்கான வேட்பாளர் அறிமுகமும் தேர்தல் பிரச்சார கூட்டமும் நேற்று (17) விளாவெட்டுவான் ராஜா விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், இந்த நாட்டின் ஜனாதிபதி தேர்தல் சட்டங்களை மீறுக…

  8. Published By: RAJEEBAN 18 APR, 2025 | 11:26 AM இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் அசங்க அபயகுணசேகர 2019 இல் தான் இடமாற்றப்பட்டமை குறித்தும் உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் குறித்த தனது ஆராய்ச்சிகளிற்கு தடுக்கப்பட்டது குறித்தும் சுட்டிக்காட்டி ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். 2019 இல் விவரிக்கப்படாத இடமாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டது ஆனால் அதனை நடைமுறைப்படுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார். 2019 ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சிலிருந்து காரணம் தெரிவிக்கப்படாமல் உடனடியாக தான் இடமாற்றப்பட்டதை கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள அவர் அவர்இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் எ…

  9. புலிகளின் தலைமைக்கு எதிரான கருத்துக்கள் அறச் சீற்றமே தவிர வேறெதுவும் இல்லை வழக்கமாக தேர்தல் காலங்களில் எமது கட்சிக்கு எதிராக சேறுடிப்பதையும், புலிகளின் தலைமைக்கும் எமது செயலாளர் நாயகத்திற்கும் இடையிலான முரண்பாடுகளை வைரலாக்குவதும் எமது அரசியல் எதிர் தரப்புக்கள் கையாள்வது வழக்கம். அவ்வாறு தற்போதும், சில காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாக்கப்பட்டு வருகின்றன. இவை தொடர்பாக எமது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கருதுகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் - புலிகளின் தலைமையும் எமது செயலாளர் நாயகமும், …

  10. அன்னை பூபதியின் நினைவு தினம் ; சிவில் சமூக செயற்பாட்டாளருக்கு அழைப்பாணை 18 Apr, 2025 | 12:32 PM சிவில் சமூக செயற்பாட்டாளர் ச.சிவயோகநாதனுக்கு மட்டக்களப்பு கொக்குவில் பிரதேச பொலிஸாரினால் விசாரணைக்கான அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை (17) பி.ப 4.25 மணிக்கு அவரது வீட்டுக்குச் சென்ற மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸார் இருவரினால் நாளை 19 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அன்னை பூபதியின் நினைவு தினம் தொடர்பான விசாரணைக்கு வருமாறு காத்தான்குடி மற்றும் கொக்குவில் பொலிஸாரினால் கையொப்பமிடப்பட்ட கடிதமொன்று வழங்கப்பட்டுள்ளது. மேற்படி கடிதமானது சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ளது. எனவே இதன்மூலம் தனது மொழி உரிமை மீறப் பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட சி…

  11. வடக்கு மாகாணத்தில் ஊடகவியலாளர்களைக் கொன்றோர் மிகவிரைவில் சிறைக்குச் செல்வர்! அமைச்சர் சந்திரசேகர் உறுதி வடமாகாணத்தில் ஊடகவியலாளர்களைக் கொன்றோரும், ஆட்கடத்தலில் ஈடுபடுவோரும், மணல் கடத்தலில் ஈடுபடுவோரும் மிக விரைவாக சிறைக்கு அனுப்பப்படுவார்கள் - இவ்வாறு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது: 'கடந்த காலங்களில் இலஞ்ச, ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராகச் சட்டம் செயற்படும். அவர்களின் முகவரி மகசின் சிறைச்சாலையென மாறுவது உறுதியாகும். முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்களும் கம்பியெண்ணி வருகின்றனர். அதேபோல படுகொலைகளில் ஈடுபட்டவர்கள்,…

  12. காணிகளை விடுவிப்போம் – யாழில் ஜனாதிபதி உறுதி adminApril 17, 2025 மீண்டுமொரு யுத்தம் தோன்ற அனுமதிக்க மாட்டோம். அதனால் பாதுகாப்பு காரணத்திற்காக என கையகப்படுத்தியுள்ள காணிகளை மீள பெற்று அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்போம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை வருகை தந்த ஜனாதிபதி சங்கிலியன் பூங்காவில் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டார் அதன் போது உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்கள் மக்களை பிரித்துள்ளன. ஆனால் கடந்த பொது தேர்தலின் போது வடக்கு, கிழக்கு, தெற்கு, தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் என அனைவரும் ஒன்றுபட்டு வாக்களித்தனர். அப்படிப்பட்ட ஒன்றிணைந்த …

