ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
சம்பந்தன் நம்பிக்கை: பன்னாட்டுச் சமூகம் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது எனவும் சுட்டிக்காட்டு தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு புதிய அரசமைப்பைக் கொண்டு வந்தே தீரும். பன்னாட்டுச் சமூகத்துக்கு அளித்த வாக்குறுதியிலிருந்து இந்த அரசு பின்வாங்காது என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். …
-
- 9 replies
- 1.4k views
-
-
வடக்கில் ஏற்பட்டுள்ள குளிரான காலநிலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும். இதன்போது சுவாசம் தொடர்பான நோய்கள், உடலில் அசொகரியங்களும் ஏற்படும். எனவே குளிரைத் தாங்கக் கூடியவாறான உடைகளை அணிந்திருப்பது சிறந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கின் பெரும்பாலான பகுதிகளில் அதிகுறைந்த வெப்ப நிலையின் அளவு 18.5பாகை செல்சியசாகக் காணப்பட்ட அதேவேளை அதிகூடிய வெப்பநிலை 29 பாகையாகக் காணப்பட்டது. அடுத்து வரும் தினங்களுக்கும் இதே நிலமை தொடரும். பனிப்பொழிவின் ஒரு வடிவமான (mist) மாலை 4 மணிக்கு ஆரம்பிக்கின்றது. மறுநாள் காலை 7.30 மணிவரை தொடரும். இதனால் இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் நடமாடும் போது க…
-
- 4 replies
- 1.8k views
-
-
தமிழ் மாணவர்கள் தமது மத, கலாசார சூழலில் கல்விகற்கும் இலட்சியத்துடன் உருவாக்கபட்ட அனுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயம் முஸ்லீம் பாடசாலையாக மாற்றும் நீண்டகால திட்டத்தை தடுத்து நிறுத்துமாறு அனுராதபுரம் விவேகானந்தா சபையின் தலைவரும் பாடசாலையின் முன்னாள் அபிவிருத்திசங்க செயலாளருமான வி.ஞானசந்திரன் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் அமைந்துள்ள விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலத்தில் நடைபெறும் அநீதிகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று வவுனியா தமிழ் ஊடக மையத்தில் நேற்றைய தினம் காலை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்படி தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”1961ம் ஆண்டு பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின…
-
- 0 replies
- 657 views
-
-
அம்பாறையில், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அரச மற்றும் தனியார் காணிகள் 39 ஏக்கரை விடுவித்திருப்பதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பிற்கு அமைவாகவே விடுவித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்க்காலத்தில், இராணுவ முகாங்கள் அமைப்பதற்காகவே இந்தக் காணிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் தற்போது மக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையின் கிழக்கு தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவின் கண்காணிப்பில், அம்பாறை மாவட்ட செயலகத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக இராணுவத்தின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. …
-
- 0 replies
- 448 views
-
-
ஞானசார தேரருக்கு 4ஆம் திகதி விடுதலை? Editorial / 2019 ஜனவரி 19 சனிக்கிழமை, மு.ப. 08:15 Comments - 0 பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் வண.கலகொட அத்தோ ஞானசார தேரர், பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி, ஜனாதிபதியால் விடுதலை செய்யப்படுவார் என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எம்.பி துமிந்த திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள தேரரை, நேற்று சந்தித்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தேரரின் விடுதலை குறித்து, ஜனாதிபதியுடன் உரையாடியுள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார். நாட்டு மக்களுக்காகவும் சிங்கள பௌத்தர்களுக்காகவும், பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்காகவும் என்று, அவர் செய்…
-
- 0 replies
- 469 views
-
-
கூட்டமைப்பு அரசின் பங்காளியாக மாற வேண்டும் - சம்பிக்க ரணவக்க January 19, 2019 தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள முன்வரவேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதானால் மாத்திரம் இலங்கையின் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசின் பங்காளிகளாக மாற வேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்த அடிப்படையில் மக்களின் கவலைகளை தீர்க்கும் முகமாகவும் மக்களுக்கு சேவையாற்றும் முகமாகவும் தமிழ் தேசியக் கூட்டம…
-
- 0 replies
- 417 views
-
-
