ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
11 Jun, 2025 | 11:54 AM தையிட்டி விகாரைக்குள் கஞ்சா போதைப்பொருள் கொனண்டு சென்ற சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தென்னிலங்கை இளைஞனை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் செவ்வாய்க்கிழமை (10) உத்தரவிட்டுள்ளார். தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விகாரையில் பொசன் சிறப்பு வழிப்பாடு நடைபெற்றுள்ளது. இந்த வழிப்பாட்டில் கலந்து கொள்வதற்காக இளைஞன் ஒருவன், கடந்த திங்கட்கிழமை (09) தென்னிலங்கையில் இருந்து தையிட்டி விகாரைக்கு சென்றுள்ளார். இதன்போது இந்த இளைஞன்விகாரையை அண்மித்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியுள்ளார். அதனை அவதானித்த பலாலி பொலிஸார் இளைஞனை அழைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியமை…
-
- 1 reply
- 208 views
-
-
11 Jun, 2025 | 03:29 PM நாட்டுக்கு தொடர்ந்து இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. ஜூன் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 21,293 என சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிபர அறிக்கையில், இந்தியாவிலிருந்து 6,014 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 28.2 சதவீதம் ஆகும். அதேவேளை, பிரித்தானியாவிலிருந்து 1,884 பேரும், சீனாவிலிருந்து 1,277 பேரும், பங்களாதேஷிலிருந்து 1,173 பேரும் இலங்கைக்கு …
-
- 0 replies
- 137 views
-
-
11 Jun, 2025 | 05:11 PM தமிழ் மக்கள் கூட்டணியும் தமிழரசு கட்சியும் உள்ளுராட்சி மன்ற சபைகளை அமைப்பது தொடர்பிலான ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். இது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டதரணியுமான எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இருகட்சிகளின் இணக்கப்பாடு தொடர்பிலான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் விக்னேஸ்வரனின் கொழும்பு இல்லத்தில் இன்றுமாலை கையெழுத்திட்டுள்ளனர். சீ.வி. விக்கினேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்குமிடையில் முக்கிய சந்திப்பு : ஒப்பந்தம் கைச்சாத்து | Virakesari.lk
-
-
- 14 replies
- 794 views
-
-
யாழ்ப்பாண மாவட்டத்தின் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள் (Plastic Nurdle) பெருமளவில் கரை ஒதுங்கி வருவதாக கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட கடற் சூழல் உத்தியோகத்தர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட பொருட்கள் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான பிரதான மூலப்பொருள் என்பதுடன் இது சூழலுக்கும் மனிதனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அந்தவகையில் பொதுமக்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் விழிப்புணர்வுடன் நடந்துகொள்வதுடன் இப் பொருட்களை தொடுதல் மற்றும் எடுத்துச்செல்லுதலை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.…
-
- 0 replies
- 165 views
-
-
11 Jun, 2025 | 05:47 PM குரங்குகளால் ஏற்படும் சேதங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அவற்றை தடுத்து வைக்கும் இடங்களை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேற்படி முன்னோடித் திட்டம் மாத்தளை மாவட்டத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் தெரிவிக்கிறது. நாட்டின் முதலாவது குரங்கு பாதுகாப்பு சரணாலயம் மாத்தளை மாவட்டத்தில் களுகங்கை நீர்த்தேக்கத்திற்கு அருகில் அமைப்பதற்கு இனம் காணப்பட்டுள்ளது. நீர், உணவு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு 150 ஹெக்டயர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு 283.87 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதிகரித்து வரும் மனித - விலங்கு மோதல்கள், உடைமை சேதம் மற்றும் பயிர் சேதம்…
-
- 0 replies
- 146 views
-
-
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்குச் சொந்தமான வீடொன்றில் பணியாற்றும் பணிப்பெண் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் இன்று புதன்கிழமை (11) கைதுசெய்யப்பட்டுள்ளார். கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் அவரது பணிப்பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி - எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட பணிப்பெண் நீதிமன்றில் ஆஜர்படுத்த இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டுப் பணிப்பெண் கைது! | Virakesari.lk
-
- 0 replies
- 134 views
-
-
