Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புதிய அரசியலமைப்பு குறித்து மஹிந்த தரப்பு இனவாதத்தை பரப்புகிறது: மாவை சாடல் புதிய அரசியலமைப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் தேவையில்லாத இனவாதத்தை பரப்பி வருகின்றனர் என்று இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். வடமராட்சியில் நேற்று(புதன் கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கான பாராட்டு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு கூறிப்பிட்டார். புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என கடந்த காலங்களில் கூச்சலிட்ட மஹிந்த ராஜபக்ஷ தரப்பும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும், தற்போது அரசியலமைப்பு நிபுணர் குழுவின் அறிக்கை வந்தவுடன் அதனை எதிர்ப்பதாகவும், நாட்டை ப…

  2. பௌத்த மதத்தை நேசிப்பவர் ஆளுநரானது ஜனாதிபதியின் சிறந்த தீர்மானத்திற்கு எடுத்துக் காட்டு -யாழ்.நாகவிகாரையின் விகாராதிபதி வடக்கில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பதவியேற்றதன் பின்னர் சர்வமத தலைவர்களை சந்தித்து வருகிறார். அதன்போது பௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்திற்கு எடுத்துக் காட்டாகும் என யாழ்.நாகவிகாரையின் விகாராதிபதி மிகஹாஜ்துரே விமல தேரர் தெரிவித்துள்ளார். நல்லூர் கந்தசாமி கோயில்,நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆகியவற்றுக்கு சென்ற ஆளுநர் வழிபாடுகளில் ஈடுபட்டார்.அத்துடன் யாழ் ஆயரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.மேலும் யாழ…

  3. வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- பிரிட்டன் வேண்டுகோள் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும் என பிரிட்டன் வேண்டுகோள் விடுத்துள்ளது. பிரிட்டனின் ஆசியா பசுவிக்கிற்கான அமைச்சர் மார்க்பீல்ட் பிரிட்டனிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் பாராளுமன்ற சபாநாயகர் கருஜெயசூரியவை சந்தித்தவேளை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார் இலங்கை சபாநாயகரிடம் ஜெனீவா விவகாரம் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன் என மார்க்பீல்ட் தெரிவித்துள்ளார். நாங்கள் இலங்கையின் சமீபத்தைய அரசியல் நிலவரம் குறித்து பயனள்ள பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம் என மார்க்பீல்ட் தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்…

  4. 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை பழைய தேர்தல் முறையில் இணைத்து கொள்ள வேண்டும் - நீதிக்கான பெண்கள் அமைப்பு (இராஜதுரை ஹஷான்) மாகாணசபை தேர்தரலை புதிய முறையில் நடத்துவது சாத்திமயற்றதாக காணப்படுமாயின் பழைய தேர்தல் முறையிலே மாகாண சபை தேர்தலை அரசாங்கம் விரைவாக நடத்த வேண்டும். புதிய தேர்தல் முறையில் அறிமுகம் செய்யப்பட்ட 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை பழைய தேர்தல் முறையினுல் இணைத்து கொள்ள வேண்டும் என நீதிக்கான பெண்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. சமூக, மதத்திற்கான கேந்திர மத்திய நிலையத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவ்வமைப்பினர் மேற்கண்ட…

  5. வடக்கு ஆளுநர் - விக்னேஸ்வரன் சந்திப்பு வட மாகாண சபையின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட கலாநிதி சுரேன் ராகவனுக்கும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்குமிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு நேற்றையதினம் வடமாகாண ஆளுநருடைய உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல் மற்றும் அபிவிருத்தி பிரச்சினைகள் இந்த சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/48175

  6. “காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்” (நா.தனுஜா) நீங்கள் வழங்கிய உறுதிமொழிக்கு அமைவாக வடக்கு, கிழக்கில் காணிகளை விடுவிக்கும் செயற்பாட்டைப் பூர்த்தி செய்யுமாறு நாம் மீண்டும் ஒருமுறை உங்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம். குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாப்பிலவு கிராமத்திலுள்ள காணிகளின் விடுவிப்புத் தொடர்பில் நாம் விசேடமாக சுட்டிக்காட்டுகின்றோம் என காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. நீங்கள் வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாது இருந்தால் மக்கள் மோசமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்புண்டு. அவர்கள் அத்தகைய இறுதிநிலைக்குத் தள்ளப்படுவதற்கு முன்னர் நீங்கள் வழங்கிய உறுதிமொழிக்கு அமைய, விடுவிக்கப்படாதுள்ள காணிக…