ரணில், சம்பந்தன், கருஜயசூரிய தமிழீழத்தை உருவாக்க முயற்சி - பவித்திரா வன்னியாராச்சி January 19, 2019 தமிழீழத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளில், ரணில் விக்கிரமசிங்க, கருஜயசூரிய மற்றும் இரா.சம்பந்தன் ஆகிய மூவரும் ஈடுபட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில், இதனை நிறைவேற்ற தமது தரப்பு ஒருபோதும் இடமளிக்காது எனத் தெரிவித்துள்ள அவர் கடந்த காலத்தில், பிரதமர், சபாநாயகர், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஒன்றிணைந்து நாட்டில் மீண்டும் ஈழத்தைக் உருவாக்கும் நோக்கிலேயே செயற்பட்டதாகவும் இதற்காகவே சமஷ்டி அரசியலம…
-
- 0 replies
- 328 views
-
-
புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது - மனோ கணேசன் January 19, 2019 புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் திட்டமிட்ட இனவாத நோக்குகளில் முன்னெடுக்கப்படுகிறது. அதேவேளை ஐக்கிய தேசிய கட்சிக்கு உள்ளேயும் இந்த எதிர்ப்பு வலுக்கிறது. இதற்கு அவர்கள் காலம் கடந்து விட்டது, இது தேர்தல் ஆண்டு என்ற காரணங்களை காட்டுகிறார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் கூறியுள்ளதாவது, புதிய அரசியலமைப்பு அமைக்கும் பணியை தொடங்கிய ஆரம்பத்தில்,…
-
- 0 replies
- 288 views
-
-
சந்திரிகாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவியை நீக்க யோசனை January 19, 2019 முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தொகுதி அமைப்பாளர் பதவியை நீக்க யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் அக்கட்சியின் அண்மைக்கால போக்குகளையும், விமர்சித்ததாகத் தெரிவிக்கப்படும் சுதந்திரகட்சியின் பதினைந்து தொகுதி அமைப்பாளர்கள் உட்பட சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தொகுதி அமைப்பாளர் பதவியை நீக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://globaltamilnews.net/2019/110430/
-
- 0 replies
- 352 views
-
-
வடக்கில் பணியாற்றும் 230 காவல்துறை அதிகாரிகளின் இடமாற்றம் ரத்து January 19, 2019 வடக்கில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் 230 பேருக்கு வழங்கப்பட்டிருந்த இடமாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களை பூர்த்தி செய்திருந்த உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அதிற்கெதிராக மேன்முறையீடு செய்துள்ள அவர்கள், தாம் வடக்கில் பணியாற்ற விரும்புவதாக தெரிவித்திருந்ததனையடுத்து அவர்களது இடமாற்றம் காவல்துறை மா அதிபரின் உத்தரவுப்படி ரத்து செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபர் ரொஷான் பெர்காண்டோ தெரிவித்துள்ளார். முதலில் 135 பேரும், இரண்டாவது தடவையாக 40 பேரும் இடமாற்றத்துக்கு…
-
- 0 replies
- 352 views
-
-
கிளிநொச்சிக்கு மேலும் சில அதிநவீன நோயாளர் காவுவண்டிகள் January 19, 2019 மத்திய சுகாதார அமைச்சினால் ஒரு தொகுதி அதிநவீன நோயாளர் காவுவண்டிகள் நேற்றைய தினம் (18-01-2019) நாட்டிலுள்ள வைத்தியசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன நேற்று (18) பிற்பகல் கொழும்பு மாநகரசபை மைதானத்தில் இடம் பெற்ற வைபவரீதியிலான கையளிப்பு நிகழ்வின்போது 132 நோயாளர் காவுவண்டிகளையும் அந்தந்த வைத்தியசாலைகளுக்குக் கையளித்தார். மொத்தம் 2500 மில்லியன் பெறுமதியான பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்ட போட் ரக அதிநவீன நோயாளர் காவுவண்டிகளில் 103 வண்டிகள் மாகாண சுகாதார அமைச்சுகளின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளுக்கும், 27 மத்திய சுகாதார அமைச்சின் கீழ் இயங்க…
-
- 0 replies
- 442 views
-
-
பொதுஜன பெரமுன முன்னணி எந்த சின்னத்தில் போட்டியிடும் என்பது குறித்து விரைவில் அறிவிப்போம் January 19, 2019 எதிர்வரும் தேர்தல்களின் போது பொதுஜன பெரமுன முன்னணி கட்சி எந்த சின்னத்தில் போட்டியிடும் என்பது குறித்து விரைவில் கட்சியின் தலைமைத்துவத்துடன் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அக்கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கட்சியின் உள்ளக ஜனநாயகத்தை மதிப்பதுடன் சகோதர கட்சிகளின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பதே பொதுஜன பெரமுன முன்னணியின் நிலைப்பாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார். இடம்பெறவுள்ள தேர்தலில் பொதுஜன பெரமுன முன்னணி மொட்டு சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்னும் கோரி…
-
- 0 replies
- 334 views
-
-
