Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. February 6, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn சீனா என்ற புகையிரத்தில் இலங்கை என்ற பெட்டியை இணைக்கத் தயார் எனத் தெரிவித்துள்ள இலங்கைக்கான சீனத்தூதுவர் சேங்க எக்சிச்சுவான் இலங்கையின் உள்நாட்டு கொந்தளிப்புக்களில் சீனா ஒருபோதும் தலையிடாது எனவும் இலங்கை மக்கள் நன்றாக சிந்த…

    • 4 replies
    • 1.1k views
  2. கொக்கேய்ன் போதைப்பொருளுடன் இந்தியர் கைது கொக்கேய்ன் போதைப்பொருளுடன் இந்திய நாட்டைச் சேர்ந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) மும்பையிலிருந்து இலங்கைக்கு வந்த, 34 வயதுடைய இந்தியரின் பயணப் பொதியிலிருந்து 1 கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப்பொருள் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட கொக்கேய்ன் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 01 கோடி 50 இலட்சம் ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். http://athavannews.com/கொக்கேய்ன்-போதைப்பொருளு/

  3. பேலியகொடயில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது பேலியகொட பகுதியில் 400 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜனாதிபதியின் போதை ஒழிப்பு திட்டத்திற்கு அமைய நாட்டின் பல பாகங்களிலும் போதைப்பொருளுக்கு எதிராக போராட்டங்களும், செயலமர்வுகளும் இடம்பெற்று வருகின்றன. அத்தோடு பொலிஸாரின் தீவிர நடவடிக்கையினால் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/பேலியகொடயில்-கேரள-கஞ்சாவ/

  4. விமான சேவைகளில் மோசடி – விசாரணை ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆணைக்குழுவின் காலம் மே மாதம் 5 ஆம் திகதி வரை மீளவும் நீடிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவை மற்றும் மிஹின்லங்கா விமான சேவை ஆகிய நிறுவனங்களின் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டமை, நுழைவுத் தேர்வில் சித்திபெறாத மற்றும் தகைமையற்றவர்களை பணிக்கமர்த்தியமை, ஒப்பந்தங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டமை, விமானப் பணியாளர்கள் சட்டவிரோத ஆட்கடத்தலுக்கு துணை நின்றமை உள்ளிட்ட மோசடிகள் இடம்பெற்றதாக க…

  5. (நா.தனுஜா) தேசிய அரசாங்கத்தினை அமைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ள முறையின் ஊடாக ரணில் விக்கிரமசிங்க ஜனநாயகத்தை காப்பவரல்ல என்பது தெளிவாகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், ரணில் விக்கிரமசிங்கவின் ஜனநாயகம், அரசியலமைப்பு நியாயங்கள் எவ்வாறானது எனின், அரசியலமைப்பை மீறுவதன் மூலம் தனக்கு அநீதி இழைக்கப்படுகின்றது எனின் அதனைப் பாதுகாப்பதற்கு முன்வருவார். ம…

  6. பால்மாவில் பன்றிக்கொழுப்பா? – அரசு மறுப்பு! வெளிநாட்டு பால்மாவில் பன்றிக் கொழுப்பு கலந்ததாக வெளியாகும் கருத்துக்களில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பிரதி அமைச்சர் புத்திக்க பதிரன கடந்த நாடாளுமன்ற அமர்வின் போது இந்தக் கருத்தினை முன்வைத்திருந்தார். இது குறித்து இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து தெரிவித்த அமைச்சர், “உள்ளூர் மற்றும் சர்வதேச மட்டங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் பால் கொழுப்பு தவிர வேறு எந்த தீங்கு விளைவிக்கும் பொருட்களும் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவில் இல்லை நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சோதனை க…

  7. (லியோ நிரோஷ தர்ஷன்) நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தை மீண்டும் ஸ்தாபிப்பதற்கான பிரேரணையை பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடை நிறுத்தாத வகையில் கொண்டு வருமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். அதேபோன்று கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலும் கவனத்தில் கொள்ளுமாறும் இதன்போது பிரதமர் வலியுறுத்தனார். குறித்த பிரேரணை மீதான விவாதம் இன்று பாராளுமன்த்தில் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டது. இதன்பின்னர் தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் தலைமையில் கலந்தாலோச…