  13. 18 APR, 2025 | 10:47 AM வவுணதீவு கொத்தியாவல பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (15) இரவு 11 மணியளவில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட “கோபு” வாள்வெட்டுக் குழுவினர் வீடொன்றில் நுழைந்து தாக்குதல் நடத்தி அட்டகாசம் செய்ததில் பெண் ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதலை மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரை அங்கிருந்தவர்கள் மடக்கிப் பிடித்து கட்டி வைத்ததுடன் ஏனைய குழுவினர் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பியோடியுள்ளனர். இது பற்றி தெரியவருவதாவது, மத்திய கிழக்கு நாடொன்றில் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வரும் ஒருவர் அந்த பணத்தை வைத்து வவுணதீவு பிரதேசத்தில் “கோபு ரீம்” என்ற வாள்வெட்டு குழு ஒன்றை இயக்கிவருவதுடன் அந்த குழு பணத்தை பெற்ற…

  14. உள்ளூராட்சி தேர்தல் மீதான மக்களின் ஆர்வம் குறைந்து விட்டது – பெப்ரல் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடங்கியதிலிருந்து எந்தவொரு பாரதூரமான சம்பவங்களும் பதிவாகவில்லை என்று தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள PAFFREL அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், அரசு சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ததாக 20 முறைப்பாடுகளும், தனிப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக 15 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக PAFFREL அமைப்பு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மீதான பொதுமக்களின் ஆர்வமும் குறைவாக இருப்பதாக PAFFREL கண…

  15. 17 APR, 2025 | 06:56 PM உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் மற்றும் அந்த கொடூரமான செயலிற்கு உதவியவர்கள் யார் என்பதை கண்டறிவது அவசரமான விடயம் என இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு குறித்த தனது விசேட செய்தியில் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை இதனை தெரிவித்துள்ளது. 2025ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆறு வருடங்களாகின்றது என தெரிவித்துள்ள கத்தோலிக்க ஆயர் பேரவை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சுயாதீனமான, பக்கச்சார்பற்ற விசாரணைகளை உறுதி செய்வதற்காக அரசாங்கம் சில சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட முயற்சிகளை நாங்கள் வரவேற்கும் அதேவேளை விசாரணையின் இறுதி நோக்…

  16. 17 APR, 2025 | 07:03 PM பார்வைக் குறைபாடுடையவர்களை வலுவூட்டும் வகையில் நான்கு நாள் செயன்முறை பயிற்சியொன்று இடம்பெற்றது. இந்த உள்ளகப் பயிற்சிகள் குருதெனிய கல்வி வள மத்திய நிலையத்தில் வைத்து வழங்கப்பட்டன. பிறவியிலே முழு அளவில் பார்வைக்குறைபாடு உடையவர்களும், இடைப்பட்ட காலத்தில் பார்க்கும் திறனை இழந்தவர்களுக்கும் இந்த பயிற்சி வழங்கப்பட்டது. கண்டி புகையிரத நியைத்தில் புகையிரத மேடைகளைப் பயன்படுத்தல், கண்டி வாவிக்கரையில் நடத்தல் மற்றும் கண்டி நகர நடைபாதைகளில் பயணித்தல் போன்ற விடயங்களை பிரதானமாகக் கொண்டு இந்த செயன்முறைப் பயிற்சி வழங்கப்பட்டது. மத்திய மாகாண சபை நலன்புரி மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களம் பார்வையற்றவர்களை வலுவூட்டும் வகையில் இப்பயிற்சியை வழங்கியது. …

  17. “மன்னார்-ராமேஸ்வரம் இடையே படகு சேவை “ மன்னார் மற்றும் இராமேஸ்வரம் இடையே படகு சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வியாழக்கிழமை (17) அன்று தெரிவித்தார். மன்னார் பஜார் பகுதியில் வியாழக்கிழமை (17) காலை இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மன்னாரில் இருந்து தமிழ்நாடு, இராமேஸ்வரத்திற்கான பயணிகள் படகுச் சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது. மேலும் மன்னாரில் காற்றைக்கொண்டு மின் உற்பத்தி …

  18. 17 APR, 2025 | 01:28 PM தமிழ்க் கட்சிகள் எல்லாமே உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மக்களைக் கேட்டுவருகின்றன. ஜே.வி.பியை மாத்திரம் அல்ல; தென்னிலங்கைக் கட்சிகள் எதையுமே நாம் ஆதரிக்க முடியாது. தென்னிலங்கைக் கட்சிகளை நிராகரிக்கும் அதேசமயம் எதற்கு வாக்களிக்க வேண்டும் என்பதிலும் எமக்கு நிதானம் தேவை. தமிழ்த் தேசிய அரசியலை வியாபாரப் பண்டமாக்கி மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் தமிழ் அரசியற் கட்சிகளையும் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வலி வடக்கு பிரதேச சபைக்கு சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்ற தமிழ்த் தேசியப் பேரவையின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்…