தமிழ் மொழி தெரிந்த ஒருவரே ஜனாதிபதியாக வர வேண்டும் - குமார வெல்கம January 19, 2019 சிறுபான்மை இனத்தவர்களான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பேசும் தமிழ் மொழி தொடர்பில் தௌிவு பெற்ற ஒருவரே ஜனாதிபதியாக வர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தற்போது நாட்டில் காணப்படுகின்ற சூழ்நிலையில் ஜனாதிபதித் தேர்தலே நடைபெற வேண்டும் எனவும் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது என நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளதால் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் …
-
- 0 replies
- 423 views
-
-
பிலிப்பைன்ஸ் அதிபரின் படுகொலை வழியை பின்பற்றப் போகும் சிறிசேன – சர்ச்சையில் சிக்கினார் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் அதிபர் றொட்றிகோ டுரேர்ரே நடத்தி வரும் போரை வரவேற்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இது உலகிற்கு முன்உதாரணம் என்றும் மெச்சியுள்ளார். பிலிப்பைன்சுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு, பிலிப்பைன்ஸ் அதிபர் றொட்றிகோ டுரேர்ரேயுடன் இணைந்து நடத்திய நிகழ்வில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, “குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருளுக்கு எதிராக நீங்கள் முன்னெடுக்கும் போர், உலகிற்கு முன்உதாரணம். தனிப்பட்ட முறையில் நான் அதனை வரவேற்கிறேன். போதைப்பொருள் பாவனை எனது நாட்டுக்கும், அச…
-
- 0 replies
- 485 views
-
-
மதுபான நிலையம் அமைப்பதில் ஆட்சேபனை இல்லை – பாடசாலை அதிபர் கடிதம் வவுனியா – ஓமந்தையில் மதுபான நிலையம் அமைப்பதில் ஆட்சேபனை இல்லை என ஓமந்தை மத்திய கல்லூரியின் அதிபர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அதிபர் கெ.தனபாலசிங்கம், கொழும்பிலுள்ள மதுவரி ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். குறித்த கடிதத்தில், ‘வேலாயுதம் சுரேந்திரனால் எமக்கு வழங்கப்பட்டுள்ள கடிதத்தின்படி, அவரால் கண்டி வீதி, ஓமந்தைப்பகுதியில் அமைக்கப்படும் பியர் விற்பனை நிலையம் பாடசாலையிலிருந்து 500மீற்றர் தூரத்திற்கு அப்பால் அமைந்துள்ளதால், பாடசாலைக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்’ என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இப்பகுதியில் குறித்த மதுபான விற்பனை நிலைய…
-
- 3 replies
- 1.3k views
-
-
மத்தலவுக்கு சீனாவிடம் பெற்ற கடனை இந்தியா மூலம் அடைப்போம் – சிறிலங்கா பிரதமர் கி.தவசீலன்Jan 18, 2019 | 2:03 by in செய்திகள் மத்தல விமான நிலையத்தை அமைப்பதற்காக மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் சீனாவிடம் பெறப்பட்ட கடன், இந்தியாவின் விமான நிலைய அதிகார சபையின் உதவியுடன் மீளச் செலுத்தப்படவுள்ளது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த தகவலை நேற்று வெளியிட்டுள்ளார். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஒக்ரோபர் 26ஆம் நாள் உருவாக்கப்பட்டு 51 நாட்கள் பதவியில் இருந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் நாட்டுக்குப் பெரும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ராஜபக்சவினரால் உருவாக்…
-
- 5 replies
- 1.7k views
-
-
மாணவியை தாக்கிய அதிபர்- மாணவியின் தந்தை விசனம் வவுனியா ஓமந்தையில் பாடசாலை மாணவி ஒருவர் அதிபரினால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை விசனம் தெரிவித்துள்ளார். அத்தோடு, தனது மகளுக்கு கால் மற்றும் உடம்பு பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதென்றும், ஊடகங்களும், சமூக அமைப்புக்களும் தனது மகளுக்கு நீதியினை பெற்றுத்தரவேண்டுமெனவும், அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியா ஓமந்தையில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் பாடசாலை மாணவி மீது அதிபர் தாக்குதல் மேற்கொண்டதில் படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது.…
-
- 2 replies
- 1.3k views
-
-
எச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி: January 18, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் ‘சதொச’ வளாகத்திலுள்ள மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்களை அமெரிக்காவிற்கு ஆய்விற்காக எடுத்துச்செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவரை இணைத்துக்கொள்ள நீதிமன்றம் இன்று (18)அனுமதி வழங்கியுள்ளது. மன்னார் நீதவான் நீதிமன்றத்தினூடாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது. மன்னார் ந…
-
- 0 replies
- 538 views
-
-
புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா புதிய அரசியலமைப்பு தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்தின்படி புதிய அரசியலமைப்பானது ஒற்றையாட்சியாகவே அமையப் போகின்றது என முன்னாள் வட.மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “புதிய அரசியலமைப்பு தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பு சபையில் பேசிய பேச்சின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பானது ஒற்றையாட்சியாகவே அமையப் போகின்றது எனத் தெளிவாகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்ட நிபுணர் கு…