  7. புதிய அரசியலமைப்பு பாராளுமன்றத்தில் நிறைவேறிய பின் மக்கள் தீர்ப்பிற்காக விடப்படும் - அரசாங்கம் (நா.தினுஷா) புதிய அரசியல் அமைப்பு உருவாக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் எவரும் அச்சம் கொள்ள தேவையில்லை. அரசியல் அமைப்புக்கான வரைபு அவசரமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவும் இல்லை. ஆகவே இந்த புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் அனைவரினதும் நிலைபாட்டினையும் பெற்று பாராளுமன்றத்திலும் பெரும்பான்மையை நரூபித்ததன் பின்னர் மக்கள் தீர்ப்பினூடாகவே நிறைவேற்றப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார். அலரிமாளிகையில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் …

  8. வெட்டுக்குழு தாக்கியதில் இளைஞர் படுகாயம் January 17, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாட நண்பன் வீட்டுக்கு சென்ற இளைஞன் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல் மேற்கொண்டதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். எழுதுமட்டுவாழ் தெற்கை சேர்ந்த 20 வயதான ஆனந்தராசா லக்கிகன் என்பவரே படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த இளைஞன் தனது வீட்டில் இருந்து பொங்கல் தினத்தன்று மீசாலை கிழக்கு அல்லாரை தம்ப தோட்டம் பகுதியில் உள்ள தனது நண்பன் வீட்டுக்கு சென்றுள்ளார். அதன் போது ஏழு மோட்டார் சைக்கிளில் வந்த 15க்கும் மேற்பட்டவர்கள் வீட்டுக்குள் புகுந்து இளைஞன் மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டு…

  9. இராணுவ சிப்பாயின் சடலம் மீட்பு January 17, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பலாலி இராணுவ முகாமில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்து இராணுவ சிப்பாயின் சடலம் மீட்கப்பட்டு உள்ளது. பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் 22 வயதான ஆரியரத்னா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிப்பாய் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் பலாலி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். http://globaltamilnews.net/2019/110204/

  10. கோட்டாவிற்கு எதிரான வழக்கு நாளாந்தம் விசாரணைக்கு!- விசேட நீதிமன்றம் தீர்மானம். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக நாளாந்தம் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு விசேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. தங்காலை – வீரகெட்டிய – மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு அருங்காட்சிய நிர்மாண பணியின் போது 33 மில்லியன் ரூபாய் அரச நிதியைப் தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் இன்று (வியாழக்கிழமை) விசேட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ விசேட மேல் நீதிமன்றத்தில் இன்றும் முன்னிலையாகினார். இதன்போது விசாரணைகளை தொடர்ச்சியாக முன்…

  11. சிறைக்கைதிகள் மீதான தாக்குதல்: விசாரணைக்குழு விரைந்தது! அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரிக்க, விசாரணைக்குழு அங்கு செல்லவுள்ளது. சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தலைமையில் நியமிக்கப்பட்ட குறித்த குழு இன்று (வியாழக்கிழமை) அங்கு செல்லவுள்ளது. கைதிகள் தாக்கப்பட்டமை தொடர்பான காணொளியொன்று அண்மையில் வெளியாகியிருந்த நிலையில், அது தொடர்பில் பாரிய சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கைதிகள் முழந்தாளிடப்பட்டு, பொலிஸார் அவர்களை துரத்தி துரத்தி தாக்குவதும், முழந்தாளிலேயே செல்லுமாறு பணிப்பதும் அந்த காட்சியில் தெளிவாகியுள்ளது. இந்நிலையில், நீதியமைச்சர் தலதா அத்துகோரளவினால் விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது. குறித்த குழு அங…

  12. மீண்டும் ஒரு தடவை தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்ற வழமையான கலாசாரம் அரங்கேற இருக்கிறது. புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தமிழ் மக்களிடம் முன்வைக்கப்பட்ட நம்பிக்கைகள் உடைந்து விழுந்து தகர்ந்து போகின்ற காலம் நெருங்கிவிட்டது. அதற்கான அறிகுறிகள் பளிச்சிடுகின்றன. அரசியலமைப்பு சீர்திருத்தத்தை எதிர்ப்பதென மகிந்தராஜபக்­ தரப்பு கங்கணம் கட்டி நிற்கின்றவேளையில் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவும் அவரைக் கடந்து ஒரு படி மேலாக செல்ல முற்படுவதும் போலத் தெரிகிறது. அதாவது ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பேரின வாத சிந்தனைக்கு பதிலடி கொடுக்க முற்பட்ட எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க இருபத்து நான்க…