  8. 1 Min Read February 7, 2019 அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகள் சம்பந்தமாக என்னால் 2019 சனவரி மாதம் 25 ஆந் திகதியும் இந்த மதிப்புமிக்க சபையில் ஒரு கூற்று முன்வைக்கப்பட்டது. அங்கு நான் வெளிப்படுத்தியவாறு அரசியலமைப்பு பேரவையினால் 41 ஆ உறுப்புரையில் குறிப்பிடப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக பெயர் முன்மொழிவுகளை சமர்ப்பிக்கையிலும் அரசியலமைப்பின் 41 இ உறுப்புரையில் …

  9. 20 கிலோ மீற்றர் தூர இலக்கை தாக்கும் பல்குழல் பீரங்கிகளை தயாரிக்கின்றது இலங்கை! இலங்கையில் இராணுவத்தின், ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிலையத்தினால், 10 குழல்களைக் கொண்ட பல்குழல் பீரங்கி உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பல்குழல் பீரங்கி நேற்று முன்தினம் காலிமுகத்திடலில் நடைபெற்ற சுதந்திர தின இராணுவ அணிவகுப்பில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட இந்த பல்குழல் பீரங்கியின் மூலம், 20 கிலோ மீற்றர் வரையுள்ள இலக்குகளைத் தாக்க முடியும். இந்த பல்குழல் பீரங்கிக்கான குண்டுகளும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், பிரிகேடியர் திரான் டி சில்வா தெரிவித்துள்ளார். …

    • 9 replies
    • 1.3k views
  10. அரசுடன் இணைந்து செல்வதுதான் ஒரே வழி என்ற நிலைப்பாட்டை ஒரு சில தமிழ் அரசியல் கட்சிகள் கொண்டுள்ளன.இந்த நிலைப்பாடு அந்த அரசியல் கட்சிகளின் கொள்கை சார்ந்தவை என்பதால் அதனை தமிழ் மக்களின் கொள்கையயன எவரும் பொதுமைப்படுத்தி விட முடியாது.இருந்தும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்றிருப்போர் அத்தகையதோர் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தால், அவர்கள் அதுபற்றித் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறித்துரைத்துள்ளனரா என்பது பற்றி ஆராய வேண்டும். எது எவ்வாறாயினும் இலங்கை அரசுகளுடன் அல்லது ஆட்சியாளர்களுடன் இணங்கிப் போவதென்ற நிலைப்பாடுகளை பின்நோக்கிப் பார்க்கும்போது, அது தமிழ் மக்களுக்குப் பாதமாக இருந்துள்ளதை நாம் அவதானிக்க முடியும். அந்தளவுக்கு இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் ஏதோவொரு வகை…

  11. அண்மைக்காலமாக தமிழ் அரசியல் தரப்பில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளமையை உணர முடிகின்றது. 2018ஆம் ஆண்டு ஒக்டோபர்மாதம் 24ஆம் திகதி தமிழ் மக்கள் கூட்டணி என்ற அரசியல் கட்சியை வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஆரம்பித்ததையடுத்து இந்த விழிப்புணர்வு உச்சம் பெற்றது எனலாம். நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் புதிய அரசியல் கட்சியயான்றை ஆரம்பிப்பார் என சில தமிழ் அரசியல் கட்சிகள் எதிர்பார்த் திருக்கவில்லை.ஆனால் அந்த எதிர்பார்ப்புக்களை முறியடிக்கும் வகையிலும் மாற்றுத் தலைமையின் அவசியத்தை அறிந்தும் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார்.அவர் ஆரம்பித்த புதிய அரசியல் கட்சி தொடர்பில் விமர்சன…