11 JUN, 2025 | 01:41 PM மின்சாரக் கட்டணம் இன்று நள்ளிரவு (12) முதல் அமுலுக்கு வரும் வகையில் உயர்வடைவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி மின்சாரக் கட்டணம் 15 சதவீதத்தால் உயர்வடையவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல். சந்திரலால் இதனைத் தெரிவித்தார். இதேவேளை, இலங்கை மின்சார சபை (CEB) 2025ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மின்சார கட்டணங்களை 18.3 வீதத்தால் அதிகரிக்குமாறு முன்மொழிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/217159
-
- 1 reply
- 158 views
- 1 follower
-
-
சவேந்திர சில்வா மற்றும் அமைச்சர் பிமல் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்! அருட்தந்தை மா.சத்திவேல் சீற்றம் பட்டலந்த அறிக்கையை அரசியலுக்காக தூசி தட்டி வெளியில் எடுத்தவர்கள் தமிழர்களுக்கு எதிராக புரியப்பட்ட இன அழிப்பு, இனப்படுகொலை விடயங்களை பகிரங்கமாக கையாள்வதற்கு முன்வர மாட்டார்கள். எனசமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (11.06.2025) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, செம்மணி சமூக புதைகுழியில் தோண்டத் தோண்ட கொலை செய்து புதைக்கப்பட்ட அல்லது உயிரோடு புதைத்து கொல்லப்பட்டோரின் உடல் எச்சங்க…
-
- 1 reply
- 265 views
-
-
தமிழ்த் தேசியப் பரப்பின் ஒற்றுமைக்கான இறுதிச் சந்தர்ப்பத்தையும் தமிழரசுக் கட்சி தவறவிட்டுள்ளது - குருசாமி சுரேந்திரன் 11 June 2025 தமிழ்த் தேசியப் பரப்பின் ஒற்றுமைக்கான இறுதிச் சந்தர்ப்பத்தையும் இலங்கை தமிழரசுக் கட்சி தவறவிட்டுள்ளதாக ரெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த கட்சியின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியத் தரப்பாக ஒன்றிணைந்து ஆட்சி அமைப்பதற்குப் பல தடவைகள் தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி எடுத்துக்கொண்ட முயற்சிகள் உதாசீனப் படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், பல விட்டுக்கொடுப்புகள் அரவணைப்புகளின் அடிப்படையில் ஜனநாயக தமி…
-
- 0 replies
- 171 views
-
-
கிழக்கில் தமிழரசுக்கட்சியின் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு நாங்கள் எந்தக் கட்சியுடனும் ஒப்பந்தம் செய்து சபைகளில் ஆட்சியதிகாரத்தை எடுப்பதற்கு செல்லவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருக்கின்ற உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவு தருகின்றார்கள். நாங்கள் எங்களுடைய உறுப்பினர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆதரவாக வழங்குவோம். ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்திலே ஒப்பந்தங்கள் செய்திருக்கின்றோம் எனச்சொல்வது முற்றுமுழுவதுமாக பொய்யான விடயமாகும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெற்ற உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு நேற்று…
-
- 1 reply
- 217 views
-
-
சட்டவிரோத கருக்கலைப்பு – அதீத இரத்தப் பெருக்கினால் பெண் உயிழப்பு! adminJune 11, 2025 யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் சட்டவிரோதமான கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்துள்ளார். சுன்னாகம் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு , வீடொன்றில் சட்டவிரோதமான கருக்கலைப்பினை மேற்கொண்ட போது , அதீத இரத்தப் பெருக்கு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதீத இரத்த பெருக்கே உயிரிழப்புக்கு காரணம் என மரண விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் , சுன்னாக காவவற்துறையினர் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://globaltamilnews.net/2025/216619/
-
- 0 replies
- 162 views
-
-
Published By: DIGITAL DESK 2 10 JUN, 2025 | 06:44 PM (இராஜதுரை ஹஷான்) சமூகம் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. குற்றங்களை தடுக்க வேண்டிய பொலிஸ் சேவையில் ஒருசிலர் குற்றவாளிகளை பாதுகாக்கின்றனர். சிறைச்சாலை தலைமையகம் சட்டவிரோதமான முறையில் கைதிகளை விடுவித்துள்ளது. சிறந்த மாற்றத்துக்கு அனைவரும் தயாராக வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அநுராதபுரம் - மிஹிந்தலை விகாரையில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற தேசிய பொசன் உற்சவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியதாவது, சமூகம் மற்றும் சமூகம் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. குற்றங்களை தடுக்க வேண…
-
-
- 1 reply
- 289 views
- 1 follower
-
-
10 JUN, 2025 | 05:49 PM கடற்படையினர் மற்றும் மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை புதன்கிழமை (11) பிற்பகல் 2.30 மணி வரை அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது. அதன்படி, சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவநிலையின் தாக்கம் காரணமாக, காற்றின் வேகமானது, அவ்வப்போது மணிக்கு 60-70 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும், என்பதுடன் அந்த கடல் பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக காணப்படக்க…
-
- 0 replies