  13. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிந்து 10 ஆண்டுகள் ஆகின்றன. யுத்தம் முடிந்த கையோடு இலங்கை அரசு குறித்து பலவாறான விமர்சனங்கள் எழுந்தன. அதில் குறிப்பாக வன்னி யுத்தத்தின் கொடூரம் தமிழ் இனஅழிப்பாக இருப்பதாக மனித நேய அமைப்புக்கள் தமது கருத்துக்களைப் பதிவு செய்தன.தவிர யுத்தத்தின் கொடூரங்களை வெளிப்படுத்துகின்ற கண்கண்டசாட்சியமாக சனல் 4 காணொளிகள் அமைந்திருந்தன. கூடவே புலம்பெயர் தமிழ் மக்கள் தமிழினத்துக்கு நேர்ந்த அவலத்தை சர்வதேச வீதிகளில் இறங்கி உரக்கக் கூறினர். இதன் விளைவாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் இலங்கைத் தமிழர்களின் விடயத்தை நோக்கி தனது பார்வையை திசை திருப்பி இருந்தது. எனினும் தென்பகுதிப் புத்திஜீவிகளும் அரசியல் விற்பன்னர்களும் தமிழ் மக்களுக்குச் சார்பாக…

  14. இந்தியாவிடம் இருந்து 1000 மில்லியன் டொலர் நிதியைப் பெறும் முயற்சியில் சிறிலங்கா கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சிறிலங்கா அரசாங்கம், இந்தியாவின் மத்திய வங்கியிடம் இருந்து 1 பில்லியன் டொலரை நாணயப் பரிமாற்றத்தின் ஊடாகப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாக, பதில் நிதியமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசாங்கம் இந்த ஆண்டில் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன்கள் மற்றும் கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட ஆட்சிக்குழப்பங்களால், ஏற்பட்ட பொருளாதார இழப்புக்களைச் சமாளிக்க, இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் உதவி கோரியுள்ளது. இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியிடம் இருந்த…

  15. அடுத்த ஜனாதிபதியாக குமார் சங்கக்கார? வெளியானது அதிரடித் தகவல்! Gokulan சிறிலங்காவின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பிரபல விளையாட்டு வீரர் குமார் சங்கக்கார போட்டியிடுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக உள்மட்டத் தகவல்கள் கசிந்துள்ளன. ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் பொது வேட்பாளராக குமார் சங்கக்கார களமிறக்கப்படலாம் என கொழும்பிலிருந்து வெளியாகியுள்ள தகவல்கள் கூறுகின்றன. இலங்கையின் பிரபல விளையாட்டு வீரரும் சர்வதேச ரீதியில் குறிப்பிடத்தக்க சாதனையாளராகவும் விளங்குகின்ற குமார் சங்கக்காரவை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதன்மூலம் கணிசமானளவு மக்களின் வாக்குகளைப் பெறக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படும் என ஐக்கிய தேசிய முன்னணி கருதுவதாக க…

  16. January 16, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வு பணிகளின் போது இதுவரை சுமார் 300 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வுக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். …

  17. January 16, 2019 அநுராதபுரம் விமானப்படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னால் போராளி உறுப்பினர்கள் இருவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வடமத்திய மாகாண மேல்நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமனினால் குற்றவாளிகளுக்கு இன்று இந்த தண்டனை விதிக்கப்பட்டது. அநுராதபுரம் மேல்நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட வழக்கு விசாரணைகளின் போது, தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்வதாக பிரதிவாதிகள் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தின் பிரகாரம், அவர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது…

  18. இணக்கம் தெரிவித்தார் சுரேன் ராகவன்…….. வடக்கு மாகாணத்தில் மத நல்லிணகக்கத்தினை மேலும் பலப்படும் நோக்கில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் யாழ்ப்பாணத்தின் சமயத் தலைவர்கள் சிலரை நேற்று (15) பிற்பகல் மற்றும் இன்று (16) காலை சந்தித்து ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்டார். அத்துடன் நல்லூர் கந்தசுவாமி கோவில் மற்றும் நயினை நாகபூஷணி அம்மான் கோவில்களுக்கும்; சென்று ஆளுநர் வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் யாழ்ப்பாணம் நாகவிகாரையின் விகாராதிபதி வண.மீஹகாஜதுரே விமல தேரரையும், நயினாதீவு விஹராதிபதி வண. நமதகல பத்மகித்தி தேரர் மற்றும் …

  19. January 14, 2019 புதிய அரசியலமைப்பு தொடர்பில் போலித் தகவல்களை வழங்கி மக்களை தவறான முறையில் வழிநடத்தி நாட்டை பிளவுபடுத்தும் விதமாக நடந்து கொள்ள வேண்டாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அனைத்து தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது அரசியலமைப்பு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு இனவாதத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற தைப்பொங்கல் கொண்டாடங்களின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/2019/109900/