  19. Published By: VISHNU 17 APR, 2025 | 09:14 PM (இராஜதுரை ஹஷான்) யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கு முயற்சிக்கிறோம், இலங்கை கிரிக்கெட் அணியில் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் உள்ளடங்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியதாவது, யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கு முயற்சிக்கிறோம்; அண்மையில் பிரதான கிரிக்கெட் வீரர் ஒருவர் என்னை சந்தித்தார். அவர் ஓரிரு நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்துக்கு வந்தார். அவர் தான் சனத் ஜயசூரிய, …

  20. 17 Apr, 2025 | 12:23 PM ( எம்.நியூட்டன்) காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைப்பதற்கான ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பாக வலிவடக்கு காணிகள் விடுவிப்புக்கான அமையம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் வசாவிளான் சந்தியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது . ஊடகவியலாளர் சந்திப்பு ஆரம்பிப்பதற்கு முன்னதாக அங்கு வந்த பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் ஊடக சந்திப்புக்கு வந்திருந்தவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர். இது உயர் பாதுகாப்பு வலயம் எனவும் இங்கு கூட்டம் கூட முடியாது எனவும் ஊடக சந்திப்பு ஏற்பாட்டாளர்களுடன் ப…

  21. யாழ் செல்லும் ஜனாதிபதியிடம் வலி.வடக்கு மக்கள் விடுத்துள்ள கோரிக்கை! adminApril 16, 2025 யாழ்ப்பாணம் , வலி வடக்கு பிரதேசத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விடுவிக்கப்பட்ட விவசாய காணிகளுக்கு கட்டுப்பாடுகள் இன்றி சுதந்திரமாக சென்று விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட அக்காணிகளை முழுமையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் வியாழக்கிழமை (17.04.25) ஜனாதிபதி வருகை தரும் போது, யாழ் மாவட்ட கட்டளை தளபதியுடன் உரையாடி அப்பகுதி விவசாய காணிகளை முழுமையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து , எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். கடந்த மார்ச் மாதம் அப்போத…

  22. மாணவர்கள் பாரம்பரிய விளையாட்டுக்களை மறந்து அலைபேசிகளில் மூழ்கியுள்ளனர்- வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் adminApril 16, 2025 போர்த் தேங்காய், கிட்டிப்புள்ளு போன்ற விளையாட்டுக்கள் இன்றைய சிறுவர்களுக்குத் தெரியுமோ தெரியவில்லை. அப்படி மறந்துபோகின்ற எங்கள் பாரம்பரிய விளையாட்டுக்களை நினைவூட்டி அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வகையில் இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை ஒழுங்கு செய்தமைக்காக பாராட்டுகின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின், பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில் விளையாட்டுத் திணைக்களம், சுற்றுலாப் பணியகம் மற்றும் வலி. தெற்கு பிரதேச சபை இணைந்து நடத்திய வடக்கு மாகாண சித…

  23. VAT விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் தொடர்பான அறிவிப்பு! பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டத்தின் படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் திரவப் பால் மற்றும் தயிர் ஆகியவற்றுக்கு VAT வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் திரவ பால் மற்றும் தயிர் மீதான VAT வரி நீக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பெறுமதி சேர் வரி திருத்த சட்டமூலம் ஏப்ரல் 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன ஏப்ரல் 11 ஆம் திகதி அதற்கு ஒப்புதல் அளித்தார். அதன்படி, தொடர்புடைய சட்டம் அந்தத் திகதியில் அமலுக்கு வந்ததிலிருந்து, உள்நாட்டு இறைவரித்…

  24. புத்தாண்டின் இரு நாட்களில் 412 பேர் வைத்தியாசலையில் அனுமதி! புத்தாண்டின் இரண்டு நாட்களில் பல்வேறு விபத்துக்கள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் 412 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் இந்திக ஜாகொட தெரிவித்துள்ளார். அவர்களில் ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தனர். மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்த நோயாளிகளில் 80 பேர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். இந்த விபத்துகளில் அதிக எண்ணிக்கையிலானவை வீடுகளில் பதிவாகியுள்ளன. அந்த விபத்துகளில் காயமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 110 ஆகும். மேலதிகமாக வீதி விப…

  25. 12 APR, 2025 | 01:30 PM கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய விளையாட்டுப் பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜிடம் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உறுதியளித்துள்ளார். சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று சனிக்கிழமை (12) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ், கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தொடர்புகொண்டு கேட்டபோது, இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் கிளிநொச்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.