  12. ‘மஹிந்தவுடன் பேசத் தயார்’ - இரா. சம்பந்தன் Editorial / 2019 பெப்ரவரி 06 புதன்கிழமை, மு.ப. 08:32 Comments - 0 தாங்கள் கேட்ட கேள்விகளுக்கும் தீர்வுகளுக்கும் பதில் வழங்க முடியாமல், மஹிந்த தரப்பினரே கூட்டங்களைப் புறக்கணித்தார்களென, தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். தமிழர்களுக்கான தீர்வு வழங்கல் தொடர்பான பேச்சுவார்த்தைகளில், அசமந்தப் போக்கைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கடைப்பிடித்தது என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ முன்வைத்த குற்றச்சாட்டுத் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அது சாத்தியமற்றுப் போனதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டியமை தொடர்பில் கேட்டபோதே, சம்பந்தன் மேற்…

  13. ஈழத்தமிழர் இனப்படுகொலை செய்யப்பட்டதை விசாரிக்க வேண்டும் என்கின்றது ஸ்பெயின் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் சுயாட்சி அதிகாரம் மிக்க தமிழ் மக்களுக்கான தேசம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் பார்சிலோனா வலியுறுத்தியுள்ளது. இலங்கை தொடர்பாக ஸ்பெயின் நாட்டின் பிராந்திய அரச கட்டமைப்பிற்குள் ஒன்றான பார்சிலோனாவில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் தமிழ் மக்களுக்கு உரிய உரிமைகளை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தயங்கக் கூடாது என்றும் அரசியல் கைதிகளை இலங்கை அரசாங்கம் தாமதமின்றி விடுதலை செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்களும் இதில் அடங்குகின்றது. அத்தோ…

  14. மக்கள் நலனுக்காக ஒன்றிணைந்து போராடுவதே உண்மையான ஒற்றுமை-சி.வி.விக்னேஸ்வரன் கொள்கையின் அடிப்படையில் மக்கள் நலனுக்காக ஒன்றிணைந்து போராடுவதாகவே உண்மையான ஒற்றுமை அமைய வேண்டும் என்ற பாடத்தை மக்களுக்குப் புகட்டி வருவதாகவும் தமிழரின் ஒற்றுமையை தான் சீர்குலைக்கவில்லையென்றும், மாறாக மக்கள் மனதில் குடிகொண்டிருக்கும் அறியாமையை சீர்குலைக்க முயற்சிக்கின்றேன் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.அத்துடன் அவலத்திற்கும், அஸ்தமனத்திற்குமே ஒற்றுமை வழிவகுக்குமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வாராந்தம் ஒரு கேள்விக்கு பதிலளித்து வருகின்றார்.இந்த வாரம் தமிழர் ஒற்றுமையை குலைப்பதைத் தவிற, எ…

  15. நாளை வெளியாகிறது மன்னார் புதைகுழி எலும்புக்கூடு மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு கடந்த 24 ஆம் திகதி அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு புளோரிடாவில் உள்ள ஆய்வுகூடத்தில் காபன் பரிசோதனைக்காக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் குறித்த மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை நாளை வெள்ளிக்கிழமை வெளிவரும் என அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். குறித்த வளாகத்தில் இருந்து 312 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவற்றில் 297 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் 26 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது …

  16. வங்கி கடனட்டை கொள்ளை ; இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவுறுத்தல்! அரச மற்றும் தனியார் வங்கிகளில் தானியக்க பண இயந்திரங்களில் (ஏ.ரி.எம்.) போலி கடன் அட்டை (Credit Card), வரவு அட்டைகளை ( Debit Card ) பயன்படுத்தி நாடளாவிய ரீதியில் இடம்பெறும் மாபெரும் பண திருட்டு சம்பவங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளது. அந்த விசேட அறிவுறுத்தலில் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளதாவது, தன்னியக்கக்கூற்றுப் பொறி வலையமைப்பினூடாக பணத்தினை எடுப்பனவு செய்தல் மற்றும் உலகளாவிய வணிகர்களுக்கிடையில் பரிமாற்றல்களைச் செய்தல் போன்ற வசதிகளை கொடுப்பனவு அட்டைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. எவ்வாறாயினும், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளிலிர…