  20. புலிகளின் ஆயுதங்கள் இன்று பாதாள கோஷ்டிகளிடம் - ருவான் (ஆர்.யசி ) யுத்தத்தின் பின்னர் புலிகளின் ஆயுதங்களே இன்று பாதாள கோஷ்டிகளின் கைகளில் உள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். நாட்டில் இடம்பெறும் மனித படுகொலைகளைகளுக்கு பாதாள கோஷ்டிகளே காரணம். கொலைகளை தடுக்க பொலிசாரின் செயற்பாடுகளுக்கு இராணுவ ஒத்துழைப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் தாம் தயாராக உள்ளோம். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நேற்று கண்டி அஸ்கிரிய மல்வத்து தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/48125

  21. யாழ்.வலி.வடக்கில் தைப்பொங்கல் நாளில் ஆரம்பமானது முதலாவது வீட்டுத் திட்டம் வலி.வடக்கு பிரதேச செயலகத்தின் தென்மயிலை கிராம அலுவலர் பிரிவில் முதலாவது வீட்டுக்கான அடிக்கல்லை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.மேலும் நேற்றையதினம் 4 வீடுகளுக்கு அடிக்கல் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நா.வேதநாயகன், மேலதிக மாவட்டச் செயலர் சு.முரளிதரன், வலி.வடக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். வடக்கு மற்றும் கிழக்கு வீடமைப்புத் திட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு தைப்பொங்கல் தினமான நேற்றையதினம் காலை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.(15) …

  22. வடமராட்சி கடலில் -இறால் சீசன் ஆரம்பம்!! பதிவேற்றிய காலம்: Jan 16, 2019 யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பிரதேசத்தில் இறால் சீசன் ஆரம்பமாகியுள்ளது. உடுத்துறை, வத்திராயன், ஆழியவளை, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு ஆகிய கடல்பகுதிகளில் தினமும் பெருந்தொகையனான இறால்கள் பிடிக்கப்பட்டு வருகின்றன. வருடந்தோரும் டிசெம்பர் மாதம் முதல் பெப்பரவரி மாதம் வரை இறால் பெருமளவு பிடிக்கபட்டுவது வழக்கமாகும். தற்போது இப்பகுதிகளில் ஒரு கிலோ இறால் 800 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தென் பகுதிகளுக்கு மீன்களை எடுத்துச் செல்லும் மீன் வியாபாரிகள் மீனவர்களிடம் இறால் கொள்வனவு செய்து வருகின்றனர். https://newuthayan.com/story/11/வடமராட்சி-கடலில்-இறால்-சீசன்-ஆர…

  23. இலங்கை அமெரிக்கா முக்கிய பேச்சுவார்த்தை இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு பின்னர் உருவாகியுள்ள நிலைமை குறித்து அமெரிக்காவும் இலங்கையும் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளன அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்;டுள்ள நிதியமைச்சர் மங்களசமரவீர தலைமையிலான குழுவினர் அமெரி;க்காவின் தலைமை பிரதி உதவி இராஜாங்க செயலாளர் அலைஸ் வெல்சையும் மில்லிலேனியம் சலஞ்ச் ஒத்துழைப்பின் பிரதம அதிகாரியையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர் அலைஸ் வெல்ஸ் மற்றும் இலங்கை;கான அமெரிக்க தூதுவர் ஆகியோருடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம் என பொருளாதார சீர்திருத்த விவகாரங்களிற்கான அமைச்சர் ஹர்சா டி சில்வா தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள…

  24. யாழ்.போதனா வைத்திய சாலையில் புதிதாக விபத்து சிகிச்சை பிரிவு January 16, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.போதனா வைத்திய சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட விபத்து சிகிச்சை பிரிவு எதிர்வரும் 07ஆம் திகதி திறந்து வைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக வைத்திய சாலை பணிப்பாளர் எஸ். சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 600 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த விபத்து சிகிச்சை பிரிவில் 100 கட்டில் வசதிகளுடன் , 3 சத்திர சிகிச்சை கூடங்களும் அமைக்கப்பட்டு உள்ளது. விபத்துக்களுக்கு உள்ளாவோர் நேரடியாகவே இந்த பிரிவுக்கு அனுமதிக்கப்பட்டு அங்கே அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கபட்டு , அவர்கள் குணமடைந்த பின்னர் அவர்கள் அங்கிருந்தே வெளிய…

  25. சவேந்திர சில்வா விவகாரம் – நாடாளுமன்றில் கேள்வி எழுப்பவுள்ளார் சம்பந்தன் சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து, அடுத்த நாடாளுமன்ற அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பவுள்ளது. இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்களை இழைத்தார் என்று குற்றம்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, கடந்த வாரம் இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்துக்கு, அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனங்களையும் எதிர்ப்பையும் வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே, போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ள வேண்டியவரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு இராணுவத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.