-
- 0 replies
- 527 views
-
-
இலங்கை மக்களுடனான தமது உறவு சிங்களம் பேசும் மக்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்று தெரிவித்துள்ள இலங்கைக்கான சீன தூதுவர் செங் யுவான், தமிழ் மொழி பேசும் மக்களையும் தமது உறவு வலயத்தில் வைக்கவே விரும்புவதாகவும் கூறியுள்ளார். இலங்கையிலுள்ள சீன தொழில் முயற்சி திட்ட வளாகங்களில், இலங்கையின் மொழிக்கொள்கை பின்பற்றப்படுவதில்லை. விசேடமாக, தமிழ் மொழி புறக்கணிப்புக்கு உள்ளாகிறது என்ற புகார், சமீப காலங்களில் மேலெழுந்துள்ளது. இவை பற்றி சீன தூதுவரை சந்தித்து நேரடியாக கலந்துரையாட விரும்புவதாக, தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சு, கொழும்பிலுள்ள சீன தூதரகத்துக்கு அறிவித்திருந்தது. அதையடுத்து, அமைச்சர் மனோ கணேசனை, த…
-
- 0 replies
- 795 views
-
-
3 தசாப்த நம்பிக்கையை மைத்திரி தகர்த்திவிட்டார் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்! இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடியானது, இலங்கையின் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதில் இருந்து தோல்வியடைந்துள்ளது என மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த நெருக்கடி நிலை காரணமாக, சிவில் யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உண்மையை கண்டறிவதற்கும், நீதியை நிலைநாட்டுதலுக்காக ஏற்கனவே முடங்கிய நிலையில் உள்ள செயற்பாடுகளை மேலும் மலினப்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கான மனித உரிமை நிலைமை தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள மனித…
-
- 3 replies
- 1.2k views
-
-
புலிகளை போற்றும் பட்டங்கள் வல்வை வான்வெளியில் பறந்தன… January 15, 2019 தமிழீழ விடுதலைப்புலிகளின் சீருடையை ஒத்த நிறத்தில் ஆகாயம், கடல் மற்றும் தரைகளில் தாக்குதல் நடத்த கூடியவாறான டாங்கியின் அமைப்பில் வடிவமைக்கப்பட்ட பட்டம் ஒன்று வல்வை மண்ணில் பறக்கவிடப்பட்டது.அந்த பட்டம் வானிலே பறந்த போது கூடி இருந்த பலரும் கரகோஷம் எழுப்பி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் பட்ட போட்டி நடத்தப்பட்டது. அதன் போது வித விதமான முறைகளில் வடிவமைக்கப்பட்ட பட்டங்கள் ஏற்றப்பட்டன. அதில் “செய் அல்லது செத்துமடி ” எனும் வாசகத்துடன் அங்கயற்கண்…
-
- 8 replies
- 2k views
-
-
புதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்! (2ஆம் இணைப்பு) எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற மத வழிபாடுகளை தொடர்ந்து சம்பிரதாயபூர்வமாக அவர் கடமைகளை பொற்றுப்பேற்றுள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக கடமைகளை பொறுப்பேற்கிறார் மஹிந்த! புதிய எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ இன்று (வெள்ளிக்கிழமை) தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்கிறார். அதன்படி சமய வழிபாடுகளை தொடர்ந்து இன்று காலை எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில், தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார். புதிய எதிர்க்கட்சி தலைவர் நியமனம் பல்வேறு விமர்சனங்களை த…
-
- 5 replies
- 878 views
-
-
‘‘நாம் எதிர்பார்த்த வகையில் மைத்திரி –- மகிந்த கூட்டணிக்குள் மோதல் வெடித்துள்ளது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் தனிவழியில் சென்று மீண்டும் ஓர் அரசியல் சூழ்ச்சி ஊடாக அதிகாரத்தைக் கைப்பற்ற இரகசியத் திட்டம் வகுக்கின்றனர். இந்தத் தகவல் வெளியில் கசிந்துள்ளது. எனினும் இந்த அரசியல் சூழ்ச்சியையும் நாம் வெற்றிகரமாக முறியடிப்போம்.’’ -இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் வீடமைப்பு மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: ‘சர்வாதி…
-
- 0 replies
- 487 views
-
-
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற மத வழிபாடுகளை தொடர்ந்து சம்பிரதாயபூர்வமாக அவர் கடமைகளை பொற்றுப்பேற்றுள்ளார். புதிய எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ இன்று (வெள்ளிக்கிழமை) தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். அதன்படி சமய வழிபாடுகளை தொடர்ந்து இன்று காலை எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில், தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார். புதிய எதிர்க்கட்சி தலைவர் நியமனம் பல்வேறு விமர்சனங்களை தோற்றுவித்திருந்த நிலையில…
-
- 0 replies
- 430 views
-