  17. பஸ்ஸுடன் முச்சக்கர வண்டி மோதி கோர விபத்து பஸ் வண்டியொன்றும், முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது இன்று அதிகாலை 5.00 மணியளவில் ஒலுவில் - பாலமுனை எல்லைப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த தனியார் சொகுசு பஸ் வண்டியும் தம்பிலுவிலிருந்து மாளிகைக்காடு பிரதேசத்தினை நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி விபத்தில் தம்பிலுவில், இர்ணடாம் பிரிவைச் சேர்ந்த 37 வயதுடைய இராஜலிங்கம் கவீந்திரன் என்பரே …

  18. ஆளுநர் மாளிகை பராமரிப்பு நிதியை அநாதை பிள்ளைகளின் கல்விக்கு வழங்க ஹிஸ்புல்லாஹ் உத்தரவு கிழக்கு மாகாண ஆளுநருடைய மாளிகையினை பராமரிப்பு செய்வதற்காக ஒவ்வொரு வருடமும் 20 மில்லியன் ரூபா நிதியை கிழக்கு மாகாண சபை ஒதுக்கீடு செய்து வருகின்றது. கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் உடனடியாக இந்த நிதியை நிறுத்தி இந்த நிதியை கிழக்கு மாகணத்தில் இருக்கின்ற தந்தையை இழந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வழங்க தீர்மானித்துள்ளார். இது தொடர்பில் நேற்று காலை கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பேரில் நிதி அமைச்சு, திட்டமிடல் அமைச்சு,கல்வி அமைச்சு சமூக சேவைகள் அமைச்சுக்கள் உட்பட அதிகாரிகளுடனான கலந்துரையாடலையடுத்து கிழக்கு மாகாணத்திலே ஐந்தாம் ஆண்டுவரை பாடசாலைகளில் கல்வி கற்கி…

  19. "தேசிய அரசாங்கத்திற்கான பிரேரணை இன்று சமர்ப்பிக்கப்படமாட்டாது" தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு தொடர்பான பிரேரணையை இன்று பாராளுன்றத்தில் சமர்ப்பிக்கப்போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கும் தீர்மானம் ஒன்றினை கொண்டுள்ள நிலையில் நேற்று கட்சி தலைவர் கூட்டத்தில் இது குறித்து ஆராயப்பட்டுள்ளது. இதன்போது தேசிய அரசாங்க யோசனையை இன்று வியாழக்கிழமை சபையில் முன்வைக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானம் எடுத்துள்ளது. அதற்கமைய தேசிய அரசாங்கத்தை அமைத்து அமைச்சரவையை அதிகரிக்க தீர்மானித்துள்ளனர். இதன் படி தற்போது 30 பேர் கொண்ட அமைச்சரவையை 48 பேர் கொண்ட அமைச்சரவையாக மாற்றவும் தற்போது …

  20. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு நீதியமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் ; குற்றவாளிகளை பாதுகாக்கும் அரசியல்வாதிகளே நாட்டுக்கு அச்சுறுத்தல் - டக்ளஸ் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் பொதுமன்னிப்பு என்கின்ற அடிப்படையில், ஓர் ஏற்பாட்டினை நீதி அமைச்சு முன்னெடுக்க வேண்டும். குற்றவாளிகளை ஒப்படைத்தல் தொடர்பில் நாடுகளுக்கிடையில் ஒப்பந்தங்கள் எட்டப்படுவது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதொரு விடயம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை ஒப்படைத்தல் தொடர்பில் நாடுகளுக்கிடையில் ஒப்பந்தங்கள் எட்டப்படுவது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதொரு விடயம். என்றாலும், நான் ஏற்கனவே இங்கு சுட்டிக்காட்டியதைப் போன்று இந்த நாட்டு…