- 183 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 10 JUN, 2025 | 01:39 PM மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளைய தினம் புதன் கிழமை (11) மன்னாரில் இடம் பெற உள்ள கவனயீர்ப்பு பேரணியில் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவை வழங்குமாறு மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மன்னார் பிரஜைகள் குழுவில் இன்று செவ்வாய்க்கிழமை (10) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு இடம் பெற்று வருகிறது. கா…
-
- 1 reply
- 192 views
- 1 follower
-
-
10 JUN, 2025 | 03:01 PM வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்கு செல்லும் பாதை யாத்ரீகர்களுக்கான காட்டுப்பாதை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) திறக்கப்பட்டு, மீண்டும் குறித்த காட்டுப்பாதை ஜூலை மாதம் 04ம் திகதி மூடப்படும் என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம தெரிவித்தார். கதிர்காமம் மற்றும் உகந்தமலை முருகன் ஆலயங்களின் வருடாந்த ஆடிவேல் விழா 26 ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை மாதம் 11ஆம் திகதி தீர்த்தோற்சவ அத்துடன் நிறைவடையும் என கூறினார். கதிர்காமத்திற்கு பாதயாத்திரையாக செல்வோர் உகந்தமலை முருகன் ஆலயத்தில் ஓரிரு நாட்கள் தங்கியிருந்து குமண யால காட்டினூடாக பிரவேசித்து கதிர்காமத்தை சென்றடைவது வழக்கமாகும். வெள்ளிக்கிழமை 20 ஆம் திகதி காலை உகந்தமலை முருகன் ஆ…
-
- 0 replies
- 129 views
- 1 follower
-
-
வடக்கில் சிறுவர் உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட வேண்டும்; ஸ்ரீநிதி நந்தசேகரன் 10 JUN, 2025 | 11:56 AM பாடசாலை மட்டத்தில் ஏற்படும் சிறுவர் உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு முறைப்பாட்டுப்பெட்டி, கண்காணிப்பு கமரா என்பன பொருத்தப்பட வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் தெரிவித்துள்ளார். சிறுவர்களின் நலன்சார் செயற்பாடுகளில் பங்கேற்கும் சகல உத்தியோகத்தர்களும் வழிகாட்டுதல் கலந்துரையாடல் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது, அதில் வளவாளராக பங்குபற்றி கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நலிவுற்ற சமுதாயத்தினரே கூடியளவு சமூகப் பிரச்சினைகளான பாலியல் துஸ்பிரயோகம், உயி…
-
- 0 replies
- 128 views
- 1 follower
-
-
கண்டி மாவட்டம்,கம்பளையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வருகை தந்துள்ளதாகவும் அவர்களை மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் உள்ள கண்டி மாவட்டம், கம்பளை பகுதியைச் சேர்ந்த முஹம்மது கியாஸ் (வயது 43), அவரது மனைவி பாத்திமா பர்ஹானா-(வயது 34) இவர்களின் குழந்தைகள் முஹம்மது யஹ்யா ( வயது 12), அலிஷா-(வயது 4), அமிரா-(வயது 4) ஆகிய 5 பேர்களாவர். இவர்கள் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து பைபர் படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் பகுதியில் திங்கட்கிழமை(09) அதிகாலை வந்து இறங்கினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தகவலறிந்த மெரைன் பொலிஸார் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் இருந்த 5 பேரையும் மண்டபம் மெரைன் கா…
-
-
- 2 replies
- 298 views
-
-
10 Jun, 2025 | 12:35 PM சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் (FDMD) கீதா கோபிநாத் எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். 2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணியாற்றும் முதல் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் ஒருவர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் தடவையாகும். இந்த விஜயத்தின் போது, நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இணைந்து நடாத்தும் 'இலங்கையின் மீட்புப் பாதை: கடன் மற்றும் நிர்வாகம்' என்ற தலைப்பில் 16 ஆம் திகதி நடைபெற உள்ள மாநாட்டில் கீதா கோபிநாத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார். இலங்கை வருகிறார் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் | Virakesari.lk
-
- 0 replies
- 189 views
-
-
உள்ளூராட்சி சபைகளில் நிர்வாகங்களை அமைப்பது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ரெலோ உட்பட்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி எவ்வாறு நடந்து கொள்கின்றதோ வன்னி தேர்தல் மாவட்டத்தில் அதே பதில் முறைமையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் நடந்துகொள்ளும் என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர்கள், ரெலோ தலைவர்களிடம் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். உள்ளூராட்சி சபைகளில் நிர்வாகங்களை அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் அதன் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமியும் நேற்று முன்தினம் யாழ். நல்லூரில் சி.வி.கே. சிவஞானத்தின் இல்லத்தில் சந்தித்துப் பேசினர். வன்னியில் வவு…