  21. யாழ்ப்பாணம் தென்மராட்சியில் வீடு புகுந்து கொள்ளையிட்ட மூன்று திருடர்கள் ஊர் மக்களிடம் வசமாகச் சிக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது. வரணி இயற்றாலைப் பகுதியிலேயே இந்தச் சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, முகத்தை மூடிக் கட்டிய மூன்று இளைஞர்கள் வரணி இயற்றாலைப் பகுதியிலுள்ள வீடு ஒன்றினுள் கொள்ளையிடுவதற்காகப் புகுந்துள்ளனர். அதன்போது அங்கு என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என வீட்டுக்காரரிடம் கேட்டு தாக்குதல் மேற்கொண்டனர். வீட்டுக் காரரிடமிருந்து உரிய பதில் கிடைக்காததன்காரணமாக தாமே சல்லடைபோட்டுத் தேடி தங்க நகைகளையும் பெருந்தொகைப் பணத்தையும் கொள்ளையிட்டுள்ளனர். இதேவேளை குறித்த வீட்டில் வழமைக்கு மாறான சலசலப்பை உ…

  22. ஈழத்து இளம் விஞ்ஞானியின் அசரவைக்கும் கண்டுபிடிப்புக்கள் சர்வதேச கண்காட்சியில்! தாய்லாந்தில் நாளை 2ம் திகதி முதல் நடைபெறவிருக்கும் சர்வதேச அறிவியல் புலமை கண்டுபிடிப்புகள் மற்றும் தொழினுட்பக் கண்காட்சியில் பங்கேற்கவென இலங்கையின் இளம் தமிழ் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமார் இன்று வெள்ளிக்கிழமை தாய்லாந்து பயணமாகின்றார். இலங்கை வரலாற்றில் தனியொருவரின் 3 கண்டுபிடிப்புகள் சர்வதேச கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவிருப்பது இதுவே முதல் தடவையாகும். இலங்கையின் இளம் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமார் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை கோரக்கர்கிராமத்தைச் சேர்ந்தவராவார். வரலாற்றில் முதல் தடவையாக தனி ஒருவரின் மூன்ற…

    • 13 replies
    • 1.3k views
  23. முல்லைத்தீவில் வயல் விழா!! முல்லைத்தீவு மாவட்டத்தின் கொல்லவிலாங்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் கிருமி நாசினிகள் பயன்படுத்தாது நாற்று நடுகை மூலம் இயந்திரம் மூலம் நாற்று நடப்பட்டு செய்கை பண்ணப்பட்ட வயல் நிலத்தில் நெல் அறுவடை செய்யும் வயல் விழா இன்று நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொல்லவிலாங்குளம் விவசாய போதனாசிரியர் கி. கீர்த்திகன் தலைமையில் இடம்பெற்ற வயல் விழாவில், மாந்தை கிழக்குப் பிரதேச செயலாளர் செல்வி ந.றஞ்சனா, முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாய பண…

  24. February 6, 2019 எதிர்வரும் மூன்று மாதங்களில் இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் முறிகள் மோசடி, போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மத்திய வங்கி முறிகள் மோசடி தொடர்பில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மறந்து பலர் செயற்பட்டதாகவும் அந்த காலப்பகுதியில் நிதி அமைச்சராக செயற்பட்டவரே மத்திய வங்கி முறிகள் மோசடி தொடர்பான…

  25. (எம்.எப்.எம்.பஸீர்) மாகந்துரே மதூஷை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு பாதுகாப்பு அமைச்சும் வெளிவிவகார அமைச்சும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளதாக பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ள விசேட அதிரடிப்படையின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற பல பாதாள உலக கொலைகள், போதைப் பொருள் கடத்தல்களின் பின்னணியில் இருக்கும் மிக முக்கிய புள்ளியான பாதாள உலக தலைவன் மாகந்துரே மதூஷ் எனப்படும் சமரசிங்க ஆரச்சிலாகே மதூஷ் லக்ஷித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் தலை நகரான அபுதாபியில் 6 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டு, பொலிஸ் தடுப்பில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.