-
- 0 replies
- 133 views
-
-
10 Jun, 2025 | 05:39 PM பொது இடங்களில் யாசகம் பெறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சிறுவர்களின் நலன்சார் செயற்பாடுகளில் பங்கேற்கும் சகல உத்தியோகத்தர்களுக்குமான ஆலோசனைக் கலந்துரையாடல் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது, அதில் ஓய்வுபெற்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் வளவாளராக பங்குபற்றி கருத்து தெரிவித்தார். இதன்போது அவர், வடக்கு மாகாணத்தில் யாசகம் பெறுபவர்களால் ஏற்படும் பிரச்சினைகளையும், யாசகம் சார்ந்த சட்டங்களையும் மத்திய மாகாண ரீதியில் அல்லாது சகலரும் ஒன்றிணைந்த சட்ட ஏற்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என கோரியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகை…
-
- 0 replies
- 161 views
-
-
யாழ்.சாவகச்சேரி நகரில் நீண்ட காலமாக போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(10) மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகர் பகுதியில் பாடசாலை மாணவர்கள் சிலர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வருவதாக சாவகச்சேரி பொலிஸ்நிலையத்தின் கீழ் இயங்கும் போதைப்பொருள் குற்றச்செயல் தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது. கைது இதனையடுத்து, குறித்த பகுதியில் உள்ள பிரபல பாடசாலையின் மாணவர்களில் மூவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, சாவகச்சேரி நகர்ப்பகுதியில் மரத்தளபாட திருத்தவேலை…
-
-
- 5 replies
- 424 views
-
-
வடக்கு, கிழக்கில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விகாரைகளுக்கு பயணிப்பதை சிங்கள மக்கள் தவிர்க்க வேண்டும் : வடமாகாண நீதி சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் Published By: RAJEEBAN 10 JUN, 2025 | 06:33 AM வட,கிழக்கில் அத்துமீறி கட்டப்பட்டுள்ள விகாரைகளுக்கு பயணிப்பதை தவிர்க்குமாறு சிங்கள மக்களிடம் வடமாகாண நீதி சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் வேண்டுகோள் விடுத்துள்ளது வட,கிழக்கில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக வடமாகாண நீதி சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியக இயக்குனர் அருட்பணி சூ.யே. ஜீவரட்ணம் அ.ம.தி கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யுத்தத்தின் பிற்பாடு ஏறக்குறைய 16 வருடங்கள் கடந்து விட்ட நிலையி…
-
- 2 replies
- 209 views
-
-
யாழ். மாநகர சபைக்கான மேயர், துணை மேயர் பெயர்களை பரிந்துரைத்த தமிழரசு! யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் பதவிக்குத் விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரைத்துள்ளது. மாநகர சபையின் துணை மேயர் பதவிக்கு இம்மானுவேல் தயாளன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். யாழ். நல்லூரில் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபைக்கான மேயர், துணை மேயர் தெரிவுகள் எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.samakalam.com/யாழ்-மாநகர-சபைக்கான-மேயர-2/
-
- 0 replies
- 197 views
-
-
தையிட்டி சட்டவிரோத விகாரை முன் போராட்டம் – கஜேந்திரகுமார் உள்ளிட்ட 27 பேருக்கு தடை! adminJune 10, 2025 கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட 27 நபர்கள் மற்றும் அமைப்புக்களுக்கு எதிராக பலாலி பொலிஸாரினால் கட்டளை பெறப்பட்டுள்ளது. தையிட்டியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (10.06.25) நடைபெறவுள்ள பொசன் பௌர்ணமி வழிபாட்டுக்காக ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்படவுள்ளனர். இந்நிலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும், விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்க…
-
- 3 replies
- 265 views
-
-
எதிர்காலத்தில் அபாயகரமான நிலை உருவாகும் : கருணா கிழக்கு மாகாண தமிழ் மக்கள் ஒற்றுமையாக செயற்படாவிட்டால் எதிர்காலத்தில் ஒரு தமிழ் முதலமைச்சரை உருவாக்க முடியாத அபாயகரமான நிலை காணப்படும். எனவே, கிழக்கு தமிழர் கூட்டமைப்புடன் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும் என முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவருமான கருணா அழைப்பு விடுத்துள்ளார். முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான சி.சந்திரகாந்தன், எஸ்.வியாழேந்திரன், முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன் ஆகியோர் ஒன்றிணைந்து அமைக்கப்பட்ட கிழக்கு தமிழ் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் படகு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் சத்திய பிரமாணம் எடு…
-
- 0 replies
- 267 views
-